திங்கள், 21 ஆகஸ்ட், 2023

வட கேரளத்தின் தெய்யம்

 

தெய்யம் எனும் சொல் தெய்வம் எனும் சொல்லில் இருந்து மருவி வந்ததாகச் சொல்லப்படுகிறது. மட்டுமல்ல, மூதாதையர்களை வழிபடும் முறையும் தெய்யத்தில் கடைபிடிக்கப்படுவதால் அதனுடனும் தெய்யத்திற்குத் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 24 - லால்பாக் மலர் கண்காட்சி - 2023 - 1


நுழைவு வாயிலின் வெளியில் சந்திப்பு + சிக்னல் இருக்கும் இந்த இடத்தில் இப்படியான பூச்சாடி வடிவங்கள் சாலையின்   நான்கு மூலைகளிலும் வைச்சிருக்காங்க. இன்னும் மெருகூட்டி அழகுபடுத்துவாங்க என்று தோன்றுகிறது. திறந்து வைச்சா உள்ளுக்குள்ள குப்பை, பூச்சி எல்லாம் குடிபுகாதோ!

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில்/தக்ஷின திருப்பதி - பகுதி - 2 - தென்பெண்ணை ஆறு

 

தக்ஷின திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் பற்றிய முதல் பகுதியை இதோ இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்.

=====> முதல் பகுதி சுட்டி <=====

முதல் பகுதியை வாசித்தவர்கள், கருத்து சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி. 

சென்ற பதிவிலேயே சொன்னது போல பெருமாளை தரிசிக்க உள்ளே செல்ல பெருமாளின் இரு புறமும் தான் வாயில்கள். நேரே இல்லை. ஆனால் கொடிமரம் வெளியில் பெருமாளுக்கு நேரே ஆனால் அங்கிருந்து பெருமாள் தெரியமாட்டார். சுவர்!

புதன், 9 ஆகஸ்ட், 2023

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில்/தக்ஷின திருப்பதி - பகுதி - 1

 

ஒரு புத்தம் புது சூட்டோடு சுடா பதிவு! அதனால எல்லாரும் கை பிடிச்சிட்டு நில்லுங்க. ஆ! கீதாவான்னு வியந்து பார்க்கறப்ப தள்ளாடாம இருக்கணுமே!!!

நம்ம அனுபிரேமுக்குத்தான் நன்றி சொல்லணும். 2018ன்னு நினைக்கிறேன். அவங்க தளத்துல இந்தக் கோயில் பத்தி படங்களோடு போட்டிருந்தாங்க. சுற்றிலும் இயற்கை, குன்றுக்குக் கீழே ஆறு ஓடும் படம் எல்லாம் போட்டிருந்தாங்களா, அவ்வளவுதான் எனக்கு அங்கு போகும் ஆசை வந்துவிட்டது. வீட்டில் சொல்லி வைத்திருந்தேன். ஆனா அப்பதான் இங்கு என்ட்ரி. செட்டிலாகி முடிக்கறதுக்குள்ள அடுத்தாப்ல கொரோனா. அப்புறம் ஏதேதோ காரணங்கள் போக முடியலை.

கடந்த சனிக்கிழமை இரவு. மறு நாள் ஞாயிறு அன்று சுதந்திர தின- மலர் கண்காட்சிக்கு லால்பாக் போலாமா? தக்ஷின திருப்பதிக்குப் போலாமா? ஒத்தையா ரெட்டையா போட்டு கடைசில அடுத்த வாரம் லால்பாக் போயிக்கலாம், இந்த ஞாயிறு தக்ஷின திருப்பதின்னு முடிவாச்சு. 

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 23 - லால்பாக் மலர் கண்காட்சி - 4

ஆ அதுக்குள்ள இந்த வருட சுந்தந்திர தின மலர் கண்காட்சியா? இன்னும் இந்த வருஷத்துக் காட்சி தொடங்கலை...லால்பாகில் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரைன்னு செய்தி வந்தது அதெப்படி கீதாக்கும் மட்டும் Preview வா?!!! போன வருஷத்தையே போட்டு முடிக்கலை!! ஹிஹிஹி...இந்த வருடமும் செல்வதாக இருக்கிறேன். அதையும் க்ளிக்குவேனே அதைப் போடுவதற்குள் போன வருடம் எடுத்ததை போட்டு முடிச்சிடணுமே!!! (அதுவும் நெல்லை வந்து என்னைக் கலாய்ப்பாரே!!!!) இதோ அதன் முடிவுப் பகுதி. சட்டுபுட்டுன்னு நாளைக்குள்ள இன்று போட்டுட்டா கொஞ்சமாச்சும் தப்பிச்சேன்!!!! இதோ அந்தப் படங்கள்!