12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த (1162 D) மத்துவாச்சாரியார்தான் பூணூல் இட்டு விஷ்ணுவின் சந்ததியினரை உருவாக்கி வைணவ மதத்தை உருவாக்கினார் என்று சொல்லப்படுகின்றது.
அதே சமயம் சமணம் மதத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபநாதனை, சிவபகவானாக்கி ஏசுநாதரின் பிறப்பிற்கு முன் சைவ மதம் உருப்பெற்றது என்றும் சொல்லப்படுகிறது. 6 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவில் ஆண்ட மன்னர்களைப் பற்றி வரலாற்றில் அதிகம் சொல்லப்படவில்லை. ஆனால, தென்னாட்டில் சேர, சோழ பாண்டியர்கள் ஆண்ட பொற்காலம் சைவ மதம் கடல் கடந்து, கடாரம் (இப்போதைய கம்போடியா) வரை பரப்பப்பட்ட காலம். 12, 13 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவை பாரசீயத்திலிருந்து வந்த சுல்தான்கள் ஆண்டனர்.
அக்காலத்தில், நாளந்தா, மற்றும் தட்ச சீலா உள்ளிட்ட பல அறிவுக் கூடங்கள் ஆக்ரமிக்கப்பட்டு நம் நாட்டின் விலை மதிக்க முடியாத ஓலைகள், புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
14 ஆம் நூற்றாண்டின் வாய் மொழியாக பிரச்சாரத்தில் இருந்தவையும், ஓலைகளிலும், புத்தகங்களிலும் எழுதிப் பாதுகாக்கப்பட்ட வேதங்களும், புராணங்களும், மருத்துவக் குறிப்புகளும், கலை மற்றும் அறிவியல் குறிப்புகளும் சம்ஸ்க்ருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் "மனுஸ்ம்ருதி" போன்றவைகள் நம் முன்னோர்கள் பின்பற்றியவைகள் என்ற மட்டில் இந்து மதத்தின் பாகமாக்கப்பட்டதாம். அதனால்தான், இந்தியப் பீனல்கோட் எழுதிய டாக்டர் அம்பேத்கார் - 1938 ல் , இந்து மதத்திற்கும், இந்தியாவிற்கும் தீண்டாமையின் பெயரில் இழிவு ஏற்படுத்தும் "மனுஸ்ம்ருதி" யைப் பொது இடத்தில் கொளுத்தினார்.
இதன் பின், 16 ஆம் நூற்றாண்டில், முகலாய மன்னரான அக்பர் (1556-1605), எல்லா மதங்களும் - சமணமும், புத்தமும், சைவமும், இஸ்லாமும், கிறித்தவமும் எல்லாம் வல்ல இறைவனின் புகழ் பாடி, இறையருள் பெறத்தான் முயல்கின்றன என்ற உண்மையைப் புரிந்து கொண்டு, எல்லா மதங்களையும் உட்படுத்தி, எல்லாருக்கும் உகந்த "தீன்-இலாஹி" என்னும் புதிய மதத்தை நிறுவினார். அவருடைய "இபாதத் கானா" வில் வைஷ்ணவ மதத்தவர்கள், மனுஸ்ம்ருதியை, சைவ, வைஷ்ணவ மதத்தவரின் (இந்து) குரான் என்று சாதித்தே விட்டார்கள்.
அக்பர் அரசரே ஒழிய தெய்வபுத்திரனோ, தேவ தூதரோ அல்ல என்பதனாலோ என்னவோ, அம்மதம் எவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், ஆங்கிலேயர்கள் வந்த போது, இங்குள்ள இஸ்லாமியர், சமணர், புத்த மதத்தினர் ஒழிய மற்றவர்களை, முன்பு பாரசீகர்கள் அழத்தது போல் "இண்டஸ்வேலி" காரர்கள்(Indus Valley) என அழைத்தும், எழுதியும், அப்பெயர், சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் பொதுவான பெயராக மாறிவிட்டது. கிறித்தவத்தைப் பற்றிப் பேசத் தகுதி உடையவர்களைப் பாதிரியார்கள் என்பது போல் (Theology படித்ததால்) இந்து மதத்தைப் பற்றிப் பேச , விவாதிக்க, பிராமணர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். (மனுஸ்ம்ருதி இந்து மதத்தின் பைபிளாகக் கருதப்பட்டதால்).
சைவ மதத்திலுள்ள உயர்வு தாழ்வின்மைக்குப் (தத்துவமசி, அஹம் ப்ரம்மாத்மி etc....- "அது" நீயாகிறாய், உன்னுள் நானாகிய இறைவன் இருக்கிறேன் etc.) பதிலாக, மனுஸ்ம்ருதி இந்து மதத்தின் "என்சைளோபீடியா" ஆனது. (இறைவனின் நெற்றியிலிருந்து பிராமணர்கள், தோளிலிருந்து ஷத்திரியர்கள், வயிற்றிலிருந்து வைசியர்கள்,காலிலிருந்து சூத்திரர்கள்) கிறித்தவர்களின், பிதா, புத்ர, பரிசுத்த ஆத்மா எனும் ட்ரினிட்டி இந்து மதத்திலும் உள்ளது என்று சொல்லி, படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் என்று சாதித்தே விட்டர்கள். பண்டைய கிரேக்க நாட்டில் மனிதர்களை 4 பிரிவுகளாக்கி, அவர்களது திறமைக்கு இணங்க பணிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அது போல நம் சித்தர்களும், மனிதர்களின் நோய்களைக் கண்டறிய கப, பித்த, வாத, ரத்த ஆதிக்க உடல்களாகப் பிரித்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த அறிவுகள் தவறாகப் பயன்படுத்தப்ட்டு விவித சாதிகளாக்கப்பட்டன. ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்பது புரிகிறது. யாருக்கு இதனால் நன்மை உண்டோ அவர்கள்தான் இத்தகைய கொடுமைகளைச் செய்திருக்க வேண்டும்.(பாவம் தொலைய, மோக்ஷம் கிடைக்க பிராமணர்களுக்கு, பசு, மண், பொன் தானம் செய்வது உத்தமம்)
இப்படி நம் முன்னோர்களும், சித்தர்களும், யோகிகளும் கண்டறிந்த ப்ரபஞ்ச சத்தியங்களும், ஆன்மீக ஞானமும் அன்றைய நாட்களில் வாழ்ந்த சுயநலவாதிகளின் இத்தகைய செயல்களால் நமக்கு நஷ்டமாகியது. 15 ஆம் நூற்றாண்டு முதல், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட்வர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள், இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மதம் மாறினார்கள். 20 ஆம் நூற்றாண்டில், டாக்டர் அம்பேத்காரும், ஏக தேசம் ஒரு லட்சம் பேருடன் புத்த மதத்தைத் தழுவினார்கள். இஸ்லாம் மதமும், அன்பும், கருணையும் ஆதரவும் உணவும் கொடுத்துத் தங்கள் மதத்திற்கு ஆட்களை வரவேற்கத் தொடங்கிய காலத்தில் இந்து மதம் (?) சாதி பேசி பிற்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று பெரும்பான்மையோரை முத்திரை குத்திக் கோயில்களிலிருந்தும், இறைவனிடமிருந்தும் விரட்டியது.
மானிடர் எல்லாம் ஒன்றாகச் சாதியின்றி, குளித்து தேவாரம் பாடி வாழ்ந்த மலைநாட்டு மக்களை ஆண்ட சேர மன்னனைச் சதியால் வீழ்த்தி, முக்தி பெற இமயம் சென்ற ஆதிசங்கரரைப் போல், கைலாயம் சென்ற அவரை-அதாவது சேர மன்னனை- மெக்கா சென்றதாய் கூறி அவருடைய மக்களையும் இஸ்லாம் மதம் தழுவவும் வைத்தார்கள். நாஞ்சில் நாட்டை ஆண்ட மார்த்தாண்ட வர்மா தீவிர வைணவ மதம் பூண்டு, தன் தலை நகரை, இப்போதைய திருஅனந்தபுரத்திற்கு மாற்றி படையோட்டம் (போர் புரிந்து) நடத்தி, சிற்றரசர்களின் அரண்மனைகளிலும், கோயில்களிலும் இருந்த நகைகள், ரத்தினங்களுடன், நம் முன்னோர்கள் பாதுகாத்த ஓலைகளையும் கொண்டு வந்து பத்மநாப சுவாமிக்குச் சமர்பித்தார். சேகரிக்கப்பட்ட ஓலைகள் அனைத்தையும் தீக்கிரையாக்கியபின் 18 ஆம் நூற்றாஅண்டின் பிற் பகுதியில் புதிய கேரள வரலாற்றை எழுதினார். அப்படி மலை நாட்டின் வரலாற்று உண்மைகள் எல்லாம், தீக்கிரையாக்கப்பட்டு மார்த்தாண்டனின் மனுஸ்ம்ருதி சார்ந்த வைணவக் கொள்கைகள் மட்டும் பின்பற்றபடும் ஒரு புதிய விதி 250 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய கேரளத்தில் நிறுவப்பட்டது. இதை எதிர்த்தவர்கள் எல்லாம், இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்தை மேற் கொண்டனர். வடக்கே நாகர்களை எல்லாம் கிறித்தவர்கள் ஆக்கியது போல, தென்னகத்தில், முக்கியமாக கேரளத்தில் 40% மேலான மக்கள், முஸ்லிம் மற்றும் கிறித்தவர்கள் இப்படித்தான் ஆனார்கள். வைணவ மதம் மாறிய மன்னர்களும், மத பண்டிதர்களும் சைவத்தையும், வைணவத்தையும் ஒன்றுபடுத்த "ஓம் ஸ்ரீ கணபதயே நம" என்பதற்கு பதில் "ஹரிஸ்ரீகணபதயே நம" என்றும், சிவ பார்வதி ஒன்றாகி அர்த்த நாரீஸ்வரர் ஆனது போல சிவனையும், விஷ்ணுவையும் ஒன்றாக்கி "சங்கர நாராயணன்" என்ற தெய்வத்தையும் உருவாக்கி கேரளத்தில் புரட்சியே செய்து விட்டார்கள்.
இந்தியாவில் மற்றெங்கும் இல்லாத அளவுக்கு மனுஸ்ம்ருதியை கேரளத்தில் பின்பற்றவும் தொடங்கினார்கள். பிராமணர்களைக் கண்டால், சூத்திரர்களான பிற்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், முறையே 16 அடியும், 32 அடியும் தள்ளி நிற்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்து, தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட பெண்களின் மார்பகளுக்குக்குக் கூட "முலைக்கரம்" என்ற பெயரில் வரி வசூலித்து, மார்பகங்களைக் கூட மறைக்கவிடாமல், கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு அவர்களை விரட்டியே விட்டார்கள். இதில் வருத்தபட ஒன்றுமில்லை. நம் முன்னோர்கள் சொன்னது போல, இவ்வுலகிலுள்ள எல்லோருக்கும் பொதுவானவர்தான் இறைவன். எம்மதமும் எல்லோருக்கும் சம்மதமாகத்தானே வேண்டும்.
எகிப்து மற்றும் கிரேக்க தெய்வங்களைப்போல், அருங்காட்சியகத்தில் இனி பாதுகாக்கப்பட வேண்டியது ஒரு வேளை நம் தெய்வங்களாகத்தான் இருக்கும். எந்த ஒரு மதமும் 5000 ஆண்டுகளுக்கு மேல் வாழாதாம். அப்படி நம்முடைய மதம் பெயரை மாற்றினாலும் (இந்து மதம்) சாவை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு மதம் தான். அதனால்தான், இந்து மதம் எனும் பனங்காய், ராமன், கிருஷ்ணன் எனும் நம் பண்டைய அரசர்கள் தலையில் வைக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தான், இலங்கைப் போருக்கு முன் ராமன் வழிபட்ட ராமேஸ்வரர், ராம மந்திரத்தை எப்போதும் த்யானத்திலிருந்து உருவிடுவதாகச் சொல்லியும், எழுதியும் உறுதிப்படுத்த முயலும் கதை உருவானது.
அதே போல் சிவ பகவான் தன்னைத் தாக்க வரும் பாண்டவர்களிடமிருந்து தப்பி, கேதார்நாத்தில், பாதாளத்தில், உயிருக்குப் பயந்து உயிர் வாழ்வதாகச் சோடிக்கப்பட்ட கதை. இப்படி, ராம பக்தர்களும், க்ருஷ்ணப்பக்தர்களும், அத்வைத சித்தாந்தத்திலிருந்து உயிர் பெற்று எழுந்த சைவ மதத்தைப் புதைத்து அதன் மேல் த்வைதம் என்று சொன்னாலும், உண்மையில் மனுஸ்ம்ருதியிலிருந்து உயிர் பெற்ற வைணவ மதத்தை வளர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.
(இப்போதும் இது போன்ற வைணவ மயமாக்குதல் நடக்கத்தான் செய்கிறது. கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து கமல் "தசாவதாரம்" என்ற படம் பிடித்தார். சுனாமி, ஜார்ஜ் புஷ், சோடியம் க்ளோரைடு என்று பல விஷயங்கள் படத்தில் வந்தாலும், குலோத்துங்கச் சோழனை ஒரு மத வெறியனாகச், சிவ பக்தர்களைக் காட்டுமிராண்டிகளாக வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் காண்பித்துப் படம் பார்த்த லட்சக்கணக்கான ஆட்களின் மனதைக் குழப்பி, வைணவக் கோயில்கள் தமிழகத்தில் அதிகம் இல்லாததன் காரணம் சிவ மத வெறியர்களான சோழர்களே என்று நிரூபித்து, கோடிகள் லாபம் உண்டாக்கி அடுத்த படம் பிடிக்க போய்விட்டாரே. இனி அடுத்த படத்தில் கரிகாலனின் கால் கரிய காரணம் அவர் ஒரு க்ருஷ்ண விக்கிரகத்தை எட்டி உதைத்ததால்தான் என்று படம் பிடிக்கத்தான் போகிறார் பாருங்களேன்) இதற்குச் சமமான தவறுகள்தான் முன்பு, காலம் சென்ற எல்லா மதங்களிலும் இறுதிக் காலங்களில் செய்யப்பட்டவையும்.
கிரேக்கர்கள், Ulysses, Achilles (இதைத் தமிழ்படுத்தத் தெரிய வில்லை) போன்ற மனித தெய்வங்களையும், இறைவனிடம் பேசும் திறனுடைய பிதியாக்களையும் நம்பத் தொடங்கினார்கள். இப்போது, கிரேக்கர்களின், எகிப்தியர்களின், மாயன்மார்களின் (தென் அமெரிக்காவில் வாழ்ந்தவர்கள்) தெய்வங்கள் எல்லாம் அருங்காட்சியகத்தில். வருந்திப் பயனில்லை. (பழையன தொலைதலும், புதியன புகுதலும் என்றும் அழியாத உண்மைதானே). அடுத்த வாய்ப்பு நம் மதத்திற்குத்தான் (உடன் இல்லை இனி ஒரு 500 வருடங்கள் தாக்குப் பிடிக்கும்), சீனியாரிட்டி லிஸ்டில் என்ற அடிப்படையில். என்றாலும், இறை உணர்வு என்பது சுவாசக் காற்று போல என்றும் இப்புவியில் நிலை நிற்கத்தான் செய்யும். இறையுணர்வு உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும், இறையருள் உண்டு எப்போதும். இந்த பிரபஞ்ச சத்தியத்தை உணர்ந்த நம் வள்ளுவனும், சித்தர் பெருமக்களும், அதனால்தான், இறைவனை "இறை" என்றார்கள். நம் முன்னோர்களும் "தென் நாடுடைய சிவனே போற்றி, எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்றார்கள்.
இறைவனின் பெயராலும், மதத்தின் பெயராலும், கல்லாய் மாறிய இறைவனைக் காக்க எனும் பெயரில் தங்கள் விருப்பு, வெறுப்புகளையும், தன் சுக சௌகர்யங்களையும் காக்க, மனிதர்களைக் கொன்று குவித்துப் போர் புரியும் இவ்வேளையில் தென்னகத்தினர், முக்கியமாகத் திராவிடப் பண்பாட்டைச் சிக்கெனப் பிடித்து வாழும் தமிழ் இதயங்கள் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதைச் சொல்லில் மட்டும் காட்டாமல், செயலிலும் காட்டி, எம்மதமும் சம்மதம் என்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்ட வேண்டும்.
நாட்டைக் காக்கப் புறப்படும் முன், தன் வீட்டைக் காப்பது மிக மிக அவசியம். நாட்டிலுள்ள மதத் தீமைகளைக் களையப் போகும் முன், நம் வீட்டிலுள்ள சாதித் தீமைகளைக் களைய வேண்டும். சாதி இரண்டொழிய வேறில்லை எனச் சாற்றிய நம் தமிழகத்தில், இத்தனைச் சாதிகளும், சாதிக் கட்சிகளும் உண்டாகக் காரணமான சாதி, மத பிரிவினைகளைப் பிடுங்கி எறிந்து, தமிழனுக்குச் சாதி, மதம், இனம் இல்லை என்ற உண்மையை உணர்த்தி "கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றி வளர்ந்த மூத்தக் குடித் தமிழனின் வழி வந்தோர் நாம்" என்று இவ்வுலகிற்கு நாம் உணர்த்த வேண்டும். எனவே, சைவம் பாதி, வைணவம் பாதி கலந்து செய்த கலவையாம் இந்து மதம் என்ற இந்த மதத்தைச் சகிக்காமல் கல்லாகிப் போன இறைவனை எல்லாம் வல்ல இறைவனாகக் காண ஒரே வழி, சாதி, மத, இன நிறக் கண்ணாடிகளைக் களைந்து, எல்லா உயிரினங்களிடமும், அன்பும், கருணையும் காட்டி நல்வினை செய்து இறைவனை வணங்குதல்தான்.
முதல் தீர்த்தங்கரான ரிஷபநாதன்
அதே சமயம் சமணம் மதத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபநாதனை, சிவபகவானாக்கி ஏசுநாதரின் பிறப்பிற்கு முன் சைவ மதம் உருப்பெற்றது என்றும் சொல்லப்படுகிறது. 6 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவில் ஆண்ட மன்னர்களைப் பற்றி வரலாற்றில் அதிகம் சொல்லப்படவில்லை. ஆனால, தென்னாட்டில் சேர, சோழ பாண்டியர்கள் ஆண்ட பொற்காலம் சைவ மதம் கடல் கடந்து, கடாரம் (இப்போதைய கம்போடியா) வரை பரப்பப்பட்ட காலம். 12, 13 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவை பாரசீயத்திலிருந்து வந்த சுல்தான்கள் ஆண்டனர்.
நாளந்தா
தட்ச சீலா
அக்காலத்தில், நாளந்தா, மற்றும் தட்ச சீலா உள்ளிட்ட பல அறிவுக் கூடங்கள் ஆக்ரமிக்கப்பட்டு நம் நாட்டின் விலை மதிக்க முடியாத ஓலைகள், புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
அம்பேத்கார் - 1938 மனுஸ்ம்ருதி கொளுத்தினார்
14 ஆம் நூற்றாண்டின் வாய் மொழியாக பிரச்சாரத்தில் இருந்தவையும், ஓலைகளிலும், புத்தகங்களிலும் எழுதிப் பாதுகாக்கப்பட்ட வேதங்களும், புராணங்களும், மருத்துவக் குறிப்புகளும், கலை மற்றும் அறிவியல் குறிப்புகளும் சம்ஸ்க்ருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் "மனுஸ்ம்ருதி" போன்றவைகள் நம் முன்னோர்கள் பின்பற்றியவைகள் என்ற மட்டில் இந்து மதத்தின் பாகமாக்கப்பட்டதாம். அதனால்தான், இந்தியப் பீனல்கோட் எழுதிய டாக்டர் அம்பேத்கார் - 1938 ல் , இந்து மதத்திற்கும், இந்தியாவிற்கும் தீண்டாமையின் பெயரில் இழிவு ஏற்படுத்தும் "மனுஸ்ம்ருதி" யைப் பொது இடத்தில் கொளுத்தினார்.
இபாதத் கானா
இதன் பின், 16 ஆம் நூற்றாண்டில், முகலாய மன்னரான அக்பர் (1556-1605), எல்லா மதங்களும் - சமணமும், புத்தமும், சைவமும், இஸ்லாமும், கிறித்தவமும் எல்லாம் வல்ல இறைவனின் புகழ் பாடி, இறையருள் பெறத்தான் முயல்கின்றன என்ற உண்மையைப் புரிந்து கொண்டு, எல்லா மதங்களையும் உட்படுத்தி, எல்லாருக்கும் உகந்த "தீன்-இலாஹி" என்னும் புதிய மதத்தை நிறுவினார். அவருடைய "இபாதத் கானா" வில் வைஷ்ணவ மதத்தவர்கள், மனுஸ்ம்ருதியை, சைவ, வைஷ்ணவ மதத்தவரின் (இந்து) குரான் என்று சாதித்தே விட்டார்கள்.
அக்பர் அரசரே ஒழிய தெய்வபுத்திரனோ, தேவ தூதரோ அல்ல என்பதனாலோ என்னவோ, அம்மதம் எவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், ஆங்கிலேயர்கள் வந்த போது, இங்குள்ள இஸ்லாமியர், சமணர், புத்த மதத்தினர் ஒழிய மற்றவர்களை, முன்பு பாரசீகர்கள் அழத்தது போல் "இண்டஸ்வேலி" காரர்கள்(Indus Valley) என அழைத்தும், எழுதியும், அப்பெயர், சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் பொதுவான பெயராக மாறிவிட்டது. கிறித்தவத்தைப் பற்றிப் பேசத் தகுதி உடையவர்களைப் பாதிரியார்கள் என்பது போல் (Theology படித்ததால்) இந்து மதத்தைப் பற்றிப் பேச , விவாதிக்க, பிராமணர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். (மனுஸ்ம்ருதி இந்து மதத்தின் பைபிளாகக் கருதப்பட்டதால்).
சைவ மதத்திலுள்ள உயர்வு தாழ்வின்மைக்குப் (தத்துவமசி, அஹம் ப்ரம்மாத்மி etc....- "அது" நீயாகிறாய், உன்னுள் நானாகிய இறைவன் இருக்கிறேன் etc.) பதிலாக, மனுஸ்ம்ருதி இந்து மதத்தின் "என்சைளோபீடியா" ஆனது. (இறைவனின் நெற்றியிலிருந்து பிராமணர்கள், தோளிலிருந்து ஷத்திரியர்கள், வயிற்றிலிருந்து வைசியர்கள்,காலிலிருந்து சூத்திரர்கள்) கிறித்தவர்களின், பிதா, புத்ர, பரிசுத்த ஆத்மா எனும் ட்ரினிட்டி இந்து மதத்திலும் உள்ளது என்று சொல்லி, படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் என்று சாதித்தே விட்டர்கள். பண்டைய கிரேக்க நாட்டில் மனிதர்களை 4 பிரிவுகளாக்கி, அவர்களது திறமைக்கு இணங்க பணிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அது போல நம் சித்தர்களும், மனிதர்களின் நோய்களைக் கண்டறிய கப, பித்த, வாத, ரத்த ஆதிக்க உடல்களாகப் பிரித்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த அறிவுகள் தவறாகப் பயன்படுத்தப்ட்டு விவித சாதிகளாக்கப்பட்டன. ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்பது புரிகிறது. யாருக்கு இதனால் நன்மை உண்டோ அவர்கள்தான் இத்தகைய கொடுமைகளைச் செய்திருக்க வேண்டும்.(பாவம் தொலைய, மோக்ஷம் கிடைக்க பிராமணர்களுக்கு, பசு, மண், பொன் தானம் செய்வது உத்தமம்)
இப்படி நம் முன்னோர்களும், சித்தர்களும், யோகிகளும் கண்டறிந்த ப்ரபஞ்ச சத்தியங்களும், ஆன்மீக ஞானமும் அன்றைய நாட்களில் வாழ்ந்த சுயநலவாதிகளின் இத்தகைய செயல்களால் நமக்கு நஷ்டமாகியது. 15 ஆம் நூற்றாண்டு முதல், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட்வர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள், இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மதம் மாறினார்கள். 20 ஆம் நூற்றாண்டில், டாக்டர் அம்பேத்காரும், ஏக தேசம் ஒரு லட்சம் பேருடன் புத்த மதத்தைத் தழுவினார்கள். இஸ்லாம் மதமும், அன்பும், கருணையும் ஆதரவும் உணவும் கொடுத்துத் தங்கள் மதத்திற்கு ஆட்களை வரவேற்கத் தொடங்கிய காலத்தில் இந்து மதம் (?) சாதி பேசி பிற்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று பெரும்பான்மையோரை முத்திரை குத்திக் கோயில்களிலிருந்தும், இறைவனிடமிருந்தும் விரட்டியது.
மார்த்தாண்ட வர்மா
மானிடர் எல்லாம் ஒன்றாகச் சாதியின்றி, குளித்து தேவாரம் பாடி வாழ்ந்த மலைநாட்டு மக்களை ஆண்ட சேர மன்னனைச் சதியால் வீழ்த்தி, முக்தி பெற இமயம் சென்ற ஆதிசங்கரரைப் போல், கைலாயம் சென்ற அவரை-அதாவது சேர மன்னனை- மெக்கா சென்றதாய் கூறி அவருடைய மக்களையும் இஸ்லாம் மதம் தழுவவும் வைத்தார்கள். நாஞ்சில் நாட்டை ஆண்ட மார்த்தாண்ட வர்மா தீவிர வைணவ மதம் பூண்டு, தன் தலை நகரை, இப்போதைய திருஅனந்தபுரத்திற்கு மாற்றி படையோட்டம் (போர் புரிந்து) நடத்தி, சிற்றரசர்களின் அரண்மனைகளிலும், கோயில்களிலும் இருந்த நகைகள், ரத்தினங்களுடன், நம் முன்னோர்கள் பாதுகாத்த ஓலைகளையும் கொண்டு வந்து பத்மநாப சுவாமிக்குச் சமர்பித்தார். சேகரிக்கப்பட்ட ஓலைகள் அனைத்தையும் தீக்கிரையாக்கியபின் 18 ஆம் நூற்றாஅண்டின் பிற் பகுதியில் புதிய கேரள வரலாற்றை எழுதினார். அப்படி மலை நாட்டின் வரலாற்று உண்மைகள் எல்லாம், தீக்கிரையாக்கப்பட்டு மார்த்தாண்டனின் மனுஸ்ம்ருதி சார்ந்த வைணவக் கொள்கைகள் மட்டும் பின்பற்றபடும் ஒரு புதிய விதி 250 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய கேரளத்தில் நிறுவப்பட்டது. இதை எதிர்த்தவர்கள் எல்லாம், இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்தை மேற் கொண்டனர். வடக்கே நாகர்களை எல்லாம் கிறித்தவர்கள் ஆக்கியது போல, தென்னகத்தில், முக்கியமாக கேரளத்தில் 40% மேலான மக்கள், முஸ்லிம் மற்றும் கிறித்தவர்கள் இப்படித்தான் ஆனார்கள். வைணவ மதம் மாறிய மன்னர்களும், மத பண்டிதர்களும் சைவத்தையும், வைணவத்தையும் ஒன்றுபடுத்த "ஓம் ஸ்ரீ கணபதயே நம" என்பதற்கு பதில் "ஹரிஸ்ரீகணபதயே நம" என்றும், சிவ பார்வதி ஒன்றாகி அர்த்த நாரீஸ்வரர் ஆனது போல சிவனையும், விஷ்ணுவையும் ஒன்றாக்கி "சங்கர நாராயணன்" என்ற தெய்வத்தையும் உருவாக்கி கேரளத்தில் புரட்சியே செய்து விட்டார்கள்.
இந்தியாவில் மற்றெங்கும் இல்லாத அளவுக்கு மனுஸ்ம்ருதியை கேரளத்தில் பின்பற்றவும் தொடங்கினார்கள். பிராமணர்களைக் கண்டால், சூத்திரர்களான பிற்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், முறையே 16 அடியும், 32 அடியும் தள்ளி நிற்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்து, தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட பெண்களின் மார்பகளுக்குக்குக் கூட "முலைக்கரம்" என்ற பெயரில் வரி வசூலித்து, மார்பகங்களைக் கூட மறைக்கவிடாமல், கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு அவர்களை விரட்டியே விட்டார்கள். இதில் வருத்தபட ஒன்றுமில்லை. நம் முன்னோர்கள் சொன்னது போல, இவ்வுலகிலுள்ள எல்லோருக்கும் பொதுவானவர்தான் இறைவன். எம்மதமும் எல்லோருக்கும் சம்மதமாகத்தானே வேண்டும்.
எகிப்து மற்றும் கிரேக்க தெய்வங்களைப்போல், அருங்காட்சியகத்தில் இனி பாதுகாக்கப்பட வேண்டியது ஒரு வேளை நம் தெய்வங்களாகத்தான் இருக்கும். எந்த ஒரு மதமும் 5000 ஆண்டுகளுக்கு மேல் வாழாதாம். அப்படி நம்முடைய மதம் பெயரை மாற்றினாலும் (இந்து மதம்) சாவை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு மதம் தான். அதனால்தான், இந்து மதம் எனும் பனங்காய், ராமன், கிருஷ்ணன் எனும் நம் பண்டைய அரசர்கள் தலையில் வைக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தான், இலங்கைப் போருக்கு முன் ராமன் வழிபட்ட ராமேஸ்வரர், ராம மந்திரத்தை எப்போதும் த்யானத்திலிருந்து உருவிடுவதாகச் சொல்லியும், எழுதியும் உறுதிப்படுத்த முயலும் கதை உருவானது.
அதே போல் சிவ பகவான் தன்னைத் தாக்க வரும் பாண்டவர்களிடமிருந்து தப்பி, கேதார்நாத்தில், பாதாளத்தில், உயிருக்குப் பயந்து உயிர் வாழ்வதாகச் சோடிக்கப்பட்ட கதை. இப்படி, ராம பக்தர்களும், க்ருஷ்ணப்பக்தர்களும், அத்வைத சித்தாந்தத்திலிருந்து உயிர் பெற்று எழுந்த சைவ மதத்தைப் புதைத்து அதன் மேல் த்வைதம் என்று சொன்னாலும், உண்மையில் மனுஸ்ம்ருதியிலிருந்து உயிர் பெற்ற வைணவ மதத்தை வளர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.
Ulysses
Achilles
பிதியா
priestess at the Temple of Apollo at Delphi