ஜடாயுபுரம் - 1
இப்போது ஊருக்குச் சென்றால் கூட ஊரை விட, ஆற்றங்கரைப் பகுதியும் ஊரைச் சுற்றியிருக்கும் பசுமையும், தண்ணீரும், மலைகளும் பரவசத்தைத் தரும் அளவிற்கு என்னோடு கலந்தவை. இங்கு மட்டுமில்லை, இமயமலைப் பகுதிக்குச் சென்ற போதும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்குச் சென்ற போதும் ஏற்பட்டதுண்டு. ஏற்படும் ஒன்று. மொத்தத்தில் இயற்கை. நம்ம வெங்கட்ஜி போடும் பதிவுகளையும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அப்போதெல்லாம் கேமராவா மொபைலா? எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக் கொள்ள!
4 1/2 வருடங்களுக்கு முன் போன போது என் ஓட்டைக்கேமராவில் முடிந்தவரை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்தேன். அவற்றில் ஒவ்வொன்றாக இப்போது உங்களுக்குக் காட்டுகிறேன். நீங்கள் ரசிப்பீர்கள் என்பதோடு உங்களுக்குச் சிறு பொறாமை கூட வரலாம்! நான் எப்பேர்ப்பட்ட பகுதியில் வளர்ந்திருக்கிறேன் என்று.
ஊருக்குச் சென்றிருந்த போது சுற்றிலும் பல மாற்றங்கள். அவற்றைப்
படங்களோடு சொல்கிறேன்.
எங்கள் ஊருக்குள் செல்வதற்கு முன், சுற்றிலும், நடக்கும் தூரத்தில் உள்ளவற்றைப் படங்களோடு காட்டிவிட்டுக் கடைசியாக ஊருக்குள் சென்று பார்ப்போம். ஒகே?!
கிராமத்திலிருந்து ஜடாயுபுரம் போகும் வழி. என்னோடு நடந்து வாங்க பேசிக் கொண்டே போவோம். இந்த வளைவு நாங்கள் இருந்த போது கிடையாது அதன் பின்னும் அம்மா இருந்தவரை போய் வந்து கொண்டிருந்தேனே. அப்பவும் இல்லை அதன் பின்னர் கட்டியிருக்கிறார்கள். நுழைந்ததும் இடப்பக்கம் ஒரு வீடு தெரிகிறதா? அப்போது அது சின்னதாக மாடி எதுவும் இல்லாமல் இருந்தது.
எங்கள் எல்லோரது திருமணத்திற்குப் பின்னர் கூட்டுக் குடும்பத்திலிருந்து, அம்மாவும் அப்பாவும் இந்த வீட்டிற்கு வாடகைக்கு வந்துவிட்டார்கள். என் மகன் இந்த வீட்டில்தான் பிறந்தான். இப்போது அது மாடிவீடு! அதற்கு முன்புவரை எல்லோரும் சேர்ந்து இருந்த பாட்டி வீடு, மாமா வீடு எல்லாம் கிராமத்திற்குள் இப்பக்கம் வர வேண்டும். வளைவுக்குள் நுழையும் முன் நீல வண்ணக் கதவுடன் இருப்பதுதான், நாங்கள் இருந்த போது பஜனைமடம். இப்போது நம்மாழ்வார் சன்னதி. நம்மாழ்வாரின் அம்மா உடையநங்கை வாழ்ந்த நினைவாக.
பாருங்க எங்க ஊர் நிலையை. நாங்கள் இருந்த போது
இந்த இடங்களில் எல்லாம் இப்படிக் குப்பைகளைப் பார்க்கவே முடியாது. மாறாக வைக்கோல் போர்
மற்றும் எரு குவித்து வைத்திருப்பாங்க. இப்ப பாருங்க எங்க ஊரும் இப்படிக் குப்பைக்
கூளமாகிவிட்டது. அறிவிப்பு வைத்தும் இப்படி....
ஜடாயுபுர ஜடாயுபுரீஸ்வரர் கோயிலை நெருங்குகிறோம்...
இந்த இடத்தில் வலப்புறம் திரும்பி நடந்தால்....சரி
அதை அடுத்த பதிவில் பார்ப்போமா!
இப்ப மீண்டும் அழகே அழகுன்னு பாடிக் கொண்டே
காட்சிகளைப் பார்த்துக் கொண்டே போவோம்...
அங்கு மலை தெரிகிறது இல்லையா? அது தாடகை மலை.
அழகியபாண்டிபுரம் கிராமப்பகுதியில். (எபி கே ஜி எஸ் தெரிசனங்கோப்பு பகுதிக்குச் சென்றிருந்தாரே
அப்போது இப்பகுதிக்குச் சென்றிருந்தார் படங்கள் போட்டிருந்தார். இதே தாடகை மலைப் படமும்.
ராமாயணகாலத்தோடு தொடர்புடைய தலபுராணம் உடைய பகுதி என்று சொல்லப்படும். இந்த மலையைப் பார்த்து வைச்சுக்கோங்க.....ஜடாயுபுரம் பற்றிச் சொல்லி முடித்த பிறகு அடுத்த பகுதி வரும்
அதில் மீண்டும் இந்த மலைவரும்!
மேலே உள்ள படம் எடுத்த பகுதியிலிருந்து ஒரு 360 டிகிரி காணொளி. சிறிய காணொளிதான்.......கால்வாசி கடந்ததும் கிராமத்தின் வெளிப்பகுதியும், நான் நடந்து வந்த பாதையும், காணொளி முடியும் முன் மேலே கொக்குகள் பறப்பதும், கீழே வருவதும், தென்னைமரங்களுக்கிடையில் ஜடாயுபுரீஸ்வரர் கோயிலும் தெரியும்....
எவ்வளவு அழகான ரம்மியமான இயற்கையுடன் வளர்ந்திருக்கிறேன் இல்லையா! இன்னும் அழகே அழகு வரும்! அடுத்த பதிவில் பார்ப்போமா...
---------கீதா
சென்னை வேலூர் என்று காய்ந்த நிலத்தில் வாழும் நமக்கு இப்படியான பஸுமையான சூழல் பிடித்துத்தான் போகும். இது மாதிரி இடங்களை பார்க்கும்போது எனக்கும் கண்கள் நிறைந்து மனமும் நிறையும்.
பதிலளிநீக்குஇப்பவும் அருகில் இருக்கும் ஏரிக்குப் போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வருவேன் நடையும் அங்கு மாலையில். மனமும் கண்களும் நிறையும் நீங்க சொன்னது போல்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
மாடி வைத்து கட்டி மாறி இருக்கும் வீடு.. முன்னர் எடுத்த படம் இருந்தால் ஒப்பிட்டு போட்டு அசத்தலாம்!
பதிலளிநீக்குமுன்னர் எடுத்த படம் வீடு முழுவதும் இருக்கா என்று பார்க்க வேண்டும் ஆனால் மகன் அந்த வீட்டில் அம்மா அப்பா இருக்கும் போதுதானே பிறந்தான். அந்தப் படங்கள் இருந்தால் எடுத்துப் போடுகிறேன் தம்பி எடுத்த புகைப்படங்கள் என்னிடம் கேமரா எதுவும் கிடையாதே அப்ப. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் மகன் கைக்குழந்தை எல்லாம் இருப்பாங்க என்பதால் போடவும் தயக்கம். வீட்டின் முகப்பு இருந்தால் பார்க்கிறேன்.
நீக்குகீதா
இந்த அவசர யுகத்தில் இங்கு குப்பை கொட்டாதீர்கள் போர்டைப் பார்த்ததும் அவசரத்தில் குப்பை என்பதை மட்டும் படித்து விட்டு குப்பைகளை அங்கு கொட்டி விட்டார்கள் போலிருக்கிறது. அதற்குமுன் கூட சுத்தமாக இருந்திருக்கும். போர்டின்மீது காக்கைகள் அசந்துபோய் பார்த்துக் கொண்டிருக்கின்றன.. 'அட மனிதா...!'
பதிலளிநீக்குஹாஹாஹா.....இருக்கும். ;அதுவும் வெள்ளம் வடிந்த நிலையில்.
நீக்குகாக்கைகளின் பார்வை நீங்க சொன்னது போல கேலியாகத்தான் என்று என் மனதிற்குப் பட்டது. பொதுவாகக் காகங்களை இயற்கையின் துப்புரவாளர்களாகச் சொல்வார்கள். அதுங்களே பாக்குது இத்தனைய எப்படிங்க சுத்தம் செய்யன்னு...
கீதா
வயலும் தென்னை மரமும் அழகாகத்தான் இருக்கு பார்க்க.. காணக்கிடைக்காத காட்சி. பசுமையான படங்கள் யாவும் கண்களையும் மனதையும் குளிர்விக்கின்றன.
பதிலளிநீக்குஇன்னும் தென்னந்தோப்புகள் உண்டு ஸ்ரீராம் அது வரும். ஒரு பக்கம் கால்வாய் மறுபக்கம் தென்னந்தோப்பு. நம்ம நாஞ்சில் நாடன் அவர்களின் ஊருக்கு நடந்தே போய்விடலாம் அந்த ரோடில் வரும் இன்னும் ஒரு பகுதிக்குப் பிறகு. நம்ம ஊர்லருந்து கிட்டக்க... வயல்கள் அப்ப நடவுதான் முடிஞ்சிருந்துச்சு இத்தனையும் வளர்ந்திருக்கும் போது பார்த்தீங்கனா...ஓ கடவுளேன்னு சொல்லுவோம். நான் வயலில் இறங்கியும் வேலை செய்ததுண்டே.
நீக்குஇன்னும் படங்கள் வரும்....
நன்றி ஸ்ரீராம்
கீதா
மறைவில் இருக்கும் கட்டிடம் கோவிலா? பார்த்தால் அப்படி தெரியவில்லையே...
பதிலளிநீக்குதாடகைமலை என்று படித்ததும் என் நினைவுகள் மதுரைக்கு சென்று விட்டன. பாவம் சித்ரா. வருத்தமாக இருக்கிறது.
இல்லை ஸ்ரீராம் அது ஒரு சின்ன கோயில். இப்படத்தில் ஜடாயுபுரீஸ்வரர் கோயில் தெரியாது ஆனால் காணொளியில் கடைசில முடியும் முன் தெரியும் வெள்ளையாகத் தென்னைகளின் நடுவில்.
நீக்குதாடகை மலை - மதுரை - சித்ரா? டக்குனு புரியலையே ஸ்ரீராம்
கீதா
காணொளியில் ஒரு குழாயில் தண்ணீர் சலசலத்துக் கொட்டிக்கொண்டிருக்க, பறவைகள் படபடத்துப் பறக்கின்றன. நகரத்தில் காண முடியாத காட்சி. உண்மையிலேயே இயற்கை வளம் நிறைந்த பகுதியில்தான் இருந்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஆமாம் அது இப்பக்கமிருந்து ஓடையிலிருந்து அப்பக்கத்து வயலுக்கான தண்ணீர் செல்லும் வழி சாதாரண நாட்களில்.,...இப்ப வெள்ளத் தண்ணீர் வடிகிறது. நம்ம கிராமம் மட்டுமில்லை. சுத்துப்பட்டு கிராமங்கள் எல்லாமே...கன்னியாகுமரியின் கிட்டத்தட வடக்கு நாங்கள்.
நீக்குவடக்கில் /வடமேற்கில் மலைகளும் காடும் கொஞ்சம் அப்பால மேற்கில் கடலும் அரபிக்கடல்....தென்பாகம் தென்மேற்கு தென் கிழக்கு கடல்....வங்காளவிரிகுடா என்று எல்லாம் கலந்து கட்டிய மாவட்டம் இல்லையா...ஸோ செம இயற்கை சூழ் கேரளம் போல.
கீதா
//தென் கோடியும் அழகு!
பதிலளிநீக்குபின்னணியில் மலைகளும், வயல்களும், தோப்புகளும், வாய்க்காலும், ஆறும், சுற்றிலும் நீருமாகப் பின்னிப் பிணைந்து இருக்கும் திருவண்பரிசாரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சிறு வயதிலிருந்தே ஊரின் மீதான பிடிப்பை விட ஊரைச் சுற்றிப் பொதிந்து கிடக்கும் இயற்கையின் மீது லயிப்பும், காதலும், நேசமும், இயற்கையோடு வாழும் ஆசையும், யதார்த்தத்தில் நடக்கவில்லை என்றாலும், என் மனதுள் ஊறிப் போன ஒன்று. //
ரொம்பவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள், கீதா! அபப்டியே என்னை பிரதிபலிப்பது போலிருந்தது! என் புகுந்த வீட்டுக்குப்போகும் பாதை இப்படித்தான் அழகாய் மெய்மறக்க வைக்கும்! சிறூ வயதில் அப்பா காவல் அதிகாரி என்பதால் சின்ன சின்ன ஊர்களுக்கு மாற்றல் வந்து கொண்டே இருக்கும். குளமும் ஆறும் ஆல மரங்களும் பசும் வயல்களும் ஊர்கோடி காவல் தெய்வங்களும் தொடர்ந்து மாறி மாறி வந்து கொண்டேயிருக்கும். அது ஒரு கனாக்காலம் தான்!
படங்கள் அத்தனை அழகு. ஆனால் நிறைய படங்கள் வெற்றிடமாய் இருக்கின்றன!
மிக்க நன்றி மனோ அக்கா. கன்னியாகுமரியே கடல், மலை, நீர் நிலைகள் வயல்கள் , ரப்பர் தோட்டங்கள் தென்னந்தோப்பு முந்திரி தோப்பு, என்று எல்லாம் கலந்த மாவட்டம்.
நீக்குரொம்பவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள், கீதா! அபப்டியே என்னை பிரதிபலிப்பது போலிருந்தது! //
நன்றி அக்கா. உங்கள் அனுபவ்மும் தெரிந்து கொண்டேன்.
இது ஒரு பகுதிதான் அக்கா காணொளியில். வேறு பகுதிகளும் வரும். மலைகள் அப்ப தெளிவாக வரவில்லை காரணம் மழைக்காலம் வெள்ளம் வந்து வடிந்த நிலையில் வெயில் என்றால் இன்னும் மிகவும் தெளிவாக வந்திருக்கும் என் கேமராவும் அத்தனை நல்ல கேமரா இல்லைக்கா.
நன்றி மனோக்கா
கீதா
நாற்று உள்ள படம் (அதில் பாதி வானம் குறைந்த நாற்றுகளோடு தெரியும்), அதற்கு அடுத்த படமான கிராமச் சாலை... மிக மிக அழகாக வந்திருக்கிறது.
பதிலளிநீக்குபாராட்டுகள் கீதா ரங்கன்.
வாங்க நெல்லை!
நீக்குநன்றி நெல்லை. நீங்க அடுத்த முறை போகும் வாய்ப்பு கிடைத்தால் இப்பகுதிக்குப் போய் வாருங்க அந்த வளைவிலிருந்து ஜஸ்ட் உங்க நடைக்கு 7 நிமிஷம் தான் ஆகும். ஒரு கிமீ தூரம் கூட இருக்காது. நான் ஊருக்குப் போய்இருந்தப்ப சர்வசாதாரணமாகச் சென்று வந்தேன். ஊரைச்சுற்றி சுற்றி நடைப்பயிற்சியாகவும்....தினமும்
கீதா
எனக்கு இந்தமாதிரி வயல்வெளிகள், நாற்றுகள் உள்ள கிராமத்து வழியாகச் செல்லும்போதோ அத்தகைய படங்களைப் பார்க்கும்போதோ என் பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்துவிடும்.
பதிலளிநீக்குவயல் வரப்பு வழியாக நடந்து சென்றிருக்கிறேன். தண்ணீப் பாம்புகளைப் பார்த்திருக்கிறேன். அறுவடைக்குப் பிறகு சில வாரங்களில் வயலில் நடக்கும்போது காலில் நிறைய குத்தியிருக்கிறது.
கிராமங்களை விட்டு, அப்படி என்ன இருக்கு என்று எல்லோரும் புலம் பெயருகிறோம்?
நல்ல அனுபவமாக இருந்திருக்குமே உங்களுக்கும்.
நீக்குநம்ம ஊரிலும் நாங்களும் வயல் வரப்பு வழியாகத்தான் செல்வோம் நெல்லை, கோடை விடுமுறையில் ஹிந்தி வகுப்புகளுக்குச் செல்ல பேருந்துக்குப் பைசா தரமாட்டாங்க. ஸோ குறுக்கால இந்த ஜடாயுபுரம் வழி வயலில் இறங்கி ஒழுகினசேரிக்குப் போய் நாகராஜா கோயில் கிராமத்தில் இருந்த ஹிந்தி டீச்சர் வீட்டுக்குப் போவோம். முழுவதும் நடைதான்.
பாம்பு நிறைய எங்க ஊர்ல....தண்ணிப்பாம்புலருந்து, நல்ல பாம்பு, விரியன் வகை, பச்சைப்பாம்பு என்று நிறைய வரும்..
எனக்கும் காலில் குத்தியிருக்கு வறுவடைக்குப் பிறகு. வீட்டில் செருப்பெல்லாம் பள்ளிக்குப் போறப்ப மட்டும்தான்.
கிராமங்களில் ஒன்று நமக்கு வயல்கள் தோப்புகள் இருக்க வேண்டும் இல்லைனா டவுனில் ஒருவிதம் குடும்பத்தை நடத்தும் விதம் வருமானம் வேண்டும். அதீத ஆசைகள், குறிக்கோள்கள் அதாவது படிப்பு விஷயத்தில் சொல்கிறேன். இல்லைனா அப்படிப் படிச்சாலும் மீண்டும் கிராமத்திற்கு வந்து அங்கு நாம் படிச்சதை எப்படிப் பயன்படுத்தலாம்னு யோசிக்கணும்....
ஆனா பொதுவாகப் படிக்க விரும்புவது, பெரிய வீடு வாங்கணும் பல லட்சங்கள் சம்பாதிக்கணும்னு நினைச்சா .....இப்படியான பல பல ஆசைகள் வரும் போது....கிராமத்திலிருந்து புலம் பெயரத்தானே செய்வோம்? எல்லாத்துக்கும் அடிப்படை ஆசைகள். ;low profile வைச்சா வாழலாம். அல்லது ஊரில் பள்ளியில் அல்லது கல்லூரியில், துளசி, அவர் மனைவி போல ஆசிரியராக வேலை செய்தால்....ஊரிலேயே அமைதியான சூழலில் சுற்றுப்புறம் மலைகள் ரப்பர் தோட்டங்கள், ஆறுகள் என்று வாழலாம். அவர் இருக்கும் இடம் அப்படியான இடம். அங்கும் வெயில் கொளுத்துகிறது.
நன்றி நெல்லை
கீதா
தென்னந்தோப்புக்கு அந்தப்புறம் ஜயாயுபுரீஸ்வரர்... படம் தெரியவில்லை. திரும்பவும் அட்டாச் செய்யணூம் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஜடாயுபுரீஸ்வரர் வருவார். போட்டிருக்கேனே கடைசில....கோயில் படங்கள் அடுத்த பதிவில் வரும்.
நீக்குபதிவை சரியா வாசிக்கறதே இல்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......
காணொளியும் பார்க்கலை நீங்க பார்த்திருந்தா கீழ வரியில் சொல்லியிருக்கேனே பார்த்திருந்தா கடைசில தெரியும் கோயில்
கீதா
ஆற்றில் வெள்ளம் வந்திருக்கும் அந்த இரண்டு படங்களும் மிகவும் கவர்கின்றன.
பதிலளிநீக்குஇன்னமும் உங்கள் ஊரில் இவைகள் இருப்பதே மகிழ்ச்சி.
திருவண்பரிசாரத்திற்குப் போனால் நான் கோவில், பஜனை மடம், கோவில் எதிரே உள்ள திருக்குளம் ஆகியவைகளை மாத்திரமே படங்கள் எடுத்திருக்கிறேன்.
வெள்ளம் வந்தப்ப, ஆறு எங்க இருக்குன்னே தெரியலை. நான் வீடியோ எடுத்துப் போட்டிருந்தேனே.
நீக்குஇன்னமும் உங்கள் ஊரில் இவைகள் இருப்பதே மகிழ்ச்சி.//
அதே நெல்லை. ஆனால் ஹைவேலருந்து ஊருக்குள் வரும் பாதை அந்த முக்காமைல் தேரே கால் வாய்க்கால் அப்புறம் எல்லாம் வயல்கள் போயே போச் எல்லாம் குடியிருப்புகளாக மாறிவிட்டன. ஊருக்குள் வரும் பேருந்தை மிச் செய்துவிட்டல் ஓட்டாபீஸ் வரை வரும் பேருந்தில் வந்து ஓட்டாபீஸிலிருந்து முக்கா மைல் வழியாதானே முன்ன எல்லாம் நாங்க பள்ளி கல்லூரிலருந்து அந்தச் சாலை வழியாகத்தானே நடந்து வர வேண்டும். லைட் அவ்வளவாக இருக்காது. எனவே வீட்டில் பயப்படுவாங்க.
திருவண்பரிசாரத்திற்குப் போனால் நான் கோவில், பஜனை மடம், கோவில் எதிரே உள்ள திருக்குளம் ஆகியவைகளை மாத்திரமே படங்கள் எடுத்திருக்கிறேன்.//
அடுத்த முறை இங்கு அப்புறம் பீமநகரி அது பத்தியும் வரும் அங்கும் போய்ட்டு வாங்க.
நன்றி நெல்லை
கீதா
அட... இந்த நுழைவு வாயிலைப் பார்த்திருக்கிறோமே.. படம் எடுத்திருக்கிறோமே என்று தோன்றியது.
பதிலளிநீக்குபஜனை மட (நம்மாழ்வார் தாயார் இருந்த இடம்) படம் பார்த்தவுடன் நினைவுக்கு வந்துவிட்டது.
ஆமாம் இரண்டும் பார்த்திருப்பீங்க படங்களும் எடுத்திருப்பீங்க. உடையநங்கை இருந்த இடம்.
நீக்குஅடுத்த பதிவில் எங்க ஊர் புதுக்கதைகளைப் பார்க்கலாம். அது சரி நான் எழுதினாலும் நீங்க வாசிப்பீங்களா என்ன!!ஹாஹாஹாஹா
கீதா
கிராமத்துல குப்பை கொட்டறாங்கன்னு அலுத்துக்கறீஙகளே..
பதிலளிநீக்குஎங்கள் வளாகத்தில் பசங்க, சிப்ஸ் சாப்பிட்டுவிட்டு பாக்கெட்டை புல் வெளிகளில் கடாசிட்டுப் போவதும், நீச்சல் குளத்தில் கற்களை எறிந்து விளையாடுவதும், மிஞ்சின சப்பாத்திகளை, புறாக்களுக்கு உணவிட்டு புண்ணியம் பெற்றுக்கொள்கிறோம் என்று நினைத்து பொது இடங்களில் மாடியிலிருந்து யாரும் பார்க்காத நேரத்தில் வீசிவிடுவதும் நடக்கிறது.
இதுக்கு கிராமங்கள் எவ்வளவோ தேவலை
நெல்லை இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. நீங்க இருக்கறது காலனி. அங்கு அப்படி குப்பை போடுவது அநாகரீகம் தான். ஆனா அங்கு சுத்தம் செய்யறவங்க இருப்பாங்க.
நீக்குகிராமங்களில் இப்படிக் குப்பைகள் போடும் போது அது வாய்க்கால் வயல், ஆடு மாடுகள், ஆற்றில் போய் சேரும் போது வயல்களுக்கு எவ்வளவு கெடுதல்? ஆடு மாடுகளுக்கு எவ்வளவு கெடுதல்? அப்புறம் எப்படி நல்ல பால் கிடைக்கும்?
கீதா
இந்தக் குப்பைகள் எல்லாம் தண்ணீர் போக்கை தடுத்துவிடுகின்றன. அப்ப ஊருக்குள் தண்ணீர்வரும் வயல்களில் தண்ணீர் வடியாது குப்பைகளும் சேர்ந்துவிடும் அதுவும் ப்ளாஸ்டிக் குப்பைகள் பயிர்களுக்கு நலல்தில்லையே. இயற்கையான பூமி முக்கியம் இல்லையா? அந்த சென்ஸ் வேண்டும் மக்களுக்கு இவ்வளவு அழகான சுற்றுச்சூழலை கெடுக்கிறோமே என்று. நாம நகரத்துல ஏற்கனவே புகைலதான் இருக்கோம்...குப்பைகளோடுதான் வாழறோம். அதுக்காக உங்க குடியிருப்புல அறிவிலிகள் போடும் குப்பைகளை ஜஸ்டிஃபை செய்யலை. ஆனா கிராமங்கள் ஒரு நாடின் உயிர்நாடி.
நீக்குகீதா
ஆஹா! மிகவும் அழகான ஊரில் வசித்திருக்கிறீர்கள். என்ன அழகு! 1,2,3,5,8,12,13,14 படங்கள் தெரியவில்லை.
பதிலளிநீக்குநன்றி பானுக்கா. இன்னும் சுற்றி நிறைய உண்டு, நான் கொஞ்சம் தான் எடுத்தேன் அதைப் போடுகிறேன்.
நீக்குஏன் அப்டங்கள் தெரியலை?
கீதா
அழகோ அழகு! எங்களை உடன் அழைத்துச் சென்றது மேலும் அழகு! அப்படியே இக்காட்சிகளின் குளுமையை, ஈரமண்ணை, ஓடையின் சலசலப்பை, கிராமத்தின் இயற்கை அழகை, உணர்ந்தேன். நன்றி கீதா. நீங்கள் நலம் தானே?
பதிலளிநீக்குவாங்க கிரேஸ் நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே. நன்றி கிரேஸ் ஆமா ஊர் ரொம்ப அழகு இப்பவும் சில வயல்கள் கட்டிடங்களாக ஆனாலும் இப்பகுதி அப்படியே இருக்கிறது.
நீக்குகீதா
நான் ஜடாயுபுரம் என்பது ஜடாயுப் பாறை என்று நினைத்து விட்டேன். போட்டோ எல்லாம் ஒரே மாதிரி வயல் படமாக உள்ளதால் சிறப்பு அம்சங்கள் எதுவும் புலப்படவில்லை. ஆனால் காக்கைகள் + குப்பை ஒரு தனித்தன்மை கொடுக்கிறது. கா கா என்று கத்தினாலும் இந்த மனிதர்களுக்கு உரைப்பதில்லை.
பதிலளிநீக்குரகு ராய் இறந்தது தெரியுமா?
Jayakumar
ஓ! அண்ணா இப்பக்கம் முழுவதும் வயல்கள்தான் ஆரம்பத்தில் தென்னந்தோப்புகள் அப்புறம் வயல்கள்தான் இன்னும் பயி ர் வளர்ந்திருந்தால் செமையா இருக்கும் நாளைய அப்திவில் கோவில் சுற்றி தோட்டங்கள் இருப்பதைப் பார்க்கலாம். நான் இங்கு சில பகுதிகளுக்குச் செல்லவில்லை. சென்றிருந்தால் இன்னும் எடுத்திருக்கலாம்.
நீக்குஆனால் காக்கைகள் + குப்பை ஒரு தனித்தன்மை கொடுக்கிறது. கா கா என்று கத்தினாலும் இந்த மனிதர்களுக்கு உரைப்பதில்லை.//
ஹாஹாஹா அதைச் சொல்லுங்க. நன்றி ஜெ கே அண்ணா.
ரகு ராய் அவர்கள் photographer, photojournalist முதல் ஃபோட்டோ ஜெர்னலிஸ்ட் தெரியும் அண்ணா. நேற்றுதான் அறிந்தேன் செய்தி பார்த்தப்ப தெரிந்தது. 26 ஆம் தேதி மறைந்துவிட்டார்.
கீதா
திருவண்பரிசாரம் ஊர் ரம்யமாக இருக்கிறது. பார்க்க அழகுதான்.
பதிலளிநீக்குபச்சைபசேல் எனும் வயல்வெளியும், தென்னைமரங்களும், மலைகளும் அழகு.
ஜடாயுபுரம் போகும் வழி (நுழைவு வாயில்) அழகு.
பக்கத்தில் இருக்கும் இப்போது நம்மாழ்வார் சன்னதி, முன்பு பஜனை மடம் அழகு.
வாங்க கோமதிக்கா. ஆமா ஊர் ரம்யமாக இருக்கும். இப்பவும் சுற்றிலும் தோப்புகள் வயல்கள் இருக்கின்றன என்றாலும் ஹைவே சாலைக்குப் போகும் வழியில் முன்னர் இரு பக்கமும் இருந்த வயல்கள் அழிந்து காலனிகளாகிவிட்டன.
நீக்குஜடாயுபுரம் இன்னும் அழகாக இருப்பது மனதிற்குச் சந்தோஷமாக இருக்கிறது.
நாங்கள் முன்னர் கூட்டுக் குடும்பமாக இருந்த பாட்டி வீட்டிற்கு மிக அருகில் அந்த நம்மாழ்வார் சன்னதி. வீடு படத்தில் தெரியாது அது இப்பக்கம் இருக்கு.
நன்றி கோமதிக்கா
கீதா
குப்பை கொட்டாதீர்கள் நாங்கள் எவ்வளவு தான் சுத்தம் செய்வது என்று காகங்கள் சொல்கிறதோ! இரண்டு அண்டம்காக்கைகளும் அழகு.
பதிலளிநீக்குகாணொளி அருமை. தென்னைமரங்களுக்கிடையில் ஜடாயுபுரீஸ்வரர் கோயில் தெரிகிறது வெள்ளை கலர் கோபுரம் தெரிகிறது.
குப்பை கொட்டாதீர்கள் நாங்கள் எவ்வளவு தான் சுத்தம் செய்வது என்று காகங்கள் சொல்கிறதோ! இரண்டு அண்டம்காக்கைகளும் அழகு.//
நீக்குஹாஹாஹா ஆமாம். அதுங்களுக்கு வேண்டிய சாப்பாடும் இல்லை அதில். பாவம். ஊரை சுத்தமாக வைத்துக் கொள்வதில் நம் பங்கு பெரிதாக இருக்க வேண்டும் இல்லையா.
காணொளி அருமை. தென்னைமரங்களுக்கிடையில் ஜடாயுபுரீஸ்வரர் கோயில் தெரிகிறது வெள்ளை கலர் கோபுரம் தெரிகிறது.//
மிக்க நன்றி கோமதிக்கா. காணொளியை ரசித்ததற்கு. ஆமாம் கடைசில வெள்ளையாகக் கோபுரம் தெரியும்.
நன்றி கோமதிக்கா
கீதா
இங்கு குடியிருப்பிலும் மாடியிலிருந்து கீழே குப்பையை கொட்டுகிறார்கள்.
பதிலளிநீக்குதலைமுடியை சீவிட்டு சீப்பில் உள்ள முடியை சுருட்டி ஏறிகிறார்கள். சிறு குழந்தைகள் குப்பை கொட்டினால் கொட்டாதே என்று சொல்ல வேண்டிய பெரியவர்கள் குப்பை கொட்டும் போது நாம் என்ன செய்வது!
தினம் குப்பை எடுப்பவர் வருகிறார் . அப்படியும் குப்பையை குப்பை கூடையில் போடாமல் இப்படி தூக்கி ஏறிவது என்ன நியாயம்?
சிறு குழந்தைகள் குப்பை கொட்டினால் கொட்டாதே என்று சொல்ல வேண்டிய பெரியவர்கள் குப்பை கொட்டும் போது நாம் என்ன செய்வது!//
நீக்குஅதைச் சொல்லுங்கக்கா....பெரியவர்கள் செய்வதைப் பார்த்துதானே குழந்தைகள் செய்கின்றனர்.
//தினம் குப்பை எடுப்பவர் வருகிறார் . அப்படியும் குப்பையை குப்பை கூடையில் போடாமல் இப்படி தூக்கி ஏறிவது என்ன நியாயம்?//
நியாயமே கிடையாது. அப்புறம் எப்படி எதிர்காலத்தில் நல்ல சமுதாயம் உருவாகும் இல்லையா? படித்தவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அறிவிலிகள்.
நன்றி கோமதிக்கா
கீதா
அழகே அழகு எல்லாம் அழகு பாடல் நினைவுக்கு வ்னஹ்தது உங்கள் தலைப்பை பார்த்ததும். இயற்கை அழகு கொட்டி கிடப்பது கண் கொள்ளா காட்சி.
பதிலளிநீக்குபறவைகள் பச்சை வயலில் வெள்ளை பறவைகள் அழகு.
அந்தப் பாடலில் இருந்துதான் தலைப்பு பிறந்தது, அக்கா
நீக்குஇன்னும் நிறைய கொட்டிக் கிடக்குது அக்கா. ஊருக்குப் போனால் வீட்டிற்குள் இருப்பதை விட தெருக்களில் நடந்தாலே இயற்கைதான். அதே போல்தான் ஏர்வாடிக்கருகில் இருக்கும் கடம்போடு வாழ்வு கிராமமும் முன்னர் போட்டிருக்கிறேனே...அதுவும் இப்படித்தான் அத்தனை அழகு.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
இத்தகைய காட்சிகளைக் காண நமக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சுற்றிலும் பச்சைப் பசேலென கண்களுக்கு விருந்து. என்னவெல்லாம் கொடுத்திருக்கிறாள் நிலவன்னை. அதனைப் பாதுகாக்காமல் குப்பைகளைக் கொட்டி வீணடிக்கிறோம் எனும்போது மனதில் வேதனை.
பதிலளிநீக்குபடங்கள், காணொளி வழி பார்க்கும்போதே மனதுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. நேரில் பார்க்க இன்னும் அழகு தான்.
எனது பதிவுகளில் பார்க்கும் உத்திராகண்ட் பற்றியும் இங்கே ஒரு வரி சொல்லி இருப்பது மகிழ்ச்சியளித்தது. நன்றி.
ஆமாம் ஜி. சின்ன வயதிலிருந்து திருமணம் ஆகும் வரை, அதன் பின்னரும் அவ்வப்போது சென்று வந்தவை ரசித்தவை. அதன் பின்னர் 20 வருடங்களுக்குப் பிறகு 2021 ல் போயிருந்தப்பதான் வெள்ளம் வந்தது.
நீக்குஇத்தனை கொடை! இயற்கையின் கொடை ஆனால் அதை மனிதர்கள் குப்பை கொட்டி நிஜமாகவே எனக்கு மனம் ரொம்ப வேதனையாக இருந்தது.
படங்கள், காணொளி வழி பார்க்கும்போதே மனதுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. நேரில் பார்க்க இன்னும் அழகு தான்.//
நன்றி ஜி.
ஜி உங்கள் பதிவுகளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...எவ்வளவு அருமையான இடங்கள்.
நன்றி வெங்கட்ஜி.
கீதா