எழுத்தாளர் கமலாதாஸ் பற்றிய சினிமா கதை என்பதால் பதிவு கொஞ்சம் பெரிதாகிவிட்டது. தயவாய் பொறுத்துக் கொள்ளவும்.
கமல் எனும் கமாலுதீன் எனக்குப்
பிடித்த தனித்தன்மை வாய்ந்த இயக்குநர்களில் ஒருவர். 2013ல் தேசிய விருது பெற்ற ‘செல்லுலாய்ட்’
எனும் அருமையான படம் எடுத்தவர். "விகதகுமாரன்’ எனும் முதல் மலையாளப் படம் எடுத்த ஏ
சி டேனியலை செல்லுலாய்ட் மூலம் எல்லோரும் பார்த்து வியந்து பாராட்ட வைத்தவர் அவர்.
அப்படத்தில் சில கசப்பான உண்மைகளைச் சொன்ன காரணத்துக்காகப் பலரது தூற்றல்களுக்கும்
காரணமானவர்.
எதிர்ப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும்
இடையே புதைந்து கிடக்கும் உண்மைகளை உலகிற்கு உணர்த்தும் போது கிடைத்த பேரின்பத்தை நுகர்ந்ததால்
அதற்கு அடிமையாகிப் போனவர். அதனால்தான் மீண்டும் அதே போல் ஒரு படத்தைத் துணிச்சலுடன்
எடுத்திருக்கிறார். அச்சமின்றி எல்லாவற்றையும் பச்சையாக எழுதுவதோடு நில்லாமல் பச்சையான
பெண்ணாக வாழ்ந்து எல்லோரையும் வியக்க வைத்த கமலாதாஸின் வாழ்க்கைதான் “ஆமி”.
சிறந்த ஓட்டுநரான, கமல் 1939 முதல்
2009 வரையுள்ள மாதவிக்குட்டியின் வாழ்க்கைத் தூரத்தை நம்மை எல்லாம் எளிதாக சிரமமின்றி
இரண்டரை மணி நேரத்தில் அவருடன் பயணித்து கடக்கச் செய்கிறார். தனது ஐந்து வயது வரை புன்னையூர்
குளத்திலும், நாலப்பாட்டு வீட்டிலும் வாழ்ந்த “ஆமி” என்றழைக்கப்படும் கமலா 1939 ஆம்
ஆண்டு பெற்றோருடன் கல்கத்தா செல்கிறார். ஆங்கிலேயர்களின் வால்ஃபோர்ட் (walford) கம்பெனியின்
உயர்பதவியிலிருக்கும் வீ எம் நாயர் தன் மகள் கமலாவை ஆங்கிலேயர்களின் குழந்தைகள் பயிலும்
பள்ளியில் கல்வி பயில வைக்கிறார். அவருக்கோ, கமலாவின் தாயான பெயர் பெற்ற எழுத்தாளரான
பாலாமணி அம்மாவுக்கோ கமலாவுடன் செலவிட நேரம் கிடைப்பதில்லை.
பருவ வயது எய்தும் கமலாவுக்கு
ஓவியக் கலை கற்பிக்க வரும் ஹுசைன் அன்ஸாரியிடம் ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது.
1947ல் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின் கல்கத்தாவில் ஏற்படும் மதக்கலவரத்தின்
காரணமாக திடீரென டாக்கா செல்லும் அன்ஸாரியின் பிரிவு கமலாவை வெகுவாகப் பாதிக்கிறது.
இடையிடையே கமலாவின் கனவில் வரும் குழலூதும் கிருஷ்ணன், பால் கறக்கும் மனிதனாகவும்,
ரிக்ஷாக்காரனாகவும் வந்து கமலாவின் நிஜ உலகிற்கும் கனவுலகிற்கும் வித்தியாசம் இல்லாமல்
ஆக்கிக் கொண்டிருக்கும் போது திடீரென கமலா தன் பதினைந்தாவது வயதில் 35 வயதுள்ள ரிசர்வங்கியில்
பணியாற்றும் மாதவதாஸை மணக்க வேண்டியதாகிறது.
காதல் மணக்கும் கமலாவுக்கும்,
காமத்தில் நாட்டமுள்ள தாஸுக்கும் இல்லறம் நல்லறமாக இல்லை. கல்கத்தாவுக்குக் குடி போனதும்,
50 ரூபாய் கொடுத்து கொச்சியைச் சேர்ந்த பத்மினி எனும் விலை மாதை கூட்டி வரும் தாஸ்,
கணவனைத் திருப்திப்படுத்த கமலா கட்டிலில் செய்ய வேண்டியவைகளை பத்மினி மூலம் கமலாவுக்குக்
கற்பித்த பின் சந்தோஷமாக வாழ்கிறார்.
அதுவரை வீட்டில் வேலை செய்யும்
பெண்கள் பலரும் சொல்லக் கேட்ட, தன் மாமனாரான ஆலப்பாட்டு நாராயண மேனன் எழுதிய “ரதி சாம்ராஜ்யம்”
வாசித்தறிந்த, அதுவரை தன் கணவனிடமிருந்து கிடைக்காத ஏதோ ஒரு இன்பத்தை, அது என்னவென்று
கூடத் தெளிவாகத் தெரியாத நிலையில் கானல் நீர் போன்ற அந்த சுகத்திற்காக கமலா ஏங்குகிறாள்.
இதனிடையே அந்தப் பதினாறு வயது
கமலா தாயாகிறாள். மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் பிறந்த வீட்டிலிருந்து கணவன் மாற்றலாகிப்
பணி புரியும் மும்பைக்குச் செல்கிறார். அங்கு தன் கணவனது ஓரினச் சேர்க்கை நண்பனையும்
கணவனையும், அவர்களது அருவருப்பூட்டும் செயல்களையும் கண்டு அதிர்ந்தே போகிறார். குழம்பிப்
போன கமலாவின் மனநிலை பிறழ்கிறது.
தன் தவறை உணர்ந்து திருந்திய தாஸ்
கமலாவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருகிறார். எழுத்தார்வத்தையும், ஓவியம் வரைதலையும்
ஊக்குவிக்கிறார். கமலா எழுதிய “சம்மர் இன் கல்கட்டா” உள்ளிட்ட பல ஆங்கிலக் கவிதைகளும்
கதைகளும் கமலாதாஸிற்குப் பேரும் புகழும் சேர்க்கிறது. அவரது கதையாலும் கவிதையாலும்
கவரப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரரது மகன் கார்லோன் கமலாவைத் தேடி வந்து
கமலாவின் கணவன் குழந்தைகளை விட்டு தன்னை மணந்து தன்னுடன் இத்தாலிக்கு வர வற்புறுத்துகிறார்.
ஆனால், கமலா மறுத்துவிடுகிறார்.
அதன் பின் குடும்பத்துடன் சந்தோஷமாக
வாழ்ந்து ஏராளமாக எழுதுகிறார். “எண்டெ கதா” (என் கதை) எனும் தன் வாழ்க்கை வரலாற்றுத்
தொடரை எழுதுகிறார். அது 1976ல் புத்தகமாகவும் வெளிவருகிறது. தன் வாழ்வில் நிகழ்ந்த
எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றியும், அப்போதெல்லாம் தன் மனதில் தோன்றிய எண்ணங்களை மறைக்காமல்,
அதே நேரத்தில் அத்துடன் சிறிதளவு கற்பனையும் கலந்து எழுதிய “எண்டெ கதா” (என் கதை) பெரும்
பரபரப்பை ஏற்படுத்துகிறது. மட்டுமல்ல அது சமூகத்தை எதிர்பாராதவிதத்தில் பாதிக்கிறது.
பதினெட்டு வயது மாணவன் ஒருவன்
“என் கதை”யை வாசிப்பதைப் பார்த்த அவனது தந்தை அவனிடம் “அசிங்கமான அப்புத்தகத்தை வாசிக்கக்
கூடாது” என்று சொல்லி எடுத்துச் செல்கிறார். இரவில் அப்புத்தகத்தை ஆர்வத்துடன் வாசித்துக்
கொண்டிருந்த அவரை அவரது மகன் பார்த்ததும் அவமானத்தால் அவர் தற்கொலையே செய்து கொள்கிறார்!
ஒரு ஆசிரியர், தன் மனைவி “என்
கதை”யை வாசித்து கமலாதாஸைப் போல் முடியை அவிழ்த்துப் போட்டு, நெற்றியில் பெரிய பொட்டு
வைத்துக் கைகளில் பலவித வளையல்களையும், கழுத்தில் பலவித மாலைகளையும் அணிந்து கமலாதாஸாக
மாறி தன் கணவன் தனக்கு ஏற்றவன் அல்ல என்று சொல்லி விவாகரத்து கேட்கிறார் என்ற குற்றச்சாட்டுடன்
வந்து கமலாதாஸைக் காண்கிறார். செய்வதறியாது குழம்பிப் போகிறார் கமலாதாஸ்.
இப்படிக் கலங்கிக் கிடக்கும் நீரில்
மீன் பிடிக்க வரும் அரசியல்வாதிகள் கமலாதாஸைத் தேர்தலில் போட்டியிட வைக்கிறார்கள்.
திருவனந்தபுரம் பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் கமலாதாஸ்
1786 வாக்குகள் மட்டும் பெற்று டெப்பாஸிட் இழக்கிறார். இதனிடையே நோபல் பரிசுக்காக அவரது பெயரும் பரிந்துரைக்கப்படுகிறது.
இப்படிக் கொடுங்காற்றில் தத்தளிக்கும் பாய்மரக்கப்பல் போல் தள்ளாடும் கமலாவின் வாழ்வில்
ஒரு நாள் திடீரென ஒரு பேரிடி. கமலாவின் கணவர் கமலாவை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து
இறைவனடி சேர்கிறார்.. நல்ல உயர்பதவிகளில் பல இடங்களில் அவரவர் குடும்பங்களுடன் வாழும்
மகன்களுடன் அதன் பின் கமலாதாஸ் மாறி மாறித் தங்குகிறார்.
இதனிடையே புன்னையூர் குளம் வீடு
விற்கப்படுகிறது. அங்கிருந்த அவருக்குப் பிடித்த நீர்மாதுள மரமும், காவும் அடங்கிய
சிறிது இடத்தை மட்டும் கமலாதாஸ் ஏனோ விற்காமல்
விட்டுவிடுகிறார். அதன் பின் எர்ணாகுளத்தில் தனியே வாழ முடிவும் எடுக்கிறார்.
1999ல் கமலாதாஸ் எர்ணாகுளத்தில்
ராயல் ஸ்டேடியம் மேன்ஷனில் மினி எனும் ஒரு உதவியாளருடன் தங்கியிருந்த வேளையில், பாராளுமன்ற
உறுப்பினரும், எழுத்தாளரும், சிறந்த மேடைப் பேச்சாளருமான அக்பர் அலி கமலாதாஸைச் சந்திக்கிறார்.
அச்சந்திப்பு முன்பு மும்பையில் கமலாவை கார்லோன் சந்தித்தது போல் ஒன்றாக மாறுகிறது.
இருவரது மனம் திறந்த பேச்சு, காதலாக மலர்கிறது. தனது 65 வது வயதில் தன் முன் கிருஷ்ணன்
தோன்றியது போல் கமலா உணர்கிறார். அக்பர் அலி “விடிவெள்ளி” எனும் பொருள் தரும் "சுரய்யா”
எனும் பெயரை கமலாவுடன் சேர்ந்து “கமலா சுரய்யா” என்று அழைக்கிறார். கமலாவுக்குள் மீண்டும்
ஒரு புதிய பெண் பிறப்பது போல் உணரும் அவர் இரண்டு மனைவிகளுடன் வாழும் அக்பர் அலியின்
மூன்றாவது மனைவியாக வாழ இந்துமதத்தைத் துறந்து இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்கிறார்.
“என் கதை” ஒரு சூறாவளி என்றால்
மாதவிக் குட்டியின் மதமாற்றம் ஒரு சுனாமியே ஆகிவிடுகிறது. அதுவரை ச(ம)மாதா(னி)னத்துடன்
வாழ்ந்த அக்பர் அலிக்கும் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகிறது, மதக் கலவரமே கூட மலயாள
மண்ணில் ஏற்பட வாய்ப்புண்டு எனும் நிலை. அக்பர் அலி, கமலா சுரய்யாவிடம் தன் தவறுக்கு
வருந்தி மன்னிப்பு கேட்டு தில்லி போய்விடுகிறார். பாவம் கமலா, கமலா சுரய்யாவாகவே எல்லாவற்றையும்
சகித்து பத்தாண்டுகள் அதன் பின் தனியே வாழ்ந்து 2009ல் இவ்வுலக வாழ்வைத் துறந்து இறையடி
சேர்ந்தும்விடுகிறார். அவரது உடல் திருவனந்தபுரம் பாளையம் மசூதி கபரிடத்தில் அடக்கப்படுகிறது.
இதில் நாம் அவரை மட்டும் குற்றம்
சொல்ல முடியுமா?....குழந்தையுடன் செலவிட நேரம் கிடைக்காத அதே நேரத்தில் பதினைந்து வயதுள்ள
பெண்ணை 35 வயதுளுள்ளவருக்குத் திருமணம் செய்வித்த மெத்தப்படித்த பெற்றோரும், வாழ்க்கைத்
துணையின் எழுத்துத் திறனை ஊக்குவித்த அதேநேரத்தில் அவரது ஏக்கங்களையும் ஆசைகளையும்
நிறைவேற்ற முயலாத அவரை உண்மையிலேயே நேசித்த கணவனும் இவ்வுலகில் எந்த ஒரு பெண் எழுத்தாளரும்
எழுதாதை எழுதிய அவரது தைரியத்தைப் பாராட்டாமல் அதில் ஒட்டியிருக்கும் காமப்பசையை மட்டும்
எடுத்து அவரை அதில் ஒட்டித் தங்கள் காமப்பசியைத் தீர்த்துக் கொண்ட சுயநலக்காரர்களான
வாசகர்களும், எழுத்தாளர்களும், ஏன் அவர் செய்த எல்லா செயலுக்கும் அவரது மனசாட்சியாய்
நின்று அனுமதி கொடுத்து இறுதியில் அவரது மனநிலையில் நபிகள் நாயகமாகவே மாறிய கிருஷ்ணபகவானும் குற்றம் புரிந்தவர்களா!
அவரது மனம், கிருஷ்ணன், ராதை,
பாமா, பிருந்தாவனம் என்று, தவறான புரிதலுடன் காதல் வாகனமேறி சுற்றாமல் வயதானபோதாவது
திசைமாறி ஆன்மீக வாகனமேறி இருந்தால் ஆண்டாளைப் போல, காரைக்காலம்மையைப் போல இறைவனின்
புகழைப் பாடி எழுதிப் போற்றுதலுக்குரியவராயிருப்பார். அப்படிப்பட்ட ஒரு மனநிலையைப்
பெற்றிருந்தால் 65 வயதான அவரைக் கட்டி அணைக்கவந்த அக்பர் அலியிடம், ஆங்கிலப் பெண்மணியிடம்
“என் மூலமாக ஏன் ஒரு குழந்தை உங்களுக்கு?....என்னையே உங்கள் குழந்தையாக ஏற்றுக் கொள்ளுங்கள்!”
என்று சொன்ன விவேகானந்தரைப் போல், “வா! குழந்தாய்!, உன் அன்னை நான்!...ஆசைதீரக் கட்டிக்
கொள்” என்று அவரால் சொல்லியிருக்க முடியும். இனி இப்படி எல்லாம் பேசிப் பயனில்லைதான்.
நடந்தவைகளெல்லாம் நடந்தவைகளே. இருந்தாலும் மரணப்படுக்கையில், “என் வாழ்வில் எங்கு தவறு
நேர்ந்தது?.......அது ஏன் நேர்ந்தது?” என்று எண்ணி மாதவிக்குட்டி வருந்தும் போது நம்
கண்களில் நாம் அறியாமல் நீர் நிறைந்துதான் விடுகிறது.
மஞ்சுவாரியர் மாதவிக்குட்டியாக
நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது கணவனாக வரும் முரளி
கோபியின் நடிப்பும் அருமை. கிருஷ்ணனாக வரும் டொவினோ தாமஸும், அலி அக்பராக வரும் அனுமேனனும்
மனதைத் தொடுகிறார்கள். இயக்குநர் கமலின் வசனமும், காஸ்டிங்கும், லொக்கேஷனும், சொல்லிப்
போகும் விதமும் அருமை. மதுநீலகண்டன் தன் காமேரா கண்களில் சிறப்பாக அவற்றை எல்லாம் ஒற்றி
எடுத்திருக்கிறார். ஸ்ரீகுமார் பிரஸாத் அதை எல்லாம் நல்ல மாலையாகக் கோர்த்திருக்கிறார்.
ப்ரணயாமயி ராதா பாடல்
ரஃபிக் அஹமத்தின் வரிகளுக்கு ஜெயச்சந்திரனின் இசையில் பிறந்த “நீர் மாதளம்”, “பிரணயமயி
ராதா” பாடல்கள் அருமை. குல்சாரும், தௌஃபிக் குரேஷியும் வடிவமைத்த உருதுப்பாடல் வித்தியாசமாக
அழகுக்கு அணிகலன் போல் அழகு சேர்க்கிறது. ரீல் அண்ட் ரியல் சினிமாவுக்கு படம் நஷ்டத்தை
ஏற்படுத்தாது போல் தான் தோன்றுகிறது.
நீர் மாதளம் பாடல்
இப்போதெல்லாம் காளான்களைப் போல்
முளைக்கும் கற்பனைக் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் இடையில் இப்படி அத்திப்பூத்தாற்
போல் எப்போதாவது தானே உண்மைச் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் வருகின்றன. பாராட்டுவோம்.
(கீழே உள்ள இப்படத்தில் உள்ள இரு பாடல்களையும் முடிந்தால் கேட்டுப் பாருங்கள். ஒரு பாடல் ஆண் குரல் மட்டும் கொடுத்துள்ளேன். அதில் பெண் குரலிலும் வீடியோ யுட்யூபில் உள்ளது.) (படம் இணையத்திலிருந்து, காணொளிகள் ய்ட்யூபிலிருந்து - நன்றி)
-----துளசிதரன்
கணினிக்கு வருகிறேன்...
பதிலளிநீக்குஇந்த பூகம்பங்களின் தொடக்கம் 11 வயதில் 35 வயது மனிதனுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களிடம் இருக்கிறது.
நீக்குஅதன் பிறகு மனம்போல் வாழ்ந்த மாதவிகுட்டியின் செயல்களில் தவறுகள் இருப்பினும் அதை உணரும் பொழுது அவர்மீது இரக்கப்படுவதே மனிதநேயம்.
அழகான விமர்சனம் தந்தமைக்கு நன்றி.
விரிவாக சொன்னதால் சினிமா பார்க்கும் செலவு மிச்சம்.
வாருங்கள் கில்லர்ஜி! 11 அல்ல ஜி 15. வயது...டைப்போ எரர் வந்துடுச்சுனு நினைக்கிறேன்..ஆம் அங்கிருந்துதான் தொடங்குகிறது...ஆமாம் அவரை ஒரே அடியாகக் குற்றம் சொல்ல முடியாது ஜி. திருமண வாழ்க்கையின் ஆரம்ப நிலையில் பாருங்கள். அந்தக் கணவன் செய்ததை...அது எவ்வளவு தூரம் பாதித்திருக்கும்? அப்பெண்ணை. மிக்க நன்றி கில்லர்ஜி அழகான கருத்திற்கு.
நீக்கு// இனி இப்படி எல்லாம் பேசிப் பயனில்லைதான். நடந்தவைகளெல்லாம் நடந்தவைகளே. இருந்தாலும் மரணப்படுக்கையில், “என் வாழ்வில் எங்கு தவறு நேர்ந்தது?.......அது ஏன் நேர்ந்தது?” என்று எண்ணி மாதவிக்குட்டி வருந்தும் போது//
பதிலளிநீக்குமுதல் குற்றவாளி .பதின்ம வயது பிள்ளையுடன் நேரம் செலவழிக்காத பெற்றோர் :(
வீட்டில் அன்பும் பாசமும் கிடைக்காததால் தானே வேறிடத்தில் தேடுனது அப்பிள்ளை
// கமலாவின் நிஜ உலகிற்கும் கனவுலகிற்கும் வித்தியாசம் இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கும்//
இது ஒருவித ஹாலுசினேஷன் போன்றது .ஏக்கம் தனிமை போன்றவற்றால் பிள்ளைகள் தங்களை தாங்கள் படிக்கும் கதையின் கதாபாத்திரங்கள் போல் உருவகம் செய்வார்களாம் .
பெண்கள் மனசு மிக மென்மையானது அதுவும் 16 வயது குழந்தை பெற்ற மனமும் உடலும் எத்தனை கொடும் வேதனைகளை தான் தாங்கும் இதுதானோ மனப்பிறழ்வுக்கு காரணம் :(
வாருங்கள் சகோதரி ஏஞ்சல்! நிச்சயமாக முதல் குற்றவாளிகள் பெற்றோர்தான். ஆம் இப்படிக் கனவுலகில் வாழ்பவர்கள் இருக்கிறார்கள் அதனால்தானே அவருக்கு ஒரு கட்டத்தில் மனநிலையும் பாதிக்கப்படுகிறது. ஒரு 15 வயதுப் பெண்ணிடம் நடந்து கொள்வது போலவா அந்தக் கணவர் நடந்து கொண்டார்? எத்தனைக் கொடூரம். 15 வயது என்பது ஒரு கனாக்காணும் பருவம். டீன் ஏஜ்!!! அந்த வயதில் தான் பெரும்பாலும் ஆண் குழந்தைகளும் சரி பெண் குழந்தைகளும் சரி பாதிக்கப்படுவது. மனதில் பல ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. நல்ல கருத்து சகோதரி. மிக்க நன்றி.
நீக்குஏஞ்சல் ஆமாம் அதுதான் அவரது மனப்பிறழ்வுக்கு முக்கியக் காரணம். துளசியின் கருத்துடன் இதுவும்...இப்படி ஹாலுசினேஷனில் தனக்குப் பிடித்த காரெக்டரை மனதில் கொண்டு அது போலவே வாழ்வது சரியாகக் கவனிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கே தெரியும் ஸ்கீஜோரீனியா அப்புறம் அதன் அடுத்த கட்டமான ஸ்பிலிட் பெர்சனாலிட்டி....அன்னியன் போல என்று ஆகிவிடும் அபாயம் உள்ளது...இல்லையா...துளசியின் பதிவை அவர் டிக்டேட் செய்யும் போது அடித்ததும் என் மனம் ரொம்பவே வேதனைப்பட்டது. இப்படியான ஒரு பெண்ணை ஏன் இந்தச் சமூகம் ரொம்ப மோசம் போன்று சொல்லுகிறது..என்று தோன்றியது. பாவம்...எத்தனை வேதனைகளை அனுபவித்திருக்கிறார். அதுவும் அறியா பருவத்தில் ...படம் பார்க்க வேண்டும்....
நீக்குஇயக்குநர் கமல் எனக்கும் ரொம்பப் பிடிக்கும் அதுவும் கமல் + இசை அமைப்பாளர் ஜெயச்சந்திரன் கோம்போ செமையா இருக்கும்...மஞ்சு வேறு....எனக்கு மிக மிகப் பிடித்த நடிகை...டாப் நடிகை எந்தக் கதா பாத்திரத்தையும் கலக்கிவிடுவார்...இதில் இளம்பருவ கமலாவாக நடித்த அந்தப் பெண்ணும் - நீலாஞ்சனா - ரொம்ப நன்றாக நடித்திருப்பதாக துளசி சொன்னார். இதில் எழுத விடுபட்டுவிட்டதாகவும் சொன்னார்.
கீதா
தவறை திருத்தி கமலாவை ஊக்குவித்தாரே தாஸ் அதற்கொரு குட்டி பாராட்டு .
பதிலளிநீக்குஆனால் அந்த கார்லோஸும் சுயநலவாதி கணவன் குழந்தைகளை விட்டு வர சொல்பவன் என்னவொரு மனிதன் .பாவம் கமலா ஆனால் தப்பித்தார்
பாராட்டலாம் தாஸை. அப்புறம் அவர் நன்றாகவே இருந்திருக்கிறார். அவரது எழுத்தை ஊக்குவித்துமிருக்கிறார். கமலா தன் வாழ்க்கையைக் கதையாகக் கொண்டுவரும் போது அதில் கணவன் தாஸ் பற்றியும் எழுதியுள்ளதையும் தாஸ் அறிவார் எப்படி என்ன காரணமாக இருக்கும் தெரியவில்லை...ஆம் கார்லோஸின் விஷயத்தில் கமலா நல்லதொரு முடிவை எடுத்தார்...
நீக்கு// தன் வாழ்வில் நிகழ்ந்த எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றியும், //
பதிலளிநீக்குஇங்குதான் பிரச்சினை ஒருமுறை இயக்குனர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்னார்னு நினைக்கிறேன்
காலைக்கடன் கிராமத்து சூழலில் அப்படியே காட்டிட முடியுமா ???
அதுபோல்தான் சில விஷயங்கள் அனைத்தையும் வெளிப்படையாக சொன்னால் அவார்ட் கிடைக்கும் ஆனா மனசுக்குள்ள பலர் திட்டியிருக்கக்கூடும் :(
நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் பிரபலம் எனும் பட்சத்தில் உலகமே உற்றுநோக்கும் .மறுக்க முடியாத உண்மை .
தற்கொலை செய்யுமளவுக்கு தவறா? குற்ற உணவில் துடிக்க வைக்குமளவா கமலாவின் எண்ட கதை இருந்திருக்கும் என யோசிக்க தோணுது .
அந்த தந்தை மகனை ஒன்றும் சொல்லாமல் படித்துமுடித்தபின் அறிவுரை சொல்லியிருக்கலாம் அப்படி செஞ்சிருந்தா வாழ்நாளில் எந்த எண்ட கதவையும் படிக்க தோன்றியிருக்காது அந்த மகனுக்கு :( தந்தையும் உயிரை மாய்திருக்கவேண்டாம்
ஆமாம் ஏஞ்சல் சகோதரி உங்கள் முதல் வரிகள் சரியே. அவரது புத்தகம் பல எதிர்ப்புகளைக் கண்டது. ஏன் இப்போது படமும் கூட. ஆனால் கேரளா ஹைகோர்ட் வெளியிட அனுமதி கொடுத்ததால் வந்துவிட்டது.
நீக்குநிச்சயமாக அந்தத் தந்தை அப்படிச் செய்திருக்க வேண்டாம். ஒரு வேளை அது அந்தக் காலக்கட்டம் என்பதாலோ என்னவோ.
கொஞ்சம் நாம் வெளியில் தெரிந்துவிட்டால் போதும் நமது பெர்சனல் ஸ்பேஸ் ரொம்பவே குறுகிவிடும். நாம் செய்யும் ஒவ்வொன்றும் உற்று நோக்கப்பட்டு விமர்சிக்கப்படும். இதுதான் சமூகம்.
எனக்கு இதுதான் கொஞ்சம் ஆச்சர்யமாருக்கு ரெண்டு மனைவியர் கூட சமாதானமா வாழ்ந்தவருக்கு எதற்கு மூன்றாவது :)
பதிலளிநீக்குஆபத்பாந்தவனாக எல்லாரையும் காக்க நினைத்திட்டாரோ ? அக்பர் அலி .
கமலா தாஸ் ஒரு பெண்ணியவாதி எப்படி சமாதானமா இருந்த 2 பெண்களின் வாழ்வில் சூறாவளியாய் நுழைந்தார் ??
அஃபர் அலி அவரது மகன் வயது என்று எங்கோ வாசித்த நினைவு .அப்படின்னா தாயாய் நினைத்திருக்கலாம் இல்லை இவர் அவரது மகனா நினைத்திருக்கலாம்
// எந்த ஒரு பெண் எழுத்தாளரும் எழுதாதை எழுதிய அவரது தைரியத்தைப் பாராட்டாமல் அதில் ஒட்டியிருக்கும் காமப்பசையை மட்டும் எடுத்து//
ஒரு கதையில் நல்லதும் வரும் தீயதும் வரும் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் பலருக்கில்லை .
.உண்மையில் பாவப்பட்ட பெண்மணி கமலாதாஸ் .ஒரு பேட்டியில் சொன்னார் மறுபிறப்பென்றிருந்தா தான் ஒரு கானம் பாடும் பறவையாக பிறந்து எங்கும் பாடி பறக்க ஆசைன்னு .
வாவ் !!!ப்ரணமாயி ராதா பாட்டு என்னமோ மனசை செய்து செம வாய்ஸ் மற்றும் மஞ்சு வாரியாரின் முகபாவனைகள்
முதலில் சொன்ன வரிகளுக்கு....அதுதான் மனநிலை என்பது. அவர் மனம் அந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அன்பிற்கான ஏக்கமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் நான் இறுதியில் ஒரு பாரா சொல்லியிருக்கிறேனே அப்படி கமலா இருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது.
நீக்குயெஸ் எப்போதுமே பொதுவான மனித மனம் என்பது 99 நல்லது செய்து 1 கெட்டது செய்தாலும் அந்த 1 தான் எப்போதும் பேசப்படும்...உமிழப்படும். இதனை புரிந்துகொள்பவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
பாட்டுகள் ரொம்ப அருமை. ஆம் ப்ரண்மாயி ராதா ரொம்ப மனதைத் தொடும் பாடல். மஞ்சு கலக்கியிருக்கிறார் இதில்
கேரளா இயக்குனர்கள் பாராட்டுக்குரியோர் ..எண்டே மொய்தீனுக்கு பொருத்தமா பார்வதி
பதிலளிநீக்குஇங்கே ஆமிக்கு அழுத்தமான உணர்வுகளை கொணரும் பாத்திரத்துக்கு பொருத்தமா மஞ்சு .
எண்டெ மொய்தீனும் நல்ல படம். கேரளத்து இயக்குநர்களில் ஒரு சிலர் இப்படி நன்றாக எடுக்கிறார்கள். இங்கும் சில படங்கள் போரடிக்கும் தான். அதுவும் சமீபத்தில் ஸோ ஸோ தான். பொதுவாக இங்கு நல்ல இயக்குநர்கள் உண்டுதான். தமிழ்நாட்டிலும் உண்டு. ஆனால் அங்கு இது போன்ற படங்கள் ஓடுவதில்லையே...அவ்வளவாக
நீக்குஅப்பாடா படிக்க படிக்க சுவாரஷ்யமாக இருந்தது.. இன்னொருவரின் கண்ணீர்க் கதை உங்களுக்கு சுவாரஷ்யமோ எனக் கேட்டிடக்கூடாது... உண்மைச் சம்பவங்கள் எப்பவும் மனதைத் தொட்டு விடும். கமலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தசாப்தம்.
பதிலளிநீக்குஎத்தனை சோதனைகளைக் கடந்திருக்கிறார்... ஒரு பெண்ணுக்கு வரக்கூடாத துன்பமெல்லாம் அவர் வாழ்வில் நிகழ்ந்திருக்கிறது.. அத்தனையையும் தாங்கி தாண்டி வந்தது பெரிய விசயமே.. சிலர் தடம் மாறியிருப்பினம், சிலர் சூசைட் பண்ணியிருக்கலாம்.. ஆனா அனைத்தையும் கடந்து வந்திருக்கிறார்.
வாங்க அதிரா! இல்லை உங்கள் கருத்துதான். உண்மைச் சம்பவங்கள் மனதைத் தொடும் என்பதோடு, அதில் நாம் கற்கவும் பல விஷயங்கள் உண்டு. அவருக்கு நிறைய சோதனைகள்தான். அதுவும் அறியா பருவத்தில் நடந்தவைதான் மிகவும் கொடுமை. அப்புறம் இவரும் கொஞ்சம் அன்பு என்ற ஏக்கத்தில் தடம் மாறிடத்தான் செய்தார். அது அவரது ஆழ் மனதில் ஆழமாகப் பதிந்த சில வடுக்களின் காரணம் தான். பெண்மனது மிகவும் மென்மையானது. ஆனால் மிரண்டால் காடு கொள்ளாது என்பதும் சரிதானோ. மிக்க நன்றி அதிரா அழகான கருத்திற்கு
நீக்குஓ கொமெண்ட் மொடரேசன் இல்லையோ அவ்வ்வ்வ்வ்வ்:)).. இது நல்லா இருக்கே:)..
பதிலளிநீக்குஇத்தாலிக்குப் போக மறுத்த கமலா, அலியுடன் மணம் முடித்ததில் தப்பு பெரிதாக இருப்பதாக எனக்குப் படவில்லை.. காரணம்... இத்தாலிக்கு அழைத்தபோது... கணவர் குழந்தைகள் என குடும்பம் இருந்திருக்கிறது.. அடிபிடியோ துன்பமோ குடும்பம் என ஒன்று இருந்தது..
ஆனா கணவரை இழந்து, பிள்ளைகள் தம்பாட்டுக்குப் போன பின்னர் ஒரு தனிமை நிலவியிருக்கும்.. அத் தனிமையில் அலியின் அணைப்பு, அன்பு அவருக்கு ஒரு நல்ல ஆறுதலைக் குடுத்திருக்கலாம்.. வயதான காலத்தில் அரவணைப்பை தேடுவது இயல்புதானே..
அதிரா கமென்ட் மாடரேஷன் எடுத்துட்டேன் நெட் வருது போகுது இல்லையா...அதனால எடுத்துட்டேன்..துளசி பதில் கொடுத்ததும் இங்கு போடுகிறேன்...
நீக்குகீதா
ஏஞ்சல் அவர்களின் கருத்து போன்று, அதிரா உங்கள் கருத்தும் மிக மிக அருமையாக வித்தியாசமான கோணத்தில் ஆழ்ந்த சிந்தனைகள் நிறைந்ததாக இருக்கிறது.
நீக்கு// இத்தாலிக்குப் போக மறுத்த கமலா, அலியுடன் மணம் முடித்ததில் தப்பு பெரிதாக இருப்பதாக எனக்குப் படவில்லை.. காரணம்... இத்தாலிக்கு அழைத்தபோது... கணவர் குழந்தைகள் என குடும்பம் இருந்திருக்கிறது.. அடிபிடியோ துன்பமோ குடும்பம் என ஒன்று இருந்தது..//
ஆம்! உங்களது இரண்டாவது பாரா...அதேதான். அன்பிற்காக நிரம்ப ஏங்கியிருக்கிறார். ஆனால் அதில் என்னவென்றால் அந்த அக்பர் அலிக்கு ஏற்கனவே இரு மனைவிகள். அதுதான் கொஞ்சம்....நெருடலாக இருந்தது. எனக்கும் இப்படி வயதான காலத்தில் துணையுடன் இருப்பது தவறாகத் தெரியவில்லை. அந்த ஆணும் மனைவி இல்லாமல் இருந்தால்...பாருங்கள் அந்த அக்பர் அலி கடைசியில் பிரச்சனைகள் வரவும் விட்டுச் செல்கிறார்.
///வயதானபோதாவது திசைமாறி ஆன்மீக வாகனமேறி இருந்தால் ஆண்டாளைப் போல, காரைக்காலம்மையைப் போல இறைவனின் புகழைப் பாடி எழுதிப் போற்றுதலுக்குரியவராயிருப்பார்.//
பதிலளிநீக்குசொல்லிவிடுவது சுலபம்.. எல்லோராலும் அப்படி ஆகிட முடியுமோ?.. அப்படி எல்லோரும் ஆனால் ஆண்டாளுக்கும் காரைக்கால் அம்மையாருக்கும் மதிப்பேது?:)
ஆம்! சொல்வது எளிது செய்வது கடினம். சரிதான் எல்லோருக்கும் அப்படியான சிந்தனைகள் வந்திடாதுதான். மனித மனமே அலாதிதானே! ஏதோ ஒரு ஆதங்கம். ஏனென்றால் அவர் ஒரு அருமையான எழுத்தாளராக வந்திருக்க வேண்டியவர். அபார திறமைகள் கொண்டவர். அதனால் வந்த எண்ணம். ஒரு பெண்! பெண்ணின் மீதான மதிப்பினால் ஏற்பட்ட ஒரு ஆதங்கம்.
நீக்குஉங்களது கருத்து மிகவும் சிந்திக்க வைத்தது. அதிரா, அதானே ஆண்டாளுக்கும், காரைக்காலம்மையாருக்கும் அப்புறம் மதிப்பேது!! அதுதான் இப்படியான மனங்களுக்கும், மனித மனத்திற்கும் உள்ள வேறுபாடு இல்லையா. மிக மிக ஆழமான அழகான கருத்து அதிரா. மனித மனம் மிகவும் ஆழமானது.
மிக்க நன்றி அருமையான ஆழமான கருத்துகளுக்கு
இதைத்தான் நான் சொல்ல வந்தது எலலாருக்கும் ஆண்டாளை காரைக்கால் அம்மையாரைப்போன்ற மன உறுதி இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது .. 60 வயதில் பெண்ணுக்கு இன்னொருவர் மேல் அன்பு வருவதில் தவறில்லை .அது நலல புரிதலுள்ள நட்பெனில் மிக சிறப்பு .தனக்காக மதம் மாறிய செய்த மாதவிக்குட்டியை அஃபர் விட்டு சென்றது கவலைதருது .மேலும் வயதான காலத்தில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பும் அரவணைப்பும் அதிகமாக தேவைப்படும் அதை புரிந்த நல்ல நட்புக்கள் அமைந்தால் நல்லதாக இருக்கும் எங்கள் ஆலயத்தில் ஒருவர் 65 வயது இருக்கும் 3 வருடமுன் கணவர் மறைந்தார் 48 வருட மண வாழ்க்கை ஆனால் இப்போ சமீபத்தில் வேறொருவருடன் நண்ட்பாக இருக்கிறார் .எல்லாரிடமும் மனம் விட்டு பேச முடியாதே நமது உணர்வுகளை புரிந்தவர்கூடத்தான் நம்மால் பழக முடியும் .செக்ஸுக்கு அப்பாற்பட்டும் நல்ல நட்பு ஆழமான நட்பு இருக்கு .எதுவும் நாம் பார்க்கும் பார்வையில் இருக்கு அதாவது கமலாதாஸின் இடத்தில இருந்து பார்த்தா அவரது வலிகள் புரியும் .
நீக்குகமலாதாஸின் ஓவியங்கள் பார்க்கும்போது புரிந்தது அவரது அடிமனதில் ஆழமான வடுக்கள் அவைதான் கதை கவிதை என வெளிப்படுத்தி இருக்கிறார் .
இன்னொரு விஷயம் குறிப்பிட்டாகணும் இங்கே வெளிநாடுகளில் இப்படி மனதால் இளவயது சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சலிங் தர பல வசதிகள் இருக்கு .கமலா வாழ்ந்த நம் நாட்டில் அப்படிப்பட்ட வசதிகள் இருந்திருந்தால் அவர் மனம் சமநிலைப்பட்டிருக்கும் .இங்கே LGBT போன்றவற்றில் புரிதல்களுண்டு .அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகள் தாங்கும் மன வல்லமையை கவுன்சலிங் கொடுத்திருக்கும் .ஒவ்வொரு மனிதரையும் அவர் செய்கைகள் எழுத்து வழியே தீர்மானிக்குமுன் அவர் இடத்தில அவராக கொஞ்சம் நேரம் இருந்து பார்த்தல் அவரது வலிகள் நமக்கு புரியும் .
ஆஆஆங்ங்ங்ங் சே.சே.. ஆராவது வம்புச் சண்டை போட்டால் சண்டைப்பிடிக்கலாமே தேம்ஸ் இன் இப்பக்கம் நின்று:) என நினைச்சால் இங்கின ஆருமே சண்டைக்கு வராமல் எல்லோரும் ஒரே கட்சியில் பேறுறாங்கோ:).. பாருங்கோ அஞ்சு இம்முறை கீசாக்காவும் நம்மளோடயே ட்ரவல் ஆகிறா:) அப்போ ஆரோடுதான் மீ ஜண்டைப்பிடிக்கிறது:)..
நீக்கு///60 வயதில் பெண்ணுக்கு இன்னொருவர் மேல் அன்பு வருவதில் தவறில்லை .அது நலல புரிதலுள்ள நட்பெனில் மிக சிறப்பு .தனக்காக மதம் மாறிய செய்த மாதவிக்குட்டியை அஃபர் விட்டு சென்றது கவலைதருது .//
நீக்குஇதேதான் அஞ்சு... 65 வயதில் எப்படியும் ஒரு மனமுதிர்ச்சி இருக்கும் .. எடுத்தோம் கவிழ்ந்தோம் என மதம் மாறத் துணிஞ்சிருக்க மாட்டா கமலா தாஸ், ஏதோ நல்லது கடசி வரை இவரோடு வாழ்ந்திடுவோம் என எண்ணியே இறங்கியிருப்பா, ஏனெனில் அந்த வயதில் மதம் மாறுவதென்பது யாராலும் முடியாத ஒன்று, அப்போ இவ மாறி இருக்கிறா எனில், அவ்வள்வு தூரம் அலியை நம்பி இருக்கிறா... அவரும் அப்படித் துணியும் அளவுக்கு நம்பிக்கையைக் குடுத்திருக்கிறார்.. கர்ர்ர்:).. அதில் தப்பு இல்லை அனா..ஆனா...
இந்த இடத்தில் அலி செய்தது மிகப் பெரிய தப்பு.. வயதான காலத்தில் தன்னை நம்பி, மதம் மாறி திருமண பந்தத்தில் நுழைந்து விட்ட ஒருவரை.. கடசி வரை, தன் உயிர் போனாலும் கை விட்டிருக்கக் கூடாது... அது நாட்டில் என்னதான் பிரச்சனை வந்தாலும் சேந்தே போராடியிருக்க வேணும்... இது வயதான ஒரு பெண்ணை அநியாயமாக மதம் மாற்றி கடசியில் மானபங்கப் படுத்தி .. கையையும் விட்டதாகி விட்டது... எனக்கு நாத் துடிக்கிறது கை பதறுகிறது.. விடுங்கோ அஞ்சு விடுங்கோ... நான் தட்டிக் கேய்க்கப் போறேன்ன்:)). சரி சரி வேணாம் என்றால் விடிடுறேன் எல்லாம் விதி..
///ஏதோ ஒரு ஆதங்கம். ஏனென்றால் அவர் ஒரு அருமையான எழுத்தாளராக வந்திருக்க வேண்டியவர். அபார திறமைகள் கொண்டவர். அதனால் வந்த எண்ணம். ///
நீக்குதுளசி அண்ணன்.. நீங்க இப்பவும் தப்பாகவே நினைக்கிறீங்க:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதுக்கு காரணம் உங்கள் ஆழ் மனதில்..., அவ மணம் முடிச்சது(அலியை) தப்பு என ஃபிக்ஸ்ட் பண்ணிட்டீங்க ஹா ஹா ஹா:)..
ஆனா உண்மையின் படி பார்த்தால் தனியே இருந்து சாதித்தவர்களைக் காட்டிலும்.. பெரிய பெரிய
சாதனை நிகழ்த்தியவர்களின் பின்னால் துணையாக இருந்தது அவரவர் துணைகளே...
அப்போ ஏன் இந்த அலி ஹப்பியாக வைத்திருந்திருந்தால்.. அவ இன்னும் எழுதிக் குவித்திருப்பாவே:).. அவ எழுத்தாளரானதற்கும் அவவின் 35 வயசுக் கணவர்தானே காரணம்..
ஊசிக்குறிப்பு:
எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது.. துளசி அண்ணனின் போஸ்ட்டை மட்டுமே படித்து விட்டுக் கருத்துக் கூறுகிறேன்..:).
அழகாக விமர்சித்திருக்கிறீங்க துளசி அண்ணன், தமிழ்ப் படம் எனில் நிட்சயம் பார்ப்பேன்.. இது புரிவது கஸ்டம்.
பதிலளிநீக்குஹையோ இப்போதான் நேக்கு நினைவு வருது:) மீயும் பட விமர்சனம் எழுதி நீண்ட நாளாகுதே:))).. ஆங்ங்ங்ங் ஆரது... ஓடாதீங்க ஓடாதீங்கோ:)).. இப்போதைக்கு இல்லையாக்கும்:)..
மிக்க நன்றி அதிரா! இதுவும் புரியும். மிக மிக நன்றாக எடுத்திருக்கிறார். உணர்வுகளைப் புரிந்து கொள்ள மொழி அவசியமில்லையே. முக பாவங்கள் போதுமே! அது நடிகர்கள் அத்தனை பேரும் நன்றாகவே வெளிப்படுத்துகிறார்கள். சப் டைட்டிலுடன் வந்தால் பார்த்து விடுங்கள்.
நீக்குஹா ஹா நீங்களும் விமர்சனம் எழுதுங்கள். நாங்கள் ஓட மாட்டோம். எப்போது எழுதினாலும் வாசிப்போம்.
பதிலளிநீக்குகமலதாஸ் பற்றி முன்பே அறிந்திருக்கிறேன்.... நல்ல விமர்சனம்.... பதிவுகள் பெரிய்யதாக இருக்கலாம் ஆனால் அதை கதைகளாக இல்லாதபடஸ்த்தில் சுவராஸ்யமாக இருக்கும் இது என் பார்வை
பதிவுகள் பெரிய்யதாக இருக்கலாம் ஆனால் அதை கதைகளாக இல்லாதபடஸ்த்தில் சுவராஸ்யமாக இருக்கும் இது என் பார்வை//
நீக்குமிக்க நன்றி மதுரை தமிழன்.
கமலதாஸ் பற்றி முன்பே அறிந்திருக்கிறேன்.... நல்ல விமர்சனம்.... // இதற்கும் நன்றி.
15 வயது - 35 வயது... அநியாயம்! பொருந்தாத் திருமணங்கள்.
பதிலளிநீக்குதான் 'அந்த'ப் புத்தகத்தை படிப்பதை மகன் பார்த்து விடுவதால் தந்தையின் தற்கொலை அதிர்ச்சி, ஆச்சர்யம்.
வாங்க ஸ்ரீராம்! ஆமாம் அதுதான் அவரது மனநிலை பிறழ்வதற்கு முதல் காரணம் என்று தோன்றுகிறது. அதுவும் திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர் செய்வது எல்லாம் எத்தனை கொடுமையாக இருக்கிறது இல்லையா. கணவனின் ஆசைகளுக்கு இவர் உடன்பட்டிருக்கிறாரே அல்லாமல் அன்புடன், ஈடுபாட்டுடன் இல்லாததால்...அப்புறம் அவர் மாறி அன்பு செலுத்தியிருந்தாலும் கூட முதல் கோணல் முற்றும் கோணல் ஆகியிருக்கிறது.
நீக்குஆம் அந்தத் தந்தையின் தற்கொலை ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஏன் அப்படி என்று தெரியவில்லை.
மிக்க நன்றி ஸ்ரீராம்
இப்போ நினைத்துப் பார்க்கையில் எனக்கொரு உண்மை புரிஞ்சு போச்ச்ச்ச்ச்:)) அதாவது வாழ்க்கையில் தானாக, உண்மையாக .. மனதார கமலாதாஸ் விரும்பியது அலியைத்தான் போல:)...
நீக்குஅக்பர் அலியுடனான காதலைப் படிக்கும்போதே, இரண்டுடன் மூன்றாவதாக என்னும் வரி! என்ன சொல்ல, எதைக் காண்கிறார்கள்!
பதிலளிநீக்குகமலா சுரய்யாவின் ஏக்கம்தான் என்ன? அந்தப்புத்தகம் படிக்க ஆசை.
ஆமாம்! 2 ற்குப் பிறகும் ஆம்! கமலாவும் அதற்கு ஏன் உடன்பட்டார் என்று யோசிக்கும் போது உங்கள் இரண்டாவது வரிக்குப் பதில் கிடைக்கிறது. அவரது ஏக்கம் என்னவென்றால் அன்பான துணை என்றிருக்கும் என்றே தோன்றுகிறது. அதாவது கணவன் அவருக்கு இழைத்த சில கொடுமைகள் அதாவது அந்த 15 வயதில் அறியா பருவத்தில், ஆண்கள் என்றாலே இப்படித்தானோ என்று தோன்றியிருக்கலாம். அதுவும் அவர் கனவுல்கில் சஞ்சரித்தவர். எனவே தூய்மையான அன்புடனான ஓர் ஆண் துணை இல்லை என்ற ஏக்கமாக இருந்திருக்கலாமோ என்றே தோன்றுகிறது படத்தைப் பார்த்ததும்...
நீக்குஎந்த வருடம் வந்த படம் இது? இந்த வருடம்,இந்த மாதம் வந்த படம் என்று தெரிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குஆம் ஸ்ரீராம் இப்போதைய படம் தான். புதுப்படம் தான். படம் வருவதற்கு முன் சில எதிர்ப்புகள் இருந்தன. ஆனால் கேரள நீதிமன்றம் ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லிட ரிலீஸ் ஆகிவிட்டது. கமலா தாஸின் மகனும், தங்கையும் கூடப் படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் நன்றாக சரியாக இருக்கிறது என்றே சொல்லியிருக்கிறார்கள்.
நீக்குஇயக்குநர் கமல் புத்தகத்தின் சில அத்தியாயங்களை எடுத்துக் கொண்டு அதாவது கமலாவின் ஒவ்வொரு காலகட்டத்தின் முக்கிய சம்பவங்களை எடுத்திருக்கிறார்...
இசை ஜெயச்சந்திரன் என்றால், பாடகர் ஜெயச்சந்திரனா? அவர் இசையும் அமைப்பாரா? யூ டியூப் சென்று பார்த்ததில் எம் ஜெயச்சந்திரன் என்று இருப்பதால் அவர் இல்லை என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஸ்ரீராம் இவர் இசையமைப்பாலர் ஜெயச்சந்திரம் எம். இவரும் கமலும் சேர்ந்து நல்ல ரிசல்ட் கொண்டு வருவார்கள். ஜெயச்சந்திரன் நல்ல இசையமைப்பாளர்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
ப்ராணாயாமயி பாடல் யார் யார் பாடியது என்று பார்க்கவேண்டும். ஓ... ஷ்ரேயா கோஷல்.. இவரது பாடல்கள் (குரல்) எப்போதுமே இனிமை. உடன் பாடுவது யேசுதாஸ் மகன். இனிமையோ இனிமை. இரண்டாவது பாடலும் பெண்குரல்தான். ஆண்குரலில் இந்தப்பாடலைத்தேடி யூ டியூப் சென்றேன். கிடைக்கவில்லை. கேட்க ஆவல். எத்தனைப் பாடல்கள் படத்தில்?
பதிலளிநீக்குஆம் ! ஷ்ரேயா கோஷல். முதலில் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பதிவிலும் சொல்லாமல் விட்டுவிட்டேன். அப்புறம் தான் தெரிந்து கொண்டேன். ஆனால், அருமையான பாடல். இரண்டுமே! அப்புறம் இரண்டு உருதுபாடல்கள் இருக்கின்றன. மேல் வாய்ஸ் ஒரு வேளை படமல்லாமல் வந்திருக்குமோ
நீக்குகீதா: ஸ்ரீராம் இதற்கு நான் தான் சரியாகப் பதில் சொல்ல முடியும். பதிவைப் போட்டுவிட்டுப் பாடல்க்ளைத் தரச் சொல்லியிருந்தார் துளசி. கீழே குறிப்பும் கொடுத்துவிட்டேன். ஏனென்றால் முதலில் தேடிய போது அப்பாடலுக்கு மேல் வாய்ஸ் கிடைத்தது. அது யாரென்று சொல்ல வேண்டு மீண்டும் பாடலிக் கேட்க போனபோது நெட் கட். வீடியோ அப்லோட் ஆகலை. மீண்டும் பதிவு போட்டு கிடைத்த இரு பாடல்களையும் பதிவிலேயே சேர்த்துவிட்டு அடுத்து நெட் போவதற்குள் வெளியிடணும் என்ற அவசரத்தில் கீழ்க் குறிப்பை மாற்றாமல் விட்டிருக்கிறேன். அதனாலேயே கமென்ட் மாடரேஷனும் எடுத்துவிட்டேன். நெட் போய் போய் வருவதால். இப்போது துளசியின் கருத்தை இங்கு இடும் போதுதான் உங்கள் கருத்தை இங்குப் பார்த்த பிந் தான் ஆஹா குறிப்பை மாற்றவே இல்லையே என்று தோன்றியது. அப்புறம் உருது பாடல்களும் கிடைக்கவில்லை னெட்டில். மேல் வாய்ஸும் கிடைக்கவில்லை....அந்த யூட்யூப் லிங்கும் அழிந்துவிட்டது!!! கிடைத்தால் உங்களுக்கு அனுப்புகிறேன். அருமையாக இருந்தது. விஜய் யேசுதாஸ் வாய்ஸ் போலத்தான் இருந்தது.
எல்லா ஜாம்பவான்களும் கருத்துரைத்த பின் -
பதிலளிநீக்குவழக்கம் போல தாமதமாக வருகின்றேன்..
எழுத்துக்களை ஆளத் தெரிந்தவருக்கு எண்ணங்களை ஆளத் தெரியாமல் போனது விசித்திரம்..
அந்தக் காலத்தை ஒட்டிய பால்ய விவாகம்..
ஆனால் - தகப்பன் வயதில் மணமகன்..
அதுதான் முதற்கோணல்...
தான் இரண்டு பிள்ளைகளுக்குத் தாய்..
அதுமட்டுமல்லாது பாரம்பர்யம் மிக்க அரண்மனையின் மருமகள்
- என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்திருந்தால் -
சாலையில் விபத்துக்குள்ளாகி மாண்டு போயிருக்கமாட்டாள் - நல்ல உள்ளங்கொண்ட டயானா!..
என்ன செய்வது எல்லாம் வாங்கி வந்த வரம்..
நிஜமானாலும் கற்பனையானாலும்!..
வாருங்கள் துரை செல்வராஜு ஐயா! தாமதமானால் என்ன? நீங்களும் ஜாம்பவான் தான்.
நீக்குஆம் முதல் கோணல் அந்தத் திருமணத்தில்தான்.
//தான் இரண்டு பிள்ளைகளுக்குத் தாய்..
அதுமட்டுமல்லாது பாரம்பர்யம் மிக்க அரண்மனையின் மருமகள்
- என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்திருந்தால் -
சாலையில் விபத்துக்குள்ளாகி மாண்டு போயிருக்கமாட்டாள் //
ஆமாம் ஆனால் அதற்குள் அவளது மனது மிகவும் பாதிக்கப்பட்டு விடுகிறதே. கணவனின் செயல்களா அதுவும் அறியாத இளம் பருவத்தில்!! கொடுமை அதுதான்.
//நல்ல உள்ளங்கொண்ட டயானா// மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா!
இப்படித்தான் நடக்க வேண்டும் என்றானால் அது யாராக இருந்தாலும் நடந்துதானே தீரும்!
மிக்க நன்றி ஐயா தங்களின் அழகான கருத்திற்கு.
//தான் இரண்டு பிள்ளைகளுக்குத் தாய்..
நீக்குஅதுமட்டுமல்லாது பாரம்பர்யம் மிக்க அரண்மனையின் மருமகள்
- என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்திருந்தால் -//
ஹா ஹா ஹா துரை அண்ணன், வெளிநாடென்றால் என்ன.. இங்கும் டயானாவுக்கு நடந்தது கொடுமைத் திருமணம்தான்.. சாள்ஸின் முகத்தைப் பாருங்கள்.. டயானாவுக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை..
நம் நாடுகளில் பல பொய்களை மறைச்சு தாலியைக் கட்டி விட்டிடுவினம்.. ஏனெனில் தாலி கட்டி விட்டால்.. கல்லானாலும் .. புல்லானா. என வாழ்ந்தே முடிக்கோணும் எனும் கெட்டித்தனத்திலதானே.. அதூ முறைதான் இந்த மகாராணி அதாவது என் குயின் அம்மம்மா:) பரம்பரையிலும் டயானாவுக்கு நிகழ்ந்தது.. வயதும் வித்தியாசம் கூட, அழகிலும் பொருத்தமில்லை, ஆனா ராஜ பரம்பரை எனக் கட்டி வச்சுப்போட்டு.. இழு இழு எண்டால் டயானா என்ன பண்ணுவா... ஒரு கட்டத்தில் தடம் புரண்டு விட்டது..
ஆனா அதுகூட அக்ஸிடண்ட் இல்லை, கொலை எனத்தான் இங்கு பேசுகிறார்கள்.. சாள்ஸ்தான் தன் குடும்ப மானம் போகிறது என செட் பண்ணி செய்தாராம்.. ஸ்கொட்டிஸ் க்கு சாள்ஸ் ஐக் கண்டாலோ பெயர் கேட்டாலோ பிடிக்காது:) முகத்தைச் சுழிப்பினம்:))..
அதிரா...
நீக்குதாங்கள் இங்கே குறிப்பிட்ட விஷயங்களை நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன்...
தங்களது மேலதிக கருத்துரைக்கு நன்றி..
குடும்பத்தின் தலைமகன் நல்லமுறையில் நடப்பதனாலேயே -
தனது சந்ததியர்களுக்கு வழிகாட்டியாகின்றான்...
அவ்விதம் அமையாததால் தான் பல குடும்பங்கள் சிதறிப் போகின்றன..
துரை அண்ணன்.. நீங்கள் சொல்வது நம் நாட்டுக் குடும்பங்களுக்கே பொருந்தும்... இங்கெல்லாம் பிடிக்கவில்லை எனில் டிவோஸ்தானே, ஆனா இந்த மகாராணி குடும்பம் மட்டும் வித்தியாசம், குடும்ப மானம் போயிடக்கூடாது என்பதில் கொஞ்சம் கவனமாக இருப்பார்கள். டயானா டிவோஸ் கேட்டிருக்கலாம் ஆனா குடுத்திருக்க மாட்டினம்.. அத்தோடு குடுத்தால் சாள்ஸ் க்கு நிறைய சொத்திருக்கே அதில பங்கு குடுக்க வேண்டி வந்திடும்...
நீக்குஇன்னொன்று, சாள்ஸ் உம் ஒன்றும் ஒழுங்காக இருந்தவர் அல்லவாமே.. டயானா இருக்கும் போதே.. இப்போதைய மனைவியுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.. மகாராணி பரம்பரை என்பதனால் அரண்மனை ரகசியங்களை வெளி விடாமல்... டயானாவை முடிச்சுப் போட்டினம்.. இப்போ இவர்கள் நன்றாகத்தானே இருக்கினம்.
இன்னொன்று, குயின் நினைச்சால், இப்போ தன் பதவியை சாள்ஸ்க்கு விட்டுக் குடுத்து தான் றிசைன் பண்ணலாமாம், ஆனால் சாள்ஸ்க்கு குடுக்க அவவுக்கு மனமிலையாம் எனவும் கதை அடிபட்டது...
துரை அண்ணா நீங்கள் சொன்னதும் அதிராவின் கருத்தும் ஏற்கிறேன். //சாள்ஸ் உம் ஒன்றும் ஒழுங்காக இருந்தவர் அல்லவாமே.. டயானா இருக்கும் போதே.. இப்போதைய மனைவியுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.. மகாராணி பரம்பரை என்பதனால் அரண்மனை ரகசியங்களை வெளி விடாமல்... டயானாவை //
நீக்குஅதே தானே கமலாவின் விஷயத்திலும். கணவர் எப்படி எல்லாம் இருந்திருக்கிறார். ஆனால் இந்தச் சமூகம் அவரைக் குறை சொல்லாது கமலாவைத்தான் குறை சொல்லும். ஏனென்றால் அவர் ஒரு பெண்.
துரை அண்ண்ணா சொல்லிருப்பது போல் வீட்டுத் தலைவன் நன்றாக அன்பாக இருந்தாலே போதும் குடும்பம் தழைத்தோங்க..அப்படியும் கணவன் நலல்விதமாக அமையவில்லை என்றாலும் சமூகத்திற்கும், உற்றார் உறவினருகும் பயந்து மனதுள் புதைத்து அடியில் கனன்று கொண்டிருக்கும் எரிமலாயாய் ஒரு வயதிற்கு மேல் சலிப்புடன் வாழும் பெண்கள் ஏராளம் நம் நாட்டில். அதிரா சொல்லுவது போல் அங்கெல்லாம் பிடிகலை ஒத்துவரலை என்றால் பிரிந்து விடுகின்றார்கள் அதுவே தேவலாம் என்று கூடத் தோன்றும் எனக்கு. (இங்கு அனாவசியமாகப் பிரிவதைச் சொலல்வில்லை. எடுக்கெடுத்தாலும் பிரிதல் என்று போகும் பெண்களைச் சொலல்வில்லை) ஆனால் அங்கு ஓரளவிற்குப் பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் இருக்கு...இங்கு அதுவும் இல்லை என்பதால் பெண்கள் முடிவு எடுக்க முடியாமல் குழம்புகிறார்கள்..
கீதா
கமலாதாஸ் பற்றி எது சொன்னாலும் அதை நேராய் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கமலாதாஸூக்கு அமைந்த அல்லது அவரே அமைத்துக் கொண்ட வாழ்க்கை சிக்கலானது. சிக்கலானதை உபயோகப்படுத்திக் கொண்டவர்கள் தாம் ஏராளம். வெகு காலத்திற்கு முன்பு 'குமுதம்' பத்திரிகை 'என் பெயர் கமலாதாஸ்' என்ற பெயரில்-- மலையாள்த்தில் கமலாதாஸ் எழுதிய சுயசரிதையை தமிழாக்கம் செய்தோ என்னவோ-- இதை ஆரம்பித்து வைத்தது. வித்தியாசமாகத் தெரியும் பெண்கள் என்றால் சினிமா,பத்திரிகை, மீடியா எல்லாவற்றிற்கும் வெல்லக்கட்டி தான் என்பதைத் தாண்டி ஏதாவது சொல்ல முடிகிறது என்றால் அதுவே இந்தப் படத்தின் ஆன்மாவை வெளிப்படுத்தியற்கான வெற்றி என்று சொல்லலாம்.
பதிலளிநீக்குகமலாதாஸ் மாதிரியே வாழ்க்கைச் சரிதம் கொண்ட ஒரு ஆண் என்றால் இந்த சினிமா, மீடியா, பத்திரிகை இத்தனையும் அந்த ஆண் மீது லவலேசமும் அக்கறை கொள்ளாது-- இதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.
கமலாதாஸ் என்ற பெயரில் 'தாஸ்' என்ற குறிப்பிடல் மாதவதாஸைக் குறிப்பிடுகிறதா-- ஆம் என்றால் கமலாவுக்கும் சரி, மாதவ தாஸுக்கும் சரி, அது பெரும் பெருமையே.
வாருங்கள் ஜீவி ஸார்! ஆம் படத்தைப் பார்த்த போது அவர் ஏன் இப்படிச் சிக்கலான வாழ்கையை அமைத்துக் கொண்டார் என்று தோன்றியது என்றாலும், அவர் அன்பிற்காக ஏங்கியிருக்கிறார் என்று தோன்றியது. ரொம்பச்சரி...அவரைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம் தான்.
நீக்குஓ! குமுதத்தில் வந்ததா?!
//வித்தியாசமாகத் தெரியும் பெண்கள் என்றால் சினிமா,பத்திரிகை, மீடியா எல்லாவற்றிற்கும் வெல்லக்கட்டி தான் என்பதைத் தாண்டி ஏதாவது சொல்ல முடிகிறது என்றால் அதுவே இந்தப் படத்தின் ஆன்மாவை வெளிப்படுத்தியற்கான வெற்றி என்று சொல்லலாம்.// மிக மிக அருமையான கருத்து ஸார்! நான் மிகவும் ரசித்த கருத்து! ஆம் படம் மிக மிக அழகாக உள்ளது. அவரது மகனும், தங்கையும் பார்த்து நன்றாக உள்ளது என்றே சொல்லியிருக்கிறார்கள்.
//கமலாதாஸ் மாதிரியே வாழ்க்கைச் சரிதம் கொண்ட ஒரு ஆண் என்றால் இந்த சினிமா, மீடியா, பத்திரிகை இத்தனையும் அந்த ஆண் மீது லவலேசமும் அக்கறை கொள்ளாது-- இதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.//
இக்கருத்தையும் நான் மிகவும் ரசித்தேன். ஆம்! மிகவும் உண்மையான கருத்து. ஆணாதிக்கம் நிறைந்த சமூகம் இல்லையா!! அப்படியான ஆண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் ஸார் இல்லையா?
ஆம் ஸார்! தாஸ் என்பது அவரது கணவரான மாதவதாஸ் தான் ஸார்!
மிக மிக அருமையான கருத்துகளை முன்வைத்தமைக்கு மிக்க நன்றி ஜீவி ஸார்
கமலாதாஸ் எழுதிய சுயசரிதையைக் குமுதத்தில் வந்தப்போப் படித்திருக்கேன். ஸ்பிலிட் பெர்சனாலிடியோனு தோணும்! என்றாலும் அவருக்குக் கிடைக்காத பெற்றோரின் அன்பை அவர் தன் குழந்தைகளிடமும், மற்றவர்களிடமும், முக்கியமாய் அக்பர் அலியிடமும் காட்டி இருந்தால் இப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருக்க வேண்டாமோ! தெரியலை! அவரோட விதி அவரை இப்படித் தான் செயல்பட வைத்தது போலும்.
பதிலளிநீக்குவாங்க கீதா சாம்பசிவம் சகோதரி! ஓ படிச்சிருக்கீங்களா!!
நீக்குஅவர் ஒரு விதமான ஹாலுசினேஷனில் இருந்தார் என்று சொல்லலாம். அக்பர் அலியிடம் காட்டினார் தான் அப்படித்தான் படத்தில் வருகிறது. ஆனால் அக்பர் அலிக்கு ஏற்கனவே இரு மனைவிகள் அதனால் பிரச்சனைகள் முளைக்கின்றன. அதுவும் கமலா அவருக்காகவே முஸ்லிமாகவும் மாறுகிறார். அதனால் அப்போது மதக்கலவரம் வரும் வாய்ப்பும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்புறம் அக்பர் அலி குடும்பத்தில் பிரச்சனை என்றதும் பிரிகிறார்.
ஆம் விதி என்று சொல்வதை விட வேறு என்ன சொல்ல. ஆனால் அவர் நல்லதொரு துணையுடனான அன்பிற்கு ஏங்கியிருக்கிறார் என்பதும் தெரிகிறது.
மிக்க நன்றி சகோதரி
பதினைந்து வயதில் 35 வயது ஆணுடன் திருமணம் என்பது கொடூரம். என்றாலும் பின்னாட்களில் கணவர் தனக்குச் செய்த உதவிகளைத் தன் சுயசரிதையில் எழுதி இருப்பார். அதிலும் அவருக்கு நேர்ந்த ரத்தப்போக்கு, அப்போது கணவர் செய்த உதவிகள் என இருக்கும். என்னதான் உள்ளது உள்ளபடி எழுதினாலும் எல்லோராலும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மொத்தத்தில் பாவப்பட்ட ஜீவன்! பாடல்கள் கேட்கவில்லை. பின்னர் வருகிறேன்.
பதிலளிநீக்குஆம்! கீதா சாம்பசிவம் சகோதரி. கொடுமை அத்திருமணம் தான் அவரை மன நிலை பாதிப்புக்குள்ளாக்கியது. ஆம் அவர் கணவர் அன்புடன் செய்த உதவிகளையும் அவர் நினைவு கூர்வார். ஆனால் அவர் கணவரின் மறைவுக்குப் பிறகு தனிமையும் ஒரு வேளை தன் சிறுவயதில் ஏற்பட்ட அந்த ஹாலுசினேஷன் வந்து அவரை ஒர் அன்பு துணைக்காக ஏங்க வைத்ததோ என்னவோ என்றும் தோன்றுகிறது.
நீக்குநீங்கள் சொல்லியிருப்பது போல் பாவப்பட்ட ஜீவன் என்பது மட்டும் இறுதியில் அவர் மரணப்படுக்கையில் இருக்கும் போது சொல்லும் வார்த்தைகள் மனதை என்னவோ செய்துவிடும்..
மெலொடியஸ் என்பார்களே, அந்த ரகம் பாடல்கள் இரண்டும். பொதுவாகவே மலையாளப் படங்களில் தேவை எனில் தான் பாடல் உட்புகும். இந்தப் பாடல்களும் அப்படியே வந்திருக்கின்றன என நினைக்கிறேன். படம் பார்க்க முடிந்தால் பார்க்கணும். :)
பதிலளிநீக்குஆமாம். பாடல்கள் தேவை என்றால் மட்டுமெ இருக்கும் இப்போது கொஞ்சம் அதிலும் மாற்றங்கள் வந்தாலும் அதிகம் இல்லை. அது போல பாடல்களிலேயே கதையும் கூட நகர்ந்து விடும். ஆம் இதிலும் பாடல்கள் மிக அருமையாக இருக்கின்றன. முடிந்தால் பாருங்கள் கீதா சாம்பசிவம் சகோதரி ரொம்ப நன்றாக இருக்கிறது. எடுத்த விதம் அப்படி. இயக்குநர் கமல் அருமையான இயக்குநர். மிக்க நன்றி சகோதரி
நீக்குநீர் மாதள பூவினுள்ளில் - இந்தப் பாடல் தான் மனதை ஈர்க்கின்றது.. இனிமை..
பதிலளிநீக்குமிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா! தங்களின் கருத்திற்கு. ஆம் இப்பாடலும் நன்றாக இருக்கிறது.
நீக்குபாவம் அவர்... பெரும்பாலானவர்கள் காலத்தின் பிடியில் சிக்கிக்கொண்டவர்கள் தான்.
பதிலளிநீக்குபாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். முதல் பாடல் ரொம்பவே பிடித்தது...
ஆமாம் வெங்கட்ஜி இப்படித்தான் பலர் காலத்தின் பிடியில் சிக்கிக் கொண்டவர்கள்...
நீக்குபாடல்களில் ஸ்ரேயா கோஷல் பாடியிருப்பவை ரொம்ப அருமையா இருக்கும் ஜி...உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்
மிக்க நன்றி வெங்கட்ஜி
கமலாதாஸின் வாழ்க்கை மிகவும் சிக்கலாகப் போவதற்கு அவரது வாழ்வில் அமைந்த சரியில்லாத மனிதர்கள்தான் காரணம். ஒரு சமயத்தில் அவரே, தான் செய்வதை, தன் வாழ்வு போகும் பாதையை உணர்ந்து சரிப்படுத்திக்கொண்டிருக்கலாம். அதையும் அவர் செய்யவில்லை. மற்றவர்கள் தவறு என்று கடந்துபோய்விடமுடியாதபடி அவரும் அந்தச் சிக்கல்களை விரும்பி ஏற்றிருக்கிறார். ஒவ்வொரு நேரத்திலும், அவருடைய முடிவுதான் அவர் வாழ்க்கையை அலைக்கழித்திருக்கின்றன. 'இதுதான் அவர் வாழ்க்கையின் பாதை' என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குபொதுவா சமூகம், யாரையும் திருத்துவதற்குத் தயார் இல்லை. அது, ஒருவரை வைத்து எப்படி பலனடையலாம் என்பதைத்தான் செய்யும். குமுதம் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா?
இந்த மாதிரி ஒருவரைப் பற்றிய படத்தைப் பார்த்துவிட்டு, அதனைப் புரிந்துகொள்ளும் அளவு எழுதிய உங்களைப் பாராட்டுகிறேன். இந்த இடுகையில் கமலாதாஸின் படத்தையும் இடம்பெறச் செய்திருக்கலாம்.
இந்த இடுகையில் கமலாதாஸின் படத்தையும் இடம்பெறச் செய்திருக்கலா
நீக்குநெல்லை இதற்கு மட்டும் நான் பதில் சொல்லுகிறேன். மற்றதற்கு துளசி நாளை வந்து தருவதை இங்குப் பகிர்கிறேன்.
இங்கிருந்த்தானே பதிவுகள் வெளிவருது. நெட் ரொம்பப் படுத்தல். துளசி கமலாதாசின் படம் போடச் சொன்னார். அதையும் போட்டிருந்தேன்...முதலில் இடுகை தொடங்கும் முன். அப்புறம் தான்..பாடல்கள் கூட முதலில் எடுத்தவை அப் லோட் ஆகாமல் பதிவும் தாறுமாறாகி, படங்கள் அப்லோட் ஆகாமல் நெட் கட் ஆகி அப்புறம் அப்புறம் நான் தேடியவை சரியாக வராமல்...எத்தனை முறை ப்ரிவ்யூ பார்த்தாலும் படம் அப் லோட் ஆகாமல் அப்புறம் வந்தது வரட்டும் என்று சமாளித்துப் போட்டுவிட்டேன். அப்புறம் அடுத்த நாள் தான் பதிவிலும் கரெக்ஷ்ன்ஸ் கூட பலர் வாசித்த பிறகு செய்தேன்...துரய்யாவுக்குப் பதில் சுரய்யா என்றிருந்தது...விகத குமாரன்....திகதகுமாரன் என்றிருந்தது....எல்லாம் அப்புறம் தான் கரெக்ட் செய்தேன். அப்லோட் செய்யும் போது எனக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது சரியாக வராமல்...அதனாலேயே என் பர்வதமலையும் தாமதமாகிறது...
இப்போது எபிக்கு ஒன்றாவது அனுப்பலாம் என்று பதிவு எழுதி படங்கள் அப்லோட் ஆக மாட்டேங்குது...பார்க்கிறேன் இனியும் கூட கமலா தாஸின் படம் மேலே போடலாம்...முயற்சி செய்கிறேன்...
கீதா
ஆம் நெல்லைத் தமிழன் நீங்கள் சொன்னது போல் she was a wrong person in a wrong place. அவரது வாழ்வில் அவரவர்களது நலம் பேணிய தாய் தந்தை கணவர், வாசகர்கள், பத்திரிகையாளர்கள், இறுதியில் அக்பர் அலி……..இப்படி எல்லோரும் அவரை தங்களுக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்திக் கொண்டார்களே அல்லாமல் அவரை முழுமையாகப் புரிந்து கொண்டு அவருக்குத் தேவையானதை ஒரு போதும் செய்யவே இல்லை.
நீக்கு//பொதுவா சமூகம், யாரையும் திருத்துவதற்குத் தயார் இல்லை. அது, ஒருவரை வைத்து எப்படி பலனடையலாம் என்பதைத்தான் //
உண்மையே. மிக மிக உண்மையே..
நீங்கள் சொல்லுவது போல் சிக்கல்களை விரும்பி ஏற்றிருந்தாரோ என்றும் தோன்றுகிறது. அவரது அடுத்த நண்பரான எழுத்தாளரும் நடிகருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (ஆமி திரைப்படத்தில் இதே பெயரில் வருகிறார்),
“மாதவிக்குட்டி சாதி மத அரசியல் விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர். தனிமனித சுதந்திரத்தை நம்பிய அவருக்குத் தேவையான சக்தி கிடைத்தது அவர் மற்றவர்களுடன் எதிர்த்துப் போராடும் போதுமட்டும் தான். அவை எல்லாம் அவரை எப்போதும் புண்படுத்தித்தான் இருந்தது. இருந்தாலும் அவரை அவராக்கியது அந்தப் போராட்டங்கள்தான். மனதில் தோன்றும் எண்ணங்களை, ஆசைகளை, விருப்பு, வெறுப்புகளை அவர் ஒருபோதும் வெளிப்படுத்தத் தயங்கியதே இல்லை. அதே போல் எல்லோரது உள்ளேயும் ஒளிந்து கிடக்கும் போலித்தனத்தை (ஹிப்போக்ரஸியை) வெளிச்சத்திற்குக் கொண்டு வரவும் அவர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. அதனால்தான் அவர் மேல் எல்லோருக்கும் ஒருவித ஈர்ப்பும், எதிர்ப்பும் ஒரு சேர வருகிறது.” என்று சொன்னது நீங்கள் சொல்லியிருக்கும் இக்கூற்றை உறுதி செய்யும் ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது..
அவர் கசப்பதால் அவரைப் பலராலும் விழுங்க முடியவில்லை. இனிப்பதால் அவரை அதே பலரால் துப்பவும் முடியவில்லை.!!
உண்மையிலேயே அவர் ஒரு விசித்திரமான பெண்மணிதான்.
என் கதை என்று கமலாதாஸின் கதை குமுதத்தில் வெளியான பொழுது நான் பள்ளி மாணவி. அந்த தொடரை முழுமையாக படித்த ஞாபகம் இல்லை.
பதிலளிநீக்குபரிதாபத்திற்குரிய ஜீவன்தான். மரணப்படுக்கையில் அவர் கேட்ட கேள்விகள் மனதைப் பிசைகின்றன.
பரிதாபத்திற்குரிய ஜீவன் தான். ஏதோ ஒரு கனவுலகில் சஞ்சரித்திட வாழ்க்கையே எப்படியோ ஆகிவிட்டது அவருக்கு...எனக்கும் படம் பார்த்த போது அந்தக் கடைசியில் அவர் கேள்விகள் மனதை என்னவோ செய்தது...
நீக்குமிக்க நன்றி சகோதரி பானுமதி தங்களின் கருத்திற்கு
ரொம்ப விரிவாய்ச் சொல்லியிருக்கீங்க...
பதிலளிநீக்குசெல்லுலாய்ட் பார்த்தேன்... அருமையான படம்....
இந்தப் படம் பார்க்க வேண்டும்.
வாங்க குமார். ஆமாம் செல்லுலாய்ட் நல்ல படம்...கருத்திர்கு மிக்க நன்றி
நீக்குபடம் பார்க்கும் ஆவலைத் தூண்டிய பதிவு.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு
நீக்குThanks for a detailed review, Thulasi sir! I have read Ënte Katha" both in Tamil and Malayalam. Poet Satchidanandan wrote än accurate remark about that book like this "I cannot think of any other Indian autobiography that so honestly captures a woman's inner life in all its sad solitude, its desperate longing for real love and its desire for transcendence, its tumult of colours and its turbulent poetry". When it came out, it was sensational. Translating entire content of the book and things that happened afterward would be a big challenge, and another review on this movie put down this movie for intently circumventing the controversial issues and leaving the movie very bland. I haven't seen the movie yet, and I think a Manju may not be the best fit for this role... we need someone in the likes of Smita Patil, Nandhitha Bose and Archana with less glitter to shoe the permeating inner torment.
பதிலளிநீக்குPersonally I was not at all convinced for the reasons she gave for her religious conversion, and your review cites another story behind it. Her interview on this issue can be seen here : http://www.islamicbulletin.org/newsletters/issue_19/embraced.aspx
More after I see this movie... Thanks again!
Dear chandrakumar Sir, thanks a lot for the detailed comment. As Satchidanandan said, her words were so honest though she had added a little bit colours here and there. it was no doubt the unquenchable thirst for love in her life that created so much troubles at the end of her life. We can't blame her as she might sometimes have powerful reason for that. she was alone then and so she was in need of a friend who could understand her fully. But that changed her life. she lived 10years as some one else without sharing her thoughts to others through her writing. that was really a tragedy. Religion was always a dress to her. she never allowed it to become her skin. but towards the end of her life the dress that she wore became her skin. that should have given her a shock. so, she decided to close her literary door. it was unfortunately a huge loss to the literary world. then i think manju did her maximum. kamal preferred vidhya balan first when vidhya denied he chose manju. anyhow please watch the film and come out with your opinion. we are all waiting eagerly to read it, sir.
நீக்குகமலாதாஸ் கதை தொகுத்து வைத்து இருந்ததை படித்து இருக்கிறேன். கதை குமதத்தில் வந்த போது படிக்க வில்லை. விகடன் தான் வாங்குவார்கள். பக்கத்து வீட்டில் வாங்குவார்கள் இடை இடையே படிப்பேன்.
பதிலளிநீக்குநிறைய கஷ்டங்க்களை அனுபவித்தவர், அன்புக்காக ஏங்கியவர்.
சமூகத்தின் கொடுமை இது.
இளமையை வயோதிகத்திற்கு தாரை வார்ப்பது, வாழவெட்டிகளை ஓட ஓட விரட்டும் சமூகம், மனம் பொருந்தவில்லை என்றாலும் சட்டப்படி விலக விடாமல் தடுக்கும் நயவஞ்சகம் (வாழவிட மாட்டேன் என்று சொல்லும் மனிதர்கள்) கைபெண் பின் புலம் இல்லையென்றால் அவர்கள் கதியும் கஷ்டம் தான்.
பெண்களின் நிராதவற்ற நிலமையை பயன்படுத்திவிட்டு அம்போ என்று கைகழுவி விடும் அக்பர் அலி போன்றவர்கள் நிறைந்த உலகம் புரிந்து கொள்ள முடியாவிட்டால் கஷ்டம் தான் வாழ்வில்.
//மரணப்படுக்கையில், “என் வாழ்வில் எங்கு தவறு நேர்ந்தது?.......அது ஏன் நேர்ந்தது?” என்று எண்ணி மாதவிக்குட்டி வருந்தும் போது நம் கண்களில் நாம் அறியாமல் நீர் நிறைந்துதான் விடுகிறது.//
படிக்கும் போதே கஷ்டமாய் இருக்கிறது பார்த்த காட்சியால் கண்ணீர் வரும் தான்.
நிறைய கஷ்டங்க்களை அனுபவித்தவர், அன்புக்காக ஏங்கியவர். //
நீக்குஇருந்தாலும் அவரது எழுத்தாற்றலால் உயர்ந்த இடத்தைத் தக்க வைத்தவர். ஆணுக்கு இணையாகச் சுதந்திரம் தேடும் பெண்களிடையே அப்படி மட்டுமல்லாத அதற்கும் மேலான பெண்களுக்கான தனி சுதந்திரம் என்று ஒன்று உண்டு என்று சொல்லவும் எழுதவும் மட்டும் செய்யாமல் அதை நிலைநாட்டப் போராடியவர். ஆணாதிக்க உலகு அதை இப்போது மதிக்க மறுத்தாலும் ஒருநாள் அதை மதித்தே தீரவேண்டியிருக்கும்.
மிக்க நன்றி சகோதரி கோமதி தங்களின் கருத்திற்கு
பதிலளிநீக்குரொம்பவும் தாமதமாக இங்கு வருகிறேன். இரண்டு வாரங்களுக்கும் மேலாக நான் வேகம் குறைந்து இருந்திருக்கிறேன் – எழுதுவதில், படிப்பதில் என்றெல்லாம்.
கமலா தாஸை ஒரு கவிஞராக எண்பதுகளில் நான் ரசித்திருக்கிறேன், ஆங்கிலக்கவிதைகள்/மொழிபெயர்ப்புகள் மூலம். (இவரைப்போலவே அம்ரிதா ப்ரீத்தமையும்). கமலாதாஸின். வாழ்க்கை அவரைப் பல முடிச்சுகளில் சிக்கவைத்திருக்கிறது என்பதை அறிந்திருந்தேன்.சிறந்த படைப்பாற்றலுள்ள அவர், தன் அறுபது வயதுக்குமேல் அடித்த கூத்துகள், பிதற்றல்கள், மதமாற்றம் இவையெல்லாம், அபத்தத்தின் உச்சம். 65 வயதில் ஒருவர்முன் அல்லது ஒருவரில், கிருஷ்ணன் தோன்றக்கூடாது என்றில்லை. 105-லும் தோன்றலாம். ஆனால் அதன் விளைவுகள் இவருக்கு நேர்ந்ததைப்போலிருக்காது! ஒருவேளை மனம் பிறழ்ந்த நிலையில் காதல், காமம், கிருஷ்ணன், நபி என்று ஜன்னி கண்டிருக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கை எப்படியெல்லாமோ அமைந்திருந்தாலும், மிகவும் மதிக்கப்படவேண்டிய கவிஞர்.
படத்தை நான் பார்க்க விரும்புகிறேன். நல்ல இயக்குனர், நடிகர்கள் எல்லாம் இருந்திருப்பதாக, நன்றாக எடுக்கப்பட்டிருப்பதாக படத்திற்கான உங்களது விமரிசனத்தைப் படிக்கையில் தோன்றுகிறது. மஞ்சு வாரியர் ஒரு கமர்ஷியல் ஆர்ட்டிஸ்ட் என அறிகிறேன். அவர் படம் பார்த்ததில்லை. அவரைத் தவிர, கமலாதாஸாக ஸ்க்ரீனில் வர, இவர்களால் வேறு யாரையும் நினைக்கமுடியவில்லையா? ஒருவேளை 40 வயதுக்காரர் என்பதற்காகவும், கொஞ்சம் plump என்பதற்காகவும் மஞ்சுவைத் தேர்ந்தெடுத்தார்களோ என்னவோ.. இருந்தும், படம் பார்க்காமல் விமரிசனத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஏதும் சொல்வதற்கில்லை. மலையாளத்தின் சிறந்த இயக்குனர்களான ஆடூர் கோபாலகிருஷ்ணன்(எலிப்பத்தாயம்), அரவிந்தன் (எஸ்தப்பன், தம்பு, காஞ்சன சீதா), ஜான் ஆபிரஹாம்(அக்ரஹாரத்தில் கழுதை) - ஆகியோரின் காவியங்களை திரையில் கண்டு களித்ததுண்டு. அந்த அளவுக்கா கமல் எனும் கமாலுதீன்? தெரியவில்லை.
// 65 வயதில் ஒருவர்முன் அல்லது ஒருவரில், கிருஷ்ணன் தோன்றக்கூடாது என்றில்லை. 105-லும் தோன்றலாம். ஆனால் அதன் விளைவுகள் இவருக்கு நேர்ந்ததைப்போலிருக்காது! ஒருவேளை மனம் பிறழ்ந்த நிலையில் காதல், காமம், கிருஷ்ணன், நபி என்று ஜன்னி கண்டிருக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கை எப்படியெல்லாமோ அமைந்திருந்தாலும், மிகவும் மதிக்கப்படவேண்டிய கவிஞர். //
நீக்குஅருமை. நெற்றியிற் அடித்தால் போல் உங்களுக்கே உரித்தான நடையில் சொல்லியிருக்கிறீர்கள். இருந்தாலும் குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடும் போது அவர் மதிக்கப்பட வேண்டியவரே.
// அந்த அளவுக்கா கமல் எனும் கமாலுதீன்? தெரியவில்லை.//
கமல் கமர்ஷியல் படங்களை எடுத்துவந்தவர்தான். அவரது “செல்லுலாய்ட்” அவரையும், அவர் மேல் இருந்த எல்லோரது அபிப்ராயங்களையும் மாற்றியேவிட்டது. செல்லுலாய்ட் பார்க்கவில்லை என்றால் அதைப் பார்த்த பின் ஆமி படத்தைப் பாருங்கள்.
இக்காலத்தில் நல்ல இயக்குனர்களும் நல்லேழுத்தாளர்களைப் போல் சமூகத்திற்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டியது மிக மிக அவசியம். அதை அவர் உணர்ந்து செயலாற்றுவது போல் தோன்றுகிறது.
மிக்க நன்றி ஏகாந்தன் ஸார் கருத்திற்கு
அருமையான படம்
பதிலளிநீக்குமிக்க நன்றி மொஹமது அல்தாஃப் தம்பி தங்களின் கருத்திற்கு
நீக்குஇங்கே அமெரிக்காவில் இன்னும் மோசம். பத்து வயது சிறுமிக்கும் நாற்பது வயது ஆணுக்கும் நீதிபதியே திருமணம் செய்து வைக்கிறார். முப்பது மாநிலங்களில் பெண்ணின் குறைந்த பட்ச திருமண வயது வரம்பு இல்லை! எது எப்படியோ உங்கள் பதிவு யோசிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குமுனைவர் கோவிந்தராஜு ஐயா தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.
நீக்குநீதிபதியே திருமணம் செய்து வைக்கிறாரா? அமெரிக்காவில்? வியப்பாகத்தான் இருக்கிறது. ஸ்டாட்சு ஆஃப் லிபர்டி இருக்கும் நாடு என்பதால் அங்கு சுதந்திரம் மட்டற்று இருக்கிறது போலும்!
மிக்க நன்றி ஐயா.
மிகத் தாமதமாகப் பதிவை இப்பொழுதுதான் படிக்கிறேன்! இப்படிப்பட்ட எதிர்பாரா வகையிலான திரைத் திறனாய்வுகளைத் தில்லையகத்தில்தான் படிக்க முடியும். அருமை!
பதிலளிநீக்குகமலாதாஸ் என்று கேரளத்தில் புகழ் பெற்ற கவிஞர்; அவர் சமயம் மாறி விட்டதால் பெரிய சமூகப் பிரச்சினை என்றெல்லாம் கேள்விப்பட்டதுண்டு. ஆனால், அவர் முழு வாழ்க்கையை இப்பொழுது உங்கள் பதிவு மூலம்தான் அறிகிறேன். இந்தியா போன்ற பெண்ணடிமைத்தனம் மிகுந்த நாடுகளில் பெண்கள் இந்த இரண்டு தலைமுறைகளாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழத் தொடங்கியிருக்கிறார்கள். எனவே, உண்மையான பெண்ணியம் எது, பெண்ணியம் எனும் பெயரில் வரம்பு மீறுவது எது என்பது போன்ற புரிதல்கள் பிறக்க இன்னும் கொஞ்சக் காலம் நம் பெண்களுக்கு (ஆண்களுக்கும்தாம்) தேவைப்படுகிறது. இதில் சிலர் சறுக்கி விடுவதும் இயல்பே. ஆனால், இதை இயல்பு என ஏற்றுக் கொள்ளவோ, குறிப்பிட்ட அந்தக் கால இடைவெளியைப் பெண்களுக்கு வழங்கவோ இந்த சமூகம் ஆயத்தமாக இல்லை. காரணம், இன்று பெண்கள் பெற்றிருக்கும் விடுதலை என்பது ஆண்களால் மனமுவந்து வழங்கப்பட்டது இல்லை. பெண்ணியம் பேசுகிற, விரல் விட்டு எண்ணி விடக்கூடிய மிகச் சில ஆண்களின் ஊக்குவிப்பால் பெண்கள் தாங்களாகவே பொங்கி, போராடி, இரு கைகளாலும் பற்றி இழுத்து அடைந்த விடுதலை இது! எனவே, இந்த விடுதலையைத் துய்ப்பதில் (அனுபவிப்பதில்) ஒரு சிறு வழுக்கு வழுக்கினாலும் படாரென்று காலைப் பிடித்து இழுத்து மொத்தமாகக் கீழே தள்ளி விட ஆண்கள் மட்டுமில்லை, பல பெண்களும் இங்கு கண்கொத்திப் பாம்பாகக் காத்திருக்கிறார்கள். அப்படிப் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர்தாம் கவிஞர் அவர்களும். ஆனால், அவரைப் பாதிப்புக்கு ஆளாக்கியவர்களுக்குத் தெரியாது, அவர் அடைந்த பாதிப்புகள் கூட இந்தியப் பெண் சமூகத்தின் வாழ்க்கைப் பயணத்தில் அனைவருக்குமான படிப்பினைகளாகப் பயன்படத்தான் செய்யுமே ஒழிய வீண் போகா என்பது.
பதிவின் இறுதியில் நீங்கள், விவேகானந்தர் ஆங்கிலப் பெண்மணியிடம் சொன்னது போல் கவிஞரும் அக்பர் அலியிடம் சொல்லியிருக்கலாம் என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். ஏன் எனப் புரியவில்லை! கவிஞர் அவர்களின் கணவர் இறந்து விட்டார். அதன் பின்புதான் அவர் அக்பர் அலிக்கு மனைவியாகி இருக்கிறார். இதில் என்ன தவறு? இதைப் பெரிய குற்றமாகப் பார்த்த சமூகத்திடம்தான் தவறு! இதையே கணவனை இழந்த இளம் கைம்பெண் ஒருவர் செய்திருந்தால் இஃது இவ்வளவு பெரிய பரபரப்பாகியிருக்குமா? இல்லை. எனில், முதியவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? இத்தனை வயது வரைதான் ஒருவருக்குப் பாலியல் எண்ணங்கள் எழலாம் என்கிற வரையறையை இங்கு வகுத்தவன் எவன்?
கவிஞர் கமலாதாஸ் என்கிற சுரைய்யா எந்த வகையிலும் வாழ்வில் தவறவில்லை. தன் விருப்பப்படி ஒரு பெண் வாழ்ந்தால் இந்திய சமூகம் அதை எப்படி எதிர்கொள்ளும் என்பதைத் தானே சோதனைக்கூட எலியாக இருந்து தன் மீதே சோதித்துக் கொண்டு அதன் கொடிய விளைவை இந்தியப் பெண்களுக்கு எடுத்துக்காட்டி விட்டுப் போயிருக்கிறார், அவ்வளவுதான்.
இதிலிருந்து பாடம் கற்று நம் அடுத்த தலைமுறை அக்கா தங்கைகள் இன்னும் கூர்மதியோடு இத்தகைய சூழல்களை கையாண்டு வாழ்ந்து காட்டுவார்கள். அதற்குக் கவிஞரின் வாழ்க்கையை அடுத்த தலைமுறைப் பெண்களுக்கு எடுத்துக்காட்டிய அந்தப் படமும், அதைப் பற்றித் தமிழில் எழுதித் தமிழ்ப் பெண்களுக்குச் சேர்த்த தாங்களும் உதவியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி!
// உண்மையான பெண்ணியம் எது, பெண்ணியம் எனும் பெயரில் வரம்பு மீறுவது எது என்பது போன்ற புரிதல்கள் பிறக்க இன்னும் கொஞ்சக் காலம் நம் பெண்களுக்கு (ஆண்களுக்கும்தாம்) தேவைப்படுகிறது//
நீக்கு//இன்று பெண்கள் பெற்றிருக்கும் விடுதலை என்பது ஆண்களால் மனமுவந்து வழங்கப்பட்டது இல்லை. பெண்ணியம் பேசுகிற, விரல் விட்டு எண்ணி விடக்கூடிய மிகச் சில ஆண்களின் ஊக்குவிப்பால் பெண்கள் தாங்களாகவே பொங்கி, போராடி, இரு கைகளாலும் பற்றி இழுத்து அடைந்த விடுதலை இது!//
//அவரைப் பாதிப்புக்கு ஆளாக்கியவர்களுக்குத் தெரியாது, அவர் அடைந்த பாதிப்புகள் கூட இந்தியப் பெண் சமூகத்தின் வாழ்க்கைப் பயணத்தில் அனைவருக்குமான படிப்பினைகளாகப் பயன்படத்தான் செய்யுமே ஒழிய வீண் போகா என்பது.//
// இத்தனை வயது வரைதான் ஒருவருக்குப் பாலியல் எண்ணங்கள் எழலாம் என்கிற வரையறையை இங்கு வகுத்தவன் எவன்?//
கைதட்டல்கள் பெறும் கருத்துக்கள். அருமை!
கிருஷ்ணபக்தையான அவர் அவரது பல கதைகள் மற்றும் கட்டுரைகளில் அருமையாக கண் கணாக் கடவுள் அவருக்கு மட்டும் தரிசனம் தருபவரைப் பற்றியும், காணும் மனிதர்களின் மனதில் நுழைந்து அவர்களது சொல் மற்றும் செயலின் வாயிலாக தன்னை வெளிப்படுத்துவதைப் பற்றியும் விவரித்திருக்கிறார். அதனால் அந்த பக்தி விரிவுப்பட்டிருந்தால், காதலைவிட பக்திக்கே அவர் தனது 60 வது வயதில் முக்கியத்துவம் கொடுக்க முடிந்திருந்தால், விவேகானந்தரைப் போல் அக்பர் அலியிடம் பேசி செயல்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்ப்பைச் சொன்னேன். அவரது இறை உணர்வுகளும் அவரை இறுதிக் காலத்தில் கைவிட்டுவிட்டதே என்ற வேதனையில் சொன்னேன். அவ்வளவே.
ஒரு வேளை என் அறிவிற்கு இந்த இடத்தில் அவர் புரியா புதிராகிவிட்டாரோ என்ற ஐயமும் எனக்கு இல்லாமல் இல்லை.
மிக்க நன்றி இபுஞா தங்களின் விரிவான அழகான கருத்திற்கு.
ஓ! மிக்க மகிழ்ச்சி! இதுவே வேறு யாரிடமாவது நான் இத்தகைய கருத்துக்களைச் சொல்லியிருந்தால் தவறாகப் புரிந்து கொண்டு சீற்றமடைந்திருப்பார்கள். நீங்களோ எனக்கு விளக்கம் அளிக்கிறீர்கள். மிக்க நன்றி!
நீக்குஉங்கள் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி!
நீக்குபாடல் விரைவில் கேட்கின்றேன் . படம் நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டும் இப்போது எல்லாம் சினிமா மோகம் கொஞ்சம் அல்ல அதிகமாககுறைந்து விட்டது!)))
பதிலளிநீக்குபலரின் பின்னூட்டத்தை வாசிக்கும் போது கமலாதாஸ் அவர்களின் வாழ்க்கை ஒரு புயலில் சரிந்த நாணல் போல! கிட்டத்தட்ட சிரிவித்தியாவின் வாழ்வுக்கும் நெருங்கி வரும் எனலாம்!
பதிலளிநீக்குபதிவு, மனதை கலக்கிவிட்டது...
பதிலளிநீக்கு