இந்தக் கதை பிறந்த கதை : எல்லாக் கதைகளும் கற்பனையல்ல. சில கதைகள் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டவை. அதை எழுதும் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் ஒரு மன நிறைவு பெரிது.
எங்கள் பகுதியில் நடந்த ஓர் உண்மைச் செய்தியை அடிப்படையாக வைத்துப் புனைந்தது. இதன் தொடர்ச்சிதான் எங்கள் குறும்படம் பரோட்டா கார்த்திக். அதில் நம் வலை நண்பர்கள் திருவாளர் இராயசெல்லப்பா, நண்பர் குடந்தை ஆர் வி சரவணன், திருவாளர் திண்டுக்கல் தனபாலன், கோவை ஆவி நடித்துள்ளனர் என்பதை இங்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்/றோம்.
எங்கள் ப்ளாக் நண்பர் ஸ்ரீராம், ====>“கேட்டு வாங்கிப் போடும் கதை”க்காக<===== எங்களிடம் தனித்தனியாக இருவரிடமிருந்தும் கதை வேண்டும் எனவும், எனது கதையாகிய இந்தக் கதையை அனுப்பலாம் என்று முடிவு செய்தோம். நண்பர் ஸ்ரீராமிற்கும், எங்கள் ப்ளாகிற்கும் எனது, எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நல்ல முயற்சி.
பதிலளிநீக்கு//வங்காளிகளுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும், சிரியா நாட்டு மக்களுக்கும், எகிப்தியர்களுக்கும் நடக்கற கொடுமைங்களுக்கு எதிரா போராடறதுக்கு பதிலா, நம்ம இடத்துல எங்களுக்கு நடக்கற இந்த கொடுமைங்களுக்கு எதிரா // நம்ம ஊர் அரசியல் கட்சிகள் டிரெம்ப், பாலஸ்தீனம், இஸ்ரேல் என்றெல்லாம் போராடுவாங்களே தவிர மக்களுக்காக எப்போது போராடியிருக்காங்க?
என்ன செய்ய, நெல்லைத் தமிழன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச இப்போதெல்லாம் தலைவர்கள் மட்டுமல்ல, அடிமட்டத் தொண்டர்களும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஒன்றுதான் இதெல்லாம். பிறகு செய்யும் தவறுகளின் கனம், அதாவது செய்பவர்கள் நம்முடைய உறவா, கட்சிக்காரரா, நம்மஉடைய நண்பரா என்று பார்த்துதான் அதற்கேற்ப செயல்பாடுகள் என்றாகிவிட்டது. இதை எல்லாம் பார்க்கும் போது பரிதாபமாகவும் வருத்தமாகவும் தான் இருக்கிறது அதாவது இந்த ஆசிவாசிமக்களின் நிலையை.
நீக்குநம்மால் ஒன்றும் செய்ய இயலாத போது ஆதங்கப்பட்டுக் கொள்ளமட்டும்தான் முடிகிறது.
நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
அதிலும் மலைவாசி கிராம மக்களை மனிதர்களாகவே நினைக்காமல் ரொம்பவே அதிகாரம் செய்யறாங்க, போலீஸ் முதல்கொண்டு.
பதிலளிநீக்குசந்தன வீரப்பன் கேசில் அப்படி எத்தனை மலைவாசி மக்களை, அப்பாவி மக்களை போலீஸ் துன்புறுத்தியது என்று படித்தோமே.
ஆதிவாசி மக்கள் survival of the fittest என்று சொல்வது போல அவர்களும் அரிதாகிவருகிறார்கள். மட்டுமல்ல அவர்கள் இயற்கையோடு போராடி காநிலை மாற்றம், வனவிலங்குகள் இஅவற்றை எதிர்கொண்டு வாழப் போராடும் சூழல். அதல்லாமல், நாட்டில் வாழும் மக்களையும் சமாளித்துப் போராட வேண்டியுள்ளது. பலவகை மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில உரிமைகள், அந்த விலை ஒரு போதும் கிழக்காசிய நாடுகளில் வாழ்பவர்களுக்கோ, ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்பவர்களுக்கோ, லத்தீன் அமெரிக்கா நாடுகளில் வாழ்பவர்களுக்கோ கிடைப்பதில்லை.
நீக்குஇதெல்லாம் தெரிந்தாலும் நாம் வருத்தத்துடன் கடந்து செல்லத்தான் முடிகிறது.
நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
மயிலாடி குடியிருப்பு படங்கள், அங்கு உள்ள மக்கள் எல்லாம் ஏஐ மூலம் அருமையாக செய்து இருக்கிறீர்கள். கதையை நன்றாக உணர்வு பூர்வமாக சொன்னது அருமையாக இருக்கிறது. மலைவாழ் மக்களின் வாழ்க்கை இப்படி சிதைக்கப்படுவது கொடுமையான விஷயம்.
பதிலளிநீக்குசுதாகரன் போராட்டம் வெற்றி அடைய வேண்டும். மலைவாழ் மக்கள் கஷ்டங்கள் தீர வேண்டும்.
ஏஐ விஷயங்கள் படங்கள் எல்லாம் கீதா செய்து கொடுத்தார். மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.
நீக்குகதையை நன்றாக உணர்வு பூர்வமாக சொன்னது அருமையாக இருக்கிறது. //
மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு. இப்படிச் சில செய்யலாம் என்ற உத்தேசம் உள்ளது.
// மலைவாழ் மக்களின் வாழ்க்கை இப்படி சிதைக்கப்படுவது கொடுமையான விஷயம்.//
நிறைய கொடுமைகள் நடக்கின்றன. மேலே நெல்லைத்தமிழன் சொல்லியிருப்பது போல்.
மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு
துளசிதரன்
நல்ல முயற்சி.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
நீக்குதுளசிதரன்
/ வங்காளிகளுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும், சிரியா நாட்டு மக்களுக்கும், எகிப்தியர்களுக்கும் நடக்கற கொடுமைங்களுக்கு எதிரா போராடறதுக்கு பதிலா, நம்ம இடத்துல எங்களுக்கு நடக்கற இந்தக் கொடுமைங்களுக்கு எதிரா போராடணும்னு கெஞ்சிக் கேட்டுருக்கோம். //
பதிலளிநீக்குஇந்தக் கர்மம் எப்பவுமே இருக்கு போல... படிபப்டியா பாடம் கத்துக்கிட்டு வழிவழியா நடிக்கறாங்க..
ஆமாம். ஊரெங்கும் இந்த நடிப்பு உள்ளதே ஸ்ரீராம்ஜி. ஐடியாலஜி, மொழி மதம் என்று வெறுப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லோரும் புரிந்து கொண்டு மனிதனாக வாழ முயன்றால் நல்லது. அப்படி ஒரு சூழல் வரும் என்று எதிர்பார்ப்போம்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
கொஞ்சம் குரல் விட்டு பேசி இருக்கலாம் என்பது என் கருத்து. கொஞ்சம் குரல் எடுத்து சப்தமாக... உணர்வுகளுடன் பேச முற்படும்போது குரல் தழைத்து விடுகிறது.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது புரிகிறது. இயன்றவரை கொஞ்சம் உரக்கச் சொல்ல முயற்சிக்கிறேன். அடுத்த குரல் பதிவில்
நீக்குஇதை எடுத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
இந்த சம்பவம் நடந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இப்போது ஏதும் முன்னேற்றம் உண்டா?
பதிலளிநீக்குபெரும்பாலும் அதன் பின் கடந்த பத்தாண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் செய்தித்தாள்களில், சோசியல் மீடியாவில் காணக் கூடிய அளவில் அதிகம் வரவில்லை. சோசியல் மீடியா இதற்கு உதவுகிறதோ என்றும் தோன்றுகிறது. அரசுதரப்பிலும் கொஞ்சம் விழிப்புணர்வு வந்து முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. சோசியல் மீடியா சின்ன நிகழ்வையும் போட்டுவிடுவதால் காட்டுத்தீயாய் பரவி கொஞ்சம் பயம் வந்திருக்கிறதோ வந்திருக்கலாம் என்றும் எண்ண வைக்கிறது. அதனால் ஆதிவாசிகளும் கொஞ்சம் பிழைத்துப் போகிறார்கள் என்றும் சொல்லலாம். எப்படியானாலும் நன்மை விளைந்தால் நல்லதுதானே.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்