இது அவர்களது ஐடென்டிட்டி ஸ்கானிங்க் சம்பிரதாய பரிசோதனைகள். அது முடிந்ததும்... அடுத்தது என்ன என்று முந்தைய பதிவில் முடித்திருந்தேன். இதோ தொடர்கின்றது...
ஜூலி எங்கே? என்று ஸன்னி வினவ
ஜூலி எங்கே? என்று ஸன்னி வினவ
இதப் பார்டா வந்தவுடனே ஆர்வத்தோடு ஜூலி எங்கே என்று கேட்பதை...-
ஹேய் சும்மாதான் கேட்டேன்...உடனே கதை கட்டிவிடாதே....சரி ஜெஸ்ஸி, டைகர், ரஜ்ஜு எங்கே?
இதோ நீ கேட்ட ஜூலி.
கரந்தை சகோவின் செல்லம் ஜீலி
எங்கள்/துளசியின் செல்லம் டைகர்
கண்ணழகி : ஜெஸ்ஸி ஒரு பட்டாளத்தையே அழைத்து வந்திருக்கிறாள், அவர்கள் ஊர் சுற்றிப் பார்க்கவாம். இங்குதான் இருக்கிறாங்க்.....அடடா இந்த ஜெஸ்ஸியை காணவில்லையே.. இந்த ஜெஸ்ஸி, கருவாண்டியுடன் போயிருப்பாள். ஐயையோ! ரஜ்ஜுவையும் காணவில்லை அவனும் அவர்களுடன் போய்விட்டானோ. பூனையர்களாச்சே. ஒரு வேளை ரஜ்ஜுவின் அம்மா துளசி ஆண்டி இங்கு ஊர் சுற்றிக் கொண்டிருக்காங்களோ!! வாங்க, தேடிக் கொண்டே நடப்போம்..
ஸன்னி : கருவாண்டியா? அவன் யார்? ஜெசியின் ஆண் தோழனா?
கண்ணழகி : அது தெரியாது. வீட்டைவிட்டு ஒரு முறை அவளை ஏமாற்றிக் கூட்டிக் கொண்டுப் போய்விட்டான். இந்த ஜெஸ்சியும் வீட்டுக்கு எப்படி வருவது என்று தெரியாமல் கருவாண்டியைத் திட்டிக் கொண்டே வந்து கதவைத் தட்டவும்... ஜெசியோட அம்மா ஏஞ்சலின் பாவம் பயந்து போய் திருடன் என்று நினைக்க...
டைகர் : ஹ்ஹாஹ்ஹ....அப்ப ஜெஸ்ஸி செம ஆட்டம் போடுவாள் போல. சுவாரஸ்யமாக இருக்கிறதே!
கண்ணழகி : டைகர்! வாய் விடாதே....உன் ஆட்டத்தை அப்புறம் சொல்கிறேன். இப்பவும் எங்கேயாவது போயிருப்பார்கள்..
ஸன்னி : ஓ! அப்போ ஜோடியா...அதான் இருவரும் பிரியாமல் சேர்ந்து வந்திருக்கிறார்கள் போல...--
ரஜ்ஜு - நியூசிலாந்து துளசி அக்காவின் செல்லப் பிள்ளை
ரஜ்ஜு : ஜெஸ்ஸிய தேடுகின்றீர்களா? ஏஞ்சலின் அம்மா அவங்க தளத்துல... "வான்டட்" அப்படினு ஜெஸ்ஸியோட ஃபோட்டோ போட்டுருக்காங்களா.....நானும் தேடிக் கொண்டே வந்தேன்.
டைகர், ஜூலி : இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? ரஜ்ஜு?
ரஜ்ஜு ப்ளாக் எல்லாம் வாசிக்கின்றான்
ரஜ்ஜு : நான் எங்க துளசி அம்மா ப்ளாக் எழுதும் போது நானும் கம்ப்யூட்டரில் ஏறி உட்கார்ந்து வாசிப்பேன் தெரியுமா? ஹிஹிஹி
கருவாண்டியும், தோழி ஏஞ்சலினின் செல்லம் ஜெஸ்ஸியும்
ரஜ்ஜுவுடன் பேசிக் கொண்டே போக, அங்கு ஒரு கடையில் சுண்டெலி பொம்மை தொங்கிக் கொண்டிருந்ததை, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெஸ்ஸியையும், கருவாண்டியையும், அவர்களது
தோழர்களான பிரபு, சிம்பு, அசா (அரவிந்த்சாமி) எல்லோரையும் பார்த்து, ஸன்னி, ஜூலி, டைகர் சிரிக்க....,
ஜெஸ்ஸியின் தோழர்கள்
சிம்பு
அசா-அரவிந்த் சாமி பிரபு
ஜூலி : அது உண்மையான எலினு நினைச்சு டாம் அண்ட் ஜெர்ரி
விளையாடலாமானு வேடிக்கை பாக்கறீங்களா..ஹ்ஹ்ஹ் அது பொம்மை
ரஜ்ஜு : எனக்கு அது முன்னாடியே தெரியுமே அதான் நான் அந்த யானை பொம்மை மேல் உட்கார்ந்துவிட்டேன்
ஜெஸ்ஸி : என்ன நக்கலா? எங்களுக்கும் தெரியும். எப்படி இப்படி உண்மை எலி போல இந்த மனிதர்கள் செய்திருக்கிறார்கள் என்றுதான் வேடிக்கை பார்த்தோம்.
டைகர் : பாரு! மீசையில் மண் ஒட்டாது !!
எல்லோரையும் இழுத்து வண்டியில் ஏற்றிக் கொள்வது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஜெஸ்ஸியின் தோழர்கள் ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய போது...கண்ணழகி ஸன்னியை அறிமுகப்படுத்துகிறாள்
கண்ணழகி : சிம்பு, பிரபு, அசா!! இவன் தான் ஸன்னி. நியூஜெர்சியிலிருந்து வந்திருக்கிறான். நீங்களும் எங்களுடன் எங்கள் அகத்திற்கு வந்துவிட்டு அப்புறம் ஊர் சுற்றிப் பார்க்கச் செல்லுங்கள். ஒரு முக்கியமான நிகழ்வு இருக்கிறது.
எனவும் அவர்களும் வந்தார்கள்.
கண்ணழகி : சிம்பு, பிரபு, அசா!! இவன் தான் ஸன்னி. நியூஜெர்சியிலிருந்து வந்திருக்கிறான். நீங்களும் எங்களுடன் எங்கள் அகத்திற்கு வந்துவிட்டு அப்புறம் ஊர் சுற்றிப் பார்க்கச் செல்லுங்கள். ஒரு முக்கியமான நிகழ்வு இருக்கிறது.
எனவும் அவர்களும் வந்தார்கள்.
ஸன்னி : கண்ணழகி! உன் சகோதரி ப்ரௌனி இப்போது எங்கிருக்கிறாள்? அவளும் வருவாள்தானே?
கண்ணழகி : ஸன்னி அவளைப் பற்றிப் பேசாதே. எனக்கும் அவளுக்கும் ஆகாது. பங்காளிச் சண்டை.
ஸன்னி : பங்காளிச் சண்டையா அப்படின்னா?
ஜூலி : ஓ! நீ குட்டிக் குழந்தை அதுவும் அமெரிக்கா இல்லையா! உனக்கு இதெல்லாம் தெரியாது
ஸன்னி : பரவாயில்லை நான் அவளையும் பார்க்க வேண்டும்...
கண்ணழகி : (மைன்ட் வாய்ஸ்: ம்ம்ம் இந்த ஸன்னிக் குட்டி ரொம்ப நல்லவனா, சமத்துப் பையானா இருக்கானே!) நீ சொல்லுவதால் சரி. ஆனால் அவள் நாம் பேசும் இடத்திற்கு வரக் கூடாது. அறையில்தான் இருக்க வேண்டும்.-
ஜெஸ்ஸி : ஓ! அந்த அளவிற்குப் பகையா? உன்னுடன் கூடப் பிறந்தவள் அல்லவா?
கண்ணழகி : அந்தக் கதையை அவளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்......அகம் வந்துவிட்டது....
வீட்டிற்குள் நுழைந்ததும்
அந்தச் சமயம் பார்த்து, வென்ற கட்சியும், எதிர்க்கட்சியும் சரவெடிகள் வெடிக்க
அவ்வளவுதான் எல்லோரும் பயந்து, உடம்பு
நடுங்க ஓடி ஒளிந்து கொண்டார்கள்
சரி அவர்கள் எல்லோரும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வரட்டும். அதுவரை நீங்களும் காத்திருங்கள். அடுத்து ஒரு விழா. மறக்காமல் வந்துவிடுங்கள்!
தொடரும் விழாவில் சந்திப்போம்....
நிழற் படங்களுக்கு நன்றி : ஏஞ்சலின், துளசி டீச்சர்/அக்கா, சகோ கரந்தையார், சகோ மதுரைத் தமிழன்
-----கீதா
(பெரும்பாலும் இரவிலும் பகலிலும் கூட
வோல்டேஜ் பிரச்சனையால் நெட் போய்விடுவதால் நெட் வரும் போது பதிவிட வேண்டிய நிலைமை.
உடன் உடன் பதிவிடுவதற்குப் பொறுத்துக் கொள்ளவும்.)







