//நீங்களும் வாருங்கள். கொஞ்சம் காத்திருங்கள். கடம்போடுவாழ்வு கிராமத்தைக் காட்டுகிறேன். என் உறவினர்களையும் அறிமுகப்படுத்துகிறேன். // என்று சொல்லியிருந்தேன். இதோ ஊருக்குள் நுழையப் போகிறோம்.
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
வெள்ளி, 25 பிப்ரவரி, 2022
நாகர்கோவில் - கடம்போடுவாழ்வு - 2
ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022
நாகர்கோவில் - கடம்போடுவாழ்வு - 1
சென்ற பதிவில் - திருநெல்வேலி - நாகர்கோவில் பதிவு - 5 ல் நாகர்கோவில் சென்றதும் அங்கிருந்து கடம்போடுவாழ்வு செல்வதற்காகப் பேருந்து ஏற வடசேரி பேருந்து நிலையம் செல்வது பற்றிச் சொல்லி முடித்திருந்தேன். மீண்டும் யு டர்ன் வந்த வழியே ஆனால் சாலை வழிப்பயணம் ஏர்வாடி வரை. எனவே அதே வெள்ளமடம், தோவாளை, ஆரல்வாய்மொழி, முப்பந்தல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி.
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022
நன்றிக் கடன் - சியாமளா மாமி எழுதிய கதை
இதற்கு முன் ஒரு பதிவில் சியாமளா மாமி எழுதிய சாம்பு ஸ்டைல் கதை ஒன்று வெளியிட்டிருந்த நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். இதோ அவர் எழுதிய மற்றொரு கதை
-----கீதா
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
காலத்தி
னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
புதன், 2 பிப்ரவரி, 2022
அமேசான் கிண்டிலில் என் நாவல் "காலம் செய்த கோலமடி"
மூன்று வருடங்களுக்கு முன்பு ஹார்ட் காப்பி ஆக வெளியிட்ட என், “காலம் செய்த கோலமடி” எனும் நாவல் அமேசான் கிண்டிலில் கடந்த வாரம் வெளியிட முடிந்தது. இதற்கு எல்லா உதவியும் செய்து வெளியிட்டுத் தந்த நம் அன்பு நண்பர், பயணக் காதலர் வெங்கட்ஜிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது.
வெள்ளி, 28 ஜனவரி, 2022
திருநெல்வேலி - நாகர்கோவில் - (பொய்கை அணை) - 5
பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 10
திருநெல்வேலி - நாகர்கோவில் - 1
திருநெல்வேலி - நாகர்கோவில் - 2
திருநெல்வேலி - நாகர்கோவில் - 3
திருநெல்வேலி - நாகர்கோவில் - 4
//இப்போது ஆரல்வாய்மொழி மலைகளைப் பார்த்துக் கொண்டிருங்கள். அதற்கு அப்புறம் நாகர்கோவில் ஸ்டேஷன் வரை உள்ள பகுதிகள் அடுத்த பதிவில். // என்று முடித்திருந்தேன். இங்கிருந்து அடுத்து நாகர்கோவில் ஸ்டேஷன்தான். எனவே ஒரு தகவலுடன் இப்பகுதி.
சனி, 22 ஜனவரி, 2022
திருநெல்வேலி - நாகர்கோவில் - (ஆரல்வாய்மொழிப் பகுதி) - 4
பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 9
திருநெல்வேலி - நாகர்கோவில் - 1
திருநெல்வேலி - நாகர்கோவில் - 2
திருநெல்வேலி - நாகர்கோவில் - 3
காவல்கிணறை அடுத்து மிக அருகில் உள்ள முப்பந்தல் எனும் சிறு கிராமத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்ட எல்லை தொடங்குகிறது. இக்கிராமம் ஆரல்வாய்மொழி பகுதியில்தான் இருக்கிறது.
திங்கள், 17 ஜனவரி, 2022
திருநெல்வேலி-நாகர்கோவில் - 3
திருநெல்வேலி - நாகர்கோவில் - 1
சென்ற பகுதியின் தொடர்ச்சியாக.......களக்காடு தாண்டி, ஏர்வாடி, வள்ளியூர் பகுதியிலிருந்து தொடர்ச்சியாக மஹேந்திரகிரி மலைத்தொடர். பணகுடியை அடுத்து காவல்கிணறு பகுதி வரை திருநெல்வேலி மாவட்டம். காவல்கிணறு பகுதியில் தான் மகேந்திரகிரி மலையின் சரிவின் அடிவாரத்தில் மகேந்திரகிரி திரவ எரிபொருள் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.
புதன், 12 ஜனவரி, 2022
திருநெல்வேலி- நாகர்கோவில் – 2
பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 7
சென்ற பதிவைப் பொறுமையாக வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி! இப்போது இன்றைய பதிவிற்கு.