படம் இணையத்திலிருந்து
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
சனி, 3 ஜூன், 2017
திங்கள், 22 மே, 2017
ரோசா நறுமணச் சாரமும் ரோசாவாகிய நானும்
நம் ஸ்ரீராம், நெல்லைத் தமிழன்,
ஏஞ்சல், இராயசெல்லப்பா சார் மற்றும் அதிரா போடும் பதிவுகள் சில எனது பழைய நினைவுகளைக்
கிளறிவிடும். சமீபத்தில் ஸ்ரீராம் தன் தோழி செய்த ரோஸ் எஸன்ஸ் பற்றி திங்கக் கிழமையில்
போட டொட்டடைய்ங்க் என்று நேர இயந்திரத்தில் என் தலை 180 டிகிரி திரும்பிட நினைவுகள்
பின்னோக்கிச் சென்றுவிட்டது. நல்ல காலம் முற்பிறவி நினைவுகள் எனக்கு
வருவதில்லை.
செவ்வாய், 9 மே, 2017
உள்ளுணர்வு
அன்று,
மாயா தன் பகுதியிலிருந்து முக்கியச்சாலைக்குச் செல்லும் சிற்றுந்து நிறுத்தத்தில் நின்று
கொண்டிருந்தாள்.
திங்கள், 24 ஏப்ரல், 2017
எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 7
நாங்களும் கடலில் குளிப்போமே!
ஹப்பா! அடிக்கிற வெயிலுக்கு என்ன சுகமா இருக்கு!!
இது ஃபீனிக்ஸ் மால் சென்ற போது இதனைத் தாங்கி நான் நிற்பது போல் எடுக்க முயற்சி. ஆனால் கூட்டம். மக்கள் இடையில் புகுந்து அப்படியும், இப்படியுமாகச் சென்றதால் இன்னும் நன்றாக எடுக்க முடியாமல் போயிற்று. கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் இப்படி எல்லாம் எடுக்க ரொம்பவே பொறுமை வேண்டும். முதலில் நின்று எடுத்தேன். பின்னர் நடப்பது போல் ஒரு கால் முன் வைத்து எடுத்தேன். என்னுடன் வந்த நபர் ரொம்பவே டென்ஷன் பார்ட்டி என்பதால் அதிகம் முயற்சி செய்ய இயலவில்லை. இப்படி நிழற்படம் எடுக்க முயற்சி செய்வது மிகவும் பிடிக்கும்
நான் சென்னைக்குள் தான் இருக்கிறேன் என்னைத் தெரிகிறதா? நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் இல்ல? ஹும் ஆனால் நீங்கள் எல்லோரும் என் அழகைக் கெடுக்கிறீர்களே!
சிறிய இடத்திலும் பசுமை விடியல்!!!?
வெண்டைப் பூவும், வெண்டைப் பிஞ்சுகளும்
சிறிய இடத்து பசுமை விடியலில் முளைக்கீரை அறுவடை!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------
நான் எடுத்த போது காய்க்கத் தொடங்கியிருந்தது. இப்போது கூடை கூடையாகக் காய்கள். பழுக்க வைத்து......அருமையான மணம், இனிப்பு, சுவை என்று இப்பழத்தைச் சுவைத்துவிட்டால், வெளியில் மாம்பழம் வாங்கவே தோன்றாது. நாங்கள் வாங்குவதும் இல்லை. ஜூஸ் அடித்தால் சர்க்கரையே தேவை இல்லை. மிகவும் செழுமையாக இருக்கும். அணில்கள் கூட்டம் அள்ளும்!!
இது சப்போட்டா காய்ப்பதற்கு முன். இப்படி நிறைய இருக்கின்றன.
சப்போட்டா மிகவும் இனிப்பாகச் சுவையோடு இருக்கும். எங்களுக்கு கிடைப்பது அரிது. அணில்கள் புகுந்து விளையாடும். நாங்களும் விட்டுவிடுவோம்.
வீழ்ந்துவிட்டதால், வீட்டவர்கள் வெட்ட எண்ணினார்கள். என் மனம் மிகவும் வேதனை அடைந்தது. ஆனால், அங்கிருக்கும், கணவரின் தம்பியும் இயற்கை ஆர்வலர். எனவே, நான் அருகில் சென்று பார்த்த போது, "வீழ்வேனா நான்! உயிர்த்தெழுவேன்" என்பது போல் முறிந்த பகுதியில் இன்னும் மரம் ஒட்டிக் கொண்டிருப்பது தெரிய, பச்சையமும் காயாமல் இருப்பதைக் கண்டதும், வெட்டிவிடாதீர்கள், மரத்திற்கு உயிர் இருக்கிறது. முயன்று பார்ப்போம் என்று நான் கெஞ்சிட....இதோ அம்மரத்தில் காய்த்த கொய்யாக்கள்!!! இப்போது அணில்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்!! அணில்கள் மட்டுமல்ல கிளிகளும் வந்து புகுந்து விளையாடும்! கொய்யா கிடைக்கவே கிடைக்காது! போனால் போகிறது. இவ்வுயிரினங்களின் நிலம் தானே! கொண்டாடட்டும்!
-------கீதா
(தலைமையகத்தில் இணையம் பிரச்சனை பண்ணுகிறது. வரும்...வராது என்ற நிலையில். எனவே பதிவுகள் வெளியிடுவதும், அலைபேசியில் வாசித்தாலும் கருத்துகளைப் பதிவதும் தளங்களுக்கு வருவதும், சற்று சிரமமாக இருக்கிறது. பயணமும் மேற்கொள்ள இருப்பதால், இனி மே 5 ஆம் தேதிக்குப் பிறகுதான். இடையில் முடிந்தால் தளங்கள் வந்து வாசித்துக் கருத்திட முயற்சி செய்கிறோம்.)
செவ்வாய், 18 ஏப்ரல், 2017
அடையாளம் - 5
முதல் நான்கு பகுதிகளின் இணைப்புகள்
அமெரிக்காவில்
கடுங் குளிரையும், பனியையும் கண்ட கார்த்திக்கு பனிமூட்டம் தொடங்கியிராத தில்லியின்
குளிர் பெரிதாகத் தெரியவில்லை. தங்கை தில்லியில்தான் வாசம் என்பதால் அங்குதான் தன் பெற்றோருடன் அமெரிக்காவிலிருந்து வந்ததும் தங்கியிருந்தான்.
வியாழன், 13 ஏப்ரல், 2017
அடையாளம் - 4
முதல் மூன்று பகுதிகளின் இணைப்புகள்
“ஐ
ஆம் ஸாரி கார்த்தி, யு ஆர் நாட் பார்ட் ஆஃப் மை லைஃப் எனிமோர்”
இந்த
வார்த்தைகளைக் கேட்டதும் கார்த்தி சற்று ஆடிப் போனான். புரியவில்லை.
செவ்வாய், 11 ஏப்ரல், 2017
அடையாளம் - 3
https://thillaiakathuchronicles.blogspot.com/2017/04/Identity-1.html முதல் பகுதி
https://thillaiakathuchronicles.blogspot.com/2017/04/Identity-2.html இரண்டாம் பகுதி
முந்தைய பகுதியின் இறுதி வரி....ஒரு ஞாயிறன்று, கார்த்தி தனது பாடத்திற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்த போது தொலைபேசியில்
சம்யுக்தாவின் அழைப்பு வரவே எடுத்துப் பேசிட சம்யுக்தாவின் பதட்டமான குரல்….
சனி, 8 ஏப்ரல், 2017
அடையாளம் - 2
15
வருடங்களுக்கு முன், அமெரிக்காவில், மருத்துவக் கல்லூரி ஒன்றில் சிறப்பு அறுவை சிகிச்சைப்
பயிற்சி பெறுவதற்கு முன் அந்நாட்டு மருத்துவ உரிமம் பெறுவதற்கான சிறப்பு வகுப்புகள்
தொடங்கி சில மாதங்கள் கடந்திருந்தது. உரிமம் பெற்றாலும், அறுவை சிகிச்சைப் பயிற்சி
கிடைப்பது என்பது அத்தனை எளிதல்ல.
புதன், 5 ஏப்ரல், 2017
அடையாளம் - 1
படம் இணையத்திலிருந்து
மணி
4 என்று டிஜிட்டல் கடிகாரம் ஒலி எழுப்பிப் பேசியது. திடுக்கிட்டு விழித்தாள் சம்யுக்தா.
திங்கள், 27 மார்ச், 2017
80 வயதை நெருங்கும் ஹனிமூன் ஜோடி!!
பெண் அன்றி நான் அல்ல பொம்மை என்ற என் குறுநாவலை மிகவும் ஒன்றி வாசித்து, ஆதரவு கொடுத்து, ஊக்கமளித்து, பரிந்துரைகள் வழங்கி, கருத்திட்ட அனைத்து வலையுலக உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்! அடுத்து சில மாதங்களில் உங்களது அன்பையும், ஆதரவையும் எதிர்பார்த்து வருவதற்குக் காத்திருக்கும், கோடிக்கணக்கான மாந்தர்களுள், காலம் செய்த கோலத்தில் சிக்கலானப் புள்ளிக் கோலங்களாய் வாழும் கதாபாத்திரங்களான துரைராசு, லதா, கோபால் என்பவர்களை வெளிக் கொணர இருக்கிறேன். நீங்கள் அவர்களையும் கைவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். சரி ...கீதா நீ ஒரு அழகான ஆதர்ச ஜோடியைப் பற்றிச் சொல்லணும்னு சொன்னியே..தொடங்கிக்க....நானும் அங்க நம்ம வலை உறவுகளோடு சேர்ந்துக்கறேன்...
ஓகே துளசி நான் தொடருகிறேன்..என் பதிவை
ஓகே துளசி நான் தொடருகிறேன்..என் பதிவை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)