செவ்வாய், 4 ஜூன், 2019

விவேகானந்தம்


விவேகானந்தம்தயாராகிவிட்டது. அடுத்த வாரத்தில் முன்னோட்டக் காட்சி திரையிடப்படும் என்று நம்புகிறோம். அதன் பின் யுட்யூபில் பதிவேற்றம் செய்யப்படும். எல்லா நட்புகளும், நலன் விரும்பிகளும், உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படத்தைப் பார்த்து உங்கள் விலைமதிப்பற்ற கருத்துகளைப் பதிய வேண்டுகிறோம்.

இந்தப் படத்தில் நடுவில் தன் மனைவியுடன் இருப்பவர்தான் திரு கே ஆர் பாஸ்கர பிள்ளை. இப்படத்தின் ஹீரோ. கல்வி நிறுவனத்தை நிறுவுபவர். நிஜத்தில் உண்மையான கேரக்டரான அவரேதான் படத்திலும் தற்போதைய பகுதிக்கு வருகிறார்.

நான் இதுவரை எடுத்த எட்டு படங்களில், ஐந்து வரலாறு சார்ந்த படங்கள் மற்றும் இரண்டு தற்போதைய சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்தவை. ஆனால்விவேகானந்தம்”, வரலாற்றையும், தற்போதைய சமூகப் பிரச்சனையையும் உள்ளடக்கிய ஒன்று.

இக்கதை, அரசு உதவி பெற்று நடத்தப்பட்ட பள்ளி ஒன்றில் 1964 ஆம் வருடம் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த,  கே ஆர் பாஸ்கர பிள்ளை என்ற ஆசிரியரைப் பற்றியது. அவர், என்னைப் போன்ற இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் போன்றவர் அல்லர். சுவாமி விவேகானந்தாவைப் பின்பற்றுபவர் என்பதால் அவரது பொன்மொழியானஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை உழைமின்!” என்பதற்கு ஏற்ப தன் குறிக்கோளை அடையும் வரை அயராது உழைத்தவர். அவர் உருவாக்கிய கல்வி நிலைய வளாகத்துள் ஒரு மாணவன்/மாணவி தனது இருபது வருட கல்வியையும் தொடர்ந்து பெறமுடியும். அதாவது, எல்கேஜி யிலிருந்து மேல்நிலை பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி வரை பெற்று விடலாம். ஏறத்தாழ 7000 மாணவ மாணவிகள் இந்தப் படன கேந்தரத்தில் கல்வி பயிலுகின்றனர்.

ஆம்! மிகப் பெரிய தொலைநோக்குப் பார்வையுடனான அண்ணாமலை கல்வி நிறுவனங்கள், அழகப்பா கல்வி நிறுவனங்கள், விஐடி கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை ஸ்தாபித்தவர்களுக்கு நிகராகப் போற்றப்பட்டு என்றென்றும் நினைவில் வைத்திருக்கப்பட வேண்டியவர்.

தொடக்கப் பள்ளியைத் சொந்தமாக்கிய பின், 50 வருடங்களுக்குள், பல கல்வி நிறுவனங்கள் அடங்கிய ஸ்ரீ விவேகானந்தா படன கேந்த்ரா என்று தற்போது அறியப்படும் கல்வி நிறுவனத்தை தனது அயராத உழைப்பால் நிறுவி நிலை நிறுத்தியவர்.

இப்படம், அப்படி வளர்ந்த ஸ்ரீ விவேகானந்தா படன கேந்த்ரா வைப் பற்றிப் பேசுகிறது. கூடவே, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் நிலவும் மிகப் பெரிய ஆபத்தான போதைப் பொருள் பற்றியும், அதிலிருந்து மாணவர்களை மீட்க சமூகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகிறது

அப்படியாக, இப்படம்விவேகானந்தம்”, அதன் வரலாறு மற்றும் தற்போதைய சமூகப் பிரச்சனையையும் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறது. நான் காணும் இவ்விரண்டைப் பற்றியும் கண்டபின் இது போல் உங்களிடம் பகிராமல் இருக்க முடியவில்லை. அதனால்தான் இப்படம். படத்தைப் பார்த்து உங்கள் மேலான கருத்துகளைத் தெரிவிக்க மறந்துவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். எங்கள் யூட்யூப் சானல் Thulasidharan thillaiakathu https://www.youtube.com/channel/UCQ6LZoqGiZ_chztaUkuexlQ



மிக்க நன்றி அனைவருக்கும்!

அன்புடன்
துளசிதரன்