புதன், 21 ஜனவரி, 2026

தலக்காடு - 8 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 1

 தலக்காடு- 1,  2345 , 6 , 7

கருத்திடுபவர்களுக்கு -  நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

சரி நாம் கீர்த்தி நாராயணர் கோயிலில் இருந்து வெளியே வந்து வைத்யநாதேஸ்வரர் கோவிலைப் பார்க்கப் போவோம். 

இப்படி வெளியில் வந்ததும் இடப்பக்கம் புதியதாக ஒரு சன்னதி கட்டியிருப்பது தெரிந்தது. என்ன சன்னதி என்று தெரியவில்லை. தெப்பக்குளம். வலப்பக்கம் வைத்தியநாதேஸ்வரர் கோவில்.
இந்தத் தெப்பக் குளத்தின் எதிரில் வைத்தியநாதேஸ்வரர் கோயில். 
படத்தில் உள்ள பகுதிக்கு இடப்புறம் சற்றுத் தள்ளி செருப்பை விடும் இடம். கோவிலின் வெளிப்புறமே இப்படிக் கல்வெட்டொன்று. தமிழில். அதன் மேலிடுக்கில் தென்னை வாரியல் தெரிகிறதா? வலப்புறம் சிறிய இடைவெளி தெரிகிறதா? அதை ஒட்டித்தான் கோவிலுக்குள் செல்லும் பகுதி.
யாளியா, மானா .......
இதுதான் நுழைவு வாயில். அழகான சிற்பம். கீழே படி தெரிகிறதா? அதைத் தாண்டி விளிம்பில் ஒருவர் உட்கார்ந்திருக்க அங்கிருப்பதைப் படம் எடுக்க முடியவில்லை.  நுழைவு வாயிலை தள்ளி நின்று எடுக்கவிட்டுப் போச்சு. காரணம் இதுவே 4 மணி ஆகிவிட்டது. அவசரமாக உள்ளே சென்றோம். 
நுழைவு வாயில் - சிற்பம் - விலங்கு என்று தெரிகிறது ஆனால்...

மேலைகங்கர்கள் ஆண்ட வருடங்களிலேயே இக்கோவிலிற்கான வேலைகள் நடந்திருக்கின்றன. அவர்கள் நிறுவியதை அதன் பின்  சோழர்கள் 11 ஆம் நூற்றாண்டில் மேலைகங்கர்களை வென்று 12 ஆம் நூற்றாண்டு வரை அதாவது ஹொய்சாள அரசன் விஷ்ணுவர்தன் சோழர்களை வெல்லும் வரையான காலத்திற்குள் சோழர்கள் இக்கோவிலில் தங்கள் கலைஅம்சங்களை உட்படுத்தி மேம்படுத்தியுள்ளார்கள். சோழர்களின் கலைவடிவம் இக்கோவிலில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதன் பின் வந்த ஹொய்சாளர்களின் கலைவடிவமும், விஜயநகர கலை அம்சமும் இக்கோயிலில் இருப்பதைக் காணலாம் என்பது வரலாற்றுத் தகவல்கள். 

இதோ உள்ளே போகிறோம். கொடிமரம் கொடிமரத்தில் சிவலிங்கம்....நேரே கோயில். 

கோவிலின் முன் மண்டபத்தில் படிகளில் ஏறும் போது ஆனை வடிவம் சிதைந்த நிலையில்

கிழக்கு நோக்கிய முன்மண்டபம் என்ன ஒரு அழகு இல்லையா! உள்ளே இருக்கும் பெரிய லிங்கவிடிவ இறைவன் கொஞ்சமாகத் தெரிகிறாரா?

சோழர்களால் கட்டப்பட்ட கோவில் என்று சொல்லப்பட்டதை நேரில் பார்த்த போது முழுவதும் சோழர்களால் என்று சொல்ல முடியவில்லை. ஹொய்சாளர்களின் கலையம்சமும் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. (படத்தைப் பார்க்கும் போது உங்களுக்கும் புரியும்) நான் வீட்டிற்கு வந்ததும் இணையத்தில் பார்த்த போது கிடைத்த தகவல்களின் படி நான் நினைத்தது சரியென்று தோன்றியது. 

மேலைகங்கர்கள், சோழர்கள், ஹொய்சாளர்கள், அதன் பின் 14 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த விஜயநகர பேரரசின் கலை அம்சங்களும் இக்கோவிலில் இருப்பதாகவும் அத்தகவலில் இருந்தது. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து 14 ஆம் நூற்றாண்டுவரை இக்கோவிலில் அந்தந்த காலகட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் தங்கள் கலையம்சத்தை உட்படுத்தியிருக்கின்றனர்.

முன்மண்டபத்தில் மிக அழகான தூண்கள் சிற்பங்கள். மாபெரும் துவாரபாலகர்கள் முகப்பை அலங்கரிக்கிறார்கள்.
வலப்புறம் உள்ள இந்த துவாரபாலகர் சைடில் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்தவாறு விநாயகர் வித்தியாசமாகக் காட்சி தருவது இப்படத்தில் லேசாகத் தெரிவார். கீழே முழுவதும்...
குதிரையில் அமர்ந்தவாறு விநாயகர் வித்தியாசமாகக் காட்சி

துவாரபாலகர்களை அன்று புகைப்படம் எடுத்த போது டக்கென்று அவர்களின் வடிவத்தில் ஒன்று பிரத்யேகமாகத் தோன்றியது. அட! என்று வியந்து வீட்டிற்கு வந்து படத்தைப் பெரிதாக்கிப் பார்த்து உறுதியும் செய்து கொண்டேன். சிற்பயின் கலைநுணுக்கத் திறமையைச் சொல்லும் விஷயம். உங்கள் கண்ணிற்கும் தெரிகிறதா என்று பாருங்கள். கருத்தில் சொல்லுங்கள். அதன் பிறகு நான் சொல்கிறேன்.

இந்த துவாரபாலகர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள் இல்லையா? ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டவர்கள். என்றாலும் ஒரு காதில் நூலை நுழைத்தால் மறு காதின் வழி வெளியில் கொண்டு வரமுடியுமாம். அது போல தலைக்கு மேலே உள்ள ஓட்டை வழியாக நூல் நுழைத்து இரு காதுகளின் வழியாகவும் கொண்டுவரலாமாம். இது இக்கோவிலின் கலையைப் பற்றித் துழாவிய போது அறிந்து கொண்ட தகவல். 

துவாரபாலகர்களை ஒட்டி இடப்புற, வலப்புற நிலைப்படிகளும் கோவிலுக்குள் உட்புறம் செல்லும் வழியும். உட்புறம் கொஞ்சம் தெரிகிறதுதானே
இந்த முன் மண்டபத்தைக் கட்டியது இராஜேந்திரசோழன் என்று சொல்லப்படுகிறது.

உள்ளே கருவறையில் பெரிய லிங்க வடிவில் வைத்தியநாதேஸ்வரர்.  கருவறையின் முன்புறத்தில், இடப்புறம் முருகனும் வலப்புறம் கணபதியும் வீற்றிருக்கிறார்கள். உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. 

வெளியில் வந்ததும் முன் மண்டபத்தைத் தாங்கி நிற்கும் தூண்களின் க்ளிக்ஸ் 

அடுத்தாற் போல் கோவிலைச் சுற்றி இருக்கும் சிற்பங்கள் மற்றும் வேலைப்பாடுகளைப் பார்த்துக் கொண்டே சுற்றி வருவோம். அடுத்த பதிவில் பார்ப்போமா...



--------கீதா

30 கருத்துகள்:

  1. இடப்பக்க,  சன்னதியில் ஜாங்கிரி எழுத்துகள் ஏதுமில்லையா?  ஒருவேளை கடவுளர்களின் ரகசிய அறையாக இருக்குமோ?  குளத்தில் குளித்து விட்டு உடை மாற்றும் அறை!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....ரகசிய அறை என்றால் ராத்திரி அங்கு போகக் கூடாது அமானுஷ்யம் நடக்கும் ஏதேனும் நடக்கும் என்று கதையும் சொல்ல வாய்ப்புண்டே!

      ஒன்று பிள்ளையார் சன்னதியாக இருக்கும் இல்லை, காவல் தெய்வம், இல்லை ஆஞ்சு. நீங்கள் சொன்னது போல் குளத்தில் குளித்துவிட்டு, படையல் கொடுக்கும் காவல் தெய்வமாகக் கூட இருக்கலாம்!!

      கீதா

      நீக்கு
  2. மேலை கஙகர்களை வென்று விட்டோம் என்று கோவிலை சேதப்படுத்தவில்லை பாருங்கள் சோழர்கள்...   அங்கே நிற்கிறார்கள் அவர்கள்!!  மாற்றாக இன்னும் மேம்படுத்துகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். அதன் பின் வந்த மன்னர்களும் கூட. ஏன் விஷ்ணுவர்தன் உட்பட. சமண சமயத்திலிருந்து வைணவத்துக்கு மாறியவன்...இக்கோவிலையும் கண்டு கொண்டிருக்கிறானே!

      இப்ப பாருங்க ஒவ்வொரு ஆட்சியின் போதும் எடுக்கப்படும் பல நலத்திட்டங்கள் அடுத்த ஆட்சியின் போது கைவிடப்படுகின்றன!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. கோயில்களை பாரதீய அரசர்கள் யாரும் பாழ்படுத்த மாட்டார்கள். மேம்படுத்துவார்கள்.

      முஸ்லீம் மற்றும் கிறித்துவ ஏஜன்டுகள் (போர்த்துகீசியர்கள் டச்சுக்காரர்கள்)தாம் இப்படிச் செய்வார்கள்

      நீக்கு
    3. கோயில்களை பாரதீய அரசர்கள் யாரும் பாழ்படுத்த மாட்டார்கள். மேம்படுத்துவார்கள்.

      முஸ்லீம் மற்றும் கிறித்துவ ஏஜன்டுகள் (போர்த்துகீசியர்கள் டச்சுக்காரர்கள்)தாம் இப்படிச் செய்வார்கள்

      நீக்கு
    4. ஆமாம் நெல்லை. பாழ்படுத்த மாட்டாங்க. காரணம் தத்துவ நம்பிக்கைகள் வெவ்வேறாக இருந்தாலும் மதம் ஒன்றுதானே. ஆனால் பாருங்க, அங்கு இருந்த சமணர் சிற்பங்களை சோழர்கள் பாழ்படுத்தியதாகத்தானே விஷ்ணுவர்தனுக்கு விரக்தி வருகிறது என்று வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. சோழர்களைப் போரில் வெல்கிறான்.

      வெளியிலிருந்து நுழைந்தவர்கள் செய்தது உலகிற்கே தெரியுமே...

      நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
  3. ஒரு காதின் வழி நூலை நுழைத்து இன்னொரு காதின் வழி வருவது..  நுட்பமான வேலை.  பாராட்டப்படவேண்டியவர்கள்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கண்டிப்பாக. அப்ப உள்ள எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது. இப்படி நிறைய நுட்பமான வேலைகள் செய்திருக்காங்க சிற்பிகள்.

      கீதா

      நீக்கு
    2. இரண்டு காதுகளுக்கு உள்ளேயா?

      நீக்கு
    3. ஆமாம் நெல்லை. கீழ கோமதிக்காவும் அவங்க தாராசுரத்தில் பார்த்ததைச் சொல்லியிருக்காங்க பாருங்க. அவங்களுக்கு அங்கு பராமரிப்பவர் செய்தும் காட்டினாராம்.

      கீதா

      நீக்கு
  4. அந்த நீண்ட சிற்பத்தில் மூன்று பாகமாக சிற்பம் இருப்பது தெரிகிறது.  நீண்ட தூண்கள் போன்ற பகுதி கால்களாகவும்,.  சிறிய மண்டபம் போன்ற பகுதி உடலின் நடுப்பகுதியாகவும் சிங்க முகத்தின் கீழ் அமைந்துள்ளன.    தனித்தனியாக எடுக்கலாம், அப்புறம் அமைக்கலாம், தனியாகவே வைக்கலாமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இதே போன்று தோன்றியது ஸ்ரீராம் கீழே இருகால்கள் பாதங்களை நடனத்திற்கு வைப்பது போன்று நேர்கோட்டில் வைத்திருப்பது போலவும்....மற்றவை நீங்க சொல்லியிருப்பது போலவே தான். ஒரு சின்ன இடைவெளி இருந்தது போன்று அதாவது ஒட்டி வைத்தது போன்று தெரிந்தது ஆனால் தொட்டுப் பார்க்கக் கூடாதே.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. துவாரபாலர்கள்...    கால் மாற்றி நின்றிருப்பதா?  அல்லது அரும்பு மீசை, முறுக்கு மீசை என்று  வேறுபடுத்தியிருப்பதா?  வேறு என்ன சிறப்பு என்று தெரியவில்லை.  நீங்களே சொல்லி விடுங்கள்!  ஆறு வித்தியாசம் கண்டு பிடிக்க வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லியிருப்பதும் சரிதான் என்றாலும் இது கண்டிப்பாகச் சொல்கிறேன். வேறு யாராவது சொல்றாங்களா என்று...பார்த்துவிட்டு

      நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
    2. ஸ்ரீராம் இப்ப சொல்கிறேன். மார்பையும் நாபி - வயிற்றையும் உற்று நோக்கிப் பாருங்க ....நந்தி முக வடிவம் தெரிகிறதா?

      அதுதான் சிறப்பு.

      கீதா

      நீக்கு
  6. இனிய காலை வணக்கம்.....

    படங்கள் அனைத்தும் அழகு..... பாழ்பட்ட சிற்பங்களைப் பார்க்கும்போது மனதில் வலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்ஜி.

      ஆமாம் சில சிற்பங்கள் உருத் தெரியாமல் ஆகியிருப்பது கஷ்டமாக இருந்ததுதான். ஆனால் இவை எல்லாம் அகழ்தெடுக்கப்பட்டிருப்பவை இல்லையா? இனி சீரமைத்துச் செய்தால் நல்லதுதான்.

      கீதா

      நீக்கு
  7. அனைத்தும் ப்டங்களும், விவரங்களும் அருமை.
    துவாரபாலகர் படங்கள் அருமை.

    மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்தவாறு விநாயகர் வித்தியாசமாகக் காட்சி//

    என் கண்ணுக்கு குதிரை மேலே விநாயகர் இருப்பது போல இருக்கே கீதா
    குதிரையின் வால் தெரிகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா நன்றி அக்கா. குதிரையேதான் அதனால்தான் வித்தியாசமான காட்சி என்று குறிப்பிட்டிருக்கிறேன். விநாயகர் என்றாலே மூஞ்சூறு என்று மனதில் அது தெரியாமல் அப்படியே வந்துவிட்டதுக்கா அடிக்கும் போது என்னை அறியாமல். பதிவு வெளியிட்ட பிறகு திருத்தம் செய்தேன் இன்று காலை ஆனால் இதைக் கவனிக்கவில்லை.
      .
      நீங்க இப்ப அதைச்சொன்னதும் மாற்றிவிட்டேன்.

      நன்றிக்கா

      கீதா

      நீக்கு
  8. இந்த முன் மண்டபத்தைக் கட்டியது இராஜேந்திரசோழன் என்று சொல்லப்படுகிறது.//

    இரு தூணிலும் துவரபாலகர் சிலை, ஆடும் பெண் சிலை அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீழேயும் சின்னதாக இருப்பவர்களும்...இப்படி ஆங்காங்கே சிற்பங்கள் இன்னும் நிறைய இருக்கு அடுத்த இரு பதிவுகளிள் வரும்

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  9. முன் மண்டபம் அழகு , லிங்க வடிவில் தெரியவில்லை

    //துவாரபாலகர்களை அன்று புகைப்படம் எடுத்த போது டக்கென்று அவர்களின் வடிவத்தில் ஒன்று பிரத்யேகமாகத் தோன்றியது. அட! என்று வியந்து வீட்டிற்கு வந்து படத்தைப் பெரிதாக்கிப் பார்த்து உறுதியும் செய்து கொண்டேன். சிற்பயின் கலைநுணுக்கத் திறமையைச் சொல்லும் விஷயம். உங்கள் கண்ணிற்கும் தெரிகிறதா என்று பாருங்கள். கருத்தில் சொல்லுங்கள். அதன் பிறகு நான் சொல்கிறேன்.//

    இருவர் முக அமைப்பும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு. இருவர் மீசையும், கண்களும்
    வேறு தோற்றம் தருகிறது. கைகளை வைத்துக் கொள்வதும் மாறும் எல்லா கோயில்கள் துவாரபாலகருக்கும் அது போலவே கைகள் மாறி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அந்த வித்தியாசங்கள் இருக்கு பொதுவாக இப்படி இருப்பதில்லைதான். அது துவாரபாலகர் சிற்பங்களிலேயே ஹொய்சாளர், சோழர், விஜயநகர மூன்று காலத்து கைவணங்களும் இருக்கின்றன என்று தகவல்கள். அதனால் இப்படியான மாற்றங்கள்...குறிப்பாகக் கண்கள் அதெல்லாம் ஹொய்சாளர் காலத்தில் மாற்றங்கள் என்று சொல்லப்படுகிறது.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  10. கால்களும் மாறும். அதுபோலவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. //ஒரு காதில் நூலை நுழைத்தால் மறு காதின் வழி வெளியில் கொண்டு வரமுடியுமாம். அது போல தலைக்கு மேலே உள்ள ஓட்டை வழியாக நூல் நுழைத்து இரு காதுகளின் வழியாகவும் கொண்டுவரலாமாம். //

    தாராசுரத்திலும் இந்த மாதிரி ஒரு சிலை இருக்கும் கோயிலில் ஒரு இடத்தில் சிலைகளை பாதுகாத்து வைத்து இருக்கும் இடத்தில் அதை பார்த்து கொள்ளும் காவலர் செய்து காட்டினார் ஆனால் ஒரு காதில் குச்சியை நுழைத்து அடுத்த காதில் எடுத்து காட்டினார். நீங்கள் சொல்வது தலைக்கு மேலே உள்ள ஓட்டை வழியாக நூல் என்று சொல்லி இருக்கிறீர்கள்.


    தூண்கள் படமும் நன்றாக இருக்கிறது. கோயில் நன்கு சுத்தமாக இருப்பது தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாராசுரத்திலும் இந்த மாதிரி ஒரு சிலை இருக்கும் கோயிலில் ஒரு இடத்தில் சிலைகளை பாதுகாத்து வைத்து இருக்கும் இடத்தில் அதை பார்த்து கொள்ளும் காவலர் செய்து காட்டினார் ஆனால் ஒரு காதில் குச்சியை நுழைத்து அடுத்த காதில் எடுத்து காட்டினார்.//

      அட! செய்து காட்டியது நமக்கும் தெரிந்து கொள்ள முடியும் இல்லையா.

      இங்கு அப்படிச் செய்து காட்டவில்லைக்கா. சிற்பங்களைப் பற்றிய தகவல்களில் தெரிந்து கொண்டதுதான்.

      தூண்கள் படமும் நன்றாக இருக்கிறது. கோயில் நன்கு சுத்தமாக இருப்பது தெரிகிறது.//

      கோயில் நல்ல சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  12. //தென்னை வாரியல் தெரிகிறதா? வலப்புறம் சிறிய இடைவெளி தெரிகிறதா? அதை ஒட்டித்தான் கோவிலுக்குள் செல்லும் பகுதி.//

    வாரியல் நம் ஊரில் சொல்வது சிலருக்கு புரியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! துடைப்பம்னு சொல்லியிருக்கணுமோ ஆனால் பெரும்பாலானோர்க்குத் தெரியும் என்றே நினைக்கிறேன் அக்கா

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு