செவ்வாய், 28 ஜூன், 2022

சில்லு சில்லாய் – 4 - விக்ரம் - சரவண விநாயக்கின் ஓவியங்கள்

 விக்ரம்

பெயரிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும்! ஆம் படமேதான். பல வருடங்கள் கழித்து திரை அரங்கிற்குச் சென்று பார்க்க அதிசயமான ஆச்சரியமான ஒரு வாய்ப்பு கிடைத்தது.

பலரும் முதல் காட்சி அல்லது வந்த ஓரிரு நாட்களில் பார்த்திருப்பீர்கள். எனக்கோ அதை திரையரங்கிலிருந்து எடுத்துவிடும் கடைசி நாளில் பார்க்கும் வாய்ப்பு. பரவாயில்லை. நிறைய விமர்சனங்களும் வந்திருக்கும். நான் சொல்லப் போவது ஆறிப் போன காஃபி/டீ யாக இருக்கலாம். Out dated ஆகக் கூட இருக்கலாம் என்றாலும் என் பார்வையில். Better late than never!

இப்படம் பற்றிய பானுக்காவின் விமரிசனம் தவிர வேறு எந்த விமரிசனத்தையும் வாசிக்கவில்லை. 

படத்தைப் பற்றி ஆகா, ஒகோ, துப்பறியும் கதை Undercover Agent/spy (ரகசிய புலனாய்வு) கதை, உனக்குப் பிடித்த விஷயம் என்று உறவினர், நட்புகள் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அதீதமான எதிர்பார்ப்புகளுடன் சென்றேன் என்பது பச்சை உண்மை! அதனால் அந்தப் பச்சை பழுப்பாக மாறியது கொஞ்சம் சங்கடம்

Undercover Agent/Spyகளில் நாட்டுக்காக ரகசிய புலனாய்வு செய்பவர்களும் உண்டு, நிழல் உலகத்திற்காகப் பணிபுரிபவர்களுமுண்டு. இரட்டை உளவாளிகளாகப் பணிபுரிபவர்களும் உண்டு.  இரட்டை உளவாளிகள் மிக மிக மிக ஆபத்தானவர்கள்.  

நாட்டிற்காகப் பணிபுரிபவர்கள் காவல் துறையைச் சேர்ந்தவராகவோ அல்லது இராணுவத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம், அல்லது கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுப் பணிபுரிபவர்களாகவும் இருக்கலாம்

எனக்குத் துப்பறியும் கதைகள்/ரகசிய புலனாய்வு மிகவும் பிடிக்கும், அதுவும் உண்மைக் கதைகள் மிகவும் பிடிக்கும் என்பதால் நம் நாட்டின் உளவாளிகளாகப் பணியாற்றியவர்களைப் பற்றிக் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். பெரும்பான்மையோரின் சாதனைகள் தியாகங்கள் வெளியுலகிற்குத் தெரியவராது. (படத்தில் இந்த வசனம் இருக்கிறது)

வாசித்த போது நான் அறிந்து கொண்டது, ஒரு உளவாளியின் வாழ்க்கை மிக மிக ஆபத்தானது மற்றும் அதிகம் கொண்டாடப்படாதது என்பதுதான். தங்கள் சுய அடையாளம் இல்லாமல் நெருக்கமானவர்களோடும் கூட எந்த விதத் தொடர்பும் இல்லாமல் மக்களோடு மக்களாக அதுவும் எதிரி நாட்டில் வாழ நேர்ந்தால் அந்த நாட்டு பழக்க வழக்கங்கள் அறிந்து, பின்பற்றி சந்தேகம் வராத அளவிற்குப் பணி புரிய வேண்டும். (An Indian Spy in Pakistan - Mohanlal Bhaskar)

பெண்களும் பணி செய்திருக்கிறார்கள் என்பது மிகவும் வியப்பளித்த விஷயம். காஷ்மீரி பெண் ஒருவர் இந்திய உளவாளியாகப் பயிற்சி பெற்று பாகிஸ்தானில் அதுவும் இராணுவ குடும்பத்தில் மருமகளாகச் சென்று மிக முக்கியமான தகவலைக் கொடுத்தவர். (1971 - இந்திய பாகிஸ்தான் போர்க்காலத்தின் போது) உண்மைக் கதை.

முக்கியமான தகவலைக் கையாள்பவர்கள்; பிடிபடும் அபாயத்தில் தொடர்ந்து இருப்பவர்கள். இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வது பல சமயங்களில் உணர்வு ரீதியாகப் பாதிக்கும் பணி ஆனால் உணர்வுகள் என்பது இந்தப் பணிக்காக முற்றிலும் துறக்கப்பட வேண்டும், இந்த வசனமும் படத்தில் இருக்கிறது. அதே சமயம் அது பாதிக்கப்படும் என்பதற்கான காட்சியும் உள்ளது. ரசித்த காட்சிகள். இதற்கு முந்தைய பத்தியும் அப்படியான உண்மைக் கதை.

எதிர்பார்த்துச் சென்றது என் தவறு. கண்டிப்பாக ரெட் ஜயன்ட், கமல், லோகேஷின் தவறல்ல!

படத்தில் கதை? – திருப்பம் என்று சொல்லப்படுவது எனக்குத் திருப்பமாகத் தெரியவில்லை. என்னதான் Agent/Spy என்ற கதாபாத்திரமாக இருந்தாலும் வழக்கமான கதை. நிறைய படங்கள் வந்தாயிற்று எனவே புதிதாக ஒன்றுமில்லை. (ஒரு உதாரணம் – The Departed ஆங்கிலப் படம்

இனிய மலையாளத் தமிழில் பேசும் காவல்துறை அதிகாரி ஒருவரால் ஒரு ரகசிய உளவாளி-அமர்- தேர்ந்தெடுக்கப்பட்டுத் துப்பறியும் அழகான கதை. பொதுவாக இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் உளவாளியைப் பற்றி அந்த அதிகாரியைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் மிக மிக மிக ரகசியமாக இருக்கும். ஆனால் அடுத்த காட்சியில் மற்றொரு காவல் அதிகாரியும் இவரும் பேசிக் கொள்வதிலிருந்தே தெரிந்துவிடுகிறது. பெரிய ஒட்டை. இந்தக் காவல்துறை அதிகாரி கூட்டுக் களவாணி என்பது தெரிந்துவிடுகிறது. 

அமர் துப்பறிவதை இன்னும்  அழகாக Suspense ஆகக் கொண்டு போயிருக்கலாம். ஆனால் கதை நகர்வது, போதை மருந்து கடத்தல் மாஃபியா, வெளிநாட்டில் அதன் தலைவன், அரசியல்வாதி, கள்ளப் போலீஸ் களவாணிக் கூட்டம், துப்பாக்கிச் சூடு, இரத்தம், சத்தம், வன்முறை என்ற ரீதியில், வழக்கமான பாணியில் ஆனால் காட்சிகள் கண் இமைக்கும் நேரத்தில் மாறி மாறி ஓடுகிறது, தற்போதைய Trend ல். அவ்வளவுதான்.  Old wine in new bottle. 

கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து ஓடுவதால் கண்கட்டு வித்தை போல நாம் யோசிக்கும் அவகாசம் இல்லாமல் இளைஞர்களுக்கு ஏற்ற வகையில்!? எடுத்திருப்பதால் கொண்டாடப்படுகிறது. (அதனால் எனக்கு வயதாகிவிட்டது என்று எண்ணிவிடாதீர்கள்!). நான் இதே காலகட்டத்துக் காட்சிகளை இன்னும் ஆழமாக எதிர்பார்த்தேன். லோகேஷை திறமையானவர் என்று சொல்வதால்.

காட்சிகளின் வேகத்தில் படத்தில் உள்ள சின்ன ஓட்டைகள், மாபெரும் ஓட்டைகள் சினிமா என்பதால் மிகைப்படுத்தல் எல்லாம் கண்கட்டு வித்தையில் மறைந்து போகிறது. பொதுவாகத் தமிழ் மக்கள் விரும்பும் Heroism – கதாநாயகன் சாகக் கூடாது என்ற சம்பிரதாயத்தை லோகேஷ் அப்படியே கடைபிடித்திருக்கிறார்!

முரண் - என்னதான் கர்ணன்/விக்ரம் தன் மகன் கொல்லப்பட்டதால், தனிப்பட்ட பழிவாங்கல் இல்லை, போதைப் பொருள் அற்ற எதிர்கால சமுதாயம் வேண்டும் என்ற வசனத்தை பேசினாலும் அதற்கான வலுவான காட்சிகள் இல்லை என்பதால் பழிவாங்கலின் வாசனையே அதிகமாக அடிக்கிறது. போதைப் பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதாகவும் சொல்லி, காட்சிக்குக் காட்சி தண்ணியும், புகையும்! வன்முறையும்! தயாரிப்பாளர்கள், இயக்குநரின் படி இவை எல்லாம் தீங்கில்லை, எதிர்காலத்தில் இருக்கலாம் போலும்! (ஆனால் எந்தப் படம் தொடங்கும் போதும் வரும் விழிப்புணர்வு புகை, குடி கூடாது என்றுதானே!!!)

அப்படிப் போராடும் கர்ணனின் இலக்கு போதைப் பொருள் விநியோகத்தில் முக்கியப் புள்ளி சந்தானம், அதுவும் தன் மகனைக் கொன்றவன் - ஆனால் கடைசி வரை வர வேண்டுமே சந்தானம் - அதனால் இடையில் சந்தானத்தையும் கொலைக்குப் பின்னணியில் இருந்த ஒரு அரசியல்வாதியையும் நேருக்கு நேர் சந்தித்தும் சந்தானத்தை ஒன்றும் செய்யாமல் அரசியல்வாதியை மட்டும் கடத்துகிறார்.  Logic?

சந்தானம் எதையோ வாயில் போட்டுக் கொண்டால் உடனே அசகாய ஆற்றல் பெற்று டிஷ்யும் டிஷ்யும் செய்வாராம்! 

குண்டாக இருப்பவரைப் பற்றி விமர்சனம் செய்யும் பழக்கம் எனக்குத் துளியும் கிடையாது. மனதில் கூட அந்த எண்ணம் வராது. ஆனால் திறமையான விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்தும் காட்சியில் அப்படி ஒரு Tight-Close up காட்சி தேவையா? இப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டும் என்றில்லையே! மனம் கூச்சப்பட்டதோடு நெருடியது. பெண்களை இப்படியான காட்சியில் காட்டும் போது என்ன தோன்றுமோ அதே போன்று தோன்றியது. 

படம் தொடங்கும் போது கர்ணன் சுட்டுக் கொல்லப்படும் போது எனக்கு இரண்டு ஊகங்கள் தோன்றின. கர்ணன் கண்டிப்பாகச் சுட்டுக் கொல்லப்படவில்லை. அல்லது Flash Back?

அதை துப்பறிவதற்கு ஏற்பாடு செய்யப்படும் Under cover Agent அமர் அறிமுகமாகும் போது ஆஹா என்று கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தது.

கொல்லப்பட்டவர்களின் படங்களைப் பார்த்துக் கொண்டு அமர் கணக்கிடும் போது எனது முதல் ஊகம்தான் படம் என்று உறுதியாகிவிட்டது.  படத்தின் பாதி Suspense போயிந்தி. 

கர்ணனின் மகன் (இதுவும் யூகிக்க முடிகிறது) ஏன் கொல்லப்படுகிறார் என்று அமர், படங்களைப் பார்த்துக் கணக்கிடும் போதே தெரிந்துவிடுவதாலும் அதுவும் கர்ணணைப் பற்றி அமர் துப்பறியும் காட்சிகள் மேம்போக்காக இருந்ததாலும் புஸ். 

கர்ணனைப் பற்றிச் சொல்லப்படுபவையும் அவர் பேரனிடம் காட்டும் அன்பும், தலைமறைவாகக் கறுப்பு முகமூடி அணிந்து கொலைகள் செய்வது கர்ணன் என்பதும் அமர் சொல்லும் முன்னரே புரிந்துவிட்டது. எனவே இருக்கையின் நுனிக்கு வர வேண்டிய நிலை இல்லை. சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன். இங்கும் ஓட்டை. அமர் உளவாளி எப்படி எல்லா அதிகாரிகள் முன்னும் கர்ணன் யார் என்பதைச் சொல்கிறார்?!! அப்போதே அவரது அடையாளம் Exposed! ஒட்டை.

Liftல் அமரும், மலையாளத் தமிழில் பேசும் கள்ள போலீஸ் அதிகாரியும் பேசிக் கொள்ளும் காட்சியையும், விக்ரம் குழுவில் இருக்கும் உளவாளிகளையும் குறிப்பாக விக்ரம் மகனின் வீட்டில் பணிபுரியும் பெண் உளவாளி எதிரிகளை எதிர்கொள்ளும் சண்டைக் காட்சிகளை ரசித்தேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். 

கடைசியில் பீரங்கி வைத்து சுடுவது எல்லாம் மிகைப்படுத்தல். இம்மாதிரியான படங்களுக்கே உரிய இலக்கணத்தை லோகேஷும் மீறவில்லை. ரோலெக்ஸ் வந்து யாரையோ கொல்கிறார், ரத்தக் கறையுடன் கத்துகிறார் அவ்வளவுதான்.  இந்த ரோலெக்ஸ் பற்றிய என் ஊகத்தைக் கடைசியில் சொல்கிறேன்.

கர்ணனின் அடையாளம் விக்ரம், பழைய உளவாளி என்று வெளியில் தெரிந்த பின்னும் அவர், சந்தானத்தின் கூட்டத்தின் நடுவில் இருந்து ரோலெக்ஸின் பேச்சைக் கேட்பதாகக் காட்டுவது ஓட்டை. அவர் அங்கு ஒளிந்திருந்து பார்ப்பதாகக் காட்டியிருந்தால் கூட நம்பலாம்.

சந்தானம் கதாபாத்திரத்தின் வேண்டாத காட்சிகள் பெரிய குடும்பம் என்ற காட்சிகளைத் (நகைச்சுவை???) தவிர்த்து இன்னும் ஆழமிக்க பரபரக்க வைக்கும் துப்பறியும் கதையாக Suspense காட்சிகளாக நகர்த்தியிருக்கலாம் என்று தோன்றியது. எத்தனையோ ஒற்றர்கள் கதைகள் படமாக வந்திருக்கின்றன. எனவே வித்தியாசமாக எடுத்திருக்கலாம்.

2.53 நிமிடங்களுக்குக் கட்டிப் போட்டுப் பெரும் கோடிகளில் பணம் ஈட்டியிருக்கும்  கண்கட்டு வித்தை என்பதே மட்டுமின்றி, இருக்கையின் நுனி வரை தள்ளி அடுத்து என்ன என்று நகம் கடிக்க வைக்காத, ரகசிய உளவாளி என்று சொன்னாலும் அதற்கு நியாயம் சேர்க்கவில்லை என்றே தோன்றியது. ஓடிடி யிலும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். பார்க்காதவர்கள், இப்படி எல்லாம் யோசிக்காமல் கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் பொழுது போக பார்க்கலாம். Vikram did not attract me.

விக்ரம் 3 எடுக்கப் போகிறார் லோகேஷ் என்று செய்தி அடிபடுகிறது. என் ஊகம், முதலில், இந்த ரோலெக்ஸும் வெளிநாட்டில், போதைக் கூட்டத்தின் தலைவன் போன்று அவர்களுடனே கலந்து இருந்து கொண்டு தகவல் அனுப்பும்  ரகசிய உளவாளியோ என்று தோன்றியது. ஆனால் கடைசியில் இல்லை என்று தெரிகிறது. (நான் கைதி படம் பார்க்கவில்லை) 

லோகேஷ் அவர்களுக்கு – 3 வது பாகத்தையேனும், துப்பாகி, குண்டு, வன்முறை என்பதை நம்பாமல் அதிலிருந்து விலகி உங்கள்  திறமை மீது நம்பிக்கை வைத்து ஒரு உளவாளி எப்படித் துப்பறிகிறார் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறார் வெளியில் தெரிந்தால் என்ன ஆகிறார் என்பதை மிகைப்படுத்தாமல் காட்சிக்குக் காட்சி Suspense உடன் கொஞ்சம் வித்தியாசமாக  எடுக்க முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்!

(இதுதான், ஒரு படத்தைப் பற்றிய என் முதல் விமர்சனம். பெரும்பான்மையோருக்குப் பிடித்திருக்கும் படம் என்பதால் எனக்கும் பிடித்திருக்கிறது என்று சொல்ல வேண்டுமோ?!!!! படத்தைப் பற்றிய என் விமர்சனம் கொஞ்சம் எதிர்மறையாக இருப்பதால்!? என் விமர்சனம் தவறாகவும் இருக்கலாம். என் மனதில் பட்டதை எழுதியிருக்கிறேன். )


*****************************

துளசியின் இரண்டாவது மகன் சரவண விநாயக் வரைந்த ஓவியங்கள். மிக அருமையாக வரைகிறார். 

இது அவர் 7 ஆம் வகுப்பு படிக்கும் போது வரைந்த படம்.  அதை எடுத்துக் கொண்டு வந்து லேமினேட் செய்து வைத்திருக்கிறேன். முன்பு பகிர்ந்திருக்கிறேனோ? நினைவில்லை

இப்படம் தற்போது, மருத்துவம் இரண்டாம் வருடம் படிக்கும்  அவர் வரைந்திருக்கும் படம்

நல்ல திறமையுள்ளவர். இவரா என்று நாம் வியக்கும் அளவிற்கு அமைதியானவர். எனக்கு இதைப் பார்த்ததும் பகிர வேண்டும் என்று உடனே பகிர்கிறேன். துளசியிடம் கூடச் சொல்லவில்லை. (அவர் எதுவும் சொல்லமாட்டார் என்ற தைரியம்தான்!!!)

முந்தைய பதிவிற்குக் கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து போட்டும் வராமல், அல்லது காணாமல் போகிறதே என்று வருந்துபவர்களுக்கும் நன்றி! !!!!!

அடுத்து ராமகிரிக்குச் செல்வோம்!! தயாராக இருங்கள்!


-----கீதா


47 கருத்துகள்:

  1. எதிர்மறையாக இருந்தாலும் நன்றாகவே விமர்சித்து உள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஓவியம் மிக அருமை. நல்ல திறமை. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லை.

      துளசியிடம் சொல்கிறேன். விநாயக்கிடமும்

      கீதா

      நீக்கு
    2. வயது ஆகும்போது வரைய பொறுமை இருக்காது. உலகப்புகழ் ஓவியங்களை நெட்டில் பார்த்து அவரை வரையச் சொல்லுங்கள். பிற்காலத்தில், நாம் இவ்வளவு திறமை பெற்றிருந்தோம் என்று அவரும், அவர் குடும்பமும் பார்த்து மகிழும்.

      நீக்கு
    3. நெல்லை உங்கள் கருத்தையும் துளசிக்கு அனுப்பிவிட்டேன். அவர் பிஸி. 4/5 ஆம் தேதியிலிருந்து இணையம் வருவார்.

      கீதா

      நீக்கு
  3. உங்களை மாதிரியானவர்களுக்குத்தான் கமலதாசர், 'பழமொழியை அனுபவிக்கணும், ஆராயக்கூடாது' என்று முன்பு சொன்னார். இப்போ, 'படத்தை அனுபவிக்கணும் ஆராயக்கூடாது' என்று சொல்வார். ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹா

      அவர் அப்படித்தான் சொல்லுவார்...!!!

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  4. //துப்பாகி, குண்டு, வன்முறை என்பதை நம்பாமல் அதிலிருந்து விலகி உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து ஒரு உளவாளி எப்படித் துப்பறிகிறார் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறார்// - உங்க ஆலோசனையைக் கேட்டுப் படமெடுத்தால், பத்துப் பேர் வந்து படம் பார்ப்பார்கள். செலவழித்த பணத்தை உங்களிடம்தான் வந்து கேட்கணும் போலிருக்கு. பணத்தை ரெடியா வச்சுக்குங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   ஆமாம்.   சினிமாவுக்கென்று தணிக்க கலாச்சாரம்..  மிகைப்படுத்தல், வன்முறை..

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா நெல்லைஅவங்களை யாரு இம்புட்டு பணம் போட்டு எடுக்கச்சொல்றாங்க? மக்களா?
      .
      ஸ்ரீராம்....அதே ஆதே....அவங்களுக்குன்னு தனி கலாச்சாரம்...
      இதெல்லாம் தணிக்கையில் வராதோ??!! எதெல்லாமோ தணிக்கைன்றாங்களே!!

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. விக்ரம் பட விமர்சனம் உங்கள் பாணியில் நன்றாகத்தான் இருக்கும். நான் இன்னமும் படத்தைப் பார்க்கவில்லை. அதனால் இதன் கதையும் தெரியவில்லை.

    சகோதரர் துளசிதரன் அவர்களின் இளைய மகன் வரைந்திருக்கும் ஓவியங்கள் மிக அருமையாக உள்ளது அதிலும் இரண்டாவது ஓவியம் மிக அருமையாக உள்ளது. அவருக்கு என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவியுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலாக்கா..

      துளசியிடம் சொல்கிறேன். அவர் கொஞ்சம் பிஸி.இக்க
      மிக்க நன்றி கமலாக்கா ஓவியத்தைப் பாராட்டியமைக்கு

      கீதா

      நீக்கு
  6. முழு படத்தையும் பார்த்தது மாதிரி இருந்தது விமர்சனம் அழகாக விவரித்து சொல்லி சென்றீர்கள்.

    ஓவியம் மிகவும் அழகாக இருக்கிறது எமது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு

      ஓவியத்தைப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி துளசியிடம் சொல்கிறேன்.

      கீதா

      நீக்கு
  7. ஓவியங்கள் மிக அழகு.  அதுவும் அந்த ரெண்டாவது படம் அருமை.  திறமையானவருக்கு பாராட்டுகள்.  இந்தக் காலத்தில் எல்லா இளைய தலைமுறையும் வரைவதில் கில்லாடிகளாக இருக்கிறாக்கள்.  எப்படி திடீரென இப்படி  ஒரு பரவலான ஹிராமை வளர்ந்தது என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். உங்கள் பாராட்டைச் சொல்லிவிடுகிறேன்.

      முன்பும் இருந்திருப்பார்கள் ஸ்ரீராம் ஆனால் அப்போது வெளியில் தெரியாமல் போயிருக்கும் இந்த அளவிற்கு ஊடகங்கள் இல்லையே அப்போது, வாய்ப்புகளும் குறைவு.

      இப்போது நிறைய குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகள் வெளியில் தெரிவதோடு கற்கும் வாய்ப்பும் கிடைக்கிறது, வளர்த்துக் கொள்ளவும் முடிகிறது.

      நான் எல்லாம் சின்ன வயசுல பாடினாலோ, வரைந்தாலோ இதெல்லாம் சோறுபோடாது என்று சொல்லிக் குட்டி குட்டியே அந்தப் பிராயங்கள் மலையேறியாச்சு...இது நம்மைப் போன்ற பெரும்பாலோருக்கு நிகழ்ந்திருக்கும்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. என் பெண்ணுக்கு ஓவியம் வரையும் (கலர் போடும்) பயிற்சிக்கு சின்ன வயதில் அனுப்பினேன், அவளின் வரையும் திறமையால். நிறைய ஓவியங்கள் வரைந்திருக்கிறாள். திறமையானவள். அவள் ரூமை அழகுபடுத்த பத்துப் பனிரெண்டு ஓவியங்களை ஃப்ரேம் போட்டு அழகுபடுத்தியிருக்கிறாள். என் மனதுக்குகுகந்த கிருஷ்ணரை எனக்கு வரைந்து பரிசளித்திருக்கிறாள்.......

      எங்க அப்பா, நான் படம் வரைந்தால், படிக்காமல் வெட்டி வேலை என்று சொல்லிவிடுவார்.

      நீக்கு
    3. ஆமாம் நெல்லை உங்கள் பெண் மிக நன்றாக வரைவார். அவர் விருப்பப்பட்டால் நீங்கள் பகிரலாமே எபியில்....திறமைசாலி உங்களைப் போலவே. நீங்களும் நன்றாக வரைவீர்கள். தன் ரூமை அழகுபடுத்தியிருப்பது சூப்பர். அது நிஜமாகவே நமக்கு ஒரு புத்துணர்வு கொடுக்கும்...நம் மீதான நம்பிக்கையை வளர்த்து தன்னம்பிக்கி தரும், நெல்லை...

      //எங்க அப்பா, நான் படம் வரைந்தால், படிக்காமல் வெட்டி வேலை என்று சொல்லிவிடுவார்//

      அதே தான்....நம் தலைமுறையில் பெரும்பாலோருக்கு இப்படித்தான் இருந்திருக்கும்.

      எனக்கும் பாட்டு, கை வேலை, வரைதல் எல்லாம் அப்போது இருந்து எல்லாம் போயே போச்...குட்டிகுட்டி வளர்க்கப்பட்டு 4 அடியார் மட்டுமில்லை அதுக்கு அப்புறமும் , என் தன்னம்பிக்கை உட்பட போயே போச். சமீபகாலமாகத் தன்னம்பிக்கை ரொம்பவே போய்விட்டது.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    4. தன்னம்பிக்கை போவதற்கு முதல் காரணம், அப்பாக்கள், தங்கள் நம்பிக்கைகளை தாங்கள் நினைப்பதுபோல தன் குழந்தைகள் வாழணும் என்று நினைத்து, ஒவ்வொரு பாதையிலும் குறுக்க கட்டையைப் போடுவதுதான். அதனால பசங்களுக்கு, அப்பா என்ன நினைப்பாரோ, அப்பா என்ன சொல்வாரோ.... என்று நினைத்து நினைத்து சுயமாகச் செய்யும் தைரியமே வருவதில்லை. நானும் அந்த மிஸ்டேக் செய்வதால்... முடிந்தவரை விலகி இருக்கவே முயல்கிறேன்.

      நீக்கு
    5. அதே அதே....ஆனால் சில குடும்பங்களில் அம்மாக்கள்...

      //அப்பா என்ன சொல்வாரோ.... என்று நினைத்து நினைத்து சுயமாகச் செய்யும் தைரியமே வருவதில்லை.// அம்மாக்களும் உண்டு .

      நான் என் சிறு வயது அனுபவங்களில் அதன் பின்னான அனுபவங்களிலும் கற்றது நிறைய. சுய சிந்தனை மிக முக்கியம் என்று.

      கீதா

      நீக்கு
  8. //ஒரு பரவலான ஹிராமை வளர்ந்தது என்று தெரியவில்லை.//

    ​திறமை!

    பதிலளிநீக்கு
  9. எப்போதுமே ஒரு எதிர்பார்ப்புடன் சென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.  அதுவும் இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஆஹா ஓஹோ என்று தமிழகமே  கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.  அந்த எதிர்பார்ப்பு அகட்டாயம் படத்திலுள்ள குறைகளைக் காண வைக்கும்.  படத்தில் பெரிய குறைகள் நிறைய உண்டு.  படத்தில் வரும் அந்தக் குழந்தை மட்டும்தான் யாரையும் கொல்லவில்லை. வன்முறை, போதை எல்லாம் உண்டு.  இத்தனையையும் மீறி பாடம் சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதேதான் ஸ்ரீராம். எதிர்பார்ப்பு.

      எதிர்பார்ப்பு குறைகளைக் காண வைக்கும் என்பதோடு, எனக்கு ஒரு சுபாவம், படம் பார்க்கும் போது கொஞ்சம் இப்படிப் பார்ப்பதுண்டு. அது முதல் நாளன்றே பார்த்தாலும்...விமரிசன ரீதியில்!!!

      ஆஅமாம் குழந்தை தவிர....

      நானும் சில காட்சிகளை ரசித்தேன் தான் ஸ்ரீராம்....

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. கேஜிஎஃப், புஷ்பா, விக்ரம் போன்று வன்முறை, போதை, செக்ஸ் கலாச்சாரப் படங்கள்தான் வெற்றி பெறுது... எடுக்கறாங்க. குறை பார்வையாளர்களிடமா இல்லை படம் எடுப்பவர்களிடமா?

      நீக்கு
    3. புஷ்பா என்று படமா?

      உங்க கேள்வி முட்டையிலிருந்து கோழியா கோழியிலிருந்து முட்டையான்னு.....இரண்டும் ஆனால் சினிமா வணிகம் சார்ந்தது...யாரும் சமுதாயம் உருப்பட வேண்டும் என்று எடுப்பதில்லை...அப்படி எல்லாம் சமுதாயத்தை சீர்திருத்தி விட முடியாது. இந்தப் படத்தின் அந்த வசனம் Drug free society உட்பட...சிரிப்பு வந்துவிட்டது.

      ஆனால் லெக்சர் படங்கள்னும் சொல்லலை எடுப்பதை வித்தியாசமா எடுக்கலாமேன்னுதான்...அப்படி நல்லா எடுத்தா மக்கள் பார்க்காமல் இருப்பாங்களா என்ன? ஒரு பாக்ஸிங்க் படம் வந்தது பெயர் நினைவில்லை...மாதவன் நடித்த படம். அது நல்லா ஹிட் ஆச்சு.

      கீதா

      நீக்கு
    4. 'புஷ்பா' படம் தெரியாதவங்களாக இருக்கிறீர்களே... சமந்தா ஒரு பாடலுக்கு ஐந்து கோடி ரூபாய்களை அந்தப் படத்திற்கு வாங்கினாராமே... பாடலும் செம ஹிட்.. என்ன.. குடும்பத்தோடு பார்க்கமுடியாது

      நீக்கு
    5. ஓ அப்ப்டியா ...யம்மாடியோவ்!

      கீதா

      நீக்கு
  10. உங்கள் விமர்சனம் ஓரளவு நியாமானதாகவே இருக்கிறது. (நான்தான் இன்னும் படமே பார்க்கவில்லையே!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா செல்லப்பா சார், படம் பார்க்காமலேயே !!

      நன்றி சார்

      கீதா

      நீக்கு
  11. பட விமர்சனம் நன்றாக செய்து இருக்கிறீர்கள்.
    நான் பட பார்க்கவில்லை.
    மது, புகை கூடாது என்று முன்பே சொல்லி விடுவார்கள் உடல் நலத்திற்கு கேடு என்று.
    வன்முறை கூடாது என்று எடுக்கும் படம் முழுவதும் வன்முறை , புகை, மது , மாது என்றுதான் காட்டுவார்கள்.
    சகோ துளசிதரன் மகன் வரைந்த ஓவியங்கள் அழகு.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா. உங்கள் கருத்திற்கு.

      சகோ துளசிதரன் மகன் வரைந்த ஓவியங்கள் அழகு//

      அவரை பார்க்கச் சொல்கிறேன் நானும் தெரிவித்து விடுகிறேன் கோமதிக்கா

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  12. "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என்பதற்கு "சரவண விநாயக்"கின் ஓவியங்களே சாட்சி.

    12 வயதில் வரைந்தது சாதாரண ஓவியமாக நம் கண்களுக்கு காட்சியளித்தாலும் 20 வயதில் அந்த சாதாரணம் படிப்படியாக பரிணாமம் பெற்று பிரமிக்கும் வகையில் அசாதாரணமாக காட்சியளிப்பதை பார்த்தீர்களா?!!... !!!...

    அந்த இளம் டாக்டர் வருங்காலத்தில் ஒரு தலைசிறந்த மருத்துவராக வளர்ச்சி பெறுவதொடு ஓவியர் "பிக்காசோ" தொட்ட அதே உயரத்தை இவரும் தொடவேண்டுமென்னும் என்னுடைய விருப்பத்தையும், வாழ்த்துக்களையும் அவரிடமும் சொல்லிவிடுங்கள்!! நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நாஞ்சில் சிவா. கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறேன். துளசியும் கருத்துகள் பார்ப்பார். 4, 5 தேதிகளில் பார்ப்பார். பதிவும் எழுதுவார் என்று நினைக்கிறேன்.

      மிக்க நன்றி மீண்டும்.

      கீதா

      நீக்கு
  13. // பெரும்பான்மையோருக்குப் பிடித்திருக்கும் படம் என்பதால் எனக்கும் பிடித்திருக்கிறது என்று சொல்ல வேண்டுமோ?!!!! //

    // என் மனதில் பட்டதை எழுதியிருக்கிறேன்.. //

    நன்று.. மிகவும் நன்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை அண்ணா. உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  14. பதில்கள்
    1. மிக்க நன்றி துரை அண்ணா. துளசியிடமும் அவர் மகனிடமும் சொல்லிவிடுகிறேன். அவரும் கருத்துகள் பார்ப்பார்.

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  15. துளசியாரின் குழந்தைகள் திறமையானவர்கள் என்று தெரியும். ஓவியத்திறமையை இன்றுதான் பார்க்கிறேன். மருத்துவம் படித்தால் என்ன, மனதை மயக்கும் ஓவியங்களும் படைக்கட்டுமே! வரவேற்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது இரண்டாவது பையன். ஆம் மூவருமே திறமையானவர்கள்தாம்.

      மிக்க நன்றி சார். அவரிடம் சொல்கிறேன். கருத்தையும் பார்க்கச் சொல்கிறேன்,

      கீதா

      நீக்கு
  16. //..போதைப் பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதாகவும் சொல்லி, காட்சிக்குக் காட்சி தண்ணியும், புகையும்! வன்முறையும்! //

    படம் ஏன் அபார ‘வெற்றி’ பெற்றது என்பது புரிந்துவிட்டது. இதைத் தடுக்கவேண்டும் என்று ஆரம்பத்தில் எழுதிப்போட்டுவிட்டு, உள்ளே எப்படி எப்படி செய்யலாம், வாழ்வை ‘அனுபவிக்கலாம்’ எனக் காட்டும் இயக்குனர்கள்! கெடுத்து நாசமாக்கிவிட்டார்கள் நாட்டை. என்ன சொல்லி என்ன பயன்?

    இதைப்பற்றி இவ்வளவு பொறுமையாக, நீளமாக ‘விமர்சனம்’ வேறு எழுதியிருக்கிறீர்கள். நீங்களும் சாதாரண ஆளல்ல!

    துளசி சாரின் பிள்ளைகளின் கைவண்ணங்கள் கண்ணுக்குக் குளுமை. முதல்படத்தினால் கவரப்பட்டேன். இதைத்தானே நீங்கள் லேமினேட் செய்துவைத்திருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் ஏன் அபார ‘வெற்றி’ பெற்றது என்பது புரிந்துவிட்டது. //

      ஹாஹாஹா....

      //இதைப்பற்றி இவ்வளவு பொறுமையாக, நீளமாக ‘விமர்சனம்’ வேறு எழுதியிருக்கிறீர்கள். நீங்களும் சாதாரண ஆளல்ல!//

      ஹாஹாஹா.....

      // ''நீங்களும் சாதாரண ஆளல்ல''//

      ஆ!! ஏகாந்தன் அண்ணா!!! கலாய்ச்சிருக்கீங்க!! ஹாஹாஹா

      //துளசி சாரின் பிள்ளைகளின் கைவண்ணங்கள் கண்ணுக்குக் குளுமை. முதல்படத்தினால் கவரப்பட்டேன். இதைத்தானே நீங்கள் லேமினேட் செய்துவைத்திருக்கிறீர்கள்?//

      ஆமாம் அண்ணா, முதல் படத்தைத்தான்...உங்கள் கருத்தை துளசியைப் பார்க்கச் சொல்கிறேன்

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  17. விக்ரம் சினிமாவிற்கான விரிவான விமர்சனம் - நன்று. பொதுவாக படங்கள் பார்ப்பதில்லை. இங்கே வாய்ப்பும் இல்லை. சிறப்பாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    ஓவியம் - இரண்டு ஓவியங்களும் அழகு. இரண்டாவது சிறப்பு. வளரும் ஓவியருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி. நானும் திரைப்படங்கள் பார்ப்பது மிக அரிது. நல்ல படங்கள் என்றால் எப்போதேனும் பார்ப்பதுண்டு. இது ஏதோ சஸ்பென்ச், ஸ்பை கதை - எனக்கு இப்படியானவை பிடிக்க்ம் - என்பதால் சென்றேன்.

      துளசியிடம் சொல்கிறேன்

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு