கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஏரி பற்றி எழுதலாம் என்றிருந்தேன். இன்னும் எழுதி முடிக்கவில்லை. எழுதி முடிக்கவில்லை என்பதோடு, ஏரிப்பக்கம் அவ்வப்போது செல்லும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சிகள், பார்த்ததும் புகைப்படங்கள் காணொளிகள் என்று எடுப்பதை உங்களோடு பகிர வேண்டும் என்ற ஆவலும் வந்ததா...(உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ, சுவாரசியமோ இல்லையோ என் ஆசை/திருப்திக்காக உங்களைப்படுத்திவிடுவேன்!) வேகத்தடை எழும்பியது.
"ஏன்? இப்படிச் செய்யேன். ஏரியை முடித்துவிடு. முன்பு ஏரிக்கரைகளில் பார்த்த பறவைகள் பற்றி எழுதியவை அப்படியே நிற்கிறதே! அவ்வப்போது பறவைகள் பற்றி தொடரலாமே! அப்படி எழுதும் போது இப்ப எடுத்தவற்றை அந்தந்தப் பறவைகளைப் பற்றிச் சொல்லும் போது படங்களையும் காணொளிகளையும் (நன்றாக வந்திருந்தால்) சேர்க்கலாமே" என்று நம்ம உள்ள ஒன்று உட்கார்ந்திருக்கே ஈசிசேர் போட்டு ஆசுவாசமாக, விஸ்ராந்தியாக.....அது இப்படித்தான் அவ்வப்போது நல்ல ஐடியாக்களை கொடுக்கும். வெளிய ஒன்னு இருக்கே பரபரன்னு....அது கேட்டால்தானே!
கொஞ்சம் புத்துணர்ச்சியோடு இருந்தால் இணையம் படுத்துகிறது, கூகுள் படுத்துகிறது. அல்லது கணினி ஆமை போல் ஆகிவிடுகிறது. உடனே ஈசிசேர்ல ஆடிக்கிட்டே உள்ளருந்து பேச்சு. "சரி, அப்படினா...ஏதோ எனது மூன்றாவது விழியின் பார்வையிலேன்னு ஒன்னு சும்மானாலும் போட்டு ஒப்பேத்துவியே....மரங்களை எல்லாம் எடுத்தியே அதைப் போட்டு ஒப்பேத்து...எவ்வளவு ஐடியா கொடுத்தாலும் உருப்படியா ஏதாச்சும் செஞ்சாத்தானே. கொடுத்துக் கொடுத்து அலுத்துப் போச்சு!"
உள்ளே இருப்பது பாவம். அது எப்பவுமே உருப்படியா நல்லதுதான்
சொல்லும். அதையும் கொஞ்சம் அமைதிப்படுத்தலாம்னு...
எனது மூன்றாவது விழியின் பார்வையிலே பகுதிக்குக் கொஞ்சம் புத்துணர்வு கொடுப்போம் என்று இப்பதிவு. நிறைய இருக்கின்றன. படங்கள் எடுப்பதற்குக் கேட்பானேன்? இப்படி வித்தியாசமான அழகான மரங்களையும் படங்கள் எடுத்தேனா.... அப்படி எடுத்த படங்கள் இதோ.
1
மரத்தின்
அடி 'தடி'யாக இருக்கிறது பாருங்க
2
மரத்திற்குக் கேடு விளைவிப்பவர்களுக்கும் கூட அம்மரங்கள் அவர்களுக்கு நிழல் தருகின்றன
3
4
வலப்புறம் மேலே அனக்கோண்டா போல ஒன்று தன் தலையைக் கவிழ்த்துப்
பார்ப்பது போல் இருக்கிறதோ? இந்த மரத்தின் வடிவத்தைப் பார்த்தீர்களா? ஆங்காங்கே எவ்வளவு பாக்கெட்டுகள் வைச்சிருக்கு பாருங்க! ஏதேதோ விலங்குகளின் முகங்கள் போன்ற தோற்றங்கள்! ஒரு மரத்தில் இத்தனை
வடிவங்களா!!
5
இந்த மரத்தின் வடிவத்தைப் பாருங்க. ஒரு பெண் தன் கைகளைத் தூக்கிக் கோர்த்துக் கொண்டிருப்பது போல அல்லது ஏதோ ஒரு விலங்கின் / கலைமானின் நீண்ட கொம்புகள் ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டு (லஸ்ஸி என்ற எழுத்துகளுக்கு அருகில் இருக்கும் பகுதி)
6
இதன் வேர்கள் எங்கருந்து வருது பாருங்க. அதன் வடிவம் எவ்வளவு அழகா இருக்கு. சுத்தி சிமென்ட் போட்டு எப்படி மனுஷங்க நாசம் பண்ணி வைச்சிருக்காங்க பாருங்க.
7
இந்த மரத்தின் வேர்களும் வித்தியாசமாக எவ்வளவு அழகாக இருக்கு இல்லையா?....இடையில் சிமென்ட்! இப்படிப் பார்க்கும் போது மனம் ரொம்ப வருத்தமாகிறது.
நிழல் தரும் மரத்திற்குக் கெடுதல்
செய்வதும், உதவி செய்பவருக்குக் கெடுதல் செய்வதும் ஒன்றுதான்.
8
பறவைகள் கூடுகட்ட குச்சிகளைதரும்! கூடு கட்ட
இடமும் தரும்! குடும்பம் நடத்த வீடாய் இருக்கும் மரத்திற்கு, பறவைகள் தங்கள்
மகிழ்ச்சியையும் நன்றியையும் குரலெழுப்பி சங்கீதமாய்த் தெரிவிக்கும். அப்படியான மரங்களின் நிலை சுயநல மனிதர்களால்
பரிதாபமாய்.....
9
இப்படத்தில் வலப்புறம் கவனித்துக் கொள்ளுங்கள் யானையின் துதிக்கை போன்று?...அப்படியே கீழே வாருங்கள்...
10
இப்படத்தில் உங்களுக்கு ஏதேனும் Technic நான் பயன்படுத்தியிருப்பது தெரிகிறதா என்று சொல்லுங்கள்.
முதுகுச் சுமையுடன் ஒருவர் கைககளால் மரத்தைப் பிடித்துச் சரியாமல் தாங்குவது போன்று அல்லது பிடித்துக் கொண்டு ஏற முயல்வது போன்று. அதன் தொடர்ச்சியாய் கீழே...
11
யானை
தும்பிக்கையை நீட்டியிருப்பது போல் தெரிகிறதா?
12
இதோ
இன்னும் கொஞ்சம் கோணம் மாற்றி, Close up
13
மரத்தின்
அடி வேர்களின் வடிவம் - யானைகள் துதிக்கையுடன் போல் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? கீழே வாங்க
14
இடப்புறம்
யானை யானையின் மேல் ஒரு யானையின் துதிக்கை நீண்டு கீழே, இடப்புற யானையின் அடியில் ஒரு
குட்டி யானை, கூடவே இரு யானைகள் படுத்துக் கொண்டு தும்பிக்கையை நீட்டியிருப்பது போல் கூட்டமாக யானைகள்.....என்
கண்ணிற்குப்படுகிறது.
15
அதே படம் ...horizontal
ஆலமரம்போல அடர்ந்தே நானும்
வளர்ந்துநல் நிழல்தரவேண்டும்
தென்னைக்கும் உண்டிங்கு ஆசை..
வாழைபோல, வந்தோமா
பயன் தந்தோமா சென்றோமா
என்று வாழ்வதே வாழ்க்கை
வருடங்கள் பலவாழ்ந்து
வாழ்க்கை போரடிக்கிறது..
ஆலமரத்துக்கும் இருக்கிறது
அடுத்த வாழ்க்கை மீதான ஆசை..
இங்கு எவரும்
தன் வாழ்க்கையை
வாழ்வதேயில்லை.
----எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்
தடைகள் வந்தாலும்
இடத்தைக் குறுக்கினாலும்
தகர்த்தெறிந்து
தலைமுறை வளர்க்க
விழுதுகளை
ஊன்றி நிற்கும் ஆல்!
ஏரிக்
கரையிலே
தலைமுறை விழுதுகள்
ஊன்றி வளர்த்த
தாயை
தாங்கி நிற்கும் அழகு!
படங்களை ரசித்தீர்களா? அடுத்த
பதிவில் சந்திப்போம்...
--------கீதா


















வீடு மாறியதில் ஏரி பக்கமாக ஆகிவிட்டதா? தினசரி விஜயமா? சில்லென்று இருக்குமே...
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம். 15 நிமிட நடை. பெரும்பாலும் தினசரி என்று சொல்லலாம். சில்லென்று இருப்பதோடு, ஜென் நிலைக்குச் செல்ல உதவும் சூழல். உள்ளே நிறைய மரங்கள் ஏரிக்கரையில்...காடு போன்று அதை பூங்கா போலச் செய்கிறார்கள். பழைய வீட்டருகிலும் ஏரிகள் உண்டு. ஆனால் பறவைகள் மிகவும் குறைவு. அங்கும் நடந்த போது படங்கள் எடுத்திருக்கிறேன் எல்லாமாக வரும். ஒவ்வொரு பறவை பற்றிச் சொல்லும் போதும்...
நீக்குவந்த புதிதில் இருந்த வீட்டருகில் இருந்த ஏரி அட்டகாசமான ஏரி அங்கும் நிறைய பறவைகள். அதன் பின் இப்ப இங்கு பறவைகள் சரணாலயம் எனலாம் அந்த அளவு பறவைகள். இப்ப சீசன் வேறயா....இந்த இடம் மிகவும் பிடித்துவிட்டது. பழைய இடம் போலவே அத்தனை வசதிகள் கூடவே போனஸ் ஆழகான ஏரி!
கீதா
பறவைகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்..
பதிலளிநீக்குபடமெடுத்து அது என்ன குடும்பம் என்று தேடுவீர்களோ... என்னைப் பொறுத்தவரை வஸந்த் சொல்வது மாதிரி 'எல்லாமே குருவிங்கதான் பாஸ்'!
பறவைகள் பலவிதம்....ஆமாம் ஸ்ரீராம் ஒவ்வொன்றைப் பற்றியும் தெரிந்துகொள்ளும் ஆர்வம். இப்ப ஒரு சில மனப்பாடம். பார்த்ததும் சொல்லும் அளவு,
நீக்கு//வஸந்த் சொல்வது மாதிரி 'எல்லாமே குருவிங்கதான் பாஸ்'!//
ஹாஹாஹா....
கீதா
மூன்றாவது விழி பார்வை ஓகே.. பழைய வீட்டின் செல்லம் நீங்கள் வீடு மாறி வந்து மீண்டும் அங்கு சென்றபோது நடத்திய பாசப் போராட்டத்தை சில பழைய சம்பவங்களோடு பதிவாக்கலாமே...
பதிலளிநீக்குஎழுதத் தொடங்கிவிட்டேனே. அங்குள்ள செல்லங்கள் பற்றி சில சம்பவங்கள் உண்டு. பூனாச்சு, பைரவ பைரவி என்று!!
நீக்குஎழுதுகிறேன் ஸ்ரீராம். அது மட்டும் எழுதாமல் கூடவே வேறு ரெண்டும் போடணும். இல்லைனா வரும் 6 பேரில் மூன்று பேர்தான் கருத்து போடுவீங்க.
கீதா
எனக்கும் மரங்களை வித்தியாசமாக படங்கள் எடுப்பது பிடிக்கும். அதிகாலை லேசான இருளில் வெளிச்சம் வந்தும் வராமலும் இருக்கும் நேரம் மரங்கள் புதுத் தோற்றம் கொடுக்கும். வித்தியாசமான தோற்றங்கள் கிடைக்கும். சில மரங்கள் எப்போது பார்த்தாலும் நல்ல க்ளிக் கிடைக்கும்.
பதிலளிநீக்குநீங்க போட்டிருந்த படங்கள் நினைவு இருக்கு ஸ்ரீராம். ஆமாம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமாகக் காட்சிகள் படும்.
நீக்கு//சில மரங்கள் எப்போது பார்த்தாலும் நல்ல க்ளிக் கிடைக்கும்.//
யெஸ்ஸூ யெஸ்ஸூ.
கீதா
இரண்டாவது படம் கீழே அமர்ந்து தலையை சரி செய்து கொண்டை போடும் ஒரு பெண்ணின் சிற்பம் போல இல்லை?
பதிலளிநீக்குமுதல் படம் நீங்க சொல்லியிருப்பதுன்னு நினைக்கிறேன் ஸ்ரீராம். நான் எண்களை படத்திற்கு மேலே கொடுத்திருக்கிறேன் .
நீக்குநீங்க சொல்லியிருப்பது முதல் படத்தில் பொருத்திப் பார்க்க முடிகிறது எனக்கு.
நன்றி ஸ்ரீராம்
கீதா
மூன்றாவது நான்காவது படங்கள் பார்த்தபோது நான் முன்னர் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. ஒரு மரம் புதிதாகக் கட்டிய கட்டிடத்தின் மேல் சாய்ந்து இருக்கும். நின்ற களைப்பு தீர அந்தக் கட்டிடத்தின் மீது முதுகு சாய்ந்து நிற்கிறது என்று எழுதி முன்னர் அந்தப் படம் வெளியிட்டிருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன் எதற்கோ அந்தப் படத்தைத் தேடினால்....
பதிலளிநீக்குகாணோம்!
நீங்கள் பகிர்ந்திருந்த படம் என்ன படம் என்று யோசிக்கிறேன்.
நீக்குஎப்படி ஸ்ரீராம் அப்படம் காணாமல் போகும் ப்ளாகிலா?
கீதா
ஐந்தாவது மரம் எனக்கு ஒரு மனிதன் சோம்பல் முறிப்பது போலவும், அல்லது மேலே நிமிர்ந்து ஏதோ ஒரு வெயிட்டை கையில் வைத்துக்கொண்டு அவ்வளவு தூரம் மேலே கொண்டு போகவேண்டுமா என்று நிமிர்ந்து பார்ப்பது போலவும் தோன்றியது!
பதிலளிநீக்குஇப்ப நீங்க சொன்னப்புறம், ஆமாம்ல என்று அப்படியும் தோன்றுகிறது, ஸ்ரீராம்,.
நீக்குபாருங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காட்சி புலப்படுகிறது!
கீதா
ஆறாவது படம் நான் தாராசுரத்தில் எடுத்த மரம் படங்களை நினைவு படுத்தியது!
பதிலளிநீக்குநினைவிருக்கு, ஸ்ரீராம்.
நீக்குகீதா
ஏழாவது படம் மூட மனிதன் மேலே அந்த மரத்தின் வேர் கட்டிடத்தை அணுகாமல் பார்த்துக் கொள்வதாக நினைக்கிறானோ என்னவோ.. பூமிக்கு கீழே அது எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறதோ!
பதிலளிநீக்குஅதைச் சொல்லுங்க. ஒரு நாள் வேர்கள் பிளந்து விடுமோ அருகிலிருக்கும் கட்டிடங்களைன்னு தோன்றியது. ஆனா பாருங்க, மழைத் தண்ணீ ர் உள்ள போகுமான்னும் தெரியலை தண்ணீருக்கு என்ன செய்யுமோ? கொஞ்சம்தானே கிடைக்கும்.
நீக்குநான் ஆலம்மைன்னு ஒன்று எழுதத் தொடங்கியதில்....
மனுஷங்களை என்ன சொல்ல?
கீதா
ஒன்பதாவது படத்தில் ஒரு பெரிய கழுகு பக்கவாட்டில் நிற்பது போல.. அல்லது எறும்புத்தின்னி போன்ற உயிரினம்.
பதிலளிநீக்குஎறும்புத் தின்னி போன்ற உயிரினம் கொஞ்சம் பொருந்திப் போகுது ஸ்ரீராம். கழுகு?
நீக்குகீதா
10 வது படம் நீங்கள் சொல்வது போலவும் தோன்றுகிறது. மரத்திலிருந்து ஒருவர் தொங்குவது போலவும் தோன்றுகிறது! மேலும் அதே மனிதன் (!) முன்னால் நிற்கும் மரத்துக்கு துணையாய் இன்னொரு மரத்தை கைகளில் தூக்கிப் பிடித்திருப்பது (பின்னால் தெரியும் கிளைகள்) போலவும் தோற்றம் தருகிறது!
பதிலளிநீக்குயெஸ்...தொங்குவது போலவும்....யெஸ் அடுத்தது நீங்க சொல்லியிருப்பதும்....
நீக்குகூடவே இதில் அது வேறு மரம் இந்தக் குண்டு கிளைகள் வேறு மரம். ஆனால் கேமராவில் அப்படித்ட் தெரிவது போல வைத்து எடுத்தேன்.
நன்றி ஸ்ரீராம்
கீதா
12 வது படத்தில் நிமிர்ந்து பார்க்கும் மனிதன் க்ளோசப்பில்! 13 வது படம் யானையின் துதிக்கையில் போல தெரிவதை விட ஒரு கிழவி ஆய்ந்து ஓய்ந்து மரத்தில் சாய்ந்து அமர்ந்திருப்பது போல தோன்றுகிறது.
பதிலளிநீக்குஓ! உங்களுக்கு வேறு தோன்றியிருக்கு பாருங்க, இரண்டிலும்! ஒவ்வொருவருக்கும் எழும் கற்பனை....கண்களும் மூளையு போடும் ஸ்கெட்ச்!!!! ஒவ்வொரு மனிதரும் unique என்பது ஊர்ஜிதமாகிக் கொண்டே போகிறது இல்லையா? ஸ்ரீராம்
நீக்குகீதா
14 வது படம் பார்த்தபின் யானை கண்ணுக்குத் தெரிந்து, then now 13 லும் தெரிகிறது!
பதிலளிநீக்குஹாஹாஹா....நன்றி நன்றி ஹப்பா நாம நினைச்சது ஒருவழியா அலைன் ஆகிருக்கே!!!!
நீக்குகீதா
ஹிஹிஹி.. நான் எப்பவோ எழுதிய ஒன்று இங்கே தந்திருப்பதற்கு நன்றி! ஆலமரத்துக்கான உங்கள் வரிகள் டாப்.
பதிலளிநீக்குஎல்லாம் பொ வை கொ தான் உங்கள் வரிகளை. மரம் பற்றி என்றதும் தேடினேன் ஃபைலில். இது பொருத்தமாக இருக்கவே போட்டுவிட்டேன்!
நீக்குவரிகள் பற்றிச் சொன்னதுக்கு நன்றி ஸ்ரீராம்.
கீதா
அழகான, ஜாலியான, ரசிக்க வைத்த பதிவு. கண்ணுக்கு விருந்து. மனதுக்கும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம் எல்லாம் பார்த்து ஒவ்வொன்றும் பற்றி சொன்னதுக்கு
நீக்குகீதா
அனைத்து படங்களும் அழகு கீதா.
பதிலளிநீக்குஒவ்வொன்றும் ஒவ்வொரு தோற்றம்.
உற்றுப்பார்த்தால் நிறைய உருவங்கள் தெரியும்.
வேர்கள் நடைபாதையை உடைத்து கொண்டு இருக்கிறது பாருங்கள்.
வேர்களுக்கு அவ்வளவு வலிமை. முன்பு அவை எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் தன் வேர்களை பரப்பி சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு இருந்தது.
இப்போது நாம் பயணிக்க சாலைகள் அமைக்கும் போது அவை வேர்கள் பரப்பி போவதை தடை செய்கிறார்கள். குறுக்கி வாழ விடுகிறார்களே ! என்று மகிழ்ச்சி அடைய வேண்டும்.
போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் மரங்களை வேருடன் சாய்த்து விடுகிறார்கள்.
ஆமாம் அக்கா. இப்ப பாருங்க ஸ்ரீராமிற்குத் தோன்றியதையும் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு சமயமும் ஒவ்வொன்று மனதில் வரலாம்.
நீக்குவேர்கள் முன்னரே இருந்திருக்கும் நடைபாதை அப்புறம் அமைச்சிருப்பதுதானே. நீங்க சொல்லியிருப்பது போல் அட்லீஸ்ட் குறுக்கி வாழ விடுகிறார்கள் என்று. வெட்டாமல்...அதற்கு மிகழ்ச்சி அடைய வேண்டும் தான். அது எனக்குத் தோன்றும் தான். வெட்டாமல் விட்டிருக்காங்கன்னு. ஆனால் மெட்ரோ போட நிறைய மரங்கள் வெட்டப்பட்டனவாம்...இதுவும் சில சமயங்களில் பேசுபொருளாகிறது இங்கு.
நன்றி கோமதிக்கா
கீதா
மரங்கள் - நமக்குப் பல விதமான பாடங்களையும் தருபவை. இவற்றைப் பார்க்கும்போது கற்பனையைக் கன்னியைச் சிறகடித்துப் பறக்கவிட்டால் பலவித உருவகங்களையும், அதற்கான எண்ணங்களையும் நமக்குக் காண்பித்துத் தருவாள். நானும் சில இடங்களில் இப்படியான மரங்களின் வடிவங்களை படம் எடுத்து வருவதுண்டு. சமீபத்தில் கூட இப்படி ஒரு படம் எடுத்தேன்.
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகு. தொடரட்டும் கேமரா கண்களின் வழியான பார்வை....
ஆம் வெங்கட்ஜி பலவித பாடங்களைத் தரும். நம் கண்ணிற்குப் புலப்படுவது நம் கற்பனைக் கண்ணில் விரிவதுதானே!
நீக்குநீங்களும் எடுப்பீங்க.....எடுப்பதை நீங்கள் பகிர்வீர்களே. பகிருங்கள் ஜி.
நன்றி வெங்கட்ஜி
கீதா
//மரத்தின் அடி 'தடி'யாக இருக்கிறது பாருங்க//
பதிலளிநீக்குஆமாம்,அதிலும் சின்ன விநாயகர் முகம் தெரிகிறது.
//மரத்திற்குக் கேடு விளைவிப்பவர்களுக்கும் கூட அம்மரங்கள் அவர்களுக்கு நிழல் தருகின்றன//
இதிலும் ஒரு எலும்பும் தோலுமாக ஒரு குட்டி யானை படுத்து இருப்பது போல அடிமரம் காட்சி அளிக்கிறது.
//வலப்புறம் மேலே அனக்கோண்டா போல ஒன்று தன் தலையைக் கவிழ்த்துப் பார்ப்பது போல் இருக்கிறதோ?//
இருக்கிறது.
//இந்த மரத்தின் வடிவத்தைப் பார்த்தீர்களா? ஆங்காங்கே எவ்வளவு பாக்கெட்டுகள் வைச்சிருக்கு பாருங்க! ஏதேதோ விலங்குகளின் முகங்கள் போன்ற தோற்றங்கள்! ஒரு மரத்தில் இத்தனை வடிவங்களா!!//
வளையம் வளையமாக கழுத்தில் அணிந்து கொள்வார்களே ஆப்பிரிக்க நாட்டு பெண்கள்
அது போல இந்த மரம் இருக்கிறது.
ஆமா க்கா எனக்கும் தோன்றியது சின்ன விநாயகர் முகம் மட்டும்
நீக்குயெஸ் எலும்பும் தோலுமாக ஆனை படுத்திருப்பது தெரிகிறது.
வளையம் வளையமாக கழுத்தில் அணிந்து கொள்வார்களே ஆப்பிரிக்க நாட்டு பெண்கள்
அது போல இந்த மரம் இருக்கிறது.//
அட! நல்ல கற்பனை! கோமதிக்கா
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
கலைமானின் நீண்ட கொம்புகள் நடுவில் கரடி குட்டியின் முகம் தெரிகிறது எனக்கு.
பதிலளிநீக்கு//இப்படத்தில் வலப்புறம் கவனித்துக் கொள்ளுங்கள் யானையின் துதிக்கை போன்று?...அப்படியே கீழே வாருங்கள்...//
காண்டாமிருகம் வாயை திறந்து கொண்டு இருப்பது போன்ற தோற்றமும், யானையின் துதிக்கையும் தெரிகிறது.
//இரு யானைகள் படுத்துக் கொண்டு தும்பிக்கையை நீட்டியிருப்பது போல் கூட்டமாக யானைகள்.....என் கண்ணிற்குப்படுகிறது.//
ஆமாம், தெரிகிறது.
ஸ்ரீராம் கவிதை நன்றாக இருக்கிறது.
//பயன் தந்தோமா சென்றோமா
என்று வாழ்வதே வாழ்க்கை//
ஆமாம், அது நல்ல வாழ்க்கைதான்.
விழுதுகள் தாங்கும் ஆலமரம். அருமை.
கலைமானின் நீண்ட கொம்புகள் நடுவில் கரடி குட்டியின் முகம் தெரிகிறது எனக்கு.//
நீக்குபாத்தீங்களா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காட்சிக் கற்பனை!. எனக்கும் உள்ளே ஒரு விலங்கின் முகம் தெரிந்தது அக்கா.
அட! காண்டாமிருகத்தின் வாய் போலவும் இருக்கோ நீங்க சொன்னதும் அப்படியும் தெரிவது போல் இருக்கு.
//ஆமாம், தெரிகிறது.//
ஹப்பா +2 ஸ்ரீராமும் கடைசில சொல்லிருக்கிறார். நான் நினைத்ததும் நீங்க சொல்லிருபப்தும் அலைன் ஆகிய படம்!!
ஸ்ரீராம் மரங்களை வைத்து தத்துவம் எல்லாம் சொல்லிருக்கார் பாருங்க! இல்லையாக்கா
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
எல்லா மரங்களின் படங்களையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குகொஞ்சம் யோசித்தால் ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு எண்ணத்தை உருவாக்குகிறது.
வாங்க நெல்லை. நன்றி.
நீக்குநிச்சயமாக, நெல்லை, ஒவ்வொரு மரமும் கதை கூடச் சொல்ல வைக்கும் அளவு எண்ணங்களை உருவாக்கும்.
கீதா
எவ்வளவு மரங்களை (இங்கு கொடுத்திருப்பது உட்பட) அழித்து அல்லது வளரவிடாமல் தடுத்து தங்கள் இடமாக்கி அதில் வீடு, ரோடு கட்டியிருக்கிறார்கள் பாருங்கள்.
பதிலளிநீக்குமத்தவங்களுக்கு என்றால் அறிவுரை தானாகப் பீறிடுகிறது. நமக்கு வரும்போது, நம் இடம், மரம் இல்லாவிட்டால் பரவாயில்லை என்று ஆகிவிடுகிறது
உங்கள் முதல் வரியை அப்படியே டிட்டோ செய்கிறேன். இங்கு நம் வீட்டை ஒட்டி இருக்கும் முக்கிய சாலை முழுவதும் இப்படியான மரங்கள். அப்புறம் ஏரிக்குள்ளும் வெளியேயும். ஏரிக்குள்ளே, பூங்காவில்/காட்டில் பரவால்ல எல்லாம் இயற்கையாக அப்படியே இருக்கு ஆனா வெளியதான் சாலை, நடைபாதை போடும் போது இப்படி...நல்ல காலம் வெட்டலை. நிறைய வாதாம் மரங்கள் இருக்கின்றன. வாதாங்கொட்டைகள் சாலைகளில் இரைந்துகிடக்கின்றன.
நீக்குஇரண்டாவது வரியையும் டிட்டோ!
நன்றி நெல்லை
கீதா
ஆலமரம்தான் மனிதர்கள் வாழ்க்கைக்கு எப்போதும் ஒரு செய்தியைச் சொல்வது போலத் தோன்றும்.
பதிலளிநீக்குயாராவது கத்துக்கறாங்களா?
ஆலமரம் நிறைய சொல்லும்., வாழை மரமும் கூட. அப்படிப் பார்த்தால் இயற்கையின் படைப்புகளில் எல்லாமே நமக்குப் பாடங்கள் சொல்கின்றன. யோசிப்பதும் யோசிக்காததும்ம், கேட்பதும் கேட்காததும்அவரவர் விருப்பத்தில்!!!
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. மரங்களின் படங்கள், அவற்றைப் பற்றிய விரிவான கருத்துக்கள் என பதிவு அருமையாக உள்ளது. நடுவே மரத்தைப்பற்றி கவிதைகள் மனதை கவர்ந்தன. சகோதரர் ஸ்ரீராம் எழுதியதும், உங்களின் கவிதைகளும் படிக்கவே மிகவும் இனியதாக உள்ளது. ஒவ்வொரு படத்தையும் பெரிதாக்கிப் பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படங்களையும் கருத்துகளையும் ஸ்ரீராமின் கவிதையையும் ரசித்தமைக்கு நன்றி கமலாக்கா.
நீக்குஅச்சச்சோ பெரிசு படுத்தினா படம் நல்லாவே இருக்காதே!
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்கு/உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ, சுவாரசியமோ இல்லையோ என் ஆசை/திருப்திக்காக உங்களைப்படுத்திவிடுவேன்!)/
"அதென்ன அப்படி சொல்லி விட்டீர்கள்? நீங்கள் படங்கள் எடுக்கும் கோணங்களை, அழகான அந்த படங்களை நாங்கள் என்றாவது ரசிக்காமல் விடுவோமா ?" என எங்களின் உள்ளும் புறமும் பதிலுக்கு கேள்விகளை தொடுக்கும் என்பது நீங்கள் அறியாததா. சகோதரி.!! .
உங்கள் புகைப்படங்கள் எப்போதுமே துல்லியம். இன்று அத்தனை வித்தியாசமான மரங்களின் படங்களும், அவற்றைப் பற்றிய தோற்ற விளக்கங்களையும் ஒவ்வொரு படங்களையும் பெரிதாக்கி பார்த்துப் பார்த்து ரசித்தேன்.
நீங்கள் சொல்வது போல மரத்தின் வேர்களின் வெளிப்பகுதி படங்கள் பலவித உருவங்களை பெற்றுள்ளன. யானை தும்பிக்கை படங்களை ரசித்தேன்.மரம் உரம் பெற்று தடிமனாக இருக்கும் படங்களும் அருமையாக வித்தியாசமாக இருக்கிறது.
விழுதுகளை ஆதரவாக ஊன்றி நிற்கும் ஆலமரங்களும் அழகாக உள்ளது.அவற்றிற்கான கவிதைகள் அற்புதமாக உள்ளன. இறுதியாக இருக்கும் ஆலமரங்கள் படங்கள் ஆங்காங்கே மிக அழகான செவ்வான நிறத்துடன் காணப்படுவது இன்னமும் பார்க்க ரம்யமாக உள்ளது. அத்தனைப் படங்களையும் ரசித்தேன் சகோதரி. அடுத்தப் பதிவுக்கும் தொடர்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"அதென்ன அப்படி சொல்லி விட்டீர்கள்? நீங்கள் படங்கள் எடுக்கும் கோணங்களை, அழகான அந்த படங்களை நாங்கள் என்றாவது ரசிக்காமல் விடுவோமா ?" என எங்களின் உள்ளும் புறமும் பதிலுக்கு கேள்விகளை தொடுக்கும் என்பது நீங்கள் அறியாததா. சகோதரி.!! .//
பதிலளிநீக்குஹாஹாஹா அப்படி இல்லை கமலாக்கா....என் திருப்திக்காகப் பதிவிட்டுவிடுவேன். சிலருக்குப் போரடிக்கலாம் என்பதால் சொன்னேன். ஓகே ஓகே டன்!
//உங்கள் புகைப்படங்கள் எப்போதுமே துல்லியம். //
உண்மையாவா! நன்றி நன்றி கமலாக்கா....
//இன்று அத்தனை வித்தியாசமான மரங்களின் படங்களும், அவற்றைப் பற்றிய தோற்ற விளக்கங்களையும் ஒவ்வொரு படங்களையும் பெரிதாக்கி பார்த்துப் பார்த்து ரசித்தேன்.//
நன்றிஅக்கா. அது சரி பெரிசாக்கினா நல்லா வந்துச்சா? கோரமாகத் தெரியாமல்? பரவால்லையே.
மரங்களை ரசித்ததற்கு நன்றி கமலாக்கா மகிழ்ச்சியும்
ஆமாம் சூரியனின் கதிர்கள் மாலை நேரக் கதிர்கள்,
நன்றிக்கா அனைத்தையும் ரசித்ததற்கு.
கீதா
/அது சரி பெரிசாக்கினா நல்லா வந்துச்சா? கோரமாகத் தெரியாமல்? பரவால்லையே./
நீக்குஎன் கைப்பேசியில் ஒவ்வொன்றையும் பெரிதாக்கித்தான் பார்க்க வேண்டும் சகோதரி. நன்றாகத்தான் இருந்தது. அப்படியே பார்த்தால், நீங்கள் சொல்லும் உருவங்களை அதில் காண இயலவில்லை. அதனால்தான் பதினைந்து படங்களையும் பெரிதாக்கி ரசித்தேன். மரம் செடி கொடி, மலர்கள் படங்கள் என்றால், எனக்கும் அதில் ஈடுபாடு அதிகம். என் கைப்பேசியுலும் செல்லும் இடங்களில் இவ்வகையான படங்களை எடுத்து விடுவேன். ஆனால் உங்கள் அளவிற்கு அதில் தெளிவு இருக்காது. நன்றி.
ஓஹோ!!!! புரிகிறது கமலாக்கா.
நீக்கு//மரம் செடி கொடி, மலர்கள் படங்கள் என்றால், எனக்கும் அதில் ஈடுபாடு அதிகம். என் கைப்பேசியுலும் செல்லும் இடங்களில் இவ்வகையான படங்களை எடுத்து விடுவேன்.//
தெரியும் அக்கா.
ஆனால் நீங்க எடுப்பதும் நல்ல தெளிவாக நன்றாகத்தான் இருக்கின்றன!! எதுக்கு குறை!!!ஹாஹாஹா
கீதா
'மரம் மாதிரி நிக்கற' என்று வீட்டு பெரியவர்கள் திட்டுவார்கள், ஆனால் ஒவ்வொன்றும் எப்படி வித்தியாசமாய் உபயோகமாய் நிற்கின்றன? உங்கள் அவதானிப்பும், என்னுடையதும் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன.
பதிலளிநீக்குபானுக்கா??!!
நீக்குமரம் மாதிரி //
ஹாஹா ஆமாம்...தப்பான திட்டலோ!!
உங்கள் அவதானிப்பும், என்னுடையதும் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன.//
மிக்க நன்றி கருத்திற்கு
கீதா