“அம்மா! என்னை ஏம்மா இங்க கொண்டுவிட்ட? நான் உனக்கு என்னம்மா கெடுதல் செஞ்சேன்?
காப்பகத்துல கொண்டுவிடற அளவு நான் தாழ்ந்து போய்ட்டேனாம்மா? ம்ம்ம்...இருக்கலாம்.....நான்
உன் குழந்தை இல்லைங்கறதுனாலதானே?! 2
மாசத்துலயே, நான் பெண் அப்படின்றதுனால குப்பைத் தொட்டில என்னை யாரோ போட, அங்க
குப்பை போட வந்த நீ என்னைப் பாத்துட்டுக் கலங்கி, அப்பாவைக் கூட்டிக்கிட்டு வந்து,
என்னைக் காட்டி, அவர் அனுமதியோட, அப்படியே என்னை எடுத்துட்டுப் போயி இந்த 5 வருஷமா
அன்பை ஊட்டி வளத்துட்டு இந்தக் காப்பகத்துல கொண்டு விட்டுட்டியேம்மா! திரும்ப
வந்து என்ன கூட்டிகிட்டுப் போவியாம்மா? என்ன
எப்ப வந்து திரும்ப கூட்டிக்கிட்டுப் போவம்மா?”
என்ற எண்ண அலைகளுடன், தன் அறையில் இருந்த ஜன்னல் வழியே
கண்ணம்மா என்ற கண்ணழகி, யாரையோ எதிர்பார்த்திருப்பது போல், ஏக்கத்தோடு எட்டிப்
பார்த்துக் கொண்டிருந்தாள்! யாரையோ அல்ல, தன் அம்மாவையும், அப்பாவையும்தான். முந்தைய
தினம் வரை, மகேந்திரன், பார்வதியின் செல்லக் குழந்தையாக வலம் வந்து கொண்டிருந்தவளுக்கு,
அன்றிலிருந்து அவளது இருப்பிடம் இந்தக் காப்பகமாகியது! காரணம், பாட்டியின் வருகை,
அதாவது அப்பாவின் அம்மா வருகை!
இரண்டு வருடங்களுக்கு முன், பாட்டிக்கும், அப்பாவுக்கும்
சிறு வாக்குவாதம் வந்தது! சிறிது நேரத்திற்குப் பிறகுதான் கண்ணம்மாவுக்குத் தெரிந்தது,
அவர்களது பேச்சு அவளைக் குறித்து என்று!
“மகேந்திரா நீ என்ன சமாதானம் சொன்னாலும் நான் உன்
வீட்டுக்கு வர முடியாது! அந்த சனியன,
அதான் எங்கருந்தோ, குப்பைத்தொட்டிலருந்து தத்துனு
எடுத்துட்டு வந்து வளக்கறீங்களே, தெருல இருக்க வேண்டியத.... உங்க பொண்ணுனு...அந்த
பீடை அங்க இருக்கற வரைக்கும் நான் உங்க வீட்டுக்கு வர மாட்டேன்”
“ஏம்மா! இப்படி ஒரு
குறுகிய மனசு? உனக்கு? அவ உன்ன என்ன
செஞ்சா? பாக்கப் போனா உங்கிட்ட எவ்வளவு
அன்பா, பாசமா இருக்கா? அந்த அன்பைக் கூட
உன்னால புரிஞ்சுக்க முடியலயே!” - மகேந்திரன்
“அம்மா, அவ உங்க முன்னாடி வர்ரது உங்களுக்குப் பிடிக்கலனா,
நாங்க அவள உங்க முன்னாடி வரக் கூடாதுனு சொல்லிடறோம்! வராம அவள நான
பாத்துக்கறோம்! அவளும் சொன்னா கேக்கற
குழந்தைதான்மா! அதுக்காக நீங்க நம்ம வீட்டுக்கு வராம இருக்க வேண்டாம்! அவளும்
சின்னக் குழந்தைதானேமா! அனாதைம்மா! அவளுக்கும் ஏக்கம் எல்லாம் இருக்கத்தானேம்மா செய்யும்?” – இது பார்வதி.
“நீங்கல்லாம் என்ன சொன்னாலும் சரி, நான் வர முடியாது! கண்ட கண்ட தரித்திரம் கூட எல்லாம் எனக்கு
இருக்கணும்னு அவசியம் இல்ல” என்று, பாட்டி தன் பிடிவாதத்தையும், எண்ணத்தையும் விட்டுக் கொடுப்பதாக இல்லை!
மற்ற மகன்கள், மகள்கள் வீட்டிற்கு எல்லாம் போய் வந்தார், இவர்களது வீட்டைத் தவிர!
தாத்தாவுடன் தனி வீட்டில், தன் ராஜ்ஜியத்தில், வாழ்ந்து
வந்த பாட்டியை, இதோ இப்போது, தாத்தா இறந்துவிட, மற்ற மகன்களும், மகள்களும்
பாட்டியை வைத்துக் கொள்ள மறுத்துவிட, மகேந்திரனும், பார்வதியும் பாட்டியை வைத்துக்
கொள்ளத் தயாராக இருந்தும், பாட்டி வர மறுத்துவிட்டார்! இந்த சனியன், தரித்திரம், பீடை அவர்களுடன்
இருந்ததால்! அதனால், மகேந்திரன் பார்வதியிடம் கண்ணம்மாவைக் காப்பகத்தில்
கொண்டுவிடும்படிச் சொல்லிவிட்டார்.
அன்றைய காலை மிகவும் சோகமாக விடிந்தது பார்வதிக்கு!
கண்ணம்மா (செல்லமாகக் கூப்பிட்டு, கூப்பிட்டு அந்தப் பெயரே நிலைத்துவிட்டது) என்னும் கண்ணழகி இல்லாத வீடு வெறிச்சோடியிருந்தது போன்றிருந்தது! எதையோ
பறிகொடுத்தது போன்ற ஒரு உணர்வு! எவ்வளவோ பரிகாரங்களும், மருத்துவ ரீதியான பரிசோதனை
முயற்சிகளும் செய்தும், குழந்தைப் பேறு கிடைக்கப் பெறாத, பார்வதியும்,
மகேந்திரனும், இந்தக் கண்ணம்மாவைத் தத்து எடுத்து, கடந்த 5 வருடமாகப் பேணிப்
பாதுகாத்து வளர்த்து வந்தனர். அழகோ அழகு!
கொள்ளை அழகு! அவளுக்கென்று அழகானச் சட்டைகள், தொப்பி, விளையாட்டுப் பொருட்கள்,
அவளுக்குப் பிடித்த உணவு என்று பார்வதியும், மகேந்திரனும் அவளைப் பார்த்து
பார்த்து வளர்த்தனர்! அவள் பள்ளியில், எல்லோருடனும் நன்றாகப் பழகி பல நல்ல
பழக்கவழக்கங்களுடன், ஆசிரியரின் மனதில் இடம் பிடித்தாள்! பார்ப்பவர்களை எல்லாம், தன் அன்பாலும்,
விளையாட்டாலும், புத்திசாலித்தனத்தாலும், நல்ல பழக்கவழக்கங்களினாலும், கவர்ந்து
விடுவாள்! எல்லோர் மனதிலும் இடம் பிடித்துக் கொள்ளை கொண்டவள்! கண்கள் மிக அழகு
என்பதால் அவளைக் கண்ணழகி என்றும் அழைத்தனர்! அப்படிப்பட்டவளை, இப்போது ஒரு
காப்பகத்தில் விடும் சூழல் ஏற்பட்டு, அவளை முந்தைய நாள் காப்பகத்தில் கொண்டுவிட்டு
வந்ததால் எற்பட்ட சோகம் தான் அது! பார்வதியின் கணவன் மகேந்திரனுக்கும் அதே உணர்வு
இருந்தது என்றாலும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை! ஏன் என்றால், இந்த முடிவே அவரது
அம்மாவிற்காகத்தானே!
வாரத்தில் ஒரு நாள் பார்வதியும், மகேந்திரனும்,
கண்ணம்மாவிற்குப் பிடித்த பொருட்களை வாங்கிக் கொண்டு, அவளைப் பார்த்து, அவளுடன்
சிறிது நேரம் இருந்துவிட்டு வரத் தொடங்கினர்.
ஆனால், அதற்கும் தடங்கல் வந்தது!........15 நாளுக்கு ஒருமுறை என்றானது! பின்னர் மாதத்திற்கு ஒரு முறை என்றானது!
இறுதியில் நின்றே போனது!
மாதங்கள் கரைந்தன! பார்வதி, கண்ணம்மாவின் பிரிவினால் மிகவும
வருந்தினாலும், கடமை பார்வதியை கட்டிப் போட்டது! ஆனால், கண்ணம்மாவின் ஏக்கம்
நாளுக்கு நாள் அதிகரித்தது!
தன் அறையின் வாயிலிலும், ஜன்னலிலும், எட்டி எட்டிப் பார்த்தும், வெளிப்புற
வாசலில் நின்று எட்டிப் பார்த்தும், அம்மா வர மாட்டார்களா, தன்னைத் திரும்பவும்
கொண்டு செல்ல மாட்டார்களா என்று ஏங்கிக் கிடந்தாள்! மற்றவர்களுடன் விளையாடத்
தோன்றவில்லை! அவர்களைப் பார்த்துக் கோபம்தான் வந்தது! சாப்பாடு குறைந்தது. தன்னைத்
தனிமைப் படுத்திக் கொண்டு, ஏக்கத்துடனும், சோர்வுடனும் படுத்திருக்கத் தொடங்கினாள்!
காப்பகத்தாருக்கும் அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியவில்லை! அவர்களுக்குத்தான் மாதா மாதம் பணம் வந்து
விடுகின்றதே மகேந்திரனிடமிருந்து!
ஒரு நாள் காப்பகத்திலிருந்து பார்வதிக்குப் ஃபோன்! கண்ணம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை, என்று! உடன்,
பார்வதியும் மகேந்திரனும் ஓடினார்கள்! மருத்துவரிடம்
கொண்டு சென்றார்கள். அங்கு கண்ணம்மாவை
அட்மிட் செய்தனர்! கண்ணம்மாவைப் பரிசோதித்து ட்ரீட்மென்டும் கொடுக்க முயற்சி செய்த
மருத்துவர், எந்த ட்ரீட்மென்டும் பயனில்லை என்றார். சிறுநீரகம் பழுதடைந்து
விட்டதாகவும், கணையமும் பாதிப்பு நிலையில் உள்ளதாகவும், இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும்
சொன்னார். கண்ணம்மாவைப், பார்வதி தன் மடியில் வைத்துக் கொண்டார்! ஏக்கத்துடன்
பார்வதியையும், மகேந்திரனையும் பார்த்தாள் கண்ணம்மா! அவளது அழகிய கண்கள் மிகவும்
சோர்ந்து போயிருந்தது! தன் கடைசி
நிமிடத்திலாவது அவர்கள் வந்தார்களே என்றும், தன் இறுதி நிமிடமாவது தன்னை வளர்த்த
தாயின் மடியில் இருக்கக் கிடைத்ததே என்றும் நினைத்திருக்கலாம்! நினைத்திருப்பாளோ?!
அப்படியே, கண்ணம்மா என்ற கண்ணழகி தன் அழகியக் கண்களைத் திறந்து வைத்தவாறே, இறுதி
மூச்சை விட்டாள்! இறுதி மூச்சை விடுவதற்கு முன், மிகவும் பிரயாசைப்பட்டுத், தன் வாலை சிறிது
அசைத்தாள் கண்ணம்மா என்ற அந்த அழ்கிய நாய்!! தன் வாலை அசைத்து, பார்வதிக்கும், மகேந்திரனுக்கும்,
தங்கள் இனத்திற்கே உரித்தான அந்த நன்றியை உரைத்திருப்பாளோ!!??
//அப்படியே, கண்ணம்மா என்ற கண்ணழகி தன் அழகியக் கண்களைத் திறந்து வைத்தவாறே, இறுதி மூச்சை விட்டாள்!//
பதிலளிநீக்குஇன்னாபா... இப்புடிக்கா சொல்லி படிக்கிறவங்க மூச்சல்ல நிறுத்திக்கினீங்க...?
//இறுதி மூச்சை விடுவதற்கு முன், மிகவும் பிரயாசைப்பட்டுத், தன் வாலை சிறிது அசைத்தாள் கண்ணம்மா என்ற அந்த அழ்கிய நாய்!!//
இத்த பாத்ததுக்கு அப்பால தாம்பா போன மூச்சு தியும்பி வந்துச்சி...
நல்லா வச்சிக்கினாய்ங்கபா டுஸ்ட்டு...
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
முடித்த விதம் வித்தியாசம் என்றாலும், அதுவும் ஒரு ஜீவன் தானே...
பதிலளிநீக்குஹஹஹா.. கொஞ்சமும் எதிர்பார்க்கல.. அருமை..
பதிலளிநீக்குமுடிவை , நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்! கண்ணழகி குழந்தையாகவே கண்முன்
பதிலளிநீக்குநிற்கிறாள்! சொல்லிப் போனவிதம் நன்று அருமை!
புலவர் ஐயா! தங்கள் கருத்தை யோசித்துப் பார்த்தோம்! முடிவை வேறு விதமாகக் கூட முடித்திருக்கலாம் தான்! பல முடிவுகள் தோன்றின!
நீக்குதங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா!
இது என்ன இப்படி எதிர்பார்க்காத திருப்பம். ஹா ஹா ஏப்ரல் பூலுக்காக எழுதினீர்களா என்ன.
பதிலளிநீக்குநன்றாகவே இருந்தது. எவ்வளவு ஆர்வமாக கனத்த இதயத்தோடு பக் பக் என்று இருந்தது வாசிக்க. மிக்க நன்றி சகோதரா ! தொடர வாழ்த்துக்கள்....!
வணக்கம்
பதிலளிநீக்குகதையின் ஆரம்பம் முதல் முடிவுவரை...நன்றாக உள்ளது.......
கற்பனை வளம் நன்று....வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
ரூபன்
திருமதி .அருணா செல்வம் இதே முடிச்சை வைத்து கதை எழுதி இருந்ததாக நினைவு,நீங்களும் இப்படி அசத்துவீர்கள் என்று எதிர்ப் பார்க்கவில்லை !
பதிலளிநீக்குத ம 5
ஆமாம்! ப்கவான் ஜி! திருமதி அருணா செல்வம் எழுதியதை வாசித்தோம்! அப்போதே கதை ஒருவிதம் ரெடியாகத்தான் இருந்தது! ஆனால், கொஞ்சம் எடிட்டிங்க் வேலை இருந்ததால் நேற்றுதான் முடித்து இட முடிந்தது!
நீக்குதங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!
நல்ல சஸ்பென்ஸ்!
பதிலளிநீக்குநல்ல உருக்கமாக சென்ற கதையில் இறுதி டிவிஸ்ட் எதிர்பாராதது! அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தையாரே! தங்கள்கருத்திற்கும், ஓட்டிற்கும்!
பதிலளிநீக்குநைனா அதுவும் பாவம்தானே நைனா ! ஒரு ஜீவன் தானே! மிக்க நன்றி நைனா! தங்கள் அழகிய கருத்திற்கு!
பதிலளிநீக்குஆஹா நல்ல கருத்து DD அவர்களே! மிக்க நன்றி!
பதிலளிநீக்குநன்றி ஆவி!
பதிலளிநீக்குஏப்ரல் ஃபூலுக்காக என்று இல்லா விட்டாலும் அன்றே எழுதியதுதான் ஆனால் ஒரு சில மாற்றங்கள் வேண்டியிருந்தது! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு! சகோதரி இனியா!
பதிலளிநீக்குவாங்க ரூபன் தம்பி! தங்களைக் கண்டு வெகு நாட்களாகி விட்டது! தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி!
பதிலளிநீக்குதங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி! காமக்கிழத்தன் நண்பரே!
பதிலளிநீக்குதளிர் சுரேஷ்! நண்பரே! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! அதுவும் ஒரு ஜீவன் தானே! எத்தனையோ பேர்கள் அவைகளையும் தங்களில் ஒருவராக குழந்தைகளைப் போலத்தன் வளர்க்கின்றார்கள்!
பதிலளிநீக்குஉருக்கமான கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இந்தக் கதை, சற்று அவசரத்தில் எழுதிய மாதிரி உள்ளதே!
பதிலளிநீக்குஓ! ஸார் அப்படித் தோன்றியதா? ஸார் சிறுகதை தானே இன்னும் சேர்த்தால் பெரிதாகி விடுமே! ஆனாலும் நீங்கள் கூறியதை கருத்தில் கொண்டுள்ளோம்! இனி அப்படி வராது பார்த்துக் கொள்கின்றோம்!
நீக்குநன்றி ஸார்!
கண்ணம்மா பாவம்!
பதிலளிநீக்குஒரு பெண் குழந்தை என்ற நினைப்புடனே படித்துவந்தால் கண்ணம்மா என்பது ஒரு பைரவி! :)
கதை கொண்டு சென்ற விதம் நன்றாக இருந்தது
பதிலளிநீக்குஉயிர் என்பது ஒன்றுதானே! வெளித்தோற்றதானே வேறு! அந்த ஜீவனும் பாவம்தான் நண்பரே தாங்கள் கூறியது போல! மிக்க நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்! தொடர்கிறோம்!
பதிலளிநீக்குபூமாதிரி ஒரு குழந்தை படத்தை காட்டிட்டு இப்படி பொங்கு பண்ணிடீன்களே friends!
பதிலளிநீக்குசரி சரி எப்டியும் அந்த பக்கம் வந்து தானே ஆகணும், அப்போ பார்த்துகிறேன்! ஆனாலும் பாவம் அந்த கண்ணழகி:((((
பூப்போல ஒரு குழந்தை படித்ததை போட்டு கடைசில வால் ஆட்டவச்சுடீன்களே !
பதிலளிநீக்குஎனக்கு ஆரம்பத்தில் இருந்து நாய் என்று சொல்லியிருந்தாலும் இதே மாதிரி தான் கஷ்டமா இருந்திருக்கும்! (ஏற்கனவே கமெண்ட் போட்டேன் , ஏன் காணலைன்னு தெரியலை:(( // )
உண்மையில் மிக சிறப்பான கதை.டுவிஸ்ட் வைத்தது சொன்னது அருமை. உண்மையில் குழந்தை என்றே நினைத்து விட்டேன். செல்லப் பிராணிகள் அன்புக்காக ஏங்குபவை .. எங்கள் வீட்டிலும் ஜூனோ என்ற நாயை வளர்த்து வந்தோம் எதிர் பாரா விதமாக அது இறந்துபோனது அதைப் பற்றிய கவிதை ஒன்றும் தொடர் பதிவும் எழுதி இருந்தேன்.
பதிலளிநீக்குஜூனோ! எங்கள் செல்லமே!
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!
திரு. செல்லப்பாவின் தளம் என்னை இங்கு அழைத்து வந்தது.சிறுகதை நன்றாக இருந்தது. கடைசிவரை பெண்குழந்தை என்று எண்ண வைக்கும் நோக்கத்திலேயே எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்கடைசியில் கொடுத்த ட்விஸ்ட் கொஞ்சம் ஆர்டிஃபிஷலாகப் பட்டது. பாலக் காட்டில் என்நண்பன் மதுவின் காருண்யா இல்லம் பற்றி எழுதி இருக்கிறேன் f( நினைவலைகள் தவறிய அல்ஜீமர் நோயாளிகளுக்கு )
பதிலளிநீக்குசகோதரி மைதிலி, இங்கள் இரு பின்னூட்டங்களும் இதோ! நேற்று தாமதமாகி விட்டது போட! மட்டுமல்ல, நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களும் பல தளங்களில் செல்லவே இல்லை! ப்ளாகர் பிரச்சினை செமையாக இருக்கின்றது!
பதிலளிநீக்குசும்ம ஒரு சஸ்பென்ஸ் வைக்கலாமே என்று நினைத்துதான் கொடுத்தோம்! என்றாலும் எல்லா உயிரும் உயிர்தானே! வெளித்தோற்றம் தான் வேறு அல்லது உயிர் ஒன்றுதானே! என்ன சொல்கின்றீர்கள் சகோதரி!? நன்றி!
முரளிதரன் நண்பரே! மிகவும் சந்தோஷமாக இருக்கிறது! கதையை ரசித்ததற்கு மட்டுமல்ல தாங்களும் எங்களைப் போல செல்லப் பிராணிகள் அன்புக்காக ஏங்குபவை என்பதைச் சொல்லியதற்கும், தங்களின் செல்லத்தைக் குறித்து சொல்லியதற்கும்! பாவம் ஜுனோ!
பதிலளிநீக்குஎங்க்ள் வீட்டிலும் செல்லங்கள் உள்ளன. கீசர் ஆண், கண்ணழகி, ப்ரௌனி என்று இரு பெண்கள்!
]மிக்க நன்றி!
ஐயா பால சுப்பிரமணியன் அவர்களுக்குத, தாங்கள் செல்லப்பா சாரின் தளத்தில் கண்டு, எங்கள் தளத்திற்கு வந்த உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
பதிலளிநீக்குஅந்தக் கடைசி ட்விஸ்ட் நிஜமாகவே நடந்ததால் அதை அப்படியே பதிந்தோம்! நாங்களும் தங்கள் தளத்தைத் தொடர்கின்றோம். எங்கள் மிகவும் நெருங்கிய உறவினரும் அல்ஜிமர் நோயால் பாதிக்கப்படு சமீபத்திலதான் இறந்தார். கண்டிப்பாகத் தங்கள் இடுகையை வாசிக்கிறோம்!
மிக்க நன்றி ஐயா!
அடக்கடவுளே..... அந்தப் பாட்டியைப் போலவே நீங்கயும் ஏமாற்றி விட்டீர்களே....
பதிலளிநீக்குஇங்கேயும் எனக்கு பல்பு தான் கிடைத்தது. ஙே..ஙே..ஙே..
நானும் சின்ன வயதிலிருந்து நாயுடன் தான் வளர்ந்தேன்.
எங்களின் நாய் பெயர் பொபி. ரொம்ப அழகாக இருக்கும்.
அன்பாகவும் இருக்கும். எனக்குத் திருமணம் முடிந்து நான் பிரான்ஸ் வந்ததும் கவலையில் இறந்து விட்டது.... ம்ம்ம்....
நாய் நன்றியுள்ள பிராணி என்பதைவிட
அன்புள்ள பிராணி என்பதே ரொம்ப பொருந்தும்.
பதிவு அருமை ஐயா.
சகோதரி அருணா செல்வம் வருக வருக! ஹா ஹா ஸோ, உங்களுக்கு 2 வது பல்புனு சொல்லுங்க! ஆஹா நீங்களும் எங்களைப் போலச் செல்லப் பிராணி வளர்த்துள்ளீர்கள்! ஆமாம், அவை நம்முடன் ஒட்டிப் பழகி விட்டால் நம் பிரிவைத் தாங்க முடியாமல் அவை ஏங்கி விடும்தான்! தாங்கள் சொன்னது சரிதான்.....நன்றி என்பதை விட அன்புள்ள என்பது மிகச் சரியே!
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி!
வணக்கம் சகோதரா இன்றுதான் தங்களின் தளத்தினில் பின்
பதிலளிநீக்குதொடரும் வாய்ப்புக் கிட்டியது மிக்க மகிழ்ச்சி .மனம் நெகிழ
வைத்த சிறப்பான கதைப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் .