ஓலைக் கூரைகளுக்கும்
கொம்பு முளைத்தது
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
வெள்ளி, 28 ஜூலை, 2017
திங்கள், 17 ஜூலை, 2017
சந்தித்ததும், சிந்தித்ததும் என்பவரைச் சந்தித்தேன்
உலகம் சுற்றும் வாலிபர் என்று
பெயர் பெற்றிருக்கும் நம் நாட்டு ராஜா 64 வது வெளிநாட்டுப் பயணமாக இஸ்ரேலுக்குச் சென்றாலும்
அவரிடமிருந்து பயணக்கட்டுரைகளை எதிர்பார்க்க முடியுமா!!!!! தலைநகரிலிருந்து உள்நாடு
சுற்றும் வாலிபர், ஒவ்வொரு சிறு பயணத்தையும் மிக அழகான படங்களுடனும், விளக்கமான குறிப்புகளுடன்
எழுத்தின் மூலம் நம்மை எல்லாம் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் நம் தில்லி ராஜா, நான்
சென்ற மாதம் குடும்ப நிகழ்வு ஒன்றிற்காக மிகக் குறுகிய பயணமாக தில்லிக்குச் சென்றிருந்த
போது, தனது வேலைப் பளுவின் இடையிலும் என்னை சந்தித்தார்.
இச்சந்திப்பைப் பற்றி வந்ததும்
எழுத வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், பல காரணங்களால் மனதில் ஒரு சுணக்கம்.
அதனால் தாமதமாகிவிட்டதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெங்கட்ஜி சிறு
இடைவெளிக்குப் பிறகு வலையுலகம் வந்ததும் பதிவில் சந்திப்பு பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
மிக்க நன்றி வெங்கட்ஜி!
நான் ரயிலில் முன்பதிவு செய்திருந்தாலும்,
எனது பயணத்தை இறுதிவரை உறுதிப்படுத்த இயலாத நிலையில் இருந்ததால் வெங்கட்ஜியை நான் தொடர்பு
கொள்ளவில்லை. இறுதியில், பயணத் தேதி நெருங்கிட நான் பயணம் செய்யப் போவது ஓரளவு உறுதியானதும்
வெங்கட்ஜியைத் தொடர்பு கொண்டேன். நான் சென்று அவரைச் சந்திக்க இயலாத நிலையைச் சொல்லியிருந்தேன்.
அவரோ என்னை ரயில் நிலையத்தில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லிட எனக்கு மனதிற்குச்
சற்று சங்கடமாகத்தான் இருந்தது. அவருக்கோ பணிச்சுமை. வலைப்பக்கம் கூட வர இயலாத நிலை.
நான் பயணம் செய்த தமிழ்நாடு விரைவு வண்டி இரவு 10.30 ற்கு. அந்த நேரத்தில் அவர் என்னைச்
சந்திப்பதற்காக என்று ரயில் நிலையத்திற்கு வர வேண்டுமே, அது அவருக்குச் சிரமமாக இருக்குமே
என்றும் தோன்றியது. ஆனால், வெங்கட்ஜி மிகவும் ஆர்வமுடன், சந்தோஷத்துடன் என்னைச் சந்திப்பதாகச்
சொன்னார். சந்தித்தார்.
விழா குர்காவ்னில் இருந்த என்
தங்கையின் வீட்டில். நான் அங்கிருந்த 4 நாட்களில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள், உறவினர்கள்
என்று கடந்துவிட 4 வது நாள், புறப்படும் நாள், இரவு அங்கிருந்து மெட்ரோ ரயிலில் தில்லி
ரயில் நிலையத்திற்கு வந்தோம். ஒரு மணி நேரப் பயணம். மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து
வெளியில் வருவதற்கே சிறிது நடக்க வேண்டும். வெளியில் வந்து நடைமேடைக்குச் செல்லவும்
சற்று நடக்க வேண்டும். இரு ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்துதான்
நுழைய முடியும். என் அப்பா முன்னதாகவே அங்கு சென்றிருந்ததால், அங்கிருந்து வரும் போது
என்னுடன் வந்தார். 82 வயது. மின்படிகள் வழி ஏறி, முந்திக் கொண்டும், தள்ளிக் கொண்டும்
போகும் கூட்டத்தினிடையே அவரை மெதுவாகக் கவனமாக நடக்கச் சொல்லி நடைமேடையை அடைந்தோம்.
வெங்கட்ஜி 6 அடியார் என்பதால்
கூட்டத்தில் அவரை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆனால், நாலடியாராகிய என்னைக் கூட்டதில்,
நான் கையைத் தூக்கிக் காட்டினாலும் காண்பது கடினமாயிற்றே, தேடுவதில் அவர் நேரம் தொலைந்துவிடக்
கூடாதே என்று நான் நடைமேடைக்கு இறங்கும் படிகளின் அருகில் ஒதுங்கி நின்று கொண்டு படிகளைப்
பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை அலைபேசியில் அழைத்து எங்கிருக்கிறேன் என்று கேட்டுக்
கொண்டே வெங்கட்ஜி இறங்கி வரவும், நான் அவரைக் கண்டதும் கையசைக்க, நல்லகாலம் துள்ளித்
துள்ளிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் (ஹிஹிஹி), வெங்கட்ஜியும், என்னைக் கண்டு விட்டார்.
2. தனது “ஒரு சிறு இசை” எனும்
சிறுகதைத் தொகுப்பிற்காக 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கல்யாண்ஜியின்
(வண்ணதாசன்) கவிதைகள்.
எதிர்பாரா அன்பளிப்பு மகிழ்ச்சியாக
இருந்தது. ரயிலில் நல்ல துணை என்று சொல்லி நன்றி சொன்னேன். கூடவே, அடடா நாமும் அவருக்குப்
புத்தகம் கொடுத்திருக்கலாமே தோன்றாமல் போய்விட்டதே என்ற வெட்கமும் எழுந்தது. தில்லி
ரயில் நிலையத்தில் ஒழுங்கற்ற கூட்டம் பற்றிச் சொல்லி, ஒரு முறை தனது வேலைப்பளுவின்
காரணமாக ரயிலைப் பிடிக்கத் தாமதமாகிவிட, தன் பையை தலைமேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு
கூட்டத்தினிடையில் ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டதையும். தலைநகர் ரயில் நிலையம் சுத்தமாக
இல்லாதது பற்றியும் மக்கள் துப்புவதைப் பற்றியும், சொன்னார். துப்புவது எங்கள் உரிமை
என்று பதிவும் எழுதியிருக்கிறார். http://venkatnagaraj.blogspot.com/2017/06/blog-post_11.html
ஒரு பயணி ஜோடி தங்கள் செல்லங்களான
இரு பக் பைரவர்களையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். படம் எடுக்க ஆசை ஆனால் எனது
கேமராவில் உயிரில்லையாதலால் எடுக்கவில்லை. ரயில் நடைமேடைக்கு வந்ததும் சட்டென்று வெங்கட்ஜி
என் அப்பாவின் கனமான பையையும் எனது முதுகுப் பையையும் தூக்கி ரயிலில் எங்கள் இருக்கையின்
அடியில் வைத்து உதவினார். பெரும்பாலும் நான் தனியாகப் பயணிப்பதால் எப்போதுமே எனது பைகளை
நானே தூக்கிப் பழக்கம். யாரேனும் கூட வந்தாலும் நானேதான் எனது முதுகுப்பையுடன் எனது
பைகளைத் தூக்கிப் பழக்கமானதால் வெங்கட்ஜி தூக்கி வைத்ததும் எனக்கு நெகிழ்ச்சி, வெட்கம்
கலந்த ஒரு சங்கடம் ஏற்பட்டது.
ரயில் புறப்படுவதற்குச் சற்று
முன் விடைபெற்றார். வெங்கட்ஜியைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ரயில் பிரயாணத்தின்
போது அவர் கொடுத்த சிறுகதைகள் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன்.
சமீபகால சிறுகதைத் துறையில் தடம்
பதித்துள்ள தமிழ் எழுத்தாளர்கள் பதினெட்டு பேரின் (மா. அரங்கநாதன், கந்தர்வன், களந்தை பீர்முகம்மது,
சு, சமுத்திரம், சிவகாமி, சுரபாரதிமணியன், தனுஷ்கோடி ராமசாமி, என்.ஆர்.தாசன், திலகவதி,
தோப்பில் முகம்மதுமீரான், பாவண்ணன், பிரபஞ்சன், பூமணி, மேலாண்மை பொன்னுச்சாமி, செ.
யோகநாதன், சி.ஆர்.ரவீந்திரன், ராஜம் கிருஷ்ணன், ஜெயமோகன்) படைப்புகள் “சமீபத்திய
தமிழ்ச் சிறு கதைகள்” என்று தொகுப்பட்ட இத் தொகுப்பை நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ளது.
அனைத்துமே அருமை. நவீன சிறுகதையின் செழுமையை எடுத்துக் காட்டும் விதத்தில் நேஷனல் புக்
ட்ரஸ்ட் ஏற்கனவே “புதிய தமிழ்ச் சிறுகதைகள்” – அசோகமித்திரன் தொகுத்தது – என்ற தொகுப்பை
வெளியிட்டிருக்கிறது என்பதையும் இப்புத்தகத்தின் முன்னுரையிலிருந்து அறிய முடிகிறது.
கல்யாண்ஜியின்/வண்ணதாசனின் கவிதைகள்
புத்தகத்தை இனிதான் வாசிக்க வேண்டும். வெங்கட்ஜிக்கு எனது நன்றிகள் பல! இரு முத்தான
புத்தக அன்பளிப்புடன் என்னைச் சந்தித்தமைக்கு!
----கீதா
திங்கள், 3 ஜூலை, 2017
காலம் தவறிய உணர்வுகள்
எங்கள் ப்ளாகின் மற்றொரு தளமான https://engalcreations.blogspot.in இல் கேஜிஜி - கௌதம் அண்ணா அவர்கள் க க க போ தெரியுமா? என்று அறிவித்திட....அதென்னா கககபோ என்று கேட்பவர்களுக்கு....கண்டிஷனல் கருவிற்குக் கதை போடத் தெரியுமா?!!! அதாவது ஒரு கரு கொடுத்து கதை எழுதச் சொல்லி அறிவித்திருந்தார். கடைசி வரி பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் அவர்கள் என்று முடியவேண்டும் என்ற விதியும் விதித்திருந்தார்!!!!! முதலில் சட்டென்று கதை போட்டார் நம் நண்பர் நெல்லைத் தமிழன் அதுவும் தான் வரைந்த கதைக்கான அழகான படத்துடன் https://engalcreations.blogspot.in/2017/06/blog-post_19.html
அதே கருவில் குரோம்பேட்டை குறும்பனின் கதையின் லிங்க் இதோ
https://engalcreations.blogspot.in/2017/06/blog-post_22.html
கககபோ 2 ற்கு நெல்லைத் தமிழனின் கதையின் லிங்க் இதோ https://engalcreations.blogspot.in/2017/06/2.html
கககபோ 2 ற்கு சகோ துரை செல்வராஜு அவர்களின் கதையின் லிங்க் https://engalcreations.blogspot.in/2017/07/blog-post.html
நான் எழுதிய கதைதான் இதோ இங்கு. அங்கும் வெளியானது. அதன் லிங்க் இதோ...இப்போது இரண்டாவது கருவும் வந்துவிட்டது. நான் இனிதான் எழுத வேண்டும். நீங்களும் நம்ம ஏரியாவுக்கு விசிட் செய்து அங்கு தரப்படும் கருவிற்குக் கதை எழுதலாம். கதையை அங்கு வெளியிட்ட பின்னர் உங்கள் தளத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம். நீங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரிகள் kggouthaman@gmail.com, sri.esi89@gmail.com
அதே கருவில் குரோம்பேட்டை குறும்பனின் கதையின் லிங்க் இதோ
https://engalcreations.blogspot.in/2017/06/blog-post_22.html
கககபோ 2 ற்கு நெல்லைத் தமிழனின் கதையின் லிங்க் இதோ https://engalcreations.blogspot.in/2017/06/2.html
கககபோ 2 ற்கு சகோ துரை செல்வராஜு அவர்களின் கதையின் லிங்க் https://engalcreations.blogspot.in/2017/07/blog-post.html
நான் எழுதிய கதைதான் இதோ இங்கு. அங்கும் வெளியானது. அதன் லிங்க் இதோ...இப்போது இரண்டாவது கருவும் வந்துவிட்டது. நான் இனிதான் எழுத வேண்டும். நீங்களும் நம்ம ஏரியாவுக்கு விசிட் செய்து அங்கு தரப்படும் கருவிற்குக் கதை எழுதலாம். கதையை அங்கு வெளியிட்ட பின்னர் உங்கள் தளத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம். நீங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரிகள் kggouthaman@gmail.com, sri.esi89@gmail.com
மிக்க நன்றி கௌதம் அண்ணா மற்றும் ஸ்ரீராம். இப்படி என்னைப் போன்ற சாதாரணமானவர்களையும் கதைகள் எழுத ஊக்குவித்து, வெளியிட்டுக் கௌரவிப்பதற்கு. மீண்டும் சிரம் தாழ்ந்த நன்றியும், வணக்கங்களும்! உங்கள் இருவரின் முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகளும்!
பொற்காசுகள் உண்டா என்பதை ஸ்ரீராமிடமும், கௌதம் அண்ணாவிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளூங்கள் ஹிஹிஹி...
சரி இதோ கதைக்குப் போகலாம் வாங்க.....
சனி, 3 ஜூன், 2017
திங்கள், 22 மே, 2017
ரோசா நறுமணச் சாரமும் ரோசாவாகிய நானும்
நம் ஸ்ரீராம், நெல்லைத் தமிழன்,
ஏஞ்சல், இராயசெல்லப்பா சார் மற்றும் அதிரா போடும் பதிவுகள் சில எனது பழைய நினைவுகளைக்
கிளறிவிடும். சமீபத்தில் ஸ்ரீராம் தன் தோழி செய்த ரோஸ் எஸன்ஸ் பற்றி திங்கக் கிழமையில்
போட டொட்டடைய்ங்க் என்று நேர இயந்திரத்தில் என் தலை 180 டிகிரி திரும்பிட நினைவுகள்
பின்னோக்கிச் சென்றுவிட்டது. நல்ல காலம் முற்பிறவி நினைவுகள் எனக்கு
வருவதில்லை.
செவ்வாய், 9 மே, 2017
உள்ளுணர்வு
அன்று,
மாயா தன் பகுதியிலிருந்து முக்கியச்சாலைக்குச் செல்லும் சிற்றுந்து நிறுத்தத்தில் நின்று
கொண்டிருந்தாள்.
திங்கள், 24 ஏப்ரல், 2017
எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 7
நாங்களும் கடலில் குளிப்போமே!
ஹப்பா! அடிக்கிற வெயிலுக்கு என்ன சுகமா இருக்கு!!
இது ஃபீனிக்ஸ் மால் சென்ற போது இதனைத் தாங்கி நான் நிற்பது போல் எடுக்க முயற்சி. ஆனால் கூட்டம். மக்கள் இடையில் புகுந்து அப்படியும், இப்படியுமாகச் சென்றதால் இன்னும் நன்றாக எடுக்க முடியாமல் போயிற்று. கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் இப்படி எல்லாம் எடுக்க ரொம்பவே பொறுமை வேண்டும். முதலில் நின்று எடுத்தேன். பின்னர் நடப்பது போல் ஒரு கால் முன் வைத்து எடுத்தேன். என்னுடன் வந்த நபர் ரொம்பவே டென்ஷன் பார்ட்டி என்பதால் அதிகம் முயற்சி செய்ய இயலவில்லை. இப்படி நிழற்படம் எடுக்க முயற்சி செய்வது மிகவும் பிடிக்கும்
நான் சென்னைக்குள் தான் இருக்கிறேன் என்னைத் தெரிகிறதா? நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் இல்ல? ஹும் ஆனால் நீங்கள் எல்லோரும் என் அழகைக் கெடுக்கிறீர்களே!
சிறிய இடத்திலும் பசுமை விடியல்!!!?
வெண்டைப் பூவும், வெண்டைப் பிஞ்சுகளும்
சிறிய இடத்து பசுமை விடியலில் முளைக்கீரை அறுவடை!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------
நான் எடுத்த போது காய்க்கத் தொடங்கியிருந்தது. இப்போது கூடை கூடையாகக் காய்கள். பழுக்க வைத்து......அருமையான மணம், இனிப்பு, சுவை என்று இப்பழத்தைச் சுவைத்துவிட்டால், வெளியில் மாம்பழம் வாங்கவே தோன்றாது. நாங்கள் வாங்குவதும் இல்லை. ஜூஸ் அடித்தால் சர்க்கரையே தேவை இல்லை. மிகவும் செழுமையாக இருக்கும். அணில்கள் கூட்டம் அள்ளும்!!
இது சப்போட்டா காய்ப்பதற்கு முன். இப்படி நிறைய இருக்கின்றன.
சப்போட்டா மிகவும் இனிப்பாகச் சுவையோடு இருக்கும். எங்களுக்கு கிடைப்பது அரிது. அணில்கள் புகுந்து விளையாடும். நாங்களும் விட்டுவிடுவோம்.
வீழ்ந்துவிட்டதால், வீட்டவர்கள் வெட்ட எண்ணினார்கள். என் மனம் மிகவும் வேதனை அடைந்தது. ஆனால், அங்கிருக்கும், கணவரின் தம்பியும் இயற்கை ஆர்வலர். எனவே, நான் அருகில் சென்று பார்த்த போது, "வீழ்வேனா நான்! உயிர்த்தெழுவேன்" என்பது போல் முறிந்த பகுதியில் இன்னும் மரம் ஒட்டிக் கொண்டிருப்பது தெரிய, பச்சையமும் காயாமல் இருப்பதைக் கண்டதும், வெட்டிவிடாதீர்கள், மரத்திற்கு உயிர் இருக்கிறது. முயன்று பார்ப்போம் என்று நான் கெஞ்சிட....இதோ அம்மரத்தில் காய்த்த கொய்யாக்கள்!!! இப்போது அணில்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்!! அணில்கள் மட்டுமல்ல கிளிகளும் வந்து புகுந்து விளையாடும்! கொய்யா கிடைக்கவே கிடைக்காது! போனால் போகிறது. இவ்வுயிரினங்களின் நிலம் தானே! கொண்டாடட்டும்!
-------கீதா
(தலைமையகத்தில் இணையம் பிரச்சனை பண்ணுகிறது. வரும்...வராது என்ற நிலையில். எனவே பதிவுகள் வெளியிடுவதும், அலைபேசியில் வாசித்தாலும் கருத்துகளைப் பதிவதும் தளங்களுக்கு வருவதும், சற்று சிரமமாக இருக்கிறது. பயணமும் மேற்கொள்ள இருப்பதால், இனி மே 5 ஆம் தேதிக்குப் பிறகுதான். இடையில் முடிந்தால் தளங்கள் வந்து வாசித்துக் கருத்திட முயற்சி செய்கிறோம்.)
செவ்வாய், 18 ஏப்ரல், 2017
அடையாளம் - 5
முதல் நான்கு பகுதிகளின் இணைப்புகள்
அமெரிக்காவில்
கடுங் குளிரையும், பனியையும் கண்ட கார்த்திக்கு பனிமூட்டம் தொடங்கியிராத தில்லியின்
குளிர் பெரிதாகத் தெரியவில்லை. தங்கை தில்லியில்தான் வாசம் என்பதால் அங்குதான் தன் பெற்றோருடன் அமெரிக்காவிலிருந்து வந்ததும் தங்கியிருந்தான்.
வியாழன், 13 ஏப்ரல், 2017
அடையாளம் - 4
முதல் மூன்று பகுதிகளின் இணைப்புகள்
“ஐ
ஆம் ஸாரி கார்த்தி, யு ஆர் நாட் பார்ட் ஆஃப் மை லைஃப் எனிமோர்”
இந்த
வார்த்தைகளைக் கேட்டதும் கார்த்தி சற்று ஆடிப் போனான். புரியவில்லை.
செவ்வாய், 11 ஏப்ரல், 2017
அடையாளம் - 3
https://thillaiakathuchronicles.blogspot.com/2017/04/Identity-1.html முதல் பகுதி
https://thillaiakathuchronicles.blogspot.com/2017/04/Identity-2.html இரண்டாம் பகுதி
முந்தைய பகுதியின் இறுதி வரி....ஒரு ஞாயிறன்று, கார்த்தி தனது பாடத்திற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்த போது தொலைபேசியில்
சம்யுக்தாவின் அழைப்பு வரவே எடுத்துப் பேசிட சம்யுக்தாவின் பதட்டமான குரல்….
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
