சனி, 12 ஏப்ரல், 2025

ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 3

படங்கள் போட்டு விவரங்கள் எழுதினால், இப்படி எத்தனை பகுதிகள் போகும் என்று!! ஹாஹாஹா! சத்தியமாக எனக்குத் தெரியலைங்க பதிவு எப்படி எழுதுவது என்று! நம் கமலாக்கா, கோமதிக்கா ஆசையோடு படங்களைப் பார்ப்பார்களே என்றும், இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்படியேனும் பார்த்துக் கொள்ளலாமே என்றும் எனக்குத் தெரிந்ததை, நான் பார்த்தவற்றை எல்லாம் பகிர வேண்டும் என்ற ஆவலில், ஆர்வத்தில், பதிவுகள் கொஞ்சம் நிறைய பகுதிகளாகப் பிரித்துப் போடும்படி ஆகிவிடுகிறது.  அதனால் பறவைகள் பகுதி வர தாமதமாகிறது.


இதோ இந்த இடத்துக்குத்தாங்க நாம போகணும். இந்த இடம் பற்றிய தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். டிக்கெட் எடுக்க வேண்டாமா? வாங்கிவிட்டு அப்படியே படகுத்துறைக்குப் போகும் வழியில் இருப்பதைப் பார்த்துக் கொண்டே போவோம். 

இப்பதிவில் படங்களோடு, அதன் கீழே விவரங்களோடு சொல்லிப் போகிறேன். பதிவு பெரிதாகிவிட்டது! அடிக்க வராதீங்க  நான் கொஞ்சம் நேரம் மறைந்து இருக்கிறேன்!!!!!

முந்தைய பதிவில் நாம் உள்ளே செல்லும் நுழைவு வாயில் வரை சொல்லியிருந்தேன், இல்லையா இப்ப உள்ளே போவோம் வாங்க. 


வண்டிகள் நிறுத்துவதற்குத் தாராளமாக இடம் உள்ளது. நாங்க போனப்ப கூட்டமே இல்லையாக்கும்! பல இடங்களிலும் இப்படி அறிவுறுத்தல் பலகைகள் இருக்கின்றன. 


பார்க்கிங்கை ஒட்டியே முகப்புப் பகுதி. ரங்கனதிட்டு அமைப்பின் படம், நுழைவுச் சீட்டு மற்றும் படகுச் சவாரிக்கான டிக்கெட் வாங்கும் இடம், 

கட்டணம் பற்றிய தகவல்கள் பலகை - நுழைவுச் சீட்டு, நபர் ஒருவருக்கு ரூ 75. படகுச் சவாரிக்குக் கட்டணம் தனி. நபர் ஒருவருக்கு ரூ 100.  இது பொதுப்படகு. தனிப்படகுக் கட்டணம் 4-6 பேருக்கு ரூ 1500. படகில் செல்வது பற்றியான சில பரிந்துரைகளை, என் அனுபவத்தில் உணர்ந்ததை, டிப்ஸாக அடுத்த பகுதியில் படகில் ஏறும் போது சொல்கிறேன்.

ரங்கனதிட்டு உருவாகிய தகவல்கள் (நான்காவது படம் இடப்பக்கம் -தகவல்களை அடுத்த பதிவில் சொல்கிறேன் இப்பதிவு பெரிதானதால்.) சலீம் அலி தகவல் மையம் இவைதாங்க முகப்பு. 

நுழைவுச் சீட்டு பெற்றுக் கொண்டு படகுத் துறைக்குச் செல்லும் நுழைவு வாயிலுக்குப் போகும் முன் இந்த முதலை வாயெல்லாம் பல்லாக வாய்திறந்து, வாயார வாங்க வாங்கன்னு நம்மை வரவேற்குது பாருங்க!


முதலையைக் கடந்து படகுகுத் துறைக்குச் செல்லும் நுழைவுவாயில் (காணொளியில்) அங்கிருக்கும் காவலர் நம் உடைமைகளைச் செக் செய்யும் போதே, பேகில் சாப்பாடும் தண்ணீரும்தான், நாங்க உள்ளே சாப்பிட மாட்டோம், விதிமுறைகள் தெரியும் என்றதும் சிரித்துக் கொண்டே அனுப்புகிறார், 



வாங்க என்னோடு, நாம் படகுத் துறைக்குச் செல்ல உள்ளே சென்றதும் போகும் போது இதை எல்லாம் பார்த்துக் கொண்டே செல்லலாம். 


இடப்புறம் உள்ள படத்தில் அழகான???? தாமரைக்குளம்?? நம்மை வரவேற்கிறது! ஆனால் தாமரைகளைத்தான் காணவில்லை. ஆற்று நீர்தான். காய்ந்த நாணல் புற்கள் கிடந்தன. அந்தப் பக்கம் காவிரி. இந்தக் குளத்திற்கு எதிரில் ஓர் அழகான ஆலமரம் இருக்கிறது. அதைக் காணொளியில் பார்க்கலாம். இங்குள்ள பாதை வழியாகவும் படகுத் துறைக்குச் செல்லலாம். ஆனால் நாம் இப்ப இக்குளத்தின் இடப்புறம் வழியாக கொஞ்சம் மேலே... இங்கே வலப்புறம் உள்ள படத்தில் மஹாராஜா கோபுரத்திற்கு வழி என்று போட்டிருக்கு தெரியுதா? அதைப் பார்க்கப் போகிறோம். 


கோபுரத்திற்குச் செல்லும் வழியில் சலீம் அலி அவர்களின் அழகான வரிகள். (இடப்புறம் உள்ள படம்) பறவைகளைப் பார்த்து பிழைப்பு நடத்த முடியாது என்று மக்கள் நினைக்கிறார்கள். அது ஒருவேளை உண்மையாக இருக்கலாம், ஆனால், மனிதன் வாழ்வதற்குச் சாப்பாடு மட்டும் முக்கியமில்லை என்பதும் உண்மை. எத்தகைய பொழுதுபோக்குகளும் இல்லாமல், தங்கள் நேரத்தையெல்லாம் பிழைப்புக்காக மட்டுமே செலவிடும் மக்கள், 60 வயதிற்குப் பிறகு, பணி ஓய்வு பெறும்போது, தங்கள் முழு நேரத்தையும் என்ன செய்வது என்று தெரியாமல், கடிகாரத்தைப் பார்ப்பதில் மட்டுமே செலவிடுகிறார்கள்! பறவைகளைப் பார்ப்பது போன்ற ஒரு பொழுதுபோக்கை அவர்கள் வளர்த்துக் கொண்டிருந்தால், ஒருவேளை அவர்கள் தங்கள் ஓய்வூதியத்தை அனுபவிக்க நீண்ட காலம் வாழநேரிடலாம்." - சலீம் அலி.

மேலே வலப்பக்கப் படத்தில் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தின் மகாராஜா கோபுரத்தின் சிறிய வரலாறு சொல்லும் பலகை. இதோ கீழே அந்த கோபுரம் படம். 
                                         இப்படம் இணையத்திலிருந்து - நன்றி

ராஜா ஸ்ரீ ஜெய சாமராஜேந்திர உடையார் (1950-1971) ஆட்சியின் போது கட்டப்பட்ட, இந்தோ-சாராசெனிக் அமைப்பு(இந்தோ-சாராசெனிக் கட்டிடக்கலை என்பது பிரிட்டிஷ் ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்தில் இந்தியாவில் தோன்றிய ஒரு தனித்துவமான கட்டிடக்கலை பாணி என்று விக்கி சொல்கிறார்).
    இப்படமும் இணையத்திலிருந்து - நன்றி      

20 அடி உயரம். இந்தக் கோபுரம் பல்வேறு கட்டிடக்கலை பாணிகளைக் கலந்து மிகவும் திறமையாகக் கட்டப்பட்டுள்ளதாக அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. கோபுரத்தின் உச்சியில் அழகான வளைவுகளுடன் இருக்கும் கூம்பு, அக்மார்க் தேக்கு மரத்தில் செதுக்கப்பட்டுள்ளதாம். (கேரளத்தில் இப்படியான கூரைகளைப் பார்க்கலாம் உள் அமைப்பு. நான் பாலக்காடில் பார்த்த ஒன்றை முன்பு பகிர்ந்திருக்கிறேன்) சுவர்கள் கல்லால் ஆனவை. இந்த எண்கோண வடிவத்தில் உள்ள கோபுரத்தில் நான்கு திறந்த வாயில்களும், மற்ற நான்கிலும் திண்டுகள் போன்று உட்கார்ந்து கொள்வதற்கு ஏதுவாகவும் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த கோபுரம் அரச குடும்பத்தினர் அமர்ந்து பறவைகளைப் பார்க்க பாதுகாப்பாக அமைக்கப்பட்டதாம். பறவைகள் பார்ப்பதில் மட்டுமல்ல, அந்தப் பகுதியின் பாதுகாப்பிற்கும் இக்கோபுரம் பயன்படுத்தப்பட்டதாகத் தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மஹாராஜா கோபுரத்தின் அருகில் (வலப்புறம் படம்) பார்வையாளர்கள் கோபுரம். நாம் அங்கு ஏறி ரங்கனதிட்டு பகுதி முழுவதையும் பார்க்கலாம். அது காட்டுப்பகுதி என்ற பலகை இருந்ததோடு அங்கு மரக்கிளைகள் வளர்ந்திருந்தன. இந்தக் கோபுரத்தில் ஏறவில்லை. 

காரணம் இக்கோபுரத்தைச் சுற்றி வளைத்து உட்பக்கம் எல்லாம் படம் எடுக்க கோணம் பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகள் ஓடி வந்து என் மீது மோதியதில் நான் கீழே விழ, என் மொபைல் தெரித்து விழுந்து பேட்டரி வெளியில் வந்துவிட்டது. நல்ல காலம், கொஞ்சம் உட்கார்ந்து எழுந்ததும் எனக்குச் சரியானதோடு, மொபைலும் உடையவில்லை. அதனால் படங்கள் சரியாக வராததால் அந்த இரு படங்களும் இணையத்தில் இருந்து எடுத்தேன்.
இப்பகுதியைத் தொகுத்து ஒரு சின்ன காணொளி - ஷார்ட்ஸ்

மஹாராஜா கோபுரப் பகுதியிலிருந்து காட்சி

மஹாராஜா கோபுரப் பகுதியிலேயே அமைந்திருக்கும் பால்கனி போன்ற வியு பாயின்டிலிருந்து நதியையும் படகுகள் செல்வதையும், சிறிய தீவுகளையும் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்த பறவைகளையும்  பார்த்து ரசித்துவிட்டு (காணொளி) அங்கிருந்தே படகுத் துறைக்குச் சென்றுவிடலாம். செல்லும் வழியில் அழகான பூங்காக்கள் மற்றும் ஆங்காங்கே பறவைகள் பற்றிய குறிப்புகள் தாங்கிய பலகைகள். 4, 5 படங்கள்தான் அதைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன் கீழே.


ஒரு வழியாகப் படகுத் துறைக்கு வந்து சேர்ந்தாச்சு.

படகில் ஏறும் முன் ஜாக்கெட் கண்டிப்பாக அணிய வேண்டும். அதைத் தொட்டுப் பார்த்ததும் பிசுபிசுப்பாக இருந்ததால் எனக்கு அதை எடுத்து அணிய என்னவோ போல் இருந்தது. சுத்தமாக இல்லை. ஆனால் அணியாமல் படகில் ஏற முடியாது என்பதால் இருப்பதில் கொஞ்சம் ஒகே என்று தோன்றியதை அணிந்து கொண்டேன். எல்லோரும் தயாராக இருங்க. அடுத்த பகுதியில் படகில் உலா வருவோம். 


----கீதா


56 கருத்துகள்:

  1. உடன் பயணிப்பதைப் போன்ற மனநிலைக்கு எழுத்தும் படங்களும்..தொடர்கிறோம்.வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் எப்போதும் போல் துல்லியமாக இருக்கிறது.

    /கட்டணம் பற்றிய தகவல்கள் பலகை - நுழைவுச் சீட்டு, நபர் ஒருவருக்கு ரூ 75. படகுச் சவாரிக்குக் கட்டணம் தனி. நபர் ஒருவருக்கு ரூ 100. இது பொதுப்படகு. தனிப்படகுக் கட்டணம் 4-6 பேருக்கு ரூ 1500. படகில் செல்வது பற்றியான சில பரிந்துரைகளை, என் அனுபவத்தில் உணர்ந்ததை, டிப்ஸாக அடுத்த பகுதியில் படகில் ஏறும் போது சொல்கிறேன்./

    கண்டிப்பாக... ஒரு பயணத்தின் விரிவுகளை இப்படி நீங்கள் விபரமாக சொல்லுவதால், இப் பயணம் மேற்க்கொள்ளு பவர்களுக்கு நல்ல உபயோகமாக இருக்கும்.

    முதலையின் வரவேற்பு பயமாக உள்ளதே..! (நிஜ முதலையாக இருந்தால் எப்படி இருக்கும்:)) ) மதிய சாப்பாட்டோடு சென்றீர்களா ? நல்லவேளை..! அதை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி கிடைத்ததே..!

    சலீம் அலி சொல்வது சரிதான். பறவைகளை பார்ப்பதே நல்ல ஒரு பொழுது போக்குத்தான். நம் மனக் கவலைகளை விரட்டவும், அது நம் மனதுக்கு உற்சாகம் தரும் ஒரு மருந்தாகவும் இருக்கும். அதுவும் தன் இறக்கைகள் விரிய அது பறக்கும் அழகை ரசிப்பதே ஒரு தனிப்பட்ட சுகம்.

    இன்னும் தங்கள் அருமையான எழுத்தை, படங்களை பார்த்து படித்துக் கொண்டே வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலாக்கா!

      படகில் செல்வது பத்தி இன்னும் கொஞ்சம் அடுத்த பதிவில் சொல்கிறேன். அதாவது படகில் செல்வதல்ல பிரச்சனை படங்கள் காணொளிகள் எடுப்பது பற்றிய விவரங்களை நான் தெரிந்து கொண்டதை.

      சலீம் அலி சொல்றது சரிதான் ஆனால் பல பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்றாகக் கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுது போக்கு இருக்கும் இல்லையா? அது இல்லாதவர்களுக்குத்தான் பிரச்சனை.

      ஆமாம் பறவைகளைப் பார்ப்பது அத்தனை ரசனை அதுவும் அங்கு பறந்து கொண்டே இருந்தன ஒரு திட்டிலிருந்து இன்னொரு திட்டிற்கு....அதை எடுத்திருக்கிறேன் ஓரளவு வந்திருக்கு என் கேமராவில் அடுத்த பகுதிகளில் அவைதான் இடம் பெறும்.

      நன்றி கமலாக்கா...நீங்க ரசித்துப் பார்ப்பீங்கன்னு தெரியும் அதான் எல்லாத்தையும் பகிரலாமேன்னு

      கீதா

      நீக்கு
  3. மஹாராஜா கோபுரப் பகுதியிலிருந்து எடுத்த வியூ மிக அழகாக வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை. நேரில் பார்க்கறப்ப அத்தனை ரசித்துப்பார்த்தேன். அங்கிருந்து நகரவே மனம் இல்லை ஆனால் படகில் செல்ல போகணுமே நேரம் ஆனால் பறவைகளைப் பார்க்க முடியாமல் போனா என்று பெரும்பாலும் பறவைகளை நாம் 10, 11 மணிக்குள் பார்த்துவிட வேண்டும் அப்பதான் பறந்து பறந்து ஆக்டிவாக இருக்கும் அப்புறம் அவை கொஞ்சம் ஓய்வு எடுக்கும்....அப்புறம் மாலையில்தான்

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  4. சலீம் அவர்கள் சொல்லும், ஓய்வு பெற்றபின் பறவைகளைப் பார்ப்பது போன்று நேரம் செலவழிக்கும் பழக்கம் ஆயுளைக் கூட்டும் என்பது உண்மைதான், மனைவி சாப்பாட்டுப் பிரச்சனையைக் கவனித்துக்கொண்டால்... ஆமாம் மனைவிகளுக்கு ஓய்வே கிடையாது என்று சொல்கிறாரோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தவிதமான ஆரோக்கியமான பொழுதுபோக்குகள் நல்லதுதான் நெல்லை. அது ஒவ்வொருவர் விருப்பத்துக்கு ஏற்ப.

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மனைவி சாப்பாட்டுப் பிரச்சனை.....இது ஓவர், நெல்லை ஹாஹாஹாஹா.....

      கீதா

      நீக்கு
  5. படிப்பவர்களையும் கையோடு கூட்டிச் செல்வது போன்று எழுத்துநடை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹே இது சும்மா...நான் பதிவுல தொடக்கத்துல சொன்னதுக்காக என்னை தட்டிக் கொடுக்கன்னு தோணுது...

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  6. படகில் ஜாக்கெட்... எங்குமே இந்தப் பிரச்சனைதான். கடனுக்கு என்றிருக்கும் ஜாக்கெட்டுகள்.

    நீங்களோ சீக்கிரம் போய்விட்டீர்கள். அப்படியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, சீக்கிரம் போனாலும், அவை ஒழுங்கா பராமரிக்கப்படலைனா? அப்படித்தானே இருக்கும். எத்தனை மாசமாச்சோ அதை எல்லாம் கழுவி!

      கீதா

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    படித்துக் கொண்டே வரும் போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வந்து மோதியதால், கீழே விழுந்து விட்டேன் என்றதும் பதறி போய் விட்டேன். நல்லவேளை!! காயங்கள் ஏதும் படாமல் எழுந்து விட்டீர்கள். கடவுள்தான் காப்பாற்றினார். அப்புறம் கைப்பேசி நல்லபடியாக வேலை செய்ததா?

    மஹாராஜா கோபுரம் பற்றி தெரிந்து கொண்டேன்.

    /ராஜா ஸ்ரீ ஜெய சாமராஜேந்திர உடையார் (1950-1971) ஆட்சியின் போது கட்டப்பட்ட, இந்தோ-சாராசெனிக் அமைப்பு. (இந்தோ-சாராசெனிக் கட்டிடக்கலை என்பது பிரிட்டிஷ் ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்தில் இந்தியாவில் தோன்றிய ஒரு தனித்துவமான கட்டிடக்கலை பாணி என்று விக்கி சொல்கிறார்)./

    அதன் கோபுரத் தோற்றங்கள் உள் வெளி படங்கள். அருமை.

    "தாமரைக்குளத்தில் வந்து விழுந்தாச்சு. அப்புறம்.. " எப்போதோ பார்த்த கிழக்கே போகும் ரயில் படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வந்தது. ஹா ஹா ஹா.

    படகுத்துறை படங்கள் அருமை.படகில் உங்களுடன் நானும் ஏறி விட்டேன். எனக்கும் அந்த ஜாக்கெட் போட்டுக் கொள்ள ஒரு மாதிரிதான் இருக்கும். நீங்கள் சொன்னதால் நானும் அதை அணிந்து கொள்கிறேன். தொடர்ந்து செல்லலாம்.

    காணொளிகளை கண்டு விட்டு வருகிறேன். அருமையான பகிர்வுக்கு நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா, கீழே விழுந்தது அந்தக் குழந்தைகள் இந்த கோபுரத்தில் ஓடி ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்திருக்காங்க. அப்ப என் பின்னால் ஒளிந்து தப்பிக்க வந்ததும் நான் கோபுரத்தின் உட்புறம் எடுக்க கோணம் பார்த்து படமும் காணொளியும் எடுக்க மேலே பார்த்துக் கொண்டிருந்ததில் கவனம் தப்பிடுச்சு பிள்ளைகளைப் பார்க்காமல்....எனக்கு இன்னொரு கவலை அடடா படம் வீடியோ எடுக்க முடியாம போச்சேன்னு. மொபைல் எடுத்து பேட்டரியை இணைத்து வருவதற்குக் கொஞ்சம் லேட்டாகிடுச்சு ஹையோ மொபைல் வொர்க் பண்ணாம ஆகிடுச்சோன்னு பார்த்தா நல்ல காலம் வந்துவிட்டது. ஆனா அதுக்குப் பிறகு அங்கு எடுத்திருக்கலாம்...நம்ம வீட்டவர், போதும் அடுத்து போட்டிங்கு போணும்...அங்கு முடித்துவிட்டு ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் போணும் என்பதால் அங்கு எடுக்க முடியாமல் போனது.

      நல்லகாலம் கையில் காலில் ஏதாச்சும் ஆகியிருந்தால் அது வேற பிரச்சனையாகியிருக்கும். உட்கார்ந்து ஆழ்ந்த மூச்சு எடுத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு அடுத்தாப்ல நடந்தாச்சு.

      படம் எடுக்க முடியாமல் போனதேன்னு குறை ஹாஹாஹா

      கி போ ர வசனம் தெரியாதே! நீங்க சொல்லித்தான் தெரியுது.

      ஏறியாச்சில்லையா...ஹாஹாஹா நான் சொல்லி நீங்க அணிந்து கொண்டாச்சு இல்லையா சரி போவோம் படகில். வரதுக்குத்தான் டைம் எடுக்கும். 3 நாளாச்சும் ஆகும் எல்லாம் தொகுக்கணும் பறவைகள் சரியா வந்ததை எல்லாம் தொகுக்கணும்

      நன்றி கமலாக்கா காணொளி காண்பதற்கு

      கீதா

      நீக்கு
  8. நமக்கே நாம் பார்த்த எல்லா இடங்களையும் நாம் பகிர்ந்துவிட்டோம் என்கிற திருப்தி ஏற்படும் வரை பகிரலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் ஹைஃபைவ் ஸ்ரீராம் அப்படிப் போடுங்க!!! எனக்கு இது உண்டு நான் பகிரலைனா ஹையோ இது விட்டுப் போச்சேன்னு தோன்றும்

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  9. இது மாதிரி இடங்களில் இப்படி ஒரு கார் பார்க்கிங் அமைவது ஆஸாஹர்யம். பரந்திருக்கிறது. இடமே இல்லாமல் நெருக்கி நுழைப்பதற்கு இது தேவலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜமாகவே பெரிய இடம், ஸ்ரீராம். உள்ளே நுழைவதிலிருந்து பார்க் செய்வது வரை சிரமமில்லாமல் இருக்கும் என்றே தோன்றியது. முகப்பு வரை அதற்குள்ளும் இடம் இருக்கிறது, ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  10. இத்தனூண்டு இடம் மாதிரி தெரிகிறது (அகலம்) அதில் படகுச் சவாரியா?  நான் எப்போது படகுச் சவாரி செய்தேன்  பார்க்கிறேன்.  முதலில் கன்னியாகுமரி நினைவுக்கு வந்ததது.  அப்புறம்தான் கங்கை நினைவுக்கு வருகிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் படகு ஓகே இடம் எல்லாம் இருந்தது ஆனால் பறவைகளைப் பார்க்க அந்த இடம் நமக்குக் கொஞ்ச்ம இடைஞ்சல் அதுவும் படங்கள் எடுக்க வேண்டும் என்றால். அடுத்த பகுதியில சொல்கிறேன்

      கங்கைல நீங்க போனது தெரியும். நினைவிருக்கு

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. காணொளிகள் எல்லாம் பார்த்தேன்/கேட்டேன்.  குழந்தைகள் உங்கள் மொபைலை உடைக்க முயன்ற சதியையும் படித்தேன்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க ஏன் அதை சதியாகப் பார்க்கிறீங்க? இறைவனே, வேறு மொபைல் வாங்கிக்கொள்ளட்டும் இந்த அம்மா, என்று நினைத்து முயற்சித்திருக்கலாம் அல்லவா?

      நீக்கு
    2. நன்றி ஸ்ரீராம், காணொளிகள் பார்த்து கேட்டதற்கு. முதல் காணொளியில் நம்ம படகு செலுத்துபவரோடு நான் வீடியோ எடுத்துக் கொண்டே பேசியது அவர் சொல்வது காதில் விழ விழ ....

      ழந்தைகள் உங்கள் மொபைலை உடைக்க முயன்ற சதியையும் படித்தேன்!!!//

      ஹாஹாஹஹாஅ அதுங்க கண்ணாம்மூச்சி ஏனடா என்று விளையாடிக் கொண்டிருந்தன!

      கீதா

      நீக்கு
    3. நெல்லை ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன். பாவம் இறைவன்....
      உங்க கான்செப்ட்லியே வரேன்....அவருக்கு நல்லா தெரியும் எங்களால் இப்ப அம்புட்டு செலவு செய்ய முடியாதுன்னு!!!!

      அதனால அவருக்கும் அதுக்கும் சம்பந்தம் கிடையாது!

      கீதா

      நீக்கு
  12. சலீம் அலி கூற்று உண்மைதான்.,  அவர் அவருக்கு பிடித்த பொழுது போக்கைச் சொல்லி இருக்கிறார்.  அவரவர் அவரவருக்குப் பிடித்த பொழுதுபோக்கை கைக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் அதேதான். அவரவருக்கு அவரவர் பொழுது போக்கு பிடித்ததைச் செய்யலாம்.

      கீதா

      நீக்கு
  13. இணையத்திலிருந்து எடுத்த படங்களுக்கு மட்டும் கீழே இணையம் என்று மட்டும் கொடுக்கலாம். கீழே எழுத்துகள் சேர்ந்து வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை இப்ப சரி செய்துவிட்டேன் ஸ்ரீராம், உங்க கருத்து பார்த்த பிறகுதான் கவனித்தேன். பதிவு வெளியானதும் பார்க்கவில்லை.

      மற்ற கருத்துகளுக்குப் பதில் அப்பால கொடுக்கறேன்

      கீதா

      நீக்கு
  14. மஹாராஜா கோபுரம் சுவாரஸ்யம்.  ஆனால் கீதா..  எல்லா இடமும் ஒரு சோகப்பாட்டு இசைக்கும் தமிழ்ப்படக் காட்சி போல ஆளரவம் இல்லாமல் தனியாக இருக்கிறதே...    "வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் என்று பாடலாம் போல இடம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அது அங்கு கூட்டம் இல்லாம இருக்கறது நாங்க போன சமயம்....காலைல 9 மணிக்கு அங்க போயாச்சே....ரெண்டாவது சம்மர் லீவு, கிறிஸ்துமஸ் லீவில் கூட்டம் நிறைய இருக்குமாம் சொன்னாங்க.

      இதுவும் ஒரு வகைல நல்லதாச்சு எங்களுக்கு. சீக்கிரம் போய்ட்டு சீக்கிரம் வர முடிந்தது. இன்னொன்னு நாங்க பார்த்துவிட்டு வெளிய வரப்ப 5 கார்கள் உள்ளே நுழைந்தன. எல்லாம் குழந்தைகளோடு...

      அழகான பாடல் நீங்க சொல்லியிருக்கும் பாடல்!!

      கீதா

      நீக்கு
  15. ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் மிக அழகாய் இருக்கிறது.
    நீங்கள் ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல உங்கள் பின்னோடு வருகிறேன்.
    முதலை பல்லைகாட்டி நம்மை வரவேற்பது அருமை.

    //நாங்க உள்ளே சாப்பிட மாட்டோம், விதிமுறைகள் தெரியும் என்றதும் சிரித்துக் கொண்டே அனுப்புகிறார், //

    பரவாயில்லையே! நம் வார்த்தையை நம்பி அனுப்பி விட்டரே!
    டெல்லியில் ஒரு பூங்காவில் வாங்கி வைத்து கொண்டார்கள் தரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல உங்கள் பின்னோடு வருகிறேன்.//

      நன்றி கோமதிக்கா. நானும் இப்பதான் புலிகள் சிங்கங்கள் கரடி எல்லாம் பார்த்துவிட்டு வந்தேன்...நல்லாருந்துச்சு.

      நாங்களும் முதல்ல நினைச்சோம் வைச்சுட்டுப் போகச் சொல்லிடுவாரோ என்று. என்னவோ விட்டு விட்டார்.

      //டெல்லியில் ஒரு பூங்காவில் வாங்கி வைத்து கொண்டார்கள் தரவில்லை.//

      அக்கா பொதுவாக இப்படி விதிமுறைகள் இருக்கும் இடத்தில் அனுமதிக்க மாட்டாங்க வாங்கி வைச்சுக்குவாங்கதான்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  16. சலீம் அலி அவர்களின் அழகான வரிகள் அருமை . பறவைகளை, இயற்கையை ரசிக்க கற்று கொண்டால் பொழுது போவது தெரியாது, வாழ்நாள் நீடிக்கும் தான்.
    வயதானவர்கள் வெளிநாட்டில் வீல் சேரில் வந்து ரசிக்கிறார்கள். நம் நாட்டில் வய்தான காலத்தில் முடியவில்லை என்று வீட்டுக்குள் முடங்கி விடுகிறோம்.
    இன்று கூட தம்பி முடியவில்லை என்று நடக்காமல் விட்டு விடாதே நடந்து கொண்டே இரு என்றான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு மேடம்... நானும் மனதில், 'இன்று முடியவில்லை' என்று நினைக்கக்கூடாது, நமக்கு வயது ஆகிறது என்ற நினைப்பே வரக்கூடாது என்று நினைக்கிறேன். அதனால் எங்கு சென்றாலும் நடப்பதை விடுவதில்லை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடப்பதையே நான் விரும்புவேன், ஆட்டோ போன்றவற்றில் செல்வதை விட. இங்கு எழுதியது போலவே, இன்னும் பத்து வருடங்கள் கழிந்தாலும் எழுதவேண்டும் என்பதே என் ஆசை.

      நீக்கு
    2. ஆமாம் அக்கா, அங்கு வயதானவங்க கூட வருவது தெரியும் இங்கு 40-45 ஆகும் போதே பலரும் வயசாகிடுச்சுன்னு சொல்லி உட்கார்ந்திடுறாங்கதான்...

      ம்ஹூம் எனக்கு வயசே ஆகலையாக்கும்!!! ஹாஹாஹாஹா...

      //இன்று கூட தம்பி முடியவில்லை என்று நடக்காமல் விட்டு விடாதே நடந்து கொண்டே இரு என்றான்.//

      நல்லதுதான் ஆனா உங்க கால் வலி சாதாரணமானது போல் இல்லையே அக்கா...மருந்து தொடர்ந்து எடுத்துக்கோங்கக்கா

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    3. நெல்லை நானும், இப்போது வரை....எதிர்காலத்தில் என்ன ஆகும் என்று சொல்லமுடியாது ஆனால் இப்ப வரை நாங்க ஆட்டோ பஸ் எல்லாம் தொலைதூரம்னாதான். இல்லைனா நடைதான்.

      எனக்கும் பல வருடங்கள் எழுத வேண்டும் என்று ஆசை...மனம் ஒத்துழைக்கும் போதெல்லாம் எழுதுவேன் என்று நானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    4. நெல்லை நானும் அப்படித்தான் கால்வலி என்று உட்கார்ந்து விடாமல் வீட்டுவேலைகளை செய்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் நினைப்பது போல நடப்பதை விடாதீர்கள். எழுதுவதை விடாதீர்கள், தொடர்ந்து எழுதுங்கள்

      என் வேலைகளை கடைசி வரை நானே செய்ய இறைவன் அருள வேண்டும்.
      முடிந்தவரை கவலைகளை புறந்தள்ளி மகிழ்ச்சியாக இருக்க முயன்று வருகிறேன்.

      கால்,இடுப்புவலிகளை உடற்பயிற்சிகள் செய்தும் மருந்து மாத்திரைகள் எடுத்தும் குறைத்து வருகிறேன்.

      இந்த மாதம் முடிந்துவிடுகிறது மருந்து , மாத்திரைகள் இறைவன் அருளால் தொடர கூடாது மருந்துகள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    5. கீதா நீங்களும் மனம், உடல் ஒத்துழைக்கும் வரை எழுதி கொண்டு இருங்கள். நமக்கு நாமேதான் கட்டளை இட்டுக் கொள்ள வேண்டும். மனம் சோர்வு அடையும் போது உடலும் சோர்வு அடைந்து விடுகிறது.

      நீக்கு
    6. ஆமாம் அக்கா....அதேதான்..நாமே நமக்குக் கட்டளை இட்டுக் கொண்டு ....மிக்க நன்றி அக்கா உங்கள் ஊக்கம் கொடுக்கும் கருத்திற்கு.

      கீதா

      நீக்கு
    7. அக்கா உங்கள் கால் வலி சரியாகிவிடும், மாத்திரைகள் இல்லாமல். பிரார்த்திப்போம்.

      கீதா

      நீக்கு
  17. குழந்தைகள் மோதி கீழே விழுந்து விட்டது அறிந்து கவலை அடைந்தேன், நல்லவேளை அடிபடவில்லை இல்லையா? செல்போனுக்கும் ஒன்றும் ஆக்வில்லையே அது வரை சந்தோஷம். காமிரா கழுத்தில் அணிந்து இருந்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிதாக அடி எதுவும் இல்லைக்கா. சமாளிக்கும்படிதான் இருந்தது.

      ஆமாம் செல்ஃபோனுக்கும் ஒன்றும் ஆகலை இல்லைனா எதுவும் எடுத்திருக்க முடியாது புதியது இப்ப வாங்கணும்னா யோசிக்கணும்.....

      அக்கா என் கேமரா கழுத்தில் தொங்கு வது போன்று இல்லைக்கா. பெரிய கயிறு அதில் இல்லை. ரொம்பச் சின்னது கையில் வளையல் போன்று செருகிக் கொண்டு படம் எடுக்கும்படிதான் வைத்திருக்கிறேன். அது பேட்டரி சட்டென்று தீர்ந்துவிடும் என்பதால் பறவைகளுக்காக அதைக் காத்து பேகில் தான் வைத்துக் கொண்டிருந்தேன். மொபைலில் பறவைகளை எடுக்கணும்னா ரொம்ப கிட்டத்தில் இருக்க வேண்டும் என் மொபைல் சக்தி அவ்வளவுதான். கேமராவும் அப்படித்தான் ரொம்பவே சாதாரணம் என்றாலும் ஓரளவு எடுக்கும்.

      கழுத்தில் அணிந்திருக்கும் வகை என்றால் கேமரா கண்டிப்பாக சேதம் அடைந்திருக்கும் நான் விழுந்ததில்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  18. மஹாராஜா கோபுரப் பகுதியிலிருந்து ஏரியின் காட்சி அழகு, பல வண்ணங்களில் இருக்கிறது. காணொளிகள் அருமை.

    படகு பயணத்திற்கு கொடுக்கும் ஜாக்கெட்களுக்கு அழுக்காய் கவனிப்பு இல்லாமல் பேருக்கு இருக்கிறதுதான்.
    அதை நல்லவிதமாக பராமரித்துக் கொள்ள கூடுதல் காசு கூட வாங்கி கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இடத்திலிருந்து நதியைப் பார்ப்பது மிக மிக அழகாக இருக்கு கோமத்கிக்கா

      பல வண்ணங்களில் இருப்பது அந்தக் காணொளியைச் சொல்றீங்கன்னு புரியுது முதல் காணொளி. ஆமாம் எனக்குமே அது சூரிய ஒளி, மற்றும் என் கேமராவின் பவர் அவ்வளவுதான் அதுதான் காரணம் அட்ஜஸ்ட் செய்வதற்குள் போட் காட்சிகளைக் கடந்துவிடுமே அதனால் வேறு வேறு வகையில் வந்தது....லைட்டிங், எக்ஸ்போஷர், தான் மெயின் காரணம் என்று நினைக்கிறேன்.

      அக்கா அவங்க கூடுதல் காசு வாங்கலாம்...வெளிநாட்டவருக்கு அதிகக் கட்டணம் .
      மற்றபடி பராமரிப்பு நன்றாக இருந்தாலும் இந்த ஜாக்கெட்டுகளை இன்னும் பராமரிக்கலாம்..பல இடங்களிலும் இப்படித்தான் இருக்கின்றன. கூடவே நாம் அதை சும்மாதான் அணிகிறோம் அதை டைட்டாகக் கட்டிக் கொள்ளவும் முடியலை சும்மா போட்டிருக்கோம் என்பதுதான்...

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  19. அடுத்து படகில் உலாவர ஆவலோடு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிக்கா...சீக்கிரம் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறேன்

      கீதா

      நீக்கு
  20. ​தாமதமான வரவு. விவரங்களும் படங்களும் நன்றாக உள்ளன.
    ஒரு சின்ன கடிந்துரை: படங்களுக்கு ஏற்ப படங்களின் நீள அகலத்தை சரியாக்கி பதிவில் இணைத்தால் நன்றாக இருக்கும். குளோசப் ஆனால் பாஸ்போர்ட் சைஸ், மிடில் என்றால் குவார்ட்டர்/போஸ்ட் கார்டு சைஸ், லோங் என்றால் காபினெட் சைஸ் என்று வைத்து கொள்ளுங்கள். அப்போது படங்களின் துல்லியம் நன்றாக தெரியும்.
    டவரில் இருந்து எடுத்த நதியின் படம் நன்றாக உள்ளது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா தாமதமான வரவெல்லாம் இல்லை அண்ணா.

      விவரங்களும் படங்களும் நன்றாக உள்ளன.//

      நன்றி அண்ணா கருத்திற்கு

      கடிந்துரை - ஹாஹாஹா...அண்ணா, பெயின்டில் தான் நான் பிக்சல் மாற்றி போடுகிறேன். நீங்க சொல்வது போல் தான் பெரும்பாலும் பிக்ஸல் சிலது 640 x 440 aspect ratio மாற்றாமல் என்றால் அதுவே 640 என்றால் 440 என்று மாற்றும். 940 என்றால் அதற்கேற்ப (horizontal vertical ) லாங்க் ஷாட் - காபினெட் சைஸ் பிக்சல் மிகவும் குறைவு அண்ணா அதை முயற்சி பண்ணி பார்த்துவிட்டு நான் எடுத்திருக்கும் ஃபோட்டோ சரியா இங்கு வருமா என்று சோதித்துப் பார்த்து யோசித்து செய்ய முயற்சி செய்கிறேன். அடுத்த பதிவில் லாங்க் ஷாட் வொர்க் அவுட் ஆகுதான்னு பார்க்கிறேன். மற்ற இரண்டும் ஓரளவு செய்கிறேன். aspect ratio ஆப்ஷனை நீக்கிவிட்டால் நாமே பிக்சல் சைஸ் போட்டுக் கொள்ளலாம்தான். சரியாக வரணுமே,

      நன்றி அண்ணா, கடிந்துரை என்று நீங்கள் சொன்ன பரிந்துரைக்கு!!!!!!

      கீதா

      நீக்கு
  21. ஹா ஹா ஹா எனக்கும் தான் கீதா, எடுத்த படங்களை எப்படியாவது இணைச்சிடோணும் எனத்தான் மனம் சொல்லும், அதநால பதிவு பெருத்திடும்.

    வீடியோவில் பேசுவது கீதாவோ? ஆஆஆ தமிழ்நாட்டுத் தமிழ்போல இல்லையே.... நியூஸ் வாசிப்பதற்கு ஏற்ற குரல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா எனக்கும் தான் கீதா, எடுத்த படங்களை எப்படியாவது இணைச்சிடோணும் எனத்தான் மனம் சொல்லும், அதநால பதிவு பெருத்திடும்.//

      ஹாஹாஹா ஹைஃபைவ். ஆமாம் எனக்கு எல்லா படமும் ஷேர் செய்யனூம்

      வீடியோவில் பேசுவது கீதாவோ? ஆஆஆ தமிழ்நாட்டுத் தமிழ்போல இல்லையே.... நியூஸ் வாசிப்பதற்கு ஏற்ற குரல்..//

      அதிரா அது என்ன தமிழ்நாட்டுத் தமிழ் போல இல்லைன்னு? ஆஅ ஆ அப்ப என் தமிழ் எப்படி இருக்கு!!!!! ஆஆஆ!!

      நியூஸ் வாசிப்பதற்கு ஏற்ற குரல்//

      ஹிஹிஹி நன்றி. உண்மையிலேயே ஆல் இண்டியா ரேடியோவில் நான் சில நிகழ்ச்சிகள் கொடுத்திருக்கிறேன் நாகர்கோவில் அவங்களுக்கும் என் குரல் பிடித்தது. நிறைய நிகழ்ச்சிகள் செய்யச் சொன்னாங்க ஆனால் அதற்குள் நாகர்கோவிலில் இருந்து மாறும் சூழல்.

      ஆனால் ரெகுலர் வேலை என்றால் தேர்வு உண்டு அதுவும் எழுதினேன் நான் பாஸ் செய்யவில்லை!!!!!!

      துளசி குரல் கொடுக்கச் சொன்னதால் கொடுத்தேன். அப்புறம் சொன்னார் பேசுவது போல குரல் கொடு....உரைந்டைத் தமிழ் வேண்டாம்னு ஆனால் எனக்கு சட்டென்று வரவில்லை. மெதுவாகப் பேசியதால் பேஸ் வாய்ஸ். நான் கொஞ்சம் உயர்த்தி டெசிபலில் பேசினால் குரல் வேறு மாதிரி இருக்கும்.

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  22. ஆஆஆஆஆ நான் பெரிய போஸ்ட்டாக இருக்குமென கொஞ்சம் கொஞ்சமாக ஸ்குறோல் பண்ணினேன்... பொசுக்கென முடிச்சிட்டீங்க இன்று ஹா ஹா ஹா.

    பேசாம நீங்களும் ஒரு ஊ ரியூப் சனல் தொடங்கிடுங்கோ கீதா:).. போஸ்ட் பார்ப்பதை விட சோட்ஸ்:).. இது வேற சோட்ஸ் .. வீடியோவில முழு விபரமும் ஈசியாப் புரியுது.

    3 வது , கடசி வீடியோவில் எனக்கு வொயிஸ் ஏதும் வரவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆ நான் பெரிய போஸ்ட்டாக இருக்குமென கொஞ்சம் கொஞ்சமாக ஸ்குறோல் பண்ணினேன்... பொசுக்கென முடிச்சிட்டீங்க இன்று ஹா ஹா ஹா.//

      ஹாஹாஹா அடுத்த போஸ்ட் கொஞ்சம் பெரிசுதான்.

      நான் இப்பவும் யுட்யூபில்தானே போடுகிறேன் அதிரா...துளசியும் நானும் ஒரே யுட்யூப்.

      எனக்கும் போஸ்ட் போடுவதை விட யுட்யூப் பிடித்திருக்கிறதுதான். எளிதாகவும் இருக்கு போடுவது.

      3 வது , கடசி வீடியோவில் எனக்கு வொயிஸ் ஏதும் வரவில்லையே...//

      ஓ அது ஆல்பம் போல ஃபோட்டோஸ் தொகுத்துக் கொடுத்ததால் வாய்ஸ் இல்லை. உங்க கமென்ட் பார்த்ததும் என்ன வீடியோ என்று எனக்கும் மறந்து போச்சு மேலெ போய் பார்த்துவிட்டு வந்து ஹிஹிஹி

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  23. படங்கள், வர்ணனையொடு கூடிய காணொளிகள் எல்லாம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  24. பதில்கள்
    1. இப்போதான் ப்ளாகருக்குள் வந்தேன் அதிரா...நடைப்பயிற்சி எல்லாம் முடித்து. கமென்ட்ஸ் கிடைச்சுது. பார்த்தேன் பப்ளிஷ் பண்ணிட்டேன்.

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு