வெள்ளி, 2 ஜனவரி, 2026

சௌடேஸ்வரி அம்மன் கோவில் - தலக்காடு - 5

தலக்காடு - 4

தலக்காடு- 3

தலக்காடு- 2

தலக்காடு- 1

சென்ற பதிவு, தலக்காடு 4 ல் அடுத்து கீர்த்தி நாராயண பெருமாள் கோவிலை நோக்கின்னு முடித்திருந்தேன். ஆனா பாருங்க கோவில் படங்கள் கொஞ்சம் கூடுதல் என்பதால் தொகுக்க நேரம் எடுக்கிறது. எழுதவும் இல்லை...அதனால்...

வருடங்களுக்கு முன், வானொலி நிலையம், தூர்தர்ஷன் இவற்றில் ஏதேனும் நிகழ்ச்சியை ஒலி/ஒளிபரப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டால் இடைவெளியை நிரப்ப ஏதேனும் போடுவதுண்டு. (அப்படி இலங்கை வானொலியில் அடிக்கடி நான் கேட்டவை, சேஷகோபாலன் அவர்களின் காக்கைச் சிறனினிலே மற்றும் ராம மந்த்ரவ ஜபிதோ) உங்களுக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

அது போல, தலக்காடு கோவில்களின் பதிவான கீர்த்திநாராயணர் கோவில் பதிவு கொஞ்சம் தாமதமாவதால்... கீர்த்திநாராயணர் கோவில், வைத்யநாதேஸ்வரர் கோவில்கள் போகும் வழியில் உள்ள, நாங்கள் சென்ற, இந்த அம்மன் கோவில் படங்களேனும் போட்டு உங்களுக்குக் காட்ட வேண்டாமா!!!  இதையும் போடவேண்டும் என்றுதான் இருந்தேன்.

ஆனால் கோவில் பற்றி எழுதத் தகவல்கள் எதுவும் இல்லை. எனவே கீர்த்திநாராயணர் கோவில் பதிவு தயாராவதற்குள் இந்தச் சின்ன கோவில் படங்களைப் போட்டு இடைவெளியைக் காப்பாற்றிவிடலாம் என்று....

அந்தக் கூடாரம் போட்ட பாதை தெரிகிறதா நாங்கள் நடந்து வந்த பாதை - இப்படம் கீர்த்திநாராயணர் கோவிலில் நுழையும் போது எடுத்தது....பாதையை உங்களுக்குக் காட்டுவதற்காக இப்போது கொடுத்திருக்கிறேன். கீர்த்தி நாராயணர் பதிவிலும் இப்படம் வரும்...இது ஏற்கனவே வந்த படம்னு சொல்லம இருக்கணும்லையா அதான் இங்கே இப்பவே...

மருளீஸ்வரர் கோவிலில் இருந்து நேராக கீர்த்தி நாராயண பெருமாள் கோவிலுக்கு மீண்டும் அந்தக் கூடாரம் போட்ட பாதை வழியே மணலில் நடந்து வந்தோம். இறங்கும் இடத்தில் (பாதை மேடான பகுதியில். ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், கோவில்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டவை என்று. எனவே 30-40 அடி பள்ளத்தில்) அம்மன் கோவிலொன்றைப் பார்த்தோம்.

சௌடேஸ்வரி அம்மன் கோவில் என்று தெரிந்தது. கீர்த்திநாராயணர், வைத்யநாதேஸ்வரர் கோவில்கள் அமைந்திருக்கும் அதே வளாகத்தில் வெளிப்பக்கம் இருப்பதால் அக்கோவில்களைப் பார்க்கப் போகும் போது இக்கோவிலைக் கடந்து சென்றுவிடலாம்தான். ஆனால் நாங்கள் அப்படிக் கடந்து செல்லவில்லை. அம்மனையும் தரிசித்துவிடலாம் என்று உள்ளே நுழைந்தோம். சிறிய கோவில் ஆனால் வெளியில் நிறைய இடம்.

கோவிலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இணையத்தில் தேடினேன். அங்கும் தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. மைசூரில் இருக்கும் சக்தி பீட கோவில்களில் ஒன்றான சாமூண்டேஸ்வரி அம்மனின் வடிவம் என்றும் சொல்லப்படுகிறது. அம்மன் சக்தி வடிவம்தானே! சக்திக்கு ரூபமேது!

படம் எடுக்கக் கூடாது என்று போட்டிருந்தாலும் சில கோவில்களில் பூஜை செய்பவருக்குக் கொஞ்சம் 'ரூ' கொடுத்து படம் எடுத்துக் கொள்ளலாமா என்றால் அனுமதிக்கிறார்!! இதை என்ன சொல்வீர்கள்? நான் செய்வதில்லை. 

பயந்து கொண்டே எடுத்தேன். கூடாது என்று தெரிகிறது. ஆனால் எல்லோரும் எடுத்துப் போட்டிருக்கிறார்கள். மற்ற கோவில்களில் எடுக்கவில்லை.

தலக்காடு பஞ்சலிங்கேஸ்வரர்களைத் தரிசிக்கும் பயணத்தில், பொதுவாக இங்கிருக்கும் பாதளீஸ்வரர், மருளீஸ்வரர், வைத்யநாதேஸ்வரர் எல்லோரையும் தரிசித்து இக்கோவிலுக்கும் செல்வார்களாம், அக் கோவில்களுடனேயே இக்கோவிலும் இருப்பதால்.

கோவிலில் இருக்கும் அம்மன் பெயர் சௌடேஸ்வரி அம்மன். அழகு அம்மன். 

சன்னதியின் வலப்புறம் இதோ அம்மனின் திருஉருவம் இப்படி ...புறப்பாடுக்கான திருஉருவமோ?! இல்லை நவராத்திரி சமயத்தில் வெளியில் எழுந்தருளக் செய்து அலங்காரம் செய்வாங்களோ?

சிம்மவாஹினி - மஹிஷாசுரன்?

கோவிலின் வெளியே இப்படி ஒரு ஹோமகுண்டம்? போன்று இருந்தது. அதில் புகை வந்து கொண்டிருந்தது. ஆனால் இது என்னவென்று சரியாகத் தெரியவில்லை. அங்கிருந்த பெண்மணியிடம் கேட்ட போது அவர் மொழி எனக்குப் புரியவில்லை.

அடுத்து, மிக அருகிலுள்ள கீர்த்தி நாராயண பெருமாள் கோவிலைப் பார்ப்போம்!


------கீதா

30 கருத்துகள்:

  1. நம்மூர் வானொலிகளில்தான் "குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிக்கு பதிலாக" என்று போடுவார்கள்.  இலங்கை வானொலியில் அப்படிக் கேட்டதில்லை. கர்னாடக சங்கீதமும் இலங்கை வானொலியில் கேட்டதாக நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! ஆனால் நான் இந்த ஷேஷு பாடல்களை இடையில் நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். அப்படித்தான் இதைத் தேடிக் கற்றுக் கொண்டேன்.

      உங்க கருத்தைப் பார்த்ததும், உடனே கூகுளில் தட்டிப் பார்த்தேன்...உடனே தகவல் வந்துவிட்டது நாம நினைவிலிருந்து சொனந்து சரிதான்னு!!!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  2. நீங்கள் நடந்து வந்த பாதையில் உங்களைக் காணோமே... ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....

      இந்தப் பக்கம் வந்த பிறகு தான் ஏற்கனவே பாதையை எடுத்ததை காணலை...அதனால இதைப் போடாச்சு.

      கீதா

      நீக்கு
    2. நடந்து இடப்புறம் வந்த பிறகு எடுத்த படத்தில் எப்படி இருக்கமுடியும் ஜி ?

      வேண்டுமானால் AI - இல் இணைக்கலாம்.

      நீக்கு
    3. வாங்க கில்லர்ஜி. ஸ்ரீராம் என்னைக் கலாய்த்திருக்கிறார்!!

      கீதா

      நீக்கு
  3. கன்னடம் படிப்பீர்களா கீதா? அங்கு ஜாங்கிரி எழுத்தைத் தவிர ஆங்கில வார்த்தைகள் கூட காணோமே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொத்தில்லா, ஸ்ரீராம். ஆமாம் ஆங்கிலம் இல்லை. தெரியவில்லைனா ஃபோட்டோவை கூகுளில் போட்டு எழுத்துகளைப் பிடிப்பதுதான்! படிப்பதுதான்!

      எனக்கு இன்னும் பேசவே வரலை. ஹிந்தி கூடப் பரவால்ல ஏக் தோ தீன்னு சமாளிச்சிடறேன்! ஆனா கன்னட நிறைய தமிழ் வார்த்தைகள் கலந்து வந்தாலும் ம்ஹூம் ...பேசறதே இல்லையே அக்கம்பக்கம்...பழைய வீடாச்சும் பரவால்ல....அக்கம் கொஞ்சம் பேச்சு உண்டு. இங்க இல்லை...

      கீதா

      நீக்கு
  4. // பூஜை செய்பவருக்குக் கொஞ்சம் 'ரூ' கொடுத்து படம் எடுத்துக் கொள்ளலாமா என்றால் அனுமதிக்கிறார்!! இதை என்ன சொல்வீர்கள்? நான் செய்வதில்லை. //

    அதாவது நீங்கள் பணம் கொடுக்கவில்லை.  கொடுக்காமலே படம் எடுத்தேர்கள்..  சரியா?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா ஆமாம். இந்தக் கோவிலில் கருவறையில் உள்ள அம்மனை உள்ளே செல்லும் முன் வெளியில் இருந்து எடுத்தேன் ஸ்ரீராம். long shot, close up கொஞ்சம்னு....அப்புறம் தான் கவனித்தேன் எடுக்கக் கூடாதுன்னு போட்டிருக்கும் சிம்பலை!!ஹிஹிஹி

      இந்தக் கோவில் பத்தி எல்லாரும் படம் படமா எடுத்துப் போட்டிருக்காங்க. அது போல முன்பு எழுதிய கோவிலிலும்...ஆனால் நான் சிவன் கோவில்களில் கூடாது என்று சொன்ன பகுதியை எடுக்கவில்லை. லாம்னு சொன்னதைத்தான் எடுத்தேன்.

      போன கோவில்களில் கருவறையில் உள்ள சுவாமி படங்கள் இருக்காதே

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. அம்மனையே சிறையில் வைத்து விட்டார்களா...   என்ன தைரியம்.. 

    ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் ஹோமகுண்டம்..  அதிலிருந்து புகை...  சம்திங் பிஷி கீதா..   நீங்கள் விசாரித்திருக்க வேண்டும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரித்துக் கொண்டே ...ஸ்ரீராம் ஹைஃபைவ். நான் அங்கு படத்தின் கீழ் கொடுக்க நினைச்சு அப்புறம் கண்டிப்பா நீங்க இதைச் சொல்வீங்கன்னு விட்டேன்!!!! கரெக்ட்டா உங்க கமென்ட்! நான் எழுதி அழித்தது....பாருங்க அம்மனை இப்படி சிறைக்குள் வைத்திருப்பது போல் இருக்கிறதே......என்று...

      கீதா

      நீக்கு
  6. சௌடேஸ்வரி அம்மன் கோவில் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    கோவில்கள் அகழ்ந்தெடுக்கப்பட்ட போது கிடைத்த கற்களோ அங்கு கிடப்பவை.
    மணல் பரப்பில் கற்கள் கிடப்பதைபார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

    சௌடேஸ்வரி அம்மன் படங்கள் எல்லாம் மிக ருமையாக இருக்கிறது.
    சூலாயுதம் கீழ் நோக்கி இருப்பது மஹிசனை அழித்த கோலத்தில் இருக்கிறார், ஆனால் முகம் சாந்தமாக இருக்கிறது. கம்பி கதவுக்குள் இருக்கும் உற்சவ அம்மனும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கற்கல் சௌடேஸ்வரி அம்மன் கோவில் இல்லைக்கா. அது கீர்த்திநாராயணப் பெருமாள் கோவில் முகப்பில் நுழையும் போது. அகழ்ந்து எடுக்கறப்ப எடுத்தவைன்னுதான் அப்படித்தான் தோன்றுகிறது. ஆமாம் மணற்பரப்பில். இன்னும் அந்தக் கோவில் பத்தி வரும் பதிவில் படங்கள் வரும் கா.

      மஹிஷந்தான் இல்லையான் அது..ஆமாம் கம்பிக் கதவுக்குள் உற்சவ அம்மன் முதலில் கம்பிகளுக்கு நடுவில் எடுத்துவிட்டு அப்புறம் கம்பிகளோடு மஹிஷனும் இருப்பது போல் எடுத்தேன். அங்கு பாதை ரொம்ப இடுக்கு என்பதால் எடுக்க முடியவில்லை.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  7. கோவிலின் வெளியே இப்படி ஒரு ஹோமகுண்டம்? போன்று இருந்தது. அதில் புகை வந்து கொண்டிருந்தது. ஆனால் இது என்னவென்று சரியாகத் தெரியவில்லை.//

    ஹோமகுண்டத்துக்குள் மர உரல் போல மரத்தை குடைந்து செய்து வைத்து இருக்கிறார்கள் அதை வைத்து இருப்பது காற்றுக்கு அடக்கமாக தீ உள்ளே எரியும் என்பதால் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படி இருக்குமோ? மரம் எரிந்துவிடாதோ? மரம் தான் அது குடைந்து வைத்திருக்காங்க. ஆனால் அதில் சாம்பல் இருந்தது. கம்பி பக்கத்துல இருக்கு பாருங்க அதை உள்ளே விட்டு எரிவதற்கு உதவர் என்று....

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  8. படங்களை தரிசித்து கொண்டேன்.

    நேம் போர்டில் ஜிலேபியை சுற்றியதுதான் படிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஜிலேபி எனக்கும் புரியலை. அதுதான் சௌடேஸ்வரி அம்மன்னு...

      நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
    2. அந்த எழுத்தைச் சாக்கிட்டு, ஜிலேபி நினைவு வந்ததே.. அதற்காகவேணும் ஜிலேபியை கடையில் வாங்கிச் சாப்பிட்டுவிடுங்கள்

      நீக்கு
  9. தகவல்களும் படங்களும் சிறப்பு.

    ஆலயங்களில் படம் எடுப்பது தடை செய்யப்பட்டிருந்தால் எடுப்பதில்லை. ஆனால் அதே தடைப்பட்ட ஆலயங்களில் பிரபலங்கள் வரும்போது காணொளி, படங்கள் என எடுத்துத் தள்ளுகிறார்கள் - கர்பக்கிரஹம் உட்பட... எத்தனை படங்கள் எடுக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்த்தேன்! சட்டம் எல்லோருக்கும் ஒன்றாக இருப்பதில்லை என்பது இங்கே கண்கூடு.

    திருவரங்கத்தில் இரண்டு நாட்கள் முன்னர் அரையர் சேவை சமயத்தில் நான் படம் எடுக்க, ஒரு பெண்மணி, “இங்கே ஃபோட்டோ எல்லாம் எடுக்கக்கூடாது, பிடுங்கி போட்டுடணும்...” என்று சொன்னார். அதற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னர் அதே ஆலயத்தில் எத்தனை படங்கள், காணொளிகள் எடுத்தார்கள் என்பதை நேரில் பார்த்திருந்ததால் எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது. அன்றைய மாலையே அரையர் சேவை காணொளியாகவே முகநூலில் பார்க்கக் கிடைத்தது! என்ன சொல்ல!

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி, நானும் எடுப்பதில்லை. இக்கோவிலில் மட்டும் அறிவிப்பைப் பார்க்கும் முன் தூரத்திலிருந்து எடுத்துவிட்டேன். அப்புறம் பார்த்ததும் உள்ளே எடுக்கவில்லை.

      ஆனால் பலரும் எடுத்துக் போடுகிறார்கள் நீங்கள் சொல்லியிருப்பது போல். சமீபத்தில் ஒரு கோவில் போயிருந்தப்ப, உள்ளே ஆரத்தி காட்டும் போது அப்போது அங்கு நின்றிருந்த குழுவில் எல்லோரும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டே இருந்தார்கள் அங்கிருந்த காவலர்/போலீஸ் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் எங்கள் வரிசை நகர்ந்த போது சிலர் எடுக்க முயன்ற போது அவர் சத்தம் போடத் தொடங்கினார். அது ஏன் இப்படி என்று தெரியவில்லை. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே விதிகள் மாறுகின்றன!!!!!

      நீங்கள் பார்த்திருப்பீர்கள்! உங்கள் ஆதங்கமே எனக்கும் அதை அப்படியே டிட்டோ செய்கிறேன். நமக்கு ஒரு விதிமுறை மத்தவங்களுக்கு ஒரு விதிமுறை. நானும் இதை நேரில் கண்டு அனுபவமும்.

      அக்கோவில் பற்றி எழுதும் போது சொல்கிறேன்

      கீதா

      நீக்கு
    2. மிக்க நன்றி வெங்கட்ஜி.

      கீதா

      நீக்கு
    3. திருவரங்கம் அரையர் சேவை சமயத்தில், திருவாய்மொழி புத்தகத்தையோ இல்லை மொபைலில் திருவாய்மொழியைப் பார்ப்பதையோ அனுமதிப்பதில்லை. எனக்கு இந்த அனுபவம் இரண்டு முறை நிகழ்ந்திருக்கிறது.

      இன்னொரு காரணம், இப்போ அரையர் சேவைக்கே கைங்கர்யபரர்கள் மிக மிகக் குறைவு. யாரேனும் மொபைலில் காணொளி எடுத்து அதனை சமூக ஊடகங்களில் போட்டு அதில் யாரேனும் தவறோ இல்லை தவறான கமெண்டோ கொடுத்துவிடப் போகிறார்களே என்ற எச்சரிக்கையும் ஒரு காரணம்.

      இது புரிந்துகொள்ளக்கூடியதுதான். அலுவலக ரீதியாக இதன் காணொளி வரும்போது அதில் பெரும்பாலும் ஆடியோவை எடுத்துவிடுவார்கள்.

      நீக்கு
    4. இது போன்றவை எடுக்காமல் இருப்பது நல்லதுதானே நெல்லை. உண்மைதான் அவங்க எடுக்கக் கூடாது என்று சொல்வது இப்படியானவற்றை.

      கீதா

      நீக்கு
  10. இன்று எதேச்சையாக இந்தப் பதிவில் என்ன கருத்து எழுதியிருக்கேன் என்று பார்த்தேன். பார்த்தால், என் கருத்தையே காணவில்லை. எழுத மறந்துவிட்டேனோ? ஆனால் அன்றே பேருந்தில் படித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  11. கோவில்ல படம் எடுக்கறதுக்கும் அவனுடைய/தெய்வத்தினுடைய அனுமதி வேண்டும் என்று நினைக்கிறேன்.

    சிலரை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. சிலர் போனைத் தூக்கினாலே சப்தம் போடுவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்....நமக்கும் அப்படிச் சொல்லப்பட்டதே நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த பதிவில் வரும்...

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  12. நான் எப்போதுமே மூலவரை புகைப்படம் எடுக்க கொஞ்சம் யோசிப்பேன் (வட இந்தியா தவிர).

    சமீபத்தில் காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயிலில் படம் எடுக்க வாய்ப்பு இருந்தது. சில நொடிகளில் யோசித்ததால் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டேன்.

    படம் இருந்தால்தான் நல்லது என்பது என் அபிப்ராயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானுமே யோசிப்பேன். சில இடங்களில் எடுத்துக் கொள்ள அனுமதி கொடுக்கிறார்கள் இங்கு அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் எதுவும் சொல்வதில்லை. ஆனால் சிவன் கோவிலில் உள்ளே எடுக்க அனுமதி இல்லை.

      //சமீபத்தில் காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயிலில் படம் எடுக்க வாய்ப்பு இருந்தது. சில நொடிகளில் யோசித்ததால் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டேன்.//

      அனுமதி இருந்ததா? அறிவிப்பு படங்கள் எதுவும் இல்லையா?

      கீதா

      நீக்கு