வெற்றுக் கைகளால் தன் எதிரிகளுடன்
சண்டையிட்ட மனிதன் பிற்காலத்தில் ஆயுதம்
கையிலேந்திய போது ஆயுதம் இல்லாத
அவனது எதிரிகள் எதிர்க்க முடியாமல் திகைத்திருக்கலாம். கூர்மையான வாள் ஏந்தியவன், வில்லும்
அம்புமாய் தன் எதிரே நிற்கும்
எதிரியைக் கண்டுத் திகைத்திருக்கலாம்.
பின்னர் அதே வில்லும் அம்பும்
ஏந்தியவன் தன் முன் துப்பாக்கியுடன்
நிற்கும் எதிரியைக் கண்டுத் திகைத்திருப்பான்.
அப்படி ஆய்தங்கள் படிப்படியாய் உருமாறி அணு ஆயுதமான
போது எல்லா நாடுகளும் அணு
ஆயுதங்களை உருவாக்கி வல்லரசாக படாதபாடு படத் தொடங்கின. அப்படி வல்லரசான நாடுகளில்
முதலிடம் வகிக்கும் அமெரிக்காவையே நிலைகுலையச் செய்த ஒரு புதிய
போர்முறை உதயமாகியிருக்கிறது உலகில் என்பதைப் பறைசாற்றும்
புகைப்படம் இது. மனித வெடிகுண்டு!
மனித வெடிகுண்டு எப்போது,
எங்கிருந்து, யாரையெல்லாம் தன்னுடன் சேர்த்துக் கொண்டு வெடிக்கும் என்று
தெரியாத நிலை. அதற்காக மனிதர்களைத்
தயாராக்க அரசியலோ, தேர்தலோ, அரசோ, தனிநாடோ இவையொன்றும்
தேவையில்லை. மத, இன, மொழிவேற்றுமை
எனும் சிறிய தீப்பொறி போதும்.
அத்தீப்பொறியைக் காட்டுத்தியாய் மாற்ற முடியும் தீவிரவாதிகளால்! அப்படிப்பட்டத்
தீவிரவாத தீப்பொறி பலவிதமானக் கனவுகளைச் சுமந்து பறந்த சாதாரணம்
மனிதர்கள் பயணித்த விமானத்தின் 9/11/2001 அன்று ஏறி
அவ்விமானத்தையே ஏவுகணையாக்கி அமெரிக்காவில் உயர்ந்து நின்ற இரு கட்டிடங்களைத்
தகர்த்தெறிந்து 2976 பேர் உயிரிழந்த அந்தக்
கொடுமையை நினைக்கச் செய்யும் இப்புகைப்படம் இது போன்ற விபத்து
எங்கும் எப்போதும் நிகழலாம் எனும் கசப்பான உண்மையை
உணர்த்திக் காண்போரை எல்லாம் நிம்மதி இழக்கச்
செய்கிறது.
“டஸ்ட் லேடியாக” சிலை
போல் நிற்கும் இவரது பெயர் “மார்சி
பார்டர்” (42 வயது)(Marcy Borders – 42) பயணிகள் விமானம் வேர்ல்ட்
ட்ரேட் செண்டர் கட்டிடத்தில் மோதும்
போது அதன் 81 வது மாடியுலுள்ள
பேங்க் ஆஃப் அமெரிக்காவில் பணியாற்றியவர்.
எப்படியோ உயிர் தப்பி, அருகிலிருந்த
கட்டிடத்தின் வரவேற்பறைக்குச் சென்ற அவரை அங்கிருந்த
“ஸ்டான் ஹோண்டா” என்பவர் புகைப்படம்
எடுத்திருக்கிறார். அந்தப்
புகைப்படம்தான் இது. அவ்விபத்து ஏற்படுத்திய
அதிர்ச்சியிலிருந்து மீள மார்சிக்கு 10 ஆண்டுகள்
ஆனது. அப்படி இது போன்ற
விபத்துகளில் உயிர் பிழைப்பவர்களில் எவ்வளவு
துயரத்துடன் வாழ்கிறார்கள் என்பதற்கானச் சான்றாகும் புகைப்படம் இது. சிலமாதங்களுக்கு
முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மார்சி உயிரிழந்தார்.
இது போன்ற ஆயிரக்கணக்கானோர் இப்படிப்பட்ட
விபத்துகளிலிருந்து உயிர்த்
தப்பி இதேபோல் பலவித இன்னல்களுடன்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இஸ்லாமிய மக்களுக்காக “இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்” நிறுவப் போராடுவோருக்குப் பயந்து
சிரியாவிலிருந்து க்ரீஸ் வழியாக ஐரோப்பிய
நாடுகளுக்குத் தங்கள் நாட்டையும், வீட்டையும்,
உற்றார் உறவினர்களையும் துறந்து ஓடும் மனிதர்கள்
உயிரைப் பயணம் வைத்துப் படகேறி
மறு கரை சேர்ந்துத் தங்களுக்கு
அடைக்கலம் தரும் நாட்டைத் தேடி
ஓடுபவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக ஆகும் போது, ஐரோப்பிய
நாட்டவர்களுக்கும் ஐயம். சில
நாட்டு எல்லையைக் கடக்க அனுமதிக்காத நிலையில்,
எப்படியேனும் அத்தடையை மீறி, அந்நாட்டிற்குள் நுழைய
முயலும் பரிதாபத்திற்குரிய மக்கள்.
ஹங்கேரி நாட்டுச் சானலில்
பணிபுரியும் ஒரு பெண், அந்நாட்டு
எல்லையில் அகதிகளைத் தடுக்கும் காவல்துறையினரின் தடையை மீறிக் குழந்தைகளைத்
தூக்கிக் கொண்டு ஓடுபவர்களைத், தன்
காலால் தட்டி விழச் செய்யும்
கொடுமையைக் காண்பிக்கின்றது இப்புகைப்படம். அதுமட்டுமின்றி இப்படி எல்லா அகதிகளுக்கும்
அடைக்கலம் கொடுப்பதற்கு எதிராக ஒரு நிகழ்ச்சியையும்
அவர் பணியாற்றிய சானலில் ஒளிபரப்பச் செய்தாராம்
அந்தப் பெண். மனிதாபிமானமற்ற இச்
செயலால் அப்பெண்ணிற்கு அவ்வேலையை இழக்க நேர்ந்தது. அடைக்கலம்
தேடிவருவோரின் எண்ணிக்கை அதிகமானால், அடைக்கலம் கொடுப்போருக்கு ஏற்படும் அதிர்ச்சியைக் காட்டுகின்றது இப்படம். எனினும்
பாதுகாப்பாக பயமின்றி வாழ்வோர்கள், பாதுகாப்பின்றி பயத்தோடு அடைக்கலம் தேடி வருவோர்க்கு அடைக்கலம்
கொடுக்க வேண்டியது அவர்களது கடமை. அதை அவர்கள்
அடைக்கலம் தேடி வருவோருக்குச் செய்யும்
உதவியாக கருதக் கூடாது.
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் முஹம்மது கசூரியின் “நைதர் எ ஹாக்-நார் எ டவ்-அன் இன்சைடர் அக்கவுண்ட்
ஆஃப் பாகிஸ்தான் ஃபாரின் பாலிசி” எனும்
புத்தகத்தின் வெளியீடு மும்பையில் “அப்செர்வர் ரிசர்ச் ஃபௌண்டேஷன்”ன்
சேர்மேனும், பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளருமான, சுதீந்தர
குல்கர்னி, நடத்தக் கூடாது என
எச்சரிககி விடுத்திருந்தது சிவசேனா.
அதையும் மீறிப் புத்தக
வெளியீட்டிற்குக் சென்ற குல்கர்னியைக் காரிலிருந்துப்
பிடித்து வெளியே இழுத்துக் கரி
எண்ணயை அவரது தலையில் ஊற்றி
தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். அவ்வெதிர்ப்பிற்கு
எதிர்ப்புத் தெரிவிப்பதுதான் இப்புகைப்படம். விரோதமுள்ள இரு நாடுகளுக்கிடையே எப்போதும்
விரோதத்தை வளர்த்துக் கொண்டே போவதை விட,
இப்படி இரு நாடுகளுக்குமிடையே நட்பை
வளர்க்க உதவும் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு
அளித்து அவற்றை நடத்தி விரோதத்தைக்
குறைத்துக் கொள்வதுதானே இரு நாடுகளுக்கும் நல்லது.
“நீங்கள் எல்லோரும் இனி
என் சகோதரர்களே, கடந்த 3 ஆண்டுகள் மனக்கசப்புடன்
வாழ்ந்துவந்தேன். இப்போது என் வாழ்வு
மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டது. விரைவில்
என் வேலையில் மீண்டும் சேர்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும். இப்பேருதவியை
வெளி நாட்டிலுள்ள முகம் தெரியாதவர்களிடமிருந்து கிடைக்கப் பெறுவேன்
என்று எதிர்ப்பார்க்கவே இல்லை. இது
என்னுடைய இரண்டாம் பிறவியே”.
ஆப்கானிஸ்தான் இராணுவத்தில் காப்டனான அப்துல் ரஹீமின் வார்த்தைகள்
இவை. 3 ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்திற்கடியில் கண்ணிவெடிகளைக்
கண்டுபிடித்து அவற்றைச் செயலிழக்கச் செய்வதில் நிபுணரான இவர், பாகிஸ்தான் எல்லை
அருகே, 30 கண்ணி வெடிகளைச் செயலிழக்கச்
செய்த பின்னர், 31 வது கண்ணிவெடியைச் செயலிழக்கச்
செய்ய முயன்ற போது ஏற்பட்ட
விபத்தில் இரு கைகளின் மணிக்கட்டிற்குக்
கீழே உள்ள பாகத்தை இழந்தவர். கடந்த
ஏப்ரல் மாதம் கொச்சி அமிர்தா
இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சில்,
பைக் விபத்தில் மரணமடைந்த ஏலூரைச் சேர்ந்த தைப்பரம்பில்
டி இ ஜோசஃபின் கைகள்
மாற்று அறுவைச் சிகிச்சையின் மூல
அப்துல் ரஹீமிற்குப் பொருத்தப்பட்டு, அவருக்கு இரண்டாம் பிறவி அளித்த போது
கூறிய வார்த்தைகள்தான் இவை. ஜோசஃபின்
மனைவிக்கும், மகளுக்கும் மாற்று அறுவைச் சிகிச்சை
செய்த மருத்துவர்களுக்கும், உயிர் பெற்று எழுந்த
ஜோசஃபின் கைகளை உயர்த்தி நன்றி
சொல்லும் இப்படம், மனித நேயத்தையும் மருத்துவ
உலகின் பிரமிக்க வைக்கும் வளர்ச்சியையும், அன்பு ஆதரவு, கனிவு,
கருணை போன்றவற்றிற்கு இன, மொழி, சாதி,
மத பேதமில்லை என்பதையும் பறை சாற்றுகின்ற ஒன்று.
வாழ்த்துவோம் இதற்குக் காரணமானவர்களை எல்லாம்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
இனியேனும் இல்லாமல் போன ஏரிகளையும், குளங்களையும்,
கால்வாய்களையும், ஆறுகளையும் உயிர்ப்பித்து இயற்கையோடு ஒன்றி வாழ உறுதி
எடுப்போம்.
படங்கள்: இணையத்திலிருந்து
அன்பையும் மனித நேயத்தையும் உணர்த்தும் மிக அருமையான நீண்ட கட்டுரைக்குப் பாராட்டுகள். தேர்ந்தெடுத்துக் காட்டியுள்ள அனைத்துப்படங்களும் பேசும்படங்களாக பல விஷயங்களை எடுத்துச்சொல்கின்றன. சிந்திக்க வைக்கும் சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி வைகோ சார்! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்..
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குஉலகையே உலுக்கிய உயர்ந்த கட்டிடத்தை இடித்து அநேக உயிரைப் பறித்த தீவிரவாதம்...!
சிரியாவிலிருந்து வெளியேறும் மனித மாண்புகள்...!
தனிமைப் பட்டுப்போன சகிப்புத்தன்‘மை’...!
இன்னும் பட்டுப்போகமல் இருப்பதை நிருபிக்கும் ‘கை கொடுக்கும் கை’கள்...!
மனிதம் துளிர்க்கச் செய்த மனிதாபிமானிகளின் தன்னார்வத் தொண்டுள்ளம்... தூய உள்ளம்...!
படங்கள்... பாடங்களாகட்டும்...!
த.ம.1
மிக்க நன்றி மணவை நண்பருக்கு, ஒவ்வொரு நிகழ்விற்குமானத் தங்கள் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும்..ஆம் படங்கள் பாடங்கள்தான் ஆனால் நாம் தான் கற்கத் தவறுகின்றோம்..
நீக்குவேதனையினைத் தரும் செய்தியும்
பதிலளிநீக்குநெஞ்சை நெகிழச் செய்யும் செய்திகளுமாய்
பதிவு அருமை
நன்றி நண்பரே
தம 1
மிக்க நன்றி கரந்தையாரே தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமறக்க முடியாத நிகழ்வுகள்...
பதிலளிநீக்குஆம் டிடி மிக்க நன்றி. வெகுநாட்களாயிற்றே தங்களின் பதிவுகள் வந்து!?
நீக்குமனிதநேயம் பெருக வேண்டும் என்பதை வலியுறுத்தும் கட்டுரை மிக அருமை சகோ. கடைசியாக அதை இயற்கையைப் பாதுகாப்பதிலும் பின்பற்றவேண்டும் என்று கூறியமை சிறப்பு
பதிலளிநீக்குமிக்க நன்றி தேனு சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.
நீக்குவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
பதிலளிநீக்குவைத்தூறு போலக் கெடும்.
தண்ணீரில் கரைந்த சென்னையும் போல.....!
மிக்க நன்றி இராஜேஸ்வரி சகோ தங்களின் க்ருத்திற்கும் வருகைக்கும்..
நீக்குஒவ்வொரு படமும் சொல்கிறதே ஒரு சோகக் கதையை !
பதிலளிநீக்குமிக்க நன்றி பகவான்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்கு"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
பதிலளிநீக்குவைத்தூறு போலக் கெடும்"
வரும் முன் காப்பவந்தான் அறிவாளி. நாம் என்னதான் சொன்னாலும் அவர்கள் செய்வதைத்தான் செய்வார்கள். பகிர்விற்கு நன்றி.
வரும் mun
வாங்க கும்மாச்சி! ம்ம்ம் என்ன சொல்ல. தமிழகத்தின் தலைவிதி மாறினால் நன்று...பார்ப்போம்..இனியாவது ஏதேனும் செய்து திருந்துகின்றார்களா என்று...உயர்நீதி மன்றம் ஆணையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அடையாறு, கூவம் ஆக்ரமிப்புகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என்று...
நீக்குஅழகானது உங்கள் பதிவு ....ஆழமானது ....உங்கள் சமூகம் பற்றிய அக்கறை வணங்கத்தக்கது
பதிலளிநீக்குமிக்க நன்றி செல்வா தங்களின் கருத்திற்கு. பாராட்டிற்கும். நம் சமூகம் மாற வேண்டும் என்ற எண்ணத்தால்தான் நீங்கள் மற்றும் நம் பதிவர்கள் அனைவரும் எழுதிவருகின்றோம்...பார்ப்போம்...
நீக்குவெதனைச்செஇதிகலும், நெகிழ வைக்கும் செய்திகளும், பதற வைக்கும் செய்திகளும் படங்களுடன். நல்ல முயற்சி. சுவாரஸ்யமாய்ப் படிக்கப் பார்க்க முடிந்தது.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.
நீக்கு"வேதனைச் செய்திகளும்" வரியைப் படுகொலை செய்ததற்கு வருந்துகிறேன்.
நீக்கு:)))
ஸ்ரீராம் வேதனைச் செய்திகள் என்பதைப் படுகொலை செய்தாலும் மீண்டும் திருத்தி உயிர்ப்பித்துவிடலாம். ஆனால், இப்போது படுகொலைக்கு இணையான, வெள்ளத்தில் மிதந்த உயிர்களை அதற்குக் காரணமானவர்கள் மீட்டெடுக்க முடியுமா? குற்றவாளிக் கூண்டில் ஏறுவார்களா? பழி மழையின் மீது! மழையைத்தான் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும்.
நீக்குநெஞ்சை நெகிழச் செய்யும் நிகழ்வுகள்...
பதிலளிநீக்குமனிதநேயம் பெருக வேண்டும்....
வேறு மாற்று வழி இல்லை
மிக்க நன்றி அருணா சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குஅமெரிக்க நிகழ்வு மறக்க முடியாத துயரம்
பதிலளிநீக்குவிபத்திலிருந்து மீண்ட சிலர் மனவியாதிக்கு ஆளாகி விடுகின்றார்கள் என்பது உண்மைதான் நானும் கூட 2010தில் மறுபிறவி எடுத்த உணர்வை பெற்றிருக்கின்றேன் ½ மணி நேரத்தில் மீண்டு உடனே என்னால் முடிந்த உதவிகளை செய்தேன் சில குழந்தைகளை உடனடியாக மீட்டேன் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்
வாழும் காலம் கொஞ்சமே இதை மனிதன் என்றுதான் உணரப் போகின்றானோ.... தெரியவில்லை.
ஜோசப்பின் கைகள் அப்துல் ரஹிமின் உடம்பில் இணைத்த மருத்துவர் யாரோ... அவர் முனியசாமியாக இருந்தால் ? ? ? நன்றாக இருக்கும் காரணம் மதங்களின் சங்கமம்
இந்த பேரிடரில் படித்த பாடம் மறக்ககூடாது
தமிழ் மணம் 7
மிக்க நன்றி கில்லர்ஜி தங்களுக்குப் பதில் அளித்தது எப்படி எங்கு போனது என்று தெரியவில்லை. ஆமாம் 9/11 மிகப்பெரிய பயங்கரம். ஜோசஃபின் கைகள் இணைந்ததில் மதங்களும் இணைந்துள்ளனதான்.
நீக்குஅட உங்கள் அனுபவத்தையும் ஒரு பதிவாக எழுதலாமே ஜி. எழுதுங்கள்...
புகைப்படங்கள் சிறந்த ஆவணங்கள்! அதன் பின்னே ஒளிந்திருக்கும் வரலாறுகள் பிரமிப்பினை ஏற்படுத்தும்! அருமையான பதிவு! வாழ்த்துக்கள்! இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ் கருத்திற்கு, வருகைக்கும். வாருங்கள் மெதுவாக வந்து வாசித்துச் செல்லுங்கள்.
நீக்குஅனைத்தும் அருமையான புகைப்படங்கள் . தொகுப்புக்கு நன்றி .
பதிலளிநீக்குமிக்க நன்றி ராஜா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை;
பதிலளிநீக்குஏரி முன்னர் தூர் வாராரது போலக் கெடும்
மிக்க நன்றி மலர் தங்களின் கருத்திற்கு...வருகைக்கும்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறது... படிப்பவர்களை நிச்சயம் சிந்திக்கவைக்கும் பகிர்வுக்கு நன்றி த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் தம்பி தங்கல் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குஎழுதியுள்ள சொற்களைவிட புகைப்படங்கள் அதிகமான உணர்வுகளை வெளிப்படுத்திவிட்டன. அனைவரையும் சிந்திக்கவைக்குமளவு அமைந்துள்ளது. நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்.
நீக்குநல்ல பதிவு! வெறுமே உலகப் புகழ் பெற்ற படங்களை மட்டும் வரிசைப்படுத்தி விளக்கமளிக்காமல், அண்மையில் நடந்த நிகழ்வுகளையும் உள்ளிட்டுத் தனிப்பட்ட முறையில் படங்களை வெளியிட்ட விதம் அருமை! அதுவே இதன் தனித்தன்மையைக் காட்டுகிறது. இது ஒரு நிரந்தரத் தொடராக வந்து கொண்டே இருக்கட்டும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும். ஆம்! நிரந்தரத் தொடராகத் தரும் முயற்சியும் உண்டு. அவ்வப்போது. மிக்க நன்றி மீண்டும் உங்கள் ஊக்கத்திற்கும்.
நீக்குஆம் அத்தனைப் புகைப்படங்க்களும்
பதிலளிநீக்குவரலாற்றுச் சின்னங்கள்தான்
அறியாதன மிக அறிந்தோம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பரே தங்கள் கடுத்திற்கும் வருகைக்கும்
நீக்குஒவ்வொரு படமும் ஒரு பாடம்.....
பதிலளிநீக்குபடம் பற்றிய உங்கள் கருத்துகளும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
"மனித நேயத்தையும் மருத்துவ உலகின் பிரமிக்க வைக்கும் வளர்ச்சியையும், அன்பு ஆதரவு, கனிவு, கருணை போன்றவற்றிற்கு இன, மொழி, சாதி, மத பேதமில்லை" என்பதையும்
பதிலளிநீக்கு"இல்லாமல் போன ஏரிகளையும், குளங்களையும், கால்வாய்களையும், ஆறுகளையும் உயிர்ப்பித்து இயற்கையோடு ஒன்றி வாழ உறுதி எடுப்போம்."
என்பதையும்
இப்பதிவு வெளிப்படுத்தும் சிறந்த எண்ணங்களாகக் கருதுகிறேன்.
அருமையான தகவலைப் பகிரும் தங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்.