தலக்காடு- 1, 2, 3, 4, 5 , 6 , 7 , 8
கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த பதிவில் கோவிலின் பின்பக்கம் பார்த்தவை படங்களுடன் என்று முடித்திருந்தேன். கோயிலைச் சுற்றி வரும் போது பின் பகுதியில் சிவலிங்க சன்னதி
இறைவன் லிங்க வடிவில் தெரிகிறாரா? வாயிலில் துவாரபாலகர்கள் சிற்பங்கள்.
மேலே கஜலக்ஷ்மி இருப்பது வித்தியாசமாக இருக்கிறது
அந்த சன்னதி மண்டபத்தின் தூண்கள்
மார்கண்டேயர் புராணம் சொல்லும் சிற்பம். (நன்றி கோமதிக்கா. கோமதிக்காவிடம் கேட்டுக் கொண்டேன்)
ஞானமே உருவான ஆஞ்சநேயனும்
காலன் வரும்முன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுன் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்து
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானை நினை - (பட்டினத்தார்)
ஜல் ஜல் ஜல் எனச்
சதங்கைகள் ஒலித்திட
கொல் கொல் கொல் எனத்
தலைகளை மிதித்திட
நஞ்சுடை காளியன் நலிந்து
மடிந்திட
செஞ்சடையனைப் போல்
களிநடம் புரிந்திட!
(நன்றி கவிநயாம்மா)
அங்கம்
தழைக்க அருளும் பரனே!
அடியார்க்கு
பிச்சையளிக்கும் இறைவனே!
தங்கும்
பிக்ஷாடன மூர்த்தி போற்றி!
தருணமிதே
அருள்புரிய வாராய்!
(திருமூலர் மந்திரம்)
பொய்ந் நின்ற ஞானமும், பொல்லா
ஒழுக்கும், அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறவாமை உயிர் அளிப்பான்,
எந் நின்ற யோனியுமாய், பிறந்தாய்! இமையோர் தலைவா!
மெய் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும்
விண்ணப்பமே.
(நம்மாழ்வார் பாடல்)
அன்று ஞாலம் அளந்த பிரான்* பரன்
சென்றுசேர் திருவேங்கடமாமலை*
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.
(நம்மாழ்வார் பாடல்)
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
(அபிராமி அந்தாதி)
கூவி
அழைத்தால் குரல் கொடுப்பான் - பரம்
குன்றம்
ஏறி நின்று குமரா என்று
கூவி
அழைத்தால் குரல் கொடுப்பான்
(கவிஞர்
வாலி)
இன்னும் அடுத்த பகுதியில் தொடரும்...
----கீதா
























அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
பதிலளிநீக்குசிற்பங்கள் அனைத்தும் அழகு. தேர்ந்தெடுத்து சேர்த்த வரிகள் சிறப்பு.
தொடரட்டும் பதிவுகள்....
மிக்க நன்றி வெங்கட்ஜி. கருத்திற்கு
நீக்குகீதா
சின்ன சன்னதி என்பதால் துவாரபாலகர்களை சிலையாக வடிக்காமல் சிற்பமாக வைத்து விட்டார்கள் போல. கொஞ்சம் பிரைட்னெஸ் கூட்டி இருந்தால் லிங்க வடிவம் சட்டென கண்ணுக்கு புலப்பட்டிருக்கும்.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் சின்னதாகச் சிற்பத்தில்......ஃபுல் ஃப்ரைட்னெஸ் வைத்திருந்தேனே மொபைலில். ஃப்ளாஷ் போட்டால் அது ஃப்ளாஷை அடிக்கவில்லை. வெளியில் வெளிச்சம் இருந்ததாலோ என்னவோ.
நீக்குநன்றி ஸ்ரீராம்
மிச்ச கருத்துகளுக்குப் பின்னர் வருகிறேன். இன்னும் இரு வாரங்களுக்கு கொஞ்சம் பிஸி.
கீதா
பொதுவாகவே தூண்களில் சிற்பங்களை பார்த்துக் கொண்டு லேசாக ரசித்துவிட்டு கடந்து விடுவேன். இவ்வளவு நின்று photo எடுப்பதில்லை! நீங்களும், நெல்லையும் வித்தியாசம்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம். எனக்குப் புகைப்படக் கலை, ஊர் சுற்றுவது ரொம்பப் பிடிக்குமா...அதனால்...இதற்கு முன்னர், ஆந்திராப் பக்கம் குண்டூர் பக்கம் வட்லமுடியில் இருந்தப்ப, அங்கு அமராவதிக்குப் போனோம், ஊண்டவல்லி குகைகள்....சமண குகை அது கூடவே அமராவதியில் புத்தர் பற்றிய ஒரு புத்த ஸ்தூபி, கலைக்கூடம் அங்கிருந்தவற்றைப் புகைப்படம் எல்லாம் எடுத்து....அப்பவும் நிறைய படங்கள் எடுத்திருந்தேன் ஓட்டைக்கேமராவில்.
நீக்குபகிர்ந்திருந்தேன் பதிவாக.
நம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா என்னை அழைத்துப் பேசினார். ஆராய்ச்சிக்கட்டுரை போல அழகா எழுதியிருக்கீங்க என்றதும் எனக்கு ஆச்சரியம். உண்மையாகவா என்று கேட்டதற்கு, ஆமாம் என்று பாராட்டினார். ஆராய்ச்சிக் கட்டுரையேதான் என்று.
கீதா
விஜயநகர கலை என்று இடுப்பில் கைவைத்து வளைந்து நிற்கும் நளின சிற்பம் ரசிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குஆமாம் நளினமாக அழகாக இருக்கு இல்லையா அந்தச் சிற்பம்? அந்த மண்டபத்தில் இருக்கும் சிற்பங்களில் எல்லாம், விஜயநகரக் கலையும் கலந்திருக்காம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்டேட் பண்ணிருப்பாங்க என்று தகவலில் தெரிகிறது, ஸ்ரீராம்
நீக்குகீதா
ஆமாம். பார்க்கும்போதே அது மார்க்கண்டேயன் கதை என்று தெரிகிறது. இரண்டு வித்தியாச நந்தி வடிவங்கள் தெரிகிறதுதான்.
பதிலளிநீக்குஇரண்டு நந்திகளும் வித்தியாசமாக....அதான் ஒவ்வொரு ஆட்சியின் போதும் அவரவர் கலையில் வடித்திருக்கலாம்.
நீக்குகீதா
பொருத்தமான இடங்களில் பொருத்தமான பாடல்களை புகுத்தி இருப்பது சிறப்பு. குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன் பாடல் பள்ளிநாளைய மனப்பாடப் பகுதி!
பதிலளிநீக்குநன்றி நன்றி ஸ்ரீராம்.
நீக்குஆமாம் குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்....அது நினைவுக்கு வந்ததால் அதைபு புகுத்திவிட்டேன்!
கீதா
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் வரி படித்ததும் பக்தியை விட்டு மனம் விலகி யேசுதாஸ் குரலுக்கு ஓடிவிட்டது. ரவீந்தர் மாஸ்டர் இசையில் வரும் பாடல் நினைவுக்கு வந்து.. ஓடோ சென்று கேட்கப்போகிறேனே...
பதிலளிநீக்குஅது என்ன பாடல்? கேட்க வேண்டுமே. தாஸேட்டன் ரவீந்தரன் மாஸ்டர் இசையில் நிறைய பாடியிருக்கிறார்.
நீக்குகேட்டீங்களஆ? நீங்க என்ன பாடல் கேட்டீங்கன்னு சொல்லுங்க!!
கீதா
அனைத்தும் அருமை கீதா.
பதிலளிநீக்குதூண் சிற்பங்களுக்கு ஏற்ற பாடல்களை தேர்வு செய்து பதிவு செய்து இருப்பது சிறப்பு.
இன்று தைப்பூசத்திருவிழாவிற்கு கடைசியில் வேல் முருகன் வந்து விட்டார்.
நன்றி கோமதிக்கா. ஆமாம் அது எனக்கே தெரியாமல் நடந்த ஒன்று அக்கா. இன்று தைப்பூசம் என்று காலையில் தெரிந்தது.
நீக்குமுதலில் அதற்கு முன்னர் வரை நிறுத்தியிருந்தேன் சரி முருகனையும் போட்டுவிடுவோம் என்று பாடல் நினைவுக்கு வந்ததும் அதையும் சேர்த்துவிட்டேன்!
கீதா
//இறைவன் லிங்க வடிவில் தெரிகிறாரா?//
பதிலளிநீக்குதெரிகிறார்
//வாயிலில் துவாரபாலகர்கள் சிற்பங்கள். மேலே கஜலக்ஷ்மி இருப்பது வித்தியாசமாக இருக்கிறது//
தமிழ் நாட்டில் நிறைய கோயில்களில் இப்படி இருக்கும் கீதா.
மண்டப தூண்கள் எல்லாம் கதை சொல்கின்றன.
சிவகணம் அழகு.
உங்களுக்குத் தெரிகிறாரா, ஆ!!! நல்லதாச்சு.
நீக்கு//தமிழ் நாட்டில் நிறைய கோயில்களில் இப்படி இருக்கும் கீதா.//
ஓ அப்படியா? இனி செல்ல நேர்ன்தால் பார்க்கிறேன் கோமதிக்கா.
//மண்டப தூண்கள் எல்லாம் கதை சொல்கின்றன.
சிவகணம் அழகு.//
ஆமாம் அக்கா. இன்னும் இருக்கின்றன. நேரம் தான் பார்க்க வேண்டும் பகிர்வதற்கு
நன்றி கோமதிக்கா
கீதா
கோயிலின் கருவறையின் பின் பகுதி மிக அழகு
பதிலளிநீக்குபார்த்ததுமே தெரிந்துவிடும் அனுமன் படத்தில் அவர் கையில் ஒரு முகம் இருப்பது போல தெரிகிரதே! சிவனை பூஜை செய்கிறாரா?
இரண்டு நந்திகளும் வித்தியாசமாக அழகாய் இருக்கிறது.
விஜயநகரக் கலை நன்றாக இருக்கிறது.
//கோயிலின் கருவறையின் பின் பகுதி மிக அழகு//
நீக்குஅப்பகுதி ரொம்ப அழகான வடிவம். அடுத்த பதிவில் கருவறையின் இடப்பக்கம் உள்ள பகுதி வரும்.
மண்டபத்தில் பெரும்பாலும் விஜயநகரக் கலைச் சிற்பங்களும் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. நுணுக்கமாகத் தெரிந்தவர்களுக்கு எந்தச் சிற்பம் என்பதை எல்லாம் சொல்லத் தெரியுமாக இருக்கும். நான் தகவல்களின் படி சொல்கிறேன், ஆனால் கூர்ந்து பார்த்தால் நிறைய வித்தியாசங்கள் தெரிகிறது சோழர்கலை, விஜயநகரக்கலை, ஹொய்சாளர் கலை என்று...
நன்றி கோமதிக்கா
கீதா
ஏகப்பட்ட படங்கள், இடையே பக்தி பாடல்கள் என்று சிறப்புற அமைத்தாலும் வழக்கமாக வருபவர் தவிர வேறு யாரும் வராததால் ஹிட்ஸ் கிடைக்கவில்லை. அப்படி வருபவர்களும் கருத்துக்கள் கூறாமல் செல்வதாலும் கருத்துக்கள் எண்ணிக்கையும் குறைகிறது. ஹூம். என்ன வைத்தியம் செய்ய வேண்டும்?
பதிலளிநீக்குJayakumar
ஹாஹாஹா ஜெ கே அண்ணா...எனக்கெல்லாம் ஹிட்ஸ் கிடைப்பது ரொம்ப சிரமம். வருபவர்களே குறைவுதானே. என்ன வைத்தியம்? தெய்யவில்லை. ஆனால் செய்தாலும் வருவோர் தான் வருவாங்க. புதுசா யாரும் வரப் போவதில்லை.
நீக்குபரவால்லை...போறபடி போகட்டும். சொல்லப் போனால், நான் பிரேக் போட்டுவிடலாம் அல்லது முற்றுப் புள்ளியே வைத்துவிடலாம் என்றும் நினைத்தேன்.
நன்றி ஜெ கே அண்ணா.
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. டங்கள் எப்போதும் போல அருமை. மூலவர் சிவலிங்க தரிசனம் நன்றாக கிடைத்தது.
கோவிலின் அழகான
தூண்களுக்கு உறுதுணையாக நல்ல பாடல்களைக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் அழகை மிகவும் ரசித்தேன். தூண்களில் அழகான சிற்பங்களை ரசித்தேன்.
மார்க்கண்டேயனை காத்தருளும் சிவன், ஆஞ்சனேயர், நந்திகேஷ்வரர், அழகான பெண் சிற்பம், பிச்ஷாடனர், யாளி வடிவ சிற்பங்கள், அம்பாள், சிவகணங்கள், கோவர்த்தனகிரி நாராயணர், குன்றம் அமர்ந்த குமரன் என அத்தனையும் நன்றாக உள்ளது. பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன்.
உங்கள் பதிவை படிக்கையில் இககோவில்களுக்கு செல்லும் ஆர்வம் அதிகமாக எழுகிறது. "அவன்தான் " என் ஆவலை உணர்ந்து அழைக்க வேண்டும். பார்ப்போம். அடுத்தப்பதிவையும் காணவும் ஆவலோடிருக்கிறேன். இந்த தடவையும் அனைத்துப் பதிவுகளுக்கு வர தாமதமாகி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா அது மூலவர் இல்லை. சுற்றுப்பிராகாரத்தில் இருக்கும் சன்னதி மண்டபம் அங்கு எல்லாமே சிவலிங்கம்தான்.
நீக்கு//தூண்களுக்கு உறுதுணையாக நல்ல பாடல்களைக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் அழகை மிகவும் ரசித்தேன். தூண்களில் அழகான சிற்பங்களை ரசித்தேன்.//
சிற்பங்களை ரசித்ததற்கு நன்றி கமலாக்கா.
கண்டிப்பாக உங்களுக்கும் வாய்ப்பு கிட்டும். பரவால்ல கமலாக்கா எப்ப முடியுதோ அப்ப வாங்க.
அடுத்த பதிவு போட வேண்டும். இப்ப கொஞ்சம் பிஸி. முடியுமா என்று பார்க்கிறேன்
நன்றி கமலாக்கா.
கீதா
அடப்பாவிகளா... சிற்பப் படம் போட்டு அது என்ன என்று எழுதுவாங்கன்னு பார்த்தால், பாசுரங்கள், கவிதைகளில் இறங்கிட்டாங்களே... அநியாயமா இருக்கே இது.
பதிலளிநீக்குஹாஹாஹா நெல்லை, அதுவும் எழுத நினைத்து நேரம் இல்லாமால் விட்டுவிட்டேன். இன்னும் இரு பதிவுக்கான படங்கள் இருக்கு. இப்ப வேலை முடிந்துதான் செய்ய வேண்டும்.
நீக்குநன்றி நெல்லை
கீதா
பல சிற்பங்கள் (உங்க படங்களில்) சுமார். அதெல்லாம் அவசர அவசரமாகச் செதுக்கப்பட்டவை.
பதிலளிநீக்குசில மிக அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்.
சிவலிங்கத்தை க்ளோசப் எடுக்க மறந்துட்டீங்களா?
தெரியுது நெல்லை. பல சுமார் அதன் நிறம் பார்த்தாலேட் தெரியும் அவசரமாகச் செதுக்கப்பட்டவை அல்லது அகழ்ந்தெடுத்த பின் செய்திருப்பாங்க என்று தோன்றியது.
நீக்குகொஞ்சம் பழசா இருப்பவற்றைப் பார்த்தால் தெரியும்..
சிவலிங்கத்தை க்ளோசப் எடுத்திருந்தேன் சரியாக வரலை.
நன்றி நெல்லை
கீதா
அனுமனின் சிற்பத்தில் ஒன்றில் ஒரு முகம் தெரிகிறதே. அதை விளக்கவில்லையே.
பதிலளிநீக்குஎனக்கென்னவோ அனுமன் தன் இதயத்தைத் திறந்து இராமனின் முகத்தைக் காண்பிப்பது போல்வே இருக்கிறது. நீங்களும் அதுக்கு விளக்கம் எழுதாமல் விட்டுவிட்டீர்கள்
ஹையோ அதை விளக்க நினைத்து விட்டுப் போச்சு. வேலை நெருக்கடிகள். ஆமாம் அனுமன் சைடில், நாம் பார்க்கும் போது நேரே இன்னொரு முகம். இதயத்தைத் திறந்து என்பது போல் இல்லையே நெல்லை....அனுமனுக்குள் இராமன் தான் என்பதைச் சொல்வதாகப்பட்டது எனக்கு
நீக்குகீதா
அனுமனின் பாதி ராமன் என்பதாகவும் சொல்லலாம்
நீக்குஅதனாலதான் இப்ப அடுத்த பதிவை போடலை...சிற்பங்கள் பத்தி சொல்ல நேரம்....பதில் கொடுக்க நேரம்...கொஞ்சம் நாளாகும் அடுத்த பதிவு வர.
கீதா