தலக்காடு- 1, 2, 3, 4, 5 , 6 , 7 , 8
சென்ற பதிவில் வைத்தியேஸ்வரா கோயிலினுள் சென்றதைத் தொடங்கியிருந்தேன் இல்லையா. அப்போதே 4 மணி ஆகியிருந்தது. ஒரு நாள் பயணம் என்றால் நம்மவருக்கு எங்கு சென்றாலும் அதிகபட்சம் 7 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். அப்போதே மணி 4. கோவிலை பார்த்துவிட்டு வண்டி நிறுத்திய இடத்திற்குச் சென்று காரில் ஏறி பயணத்தைத் தொடங்கினால் பெங்களூருக்குள் நுழைவதற்கே 2 1/2 மணி நேரம் ஆகிவிடும். அதன் பின் பெங்களூர் போக்குவரத்தை சமாளித்து வீட்டிற்குச் செல்ல மணி 8.30 அல்லது சற்றுக் கூடுதலும் ஆகிவிடும். அப்பாவை வேறு அழைத்துக் கொண்டு போயிருந்தோம்.
கோயிலுக்குள் நுழையும் போதே நெல்லை என்னிடம், "லேட்டாகிறதே உங்க ஹஸ்பண்டுக்குக் கஷ்டமாகிடுமோ" என்றார்.
"இவ்வளவு தூரம் வந்தாச்சு. பார்த்துக் கொள்ளலாம். கோவிலுக்குள் போய் படங்களேனும் எடுத்துடலாம். மீண்டும் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியலை." அப்படி நெல்லையிடம் சொல்லிக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தாலும், உள்ளுக்குள் ஒரு சின்ன கலக்கம் இருக்கத்தான் செய்தது.
அடுத்தாற் போல் கோவிலைச் சுற்றி இருக்கும் சிற்பங்கள் மற்றும் வேலைப்பாடுகளைப் பார்த்துக் கொண்டே சுற்றி வருவோம் என்று சென்ற பதிவில் முடித்திருந்தேன் இல்லையா. இறைவன் இருக்கும் கர்பகிரஹம், அர்த்த மண்டபத்தை இணைக்கும் பெரிய வெளி மண்டபத்திற்குள் நுழையும் முன்னர் துவாரபாலகர் மற்றும் தூண்கள் படங்களைப் பகிர்ந்திருந்தேன்.
உள்ளே நுழைந்ததும் வைத்தியேஸ்வரர் பெரிய லிங்க வடிவில் தரிசனம் தருகிறார். முருகன், பிள்ளையார் எல்லோரும் வீற்றிருக்கிறார்கள். ஆனால் படங்கள் எடுக்க அனுமதி இல்லை.
மண்டபத்திலிருந்து வெளியில் வந்ததும் சுற்றி வருவதற்கு வலப்பக்கம் திரும்பும் இடத்தில் காணொளி எடுக்கத் தொடங்கினேன். கொஞ்சம் மட்டுமே காணொளியில் இருக்கும். முழு காணொளி எடுக்க முடியவில்லை.
நம்ம நெல்லை ஒற்றைக் கையில் மொபைலை வைத்துக் கொண்டு குறுக்குவாட்டிலும்
நெடுக்குவாட்டிலும் பிடித்துக் கொண்டு மிக மிக வேகமாகப் படம் எடுத்துக் கொண்டே
சென்றார். அவர் திறமை எனக்கு வியப்பு!
நான் படம் எடுக்கவில்லை என்றால் நடந்திருக்கலாம் அந்த வேகத்திற்கு. ஆனால்
படம் எடுக்காம முடியாதே! அதுவும் இவ்வளவு அழகிய கோயிலை, உங்களுக்கும் காட்ட
வேண்டுமல்லவா! அப்புறம் சான்ஸ் கிடைக்குமா என்று தெரியாது. படங்களேனும் பார்த்துக்
கொள்ளலாமே! ஆனால், நான் மெதுவாகச் சென்றால் அப்புறம் என்னைத் தேடுவார்கள். வேகமாகச் சென்றதால் காணொளி எடுக்காமல் படங்கள் மட்டுமே அதுவும் எனக்கு இரண்டு
கைகளிலும் பிடித்துக் கொண்டுதான் எடுக்க முடியும். இருந்த நேரத்தில் முடிந்தவற்றை
எடுத்துக் கொண்டு வந்தாச்சு.
இனி மேலே உள்ள காணொளியைத் தொடர்ந்து இருக்கும் சிற்பங்களின் படங்கள்.
இந்தச் சிற்பம் - அபஸ்மரா (முயலகன்) என்பது மனிதனின் அறியாமை, அகந்தையை குறிப்பதாக அந்த அசுரன் மீது, நடராஜப் பெருமான் தனது வலது காலை வைத்து மிதித்து, அதாவது மனிதர்கள் நம் அறியாமையை அடக்கி, ஞானத்தை நிலைநிறுத்துவதாக அவரது cosmic dance (சிவ நர்த்தனம்) தூணின் மேலே நந்தி, பிள்ளையார்
தூணின் மேலே புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் அருகில் உள்ளவை சிதைந்திருப்பதால் சரியாகத் தெரியவில்லை. அவரின் கீழ் நரசிம்மர். கீழே விஷ்ணு, பூதேவி, ஸ்ரீதேவி?
அடுத்த பதிவில் கோவிலின் பின்பக்கம் பார்த்தவற்றைப் படங்களுடன் பார்ப்போம்.
ஒரு சிறிய தகவல் - தலக்காடு பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்கள் என்று பார்த்துவருகிறோம் இல்லையா? அவை பஞ்சபூதங்களைக் குறிக்கின்றனவாம். பாதாளீஸ்வரா (நிலம்), மருலீஸ்வரா (நீர்), அர்க்கேஸ்வரா (நெருப்பு) (இக்கோவில் நாங்கள் செல்ல முடியவில்லை), வைத்யேஸ்வரா (வானம்/ஆகாசம்) இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் கோயில், மல்லிகார்ஜ்ஜுனா (வாயு) (இக்கோயிலும் நாங்கள் செல்ல முடியவில்லை).
அடுத்த பதிவில் தொடர்வோம்...
------கீதா





















இனிய காலை வணக்கம்....
பதிலளிநீக்குசிற்பங்களின் படங்கள் - பிரமிப்பு......
ஒவ்வொரு இடமாக நின்று நிதானித்து பார்த்து வர அதிகம் நேரம் தேவை தான். பல சமயங்களில் இப்படி நேரம் இல்லாமல் போய் விடுகிறது.
தொடர்கிறேன்.
நன்றி வெங்கட்ஜி!
நீக்குஆமாம் சில சமயங்களில் நேரம் இல்லாமல் போய்விடுகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பார்க்க வேண்டும் எனும் போது.
கீதா
உங்களவர் போலதான் நானும். எங்காவது வெளியில் சென்றால் எனக்கும் ஒன்பது மணிக்குள்ளாவது வீட்டுக்கு வந்துவிட வேண்டும்.
பதிலளிநீக்குஅது நல்லது ஸ்ரீராம். நம் வீட்டிலும் மூவருமே அப்படித்தான். ஆனால் போகும் இடங்களில் ரசனையானவற்றை கொஞ்சம் ஆழ்ந்து ரசிப்பேன்...கொஞ்சம் படங்கள் எடுக்க வேண்டும் என்றால் நேரம் எடுத்துக் கொள்வேன். நம்மவர் படங்கள் எடுக்க மாட்டார். எல்லாம் டக் டக்குனு பார்த்துட்டு மின்னல் வேகத்தில் சென்று காத்திருக்க வேண்டிய இடத்தில் காத்திருப்பார். ஆனால் நானும் மகனும் கொஞ்சம் ஆழ்ந்து ரசிப்பவர்கள். எனவே கிளம்பும் போதே சொல்லிக் கொண்டு கிளம்புவோம்...அவசரப்படுத்தக் கூடாது ஆனால் நேரத்திற்குள் வந்துவிடலாம்னு.
நீக்குநான் அப்படி நேரம் கணக்கிட்டுத்தன கிளம்புவோம் அதாவது எனக்கு எடுக்கும் நேரத்தையும் கணக்கிட்டு. அன்று கொஞ்சம் எக்ஸ்ட்ரா இடங்கள் சேர்ந்ததால் தாமதமாகிவிட்டது.
நன்றி ஸ்ரீராம்.
கீதா
அவர் சொல்வது சரிதான். நேரா நேரத்துக்குத் தூங்கினால்தான் மறுநாள் காலையில் சீக்கிரமாக ஆபீஸ் போகலாம். வீட்டம்மாவும் சீக்கிரம் எழுந்து டிபன் கட்டிக்கொடுக்க முடியும். இல்லைனா மறுநாள் வேலைகள் கெட்டுவிடும் அல்லவா?
நீக்குஎல்லோருக்குமே தூக்கமும் ஓய்வும் மிக முக்கியம். அவருக்குச் சற்று கூடுதல் தேவை நெல்லை. அதனால்தான் கூடவே நீங்க சொல்லிருக்காப்ல மறுநாள் ஆஃபீஸ், நான் எழுந்துவிடுவேன்...சமைச்சிருவேன் ஆனால் போதிய தூக்கம் இல்லைனா நாளின் மற்ற வேலைகள் கெட்டுவிடும் தான்....
நீக்குகீதா
// உள்ளுக்குள் ஒரு சின்ன கலக்கம் இருக்கத்தான் செய்தது. //
பதிலளிநீக்குஎன்ன ஒரு பயம்! நானும் அப்படி கோபப்படுவேனோ என்று நினைத்துப் பார்க்கிறேன். பல வருஷங்களுக்கு முன், நான் வீட்டில் இருந்து பாஸ் வெளியில் அல்லது வெளியூர் சென்று குறித்த நாளில், ஓரளவுக்காவது குறித்த நேரத்துக்குள் வராத நேரங்களில் சில நேரம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறேன்! இப்போதெல்லாம் அப்படி கிடையாது!
ஹாஹாஹா.....பயம் கொஞ்சம் உண்டு. ஆனால் அன்று சமாளித்துவிடலாம் என்ற ஒரு சின்ன நப்பாசையும் ....இருந்தாலும் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தது வேறு விஷயம். அதனால் கிளம்பும் போதே எனக்கான நேரத்தைச் சொல்லிவிடுகிறேன். கோபித்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லி...ஹிஹிஹி...
நீக்கு// இப்போதெல்லாம் அப்படி கிடையாது!//
குட் பாய்!!!
கீதா
சமீப காலங்களில் அப்படி எனக்கும் நடக்குது. ஆனால் நான் கோபப்படமாட்டேன் (காரணம் இல்லாமல் அவளுக்கு நேரமாகாது). ஆனால் கடுகடுன்னு பேசமாட்டேன். காரணம் எனக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் (மாலை 6 மணிக்குள்) சாப்பிடணும். அவள் ரொம்ப நேரம் கழித்து வந்தால் நான் சாப்பாட்டை தியாகம் செய்துவிடுவேன். வயிற்றில் பசி இருப்பதால் முகம் கடுகடு.
நீக்குசாப்பாடு மாலை சீக்கிரம் சாப்பிடுவோம் இங்கும். இல்லைனா நாங்கள் அதை ஸ்கிப் பண்ணிவிடுகிறோம். அப்பாக்கு மட்டும் கொடுத்துவிட்டு. இங்கு எங்களுக்க்குப் பசி இருக்காது எனவே..
நீக்குபசிச்சா ஏதாச்சும் சாப்பிடணும் நெல்லை. அட்லீஸ்ட் பழம். அல்லது மோர்.
கீதா
ஒற்றைக்கையில் மொபைலில் படம் எடுப்பது எனக்கும் வராத கலை. செல்பியே சரியாக எடுக்க மாட்டேன்.
பதிலளிநீக்குஹைஃபைவ்! எனக்கும் செல்ஃபி எல்லாம் எடுக்கவே வராது எடுப்பதும் இல்லை!!!
நீக்குநன்றி ஸ்ரீராம்.....என் கட்சிக்கு ஒருவர்!!
கீதா
படங்கள் யாவும் சிறப்பு. அருமையாக எடுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநன்றி நன்றி ஸ்ரீராம். கேமரா பேட்டரி இருந்திருந்தால் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது.
நீக்குஇப்ப எக்ஸட்ரா ஒரு பேட்டரி வாங்கி வைத்துக் கொண்டுவிட்டேன். சமீபத்தில் நந்தி ஹில்ஸ் போனப்ப எடுக்க முடிந்தது பெரும்பாலும் கேமரா தான். பனி மூட்டப் படங்கள், மொபைலிலும் எடுத்தேன் தான்.
அது பதிவு வரும்.
கீதா
சிற்பங்கள் உள்ள இடங்களை முடிந்தவரை நன்றாக வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நடைச் சுற்றில் கோவிலின் மேற்கூரை பழமையைக் காட்டுகிறது.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் நல்லா வைச்சிருக்காங்க. சிதைந்திருப்பது எதனால் என்பதால் இவை அனைத்தும் மணலுக்கு அடியிலிருந்து அகழ்ந்து எடுத்தவை என்பதால். பல வருடங்களுக்கு முன்னால், கோயிலின் கோபுரம் கொஞ்சம் மட்டும் மணலுக்கு வெளியில் தெரியுமாம்...இப்படி தி ஜா தன் தலக்காடு பயணக்கட்டுரையில் சொல்லியிருக்கிறார். அதை ஜெ மோ தன் தளத்தில் சொல்லியிருந்தார்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
வைத்தியேஸ்வரா கோயில் சிலைகள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகுறிபிட்ட நேரத்தில் கிளம்பி குறிப்பிட்ட நேரத்தில் வீடு வர வேண்டும் என்பதில் என் கணவரும் கவனமாக இருப்பார்கள். காலை 7மணிக்குள் கிளம்பி விட வேண்டும், இருட்டும் முன் வீடு வந்து விட வேண்டும் என்பார்கள்.
மிக்க நன்றி கோமதிக்கா.
நீக்குஅது சௌகரியம். பல விதத்திலும். பெரும்பாலும் நம் தலைமுறைகளில் இப்படி இருப்பாங்க என்று நினைக்கிறேன் கோமதிக்கா.
கீதா
சிறிய காணொளி நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குசிலைகள் தூண்களில் சிற்பங்கள் எல்லாம் கலை நுணுக்கத்தோடு இருக்கிறது.
வேலைப்பாடு அருமை. மண்டபத்து மேலே பெரிய நந்தி இருக்கே!
கீழே சிவனும் , நந்தியும் இருக்கிறது.
நன்றி கோமதிக்கா
நீக்குமுழுவதும் எடுக்க ஆசை ஆனால் முடியவில்லை.
வேலைப்பாடுகள் பிரமாதமாக இருக்கும். ஆமாம்....அது மண்டபம் இல்லைக்கா முன்மண்டபத்தில் இருந்து இறங்கியதும் திருச்சுற்றில் இடப்புறம் சிவலிங்கமும் மேலே தளத்தில் பெரிய நந்தியும் என்று...
கீதா
நீங்கள் வந்த கூடார பாதையும் மரங்களுக்கு இடையே தன் கதிர்களை பரப்பி வெளிச்ச கீற்றை பரப்பும் சூரியனும் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிக்கா. இக்கோயில்கள் கூடாரப்பாதையின் இப்புறம் கீழே 40 அடி பள்ளத்தில். அப்புறம் பாதாளீஸ்வரரும் மரலீஸ்வரரும்..
நீக்குகீதா
சிவலிங்கங்கள் நிறைய ஒவ்வொரு இடத்திலும் காணப்படுகிறதே!
பதிலளிநீக்குகர்பகிரஹத்தின் மேலுள்ள விமானம் மஞ்சள் கலரிலழகாய் இருக்கிறது. தூனில் உள்ள சிற்பங்கள் எல்லாம் அழகு.
திருச்சுற்றில் நிறைய பார்க்கலாம். ஆங்காங்கே
நீக்குகர்பகிரஹ விமானம் சமீபத்தில் புதிப்பித்திருப்பாங்க போல.
ரொம்ப அழகான கலைவடிவங்கள்.
நன்றி கோமதிக்கா
கீதா
எல்லாப் படங்களும் ரொம்ப நல்லா வந்திருக்கு. அதிலும் ஒரு படம் ரொம்பவே சூப்பரா வந்திருக்கு. பிறகுதான் பார்த்தேன், அதனை இணையத்திலிருந்து லவட்டியிருக்கீங்க. அவங்கள்லாம் ப்ரொஃபஷனல் கேமரா வைத்து, லைட்டிங்க்லாம் பார்த்து எடுப்பாங்க. நமக்கு அவ்வளவு நேரமோ இல்லை பொறுமையோ இல்லையல்லவா?
பதிலளிநீக்குநன்றி நெல்லை,
நீக்குஅப்படம் நான் அந்த ஆங்கிளில் எடுக்க நினைத்து முடியாமல் போனது....முன்னும் பின்னும் மக்கள் வந்து கொண்டிருந்தாங்களே....நமக்கும் நேரம் இல்லையே அதனால இணையத்திலிருந்து லவட்டினதுதான்
இருக்கலாம்...நமக்கும் எடுக்க முடியும் நெல்லை நீங்க சொல்லியிருப்பது போல் நேரமில்லை. பொறுமை இருந்தாலும்...நம்முடன் பயணிப்பவர்களுக்கும் அந்த ஆர்வம் இருக்க வேண்டுமல்லவா..
கீதா
அந்தக் கோயிலில் சிற்பங்களே மிக மிக அருமையாக இருந்தன.
பதிலளிநீக்குதலைக்காடு பற்றி நேற்று ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பல விஷயங்களை அறிந்தேன். பிற்கு எழுதுகிறேன்.
ஆமாம்ல அழகான சிற்பங்கள்.
நீக்குஎழுதுங்க நெல்லை.
நன்றி நெல்லை
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. தல்க்காடு வைத்யேஸ்வரா கோயில் நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் உங்கள் பாணியில் அழகாக எடுத்திருக்கிறீர்கள் . சில கோவில்களில் மூலஸ்தானத்தை படம் எடுக்க அனுமதிப்பதில்லையே.!
சுற்றுப்புற தூண்கள் அழகாக இருக்கிறது. தூண்களில் காளிங்க நர்த்தனம், பிள்ளையார், நந்தி, குழலூதும் கண்ணன், பூதேவி, சீதேவியுடன் பெருமாள், வள்ளியுடன் சுப்பிரமணியர், ஆஞ்சனேயர் என பல கடவுளார்களை தரிசித்துக் கொண்டேன். இவ்வித கோவில்களில் சிற்பக்கலைகளை காணும் போது அவ்விடம் விட்டு நகரவே நமக்கு மனம் வருவதில்லை.
ஹொய்சாளர்களின் கோவில் கட்டுமான பாணி இப்போதுதான் எனக்கு புரிபட்டு வருகிறது. நாங்களும் இத்தகைய சில கோவில்களை சென்று தரிசித்து வந்தோம். இன்னமும் தலக்காடு செல்ல வேண்டுமென மகன்கள் கூறி வருகிறார்கள். கோவில்களுக்கு என்றால், செல்ல (என்னால் முடியாவிடினும்) நானும் ஆர்வம் காட்டுவதால், நாங்களும் அவர்களுடன் சென்று வருகிறோம்.
மரங்களிடையே சூரிய ஒளி வீசும் படமும், சிவலிங்கம் இருக்கும் படமும் அருமை. இறைவனின் கர்ப்பக்கிரக கோபுரத்தின் வாயிலாக இற்வனை தரிசனம் செய்து கொண்டேன் இதன் தொடர்ச்சியாக அடுத்தப் பதிவையும், எதிர்பார்க்கிறேன். இதன் முந்தைய பதிவை நான் இன்னமும் காணவில்லை. பிறகு கண்டு ரசித்து விட்டு வருகிறேன்.
உங்களின் சில பதிவுகளுக்கு உடனுக்குடன் வர இயலாமல் போய் விட்டது. இப்போது இங்கு குளிர் கொஞ்சம் குறைந்திருப்பதால், பழைய மாதிரி உடல் நிலை சரியாகி விடுமென நம்புகிறேன். வரும் பதிவுகளுக்காவது உடனுக்குடன் வர இறைவன் அருள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலாக்கா.
நீக்குஇக்கோவிலில் சிற்பங்கள் எல்லாமே ரொம்ப அழகாக இருக்கும். பல கலைகள் கலந்து கட்டிய ஒன்று.
கோவில்களுக்கு என்றால், செல்ல (என்னால் முடியாவிடினும்) நானும் ஆர்வம் காட்டுவதால்,//
அக்கா மற்ற இடங்களுக்கும் போய் வாங்க. அதாவது இயற்கையான இடங்களுக்கு, இல்லை அது மாலாக இருந்தாலும் சரி வாய்ப்பு கிடைத்தால் போய்வாங்க. ஏனென்றால் அது ஒரு நல்ல மாற்றம் தினசரி கடமைகளில் இருந்து.
//இதன் தொடர்ச்சியாக அடுத்தப் பதிவையும், எதிர்பார்க்கிறேன்//
அதில் ரொம்ப எழுத்துகள் இருக்காது படங்கள் தான் ...
மெதுவாகப் பார்த்துவிட்டு வாங்க கமலாக்கா.
நானுமே இந்த வாரம் அடுத்த வாரத் தொடக்கத்தில் வைத்தியேஸ்வரா பதிவை முடிக்க வேண்டும். அதன் பின் கொஞ்சம் ஒரு சின்ன இடைவெளி வரலாம்.
குளிர் உங்களைப் பாதிக்கிறதோ?
எல்லாம் சரியாகும் கமலாக்கா...
நன்றி கமலாக்கா பதிவையும் படங்களையும் ரசித்ததற்கு
கீதா