கடந்த 6/5/2014 அன்று நம் அன்பிற்குரிய நண்பர் ராஜ சேகரன்
தன் வலைப்பதிவான நண்டு நொரண்டில் “ராமருடன் மோடி உரையாடியது சரியா?” என்று கொடுத்த ஒரு பதிவுக்குப் பின்னூட்டம்
இடச் சென்ற நாங்கள், பின்னூட்டம் பெரிதானதால் அதை ஒரு இடுகையாக்க வேண்டியதானது. அப்படி, உருப் பெற்றதுதான் இந்த இடுகை.
இவ்வுலகில் வென்றோர்கள் எக்காலமும்
வாழ்த்தப்படுவதும், வீழ்ந்தோர்கள் எக்காலமும் இகழ்த்தப்படுதலும் இயல்பே. அது போல் இராம, இராவண யுத்த்த்தில் வென்ற ராமன்
போற்றுதற்குறியவரே! சந்தேகமில்லை. அதற்காக அவர் செய்த தவறுகளைத், தவறல்ல என்று
சொல்லி அவரைப் போற்றிப் பாட வேண்டிய அவசியமில்லை.
அது போல வீழ்ந்த இராவணனைக் கோழையாகக், கயவனாகக் காண வேண்டிய அவசியமும்
இல்லை என்பதே எங்கள் தாழ்மையானக் கருத்து.
இராமர் வாலியை மறைந்திருந்து
கொன்று, உண்மையிலேயே தவறு செய்த சுக்ரீவனுக்கு உதவாமலிருந்தால்......அவரை ஆதர்ஷ
புருஷராக ஒத்துக் கொள்ளலாம்.
அதே போல், இலக்குமணனின் மேலிருந்த தன் விருப்பத்தை (!?) வெளிப்படுத்திய சூர்ப்பனகையின் மூக்கையும், முலையையும் அறுத்த இலக்குமணனை அதைச் செய்ய விடாமல் தடுத்திருந்தால் அல்லது அப்படிச் செய்தது தவறு என்று ஒப்புக் கொண்டிருந்தால்.....அவரைக் கண்டிப்பாக ஆதர்ஷ புருஷராக ஏற்றுக் கொள்ளலாம். இங்கு, ஒரு பெண் தன் விருப்பத்தை ஆணிடம் வெளிப்படுத்துவது தவறா? அதற்கான தண்டனை இதுவா?
ஏதோ ஒரு குடிமகன் சொன்னான் என்பதற்காக, ஒரு நல்ல ஆதர்ஷ அரசன் என்பவன் என்று சொல்லப்படும் ராமர், தன் மனைவி அப்படிப்பட்டவள் அல்ல என்பதை நாட்டிற்கு நிரூபித்து தன் ஆளுமையை நிரூபிக்காமல், கர்ப்பிணியான சீதையை சந்தேகித்துக் காட்டிற்கு அனுப்பாமல் இருந்திருந்தால்.....கண்டிப்பாக அவரை ஆதர்ஷ புருஷராக ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், அவர் அப்படியெல்லாம் செய்யாமல் போனது, அவர் மற்றவர்களுக்காகத் தன் கொள்கைகளைச் சிறிது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. அப்படிப்பட்ட இராமரை எப்படி ஆதர்ஷ ப்ருஷர் என்று ஏற்றுக் கொள்வது?
அதே நேரத்தில், எத்தனைத் துன்பங்களையும், இன்னல்களையும் எதிர்கொள்ள வேண்டி வந்த போதும், பொய் சொல்லமாட்டேன் என்ற தன் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த ராஜா அரிச்சந்திரனை நாம் கண்டிப்பாக ஒரு ஆதர்ஷ புருஷனாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தவிர்க்கப்பட வேண்டியிருந்த இத் தவறுகளைத் தவிர்க்காமல் தவறிழைத்த, இப்படிப்பட்ட இராமரை ஒரு ஆதர்ச புருஷர் என்று ஏற்றுக் கொள்ள ஏனோ இயலவில்லை.

.jpg)

.jpg)

.jpg)
.jpg)

.jpg)

.jpg)