திங்கள், 8 செப்டம்பர், 2025

இரண்டு 'ஜி' க்களின் அலப்பறைகள்

 

4ஜி - இந்தா உன்னைத்தான், அந்த தங்கச்சி உன்னை அழுத்தி அழுத்தி கூப்பிடுது பாரு.

5ஜி - என்னது? என்னையா? நல்லாருக்கே! ம்ஹூக்கும். காலைலருந்து....6 மணி இருக்குமா...ஹான் அப்ப தொடங்கி இவ்வளவு நேரம் 6 நிமிஷ வீடியோ 7 மணி நேரம் ஆச்சு. தங்கச்சி ஏத்திவிட்ட அவங்க வீட்டாளு வீடியோவை சொமக்க முடியாம சொமந்து மூச்சு திணறி சுத்தி சுத்தி, முக்கி முக்கி அந்த யுட்யூப் பொட்டில போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கறேன். நீ இவ்வளவு நேரம் சும்மாதானே இருந்த போயேன்.

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

கீதையும் கீதாவும்

 

//பொதுவாக நான் எனது என்று தன்னை கர்த்தாவாக எண்ணிக் கொண்டு செயல்களை செய்யாத பொழுது அவனை கர்மவினைகள் பாதிப்பதில்லை என்கிறார்கள் செய்பவன் நான் என்னால் தான் இது நடக்கிறது என்னும் புத்தியை விட்டுவிட்டு கர்மங்களில் பற்றற்று அவற்றின் பலனையும் எதிர்பாராமல் செயலாற்றுபவனை கர்மா பாதிப்பதில்லை என்பது ரமணர் அறிவுரையின் சாரம்.//

திங்கள், 14 ஜூலை, 2025

ஒழுக்கம் உடைமை குடிமை

 

(சிம்லா நாட்கள் - 3 விரைவில் வரும். முடிவுத் தொடர். துளசிக்குச் சற்று உடல் நலம் சரியில்லாததால் காணொளிக்கான குரல் அவரால் கொடுக்க முடியவில்லை. இந்த வாரம் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.)

பரிந்தோம்பிக் காக்க வேண்டிய ஒழுக்கம்

சுஜாதா அவர்கள் எழுதிய கதையான ஓலைப்பட்டாசு கதையில் சுஜாதா சொல்லியிருந்த ஒரு சம்பவம் குறித்து  எங்கள் ப்ளாகில் நம்ம ஜெ.கே. அண்ணா, தான் வேலை பார்த்த இடத்தில் தனக்கும் கிட்டத்தட்ட அதே போல ஒரு சம்பவம் நடந்ததாகச் சொல்லி எபியில் சென்ற சனிக்கிழமை எழுதியிருந்தார்.

செவ்வாய், 8 ஜூலை, 2025

சிம்லா நாட்கள் - 2

 

சென்ற பதிவில் கால்காவிலிருந்து சிம்லாவிற்கான டாய் ரயில் 7.15 ற்கு என்று தவறாக வந்துவிட்டது. 7 மணிக்குக் கால்காவிலிருந்து (ஹிந்தியில் कालका வாம். எனவே கால்கா) சிம்லாவுக்குச் செல்லும் ஹிமாலயன் தர்ஷன் எனும்  டாய் ரயிலில் முன்பதிவு செய்திருந்த பயணம். 1 1/2 மணி நேரம்தான் இருந்தது. டாய் ரயிலில் எங்களால் பயணிக்க முடிந்ததா? என்று சென்ற பதிவின் கடைசி வரி. 

வியாழன், 3 ஜூலை, 2025

சிம்லா நாட்கள் - 1

 

பயணங்கள் எப்போதும் மனதுக்கு இன்பமளிப்பவை. அப்படியிருக்க தென் மாநிலத்தவர்களுக்கு வாய்க்கும் வட மாநிலப் பயணங்கள், அதிலும் இமயமலைப் பகுதிகள் என்றால் எப்படிப்பட்ட இனிமை அளிக்கும், யோசித்துக் பாருங்கள்! அப்படி ஒரு இனிய பயணம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் (2024) எனக்குக் கிடைத்தது.

செவ்வாய், 24 ஜூன், 2025

சில்லு சில்லாய் - 23

 

சில்லு - 1 - சிறிய பின்னோட்டம் + முன்னோட்டம்

ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் பற்றி எழுதிய போது. திரிரங்க யாத்திரை என்று, ஸ்ரீரங்கப்பட்டினம், மத்யரங்கம், ஸ்ரீரங்கம் மூன்று கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்கும் பயணம் இருப்பதாகச் சொல்லியிருந்தேன், உங்களுக்கு நினைவிருக்கலாம்! 

புதன், 18 ஜூன், 2025

ரங்கனதிட்டு- ஸ்ரீரங்கப்பட்டினம் கோவில் - 11

சென்ற பதிவில் ஸ்ரீரங்கப்பட்டின கோவிலின் படங்கள் சில விவரங்கள் போட்டுவிட்டு மீதி படங்களை அடுத்த பதிவில் சொல்லி முடிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். இதோ.....

புதன், 11 ஜூன், 2025

ரங்கனதிட்டு- ஸ்ரீரங்கப்பட்டினம் கோவில் - 10

பஸ்சிமவாஹினியில் நம்ம கடமையை முடித்துக் கொண்டு (பதிவும் போட்டாச்சு) ஸ்ரீரங்கப்பட்டினம் கோவிலுக்குப் போனோம். ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையையும் கோவிலையும் 38 வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். அப்பவும் சரி இப்பவும் சரி, நிதானமாக அங்கு ஒரு நாளேனும் தங்கிப் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. இது பல பயணங்களிலும் ஏற்படும் ஒன்று. மகன் இங்கு இருந்தவரை நிதானமாகப் பார்ப்பது நடந்தது. இருவரின் அலைவரிசையும் ஒன்று.

வெள்ளி, 30 மே, 2025

சில்லு சில்லாய் - 22

 சில்லு - 1 - வரலாறு, பாரம்பரியம் என்பவை இப்படித்தானோ?

மரங்களின் வேர்களில் சித்தர்கள் - என்று படங்களுடன், ஸ்ரீராம், ஒரு வியாழன் பதிவில் கொடுத்திருந்தார். பதிவின் ====> சுட்டி  <====

//ஆ! அங்கு சீக்கிரத்தில் கோவில் வந்துவிடும் என்று கருத்தில் சொல்லியிருந்த நினைவு.// அப்போது, இங்கு அருகில் இருக்கும் பூங்காவில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்து குறித்து வைத்திருந்தேன். பின்னர் பதிவாக்க மறந்து விட்டுப் போயிருச்சு.