திங்கள், 31 ஜூலை, 2023

மகன் இங்கு வந்த போது அவனது பயண அனுபவங்கள் - இயந்திரப் பறவையின் பார்வையில் மகனின் மூன்றாவது விழி வழி படங்கள்

 

அமெரிக்காவிலிருந்து மகனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்து அவன் வந்த நாளன்று பங்களூர் விமான நிலையத்தில் மகனைக் காணும் பூரிப்போடு காத்திருந்தோம். அறிவிப்பு பலகையில் விமானம் தரையிறங்கிவிட்டது என்று எழுத்துகள் உருண்டன. மகனின் செய்தியும் வந்தது. ஆஹா! வந்தாச்சு இன்னும் சில நிமிடத் துளிகள். அந்தத் தருணங்களை இப்போது நினைத்தாலும் சுகமான இனிய நினைவுகள்.

அவன் வந்த விமானம் Air India. தரை இறங்கி சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு பயணிகள் வெளியே வர, மகன் வருவான் வருவான் என்று நாங்கள் காத்திருக்க, மகனின் ஒவ்வொரு செய்தியாக வந்துகொண்டிருந்தது. கால்வாசி பயணிகள் வந்துவிட அவ்வப்போது வாட்சப்பில் தொடர்பு கொண்டும், கூப்பிட்டுப் பேசிக் கொண்டும் நிலமை பற்றி தெரிந்து கொண்டோம். அவன் தன் பெட்டிக்காகக் காத்திருப்பதாகவும் இன்னும் வரவில்லை என்றும் சொன்னான்.

அவன் விமானத்தில் வந்த கூட்டம் எல்லாரும் வெளியில் வந்தாச்சு. இவனைக் காணவில்லை. அவனிடமிருந்து அழைப்பு. தன் பெட்டி வரவில்லை என்றும் தன்னுடன் வேறு ஒரு குடும்பமும் காத்திருக்கிறது என்றும். சிறிது நேரத்தில் அவர்களுடைய பெட்டி வந்துவிட்டது பார்த்தால் அவர்கள் வந்த விமானம் வேறு. மகனின் பெட்டி வரவில்லை.

மகனின் Check in பெட்டி ஒன்றுதான். நாங்களும் அங்கிருந்து எதுவும் வாங்கி வர வேண்டாம் என்று சொல்லியதால், தான் அங்கு அருந்தும் தரமான ஜப்பான் Brand Green Tea - மற்றும் உலர் பருப்புகள், உலர் பழங்கள் கொஞ்சம் இவ்வளவுதான் கொண்டு வந்தான். இந்தப் பெட்டி கொண்டு வந்ததற்குக் காரணமே இங்கிருந்து நான் செய்வதை எடுத்துச் செல்லத்தான்.

அதன் பின் அவனிடம் இருந்து செய்தி எதுவும் இல்லை. அழைத்தாலும் எடுக்கவில்லை. ஒரு மணி நேரம் மேல் ஆகியிருந்தது.  பயணிகள் வெளி வரும் பகுதி வெறிச்.

இவன் அங்கிருந்த அதிகாரியைத் தொடர்பு கொள்ள, அவர்கள் முதலில் சரியாகப் பதில் சொல்லவில்லை. அதன் பின் இவன் தன் பெட்டியை செக்கின் செய்யவில்லை என்று அவர்கள் சொன்னதும் இவனுக்கு அதிர்ச்சி.

அதிகாரியிடம் தன் மின்னஞ்சல்களைக் காட்டியிருக்கிறான். அமெரிக்காவில் இவன் Detroit ல் ஏறிய விமான நிலையத்தில் - United Airlines டெட்ராய்ட் - சிக்காகோ உள்ளூர் விமானம் ஆனால் ஏர் இந்தியாவுக்குக் கை கொடுக்கும் செர்வீஸ் - Check-in செய்தபோது பங்களூர் வரை Check in செய்தாச்சு Tag போட்டாச்சு என்று வந்த மின்னஞ்சல் செய்தி. அதே சமயம் சிக்காகோவிலிருந்து தில்லி - பங்களூர் வரை ஏர் இந்தியா விமானம் என்பதால் மீண்டும் பெட்டியை Check in செய்ய வேண்டும் என்று சொல்லிய செய்தி. மகன் சிக்காகோவில் பங்களூர் வரை Check in செய்து Tag போட்டாச்சு என்ற மின்னஞ்சல்.

தில்லி வந்தாச்சு. அங்கும் இவனுக்கு மின்னஞ்சல் வந்திருக்கிறது, தில்லி விமான நிலையத்திலிருந்து இவன் பெட்டி check in பங்களூர் வரை ஆயிற்று என்று. அப்போ பெட்டி எங்கு மாட்டிக் கொண்டது என்று இவனுக்கு அதிர்ச்சி.

"தில்லியில் Terminal மாறும் போது நீங்கள் பெட்டியை கன்வேயர் பெல்டில் இருந்து எடுத்து வந்து மீண்டும் செக்கின் செய்தீர்களா" என்று கேட்டிருக்கிறார் அதிகாரி. இவன் தன் மின்னஞ்சலைக் காட்டிச் சொல்லியிருக்கிறான் தன் பெட்டி Check in ஆகிவிட்டது என்று செய்தி வந்தது என்று. 

சிக்காகோவில் மீண்டும் Check in செய்ய வேண்டும் என்று சொன்னார்கள், விமானம் மாறியதால், ஆனால் தில்லியில் அப்படிச் செய்தி சொல்லவில்லை. ஆனால் மின்னஞ்சல் வந்தது 'உங்கள் பெட்டி Check in செய்தாகிவிட்டது' என்று. அதே விமானம் தானே என்பதால் நானும் அப்படி எடுத்துக் கொண்டுவிட்டேன்' என்று.  அந்த அதிகாரி இவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டார்.

அவனுக்கு, இங்கு வரை வந்தும் வெளியில் காத்திருக்கும் எங்களுடன் சந்தோஷப்பட முடியாமல் மணித்துளிகள் வீணாகிறதே என்று.  ஃபோனில் புலம்பித் தள்ளிவிட்டான்.

அந்த அதிகாரி, தில்லி விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு, அவர்கள் அப்படி மின்னஞ்சல் அனுப்பியதைத் தெரிந்து கொண்டு, ஆனால் பெட்டி அங்கு இருப்பதைத் தெரிந்து கொண்டதும், மகனை அழைத்து, அவர்கள் அப்படி செய்தி அனுப்பினாலும் நீங்கள் தான் பெட்டியை எடுத்து மீண்டும் Check in செய்திருக்க வேண்டும், என்று சொல்லி, "நான் Check in செய்யத் தவறிவிட்டேன், என்று குறிப்பிட்டு, அதை அனுப்பித் தருமாறு கேட்டு எழுதிக் கொடுக்கச் சொல்லிட இவனும் விவாதம் செய்யாமல் முகவரி எல்லாம் எழுதிக் கொடுத்திட, 24 மணி நேரத்திற்குள் பெட்டி வந்துவிடும், அப்படி வரவில்லை என்றால் தொடர்பு கொள்ளச் சொல்லிட, ஒரு வழியாக 2 1/2 மணி நேரத்திற்குப் பிறகு வெளியில் வந்தான்.  நான் சொன்னேன் தில்லி Port of Entry இல்லையா அதனால செய்திருக்கணுமா இருக்கும், இனி கவனமா இரு என்று.

மகன் எப்போதுமே தன் முக்கிய உடைமைகளை, கோப்புகளைத் தன் கைப்பையில்தான் வைத்துக் கொள்வான். பெட்டி வந்தால் வரட்டும் போனால் போகட்டும். யாருக்கேனும் அதிலுள்ள பொருட்கள் பயனுள்ளதாக இருந்தால் சரி என்ற எண்ணமும். மறு நாள் மாலை பெட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தது! அவர்களது பணியைப் பாராட்டி, நன்றி சொல்லி அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினான். 

டெட்ராய்ட் லிருந்து, சிக்காகோ வரை, பயணிகளில் அதிகம் பேர் அந்த ஊர்க்காரர்கள்தான். எனவே Gate ல் ஒழுங்காக வரிசையில் நின்று விமானத்தில் ஏறினார்களாம். ஆனால் சிக்காகோவில் விமானப் பயணிகளில் 90% நம் நாட்டவர்கள். தள்ளு முள்ளு, இரு வரிசைகளாம். ஒரு வரிசையில் முன்னால் குழந்தைகளை  நிற்கச் செய்து அந்த வரிசை சீக்கிரம் நகர்ந்தால் தாங்கள் சென்று சேர்ந்து கொள்ளுதல் (திருப்பதி வரிசை போன்று) என்றும், நீ இங்கு எப்படி வந்தாய் நான் முன்னால் போக வேண்டும் என்றும் ஒரே களேபரமாம்.

துண்டு போட்டு இருக்கை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை, எப்படியும் நம் இருக்கை பதிவு செய்யப்பட்ட ஒன்று. அப்படி இருந்தும் இப்படி அசிங்கமாக நடந்துக்கறாங்க என்று ஆதங்கப்பட்டான். எல்லாரும் ஒழுங்காக வரிசையில் வர வேண்டும் என்று அறிவிப்பு வந்ததும்தான் கொஞ்சம் ஒழுங்கானார்கள், ஒரு மாதிரி இருந்தது என்றான். 

11 நாட்கள்தான் தங்கியிருந்தான் என்றாலும் ஒவ்வொரு நொடியும் எங்களோடு நேரம் செலவழித்தான் இனிய நினைவுகள். வரும் போது ஒரு பெட்டியுடன் வந்தவனுக்கு கடைசியில் இங்கு வீட்டில் இருந்த இழுத்துச் செல்லும் ஒரு பெரிய Bag ம் சேர்ந்திட 2 Check In ஆனது. ஒவ்வொரு பெட்டியிலும் 23 கிலோ அனுமதிக்கப்படும் - பெட்டி எடை உட்பட. 

அவன் கொண்டு வந்த பெட்டியே 4 கிலோ. வீட்டிலிருந்த இழுக்கும் Bag 3 கிலோ. 4 கிலோ என்றே கணக்கிட்டுக் கொண்டோம். பொருட்கள் வைக்க வேண்டும். எடை கூடிப் போனால் பிரச்சனை ஆகுமே. எனவே எல்லாம் கணக்கிட்டு நான் செய்து கொடுத்தது 37 கிலோ! இரு luggage ம் சேர்ந்து 44 கிலோதான்.

எல்லாம் வீட்டில் செய்த உடனடி தயாரிப்புகள், சில ஊறுகாய் வகைகள். எல்லாமே வீட்டிலேயே Vacuum Packing. இரு பெட்டிகளின் எடையையும் சமாளிப்பது கஷ்டம் என்று என்னைத் திட்டி அங்கலாய்த்தாலும் எடுத்துக் கொண்டுதான் சென்றான்!!!! நான் இங்கு பயன்படுத்திய குழிப்பணியாரச் சட்டியைப் பெட்டியில் போட்டிருந்தேன். மகன் அங்கு சென்றதும் வீட்டில் தயாரித்த சிறுதானிய குழிப்பணியாரப் பொடியைப் பயன்படுத்தி குழிப்பணியாரம் செய்து சாப்பிட்டிருக்கிறான்!

இப்ப திட்டுடா பார்ப்போம்ன்னு சொன்னா, எல்லாம்.....ஓகே ஒகே..அத்த வுடும்மா...என்று சமாளிப்பு!!!

மகனின் புகைப்படம் இது அவன் இப்போது வேலை செய்யும் இடத்தில் முகநூலில் பகிர்ந்த படம். அவனுக்குத் தன்னைப் படங்கள் எடுத்துப் பகிர்வதில் விருப்பம் இல்லை என்பதால் எடுப்பதும் இல்லை.  

 ***********
மகன் விமானத்திலிருந்து எடுத்த படங்கள் இங்கு விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்ததும் காட்டி - எனக்கும் அவனுக்கும் கிட்டத்தட்ட ஆர்வங்கள் ஒரே போன்று - வீட்டுக்கு வந்ததும் கணினியில் சேமித்தும் வைத்து விட்டான்.  இதோ உங்கள் பார்வைக்கு...

வடதுருவம் படங்கள்...




************

மகன் விமானத்தின் வலப்புறம் இருக்கைகளில் ஜன்னல் இருக்கை. விமானம் நம் நாட்டிற்குள் வந்ததும் இமயமலைப் பகுதியின் மேலே பறந்த போது எடுத்த படங்கள். அவன் படம் எடுக்கத் தொடங்கிய....

அதே சமயம், விமானியின் குரல். உங்களின்  வலது புறம் கீழே தெரிவது கஞ்சன்ஜங்கா - என்று. அடர்த்தியாகப் பனி இருக்கும் படங்கள். இதில் எது கஞ்சன்ஜங்கா? தெரிவதில் எது கூம்பாக கொஞ்சம் உயரமாகத் தனித்து தெரியுதோ அதுதான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் மகன். அதன் பின் அதைக் கடந்ததும் பனி குறைந்து இருப்பதும் தெரிகிறது இல்லையா? 






அடுத்த பதிவு துளசி எழுதுவாரா? இல்லை நான் எழுத வேண்டுமா என்று இன்னும் முடிவாகவில்லை!! சரி பார்ப்போம். முந்தைய பதிவுகளை வாசித்தவர்கள், கருத்து சொன்னவர்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி.


------கீதா



43 கருத்துகள்:

  1. விமான நிலைய அனுபவத்தால் சற்றே மகிழ்ச்சியை குழப்பி விட்டது உங்களுக்கு....

    படங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா, அவன் வெளிய வர தாமதித்ததில், பெட்டி வரலையே ந்னு ஆனால் அதில் ஒன்னும் முக்கியமாக எதுவும் இல்லை என்பதால்...நீ வெளில வா என்று சொல்லி அதன் பின்னும் அவனுக்குத்தான் கொஞ்சம் மனம் கஷ்டமாகிவிட்டது எங்களுக்காகக் கொண்டுவந்தவை என்பதால்.

      படங்கள் அப்படியே விமானம் நகரும் போது எடுத்தவை....கூர்ந்து பார்த்தால் வித்தியாசம் தெரியும் கில்லர்ஜி.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்கள் மகன் வரவால் மிகவும் சந்தோஷ மடைந்து விமான நிலையத்திற்கு சென்ற தங்களுக்கு அவர் வெளியில் வர தாமதமான ஒவ்வொரு நொடியும் எவ்வளவு பரபரப்பாக இருந்திருக்குமென்பதை என்னால் உணர முடிகிறது.

    நல்லவேளை.. எப்படியோ அவர் கொண்டு வந்த பெட்டி பத்திரமாக வீட்டிற்கே வந்து சேர்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். என்ன இருந்தாலும், அவர் உங்களுக்காக பார்த்துப் பார்த்து வாங்கிய பொருட்கள் அல்லவா? பெட்டி, மற்றும் அதனுள்ளிருக்கும் பொருட்களின் விலையை விட அந்த அன்பின் விலை மிக, மிக அதிகமல்லவா?

    அவர் குறுகிய நாட்கள் தங்களுடனிருந்து விட்டு திரும்பிச் சென்றதும், வீடே வெறிசென ஆகியிருக்கும். என்ன செய்வது? இப்படியான சில நேரங்களை தவிர்க்க இயலவில்லை. (என் அனுபவமும் இதில் சேருகிறது.)

    தங்கள் மகனின் புகைப்படமும், அவர் விமானத்தில் வரும் போது எடுத்த படங்களும் அழகாக உள்ளன. விமானத்தில் இருந்து பார்க்கும் போது அந்த பனி படர்ந்த பிரதேசங்கள் என்ன ஒரு அழகாக இருந்திருக்கும்....! அதை ரசிப்பதே ஒரு சுகானுபவம் இல்லையா? நானும் படங்களை கண்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கமலாக்கா...எப்படா நம்ம பையன பார்ப்போம்னு....ஆமாம் கடைசியில அவன் கொண்டு வந்த பெட்டி வந்துவிட்டது பத்திரமாக. உண்மைதான் அக்கா அன்பாக வாங்கியப் பொருட்கள் திங்கற சாமான்கள்.

      கமலாக்கா உங்கள் மகனும் வந்தால் கொஞ்ச நாட்கள்தான் இருந்துவிட்டுச் செல்ல முடிகிறது இல்லையா...ஆமாம் உங்கள் அனுபவமும் இதில் சேர்கிறது. அதன் பின் அடுத்து அவங்க வரதை ஆவலொடு எதிர்பார்த்துட்டு இருக்கணும்...

      மேலிருந்து பார்க்கறப்ப ரொம்ப அழகா இருந்தது என்றான். ரொம்ப ரசித்ததாகவும் சொன்னான் அதற்காகவே தானே ஜன்னல் இருக்கையைத் தேர்ந்தெடுத்துவிடுவான்.

      படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  3. மகனுடன் சில நாட்கள் முழுமையாகச் செலவழித்ததில் மகிழ்ச்சி

    வேக்குவம் பேக்கிங் வீட்டிலேயே எப்படிச் செய்தீர்கள்?

    எப்படியோ...இந்திய உணவைக் கொடுத்து அனுப்பிவிட்டீர்கள்.

    படங்கள் அழகு. கொஞ்சம் கொஞ்சம் தாமதித்து எடுத்திருந்தால் நிறைய எடுத்திருக்கலாம். மகன் புகைப்படம் என்று சொல்லி யாரோ ஒரு டாக்டரின் புகைப்படத்தைப் போட்டுவிட்டீர்கள் போலிருக்கு ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகனோடு செலவழித்ததில் மகிழ்ச்சி கூடவே எப்ப சேர்ந்திருக்கும் வாய்ப்பு வருமோன்னு அடுத்து மனசு...மனசுக்கென்ன அதுபாட்டுக்கு ஆசைகளை வளர்த்துட்டே போகுது, நெல்லை.

      ஆமாம் நெல்லை வேக்குவம் பேக்கிங்க் வீட்டில்தான்.

      ஆமாம் அவனுக்கு சட்டுன்னு செய்யறாப்ல நிறைய கொடுத்துவிட்டுருக்கிறேன்.

      ஆமாம் நெல்லை அவ்ன கீழபார்த்துட்டே அப்படியே தொடர் க்ளிக்ஸ்....

      //மகன் புகைப்படம் என்று சொல்லி யாரோ ஒரு டாக்டரின் புகைப்படத்தைப் போட்டுவிட்டீர்கள் போலிருக்கு ஹா ஹா.//

      சிரித்துவிட்டேன்....கூடவே உங்ககிட்டருந்து இப்படிச் சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்!!!!!

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  4. நன்கு வசதி படைத்தவர்கள் , அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பொதுவாக வசதி குறைந்த ஏர் இந்தியாவில் பயணம் செய்வதில்லை . குறைந்த காலம் தங்கும் இந்தியர்களும் பணத்துக்கு கணக்கு செய்யும் இந்தியர்கள் மட்டுமே ஏர் இந்தியாவில் பிரயாணம் செய்வார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சக்ரா, உங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி

      போகும் போது கத்தார் Air ways ல் சென்றான்.

      மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு, Chakra

      கீதா

      நீக்கு
  5. காத்திருக்கும் கஷ்டம் ரொம்பக் கஷ்டம்.  அதிலும் இதோ வந்தாச்சு இன்றியோருக்கும்போது ஏதோ அர்த்தமில்லா காரணங்களால் அது நீளும்போது வரும் எரிச்சலும் கோபமும்....இத்தனை வருடங்கள் கழித்து வந்தும் பதினொன்றே நாட்கள்தான் என்பது..  உங்கள் ஆதங்கம் புரிகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் ஸ்ரீராம். ஆமாம் 11 நாட்கள் ஆதங்கம் என்ன செய்ய? அவன் தொழில் அப்படி. எவ்வளவோ திட்டமிடுகிறான் அவன்...பார்ப்போம் நல்லது நடக்கும் என்று...நம்புவோம். வந்த தினங்களில் ரொம்பவே ரிலாக்ஸ்டாக எங்களோடு நேரம் செலவழித்தான்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. அப்போ இந்த ஆட்டோமேட்டிக் மெசேஜை எல்லாம் நம்பக கூடாது போல..  இருக்கிற எல்லா பயணியர் நம்பருக்கு தர்மத்துக்கு மெசேஜ் அனுப்பி குழப்பிடுவாங்க போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அப்படித்தான் தோன்றியது ஸ்ரீராம் அட்டோமெட்டிக்காக இருந்திருக்குமோ என்று. மகனிடமும் சொன்னேன். இனி ஒவ்வொரு முறை இப்படி இறங்கி ஏறும் போது கேட்டுக்க என்று. அப்ப அவன் சொன்னான் கத்தார், எமிரெட்ஸ், எத்தியாட் எல்லாம் கரெக்ட்டா சொல்லிடுவாங்க என்று. அவன் போகும் போது கத்தார். அவன் சொன்னான், இடையில் ட்ரான்சிட்டில் கத்தார் அவங்க அழகா தெளிவா மெயில் அனுப்பினாங்க. என்று. அது போல சிக்காகோவிலும்....வரும் போதும் சிக்காகோவில் சரியா தெளிவா சொல்லிருக்காங்க. இங்கு தில்லி வந்த பிறகுதான்...இப்படிக் குழப்பங்கள் ஏற்படுமாம்....மகனிடம் சொல்லிட்டேன் இனி எங்க போனாலும் நீ கவனமா இரு இருன்னு.

      முன்னபின்ன அனுபவம் இல்லாம நம்ம ஊர்க்காரங்க இப்படித் தனியா பயணித்தால் எப்படி இருக்கும்னு எப்படிப் புரிஞ்சுக்குவாங்க.....கொஞ்சம் கஷ்டமதான். ஆனா இப்பல்லாம் உதவறதுக்கு ஆள் இருக்காங்கன்னு சொல்றாங்க

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  7. இந்தியர்களின் ஒழுங்கின்மை சங்கடமாக இருக்கிறது.    ஆனால் ரொம்ப ஒழுங்காக இருந்தாலும் போர் அடித்து விடும் இல்லையா?  சொர்க்கமே என்றாலும் நம்மூரு ஒழுங்கின்மை போலாகுமா என்றெல்லாம் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் இது பலரும் சொல்லும் ஒன்று. ஹாஹாஹா நாம இப்படிப் பார்த்துப் பழகினவங்களுக்கு அது போரடிச்சுடுமோ!!! ஆனால் இப்படி இருந்தா நமக்கு எழுதறதுக்கு ஏதாச்சும் கிடைக்குது பாருங்க.

      // சொர்க்கமே என்றாலும் நம்மூரு ஒழுங்கின்மை போலாகுமா என்றெல்லாம் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்!//

      ஹாஹாஹாஹா அதேதான்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. மகனின் அனுபவம் சாதாரணமாக ஏற்படுவது தான். ஆனால் அதனை சுவைபட கூறுவது தனி திறமை. வந்த விமானம் பனி படர்ந்த இடங்களின் மேலே பறந்து வந்ததை படம் எடுத்து வெளியிட்டது நன்றாக உள்ளது.

    பறந்த வழி ரசியாவிற்கு மேலே என்று நினைக்கிறேன். நினைக்கும் பொது கொஞ்சம் திக் என்று இருந்தது.

    துபாய் வழியாக எமிரேட்ஸ் விமானத்தில் வந்திருக்கலாம். துபாய் ட்ரான்ஸ்பெர் மாத்திரம் தான்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகனின் அனுபவம் சாதாரணமாக ஏற்படுவது தான். ஆனால் அதனை சுவைபட கூறுவது தனி திறமை. வந்த விமானம் பனி படர்ந்த இடங்களின் மேலே பறந்து வந்ததை படம் எடுத்து வெளியிட்டது நன்றாக உள்ளது.//

      வசிஷ்டர் வாய் பிரம்ம ரிஷி பட்டம்!!!!! ஹாஹாஹாஹா ஜெகே அண்ணா மிக்க நன்றி!

      ஆமாம் இதெல்லாம் சகஜம்தான். நமக்கு இது முதல் தடவை. ஆனால் தில்லியில் Port of entry இல்லையா அதனால் செய்திருக்க வேண்டும். அது போலத்தானே அமெரிக்காவில் உள்ளே நுழைந்து முதலில் இறங்கும் நிலையத்தில் எடுத்து உள்ளூர் விமானத்தில் செக்கின் செய்வது. இங்கு அதே விமானம் என்பதால் மகன் விட்டிருக்கிறான். கவனமாக இருக்கச் சொல்லியிருக்கிறோம்.

      ஆமாம், வடதுருவம் வழியாக........, ரஷ்யா மேலே எனும் போது பயமாகத்தான் இருந்தது எங்களுக்கும் ஆனால் நாங்கள் உடனே மேப் பார்த்தோம் மாஸ்கோவிலிருந்து தள்ளித்தான், கஜகஸ்தான், வழி வந்து காஷ்மீர் முனையில் உள் நுழைகிறது. ஆங்கில எழுத்து சி யை கவிழ்த்திப் போட்டால் எப்படியோ அப்படியான வழி.

      எமிரேட்ஸ் டிக்கெட் ரொம்ப விலை அண்ணா அவன் வந்த போது. போகும் போது கத்தார் விமானம். அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  9. //பெட்டிக்காகக் காத்திருப்பதாகவும் இன்னும் வரவில்லை என்றும் சொன்னான்.//

    மகனின் வருகைக்கு காத்து இருக்கும் போது இப்படி செய்தி வந்தால் ஏமாற்றமாக இருந்து இருக்கும். எப்போது மகனை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு கூடி கொண்டே இருக்கும்.
    எப்படியோ பெட்டி வந்தது மகிழ்ச்சி.
    அதற்குதான் பெட்டியில் முகவரி வைத்து இருப்போம். முகவரி பார்த்து அனுப்பி விடுவார்கள். என் மருமகளின் அம்மாவுக்கு இப்படி ஒரு முறை நேர்ந்து இருக்கிறது.

    11 நாள் என்பது வெகு விரைவில் பறந்து இருக்கும்.
    மகனுக்கு இன்னும் இன்னும் என்று கொடுத்து விட ஆசைதான் இல்லையா கீதா , அளவு தடுக்கிறதே!

    பூனைகுட்டியை அன்புடன் எடுத்து வைத்து இருக்கும் மகன் படம் அருமை.
    மகன் எடுத்த படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா. கணவர் கொஞ்சம் மொட்டைத்தலையைப் பார்த்தாலே அதோ வந்துட்டான் பாரு அவன் தானேன்னு சொல்லிக் கொண்டே இருந்தார். நமக்குத் தெரியுமே நம்ம பிள்ளைய...

      ஆமாம் பெட்டியில் மேலும் முகவரி வைத்திருந்தான். இப்போதெல்லாம் பெட்டிக்கு பூட்டு போடக் கூடாதாமே...ஓ உங்கள் மருமகளின் அம்மாவுக்கும் இப்படியானது....இது பெரும்பாலும் இப்படி நடக்கிறதுதான் இல்லையா....பலருக்கும்

      ஹையோ அதை ஏன் கேக்கறீங்க கோமதிக்கா...ஹையோ அது வைக்கலையேடா இது வைக்கலையேடா செஞ்சிடவா கொஞ்சமா வாச்சும் தரேனேடா என்று நான் புலம்பினாலும், கிளம்பும் அன்றுதான் ஃபுல் பாக்கிங்க் செய்தோம் அதுவரை குளிர்சாதனப் பெட்டியில் ஊறுகாய்கள்...புளிக்காய்ச்சல்கள்....அவன் சித்தப்பா பையனுக்கும் செய்திருந்தேன் ஆனால் அவை இவன் பெட்டியில் ஏறாது தனியாக அனுப்பினோம்.
      நான் அளந்து அளந்து செய்ததால்....வீட்டில் பொருட்கள் எடை பார்க்கும் மெஷின் இருக்கு. கேக் செய்ய அளந்து போடணுமே முன்பு அடிக்கடி செய்ததால்....வாங்கியிருந்ததால்...அதில் வைத்து அளந்து அளந்துதான் செய்தேன். அதுமிகச் சரியாக பெட்டிகளில் நிரம்பி, செக்கின் செய்த போதும், சரியாக இருந்ததாகச் செய்தி அனுப்பினான். வெளியில் நாங்கள் நின்று கொண்டு இருந்தோம் அவன் கேட் செல்லும் வரை. ஒரு வேளை ஏதேனும் கூடிவிட்டால் அவன் எடுத்து தந்துவிடலாமே என்று. இதுவரை அப்படி ஆனதில்லை என்றாலும்...

      //பூனைகுட்டியை அன்புடன் எடுத்து வைத்து இருக்கும் மகன் படம் அருமை.//

      அவன் அறுவை சிகிச்சை செய்த பூனையைக்கையில் வைத்துக் கொண்டிருக்கிறான். அவன் கல்லூரி மருத்துவமனை முகநூலில் போட்ட படம். நான் முகநூலில் இல்லை. எனக்கு இதைச் சொன்னதே மகனின் பெரியப்பா பெண் தான். பூனையின் பெயர் ஹர்புர் என்று நினைக்கிறேன். போராடிச் செய்த அறுவை சிகிச்சை என்று தகவல் இருந்தது. மகன் இதைப் பற்றிச் சொல்ல மாட்டான் என்னிடமும் சரி யாரிடமும். தன்னைப் பற்றிய யாரேனும் பாராட்டிய விஷயங்கள் எதுவும் சொல்ல மாட்டான். யாரேனும் இப்படி இணையத்தில் அறிந்து எனக்குச் சொன்னால்தான் உண்டு. அல்லது அவன் பெயரைத் தட்டி நான் கூகுளில் தேடினால் உண்டு.

      மகன் எடுத்த படங்கள் நன்றாக இருக்கிறது.//

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  10. உங்கள் பேக்கிங் பற்றி தெரியாதா என்ன.. செம பேக்கிங்.என்னென்ன செய்து கொடுத்தீர்கள் என்று ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கலாம். வெரைட்டீஸ் ஆக செய்ய யோசிப்பவர் நீங்கள். நீங்கள் ஒரு ஆவக்காய் ஊறுகாய் ஸ்பெஷலிஸ்ட், புளிக்காய்ச்சல் அருமையாக செய்வீர்கள்... அப்புறம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஹையோ கூச்சமாக இருக்கிறது. என்றாலும் உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

      //நீங்கள் ஒரு ஆவக்காய் ஊறுகாய் ஸ்பெஷலிஸ்ட், புளிக்காய்ச்சல் அருமையாக செய்வீர்கள்... அப்புறம்?//

      ஹாஹாஹாஹா அப்படி எல்லாம் இல்லை ஸ்ரீராம். அப்புறம் எதில் என்றால் எனக்கு எப்படிச் சொல்வது? அது மத்தவங்க சாப்பிட்டுப் பார்த்துச் சொல்வதுதானே....இல்லையா?

      ஸ்ரீராம் அது அவனுக்குப் பேக்கிங் வேக்கும் கவர்கள் மற்றும் பேக்கிங்க பாலிதீன் கவர்களில் போட்டு அதை வீட்டில் சாமான் வாங்கும் போது சிலவற்றை சேகரித்து வைத்திக்கும் கவர்களில் பொதிந்து பெட்டியில் அடுக்கிவிடுவதுதான். அட்டைப்பெட்டி அவனுக்கு வேண்டாமே....அது நாம் தனியாக யாருக்கேனும் அனுப்புவது என்றால்.

      கொடுத்துவிட்ட சாமான்கள் என்ன என்ன என்று இங்கு சொன்னால் பெரிதாகிவிடும் பதிவில் சொல்லியிருந்தாலும் பெரிதாகியிருக்குமே...எனவே அதைத் சில்லு சில்லாய் பதிவுல் சொல்கிறேன்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. மகனின் வருகையினால் மணித்துளிகள் இனிமையாகி இருக்கின்றன..

    நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை அண்ணா. இருந்தன அவன் வந்து ஊருக்குப் போயாச்சே...அவன் வந்த சமயத்தில் இணையம் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை!!!!!

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  12. படங்கள் அருமை. மறுபடியும் இமயத்தின் படங்கள். கவர்கிறது... செல்லும் ஆசை வருகிறது! பையன் கையில் ஒரு செல்லம். அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் மேலிருந்து இமயத்தைப் பார்க்க அது தனி அழகு என்றான் மகன். கண்டிப்பாகப் போக வேண்டும் ஸ்ரீராம். நம்ம மெய்சிலிர்க்க வைத்துவிடும். பிரம்மாண்டம். அது பற்றியும் சொல்கிறேன் பதிவில்.

      அவன் கையில் செல்லம் பூனாச்சு அவன் அறுவை சிகிச்சை செய்து விட்டு தன் கையில் வைத்துக் கொண்டிருக்கிறான்....கொஞ்சம் கஷ்டமான அறுவை சிகிச்சை போலும். கோமதிக்கா கருத்தில் சொல்லியிருக்கிறேன்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  13. இன்றைய இந்தியர்களின் ஒழுங்கின்மை தான் உலகப் புகழ் பெற்றதாயிற்றே!..

    எப்படியோ நல்லவிதமாக பெட்டி கைக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சிலர்...நல்லவங்களும் இருக்காங்கதான். ஆமாம் பெட்டி கைக்கு வந்தது மகிழ்ச்சிதான். இல்லை என்றாலும் போகட்டும் என்றே விட்டுவிட்டோம்...யாருக்கேனும் உபயோகமாக இருந்தால் நலல்து என்றே. பொருட்கள் மீண்டும் வாங்கிக் கொள்ளலாம்...முக்கியமான கோப்புகள் எதுவும் அதில் இல்லை.. என்பதால் சமாதானம்

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  14. /// படங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கிறது.. ///

    கில்லர் ஜி அவர்களின் கருத்தா இது!?..

    மேகப் பொதிகளும் நீலக் கடலின் நீள் பரப்பும் வெகு நேர்த்திற்கு ஒரே மாதிரி தானே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேகப் பொதிகளும் நீலக் கடலின் நீள் பரப்பும் வெகு நேர்த்திற்கு ஒரே மாதிரி தானே!..//

      ஆமாம்....ஆனால் அதுவும் ஒரு அழகுதான் இல்லையா துரை அண்ணா....இயற்கையின் படைப்பில் எதைக் குறை சொல்ல முடியும்!!!!

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு

  15. விமானப் பயணம் என்றாலே பிரச்சனைகள் அதான் அதிலும் லக்கேஜ் கொண்டு வரும் போது இப்படிபட்ட சம்பவங்கள் ஏற்படுவதுண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மதுரை....உண்மைதான் சில சமயங்களில் இப்படி ஆவதுண்டு.

      மிக்க நன்றி மதுரை

      கீதா

      நீக்கு


  16. ஆமான் 11 நாளில் உங்கல் பிள்ளையை அனுப்ப எப்படி உங்களுக்கு மனசு வந்துச்சு விடுமுறை அதிகம் கிடைக்கவில்லையா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி மனசு வரும், மதுரை? சேர்ந்திருக்கத்தான் ஆசை அவனுக்கும் எங்களுக்குமே....ஆனால் அவன் பிழைப்பு அங்குதானே. இப்ப. விடுமுறை அதிகம்கிடைக்கலை மதுரை. இவன் தொழில் அப்படியாச்சே. இன்னும் கொஞ்சம் வருடங்கள் அனுபவம் ஆனால்தான் கொஞ்சம் அதிக நாட்கள் விடுமுறை எடுக்க இயலும் போலும். அதுவும் இப்ப வந்தது விசா ஸ்டாம்பிங்க்...

      மிக்க நன்றி மதுரை

      கீதா

      நீக்கு

  17. உங்கள் பிள்ளைக்கு லெமன் ஊறுகாய் பிடிக்கும் என்றால் சொல்லுங்க நான் அனுப்பி வைக்கிறேன் நான் செய்யும் ஊறுகாய் இங்கே உள்ளவர்களிடம் பிரபலம் நண்பர்களின் வீட்டிற்கு போகும் போது எல்லோரும் பழம் அல்லது ஸ்வீட் அல்லது பூங்கொத்து வாங்கி செல்வார்கள் ஆனால் நான் இப்போது ஊறுகாய செய்து கொண்டு போனேன் அவர்களுக்கு அளவில்லா சந்தோஷம் அதில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி மதுரை. அவனுக்கு எல்லா ஊறுகாயும் பிடிக்கும் தான் மதுரை. ஆனால் ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதில்லை. நான் கால் கிலோ அனுப்பினாலே அதுவே வருடம் முழுவதும் இருக்கும் அவனுக்கு.

      நீங்கள் ஊறுகாய் நன்றாகச் செய்வது மகிழ்ச்சி. அதுவும் பிராபல்யம்...கைல ஒரு தொழில் இருக்குன்னு சொல்லுங்க!!!!! அதுவும் அங்கு!!

      நானும் அப்படித்தான் யார் வீட்டுக்குச் சென்றாலும் நான் செய்து எடுத்துச் செல்வேன். வயதானவங்க என்றால் அவர்களுக்கு ஒத்துக்கும்னா இப்படியானவை, ஸ்வீட், காரம் அப்படி அல்லது பழங்கள். நாம் செய்து கொண்டு சென்றால் அது நிச்சயமாகச் சந்தோஷம் தரும்..

      மிக்க நன்றி மதுரை.

      கீதா

      நீக்கு
  18. அமெரிக்கா போவது ஒரு ப்ரயத்தனம். ஜென்ம ஸாபல்யம். அங்கிருந்து திரும்புவது, நம்மோடு பெட்டியும் நம் வீட்டுக்கு வந்து சேருவது.. த்ரில்லிங்!

    இருந்தும் அசராமல், விடாமல், பெட்டி, பெட்டியாகக் கொடுத்து அனுப்புவது...ஆஹா... வாழ்க்கை வாழ்வதற்கே - என்பது இப்போது தெளிவாகிவிட்டது..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கஷ்டப்பட்டுதான் தேர்வுகள், practical sessions எல்லம் கடந்து சென்றான்.

      //நம்மோடு பெட்டியும் நம் வீட்டுக்கு வந்து சேருவது.. த்ரில்லிங்! ....இருந்தும் அசராமல், விடாமல், பெட்டி, பெட்டியாகக் கொடுத்து அனுப்புவது...ஆஹா... வாழ்க்கை வாழ்வதற்கே - என்பது இப்போது தெளிவாகிவிட்டது..!//

      ஹாஹாஹாஹாஹா...இங்கருந்து கொண்டு போனா நம்ம வீட்டு சாப்பாடு போல...இவன் வாங்கிச் சாப்பிடும் ரகம் இல்லை. அதற்காக வெளியில் வாங்கிச் சாப்பிடவும் மாட்டான் என்றில்லை. எல்லாம் அவனுக்குக் கிடைக்கும் நேரத்தைப் பொருத்து.

      மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

      கீதா

      நீக்கு
  19. வாவ் அழகான காட்சிகள் அக்கா ...அனைத்தும் அழகு

    அனுபவம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதரி ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனு. காட்சிகளை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

      ஆமாம் அனுபவங்கள் அப்படித்தானே அதுலருந்து நாம பாடமும் கற்கிறோம் இல்லையா?!

      மிக்க நன்றி அனு

      கீதா

      நீக்கு
  20. நானும் விமானத்தில் ஜன்னல் இருக்கை கிடைக்கும் போது படங்கள் எடுத்து இருக்கிறேன், ஒரு நாள் பதிவில் போடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா போடுங்க அக்கா...ரசிக்கலாமே பார்த்து.

      மிக்க நன்றி கோமதிக்கா...

      கீதா

      நீக்கு
  21. படிக்கும்போது எங்களுக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
    பட்டிதொட்டியெல்லாம் சுற்றி கடைசியில் பெட்டி உங்கள் வீட்டிற்கே வந்து சேர்ந்ததை அறிந்து மனதில் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது.
    படங்கள் அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு