படம் இணையத்திலிருந்து
நாம்
ஒவ்வொருவருக்கும் நம் எழுத்துகள் ஏதேனும் மாத இதழிலோ, வார இதழிலோ வெளிவராதா என்ற ஏக்கம்
இருக்கத்தான் செய்கிறது. நம் பதிவர் நண்பர்கள் பலரும் அதனைத் தீவிரமாக முயற்சி செய்து
வெற்றியும் கண்டுள்ளனர். என்றாலும் அப்படி முயற்சி செய்யாமலும், முயற்சி செய்து, வெளிவராமலும்
ஏக்கத்துடன் இருப்பவர்களுக்கு, நாமே அரசன், நாமே மந்திரி என்று உதவும் வகையில் வலைத்தளம்/வலைப்பூ
இருக்கிறது. அதுவும் இலவசமாகத் தொடங்கி எழுதலாம் என்றால் மகிழ்ச்சிதானே! அப்படித்தான்
நாம் அனைவரும் நமது அனுபவங்களையும், நாம் கற்றவற்றையும், உணர்ந்தவைகளையும், தேடல்களையும்,
கற்பனைகளையும், புனைவுகளையும், சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தும்,
நல்லது நடந்தால் பாராட்டியும் எழுதி வருகிறோம்.
அதுவும்
நம் வலைப்பதிவர்கள் ஒருவருக்கொருவர் அவரவர் திறமையை வெளிப்படுத்தியும், நட்புடனும்,
அன்புடனும், எதிர்மறைக் கருத்தானாலும் சரி, நேர்மறைக் கருத்தானாலும் சரி அதனை வெளிப்படுத்திக்
கொண்டும் வருகிறோம். கருத்துப் பரிமாற்றங்களினால் நாம் பல கற்க முடிகின்றது. பிறர்
அனுபவங்களையும் அறிய முடிகிறது. அதிலிருந்து பாடங்களும் கற்று வருகிறோம் என்றால் மிகையல்ல.
அப்படி
நாம் எழுதுவது இவ்வுலகம் முழுவதும் இருக்கும் தமிழன்பர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும்
என்றால் அதற்கு ஒரு திரட்டி இன்றியமையாததுதானே! பல திரட்டிகள் இருந்தன என்றாலும் அனைத்தும்
வெகு சில நாட்களில், மாதங்களில் செயலற்றுப் போயின என்பது மிகவும் வருந்தத் தக்கதே.
திரட்டிகளில் தமிழ்மணம்தான் சிறப்பான திரட்டியாக இருந்து வந்தது என்றாலும், அதில் தரம்
என்பது குறைந்து வரத் தொடங்கியது. அதன் செயல்பாடு பல சமயங்களில் புரியாமல்தான் இருந்து வந்தது. நல்ல திரட்டியாக
இருந்து வந்த தமிழ்மணம் திரட்டி சமீபகாலமாகச் சரியாகச் செயல்படவில்லை என்பது நாம் அனைவரும்
அறிந்ததே. ஏனோ அதில் பல சிக்கல்கள் இருந்து வருகின்றன. அதனைப் பற்றி தெரியாததால் இங்கு குறிப்பிடவில்லை. நமக்குக் கவலையில்லை.
ஏன்
கவலையில்லை? இதோ நம் தமிழ் வலையுலகிற்கான, தமிழ் எழுத்தாளர்களுக்கான, நமக்கே நமக்கான ஒரு திரட்டி உருவாகி வருகிறது. அதற்காக நமது
புதுக்கோட்டை வலையுலக அரசர்களான முத்துநிலவன் ஐயா/அண்ணா, மற்றும் செல்வா அவர்களும் வலைச்
சித்தர், சுறு சுறுப்புத் தேனீ என்று செல்லமாகப் பெயர் சூட்டபெற்ற டிடி அவர்களும் இணைந்து
தமிழ்வலையுலக பதிவர்கள் அனைவரையும் ஒரே குடும்பமாக்கிடவும், நம் பதிவுகளை அதில் இணைக்கும்
திரட்டியாகவும், அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் படியுமாக காண்செவிக் குழுவில் தமிழ் வலைப்பதிவகம் என்ற திரட்டி ஒன்றை முன்னோட்டமாகத் தொடங்கிட இதோ வெற்றி நடை போட்டு
வருகிறது.
நிர்வாகக்
குழுவினர் அனைவரது உழைப்பிற்கும், அதனைச் செயல்வடிவமாக்கியதற்கும் பதிவர்கள் அனைவரும் சிரம் தாழ்த்தி வணக்கம் கூறுகிறோம்.
எங்கள் அனைவரது பாராட்டுகளும், வாழ்த்துக்களும்!
இப்போது
இது வரை அறிந்திராத பல வலைப்பதிவர்களையும், புதிய வலைப்பதிவர்களையும் இதில் காண முடிகிறது. பலரது படைப்புகளும் பலரையும் சென்றடையும் என்பதும் உறுதி. அதற்கு உதவும் காண்செவி தொழில் நுட்பத்தையும் பாராட்டுவோம்! நம் எல்லோரையும் இணைக்கும் இணையத் தொழில்நுட்பத்தையும்
பாராட்டுவோம்! என்னே ஓர் அருமையான வாய்ப்பு!
அப்படிப்பட்ட
ஒரு வாய்ப்பை அளித்த நம் அன்பர்கள், நிர்வாகக் குழுவினருடன் நாம் விதிமுறைகளைப் பின்பற்றி
ஒத்துழைக்க வேண்டும்தானே! எனவே நாம் அனைவரும், அதில் தேவையற்ற செய்திகளைப் பரப்பாமல்,
பகிராமல், நாம் எழுதும் இணைப்புகளை மட்டுமே அதில் இணைத்துப் பகிர்ந்து, பிற பதிவர்கள்
எழுதும் பதிவுகளையும் முடிந்தவரை, நேரம் உள்ள போது வாசித்துக் கருத்திட முடிந்தால்
கருத்திட்டு, இல்லை என்றால் வாசித்து அவர்களை ஊக்கப்படுத்தாலாமே! தமிழ்வலையுலக ஒற்றுமை
தழைத்தோங்கிடுமே!
இணையாத
வலைப்பதிவர்கள் இணையுங்கள். தங்கள் திறமையை, எழுத்தாற்றலை வெளிப்படுத்துங்கள். புதிதாய்
எழுத வருவோருக்கும் இது பொருந்தும்! தமிழ் எழுத்தாளர்கள் பெருக வேண்டும். மேன்மேலும்
சிறப்படைய வேண்டும். தமிழ் மொழி! தமிழ் எழுத்துக்கள் இவ்வுலகம் முழுவதும் சென்றடைந்து
சிறக்கட்டும்! தழைக்கட்டும்! தமிழின் மணத்தைப் பரப்புவோம்.
தயவான
வேண்டுகோள்! நம் பதிவர் நண்பர்கள் அதில் தங்கள் படைப்புகளை மட்டுமே இணைத்துப் பயன்
பெறுங்கள். தங்கள் பெயர், ஊர், தளத்தின் பெயர், மற்றும் அலைபேசி எண் அல்லது மின் அஞ்சல்
முகவரி கொடுத்து அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். வேறு செய்திகள், தகவல்கள் வேண்டாமே!
அவற்றைப் பகிர பல குழுக்கள், நம் நண்பர்களின் தனிப்பட்ட காண்செவி எண் உள்ளதே! அதில்
பகிர்ந்து கொள்ளலாம் இல்லையா! தேவையற்றவை வரும் போது நாம் இணைக்கும் பதிவுகளின் இணைப்புகள்
எங்கோ காணாமல் நம் கண்களில் படாமல் போகும் வாய்ப்பும் உண்டுதானே!
எனவே
நாம் அனைவரும் நிர்வாகக் குழுவுடன் ஒத்துழைப்போம், மேலும் சிறக்கச் செய்வோம்! முத்தாய்ப்பாக,
நம் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய புகழ்பெற்ற வலைப்பதிவர் தேனம்மை அவர்கள் தன் தளத்தில்
இட்டிருக்கும் வார்த்தைகளுடன்
வலைப்பதிவர்
ஒற்றுமை
ஓங்கட்டும்.!
என்றும்
நம்முள்
வலிமை
பெருகட்டும்.!
துளசிதரன், கீதா
நன்றி..
பதிலளிநீக்குஅருமையான முயற்சி
பதிலளிநீக்குபதிவுகளின் இணைப்பை மட்டுமே
இணைக்கலாம் என்பதில் மகிழ்ச்சி
அது என்னவென்று தெரியவில்லை... என் மனதில் என்ன நினைத்தேனோ, அதுவே பதிவின் முடிவில்....!
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!
நேற்றைய எனது பதிவில் முடிவில், இந்த இரு வரிகளை சேர்க்க வேண்டும் நினைத்து, மறந்து விட்டேன்...!
நன்றி...
Super
பதிலளிநீக்குt.m.1
எந்த வாட்ஸ் அப் குழுவிலும் சேராமல் இருந்தேன் ,இது நமது குழு என்பதால் உடன் சேர்ந்து விட்டேன் !நிர்வாகக் குழுவுக்கு வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குஆம் நல்ல முயற்சி சகோ,, தாங்கள் அதனை தெரியப்படுத்திய பாங்கும் அருமை,, தொடர்கிறேன்,,
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குநல்ல முயற்சி நமது வட்சப் குழு வளரட்டும்
நல்ல முயற்சி சகோ.
பதிலளிநீக்குஎன்னிடம் வாட்ஸ் அப்பை இணைக்கும் அலை பேசி இல்லை. எந்த குழுவிலும் இல்லை. பதிவுகளில் தொடர்பாளராக இருப்பவர்களே வாசிக்க வராத போது......?
பதிலளிநீக்குசார் அதனால் என்ன சார் தங்களுக்குத் தொடர்ந்து வருபவர்கள் வரத்தானே செய்வார்கள் சார்
நீக்குகருத்திற்கு மிக்க நன்றி சார்...
நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதா சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குஅறியாத பலர் நம் தொலைபேசி இலக்கங்களை வைத்து மிஸ்யூஸ் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனால் உலகளாவிய ரிதியில் வலைப்பதிவர் என அறிமுகமில்லாதவர்களை இணைக்கும் போது வலைப்பதிவர் பகிர்வுகள் எனும் சாதகம் இருந்தாலும் பொதுவில் தொலைபேசி இலக்கங்களை பகிரும் போது ஏற்படக்கூடிய பாதங்களையும் ஆராய்ந்திட வேண்டும்.
இது நிச்சயம் எதிர்க்கருத்து இல்லை. நான் என்னளவில் எதை செய்தாலும் நாளை அதனால் என்ன நடக்கும் என தீர்க்கமாய் சிந்தித்தே முடிவெடுப்பேன்.
மற்றப்படி பல புதிய வலைப்பதிவர்களை போனிலிருந்தே அறிய முடிவதில் மகிழ்ச்சி. ஆனால் லிங்க கிளிக் செய்து படிக்க முடியாத படி இணைப்புக்களின் வேகம் இருக்கின்றது. ஒரு நாளில் கிட்டத்த 100 மெசேஜ்?
ஆம் நிஷா நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரியே. அதனால்தான் முடிந்தால் தொலைபேசி எண்ணைப் பகிரவும் என்று சொல்லியிருக்கிறோம். அது போன்று தேவையற்ற செய்திகள், உரையாடல்கள், ஏன் தொழில்நுட்ப கேள்விகள் கூட தொடர்ந்து உரையாடல்களாக இதில் வெளிவராமல் தனிப்பட்ட வாட்சப் எண்ணிற்குக் கொடுக்கலாம். இத்தனை நாட்கள் நாம் டிடியிடம் அப்படித்தானே அவரது அலைபேசியில் விளித்துக் கேட்டுக் கொண்டது?! அப்படியே செய்யலாம் ஏனென்றால் இங்கு இணைப்புகள் தவிர வந்தால் நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். நிர்வாகிகள், டிடியும் சொல்லிக் கொண்டேதான் வருகிறார். தொழில் நுட்ப உரையாடல்களையும்.....
நீக்குஆனால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. நாம் இந்த வாய்ப்பை மிக அழகாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் நம் கையில்தான் இருக்கிறது....
மிக்க நன்றி...சகோ..நல்ல கருத்தை முன்வைத்தமைக்கு
ஆம், ஒவ்வொரு பதிவின் பின்னூட்டங்களின் முடிவிலும் தேனம்மை லக்ஷ்மணன் சொல்லும் தாரக மந்திரம் அது. (நீங்கள் கடைசியில் சொல்லியிருப்பது)
பதிலளிநீக்குஅந்த வாட்சாப் தளத்தில் வேறு எதையும் பகிரவேண்டாம் என்று தீதி உட்பட்ட நிர்வாகிகள் கரடியாகக் கத்தினாலும் அலட்டிக்கொள்ளாமல் அவ்வப்போது எதையாவது அனுப்பும் நம் நண்பர்களை நினைத்தால் புன்னகைக்கத் தோன்றுகிறது.
ஆம்! ஸ்ரீராம் தேனம்மை அவர்களின் தாரகமந்திரம் தான்!!!
பதிலளிநீக்குநிர்வாகிகள் கத்திப் பார்க்கிறார்கள். கேட்கவில்லை என்றால் நீக்கி விடுகிறார்கள் ஸ்ரீராம். நல்லதுதானே! இப்படி விதிமுறைகள் கட்டுக் கோப்புடன், உறுதியாகப் பின்பற்றினால் தான் நல்லது என்று தோன்றுகிறது. அப்படி நீக்கப்பட்டவர்கள் புரிந்ததும் மீண்டும் இணைந்து கொள்ளலாம்தானே நிர்வாகிகளுடன் பேசி....
மிக்க நன்றி ஸ்ரீராம்.
அருமையான நல்ல முயற்சி. அமைப்பின் விதிமுறைகளுக்குட்பட்டு உரிய முறையில் பதிவது நலம். குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குநல்ல முயற்சி வாழ்க..
பதிலளிநீக்குமிக்க நன்ரி செல்வராஜு ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குஎனது கணினியில் தரவிறக்கம் செய்ய முடியவில்லை.. தங்களது தளம் திறப்பதற்கு சிரமமாக உள்ளது.. கேலக்ஸி யில் இருந்து பதிவு செய்கின்றேன்..
பதிலளிநீக்குஎன்ன காரணம் என்று தெரியவில்லையே ஐயா. பார்க்கிறேன்
நீக்குமிக்க நன்றி ஐயா
திண்டுக்கல் தனபாலன் அவர்களது வலைப்பதிவினில் எழுதிய எனது கருத்துரையையே இங்கும் சொல்ல விரும்புகிறேன்.
பதிலளிநீக்கு//நல்ல முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை. எனவேதான் நானும் இந்த குழுவில் இணைந்துள்ளேன். ஆனாலும் தொழில் நுட்ப ரீதியாக இது எந்த அளவில் வெற்றி என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.//
வெற்றி அடையும் என்ற நம்பிக்கைதானே ஐயா...நன்றாகப் போகிறது என்றுதான் தோன்றுகிறது. உடனுக்குடன் பதிவுகளைப் பார்க்க முடிகிறது...
நீக்குமிக்க நன்றி ஐயா...தங்களின் கருத்திற்கு
ஆமாம்ல நான் என் பதிவை போட்டு வாட்ச்சப் லிருப்பில் போட்ட அடுத்த நொடியில் தனபாலன் சார் வந்து பின்னூட்டம் போட்டு விடுவார். அவர் இந்த முயற்சி வெற்றி பெற எவ்வித இலாபமுமின்றி முயற்சி செய்யும் போது நான் உட்பட எதிர்க்கருத்தை விதைக்காமல் கை கொடுப்போம் என புது ஞானம் புது வருடத்தில் வந்து விட்டது.
நீக்குநீங்களும் இணையுங்கள் ஐயா
தமிழ் இளங்கோ ஐயா இந்தக் குழுவில் இருக்கிறார் நிஷா. நாங்களும் இருக்கிறோம்...அவரும் , நாங்களும் எங்கள் பதிவுகளை இணைக்கிறோமே!...மிக்க நன்றி நிஷா தங்களின் கருத்திற்கு
நீக்குநல்லதொரு முயற்சி. நல்ல விதமாய் பயன்படுத்துவது வலைப்பதிவர்களின் கையில். பார்க்கலாம்...
பதிலளிநீக்குஆம் வெங்கட்ஜி நல்ல முயற்சி நன்றாகப் போகிறது போல்தான் தெரிகிறது. மிக்க நன்றி ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...
நீக்குஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குமிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் வாழ்த்திற்கு
நீக்குதமிழ் வலைப்பதிவகம் என்பதுதான் வாட்ஸப் க்ரூப் பெயரா? அதில் இணைய தமிழில் பெயரை அடிக்க வேண்டுமா? அல்லது ஆங்கிலத்திலா?
பதிலளிநீக்குபானுமதிம்மா ஆமாம் அம்மா அந்த பெயர்தான். அதில் இணைய தங்கள் வாட்சப் எண்ணை மட்டும் டிடி யிடம் கொடுத்தால் போதும். அவர் இணைத்துவிடுவார். அதன் பின் தாங்கள் தங்கள் பெயர், தளத்தின் பெயர், விரும்பினால் அலைபேசி எண், மின் அஞ்சல் முகவரி என்று கொடுத்து புதிய இடுகையின் இணைப்பை மட்டும் கொடுக்கலாம்.. பெயர் ஆங்கிலம் என்றாலும் சரி தமிழ் என்றாலும் சரி...பிரச்சனை இல்லை....டிடி அவர்களைத் தொடர்பு கொண்டால் போதுமம்மா...
நீக்குமிக்க நன்றிம்மா
Thanks for your response. Pls.let me know how to contact DD/TT.
பதிலளிநீக்குபானுமதிம்மா இதோ டிடி அவர்களின் எண். +91 9944345233 இந்த எண் வாட்சப்பில் உள்ளது. இதிலும் நீங்கள் அவரைத் தொடர்பு கொள்ளலாம். இல்லை நீங்கள் அவர் எண்ணில் அழைக்கலாம்.
நீக்குமிக்க நன்றிம்மா..
ஒற்றுமை ஓங்கட்டும்
பதிலளிநீக்கு