திங்கள், 23 அக்டோபர், 2023

ஒன்று கூடல் நிகழ்வும், ஈஷா பயணமும் பகுதி - 1

 

எப்போதாவது காண நேரும் நம் பள்ளித் தோழர்கள், அந்த இனிமையான நாட்களுக்குக் கொண்டு சென்று கடந்து போன அந்தப் பொன்னான நாட்களை நாம் சுவைத்து மகிழ உதவுவார்கள். அது போல் சமீபத்தில் நான் 23 ஆண்டுகள் பணியாற்றிய CFDVHS - சிஎஃப்டிவிஹெச்எஸ் பள்ளியில் 1998 – 2000 வருடங்களில் பயின்ற மாணவ மாணவியர்கள் ஒரு சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். Voice 1

இது போன்ற ஓரிரண்டு சந்திப்புகளுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்குப் போக முடியாத சூழல். எனவே இதை நழுவ விட மனமில்லை. Voice 2

கடந்த 1-10-23 அன்று காலை எடக்கரா ஊரிலிருந்து முன்பு வழக்கமாகப் போனது போல் இரு சக்கர வாகனத்தில் போய் மகிழ நினைத்த என்னை மனைவியும் மகனும் அனுமதிக்கவில்லை. இளம் கன்று பயமறியாது என்பது மட்டுமல்ல முது காளைகளும் பயமறிவதில்லை  என்பதை எனக்கு உணர்த்தியதால் மூவரும் காரில் போக முடிவு செய்தோம். Voice 3

நீண்ட நாட்களாக கோவை ஈஷா மையத்திற்கும் அங்கு நிகழும் ஒலி ஒளி நிகழ்ச்சியையும் காண ஓர் ஆவல். மனைவியிடமும், மகனிடம் அதைப்பற்றிச் சொன்னதும் அவர்களுக்கும் மகிழ்ச்சி. ஒன்று கூடல் நிகழ்ச்சி முடிந்து ஈஷா மையம் போய், இரவு 11 மணிக்கு எப்படியும் வீட்டை அடையலாம் என்று நினத்து காலை 7 மணிக்கு காரில் பயணமானோம். Voice 4

வழக்கம் போல போகும் வழியிலுள்ள வண்டூர் அப்பனை வழிபட்டு, 23 ஆண்டுகளாக எல்லா திங்கட்கிழமை காலை மற்றும் சனி இரவும் நான் பயணித்த வழிகளை நலம் விசாரித்துக் கொண்டே பயணமானேன். மனதுக்கு இதமாக இருந்தது. நிகழும் நிகழ்காலமெல்லாம் இறந்தகாலமாகி இப்படி நினைவில் சுவைக்கும் போது உண்மையிலேயே நெல்லிக்கனிதான். Voice 5

10 மணிக்கு பாலக்காடு, மாத்தூர் பள்ளியில் துவங்கிய நிகழ்ச்சியில், நான் 3 மணி நேரப் பயணத்திற்குப் பின் 11 மணி அளவில் என்னையும் இணைத்துக் கொண்டேன். Voice 6

பள்ளியின் நிர்வாகி,  முன்னாள் முதல்வர் எனக்குப் பின்னால் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆசிரியைகள், இப்போதும் பணிபுரியும் ஆசிரியர்கள், சிரிக்கும் போது அதில் ஒளிந்திருக்கும் 18 வயது முகத்தை நினைவுக்குக் கொண்டு வரும் 40 வயதைத் தொட்டிருக்கும் என் அன்பான மாணவ மாணவியர்கள், 25 ஆண்டுகளுக்குப் பின் அவர்களைப் பார்க்கும் போதும் அவர்களுடன் பேசும் போதும் என் மனதில் தோன்றிய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். Voice 7

பேச அழைத்த போது என் மகிழ்வைப் பகிர்ந்து அவர்களை வாழ்த்தி அமர்ந்தேன்.  Voice 8

என் உருவம் பதித்த ஒரு நினைவுப் பரிசை என் கையில் தந்த போது மட்டற்ற மகிழ்ச்சி. Voice 9

எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினோம். அதன் பின் இந்த இனிய நாளை, பார்க்கும் போதெல்லாம் நினைவில் கொண்டுவர கேமரா கண்களில் எல்லோரையும் ஒற்றி எடுத்தோம். அன்றைய மாணவர்கள் எல்லோரும் இப்போது அரசு ஊழியர்கள், வியாபாரிகள் என நல்ல நிலைக்கு வந்திருந்தார்கள். அதையெல்லாம் கேட்கவே இனிமையாக இருந்தது. அன்றைய மாணவிகள் பலரும் தங்களது குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் பற்றிப் பேசிக் கேட்கையில் இனம் புரியாத ஒரு சுகம். voice 10

Robert Frost’s – ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதை நினைவுக்கு வந்தது.

The woods are lovely, dark and deep,

But I have promises to keep,

And miles to go before I sleep,

And miles to go before I sleep.

சிறிது நேரத்திற்குப் பிறகு எல்லோரிடமும் விடை சொல்லி கோவை ஈஷா மையம் நோக்கி நானும் என் மனைவியும் மகனும் பயணமானோம். Voice 11

சிறிய கணொளிதான், 5 நிமிடம் சில நொடிகள். முடிந்தால் பாருங்கள். 

பகுதி 2 தொடரும்.....


-----துளசிதரன்

23 கருத்துகள்:

  1. இனிய நினைவுகள்.  தினசரி இவ்வளவு தூரமா சென்று வந்தீர்கள்?  வழியெல்லாம் இயற்கையின் அழகு.  காணொளி அருமை.  பதிவையே அதில் அடக்கி விட்டீர்கள்.  இப்படி ஆசிரியர்களை நினைவுகூரும் மாணவர்களை பாராட்ட வேண்டும்.  உங்கள் சேவையையும் தலைதாழ்த்தி வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், ஸ்ரீராம். பெரும்பாலும் சனிக்கிழமை நாங்கள் வசிக்கும் ஊரான எடக்கராவிற்கு பைக்கில் வருவேன். சனிக்கிழமை விடுமுறையாக இருந்தால் வெள்ளி இரவு வருவேன். மீண்டும் திங்கள் கிழமை காலை வசிக்கும் ஊரான எடக்கரா விலிருந்து பாலக்காடு, மாத்தூரில் இருக்கும் பள்ளிக்குச் செல்வேன். இது விடுமுறை தினங்களைத் தவிர்த்து. கோடை விடுமுறைகளில் சில சமயம் இடையில் போய் வர வேண்டியிருந்தது. 4 மணி நேரம் எடுக்கும். ஆங்காங்கே நான் நிறுத்தி வந்தால் 5 மணி நேரம் ஆகும் மழைக்காலத்திலும் கூடுதல் சமயம் எடுக்கும். கோடைகாலத்திலும் வெயில் நன்றாகக் குறைந்த பிறகுதான் பாலக்காட்டிலிருந்து கிளம்பி வந்து சேர இரவு தாமதமாகிவிடும். அது ஒரு காலம்.

      வழி எல்லாம் இயற்கைதான். இப்போது வழியில் நிறைய கட்டிடங்கள் கடைகள் பாலங்கள் லாரி பார்க்கிங்க் என்று வந்து இயற்கையை காரில், பைக்கில் சென்றால் பார்த்து ரசிக்க முடியாததாகி இருக்கிறது. ரப்பர் தோட்டங்கள், மலைகள், வயல்கள் ஆறுகள் என்று நிறைய பார்க்கலாம்.

      ஆமாம் மாணவர்களைப் பாராட்ட வேண்டும்.

      //உங்கள் சேவையையும் தலைதாழ்த்தி வணங்குகிறேன்.//

      பெரிதாக எதுவும் செய்ததில்லைதான்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்

      துளசிதரன்

      நீக்கு
    2. காணொளி அருமை. பதிவையே அதில் அடக்கி விட்டீர்கள். //

      காணொளி பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நான் அனுப்பிய குரல் பதிவையும், புகைப்படங்களையும், காணொளிகளையும் தொகுத்து எடிட் செய்து குரல் சேர்த்து செய்தது கீதா.

      துளசிதரன்

      நீக்கு
  2. Voice 1,2,3,4..... என்று அதையும் ஒவ்வொரு பகுதிக்கு வால் போல இணைத்திருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ....ஆ! அதை நீக்க விட்டுப் போச்சு. துளசி இந்த முறை எழுதி அனுப்பலை. எழுத நேரம் இல்லை என்று....அவர் ரொம்ப பிஸி காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுற்றிக் கொண்டே இருக்கார் காலேஜ் பணிகள் வீட்டு ரப்பர் பணிகள் மற்ற பணிகள் என்று. அதனால் குறிப்புகள் வைத்துக் கொண்டு எல்லாமே வாய்ஸில் மொத்தம் 11 ஆடியோ அனுப்பியிருந்தார். அதோடு படங்கள் காணொளிகள் எல்லாம். அதனால் ஒவ்வொரு வாய்ஸையும் கேட்டு பதிவு எழுதி (என் காதுப் பிரச்சனையால் தாமதமாகிடுச்சு நிறைய ஆடியோ/வீடியோ வேலை) அதை காணொளி செய்வதற்காக ஒவ்வொரு வாய்ஸையும் அந்தப் பத்தியில் குறித்து வைத்துக் கொண்டேன்! கடைசில நீக்க நினைச்சு மறந்து போச்சு! ஹிஹிஹி எடுக்கறேன்....இப்ப உக்காந்தா பதிவு எங்காச்சும் அலைன்மென்ட் மாறிடுமோன்னு...ப்ளாகர், ஏர்டெல் நெட் எல்லாமே படுத்தல்!!1 வேலைகள் முடித்துவிட்டு...இல்லேனா அப்படியே போனாலும் போட்டும்...

      கீதா

      நீக்கு
    2. வாலிற்கு கீதா பதில் கொடுத்திருக்கிறார். அதுதான் காரணம்.

      துளசிதரன்

      நீக்கு
  3. உங்கள் சந்திப்பு.... ஆஹா.... ஆனால் எனக்கு எப்போதுமே, அன்று பார்த்த முகங்கள் முழுவதுமாக்க் கால ஓட்டத்தில் மாறி, அந்தக் கால கள்ளமில்லா கவலையில்லா முகத்தைக் காண்பது கடினமே எனத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றங்கள் இருக்கும் தான். அவரவர் ஆரோக்கியம், குடும்பம், சூழலைப் பொருத்து மாற்றங்கள் இருக்கலாம்தான். அன்றைய மாணவர்கள் அன்றைய சில நிகழ்வுகள் அனுபவங்கள் என்று பகிர்ந்த போது அப்போதையவை நினைவுக்கு வந்து இனித்தது. மனம் சிறிது நேரம் அன்றைய வருடங்களுக்குச் சென்று வந்தது.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      துளசிதரன்

      நீக்கு
  4. கால வெள்ளத்தில் சிலர் பரிமளிக்கவில்லை என்றாலும் நம் இளமைக் காலத்தை மீட்டெடுத்து சந்தோஷப்பட ஒரு நல்ல வாய்ப்பு. அருமையான சந்திப்பில் உணவைப்பற்றி எழுதவில்லையா இல்லை மனம் நிறைந்துவிட்டதால் அது பெரிதாகத் தோன்றவில்லையா? பரிசையும் பெரிதாக்க் காண்பித்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என் மாணவர்களுடனான சந்திப்பு. எல்லோரும் ஒருவிதத்தில் நன்றாக இருக்கிறார்கள். அதுவே மகிழ்வான விஷயம்.

      உணவு பிரியாணி. நான் மேடையில் இருந்ததால் மகன் தான் ஃபோட்டோக்கள் வீடியோக்கள் எடுத்தான். அவனும் என்னோடு சாப்பிட உட்கார்ந்ததால் உணவை வீடியோவோ புகைப்படமோ எடுக்க முடியவில்லை.

      பரிசு மேடையில் கொடுத்ததால் கணொளியில் பெரிதாகத் தெரியவில்லை. நீங்கள் சொன்ன பிறகுதான் அது புரிகிறது. அருகில் இருந்து எடுத்திருக்கலாம் அலல்து புகைப்படம் எடுத்திருக்கலாமோ என்று. அதைப் புகைப்படம் எடுத்து அடுத்த பகுதியில் இணைக்கிறேன்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  5. பழைய நினைவலைகளின் சந்திப்பு அருமை.

    மகிழ்ச்சியான தருணங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், கில்லர்ஜி மகிழ்ச்சியான தருணங்கள்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  6. மனதை நெகிழ்விக்கின்ற
    சிறப்பான பதிவு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் துரை செல்வராஜு சார். என்னை நினைவுகூர்ந்து அழைத்த மாணவ மாணவியரை நினைத்து எனக்கும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      துளசிதரன்

      நீக்கு
  7. யோகி என்று சொல்லிக் கொள்ளும் இந்த ஆட்டங்களில் என் மனம் ஈடுபடுவதே இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் அங்கு அமைத்திருக்கும் சிவபெருமான் உருவைத்தான் ஆதி யோகி என்று சொல்கிறார்கள். அவரை அல்ல. நானும் அவரைப் பின்பற்றும் பக்தன் இல்லை. அவர் பேசிய சில கருத்துகள் பிடித்தது. அவ்வளவுதான். ஆட்டம் எல்லாம் இல்லை இது ஒரு ஒலி ஒளிக்காட்சிதான்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி துரை செல்வராஜு சார்

      துளசிதரன்

      நீக்கு
  8. மலரும் நினைவுகள் மிக அருமை.
    ஆசிரியர் மாணவர் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

    மீண்டும் இளமை திரும்பியது போன்ற மாதிரி இருக்கும்.
    காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோதரி கோமதி அரசு. இளமை திரும்பியது போன்றுதான் இருந்தது. மாணவர்களைச் சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது,

      காணொளியும் கண்டதற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

      துளசிதரன்

      நீக்கு
  9. பதில்கள்
    1. ஆம் டிடி.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி டிடி

      துளசிதரன்

      நீக்கு
  10. முன்னாள் மாணவர்களைச் சந்திப்பதும் அளவாவுவதும் மனதிற்கு மிகுந்த மகிழ்வினை அளிக்கும் வல்லமை வாய்ந்தவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். நீங்களும் ஆசிரியர் என்பதால் உங்களுக்கும் இந்த அனுபவங்கள் உண்டு என்பதை என்னால் உணர முடிகிறது.

      நண்பர் கரந்தையார், உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

      துளசிதரன்

      நீக்கு