ஞாயிறு, 14 ஜூன், 2020

கேரளத்தில் தேர்வுகள் - அனுபவத் தத்துவம் - செபியின் விளையாட்டு

பகிர நினைத்த செய்தி

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைந்திடட்டும். 

கேரளத்தில், மார்ச்சில் நடை பெறத் தொடங்கிய 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடந்துகொண்டிருந்த சமயத்திலே எதிர்பாராத  ஊரடங்கினால்  தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் மே மாதம் 26 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு மே 26 முதல் மே 31 வரை நடந்திருக்கின்றன. தொற்று பாதிப்பு இல்லாத பகுதிகளில், பரீட்சை எழுதும் மையங்கள் மாற்றப்பட்டு, மாற்றப்பட்ட மையம், தேதி, தேர்வு விவரங்கள் என்று எல்லா மாணவ மாணவியர்க்கும் தெறிவிக்கப்பட்டு, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கும், மாணாக்கர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு நடந்திருக்கிறது.


பயணம் செய்து தேர்வு எழுத வேண்டிய மாணாக்கர்களுக்கு பயணம் செய்வதற்கான பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. தகுந்த பரிசோதனைகள் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மாணவர்களும் சரி தேர்வுப் பணியில் இருந்த ஆசிரியர்களும் சரி எல்லோரும் மாஸ்க் அணிந்து, சோசியல் டிஸ்டன்ஸ் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

ஊரடங்கு தொடங்கிய நேரத்தில் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதால், கேரளத்திலிருந்து திருநெல்வேலிக்கு வந்திருந்த ஒரு மாணவன், மாற்றப்பட்ட தேதி, நேரம், அவனது மையம்,  எல்லாம் அறிவிக்கப்பட்டதும் திருநெல்வேலியிலிருந்து காலை 5 மணிக்குத் தன் தந்தையுடன் 50சிசி மொபெட்டில் புறப்பட்டு அவனுக்கான தேர்வு மையமான கலமச்சேரிக்கு – 285 கிமீ தூரம் - பயணப்பட்டிருக்கிறான். அவர்கள் பயணத்திற்கான ஸ்பெஷல் பாஸ் வாங்கியிருந்தாலும், தமிழ்நாடு கேரளா பார்டரான களியக்காவிளையில் அவன் அதைக் கடந்து செல்ல முடியாது என்றிட பின்னர் சில மணி நேரத்திற்குப் பிறகு அவனுக்கு எல்லையைக் கடக்க பாஸ் வழங்கப்பட்டு தேர்விற்கு முதல் நாள் 6.30 மணியளவில் கலமச்சேரியை சென்றடைந்திருக்கிறான்.  அங்கு அவன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் அங்கு தங்கிட அனுமதிக்கவில்லை. பின்னர் போஸீஸ் வந்து அவர்களிடம் பேசிய பிறகு அனுமதி அளிக்கப்பட்டு அங்கு தங்கியிருக்கிறார்கள்.

மறு நாள் தேர்வு மையத்தில் தனி வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டு தேர்வு எழுதிய பின், இப்பையனைத் தவிர மற்ற எல்லாரும் அதே நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவன்தான் முதல் மாணவனாக மையத்தை விட்டு வெளியே சென்றிருக்கிறான்.

பொள்ளாச்சி அருகில் இருக்கும் திருமூர்த்தி மலையின் அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே வசித்து வரும்  ஒரு மாணவிக்கு மாற்றப்பட்ட மையம் அவளுக்கானப் பாடங்களின் தேர்வின் தேதி, நேரம் இவை தேர்விற்கு மூன்று நாட்கள் முன்னரே அவளுக்குத் தெரியவந்துள்ளது. அவளது மொபைலைத் தொடர்பு கொள்ள முடியாமல் சிரமப்பட்ட அவளது பள்ளி அதிகாரிகள் அதன் பின் அப்பகுதி வனத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அவளுக்குத் தெரிவிக்கச் சொல்லி, அவளுக்குத் தேர்வு எழுத வருவதற்கான பயண உதவிகளைச் செய்யும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் பின் அவளும் அவளது தந்தையும்  எந்தவித சிரமமும் அதிகம் இல்லாமல் தேர்வு மையத்தை சென்றடைந்திருக்கிறார்கள்.

பல மாணவ மாணவிகள் பல தூரம் பயணம் செய்து, தங்க இடம் இல்லாமல் லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கித் தேர்வு எழுதியிருக்கிறார்கள். எபி யில் பாசிட்டிவ் செய்திகளில் கூட இப்படியான ஒரு செய்தி இடம் பெற்றிருந்தது. 

சில அறிமுகங்கள்

http://pachaimannu.blogspot.com/  

இந்த வலைப்பூவில் எழுதி வருபவர் ரம்யா. இவர் அமெரிக்கா வாசி. மிக அழகாக எழுதிவருகிறார். கவிதைகள், பயணக்கட்டுரைகள் என்று.

திருப்பதி மஹேஷ் திருப்பதி மஹேஷ் என் நண்பர். அவர் மூலம் கிடைத்த நண்பர் அரவிந்த். இளைஞர். பேங்க் ஆஃப் பரோடாவில் பணி புரிபவர். புத்தகப் புழு. புத்தக விமர்சனம் எழுதி வருபவர். சமீபத்தில் பா ராகவன் அவர்களின் “தூணிலும் இருப்பான்” புத்தகத்தின் விமர்சனம் எழுதி முகநூலில் போட்டதில் பா ராகவன் இவரைத் தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார். இவர் உங்களுக்கு சமீபத்தில் அறிமுகமானவர்தான். நம் வெங்கட்ஜியின் வலைப்பூவிலும், எங்கள் ப்ளாகிலும் இவரது புத்தக விமர்சனம் வரத் தொடங்கியுள்ளது.  

மஹேஷ் மூலம் தற்போது மேலும் மூவர் நண்பர்களாகியுள்ளனர். அவர்களும் வலையில் எழுதத் தொடங்கியுள்ளனர். எழுத்துத் திறமையோடு பன்முகத் திறமை வாய்ந்தவர்கள்.  அனைவரும் இளைஞர்கள். எல்லோரையும் அன்புடன் இருகரம் நீட்டி வர வேற்போம். 

நேரம் வாய்ப்பின் கருத்திட்டு ஊக்குவிப்போம்.

http://naveencbe.blogspot.com/   - நவீன் ஆங்கில ஆசிரியர்

https://fernandotamil.blogspot.com/  - ஃபெர்னாண்டோ சென்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியா வங்கியில் பணி புரிபவர்.

https://chennaiabi.blogspot.com/ -  அபிநயா - எஃப் எம் வானொலியில் ஆர் ஜெ யாகப் பணியாற்றியவர். 

அனுபவம்

என்னவோ தெரியவில்லை சில நாட்களாக, “யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே” பாட்டுதான் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. வேறு ஒன்றுமில்லை சில நாட்கள் முன்னர் பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கும் எனது நெருங்கிய உறவுப் பெண் என்னை அழைத்து தன் வருத்தங்கள் சிலதை பகிர்ந்து கொண்டாள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் போதும் தன்னை அனாவசியமாகப் பேசுகிறார்கள், எது செய்தாலும் குற்றமாகப் பார்க்கிறார்கள் என்று. அப்போது அவளிடம் நான் டக்கென்று பாடியதுதான் மேலே சொன்ன பாடலின் அந்த முதல் வரி.

"அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். புறம் தள்ளு" என்று சொல்லி கூடவே இதோ கீழுள்ள வாசகத்தையும் சொல்லி "எனவே நாம் நல் வார்த்தைகள் பேசுவோம்" என்று சொல்லி அவளைச் சமாதானப்படுத்தினேன்.

மருந்தீஸ்வரர் கோயில் கோபுரம் 

அந்தப் பெண் மகனை மிகவும் விசாரித்தார் மகனிடம் பேசும் போது விஷயமும் சொன்னேன். நம் எண்ணங்களின் படிதான், நாம் நினைப்பது போலத்தான் மற்றவர் நடக்க வேண்டும், நாம் சொல்வது, செய்வதுதான் சரி என்ற  பார்வையிலும், எண்ணத்திலும் பிறரைப் பார்ப்பதால் எழும் பிரச்சனைகள். நம் அணுகுமுறை, பார்வை இது மிக முக்கியம் உறவிலும், நட்பிலும் என்று இப்படியாகச் சென்றது எங்கள் உரையாடல்கள். நாம் எல்லோரிடமும் அன்புடன், எந்தவித எதிர்பார்ப்புமின்றி, யார் மனதும் புண்படாமல் பேசுவோம் உறவு பலப்படும் என்று முத்தாய்ப்பு வைத்தான்.

மிகவும் நெருங்கிய உறவு வீட்டுக் கல்யாணம் ஜூலை 2, சென்னையில் ஆனால் நாங்கள், ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்பிடறா மாதிரினு வடிவேலு ஸ்டைல் ஜோக் சொல்லிப் யணம் செய்யத் தயராக இல்லை. கல்யாணத்துக்குப் போகவில்லை என்றால் பேச்சு எழுமோ? அப்போது மகன் என்னிடம் "யாரென்ன".....என்று தொடங்கினான், மேலே சொன்ன அந்தப் பாட்டின் முதல் வரியைத்தான். சங்கிலி வினை?!  

ரசித்தவை


                              
                                                                 செபியின் விளையாட்டு                                                                                                                                                          
  மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

-------கீதா

54 கருத்துகள்:

  1. தேர்வு நடத்தியதை  கேரள அரசாங்கம் சிறப்பாக செய்திருக்கிறது என்று தெரிகிறது.    ஆம், ஒரு மாணவி மட்டும் படகில் அழைத்துவரப்பட்டதை எபி பாசிட்டிவ் செய்திகளில் பகிர்ந்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்.

      கேரளா சிறப்பாகத் திட்டமிட்டு செய்திருந்தாலும் பல யதார்த்தப் பிரச்சனைகள் மக்களுக்கு. அங்கும் கோர்ட்டில் கேஸ் போட்டிருந்திருக்கிறார்கள் தேர்வு நடத்தக் கூடாது என்று ஆனால் தீர்ப்பு தேர்வு நடத்த வேண்டும் என்று. பலரும் ரிஸ்க் எடுத்துப் பல கிமீ பயணித்திருக்கிறார்கள் தேர்வு மையம் மாற்றப்பட்டதால்.

      இது சும்மா செய்தியாகத்தான் பகிர்ந்தேன். எனக்கென்னவோ அங்கிருந்து முழுச் செய்திகளும் வருவதில்லையோ என்றும் தோன்றுகிறது.

      இந்நேரத்தில் தேர்வு ரிஸ்க் எடுத்து எதற்கு என்று தோன்றவும் செய்கிறது.

      நம் மாநிலத்தில் கண்டிப்பாகத் தேர்வு நடத்துவது என்பது மிகவும் சிரமம் என்பது நமக்குத் தெரியும். ஏனென்றால் சென்னையில் மட்டுமே நிறைய பரவி வருகிறது எப்படி ஆசிரியர்களும் மாணவர்களும் தேர்வுக்குச் செல்ல முடியும்? சென்னையை விட்டு தென் கோடிக்கு மட்டும் தேர்வு நடத்துவதும் யதார்த்தத்தில் முடியாதே.

      பாருங்க பானுக்கா ஒரு செய்தி பகிர்ந்திருக்காங்க. அவங்க ஊர்ப் பக்கத்துல திருமணத்தில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய சென்னையிலிருந்து வந்தாங்களாம் இது எப்படி இருக்கு பாருங்க. இந்த நேரத்துல மக்கள் இப்படி முட்டாள்தனம் செய்வாங்களா...இப்ப அந்த அலங்கார நிபுணருக்கு தொற்று இருந்திருக்க இப்ப மணப்பெண் க்வாரண்டைன்...ஊர் மக்களுக்கு டெஸ்ட்...இதில் எத்தனை பேருக்கு பாசிட்டிவ்? ரிஸ்க் என்று பாருங்க. என்னவோ போங்க மக்களும் திருந்த மாட்டாங்க போல.

      இதற்கு தேர்வு நடத்தாமல் இருந்ததே நல்லது நம் மாநிலத்தில். இல்லையா

      மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கு.

      கீதா

      நீக்கு
  2. அறிமுகங்கள் வரவேற்கபபடவேண்டியவர்கள்.  வரவேற்போம்.

    பதிலளிநீக்கு
  3. பேசுபவர்களுக்கு என்ன, பேசிவிட்டுப் போகட்டும்.  உங்கள் மகன் சொல்வது சரி...  யாரென்ன சொன்னாலும்...  சரிதான்.  அடுத்தவர்கள் மனம் புண்படாமல் பேசுவது பெரிய விஷயமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  அது ஒரு கலை என்று இப்போது தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்.

      அடுத்தவர்கள் மனம் புண்படாமல் பேசுவது பெரிய விஷயமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது ஒரு கலை என்று இப்போது தெரிகிறது.//

      அதே அதே ஸ்ரீராம் எங்கள் வட்டத்திலும்..

      மிக்க ந்னறி

      கீதா

      நீக்கு
  4. கடுகு பதில்கள் புன்னகைக்க வைத்தன.  செபியின் விளையாட்டு மனத்தைக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ரீராம்

      செபி ரொம்ப குறும்பாம்...

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  5. வணக்கம்
    மற்றவரை வாழ்த்தும் நல்ல மனசு நிறைய பேருக்கு வராது...உங்களின் மனசு பெரியது அண்ணா வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனங்களில் நிறைந்தவனே.: எண்ணக்கவியோடு ஏழைகளின் மனதோடு நின்று உறவாடும் செந்தமிழ் புலவரே சொந்த தமிழில் செந்தமிழ் பாடி அகிலம் வாழும் தமிழர் மனங்களில் நிறைந...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தங்களின் கருத்திற்கு.

      கீதா

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் மேடம் சில எழுத்துப்பிழைகளால் கருத்தை நீக்கிவிட்டேன். வணக்கம் துளசிதரன் சார் கீதா மேடம், கேரளம் கேரளம் தான் எவ்வளவு அக்கறையுடன் தேர்வுகளை நடத்தி விட்டார்கள்.
      ஆம் மேடம்.அனைவர் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
      பதிவுகளை வாசித்தேன்.நன்றாக இருந்தது. நன்றி துளசிதரன் சார், கீதா மேடம்

      நீக்கு
    2. பரவாயில்லை நவீன் அது டைப்படிக்கும் போது பிழைகள் வரும். நானும் நிறைய தவறாக அடிப்பதுண்டு.

      மிக்க நன்றி நவீன் உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  7. கேரளாவின் சிறப்பான செயலாக்கத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள். ஆகவேதான் அவர்கள் கல்வியறிவில் முன்னிலையில் இருக்கிறார்கள்.

    புதிய பதிவர்களின் அறிமுகம் நன்று இது அவர்களுக்கு நீங்கள் செலவு செய்யாமல் கொடுக்கும் 800 கிராம் ஹார்லிக்ஸ் போன்றது.

    நம்மைப் போலவே உலக மக்களும் இருக்க வேண்டுமென்ற சிந்தையே நமது பீடை.

    இயன்றவரை நாம் மனிதநேயத்தோடு வாழ்ந்து கடக்க முயல்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய பதிவர்களின் அறிமுகம் நன்று இது அவர்களுக்கு நீங்கள் செலவு செய்யாமல் கொடுக்கும் 800 கிராம் ஹார்லிக்ஸ் போன்றது.//

      ஹா ஹா ஹா ஹா ஆமாம்!! ஊக்கம் கொடுப்போம்

      கேரளத்துக்கு ஸ்ரீராமுக்குக் கொடுத்தபதில் தான்

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  8. புதிய வலைப்பதிவாளர்கள் - அனைவருக்கும் வாழ்த்துகள். நானும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

    கதம்பம் - சுவை.

    செபியின் விளையாட்டு - ஆஹா.... எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய வலைப்பதிவாளர்கள் - அனைவருக்கும் வாழ்த்துகள். நானும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.//

      ஆமாம் ஜி.

      செபியின் விளையாட்டு - ஆஹா.... எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா....//

      அதே அதே வெங்கட்ஜி! மனம் எத்தனை சந்தோஷப்படுகிறது. மகனுக்கும் சந்தோஷமாக இருக்கிறது.

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  9. 285 கிமீ தூரம் பயணப்பட்டு - தங்குவதற்கு இடம் கிடைக்காமல் - இப்படி தேர்வுகள் எல்லாம் அவசியம் தானே என்றே தோன்றுகிறது...

    புதிய வலைப்பூக்கள் பெருகட்டும்...

    இரு தளங்கள் இதில் புதியவை...

    இரு நாட்கள் முன்பு (பெரியப்பா மகன்) அண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம்... மாஸ்க் எல்லாம் போட்டுக் கொண்டு நாங்கள் பயத்துடன் சென்றால்...

    அங்கு கிட்டத்தட்ட 100 பேர்கள் - யாரும் மாஸ்க் - ம்ஹிம்...

    என்ன நடக்கப்போகுதோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாட்டில் அதிகம் பரவுகிறது என்று செய்தியும் சொல்கிறது. இங்கும் தான்.

      100 பேர்களா? உங்க ஊர் பக்கம் தானே? சென்னையிலேயே நடத்துறாங்களே டிடி.

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  10. கேரளாவில்...திட்டமிடல் சிறப்பு என்று நினைக்கிறேன். அதிலும் சில சிக்கல்களை நாளிதழ்களில் கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா அதிலும் சிக்கல்கள் இருந்தனதான்.

      மிக்க நன்றி ஐயா

      கீதா

      நீக்கு
  11. வணக்கம் மேடம்.சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறார்கள். கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தை படிக்கும்போது பெருமையாக இருக்கிறது. என்னை உங்கள் வலைப்பூவில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  12. கதம்பமாக எழுதியது அருமை..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செந்தில் சகோ ரொம்ப மாதத்திற்கு அப்புறம் வந்திருக்கீங்க வாங்க வாங்க!!

      மிக்க நன்றி சகோ கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  13. தென்னிந்திய மாநிலங்களில் தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய பட்ட நிலையில் ஆந்திர அரசு மட்டும் அடுத்த மாதம்  பத்தாம்
    வகுப்பு   பொதுத் தேர்வநடத்த இருக்கிறது.

    கர்நாடகத்தில் என்னவென்று தெரியவில்லை.

    கேரளாவில் ஊரடங்கு காரணத்தினால்  நடக்காமல் தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள்
    மட்டும் தனியாக  அரசு சிறப்பு கவனம் செலுத்தி  எப்படியோ நடத்தி முடித்து விட்டார்கள்.

    புதிதாக வலைப்பூவில் எழுத  ஆரம்பித்திருப்பவர்களை அறிமுகம்  செய்து வைத்ததற்கு நன்றிகள்
    துளசி தரன் சார் மற்றும்  கீதா மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்கேஷ் ஓ ஆந்திராவில் நடத்துகிறார்கள் இல்லையா?

      இங்கு ஜூன் 25 முதல் நடத்த இருக்கிறார்கள். இதோ அதை அப்படியே தருகிறேன். இங்கு ப்ளஸ் 2 என்பதற்கு பதில் பியுசி1 பியுசி2 என்று நடத்துகிறார்கள்.

      KSEEB has released the revised datesheet for Class 10 exams. SSLC exams will be held from June 25, 2020, to July 3, 2020. Also, the PUC’s English test will be held on June 18, 2020. Earlier, due to the outbreak of Covid-19, Class 10 (SSLC) and Class 12th (2nd PUC) exams were postponed.

      ஆமாம் கேரளாவுல தள்ளி வைக்கப்பட்டவை மட்டும் நடத்தி முடிச்சுட்டாங்க.

      தமிழ்நாட்டில் நடத்துவது கொஞ்சம் சிரமம் மகேஷ். அதிகமாகப் பரவி வருகிறது.

      இங்கு பங்களூரில் பெற்றோர் எல்லாரும் பள்ளிகள் இப்பொது திறக்கக் கூடாது. ஒரு வருடம் போனாலும் பரவாயில்லை. மருந்து அல்லது வேக்சின் வரும் வரை பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்போது செப்டம்பரில் திறக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்னாகும் என்று தெரியவில்லை

      மகேஷ் உங்கள் மூலம் ஏற்பட்ட நட்புகள் மகேஷ்...உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்

      மிக்க நன்றி மகேஷ்

      கீதா

      நீக்கு
  14. கேரள அரசு திட்டமிட்டுத் தேர்வு நடத்தியவிதம் பாராட்டிற்கு உரியது

    பதிலளிநீக்கு
  15. Dear Sir and Madam,
    கதம்பம் சுவையாகவும், சுவாரசியமாகவும் ிருந்தது.
    என்னைப் பற்றியும், என் ப்ளாகை பற்றியும் இங்கு அரிமுகம் செய்ததற்கு கோடி நன்றிகள். "நம் கெளரவம் வேறெங்கும் இல்லை நம் நாவின் நுனியில்தான் இருக்கிறது" Fact Fact.

    பதிலளிநீக்கு
  16. நன்கு திட்டமிட்டுச் செய்திருந்தாலும் ஆங்காங்கே ஓரிருவருக்கு தாமதமாகச் செய்தி கிடைத்து, அவர்களும் எப்படியோ வந்து சேர்ந்து விட்டார்கள். நீதிமன்ற உத்தரவினால் அங்கே தேர்வு நடந்தது எனில் இங்கே நீதிமன்றம் அத்தனை லட்சம் மாணவர்களின் உயிருக்குப் பொறுப்பேற்கத் தயாரா என்று கேட்டுவிட்டது. ஆகவே இங்கே தேர்வுகள் நடத்தப்பட வில்லை. ஆனால் எல்லோரும் பாஸ் என்பதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா அங்கும் பிரச்சனைகள் இருந்ததுதான்.

      ஆனால் ரிஸ்க்தான் அக்கா. தமிழ்நாட்டில் இன்னும் அதிகமாகப் பரவும் வேளையில் தேர்வு வைப்பது சிரமம் தான்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  17. புதிய அறிமுகங்களில் அபிநயாவைத்தவிர்த்து மற்றவர்களைப் பற்றி ஏற்கெனவே சொன்னீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். நானும் நேரம் கிடைக்கையில் அவர்கள் எழுத்தை எல்லாம் படிக்க வேண்டும், செபியின் விளையாட்டு நன்றாக இருக்கிறது. முந்தாநாள் பெண்ணுடன் பேசினப்போ ஷேன் எங்கள் குரல் கேட்டுச் சுற்றும் முற்றும் போய்ப் பார்த்துத் தேடியது. குரல் வரும் திக்கில் தலையைத் திருப்பிப் பார்த்துத் தேடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தாநாள் பெண்ணுடன் பேசினப்போ ஷேன் எங்கள் குரல் கேட்டுச் சுற்றும் முற்றும் போய்ப் பார்த்துத் தேடியது. குரல் வரும் திக்கில் தலையைத் திருப்பிப் பார்த்துத் தேடுகிறது.//

      சமத்து செல்லக் குட்டி.

      இங்கு கண்ணழகி அவளுடன் கொஞ்சுபவர்கள் வந்து சென்றால் மறு நாள் கூட அவர்கள் இருந்த இடம் எல்லாம் சென்று தேடிப் பார்த்து வருவாள். மகன் ஊருக்குப் போனதும் ஒரு 4 நாள் சாப்பிடாமல் அவன் இருந்த இடம் எல்லாம் தேடி முகர்ந்து வாசலில் ஓடிச் சென்று பார்த்து என்று அவன் விட்டுச் சென்ற துணிகளை முகர்ந்து அதை எடுத்துப் போட்டுக் கொண்டு படுத்து என்று ரொம்பவே ஏங்கிப் போனாள். அப்புறம் பழகிவிட்டது. அவன் சென்றதும் மொபைலில் கூப்பிடும் போது அவன் சத்தம் கேட்டதும் அவனைத் தேடுவாள். இப்போதெல்லாம் வயதாகிவ்ட்டதாலோ என்னவோ அவன் குரல் கேட்டாலும் கண்டு கொள்வதில்லை.

      ஓ அபியைச் சொல்லாமல் விட்டேனோ உங்களிடம்...

      நேரம் கிடைக்கும் போது பாருங்க கீதாக்க

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  18. கேரள அரசின் செயல் திட்டங்கள் பாராட்டுக்குரியது.

    புதிய வரவுகளான பதிவர்களின் அறிமுகத்திற்கு பாராட்டுக்கள்.

    புதியவர்களுள் நவீன் மற்றும் ஃபெர்னாண்டோ பதிவுகளை வாசித்தேன், ஏனையோரின் தளங்களை விரைவில் பார்க்க முயல்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோ

      நேரம் கிடைக்கும் போது பாருங்கள் கோ.

      கீதா

      நீக்கு
  19. நானும் இந்தியச்செய்திகள் பார்ப்பேன். சில தகவல்கள் மனவருத்தத்தை ஏற்படுத்தும். கேரளமாநில தேர்வு குறித்தான செய்தியும் அறிந்தேன். அவர்கள் பல விடயங்களில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
    புதிய அறிமுகபதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    கடுகு பதில்கள் சுவாரஸ்யம். ரசித்தேன்.
    செபி ஸோ..க்யூட். சின்னதில் விளையாட்டை பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அம்மு. செபி ஆமாம் நன்றாக விளையாடுகிறது.

      இங்கு தொற்று கூடிக் கொண்டே போவது வருத்தமாகத்தான் உள்ளது. விரைவில் சரியாகும்...நம்புவோம்

      மிக்க நன்றி அம்மு கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  20. பதிவு அருமை.
    எவ்வளவோ கஷ்டப்பட்டு குழந்தைகள் பரீட்சை எழுதி விட்டார்கள் எல்லோரையும் பாராட்டவேண்டும்.

    அறிமுகங்களை படிக்குறேன்.


    அனுபவம் தந்த ஆறுதல் மொழிகள் அருமை. மிக சரியாக வழி நடத்தினீர்கள் அந்த பெண்ணை.ரசித்தவை நானும் ரசித்தேன் அருமை.

    செபியின் விளையாட்டு மிக அருமை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா பல குழந்தைகள் தேர்வு எழுதக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் ஆமாம் பாராட்டுவோம்.

      //அனுபவம் தந்த ஆறுதல் மொழிகள் அருமை. மிக சரியாக வழி நடத்தினீர்கள் அந்த பெண்ணை.ரசித்தவை நானும் ரசித்தேன் அருமை.//

      மிக்க நன்றி கோமதிக்கா.

      செபி நன்றாக விளையாடுகிறது. மகனைச் சொல்லச் சொல்லியிருக்கிறேன் செபியின் சேட்டை பற்றி.

      மிக்க நன்றி கோமதிக்கா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  21. கேரளச் செய்திகள் துளசி அண்ணனுடையதோ?.. இன்றுதான் துளசி அண்ணனும் கீதாவும் சேர்ந்து ஒரு போஸ்ட் போட்டதைப்போல இருக்கு.. இல்லை எனில் கீதாவின் போஸ்ட்டுக்கே இடம் போதாமல் வந்துவிடும் ஹா ஹா ஹா...

    அனுபவம்..
    வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும்... அதனால எதையும் மனதோடு விட்டிடோணும்.. கிட்டிக்கு எடுத்துச் சென்றால் நோயாளி ஆகிவிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளச் செய்திகள் துளசி அண்ணனுடையதோ?.. //

      ஹா ஹா ஹா ஹா....அப்படியும் அவர் சார்பில் நான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

      //துளசி அண்ணனும் கீதாவும் சேர்ந்து ஒரு போஸ்ட் போட்டதைப்போல இருக்கு..//

      அது முன்பு போட்டிருக்கிறோம். இப்போது முடிவதில்லை அதிரா.

      //இல்லை எனில் கீதாவின் போஸ்ட்டுக்கே இடம் போதாமல் வந்துவிடும் ஹா ஹா ஹா...//

      ஹா ஹா ஹா ஹா ஹா ஆனா பாருங்கோ அதிரா இப்பவெல்லாம் மீ என்னைப் போலவே ரொம்ப ஷார்ட்டாக்கும்!!

      //வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும்... அதனால எதையும் மனதோடு விட்டிடோணும்.. கிட்டிக்கு எடுத்துச் சென்றால் நோயாளி ஆகிவிடுவோம்.//

      அதே அதே அதிரா. தட்டிவிட்டுப் போகணும் தான். பிஞ்சு ஞானி! ஹா ஹா ஹா

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  22. கோபுரம் அழகோ அழகு.. கடுகு பதில்கள்.. நானும் ரசித்தேன்..

    செபிக் குட்டி ஹா ஹா ஹா.. சேஷ்டைகள் ஆரம்பம்!!!:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபுரம் அழகோ அழகு.. கடுகு பதில்கள்.. நானும் ரசித்தேன்..//

      மிக்க நன்றி அதிரா. ரசித்தமைக்கு

      செபிக் குட்டி ஆமாம் சேட்டைகள் தொடங்கிவிட்டது. மகனுக்கு நேரம் இல்லையாம். இல்லை என்றால் வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லியிருக்கிறேன்.

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  23. வணக்கம் சகோதரி

    கேரளத்தில் பரீட்சைகள் வெற்றிகரமாக நடந்ததை அறிந்தேன். நீங்களும் விபரமாக சொல்லியுள்ளீர்கள். அம்மாநில கல்வித் துறைக்கு வாழ்த்துக்கள்.

    உங்களின் தைரியமான வார்த்தைகள் சூப்பர். கோபுரம் படம் அழகாக உள்ளது. அது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலா? இக்கட்டான நேரத்தில் மனவுறுதிதான் வேண்டும். சோதனைகள் வரும் சமயம் அதையும் தெய்வம்தான் தர வேண்டும். அதை குறிக்கும் வண்ணம் கோபுர படத்தின் மேல் அந்த வாசகத்தை பதிந்தது சிறப்பு.

    நங்கள் செபியின் விளையாட்டுகள் அழகாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    இந்தப் பதிவை அன்றே படித்து விட்டேன். கருத்துகளை கூட மனதில் நினைத்துக் கொண்டே இருக்கும் போது வேறு வேலை வந்து விட்டதில் உடனே தர இயலவில்லை. எனவே இம்முறை கருத்துகளை கொடுக்க மிகவும் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும் சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலா? //

      ஆமாம் கமலா அக்கா.

      //அதை குறிக்கும் வண்ணம் கோபுர படத்தின் மேல் அந்த வாசகத்தை பதிந்தது சிறப்பு.//

      ஹைஃபைவ் கமலாக்கா. கரெக்ட்டா கண்டு பிடிச்சிட்டீங்க!! குறிப்பா நம் நாவடக்கம் குறித்து சொன்னப்ப இப்படத்தில் அதை எழுதினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால்....படம் மாற்றி அப்புறம் இதில் எழுதினேன்.

      செபியை ரசித்தமைக்கு மிக்க நன்றி கமலாக்கா

      //கருத்துகளை கூட மனதில் நினைத்துக் கொண்டே இருக்கும் போது வேறு வேலை வந்து விட்டதில் உடனே தர இயலவில்லை. எனவே இம்முறை கருத்துகளை கொடுக்க மிகவும் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும் சகோதரி.//

      அக்கா ப்ளீஸ் மன்னிப்பு என்பதெல்லாம் வேண்டாம் அக்கா. இதில் என்ன இருக்கிறது. உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்குதோ அப்போ வாங்க அக்கா. இது எல்லோருக்கும் நேர்வதுதான். இதில் தவறு எதுவுமே இல்லை. பிரச்சனையே இல்லை.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  24. தேர்வை கேரள கல்வித்துறை சிறப்பாக நடத்தியுள்ளது. பாராட்டுகள்.

    புதிய ப்ளாக்ஸ்பாட்டுகள் அறிமுகம் - நன்று. ஆனால் தமிழ்மணம் போல ஒரு திரட்டி இல்லாததால் பெரும்பாலான பிளாக்குகளுக்குப் போவதில்லை. முன்னமே சொன்ன மாதிரி, ஒரு தொடர் இடுகையை டக் என்று நிறுத்திவிட்டால், அதன் பிறகு அந்த பிளாக்குகளுக்கும் செல்வதில்லை.

    கெளரவம் நம் நாக்கின் நுனியில் இருக்கிறது என்பதை முதலில் கவனிக்கவில்லை. மருந்தீஸ்வரர் கோவில் கோபுரத்தில்தான் இருக்கிறதோ என்று நினைத்தேன். ஹா ஹா.

    கடுகு பதில்கள் ரொம்ப நல்லாவே இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கெளரவம் நம் நாக்கின் நுனியில் இருக்கிறது என்பதை முதலில் கவனிக்கவில்லை. மருந்தீஸ்வரர் கோவில் கோபுரத்தில்தான் இருக்கிறதோ என்று நினைத்தேன். ஹா ஹா//

      ஹா ஹா ஹா ஹா ஹா....அதுக்கு கமலாக்கா கரெக்ட்டா சொல்லிட்டாங்க...

      முதலில் வேறு ஒரு படத்தில் சேர்த்திருந்தேன் அதை. அப்புறம் கோயில் கோபுரம் அதுவும் மருந்தீஸ்வரர் கோயில் கோபுரம்...ஸோ கொஞ்சம் பொருத்தமாக இருக்குமே என்று.

      ரசித்தமைக்கு மிக்க ந்னறி நெல்லை

      கீதா

      நீக்கு
  25. அருமையான பதிவு. நேர்மறைச் சிந்தனை எப்போதும் மனத்துக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் கோவிந்தராஜு ஐயா உங்களின் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  26. ரசித்தவை ......நாங்களும் ரசித்தோம்
    அனுபவம் ரொம்பவே யதார்த்தம்
    சில அறிமுகங்கள் ஊக்குவிக்கவேண்டியது அவசியம் ....செய்கிறேன்

    பதிலளிநீக்கு
  27. "நம் கௌரவம் நம் நாக்கின் நுனியில் தான் இருக்கிறது" அனுபவ வார்தைகள்.ரசித்தேன். என்னுடைய வலைதளத்தை அறிமுப்படுத்தியத்திற்கு நன்றி (pachaimannu.blogspot.com.)உங்கள் தளம் பல புதிய வலைப்பதிவர்களை பற்றிய அறிமுகத்தையும் தந்திருக்கிறது. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வாசிக்கிறேன். தங்கள் பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு