கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
****************************************
சில்லு - 1 - Wallowing
Wallowing என்ற சொல்லுக்குத் தமிழில் மூழ்கிக் கிடத்தல் என்று பொருள் என்பது உங்களுக்கும் தெரிந்ததுதான். இதை இரண்டு வகைச் சூழல்களில் பயன்படுத்தலாம்.
ஒரு சோகமான விஷயத்திலோ அல்லது சம்பவத்திலோ அதிலிருந்து மீண்டு
வர முயற்சி செய்யாமல் தொடர்ந்து உழன்று கொண்டிருத்தல்; தன்னைத்தானே பரிதாபமாக நினைத்து
வருந்திக் கொண்டே இருப்பது; குற்ற உணர்விலேயே இருத்தல்; இவற்றைச் சொல்ல இச்சொல்லைப் பயன்படுத்துவதுண்டு.
நேரடி அர்த்தம் - வேனல் காலத்தில் சில விலங்குகள் தங்களைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சேற்றில் அல்லது நீரில் புரண்டு புரண்டு வேனலை எதிர்கொள்ளும். உதாரணமாக யானைகள், காண்டாமிருகங்கள், எருமைகள், பன்றிகள் பற்றிச் சொல்லவே வேண்டாம், இதற்கு Wallowing In Mud - சேற்றில் அல்லது
நீரில் மூழ்கிக் கிடத்தல் என்று சொல்லப்படும். (இதுவும் உங்களுக்குத் தெரிந்ததுதான்)
ஊரில், கோடை விடுமுறையில் நாங்க குளிக்கப் போனா ஆறானாலும்
சரி, குளமானாலும் சரி தண்ணீரிலேயே கிடப்போம். காரணம் கிடைக்கும் வாய்ப்பே அப்படி. வீட்டிலிருந்து யாராவது வந்து, "எருமை மாடுகள்....குளிச்சோமா, வந்தோமான்னு இல்லாம
எருமை மாடு மாதிரி தண்ணிய கலக்கி தண்ணிலயே ஊறிக் கிடக்கறத பாரு" என்று பெருங்குரலில்
ஏச்சு விழும்.
"ச்சே நாம எருமைங்களாவே
இருந்திருக்கலாம் பாரு அதுங்க என்ன சொகமா ஊறிட்டுருக்கு பாரு இந்த வெயிலுக்கு" இது எங்களுக்குள் ரகசியமாக....
அங்கேயே நின்று எங்களைக் கிளப்பிக் கூட்டிக் கொண்டு போவார்கள்.
அதன் பின் கொஞ்ச நாள் விதிமுறைகள் அனுசரிக்கப்படும். மீண்டும் கிணற்றில் தண்ணீர் இறங்கிவிட்டால் வேறு வழியில்லை. குளத்தங்கரையோ, ஆற்றங்கரையோ! சரி மேட்டருக்கு வரேன்..
உண்மையாக, எருமைகள் சுகத்திற்காக நீரில் கிடப்பதல்ல. அப்படிக்
கிடப்பது எருமைகளுக்கு உயிர் வாழத் தேவையான ஒன்று. வெப்பத்தை உறிஞ்சும் அடர் நிறத்
தோலையும், மிகக் குறைவான வியர்வைச் சுரப்பிகளையும் கொண்டிருப்பதால் கோடையில் வியர்த்து
வெப்பத்தைத் தணிக்க முடியாததால், அவை தங்கள் உடல் வெப்ப நிலையைச் சீராக்கவும் தோலைப்
பாதுகாக்கவும், தங்கள் ஆரோக்கியத்தைப் பேணவும் நீரிலோ சேற்றிலோ புரளுகின்றன.
பன்றிகள், காண்டாமிருகங்களும் அப்படித்தான். அவற்றின் தோலமைப்பும்
அதேதான்.
யானைகளுக்கும் இதே காரணம் தான் என்றாலும் யானைகளுக்கோ இந்தச் சேற்றில் புரண்டு விளையாடுவது மிகவும் பிடித்தமான விஷயம்.
யானைகளுக்கும் வேர்வைச் சுரப்பிகள் கிடையாது;
ஆனால் அவற்றின் உடலமைப்பின் காரணமாக உடலில் அதிக வெப்பம் உருவாகிறது. எனவே, சேற்றில்
புரள்வதன் மூலமாகவோ அல்லது தங்கள் காதுகளை ஆட்டுவதன் மூலமாகவோ வெப்பத்தை வெளியேற்றுவது
அவற்றிற்கு மிகவும் அவசியமானது.
பாவம் விலங்குகள்! வியற்வைச் சுரப்பிகள் இருக்கும்
நமக்கே அடிக்கும் வெயிலுக்கு தண்ணீரில் மூழ்கிக் கிடக்கலாம் போன்று தோன்றுகிறது. இப்ப
நம்மை எருமை மாடுன்னு திட்ட யாருமில்லை பாருங்க!!!
சரி....முடியாத காரியம். இப்ப இந்த ஆனைகள்
கும்மாளம் அடிப்பதைப் பார்த்து ரசியுங்க!
சில்லு - 2 - சேறு நல்லதா?
உங்களில் எத்தனை பேர் சின்ன
வயசுல சேத்துல புரண்டு சண்டை போட்டிருக்கீங்க!!! (சண்டை போட்டதில்லை. ஆனால் புரண்டிருக்கிறேன்.)
வீட்டுல அடி வாங்கிருக்கீங்க? (வாங்கிருக்கிறேன்) அல்லது கறை நல்லதுன்னு விளம்பரம்
போல உங்க அம்மா உங்களைத் தட்டிக் கொடுத்ததுண்டா? துவைச்சு எடுக்கறேன்னு உங்களைத் துவைத்ததுண்டா!!?
சில்லு 1 ல் விலங்குகள் சேற்றில்
புரள்வது பற்றிப் பேசினோம் இல்லையா, மனிதர்களுக்கும் சேற்றில் புரள்வது நல்லதாம்! குறிப்பிட்ட
வகையான சிகிச்சைக்கான சேறுகள் (Dead Sea சேறு, எரிமலைச் சாம்பல் அல்லது Fango mud therapy - ஃபாங்கோ போன்றவை)
மனிதர்களுக்கு, குறிப்பாக சரும ஆரோக்கியத்திற்கும் வலி நிவாரணத்திற்கும் மிகவும் நன்மை
பயக்குமாம்; கூடவே வெந்நீர் சேற்றுக் குளியல்கள் அவற்றின் Anti inflammatory - அழற்சி எதிர்ப்பு/வீக்கத் தடுப்பு, பண்புகளால்
மூட்டுவலி மற்றும் தசை வலியைப் போக்க உதவுகின்றனவாம்.
ஆண்டுதோறும் ஜூன் 29 அன்று கொண்டாடப்படும்
சர்வதேச சேறு தினம், 2009-ஆம் ஆண்டு பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற குழந்தைப்பருவப் பராமரிப்பு
மற்றும் கல்விக்கான உலக மன்றத்தில், சர்வதேச சேறு தினத்திற்கான எண்ணம் உருவானது. சேறு
மற்றும் சகதியில் விளையாடுவது ஓர் இயற்கையான விளையாட்டு. இந்த விளையாட்டிற்கான தடைகளைத்
தாண்டுவது குறித்த ஓர் உரையாடலில் இருந்து இந்தக் கருத்து உருவாகியிருக்கிறது.
குழந்தைகளுக்கான இயற்கைச் செயல்பாட்டுக்
கூட்டமைப்பின் உறுப்பினர்களான, மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Gillian McAuliffe - கில்லியன் மெக்காலிஃப் மற்றும் நேபாளத்தைச்
சேர்ந்த Bishnu Bhatta
- பிஷ்ணு பட்டா குழந்தைகள் சேற்றில் விளையாடும்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து
விவாதித்தனர். குழந்தைகளை இயற்கையுடன் இணைக்கவும், உலகளாவிய சமூகத்தை ஊக்குவிக்கவும்,
Sensory Skills (புலன் உணர்வு) செறிந்த இந்த விளையாட்டு அனுபவங்களை
ஊக்குவிக்கவும் இவர்கள் இருவராலும் தொடங்கப்பட்டது.
இதன் பின்னணியில் ஒரு உணர்வுபூர்வமான
நிகழ்வு உண்டு. Gillian McAuliffe,
ஆஸ்திரேலியாவில் Perth - பெர்த்தில் உள்ள Bold Park Community School ல் கற்பித்தல் மற்றும் கற்றல் துறையின் இயக்குநர்.
Perth நகர் ஒரு மணல் சமவெளியில் அமைந்திருப்பதால் அங்கு சேறு குறைவாக இருந்ததையும்,
மேலும் சேற்றில் விளையாடுவதை அந்நாட்டுக் கலாச்சாரம் அனுமதிக்கவில்லை என்பதையும் Gillian McAuliffe
யோசித்துப் பார்த்திருக்கிறார்.
மறுபுறம், நேபாளத்தில் நிறைய சேறு
இருக்கிறது, ஆனால் பல அனாதைக் குழந்தைகளிடம் தங்கள் ஆடைகளை அழுக்காக்கிக் கொள்ளும்
அளவுக்குப் போதுமான ஆடைகளோ அல்லது அவற்றைத் துவைக்க சோப்போ இல்லை என்பதை Bishnu Bhatta சொல்லிட Gillian McAuliffe
அறிந்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியதும்,
அவர், நேபாளத்தில் உள்ள குழந்தைகளால் சேற்றில் விளையாட முடியவில்லை என்பதைச் சொன்னதும்.
அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியக் குழந்தைகள்,
உதவி செய்ய முடிவு செய்திருக்கின்றனர்.
நேபாளத்தில் உள்ள குழந்தைகளும்
இந்த விளையாட்டில் கலந்துகொள்ளும் வகையில், அவர்களுக்கு ஆடைகள் வாங்குவதற்காக, மூன்றே
வாரங்களில் 1,000 ஆஸ்திரேலிய டாலர்களைத் திரட்டினர். அதை Bishnu Bhatta விற்கு அனுப்பி வைத்திட, அப்படி, இதன் தொடக்க
நிகழ்வாக, நேபாள அனாதை இல்லம் ஒன்றில் உள்ள குழந்தைகள் பல மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாகச்
சேற்றில் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். கூடவே நல்ல உணவும்.
அதன் பின், இந்த தினத்தை ஆஸ்திரேலியாவில்
உள்ள அப்பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் குடும்பங்களோடு நேபாளத்திற்கு வந்து இந்த
ஆதரவற்றக் குழந்தைகளோடு விளையாடி மகிழத் தொடங்கியிருந்திருக்கின்றனர். மேலும், ஆஸ்திரேலிய குடும்பங்களின் உதவியால் இந்த ஆதரவற்றோர் இல்லங்கள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு The World Forum Community, இப்படி
இணைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதை பிற நாடுகளிலும் செயல்படுத்த முயல்வதாகத் தெரிகிறது.
சேற்றில் புரண்டு விளையாடுவது
மகிழ்ச்சியைத் தருவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறதாம். Motorical Senses புலன்/இயக்கத்
திறன்களையும் வலுப்படுத்துகிறது என்பதையும் வலியுறுத்தி அத்தகைய விளையாட்டுகளையும், செயல்களையும்
ஊக்குவிக்கிறது. (என் மகனை மண்ணில், தண்ணீரில் நன்றாக விளையாடவிட்டதுண்டு. இந்த Motorical செயல்பாடுகள் Cognitive processing ற்கு உதவும் என்பதால்)
இதற்காக வெளிநாடுகளில், குறிப்பாக ஆஸ்திரேலியா, நேபாளம் போன்ற நாடுகளில் தேர்ந்தெடுத்த இடங்களில் குழி அமைத்து அதில் நல்ல தரமான மண், நீர் சேர்த்து சேற்றினை உருவாக்குகிறார்கள். இது தவிர....
நேபாளத்தில், பருவமழை காலத்தில் "நெல் தினம்" என்பது இந்த சேறு தினம் போன்று பாரம்பரிய நிகழ்வாம். அந்நாளில்,
விவசாயிகள் நெல் நடவு செய்து சேற்றில் விளையாடுவார்களாம். (காமாட்சி அம்மா நினைவுக்கு
வந்தார்கள் அவர்கள் இருந்த நாடாயிற்றே.)
நம்ம ஊர்களிலும் விவசாயிகள் சேற்றில்
இறங்கித்தானே நெல் நடவு செய்கிறார்கள் வயல்களில்! சேறு தினம் என்றில்லாமல், பருவகாலம்
முழுவதுமே இல்லையா? இது கிட்டத்தட்ட சர்வதேச சேறு தினம் சொல்லும் உணர்வுடன் ஒத்துப்போகிறது
இல்லையா!
ஆஹா நாமும் வயல்களில் சேற்றில்
இறங்கியதுண்டே ஊரில் இருந்தப்ப என்று நினைத்துக் கொண்டேன்!
வடக்கு கோவாவின் மார்செல் நகரில், இந்து மாதமான ஆஷாடத்தில்
அதாவது ஆடி மாதத்தில் (ஜூன்/ஜூலை) நடைபெறும் ஒரு பாரம்பரியமான, உற்சாகமான மண் / சேறு
திருவிழாவாம். பக்தர்கள் சேற்றில் விளையாடியும், சேற்றை வீசி எறிந்தும், நடனமாடியும்,
பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்றும் கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தை மீட்டெடுப்பது
போன்று இவர்கள் கொண்டாடி மகிழ்வார்களாம்.
இந்தியாவில் சில பள்ளிகளிலும்
இந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் குழந்தைகளை களிமண்ணில் பல பொம்மைகள், உருவங்கள்
செய்யச் சொல்லுதல், மண்/களிமண் பானைகளில், தட்டுகளில் ஓவியம் வரையச் செய்தல் போன்று. இப்படி, இங்கு பெங்களூரில் சில பள்ளிகளில் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
சில்லு - 3 - மாடி மேல மாடி கட்டி ...
சில மாதங்களுக்கு முன், குளிர்காலத்தில், துளசி
குடும்பம் இங்கு வந்த போது Cubbon
Park - கப்பன் பூங்கா சென்றிருந்தோம். மலர் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. (இதன் படங்கள் எல்லாம் பின்னர் வரும்) நான் கேமரா கண்கள் வழி பார்த்துக் கொண்டே கீழே படத்தில் உள்ள யானையை படம் பிடித்ததும் படத்தில் (கீழே முதல் படம்) இடப்புறம் மிக உயரமான கட்டிடமும் அதன் உச்சியில் இருந்த கட்டிடமும் வித்தியாசமாக இருந்தது என்னைக் கவர்ந்தது. வீடா ஹோட்டலா
என்று சந்தேகத்துடன் ஆச்சரியத்துடன், பார்த்ததை உடனே, யானையின் பக்கவாட்டில் நேராக என் ஓட்டை கேமராவில் கிட்டப் பார்வைக்குக்
கொண்டு வந்து ஒரு க்ளிக்! (இரண்டாவது படம்)
முதல் படத்தில் யானையின் இடப்புறம், இரண்டாவது படத்தில் பின் பக்கம் பெரிய கட்டிடம் தெரிகிறதா? உச்சியில் ஒரு வீடு? நாங்கள் சென்ற நேரம் மழையும் பனியுமான நாள் என்பதால் சரியாகத் தெரியாது என்று நினைக்கிறேன். கீழே இணையத்திலிருந்து படம்
பின்னர் எடுத்த படத்தை இணையத்தில் போட்டுப்
பார்த்த போதுதான் தெரிந்தது அதன் சரித்திரப் பின்னணி!!
பெங்களூருவின் யுபி சிட்டி (UB City)
பகுதியில் உள்ள கிங்ஃபிஷர் டவர்ஸ் (Kingfisher
Towers) என்ற
34 மாடி கட்டிடத்தின் உச்சியில் தொழிலதிபர் விஜய்
மல்லையா கட்டியிருக்கும் ஒரு பிரம்மாண்டமான பென்ட்ஹவுஸ் (Penthouse) என்று தெரியவந்தது. இது "ஸ்கை மேன்ஷன்"
(Sky Mansion) அல்லது "வானத்தில் உள்ள மாளிகை"
என்று அழைக்கப்படுகிறது.
இந்த வீட்டில் அமைந்துள்ள சில
அம்சங்கள் - 40,000 சதுர அடி பரப்பளவில், 34 மற்றும் 35-வது மாடிகளில் இந்த வீடு அமைந்துள்ளது.
பெங்களூரின் அடையாளச் சின்னமாகவும்!
இந்த மாளிகையில் பிரத்தியேக ஹெலிபேட்,
எல்லையற்ற நீச்சல் குளம் (Infinity
pool) அதாவது நீரின்
விளிம்பு எங்கு முடிகிறது என்றே தெரியாத அளவுக்கு ஒரு மாயையை (Visual Illusion) உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன
நீச்சல் குளமாம்! 'மறைந்து போகும் விளிம்பு குளம்' (Vanishing Edge Pool) என்றும் அழைக்கப்படுகிறதாம். பசுமையான
தோட்டங்கள் மற்றும் 360 டிகிரி கோணத்தில் பெங்களூரு நகரத்தை பார்க்கும் வசதியும் இருக்கிறதாம்.
அமெரிக்க வெள்ளை மாளிகையைப் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மல்லையாவின்
பூர்வீக இல்லம் (Brewery
House) இருந்த 4.5 ஏக்கர் நிலத்தில்
இந்த கிங்ஃபிஷர் டவர்ஸ் கட்டப்பட்டுள்ளது.
ஆனா, பாவம்! அவர் லண்டனில் இருப்பதால் அவரது கனவு இல்லமான இதில் இத்தனை வசதிகளையும் அனுபவிக்கவே முடியாமல்
இந்த பிரம்மாண்டமான வீடு இன்னும் காலியாகவே உள்ளதாம்!
ஆடி அடங்கும் வாழ்க்கையடா; ஆறடி நிலமே சொந்தமடா;
பதிலளிநீக்குமல்யா பற்றித்தான். ஹூம்
சேற்றில் விளையாடினால் சேற்றுப்புண் வராதோ? ஆனால் காந்தி சேற்று குளியல் செய்ததை படித்திருக்கிறேன். அதே போல் IYNS பெங்களூரில் சேற்றைப்பூசி வெயிலில் காய விடுவார்கள், பின்னர் ஹோஸில் தண்ணீர் பீய்ச்சி கழுவுவார்கள் என்பதையும் படித்திருக்கிறேன்.
Jayakumar
ஹாஹாஹா அதேதான் ஜெ கே அண்ணா. ஆறடி நிலத்துக்குள்ள போறதுக்கு எத்தனை வேணுமோ!
நீக்குசேற்றில் விளையாடினால் அதுவும் நம்ம ஊர் சேற்றில் விளையாடினால் வேறு வகைப் பிரச்சனைகளும் வரும். அவர்கள் சொல்லும் சேறு என்பது தனி வகை அதற்காகவே உருவாக்குகிறார்கள்.
சில ஃபிசியோதெராப்பிக்கும் பயன்படுத்துகிறார்கள்
Bangalore விஷயம் வாசித்ததுண்டு அண்ணா, நானும்
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
சேற்றில் விளையாடிய நினைவுகள்.... ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம்.
பதிலளிநீக்குகாவிரி ஆற்றில் இறங்கினாலே ஒரு மணி நேரத்திற்கும் குறைவில்லாமல் கிடப்போம். அதே எருமை மாடு திட்டு வாங்கிய பிறகு தான் வெளியே வருவோம்.
சேறு நல்லது ! ஹரியானாவின் சில பகுதிகளில் Mud Bath பிரபலம். சேற்றில் மூழ்கி விளையாடி பின்னர் குளிப்பதற்குத் தனியாக இடங்கள் இருக்கும். ஃபார்ம் ஹௌஸ் ஒன்றில் இந்த வசதிகள் இருந்தது குறித்து எழுதி இருப்பதாக நினைவு.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா - அதே தான் - மல்லையா! இந்த வீட்டினை அனுபவிக்க முடியவில்லையே தவிர வெளிநாட்டில் சுகமாகவே இருக்கிறார்.
ஹை! வெங்கட்ஜி நீங்களும் சேற்றில் விளையாடியிருக்கீங்களா!!! அந்தக் காலம் நினைவுகளாய் ஆகிவிட்டன இல்லையா!
நீக்குஆமாம் ஜி ஹரியானாவில் சில பகுதிகளில் இது பிரபலம் என்பது அறிந்தேன்.
ஃபார்ம் ஹவுஸ் வசதிகள் குறித்து நீங்க எழுதியிருக்கீங்களோ? நான் வாசித்ததில்லையா இல்லை மறந்துவிட்டேனா இல்லைனா நினைவுக்கு வந்திருக்குமே என்றுதோன்றியது.
நான் உறவினர் ஒருவரின் retreat ற்காகத் தேடிய போது ஒரு farm house இருப்பது தெரிந்தது. ஆனால் அப்புறம் கைவிடப்பட்டது....
ஹாஹாஹா மல்லையா - ஆமாம். அவருக்கென்ன நல்லாதான் இருக்கிறார் சுகபோகமாய்.
கடைசி வரி கொஞ்சம் நக்கலாக எழுதியிருந்தேன்...அப்புறம் எடுத்துவிட்டேன் எதற்கு வம்பு என்று . அது போல தலைப்பிலும் அந்தப் பாடலின் முழு வரியும் எழுதி பின்னர் பகுதியை எடுத்துவிட்டேன். ஏனென்றால் அது வேறு ஒரு தலைவரைக் குறிப்பிட்டுவிடுமோ என்ற பயம்...அதுவும் இப்ப தேர்தல் நேரம் வேறு!!!
மிக்க நன்றி வெங்கட்ஜி
கீதா
மேலே உள்ள கவர் போட்டோ தில்லையகத்து படம் புதிதோ.. அல்லது நான்தான் சரியாக இத்தனை நாட்கள் கவனிக்கவில்லையா?
பதிலளிநீக்குகவர் ஃபோட்டோ - துளசி ஜெமினிகிட்ட கேட்டு வாங்கி நான் அப்லோட் செய்தேன் ஸ்ரீராம். ஒரு மாதம் மேல் இருக்கும் ஸ்ரீராம்.
நீக்குகீதா
யாராவது கவனிச்சு சொல்வாங்கன்னு நினைச்சேன், ஸ்ரீராம். நீங்கதான் முதல் ஆள் பாருங்க சொன்னது...
நீக்குநன்றி, ஸ்ரீராம்
கீதா
காலை ஐந்தரை ஆறு மணிக்குப் பார்த்தபோது வெங்கட், செல்வாண்ணா தளங்களே அப்டேட் ஆகவில்லை. எப்படியும் போட்டிருப்பார்கள் என்று அவர்கள் தளம் தேடித் சென்று வாக்களித்தேன்.. ச்சே... கமெண்ட் இட்டேன். நீங்கள் வெளியிட்டிருப்பது ரொம்ப நேரம் கழித்துதான் அப்டேட் ஆகி இருக்கிறது!
பதிலளிநீக்குஹாஹாஹா தேர்தல் நினைவிலேயே இருக்கீங்க!!! "வாக்களித்தேன்!!!"
நீக்குபரவால்ல ஸ்ரீராம், சிலப்போ நெட் ப்ளாகர் / இப்படிப் படுத்துகின்றனவே
கீதா
Wallowing - இந்த சொல் எனக்குப் புதிது. தெரிந்து கொண்டேன். நாய், யானை, பூனை, எருமை போன்ற விலங்குகளுக்கு யார் சொல்லித்தருகிறார்கள்! அவைகளுக்குள் மருத்துவம் எப்படி பயில்கின்றன. கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தியின் மீது ஆச்சரியம் இதனால்தான் வருகிறது!
பதிலளிநீக்குஅதைச் சொல்லுங்க அதுங்களுக்கு எல்லாம் யார் சொல்லிக் கொடுக்கறாங்க அதான் natural instinct!!! போல...நம்மை விட நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள், இயற்கையைப் பார்க்கும் போது அந்தக் கண்ணுக்குத் தெரியாத ஆனால் உணர வைக்கும் அந்த மாபெரும் சக்தியை நினைத்து நிறைய ஆச்சரியப்படவைக்கும், ஸ்ரீராம் நீங்க சொல்லிருக்காப்ல.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்கிறது என்று சொல்வோம். அதுவும் இதுபோன்ற காரணங்களுக்குதானே அப்படிச் செய்கிறது!
பதிலளிநீக்குஅதுக்குத்தான் அது வாரிப் போட்டுக் கொள்கிறது ஸ்ரீராம். கடுமையான வெயிலில் இருந்து தங்களைக் குளிர்ச்சியாக வைச்சுக்கவும், தோல் நோய்கள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், அதுக்குச் சொறிஞ்சுக்க முடியுமோ? சருமத்தைப் பராமரிக்கவும் செய்யும் ஒரு புத்திசாலித்தனமான இயற்கை குளியல், ஸ்ரீராம் அது!
நீக்குகீதா
பன்றியாக மாறிய முனிவர் கதை நினைவுக்கு வருகிறது! சீக்கிரம் வெளியே வா நங்ககளெல்லாம் கூட அதில் புரளணும் என்று அதன் பாஷையில் புரியவைக்க முயன்று அது வெளியே வராததால் அந்தப் பெரிய பன்றிகள் பள்ளத்தை இன்னமும் பெரிதாக்கி இறங்குவது வேடிக்கை.
பதிலளிநீக்குபன்றியாக மாறிய முனிவர் கதை என்ன என்று யோசிக்கிறேன், ஸ்ரீராம். இணையத்தில் பார்த்தால் தெரிந்துவிடும்.
நீக்குக்கிரம் வெளியே வா நங்ககளெல்லாம் கூட அதில் புரளணும் என்று அதன் பாஷையில் புரியவைக்க முயன்று அது வெளியே வராததால் அந்தப் பெரிய பன்றிகள் பள்ளத்தை இன்னமும் பெரிதாக்கி இறங்குவது வேடிக்கை.//
ஹாஹாஹா ஆமாம் ஸ்ரீராம். அந்த வீடியோல அப்படித்தான் அதுங்க செய்வது போல் இருக்கும் பரபரன்னு இறங்க...நான் அதைப் பார்த்து சிரித்துவிட்டேன்!! இப்ப உங்க கமென்ட் பார்த்து
கீதா
நான் சேத்துல புரண்டெல்லாம் சண்டை போட்டதில்லைப்பா.. ஜாக்கிரதையா இருந்திருக்கிறேன்! ஆனா வீட்ல அடியெல்லாம் தாராளமா வாங்கி இருக்கேன். "தூக்கிப் போட்டு மிதிச்சுடுவேன்" னு சாதாரணமா சொல்வாங்க இல்ல.. எங்க அப்பா நிஜமாவே அதை என்னிடம் நடத்திக் காட்டினார்!
பதிலளிநீக்குநல்ல புள்ளை நீங்க!!!
நீக்குவீட்ல வாங்கினதெல்லாம் கணக்குல உண்டா!!!
தூக்குப் போட்டு மிதிச்சுடுவேன் - ஹாஹாஹா எல்லார் வீட்டுலயும் புழங்கியது போல! சர்வசாதாரணமாய், இதுக்கு நான் வைச்ச பெயர் "ஆனை அடி"
//எங்க அப்பா நிஜமாவே அதை என்னிடம் நடத்திக் காட்டினார்!//
கடவுளே எப்படித் தாங்கினீங்க!! (நானும் என்னைக் கேட்டுக் கொண்டேன்! க)
நன்றி ஸ்ரீராம்
கீதா
மனிதர்கள் சேற்றில் புரள்கிறார்களோ இல்லையோ ஆற்று மணலில் அல்லது கடல் மணலில் கழுத்து வரை புதைத்து வைக்கும் மருத்துவம் ஒன்று உண்டே...
பதிலளிநீக்குஅது ஒரு வைத்தியம்தான் ஸ்ரீராம். மணலில் புதைந்து இருப்பதும் சேற்றை அப்பி இருப்பதும் அதாவது களிமண் சேற்றை. சில பல வலிகளுக்கு நிவாரணமாம்.
நீக்குகீதா
ஜூன் 29 ஆ... வெவ்வேறு வகை சேறுகளில் அடிக்கடி உழல்கிறோம். உண்மையான சேற்றில் இறங்கத் தயங்குகிறோம்..!
பதிலளிநீக்குஹைஃபைவ் ஸ்ரீராம். இக்கட்டுரையை எழுதிய போது, எனக்குத் தோன்றியதும் இதேதான். மனசுல இல்லாத சேறா!!! அதுல உழன்று கொண்டிருக்கிறோம்.
நீக்குஉழன்று திரிந்த என்னை உதமனாக்கிவைத்தாய்!!! ...ஹூம் எங்க!!
உண்மையான சேறு நல்லதா இருந்தா தயங்க மாட்டோம் ஸ்ரீராம். சிம்லால குஃப்ரினு ஒரு இடம் போறப்ப, சின்ன குதிரை மேல ஏறி உக்காந்துதான் போணும். ஏப்ரல் மாதங்களில் கூட கீழே சேறாக இருக்கும். கீழ விழுந்தா சேறுதான். நான் கீழே சேற்றில் விழுந்து புரண்டேன்!!!!! மற்றொரு பக்கம்னா பள்ளம்! அதுக்கு இது பரவால்ல! ஹாஹாஹா.. நல்ல காலம் அடி இல்லை....ஆனால் அந்த சேத்துலதான் குதிரைங்க உச்சாவும் அடுக்குதுங்க..அதனால அந்த மாதிரி சேறு இல்லை...நல்ல சேறு...
நன்றி ஸ்ரீராம்.
கீதா
நன்றி
ஆடைகள் இல்லாததால் சேற்றில் இறங்கவில்லை.. வருத்தமாகத்தான் இருக்கிறது.. உதவி செய்தார் மகானுபாவன். சேற்றில் இறங்கினால் உடம்பெல்லாம் அரிக்கும் என்பதுதான் நாம் அறிந்திருக்கும் அல்லது நினைத்திருக்கும் விஷயம்!!
பதிலளிநீக்குபாவம் அக்குழந்தைகள். ஆஸ்திரேலிய குழந்தைகள் முன்னெடுத்திருக்காங்க. நேபாளத்தில் பாருங்க மக்கள் நடவு செய்யும் போது அப்படியே கும்மாளம் அடிக்கிறாங்க!! அந்தச் சேறு நல்லதா?!! தெரியலை ஆனா அவங்களுக்கு எதுவும் ஆகலை பாருங்க.
நீக்குஇன்னொன்றும் நினைவுக்கு வந்தது இதை எழுதும் போது. பாவப்பட்ட மக்கள் சேறு நிறைந்த குடிசைப் பகுதிகளில் வாழ்கிறார்கள் அவர்களை அண்டாத நோய் எல்லாம் நம்மை அண்டுதே!!!
கீதா
விஜய் மல்லையா ஓடிப்போன தொழிலதிபர்! சில பேருக்கு மச்சம்.
பதிலளிநீக்குஹாஹா ஹா அதைச் சொல்லுங்க! எப்படி இப்படி வாழ முடிகிறது என்பது எனக்கு ஆச்சரியம்.
நீக்குகீதா
சேற்றுக் குளியல் பற்றிய தகவல்கள் சுவாரசியம்.
பதிலளிநீக்குவாலோப்பிங்..புதிய தகவல்
விஜய் மல்லையாவின் வீடு... முன்பே படித்திருக்கிறேன். இவற்றைப் பற்றிப் படிக்கும்போது 'ஆறடி நிலமே சொந்தமடா' என்று தோன்றும். ஆனாலும் நமக்கென்று வரும்போது நமக்கு ஏற்றவாறு பல அறைகள் உள்ள வீட்டை வாங்கத் தோன்றும்.
வாங்க நெல்லை,
நீக்குநன்றி நெல்லை.
ஆறடிக்குள்ளதான் படுக்கை கடைசில எல்லாருக்கும் ஆனா அதுக்குள்ள நாம என்னென்னலாம் ஆசைப்படுகிறோம் அதுவும் எல்லை மீறிய ஆசை. பணம் சேர்ப்பது தப்பில்லை. ஆனால் கள்ளத்தனமாக எதுக்கு இல்லையா ?
கீதா
சேற்றுக் குளியல் என்பது ஆயுர்வேத வைத்தியம்.
பதிலளிநீக்குஇதைச் செய்துதான் ஒல்லியாக இருந்த ஜெ.வை ரொம்பவே குண்டாக்கிவிட்டார்கள்.
ஆயுர் வேதத்தில் ம்ருத்திக சிகிச்சை - மண்ணீர்ப்பு சிகிச்சை என்று சொல்லப்படும்.
நீக்குஓ! ஜெஜெ தகவல் புதுசு எனக்கு. நெல்லை
கீதா
பதிவு அருமை.
பதிலளிநீக்குஆறு குளங்களில் இரண்டு , மூன்று முறை குளித்து இருப்பேன்.
கோயில் குளங்களில், கோயில் உள்ள கடற்கரையில் குளித்து இருக்கிறேன்.
சேற்றில் விளையாடியது இல்லை.
ஆயூர்வேத மருத்துவத்தில் சேற்றை பூசி வாழை இலையில் உடம்பை சுற்றி வெயிலில் சூரிய ஒளி படும்படி வைக்கும் சிகிட்சை உண்டு என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.
கிருபானந்த வாரியார் அவர்கள் செய்து இருப்பதாய் பத்திரிக்கையில் படித்த நினைவு இருக்கிறது.
வாங்க கோமதிக்கா, நேற்று பதில் கொடுக்க முடியவில்லை. இன்று உங்களுக்குக் கொடுத்துவிட்டேன் என்றே நினைத்திருந்தேன். மறந்தே போய்விட்டேன்.
நீக்குநீங்க அஆறு குளங்களில் கோயில்கள் போறப்ப குளித்திருப்பீங்க..
ஆமாம் ஆயுர்வேதத்தில் இந்தச் சிகிச்சை உண்டு.
ஓ! கிருபானந்த வாரியாருக்குச் செய்யப்பட்டதா...புதிய தகவல்
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
யானை குளியல், பன்றி குளியல் காணொளி நன்றாக இருக்கிறது. ஒரு பன்றி படுக்கும் வசதியுடன் சேற்றுக்குழி இருந்தால் என்ன செய்வது ஒரு பன்றி மண்ணை தோண்டி பள்ளத்தை பெரிது செய்து படுத்து கொள்கிறது.
பதிலளிநீக்குகோடையில் நம்மை போலவே மற்ற விலங்குகளும், பறவைகளும் கஷ்டபடுகிறது.
களிமண்ணில் வீடு மண் பாத்திரங்கள் எல்லாம் செய்து விளையாடி இருக்கிறோம்.
பொங்கல் அன்று சிறூவீட்டு பொங்கல் வைப்போம் அப்போது சிறு வீடு கட்டுவார்கள் அம்மா களிமண்ணில் அதில் நாங்கள் கொஞ்சம் எடுத்து விளையாடுவோம்.
அந்தக் காணொளிகள் போல் நிறைய இருக்கு கோமதிக்கா.
நீக்குவிலங்குகலும் இடத்துக்குப் போட்டி போட்டாலும் முட்டி மோதாமல் ஒரு பள்ளம் தோண்டி படுக்குது பாருங்க. எல்லா விலங்குகளுக்கும் நம்மைப் போல் வேனல் படுத்தும் தான். சிலவற்றிற்கு நம்மைவிடக் கடினமாக இருக்குமாம்
நாங்களும் களிமண்ணில் வீடு பாத்திரங்கள் எல்லாம் செய்து விளையாடியிருக்கிறோம் அக்கா...நீங்களும் சின்ன வயசில் விளையாடியது ரொம்ப சந்தோஷமான காலங்கள் இல்லையா.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
கப்பன் பூங்கா யானை அழகு.
பதிலளிநீக்குமல்லையா வீடு அருமை.
யார் யாருக்கு எங்கு இருக்கவேண்டுமோ அங்கு தான் இருக்க முடியும்.
அது இறைவன் செயல்.
வானத்தில் உள்ள மாளிகையில் வசிக்க வானத்து தேவர்கள் ஆசீர்வாதம் செய்யும் நாளில்தான் மல்லையா வசிக்க முடியும் போல!
கப்பன் பூங்கா வில் அன்று கண்காட்சி அதனால் அலங்காரங்கள் கடைகள்....பின்னர் போடுகிறேன் படங்கள்.
நீக்குஅவருக்கு இங்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் ஆனால் அவர் இன்னும் ஆஜராகவில்லை. அதெலலம் தீர்ந்தால்தான் அவர் அதில் வாழவதற்குக் கிடைக்குமாக இருக்கலாம்
நன்றி கோமதிக்கா
கீதா
குழந்தைகளை மண்ணில் விளையாட விடுவது நல்லது, வெயிலில் காய வேண்டும் மழையில் நனைய வேண்டும். அது எல்லாம் இல்லாமல் வீட்டுக்குள் வைத்து இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியே இருக்காது.
பதிலளிநீக்குகுழந்தைகள் மண்ணில், நீரில் விளையாட வேண்டும். வெயில் மழை எல்லாம் நீங்க சொன்னது போல்...இதெல்லாம் இருந்தால்தான், நோய் எதிர்ப்பு சக்தி, சில் தோல்விகளைச் சந்தித்தால்தான் பல விஷயங்களைக் கற்கவும் முடியும் இவை எல்லாவற்றையும் விட மன தைரியம் வளர்த்துக் கொள்ளவும் உதவும் வேண்டவும் வேண்டும்.
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா'
கீதா