திங்கள், 23 பிப்ரவரி, 2026

தலக்காடு - 12 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 5 - நிறைவுப் பகுதி

 தலக்காடு12345 , 6 , 7 , 8 , 9 , 10 , 11

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

கோயிலைச் சுற்றிச் சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே முன்பக்கம் வந்து கொண்டிருக்கிறோம் இல்லையா. இப்ப முன்பக்கத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். என்றாலும் நிறைய சிற்பங்கள்!

இப்பதிவில் கொஞ்சம் நிறையவே படங்கள் இருக்கலாம். காரணம், வேலை. இன்றோ நாளையோ வந்துவிடும். வந்துவிட்டால் வலைப்பக்கம் அதிகம் நேரம் செலவிட முடியாது என்பதால் மீதி இருக்கும் சிற்பங்களின் படங்களையும் போட்டு, கோயிலை ஒட்டி இருக்கும் வீரபத்ரேஸ்வரர் கோவிலின் படங்களையும் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததைச் சொல்லி மங்களம் பாடிடலாம் என்று....எவ்வளவு நாளா தலைக்காடை சுத்திட்டிருக்கோம் இல்ல?... சரி சிற்பங்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்...

மஹிஷாசுர மர்தினி ரம்ய கபர்தினி சைலசுதே? சிற்பம் என்று எனக்குத் தோன்றுகிறது

பிரம்மா 

https://www.youtube.com/watch?v=2NjWzUZSqfQ

பிரம்மா என்றதும் ஏதேனும் சினிமா பாடல் இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். அழகான பழைய தெலுங்கு பாடல் ஒன்று கிடைத்தது. அதன் சுட்டிதான் இது. ஆடியோ கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறேன். 

சூரியன் மற்றும் அவரது இரு மனைவிமார்களுடன்? என்று எனக்குத் தோன்றுகிறது....


அழகான பெண் சிற்பம். கூடவே சுற்றிலும் எவ்வளவு அழகான நுணுக்கமான டிசைன்கள் செதுக்கியிருக்காங்க!

சிவன் என்று தெரிகிறது ஆனால் என்ன மூர்த்தம் என்று தெரியவில்லை

 https://www.youtube.com/watch?v=jLQqWQW4S4s&t=40s

எப்படி இப்பூமி, அது தரும் பிராணவாயு, காற்று, நீர், இரவு பகல், உறக்கம், உணவு எல்லா உயிர்களுக்கும் சமமோ அது போன்று சமூக அந்தஸ்திலும் அனுபவங்களிலும் வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்து உயிர்களுக்குள்ளும், மனித உயிர் உட்பட இருக்கும் உண்மைப் பொருள் ஒன்றே, என்று சொல்லும் பாடல். நீங்களும் கேட்டுப் பாருங்க! எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்.  

விஷ்ணு துர்கையா? துர்கையா? 

யார் யாரைச் சுமந்திருக்கிறார்? இடுப்பில் இருப்பவரின் தலையைக் காணவில்லை. இல்லை ஃபோட்டோவுக்கு வெட்கப்பட்டுக் கொண்டு பின்பக்கம் மறைத்திருக்கிறாரா!!?

நண்பா! கருணைக்கடலே!

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி!

மனத்திற் சலன மில்லாமல்,

மதியில் இருளே தோன்றாமல்,

நினைக்கும் பொழுது நின்மவுன

நிலைவந் திடநீ செயல்வேண்டும்.

கனகுஞ் செல்வம், நூறுவயது:

இவையும் தரநீ கடவாயே 

(பாரதியின் விநாயகர் நாண்மணிமாலை)

மீண்டும் கண்ணப்ப நாயனார் வலப்புறம்

மார்கண்டேயர் இடப்புறம். 

மேலே இடப்புறம் உள்ள மார்கண்டேயர் சிற்பம் தனியாக

வீரபத்ரர் - 

(நன்றி கோமதிக்கா)

இதோ திருச்சுற்று முடியப் போகிறது.... 

முன்பக்கம் வருவதற்கு வலப்புறம் திரும்பும் முன் இடப்பக்க மூலையில்
 இப்படி ஒரு சன்னதி..சிவன்...

ஹப்பா ஒரு வழியாகச் சுற்றி முன்பக்கம் நுழைவுவாயிலுக்கு வந்துவிட்டோம் தெரிகிறதா? துவாரபாலகர் (முதல் பதிவில் போட்டிருந்தேன்) 

முன்பக்கம் வந்தும், அடடா! சுற்றி வரத் தொடங்கும் போது வலப்பக்கம் திரும்பி சைட் சுவர் மற்றும் சைடில் இருந்த நுழைவுவாயில் தூண்களில் சிலவற்றை எடுக்காமல் விட்டிருந்தவை தெரிந்ததும் உடனே க்ளிக்ஸ். ஏற்கனவே சைட் சுவர், மண்டபத் தூண்கள் படங்கள் பகிர்ந்துவிட்டேன். கோவிலை விட்டு வெளியில் வரும் முன் மீண்டும் வலப்புறம் சைட்சுவர் மற்றும் சைட் நுழைவு வாயில் தூண்களில் கடைசியில்  எடுத்த படங்கள் இதோ கீழே...

 

மன்மதன்?

கோயிலில் இருந்து வெளியில் வந்ததும், அதை ஒட்டி வீரபத்ரர்சுவாமி கோயில். 

வாசலில் நந்தி, உள்ளே செல்லும் முன் பகுதியில் பிள்ளையார். வேறு படங்கள் எடுக்கவில்லை. கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஜஸ்ட் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் நந்தி இருக்கும் படத்தில் படிக்கட்டுகள் தெரிகின்றன இல்லையா? இப்படிக்கட்டுகள் வழி ஏறி பார்க்கிங் பகுதிக்குச் செல்ல வேண்டும்.

அப்படிக்கட்டுகளின் வழி ஏறிச் சென்றால் கூடாரப் பாதை. கூடாரப் பாதை வழியாகச் செல்லும் போது வலப்பக்கம் இப்படி மரங்களும் மணல் மேடுமாக....

மணலில் கால்கள் புதைய ஒரு 10 நிமிடம் நடந்தால் நேராக முதலில் பார்த்த பாதாளீஸ்வரர் கோவிலின் முன் சென்றுவிடுவோம். அப்படியே இடப்பக்கம் திரும்பி வந்த வழியே மீண்டும் மணலில் நடை. (இப்படங்கள் எல்லாம் தலக்காடு பதிவுகளின் முதல் பகுதிகளில் பகிர்ந்துவிட்டேன்) பார்க்கிங் பகுதிக்குச் சென்றடைந்த போது மணி 4.45 ஆகியிருந்தது. வண்டியில் ஏறி நேராக வீடு நோக்கிப் பயணம். 

மத்தூர் செல்லும் வழியில் இந்த இரு படங்கள் மற்றும் கீழுள்ள ஒரு படத்தில் வயல்களில் தூரத்தில் வெள்ளையாகத் தெரிபவை கொக்குகள். ஓடும் வண்டியிலிருந்து எடுத்த காட்சிகள் 

 

வழியில் அப்பாவிற்கு எங்கேனும் சூடாகக் காஃபி வாங்கிக் கொடுக்கலாம் என்றால் எங்கும் சரியாக இல்லை.  நெல்லைக்கும், எனக்கும் மத்தூர் வடை எங்கேனும் சுவைக்க வேண்டும் என்று ஆசை. மத்தூர் வழிதானே செல்வோம் எனவே "மத்தூர் டிஃபனிஸ்" (Maddur Tiffinys. கிளைகள் பல இடங்களில் இருக்கின்றன.) உணவகத்தில் நன்றாக இருக்கும் என்று இணையத்தில் பார்த்திருந்தேன். ஸ்ரீதரும் அதையே சொல்ல, மத்தூர் சென்றதும் அந்த உணவகத்தில் நிறுத்தினார். நேரம் 6 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. 

உணவகத்தில் கூட்டம். பார்க்கிங் பகுதியிலிருந்து கொஞ்சம் நடக்க வேண்டும் என்பதால் அப்பாவை காரிலேயே இருக்க வைத்துவிட்டு நாங்கள் உள்ளே சென்று  எல்லோரும் Refresh செய்து கொண்டு, காஃபியும் மத்துர் வடையும் சாப்பிட்டுவிட்டு அப்பாவுக்கும் வாங்கிக் கொண்டு கொடுத்துவிட்டு பெங்களூர் நோக்கிப் பயணித்தோம். 

நெல்லையின் குடியிருப்பை அடைந்த போதே மணி 7.30. அவர் இறங்கிக் கொண்டார். நாங்கள் வீட்டை அடைய 8.45 ஆகிவிட்டது. மறுநாள் நம்மவர் அலுவலகம் செல்ல வேண்டுமே! அப்படியாக என் நெடுநாள் ஆசையான தலைக்காடு பார்த்துவிட்டு வந்தாயிற்று என்றாலும் தலக்காடு பஞ்ச்சலிங்கேஸ்வரர் கோயில்களில் 3 தானே பார்க்க முடிந்தது. இன்னும் இரு கோவில்கள் இருக்கின்றன! எப்போது போக முடியுமோ! I am waiting with my fingers crossed!

-----கீதா

50 கருத்துகள்:

  1. பார்க்க சின்னக் கோவிலாக இருக்கிறது.  எவ்வளவு கலைவெளிப்பாடுகள்...  ஒவ்வொரு கோவிலிலும் அந்தக் கால மன்னர்கள் தங்கள் உழைப்பைக் கொட்டி இருக்கிறார்கள்.  இனி வரும் காலங்களில் இதுபோல வரப்போவதில்லை என்று முன்கூட்டியே தெரியும் என்பது போல படைத்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசாத்தியமான கலைவேலைகள் ஸ்ரீராம். சோழர், விஜயநகர அரசு என்று கலைகள் கலந்து கட்டி.

      மன்னர்களின் ஆர்வம் ஒத்துழைப்பு, கலைஞர்களின் கைத்திறன் ஆர்வம் என்று ...நீங்க சொல்லியிருப்பது போல் எதிர்காலத்தில் இப்படி எல்லாம் கட்டுவாங்களான்னு தெரியலைன்னு படைத்திருக்கலாம்.

      இப்ப கூடச் சிற்பிகள் இருக்காங்க ஸ்ரீராம். சில கோவில்களில் பார்க்க முடிகிறது.

      கூடவே இங்கு மார்பிளில் செதுக்கப்பட்ட வேலைப்பாடுகளுடன் ஜெயின் கோவில்கள் இரண்டு அடுத்தடுத்து இருக்கின்றன வீட்டருகில். கலை அவ்வளவு அழகு. பராமரிப்பதும் சிரமம் தான் போலும். மார்பிளில் சிலைவடிவங்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்வதென்பது மிகவும் சவாலான காரியமாம்.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. மார்பிள் சிற்பங்கள் சிறப்பு என்றாலும் அதற்கான மெஷின்கள் நிறைய வந்துவிட்டது. உளியில் செய்திருப்பதுதான் மிகச் சிறப்பானது என்பது என் எண்ணம்.

      நீக்கு
    3. ஓ மார்பிள் சிற்பங்கள் மெஷினில் செய்றாங்களா இப்ப?

      உளியில் செதுக்குவது நிஜமாகவே சிறப்பானது நெல்லை.

      கீதா

      நீக்கு
  2. அழகிய கூந்தலைக் கொண்ட மலைமகள்...  ரம்யகவர்தினி சைலஸுதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்ப முதல் படம் சரிதான்னு சொல்றீங்க நான் சொல்லியிருப்பது!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. // பிரம்மா என்றதும் ஏதேனும் சினிமா பாடல் இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். //

    "பிரம்மா விஷ்ணு சதாசிவ...   ஹரஹரஹர மகாதேவா" என்கிற வரிகள் நினைவுக்கு வந்தன என்று நான் எழுதினாலும், என் புத்திக்கு பிரம்மா என்றதும் முதலில் இளையராஜாதான் நினைவுக்கு வந்தார். 

    நான் சொல்லி இருக்கும் பாடலின் முதல் வரி என்ன என்று நினைவில்லை.  இந்த வரி மட்டும் ராகத்துடன் மனதில் பாட வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரம்மா படமா? இளையராஜா பாடல்கள் எந்த பாடல், ஸ்ரீராம்?

      எனக்கும் ஏதேனும் இருக்கான்னு கொஞ்சம் தேடினேன் ஆனால் வசமாகச் சிக்கவில்லை நேரமும் இல்லை. கிடைத்த தெலுங்கு பாடலைச் சேர்த்தேன். அதைக் கேட்க முடிந்ததா? ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. நீங்கள் நினைப்பது போல படைப்புக் கடவுள் ப்ரம்மா பற்றி அல்ல படம் .  சத்யராஜ் - குஷ்பூ  படம்! 

      "எங்கிருந்தோ இளங்குயில்கள்,
      வருது வருது இளங்காற்று
      போன்ற பாடல்கள்...!!

      நீக்கு
    3. நீங்கள் நினைப்பது போல படைப்புக் கடவுள் ப்ரம்மா பற்றி அல்ல படம் . சத்யராஜ் - குஷ்பூ படம்! //

      ஹாஹாஹா....அது தெரியும் ஸ்ரீராம். நேற்று தேடும் போது கூட பிரம்மா படம்தான் முதலில் வந்துச்சு. படம் பார்த்தது இல்லைனாலும் அது சத்யராஜ் குஷ்பு படம் என்று தெரியும். பாடல்கள் கேட்டால் தெரிந்துவிடும் கேட்டிருக்கிறேனோ என்று. கேட்டுப் பார்க்கிறேன்.

      பிரம்மா படமா என்று நான் கேள்விக்குறி போட்டது எந்தப் பாடல் என்ற நினைப்பில்

      நீங்கள் கொடுத்திருப்பதைக் கேட்கிறேன்.

      கீதா

      நீக்கு
  4. அந்தச் சிற்பம் சூரியன் என்று எதனால் தோன்றியது?  எனி அடையாளம்?  எனக்கோ சூரியன் என்கிற வார்தையைக் கேட்டாலே பதினெட்டு வயது பாடலையும் மீறி அலர்ஜியாகிறது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரியனின் கையில் இருப்பவை, இணையத்தில் படங்களும் பார்த்தேன். கோமதி அக்காகிட்டயும் கேட்டுக் கொண்டேன், ஸ்ரீராம். சூரியன் 7 குதிரையில் இருப்பதும் உண்டு. இப்படி இரு மனைவிகளுடன் இருப்பதும் படத்தில் பார்த்ததால் சூரியன்னு எடுத்துக் கொண்டோம். இல்லைனா சிற்பியிடம் தான் கேட்க வேண்டும்!!!!!

      கீதா

      நீக்கு
    2. சூரியன்இரண்டு கைகளில் செண்டு என்கிற தாமரை பூ என்றும், கதிர்கள் என்றும் சொல்வார்கள். ஆடுதுறையில் இருக்கும் சூரியானார் கோயில் போய் இருக்கிறேன்.
      அவர் இந்த தோற்றத்தில் தான் இருப்பார். உஷா தேவி, சாயதேவி. மனைவியர்களுக்கும் கதை இருக்கிறது.

      நீக்கு
  5. அந்தச் சிற்பத்தில் அந்தப் பெண் உருவம் கையில் பிடித்திருப்பது கூந்தலா, வாலா?  நுனியைப் பார்த்ததும் வாலோ என்று சந்தேகம் வந்து விட்டது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....அது இடுப்பாடையிலிருந்து எடுத்து தலையை மூடிக் கொண்டு முட்டாகு போடுவது போல் உண்டே ஸ்ரீராம் அப்படித்தான் நான் நினைச்சேன்!!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. பிரம்மம் ஒக்கடே பாடல் கேட்டுக்கொண்டே சிறு நடனத்துடன் தொடர்ந்து பார்க்கிறேன். படிக்கிறேன்!! இளம் ராகுல் வெள்ளால்.  சூர்யா காயத்ரி!

    "அந்தராத்மா... அந்தராத்மா... தந்தனானா தந்தனானா..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் என்ன ஒரு வைப்ரேஷன் இல்லையா? எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்!!! அதுவும் இவங்க ரெண்டு பேரும் பாடும் போது துள்ளல்...நானும் நேற்று கேட்டுக் கொண்டே பதிவு செட் செய்தப்ப, அப்படியே சின்னதாக உடம்பு தலை எல்லாம் அசைத்துக் கொண்டே....

      கீதா

      நீக்கு
  7. // முன்பக்கம் வருவதற்கு வலப்புறம் திரும்பும் முன் இடப்பக்க மூலையில்//

    மடப்பள்ளியா?  அதெல்லாம் இருந்ததா அங்கே?!! 

    மன்மதனா?  கையில் பிடித்திருக்கும் வில் கரும்பு மாதிரி தெரியவில்லையே? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மடப்பள்ளி எல்லாம் எங்கே அதெல்லாம் இல்லை.....அதுக்கு அடுத்தாப்ல சன்னதி படம் போட்டிருக்கிறேனே அதுதான், ஸ்ரீராம்.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. மன்மதனா? கையில் பிடித்திருக்கும் வில் கரும்பு மாதிரி தெரியவில்லையே? //

      ஸ்ரீராம் இதுவும் நான் நெட்டில் போட்டுப் பார்த்து ஒரு சில படங்களில் மன்மதன் கரும்பை இப்படிப் போட்டிருந்ததால் மன்மதனோ என்று கேள்விக்குறியுடன் போட்டிருந்தேன். கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது அந்த நுனியில் கரும்புத் தோகை!! அது!

      கீதா

      நீக்கு
  8. // வேறு படங்கள் எடுக்கவில்லை. கொஞ்சம் தயக்கமாக இருந்தது. //

    ச்சே....    இப்படி படங்களே எடுக்காமல் வந்து விட்டீர்களே...!!!!!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா அது அந்த வீரபத்ரேஸ்வரர் கோயில் சின்னதாக இருக்கு. அந்தச் சின்ன இடத்தில் ஆட்களும்....பூசாரியும் எடுத்தால் கோச்சுக்குவாங்களோன்னு அங்கு கேமரா படம் சரியாகத் தெரியவில்லை ஆனால் பெருக்கல் போட்டு கன்னடத்தில் சின்னதாக இருந்தது சரி....கூடாதுன்னு நல்ல பிள்ளையாட்டம் உள்ளாற வைச்சுக்கிட்டேன், ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  9. எல்லவற்றையும் படம் எடுத்தீர்கள்.   ஸ்பெஷல் விருப்பமான மத்தூர் வடையை ஏன் படம் பிடிக்கவில்லை?  அந்த ஹோட்டலின் படமும் காணோமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ அதை ஏன் கேக்கறீங்க....படம் எடுக்க நினைத்து கடைசில அப்பாக்குக் கொண்டு கொடுக்கணுமே.....அதுவும் நாமேதான் வாங்கிக் கொண்டு வந்து உட்கார்ந்து சாப்பிடணும் ....என்று ஏதேதோ எண்ண ஓட்டத்தில் விட்டுவிட்டேன். நெல்லை எடுத்திருந்தார் என்று நினைக்கிறேன்.

      அவரை போடச் சொல்லலாம்.

      கீதா

      நீக்கு
    2. ஸ்‌ரீராம், நான் மத்தூர் வடை செய்து படம் எடுத்து உங்களுக்கு அனுப்பறேன். ஹிஹிஹி.....எல்லாமும் எடுத்தால் எபிக்கு அனுப்பறேன்!

      கீதா

      நீக்கு
  10. கடைசி பாராவை ஏன் அவ்வளவு ரகசியமாக சொல்லி இருக்கிறீர்கள்?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! இப்பதான் கவனிச்சேன் ஸ்ரீராம்!!! சிரித்துவிட்டேன்! இப்ப ஊருக்கே அறிவிச்சிட்டேன்!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. இனிய காலை வணக்கம். உங்கள் தயவில் தலக்காடு ஆலயங்களில் உள்ள சிற்பங்களைக் காண முடிந்தது. நம் இந்திய தேசம் எத்தனை எத்தனை அதிசயங்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது. பார்க்கவும் ரசிக்கவும் இந்த ஒரு ஜனனம் போதாது...

    நானும் கடைசி பயணம் சென்று வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வந்த வண்ணம் இருக்கிறது. பார்க்கலாம் எப்போது பயணிக்க முடிகிறது என!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசியாகப் பயணம் செய்து..... தட்டச்சுத் தவறு விபரீதமாக இருக்கிறது.

      நீக்கு
    2. நன்றி வெங்கட்ஜி.

      நம் தேசத்தில் பழமையின் ரகசியங்களும் இயற்கையின் ரகசியங்களும் புதைந்து கிடக்கின்றன. உலகம் முழுவதுமே என்றும் சொல்லலாம்.
      எனக்கு மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் இமயமலைப்பக்கம் நிறைய போக வேண்டும் என்ற ஆசை ரொம்பவே இருக்கிறது குறிப்பாக இமயமலை......இன்னும் பிற இடங்களும் நிறைய லிஸ்டில் இருக்கின்றன கடல் பக்கங்கள்..... ஆனால் வாய்ப்புகள் மிகவும் கம்மி என்று தெரிந்தாலும் ஆசை எழுவது மட்டும் அடங்கவே இல்லை.

      நானும் கடைசியாகப் பயணம் செய்தது தலக்காடுதான். ஒரு வருடம் ஆகிறது இந்த மார்ச்சில்...

      //பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வந்த வண்ணம் இருக்கிறது. பார்க்கலாம் எப்போது பயணிக்க முடிகிறது என!//

      கண்டிப்பாக நிறைவேறும் வெங்கட்ஜி!

      மிக்க நன்றி வெங்கட்ஜி!

      கீதா

      நீக்கு
  12. இன்றைய படங்கள் பகிர்வு மிக அருமை.

    பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் மனதில் உதிக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. இந்த மாதிரி பயணங்களில் நேரம் அதிகமாகிவிடுகிறது.

    மத்தூர் வடை மனைவிக்குப் பிடிக்கலை. ஒரே எண்ணெய் என்றாள். நல்லவேளை உடைந்த வடைகள் அரைக்கிலோ வாங்குவோமா என்று யோசித்து வாங்காமல் இருந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், சில சமயங்களில் நேரம் அதிகமாகத்தான் செய்யும் நெல்லை. இடங்கள் பார்க்க வேண்டும் என்றால் சில கூட்டல் கழித்தல்கள் இருக்கும் தான். கூடியவரை நேரத்தை மேனேஜ் செய்யணும்தான்...

      எண்ணை இருந்ததுதான். நாம் வீட்டில் செய்தாலும் கொஞ்சம் எண்ணை குடிக்கும் தான் நெல்லை. ஆனால் கூடியவரை அதிகமில்லாமல் செய்யலாம். வீட்டில் நன்றாகவே வருகிறது நான் வெங்காயம் தாராளமாகப் போட்டுவிடுவேன்!!

      ஆமாம் சொன்னீங்க அவங்களுக்குப் பிடிக்கலைன்னு. முதல்ல உடைந்தஹு வாங்கலாமான்னு யோசிச்சீங்க. வாங்காதது நல்லதுதான் நெல்லை. நிறைய வாங்கினால் அலுப்பு வந்துவிடும்.

      வடை நல்லாதான் இருந்தது.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  14. விஷ்ணு துர்கை என்றால் பெண் தெய்வம், கையில் சங்கு சக்கரம் இருக்கணும். அந்தச் சிற்பத்தில் இல்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்ப அது பெண் தெய்வம் இல்லையோ? நான் நினைத்தேன் வலக்கையில் சூலம், இடக்கையில் சக்கரம் இருக்கு என்று!!!! அப்படித்தான் கண்ணில் படுது.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  15. அனைத்து படங்களும் அழகு.

    அயிகிரி நந்தினி நந்தித மேதினி அவர் அம்மன் இல்லை வீர பத்திர சாமி,மீசை இருக்கிறது பாருங்கள். இடப்புரத்தில் ஆட்டு தலையோடு இருப்பவர் தக்ஷன்
    தக்ஷன் சிவபெருமானை அழைக்காமல் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர் பாகம் கொடுக்காமல் யாகம் செய்த போது

    வீரபத்திரரும் ,காளியும் தக்ஷனையும் அவன் கூட்டத்தாரையும் அழித்ததாயும் கூறுகின்றனர். தக்ஷன் சாகாவரம் பெற்றிருந்ததால் அவன் தலையை வெட்டி அதற்குப் பதிலாக ஆட்டுத் தலையை வைத்ததாகவும் கூறுவார்கள்.
    அந்த கதையை விளக்கும் சிற்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியா கோமதிக்கா மாற்றிவிட்டேன். ஆட்டுத் தலை ஓ அந்தக் கதையா...நான் முதல் படத்தை இது இன்னும் விளக்கமாக இருக்கிறது என்று நினைத்துப் போட்டுவிட்டேன் அப்படினா முதல் படமும் வீரபத்ரரோ? அல்லது காளியா? அப்படி இருக்குமோ?

      சில சிற்பங்கள் சரியாகப் புரியலை கோமதிக்கா.

      நன்றி கோமதிக்கா படத்தின் கீழும் மாற்றிவிட்டேன்.

      கீதா

      நீக்கு
  16. //யார் யாரைச் சுமந்திருக்கிறார்? இடுப்பில் இருப்பவரின் தலையைக் காணவில்லை. இல்லை ஃபோட்டோவுக்கு வெட்கப்பட்டுக் கொண்டு பின்பக்கம் மறைத்திருக்கிறாரா!!?//
    ஒருவரே தான் கீதா, எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது உடம்பை வளைத்து தலை முன் பக்கம் கொண்டு வந்து இருக்கிறார்.
    துவாரபாலகர் போன்ற தோற்றம் ஒரு காலை கதையின் மேல் வைத்து இருக்கிறார், ஒரு கால் கீழே ஊன்றி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியாக்கா...ஆனால் படத்தைப் பெரிதாக்கிப் பார்த்த போது நடுவில் ஒரு கால் தரையில் அதாவது நிற்பவரின் கால் நடுவில் இருப்பது தெரிகிறது. சைடில் அது மற்றொருவரின் பிட்டம் போல் தெரிந்தது முதுகு....நிற்பவைன் கைகள் மற்றொருவர் அணைத்திருக்கும் கைகளின் மேல் இருப்பதும் தெரிகிறது என்பதால் அப்படிச் சொல்லியிருந்தேன் அக்கா.

      நிற்பவர் காவல் வீரர் போன்றுதான் தெரிகிறார்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  17. கருணை கடல் பிள்ளையாருக்கு பாரதியின் விநாயகர் நாண்மணிமாலை பகிர்வு அருமை.

    வாசலில் நந்தி, உள்ளே செல்லும் முன் பகுதியில் பிள்ளையார். படத்தில் பிள்ளையார் இருக்கும் பகுதி புதுபிக்கப்பட்ட்டு இருக்கிறது. சுவர், தரை பகுதி எல்லாம் பார்த்தால் தெரிகிறது பழமை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா அது கோயிலை ஒட்டி அடுத்தாப்ல இருக்கும் வீரபத்திரர் சுவாமி கோயில். அங்கு உள்ளில் படங்கள் எடுக்கவில்லை. அதனால் வேறு படங்கள் இல்லை. இந்த வீரபத்திரர் கோயிலும் வெளித்தோற்றமும் எடுக்கலை இதுவும் பஞ்சஷேத்திரத் தொகுப்பில் வந்துவிடுகிறதாம் அடுத்தால்ப்ல இருப்பதால்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  18. நந்திக்கு முன் சிவலிங்கம் இருந்து இருக்கிரது அதௌ உடைந்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் உடைந்திருக்கிறது. அது இனிதான் சிராமைப்பாங்களா இருக்கலாம். இது வைத்தீஸ்வரர் கோவிலில் அல்ல அதன் அருகில் இருக்கும் வீரபத்திர சுவாமி கோவிலில்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  19. //முன்பக்கம் வருவதற்கு வலப்புறம் திரும்பும் முன் இடப்பக்க மூலையில்//

    அந்த படம் அருமை.

    //இப்படி ஒரு சன்னதி..சிவன்..//

    அவர் வேறு தோற்றம் தருகிறார் விளங்க வில்லை.

    மரங்களும் மணல் மேடுகளும் ஆள் அரவம் அற்ற பிரதேசமாக காட்டுகிறது.
    தனியாக போக கொஞ்சம் பயமாக இருக்கும் போல
    கூட்டமாக போனால் நன்றாக இருக்கும் போல தோற்றம் அளிக்கிறது.

    ஓடும் வண்டியிலிருந்து எடுத்த படங்களும் நன்றாக இருக்கிறது.
    நிறைவு பகுதியில் தூண் சிற்பங்கள் எல்லாம் கதைகள் சொல்கிறது.
    வில், அம்பு வைத்து கொண்டு சிற்பங்கள் அழகு.

    சிவபெருமான் பல தோற்றங்களில் இருக்கிறார்,
    கரும்பு வில்லுடன் மன்மதன் தான்.
    அனைத்தும் அருமை. கடைசி தூணில் நிறைய கதை சொல்லும் சிற்பம் இருக்கிறது.
    நன்கு தரிசனம் செய்து விட்டேன். நன்றி கீதா.
    மதூர்வடை பற்றி ஒன்று சொல்லவில்லையே! ருசியாக மொறு மொறு என்று இருந்ததா?

    மத்தூர் ஊரில் தயார் செய்ய பட்டும் சுவையான வடை இல்லையா நான் செய்து இருக்கிறேன் முன்பு.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வைத்தியேஸ்வரா கோவிலின் சிற்பங்களின் படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. எப்போதும் போல உங்கள் திறமையுடன் எடுத்த படங்கள் ஒவ்வொன்றையும் பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன்.

    "பிரம்மம் ஒகட்டே" குழந்தைகள் ராகுல், மற்றும் சூரிய காயத்ரி பாடிய பாடலை அடிக்கடி கேட்டுள்ளேன்.அழகாக பாடுவார்கள். பிரம்மா படத்திற்கு ஏற்ற பாடல். விநாயகர் எங்கிருந்தாலும் அழகும், அமைதியுந்தான். மனதாற தரிசித்துக் கொண்டேன்.

    மகிஷாசுரனை வதம் செய்த அன்னை, ஆடல்மங்கை, கண்ணப்ப நாயனார் (இதை தட்டச்சு செய்யும் போது கவனம் கவனம் என்றது என் கை விரல்கள். :)) ஆனால், அது வெளியே வரும் போது கவனத்துடன் வருகிறதோ என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ) மார்கண்டேயன், மன்மதன், நந்தி என அனைத்துச் சிற்பங்களும் மிக அழகாக இருக்கிறது.

    ஒவ்வொரு தடவையும், ஹொய்சாளர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்களின் கலை யார்வத்தை கண்டு கண்டு வியக்கிறேன். இத்தகைய சிற்பங்களை காணும் போதில், அந்த காலத்து சிறந்த மன்னர்கள், அக்காலத்திய சிறந்த சிற்பிகள் என்ன தவம் செய்தார்களோ இவ்விதம் கலைப்படைப்புகளை படைப்பதற்கு என மனதுக்குள் ஒரு மகிழ்வான எண்ணம் வருகிறது. எல்லா சிற்பங்களும் அவ்வளவு அழகாக இருக்கிறது.

    வீரபத்ர கோவில் படங்களும் அருமை. நந்தியை தரிசித்துக் கொண்டேன். நாங்களும் மதூர் தாண்டி வரும் போது மதூர் டிபனை மிஸ் செய்வதில்லை. அங்கு மதூர் வடை நன்றாக இருக்கும். பீதரில் தட்டை இட்லி. பயணங்களின் போதுதான் இவை கிடைக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலாக்கா.

      அக்குழந்தைகள் இப்ப வளர்ந்து மிக நன்றாகப் பாடுகிறார்கள். ஸ்பூர்த்தி ராவ், சூரிய காயத்ரி, ராகுல் எல்லாரும் சேர்ந்தும் பாடுகிறார்கள்.

      (இதை தட்டச்சு செய்யும் போது கவனம் கவனம் என்றது என் கை விரல்கள். //

      ஹாஹாஹா சரியாகவே வந்திருக்கு கமலாக்கா..

      சிற்பங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி கமலாக்கா

      நிஜமாகவே எல்லோரும் சேர்ந்து ஒத்துழைத்ததில்தான் மிகப் பெரிய கலைஅம்சங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

      மத்தூர் டிஃபனிஸில் சாப்பிட்டதில்லை கமலாக்கா. அன்று மட்டுமே வடை சாப்பிட்டோம். அதற்கு முன்னர் போனப்ப கூட பேருந்தில் போனதால் அங்கு செல்லவில்லை.

      //பீதரில் தட்டை இட்லி. பயணங்களின் போதுதான் இவை கிடைக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      ஓ அப்படியா? பீதர்னு உணவகம் இருக்கிறதா அங்கு?

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  21. அவர் வேறு தோற்றம் தருகிறார் விளங்க வில்லை.//

    ஆமாம். உடுக்கை இருக்கிறது மேல் இடக்கையில். அமர்ந்திருக்கும் விதம் என்று சிவன் என்று தோன்றியது.

    //ஓடும் வண்டியிலிருந்து எடுத்த படங்களும் நன்றாக இருக்கிறது.
    நிறைவு பகுதியில் தூண் சிற்பங்கள் எல்லாம் கதைகள் சொல்கிறது.
    வில், அம்பு வைத்து கொண்டு சிற்பங்கள் அழகு.//

    நன்றி கோமதிக்கா. சிற்பங்களிலிருந்தும் தெரிந்து கொள்ள ஆசையில் கூர்ந்து கவனிப்பது வழக்கம் அதில் பண்டைய வாழ்வியல், கதைகள் என்று புரிந்து கொள்ள முயற்சிதான் அக்கா. ஆனால் அது எல்லா இடங்களிலும் முடிவதில்லை. அதுவும் கூட இருப்பவர்களும் நம்முடன் ஒத்த சிந்தனையும் ஆர்வமும், பொறுமையும் உள்ளவர்களாக இருந்தால் நல்லாருக்கும்.

    //சிவபெருமான் பல தோற்றங்களில் இருக்கிறார்,//

    ஆமாம் அக்கா.

    //கரும்பு வில்லுடன் மன்மதன் தான்.//

    ஹப்பா சரியாகச் சொல்லியிருக்கிறேன். நன்றி கோமதிக்கா.

    //நன்கு தரிசனம் செய்து விட்டேன். நன்றி கீதா.//

    நன்றி கோமதிக்கா. உங்களுக்கும் ஆர்வம் உண்டு என்று தெரியும்.

    //மதூர்வடை பற்றி ஒன்று சொல்லவில்லையே! ருசியாக மொறு மொறு என்று இருந்ததா?//

    சுவை நன்றாக இருந்தது மொறு மொறு என்று உள்ளே மென்மையாக....ஆனால் கொஞ்சம் எண்ணையாக இருந்தது. சொல்லாமல் விட்டுவிட்டேன் இல்லையா...நன்றி கோமதிக்கா

    ஆமாம் மத்தூர் வடை அங்குதன இது முதலில் செய்யப்பட்டதாம் அதனால் ரொம்ப ஃபேமஸ்! நீங்களும் முன்பு செய்திருப்பது மகிழ்ச்சிக்கா..

    மிக்க நன்றி கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு

  22. "பிரம்மம் ஒகட்டே" பாடல் கேட்டேன் எனக்கும் பிடிக்கும் இந்த பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிக்கா. ஆமாம் துள்ளலுடன் இருக்கும் பாடல் இல்லையா...உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் மகிழ்ச்சிக்கா.

      கீதா

      நீக்கு