அவளின் கண்ணாடி.....
குளித்து விட்டு வந்து
கண்ணாடி தேடினேன்.
முகம் பார்த்துப் பொட்டு வைக்க
என் முன் வந்தாய் நீ
என் நெற்றியில்
பொட்டும் வைத்தாய்
உன் இதழும் பதித்தாய்
உன்னில் என்னைக் கண்டேன்
கண்ணாடி எதற்கு?
_________________________________________________________________________________
மரணத்தின் பிடியில் மனிதம்
பெற்றவளின் மரணம்
மகளுக்கு அனுமதியில்லை
அருகில் செல்ல.
வீட்டு விலக்காம்.
உயிர் உருவாக
காரணமாய் இருக்கும் "அது"
உயிர் பிரிந்த வேளை
தடையாய்...
மரணத்தின் பிடியிலும்
சடங்குகள், சம்பிரதாயங்கள்.
மரிக்கின்றதோ மனிதம்?
-----கீதா
அன்புள்ள சகோதரி,
பதிலளிநீக்குஅவளின் கண்ணா(ட்)டி
அவன்...!
விலக்கு -
மூடத்தன விலக்கெல்லாம்
விளங்க வைத்து...
விலக்கி வைப்போம்...!
அருமையான கவிதை.
த.ம.2.
ஆம்! மணவை சகோ...மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குஅதானே கண்ணாடி எதற்கு..?எப்படியெல்லாம் பெண்ணை ஒதுக்கி வைக்கின்றார்கள்...கீதா..
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.
நீக்குசில சம்பிரதாயங்கள் கொடுமை.
பதிலளிநீக்குஅவற்றினைச் செய்துதான் ஆகவேண்டும்
என்று முரண் பிடிப்பவர்களைக் கண்டால்
ஒரு பக்கம் ஆத்திரமும் வருகிறது.
இன்னொரு பக்கம் பரிதாபமும் வருகிறது.
சுப்பு தாத்தா.
ஆமாம் சுப்பு தாத்தா...மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...
நீக்குஇரண்டுமே டாப் க்ளாஸ்! புதிதாக எழுதுவதாக சொல்கிறீர்கள் ஆனால் வெளுத்துக் கட்டுகிறீர்கள்! அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ் தங்களின் பாராட்டிற்கு.
நீக்கும்ம்ம்புதுசு என்றால் 30 வருடங்கள் என்று சொல்லலாம்..கல்லூரி அதன் முன் பள்ளி காலத்தில் நிறைய எழுதியிருக்கின்றேன் மரபு உட்பட. ஆனால் அதன் பின் எழுதவில்லை அதனால் எல்லாம் மக்கி விட்டது. இப்போதுதான் மீண்டும் முயற்சி. அத்னால்தான் புதிதாக என்று சொல்லியிருந்தேன்.
இரண்டு கவிதையும் நன்று மிகவும் அருமை
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
மிக்க நன்றி கில்லர்ஜி. தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...
நீக்கு1) அருமை...
பதிலளிநீக்கு2) கொடுமை...
மிக்க நன்றி டிடி தங்களின் கருத்திற்கு. வருகைக்கு..
நீக்குமதத்தின் பெயரால் மனிதம் மரித்து
பதிலளிநீக்குநூறுநூறாண்டுகள் கடந்து விட்டன சகோதரியாரே
தம +1
மிக்க நன்றி கரந்தையார் சகோ தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குபடிக்கலாம், கமெண்ட் அடிக்கலாம் என்று வந்தேன். பிடித்து விட்டது உங்கள் கவிதை.
பதிலளிநீக்கு:))))
அட! அப்படியா ஸ்ரீராம்...மிக்க நன்றி
நீக்குஅற்புதமான கவிதைகள்
பதிலளிநீக்குபகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்கு1.அகத்தின் அழகே கண்ணாடிதான்
பதிலளிநீக்கு2. செத்து பொன் பிறகும்..சடங்குகள், சம்பிரதாயங்கள். நிலவும் சமூகத்தில்..என் தாயார் என்னை மறந்தபோது..எந்தவித .சடங்குகள், சம்பிரதாயங்கள்..(அடக்கம்)அனுப்பி வைத்தேன்.
மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும், வருகைக்கும்
நீக்குவேதனையான நிகழ்வு தங்களின் அருமைத் தாயாரின் மறைவு...
இரண்டு கவிதைகளையும் தனித்தனியாகப் பதிவிட்டிருந்தால் வேறுமாதிரி ரசித்திருக்க முடியும். இரண்டாவது கவிதையின் நெடி, முதல் கவிதையைப் பாதித்துவிடுகிறதே! முதல் கவிதை, குளித்துவிட்டு சுத்தமாக வந்திருக்கும் பெண்ணைப் பற்றியது. இரண்டாவது கவிதை இன்னும் குளிக்காத பெண்ணைப் பற்றியது.... இராய செல்லப்பா
பதிலளிநீக்குquite true
நீக்குதீபாவளி வாழ்த்துக்கள்.
subbu thatha.
முதலில் அப்படித்தான் நினைத்தேன். பின்னர் இரண்டையும் சேர்த்துப் போட்டுவிட்டேன் சார். என்னவோ தனித்தனியாகப் போட மனதில் தோன்றவில்லை. நீங்கள் சொல்லும் மூட் ...ம்ம்ம் சரிதான்...
நீக்குமிக்க நன்றி சார் இனி அது போல போட்டாப் போச்சு..கவிதை வந்தால்...
கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்றுதான் சொல்வார்கள் ,நீங்கள் இப்படி கேட்கிறீர்களே :)
பதிலளிநீக்குஇந்த சம்பிரதாயம் இன்னுமா உயிரோட இருக்கு :)
இந்த சம்பிராதயம் மாறாது என்ன டெக்னாலஜி வேணா மாறும்...ஸ்கைப்பில் பார்த்தேன் இல்லை வேற ஒண்ணு...ஆனாலும் கவிதைகளின் அர்த்தம் மாறவில்லை
நீக்குஇன்னொன்று அந்தக் கவிதை இப்போது எழுதியது இல்லை. பல வருடங்களுக்கு முன் எழுதியது...
மிக்க நன்றி பகவான் ஜி!
முதல் கவிதை ரசனைக்குறியதாயும், இரண்டாவது வேதனை அளிப்பதாயும்
பதிலளிநீக்குஉள்ளது. ஆதியில் முன்னோர் செயல்கள் அர்த்தமற்ற மூட நம்பிக்கையாய் மாறி விட்டது. எப்படி இருந்தாலும் இது வெறும் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விட முடியாது. கண்டிக்கப்பட வேண்டியது.
உண்மைதான் சிவம்!. மிக்க நன்றி சிவம்..தங்களின் கருத்திற்கு..
நீக்குரெண்டு டிபரன்ட் feelings!!! ரெண்டுமே எடுத்துகிட்ட mood ஐ அட்டகாசமா காட்டிருக்கு!! சூப்பர் கீத்து!!
பதிலளிநீக்குமிக்க நன்றி மைத்தூ. முதலில் இரண்டையும் சேர்த்துப் போடணுமா என்று நினைத்து பின்னர் அப்படியெ போட்டுவிட்டேன்...முதல் கவிதை பல வருடங்களுக்கு முன் எழுதியதால்.....
நீக்குஅதுதானே#கண்ணாடி எதற்கு?
பதிலளிநீக்குஅதானே! மிக்க நன்றி செல்வா தங்களின் கருத்திற்கு...
நீக்குஹலோ, ஹலோ... என்ன நடக்கிறது அங்கே?
பதிலளிநீக்குமுதல் கவிதை கலக்கல் மாயக்கண்ணாடி ; இரண்டாவது மனதை கலங்க வைக்கும் கவிதை.
எனக்கு தெரிந்து நாம் ஏதேனும் "துக்க" வீட்டுக்கு சென்று திரும்பியுடன் குளிக்க வேண்டும், இல்லையென்றால் "தீட்டு" என்கிறார்கள், அப்படி தீட்டுக்குறியதை- தீட்டுடன் இருப்பவர் பார்ப்பதில் என்ன தீட்டு.? அதை குறித்து நீங்கள் "தீட்டும்" கவிதை நயமாக சமூக அவலத்தை "திட்டும்" கவிதை.
வாழ்த்துக்கள், புது அவதாரத்திற்கு.
ம்ம்ம் .. இனி சிலருக்கு வேலைகள் இருக்காது.
தீபாவளி வாழ்த்துக்கள்.
நன்றி.
கோ
மிக்க நன்றி கோ நண்பரே கவிதையைப் புரிந்து கொண்டதற்கும் தங்களின் அழகான கருத்துரைக்கும்...
நீக்குஅன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! தங்களின் வாழ்த்திற்கு. தங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.
நீக்கு//மரணத்தின் பிடியிலும்
பதிலளிநீக்குசடங்குகள், சம்பிரதாயங்கள்.
மரிக்கின்றதோ மனிதம்?//
மரித்தது மனிதமும்....
நல்ல கவிதைகள். பாராட்டுகள்.
மிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்
நீக்குமனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் வாழ்த்திற்கு. தங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்துகள்
நீக்குமிக்க நன்றி யாழ்பாவாணன். தங்களின் வாழ்த்திற்கு. தங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநல்ல கவிதைகள்! ஆனாலும் அந்தக் 'கிழக்குக் கடற்கரைச் சாலை' பதிவில் இருந்ததை விட இதில் கவித்துவம் கொஞ்சம் குறைவுதான். இருந்தாலும், இரண்டாவது கவிதையின் கருத்து நெற்றியடி! தொடர்ந்து எழுதுங்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ! தங்களின் கருத்திற்கு. முயற்சி செய்கின்றேன்.
நீக்குஇரண்டு வெவ்வேறு உனர்வுகள்,அருமையான கவிதைகளாக.....
பதிலளிநீக்குமரணத்தின் பிடியில் மனிதத்தில் தெரிவது “அவளின்“ கண்ணாடி....!!
பதிலளிநீக்குஎன்ன இது.....
எந்தத் துறையையும் விட்டுவைப்பதில்லையெனத் துணிந்திறங்கிய களமாடல்?!!!!
ஹ ஹ ஹா
அருமை அருமை
தொடருங்கள்.
நன்றி
அட ரொம்ப நன்னா இருக்கே கவிதை! ம்..ம் சிந்தனையும் அபாரம் மனத்தைக் கவரும் விதத்தில்.இரண்டுமே அருமை அருமை தொடருங்கள் ...!
பதிலளிநீக்கு