சனி, 24 ஜனவரி, 2026

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி 2025 பரிசு பெற்ற கதைகளைப் பற்றி...பகுதி - 7 - 7/7

 கதைகளைப் பற்றி - 1/7 , 2/7 , 3/7 , 4/7 , 5/7 , 6/7

சென்ற வருடம் பரிசு பெற்றக் கதைகளைப் பற்றி என் பார்வையில் சொல்லியிருந்தேன்.  இந்த வருடம் போட்டியில் நானும் கலந்து கொண்டு பரிசு பெற்றதால் சற்று கவனத்தோடுதான் கதைத்துக் கொண்டுவருகிறேன். நான் பெரிய எழுத்தாளர் அல்ல. ஏதேனும் குறை இருந்தால்,  ஆசிரியர்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.  நட்புகளும் சுட்டிக் காட்டலாம். என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்ற முன்னுரையுடன் அடுத்த பகுதி 7/7. நிறைவுப்பகுதி

கருத்திடுபவர்களுக்கு -  நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

---------------------------------------------------------------------

 துரோகம்

ராம்குமார் சுந்தரம்

ஆசிரியர் - இளைஞர். நெல்லையைப் பூர்வீகமாகக் கொண்ட பெங்களூர்வாசி. தகவல்தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இவர் ஆங்கிலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு சிறுகதைத் தொகுப்பும், தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். குக்கு எஃப்எம் செயலியில் இவரது மூன்று அறிவியல் புனைவு சார்ந்த நன்றாக வரவேற்பு பெற்ற ஒலிக்கதைகள் வெளியாகியுள்ளன. மூன்று குறும்படங்களுக்கான முழு உரைநிரல்களை எழுதியுள்ளார். பிரபல பதிப்பகத்தின் தளத்தில் இவரது அறிவியல் தொடர் 23 வாரங்கள் வெளிவந்ததாம். இவருடைய குறுநாவல், குவிகம் குறும் புதினப் போட்டி 2024ல் பரிசு பெற்றதாம். இப்படி நிறைய...

கதை - இக்கதை இலங்கைத் தமிழில் உள்ள கதை. ஆசிரியர் இலங்கைக்கு நேரடியாகச் சென்ற அனுபவம் இல்லாமலேயே அவர்களின் வட்டாரவழக்கில் எழுதியுள்ளார்.

கொழும்பு நகரின் கெப்பெட்டிப்போலா சாலையில் ஒரு டீக்கடையில் அமர்ந்திருக்கும் வசந்தன் எதையோ யோசித்துக் கேவிக் கேவி அழ ஆரம்பிக்கிறான். டீக்கடையை நடத்தும் ரணநாயக அவனை ஆசுவாசப்படுத்த முயற்சித்தும் பலனில்லை. என்ன பிரச்சனை என்று கேட்கிறான்.

வசந்தன், தான் மலையகத்து ஊரான சிவனூரட்டு டவுனிலிருந்து வருவதாகவும், மணமாகி 6 வருடங்கள் ஆகிய நிலையில் தன் மனைவி ரேகா ஓடிப்போய்விட்டதாகவும் சொல்லி ஃபோட்டோவைக் காட்டுகிறான். சிவனூரட்டில் பெரிய தொழிலதிபருடைய ஒரே மகன் ராஜேஷ் இவர்களின் ஊரில் ஃபேக்டரி நிறுவ வந்த போது இவன் மனைவி ரேகாவுடன் பழக்கமாகி கொழும்பு நகருக்குக் கூட்டிக் கொண்டுவந்துவிடுகிறான். இப்போது இந்த டீக்கடை இருக்கும் ஏரியாவில்தான் அவர்கள் தங்கியிருப்பதாகவும் தான் 4 நாட்களாகத் தேடி அலைவதாகவும் சொல்கிறான்.

ரணநாயக, தான் காண நேர்ந்தால் சொல்கிறேன் என்று சொல்லியதோடு இருவரும் வாட்சப் எண்ணையும் பரிமாறிக் கொள்கிறார்கள். ரணநாயக தன் நம்பிக்கையான நண்பர்களுக்கும் அனுப்புகிறான். வசந்தன், தான் லீலா லாட்ஜில் தங்கியிருப்பதையும் சொல்லிவிட்டுச் செல்கிறான்.

அன்று மாலை நான்கரை மணியளவில், டெய்லர்கடை ஆள் ரணநாயகாவிற்குச் செய்தி அனுப்புகிறான், ரேகா 'கோல்டன் அபார்ட்மென்ட்ஸ்' கட்டிடத்திற்குள் ராஜேஷுடன் செல்வதைப் பார்த்ததாக. வசந்தனுக்கும் செய்தி அனுப்பப்படுகிறது.

வசந்தன் துப்பறியும் வேடத்தில் உடனே கோல்டன் அபார்ட்மென்ட்ஸிற்குச் சென்று, வாச்மேனுக்குப் பைசா கொடுத்து, ரேகாவும் ராஜேஷும் அபார்ட்மெண்டின் நான்காம் தளத்தில் குடியேறி இருப்பதையும், ரேகாவின் கழுத்தில் புதிய தாலிச்சரடு இருப்பதையும் அறிகிறான்.

அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் அவர்கள் இருவரும் வெளியே வருவர் என்று எதிர்பார்த்திருந்தும் வரவில்லை. இருள் கவ்விய பிறகும் வரவில்லை. வாச்மேன் அசந்த நேரத்தில் சிசிடிவி கேமரா படாத இடமாகப் பார்த்து பின்பக்கச் சுவர் வழியாக ஏறிக் குதித்து உள்ளே போகிறான் வசந்தன். ராஜேஷின் ரெட் கலர் ஃபியட் காரின் லாக்கை இரும்புக் கம்பியால் திறந்து பின் சீட்டினடியில் படுத்துக் கொள்கிறான். பேகிலிருந்து கள்ளச்சந்தையில் வாங்கிய துப்பாக்கியை எடுத்துக் கையில் வைத்துக் கொள்கிறான்.

அவன் எதிர்நோக்கியபடி ராஜேஷும் ரேகாவும் வந்து காரில் அமர்ந்து கார் புறப்பட்டு சாலையில் செல்லும் போது, பின் சீட்டினடியிலிருந்து மெதுவாக ஊர்ந்து மேலெழும்பிய வசந்தன் ராஜேஷின் பின் கழுத்தில் துக்கியை வைத்து, "டேய் ராஜேஷ், காரை சாமிராஜா மில்ஸ் பின்னாடி இருக்கற பாழடைஞ்ச கட்டிடத்துக்கு விடடா!" என்று மிரட்டுகிறான்.

இதற்கப்புறம் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

கதையில் நிறைய லாஜிக் பற்றிய கேள்விகள் எழுகின்றனதான். கதையை இன்னும் செம்மைப்படுத்தியிருக்கலாமோ என்றும் தோன்றியது.

ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்!

 திருமலை நாயக்கர் மகால்

சுதர்சனா புவனேஷ்

ஆசிரியர் - இவரும் 38 வயதான இளைய எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தை தினகர் தமிழ்த் திரைப்படத் துறையில் அரைநூற்றாண்டுகக்கும் மேல் இயங்கிவருபவராம்.

கல்வித் தகுசி பிஏ., பிஎல்., மற்றும் லண்டன் சென்று எம்பிஏ பயின்றவர். சென்னையில் வழக்கறிஞராக இயங்கிவருகிறார்.  எழுத்தார்வத்தால் சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தாராம், அவரது  முதல் சிறுகதையே பரிசு பெற்றதில் மிகுந்த மகிழ்சி அடைவதாகக் கூறுகிறார் சுதர்சனா. வழக்கறிஞர் என்பதால் நிறைய கதைக்களங்கள் கிடைக்கும் என்பதையும் சொல்கிறார்.

கதை - ஓவியப்படிப்பு முடித்து பல இடங்களுக்குச் சென்று நாட்கணக்கில் தங்கி, அங்கிருக்கும் கோவில் சிற்பங்களைப் பார்த்து அப்படியே தத்ரூபமாக வரையும் சிவாவிற்கு மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் மகாலை நேரில் பார்த்து வரைய வேண்டும் என்ற ஆசையில் அங்கு செல்கிறான்.

மஹாலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, ஓரிடத்தில் அமர்ந்து வரையத் தொடங்குகிறான். அப்போது எங்கிருந்தோ ஒரு கைக்குட்டை பறந்து வந்து அவன் முகத்தை மூடுகிறது. லேடிஸ் கர்சீஃப். அதன் மணம் அவனை மயங்க வைக்கிறது. "ஹலோ" என்ற குரல் கேட்டு இவன் இந்த உலகிற்கு வர, "அது என் கர்சீஃப் காத்துல பறந்து வந்திருச்சு" என்கிறாள் ஒரு அழகிய பெண். (இந்த இடத்தில் "கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா. கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா..." பாடல் என் நினைவுக்கு வந்தது).

அவள் அழகிலும் அவள் நடை அழகிலும் சொக்கிப் போகிறான். இதுவரை சிற்பம் போன்ற அப்படி ஒரு அழகியை அவன் பார்த்ததே இல்லை. அந்த மஹாலின் நடுவில் நின்று "இவள்தான் என் மனைவி" என்று கத்த வேண்டும் போல இருக்கிறது அவனுக்கு.

கர்சீஃபை வாங்கிக் கொண்டவள் எங்கு சென்றாள் என்று தெரியாமல் தேடுகிறான். அவள் ஓரிடத்தில் குழந்தைகளுக்கு நடன வகுப்பு எடுப்பது தெரிகிறது. அவள் அபிநயம் பிடிக்க குழந்தைகள் ஆடுகிறார்கள். இவன் அவர்களுக்குத் தெரியாத ஓரிடத்தில் நின்றுகொண்டு அவளை ஓவியமாகத் தீட்டுகிறான்.

ஒத்திகை வகுப்பு முடிந்து தன் சகாக்களுடன் அவள் - பெயர் நிர்மலா - பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு சிறுமி ஓடி வந்து நிர்மலாவிடம், "டீச்சர், வாசல்ல ஒருத்தர் உங்க படத்தை வரைஞ்சு வச்சு வித்துகிட்டிருக்காரு" என்று சொல்ல நிர்மலாவிற்குக் கோபம் வருகிறது.

எல்லோரும் அந்த ஓவியத்தை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்க, நிர்மலா சிவாவிடம், எப்படித் தன்னைக் கேக்காமல் படத்தை வரையாலாம் என்று கோபப்படுகிறாள்.

"நிலாவை வரையறோம்...உலக அதிசயங்களை வரையறோம், அதுங்க கிட்ட கேட்டுக்கிட்டா வரையறோம்? என்னைப் பொருத்த மட்டில் எனக்கு உலக அதிசயம் உலக அழகி ரெண்டும் நீங்கதான்" என்றதும் அவள் அதிர்ந்து போகிறாள். ஆனால் மனதிற்குள் சிறிய சலனம் ஏற்படுகிறது. அமைதியாகக் கடந்து போய்விடுகிறாள். மறுநாளும் வருவார்களா என்று சிவா சிறுமியிடம் கேட்க அவள் "ஆமாம்" என்கிறாள்.

மறுநாளும் சிவா வந்துவிடுகிறான். நிர்மலாவும் குழுவும் அங்கு இருக்கிறார்கள். அங்கு சின்ன சலசலப்பு. ஹார்மோனியம் வாசிக்கும் டீச்சர் வரமுடியவில்லை என்று சொல்லிவிடுவதால் என்ன செய்வதென்று தெரியாத நிலை. நிகழ்ச்சியின் ஆர்கனைசர் விஷயம் தெரிந்ததும், அங்கேயே யாரும் கிடைக்கிறார்களா என்று பார்ப்பதாகச் சொல்லிச் சென்றவரைப் பார்த்த சிவா அவரை நெருங்கி, தனக்கு ஹார்மோனியம் வாசிக்கத் தெரியும் என்கிறான். சற்று நேரத்தில் ஹார்மோனியம் வாசிக்கும் சத்தம் கேட்டதும் சோர்ந்திருந்த நிர்மலாவுக்கு சிவா ஹார்மோனியம் சுதி செட்செய்வது தெரிகிறது.

சிவாவிடம் அவள், கர்நாடகசங்கீதம் முறையாகத் தெரிந்திருக்க வேண்டும் என்றதும் சிவா சின்னஞ்சிறுகிளியே வை வாசித்திட அதில் மயங்கிய ஆர்கனைசர் நிர்மலாவை ஒத்திகைப் பார்க்கச் சொல்கிறார். ஒத்திகைக்கு அவனை வாசிக்கச் சொல்கிறார்.

நிர்மலாவும், சிவாவும் இருவரும் நிறைய பரிமாறிக் கொள்கிறார்கள். சிவா அங்கிருக்கும் வரை தினமும் சந்திக்கிறார்கள். தங்கள் அன்பையும். நிர்மலா தன் குடும்பச் சூழல் தற்போது சரியில்லாததால், சரியாக ஒருவருடம் கழித்து இருவர் மனதிலும் இதே அன்பு இருந்தால், திருமணம் ஆகியிருக்கவில்லை என்றால் இந்தத் தூணருகில், இதே நேரத்தில் சந்தித்து திருமணம் செய்துகொள்ளலாம் என்று அங்கிருக்கும் ஒரு தூணில் கையெழுத்திட்டுப் பிரிகிறார்கள்.

மறுவருடம் சந்திக்கிறார்களா? திருமணம் செய்து கொள்கிறார்களா? வெள்ளித் திரையில்....ஸாரி புத்தகத்தில்.

கதை, முடிவு எல்லாமே ரொம்பவே சினிமாட்டிக். திரைப்படத்திற்குச் செல்லுபடியாகும் கதை. க்ளிஷேவாக இருப்பது போல் தோன்றியது. கதையை வாசிக்கும் போது ஹீரோயின், ஹீரோ யாரைப் போட்டால் நன்றாக இருக்கும், ஸ்க்ரீன் ப்ளே, காட்சிகள் என்றெல்லாம் மனதில் ஓடத் தொடங்கியதைத் தவிர்க்க இயலவில்லை. ஓவியம், கர்நாடக இசை, நடனம் காதல் என்று  பலபடங்களின் கலவைகள் மனதில் ஓடின!

கதையின் தொடக்கத்தில் ஆசிரியரின் சில உவமைகளை ரசித்தேன்.

"உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அந்த அறை வெப்பத்தைத் தானே தாங்க முடியாமல் ஒருவித புலம்பல் ஒலியுடன் விதியை நினைத்து தானே சுற்றிக் கொண்டிருந்த ஒரு ஹைதர் காலத்து மின்விசிறி"

"கிழிந்து குடலைக் கக்கிக் கொண்டிருந்த தலையணை"

ஆசிரியர் தன் எழுத்துத் திறமையை செப்பனிட்டால் மிளிரும் வாய்ப்புகள் நிறைய.

 நல்லதோர் வீணை செய்தே

சுமைய்யாஜெஸ்மி, மட்டக்களப்பு

ஆசிரியர் - இவரும் இளைய எழுத்தாளர். இயற்கை எழில் பொலிந்த மருஹமுனை எனும் கிராமத்தில் பிறந்தவர். "சுமைய்யா ஜெஸ்மி மூஸா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் எழுத்தாளர் பாத்திமா சுமைய்யா. 2010ல் தமிழ் மொழியைத் தெரிவு செய்து பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கு இசை, நாடகம், ஆடல், பேச்சு ஆகிய துறைகளிலும் பயிற்சியளித்து பிரம்மாண்ட கலை நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.

நிறைய பரிசுகள், இலக்கிய விருதுகள் பெற்றிருக்கிறார். சர்வதேச சிறுகதைப் போட்டியில் தேர்வு, பேசும் புதிய சக்தி (இந்தியா) சர்வதேச சிறுகதைப் போட்டியில் சிறப்புச் சிறுகதை என்று பட்டியல் நீள்கிறது.

கதை - ஆயிஷாவும், அனஸும் தம்பதிகளாகி ஒரு மாதகாலத்தில், இரு வாரத்தில் வந்து ஆயிஷாவை தேன்நிலவுக்கு அழைத்துச் செல்ல வருவதாகச் சொல்லி, அனஸ், தான் வேலை செய்யும் இடத்திற்குப் பயணம் செய்கிறான். 

கல்யாண வேலைகளில் பிஸியாக இருந்ததால் முகநூல் பக்கம் போகாமல் இருந்த ஆயிஷா முகநூல் நோட்டிஃபிக்கேஷன்கள் வந்து குவிந்திருப்பதைப் பார்த்ததும் முகநூலுக்குள் செல்கிறாள். இவள் கடைசியாகப் பதிவிட்ட "சுதந்திரம்" எனும் கவிதையைப் பாராட்டி வந்தவை அனைத்தும். அதில் அவள் கணவன் அனஸின் கருத்தும், "பெண் சுதந்திரம் பற்றிப் பறைசாற்றி நிற்கும் தங்களின் கவிதை அற்புதம். வாழ்த்துகள் மேடம். தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை எதிர்பார்க்கிறோக்ம்"

அவள் கணவனுக்குத் தெரியாது இவள்தான் ரோஸ் ரோஸ் என்ற ஃபேக் ஐடியில் எழுதுபவள் என்பது. இவளும் அவனுக்கு இதயக் குறியீடும் போடுகிறாள் பதிலாக. ரோஸ் ரோஸ் ஐடிதானே என்று.

கொஞ்சம் ஃப்ளாஷ் பேக். ஆயிஷா கவிதைகள் இலக்கியம் என்று இருக்கும் பெண். பிரபல நகர்ப்புற பாடசாலை மாணவர்களை எல்லாம் தோற்கடித்துப் பாடசாலையில் பரிசு வெல்லும் போது அவள் பெயர் பிரபலமாகிறது. பல பரிசுகள், பேட்டிகள், பாராட்டுகள் என்று புகைப்படத்துடன் வாழ்த்துச் செய்திகள் வருகின்றன. அவள் சந்தோஷத்தில் இருக்கிறாள்.

ஊரின் உலமா சபையை சேர்ந்த ஒருகுழுவினர் அவள் வீட்டுக்கு வந்து, "இப்படி உங்கட மகள்ட புகைப்படங்கள் வீடியோக்கள் நியூஸ் பேப்பர் என்று வாறத கண்டம். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது சரியில்லை. ஊருக்கு அவமானம், உங்கள் மகளுக்கு சாலிஹான மாப்பிள்ளை எடுத்து கல்யாணம் பண்ற ஐடியா இருந்தா இதுகள இதோட நிறுத்திக்கங்க" என்று சொல்லியதும் ஆயிஷா முடங்குகிறாள். முடக்கப்படுகிறாள்.

அப்படியிருக்கும் போது, கொழும்பில் வசிக்கும் அவள் தந்தையின் தங்கை குடும்பத்தைப் பார்க்கச் செல்லும் சமயம், அவள் மாமி அவர்களின் மகளிர் சங்கத்தைச் சேர்ந்த பர்சானா எனும் பெண் ஒரு கவிதை புக் பளிஷ் பண்ணும் நிகழ்விற்கு ஆயிஷாவின் ஆர்வத்தை முன்னிட்டு அவளையும் அழைத்துச் செல்கிறார். அங்கு சிறப்பு விருந்தினராக அனஸ் பேசிய பெண்களைப் பற்றிய முற்போக்கு எண்ணங்கள் ஆயிஷாவைக் கவர்கின்றன. பெண்கள் எழுத வேண்டும் ஆண்கள் துணை நிற்க வேண்டும் என்றெல்லாம் பேசுகிறான். ஆயிஷா (றழி) முதல் மலாலா வரை இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் அறிவைப் பயன்படுத்தி சாதித்தப் பெண்களைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறான். அனஸ் பேசியவை அனைத்தும் தனக்காகவே பேசியதாக நினைக்கிறாள், ஆயிஷா.

வீட்டிற்கு வந்ததும், அவள் ஆர்வங்கள் மீண்டும் புத்துணர்வு பெற்றிட, வீட்டு முற்றத்தில் பூத்திருக்கும் இரட்டை ரோசா மலர்களைப் படம் பிடித்து தன் ஃப்ரொஃபைல் பிக்சராக வைத்து 'ரோஸ் ரோஸ்' என்று முகநூல் கணக்கு தொடங்கி நிறைய நட்புக் கோரிக்கை விடுத்திட நட்பு வட்டம் பெருகுகிறது. அதில் அனஸையும் தேடிப் பிடித்து நட்பு கோரிக்கை விடுக்க நான்கைந்து நாளில், 'விரிவுரையாளர், நூல் ஆய்வாளர், இலக்கிய ஆர்வலர், வீரப்பேச்சாளர் அனசினால் நட்பு கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அனஸ், பல பெண்களை எழுதத் தூண்டி உற்சாகப் படுத்தும் பணியை முகநூல் மூலமாகச் செய்து கொண்டிருப்பதையும் அறிகிறாள். அனஸ் பேசும் பெண்கள் தொடர்பான முற்போக்குச் சிந்தனைகளை வெளிப்படுத்துவதான மேடைப் பேச்சுக்கள் பல பதிவேற்றப்பட்டிருந்ததையும் பார்க்கிறாள்.

தான் முடக்கப்பட்ட போது எழுதி வைத்திருந்த கவிதைகள் பலதையும் பதிவேற்றுகிறாள். பாராட்டுகள் குவிகின்றன. சில மாதங்களில் அவள் கவிதைக்கென வாசகர் வட்டம் உருவாகிறது. அனஸையும் டேக் செய்திட அவனிடம் இருந்தும் லைக்ஸ் வருகின்றன.

அப்படிச் சென்று கொண்டிருந்த போது கொழும்பு மாமியிடமிருந்து ஆயிஷாவிற்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகச் செய்தி வர, அது அனஸ் என்று தெரிந்ததும் ஆயிஷா மட்டற்ற மகிழ்ச்சியடைகிறாள்.

ஃப்ளாஷ்பேக் இங்கு முடிகிறது. தற்போது கணவன் அனஸ். திருமண விடுமுறை முடிந்து சென்ற அனஸ், 2 வாரம் கழித்து ஆயிஷாவை அழைத்துச் செல்ல வருகிறான். அதன் பின் என்ன நடக்கிறது?

தலைப்பே கதையைச் சொல்லிவிடுகிறது. முடிவையும் சொல்லிவிடுகிறது. கதையை வாசிக்கும் போதே கதையின் போக்கையும், முடிவையும் யூகித்துவிட முடிகிறது. நீங்களும் யூகித்திருப்பீர்கள்!

நன்றாக எழுதியிருக்கும் ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள்.

ஜனனம்

தமிழ்ச்செல்வன் ரத்னவேல் பாண்டியன்

ஆசிரியர் - தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் எழுதத் தொடங்கி இந்த 4 வருடங்களில் 1105 சிறுகதைகள் எழுதியுள்ளார். ஒரு சரித்திர நாவலும் எழுதியிருக்கிறார். கடந்த நான்கு வருடங்களில் 34 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். அவற்றில் ஏழு ஆங்கிலத்தில் மூன்று சுற்றுலா ஸ்தலங்கள் பற்றியவை. மூன்று தன்னம்பிக்கைக் கட்டுரைகள், மற்றவை சிறுகதைத் தொகுப்புகள். கதைகள் தவிர தமிழ்க்கட்டுரைகள் நூற்றுக் கணக்கில் எழுதியுள்ளார். பட்டியல் நீள்வதால், இடம் கருதி இங்கு தரவில்லை.

கதை - கந்தன், வள்ளி தம்பதிகளுக்கு சுபா ஒரே பெண். சிறிய மண் வீடு. ஒரே ஒரு மின்விசிறியுடன். வள்ளி நாலு வீடுகளில் வீட்டு வேலை செய்து சம்பாதிப்பவள். கந்தன் பணி புரிவது மின்மயானத்தில். சுபாவின் பள்ளியிலிருந்து 2 கிமீ தூரத்தில் என்பதால் சுபாவைப் பள்ளியில் விட்டுவிட்டுத் தன் பணிக்குச் செல்பவர்.

தினமும் உடல்களைப் பார்த்து பார்த்து, தொலைக்காட்சியில் அழகிகளைப் பார்த்தால் கூட அந்த அழகு கவர்வதில்லை. "இந்த உடம்பும் எரிந்து சாம்பலாகத்தானே ஆகும்" என்றுதான் மனசில் அவருக்குத் தோன்றுகிறது. யாரைப் பார்த்தாலும், "கடைசில எங்கிட்டதானே வரணும்" எனும் எதிர்மறை சிந்தனை மனதுள் அவருக்குத் தோன்றும் போதெல்லாம், தன் இழிவான நினைப்பு குறித்து அவருக்கே வெறுப்பாகிறது. அழகான பூக்களையோ, மலைகளையோ, கடற்கரையையோ கூட ரசிக்க முடியாத அளவு கடினமாகிவிட்ட உணர்வு.

வருடங்கள் ஓடுகின்றன. இந்த இடத்தை ஆசிரியர் சொல்லியிருக்கும் விதம் ரசனையானது. "நாடார் கடை காலெண்டர் வருடா வருடம் ஒவ்வொரு சாமி படமா போட்டு நிறைய வந்து போயின"

சுபா டாக்டருக்குத் தேர்வாக முடியாமல் இரண்டாவது விருப்பமான வேலையான செவிலியராக நன்கு படித்து, பக்கத்து ஊர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தும் விடுகிறாள்.  கந்தனுக்கும் வள்ளிக்கும் ரொம்ப மகிழ்ச்சி. எல்லோரிடமும் சொல்லி மாய்கின்றனர்.

கந்தனுக்கு அவர் அடிமனதுள் இருக்கும் ஆசை அப்போது எழுகிறது. அது என்ன ஆசை? அது நிறைவேறுகிறதா?

வித்தியாசமான கதைக்கருவைத் தேர்ந்தெடுத்த ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்!

பிரியம்

தங்க ஆரோக்கியதாசன்

ஆசிரியர் - தமிழிலும், உளவியலிலும் தனித் தனியாக இளங்கலை பட்டம் பெற்றவர்.  மத்திய அரசின் இராணுவத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவலர்களுக்கு கௌரவ விரிவுரையாளராக வாழ்வியல் வகுப்புகள் நடத்துகிறார். பல இலக்கியச் சிற்றிதழ்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. அம்பத்தூர் கம்பன் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்; பட்டிமன்றப் பேச்சாளர்; நிகழ்ச்சித் தொகுப்பாளர்.  ஏராளமான சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்.  தமிழ்த் தாத்தா உ.வே.சா பாற்றியும், புதுமைப்பித்தன் சிறுகதைகள் பற்றியும் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டவர். இரு சிறுகதை நூல்கள் வெளிவந்துள்ளன.

கதை - கதையின் கதாபாத்திரம் - அவன் கடற்கரையில் அமர்ந்து கொண்டு அலைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறான். கரை தாண்ட முடியாமல் திரும்பித் திரும்பிக் கடலுக்குள் செல்லும் அலைகளைப் போலவே தானும் தன் முயற்சிகளில் தோற்றுப் போவதாக உணர்கிறான். எவ்வளவு நேரம் அப்படியே இருக்கிறானோ? இரவுப் பொழுது ஆரம்பிக்கிறது. அருகில் ஒருவர் நிற்பது போன்று தோன்றிட, பார்க்கிறான். அது ஒரு பெண்.

பார்த்ததுமே தெரிகிறது. அவள் அப்படியான பெண் என்று. அவள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்கிறாள் "போலாமா" என்று. அவனும் அவளுடன் நடக்கிறான். அந்த நிமிடத்தில் அவனுக்கு யாரையோ பழிவாங்கிவிட்ட வெற்றிக்களிப்பு.

எதிரில் வரும் போலீஸ்காரர் அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார். அவளும் ஜாடையாக ஏதோ பேசுகிறாள் போலீஸ்காரரும் தலையசைக்கிறார்.

ரோட்டிற்கு வந்ததும், "ரூம் போடுறியா இல்ல என் வீட்டுக்கு வரியா, ரூம் போடுறதா இருந்தா ஆட்டோ புடிக்கலாம். வீட்டுக்குப் போறதா இருந்தா நடந்தே போகலாம்" என்றதும் அவன் வீட்டுக்கே போகலாம் என்கிறான்.

அவனுக்கு அது புது அனுபவமாக இருக்கிறது. ஜனசந்தடி மிக்க தெருக்களில் சாக்கடை நீரைக் கடந்து நடக்கிறார்கள். தெருவோரக்கடை மசாலா மூக்கைத் துளைத்துத் தொண்டையில் கமறிட கர்சீஃபால் மூக்கைப் பொத்திக் கொண்டு நடக்கிறான். இளவட்டங்கள் இவர்களைப் பார்த்து சீட்டியடித்து சிரிக்கின்றனர்.

அவள் வீடு இருக்கும் இடத்தை அடைந்ததும், குடித்தனங்கள் அவளைக் கெட்ட வார்த்தைகளால் திட்டுவது காதில் விழுகின்றன.

வீட்டினுள் சென்றதும் இவன் தயங்கித் தயங்கி உட்கார்கிறான். அவளுக்கு இவன் வித்தியாசமானவனாகத் தெரிகிறான். வழக்கமாக என்ன நடக்கும் என்பது அவளுக்குத்தானே தெரியும். சாப்பிட என்ன வாங்க வேண்டும் என்று கேட்கிறாள் அவன் எது வேண்டுமென்றாலும் என்று சொல்லி தன் மணிபர்சை கொடுக்கிறான். அவள் அதிசயமாகப் பார்த்துவிட்டு, அதிலிருந்து ஒரு நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று பரோட்டா, சால்னா, கறி, இரண்டு வாட்டர் பாட்டில்கள் வாங்கிக் கொண்டு வருகிறாள். "இப்படி உக்காருய்யா, கீழ உக்காந்து சாப்ட்டாதான் பரோடா சால்னாவுக்கு தோதா இருக்கும், உன்னைப் பார்த்தா பெரிய வசதியான ஆளாடம் தெரியுது. அதான் மினரல் வாட்டர் வாங்கியாந்தேன்" என்று அவளே பிரித்து, பரோட்டாவைப் பிய்த்துப் போட்டு சால்னாவையும் அதன் மீது ஊற்றி அவனுக்கும் எடுத்து வைக்கிறாள்.

அவள் அருகில் நெருக்கமாக அமர்ந்து பரிமாறுவதில் அவன் நெகிழ்ந்து போகிறான். அவனுக்கு இப்படி அன்புடன் பரிமாறப்பட்டுச் சாப்பிடும் அனுபவம் புதியதாக இருக்கிறது. டேபிள் மீது வேலைக்காரர்கள் பரிமாறுவதை முள்கரண்டியில் வேண்டா வெறுப்பாகக் கடமைக்கு உப்புச் சப்பில்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. 

மிகவும் பணக்காரன் அவன். கோடிகளில் புரளும் நிறுவன உரிமையாளன். திருமணமான புதிதில் இணக்கமாக இருக்கும் மனைவி பணம் வர வர மாறுகிறாள். அவர்களின் பல கம்பெனிகளில் பங்குகள், சிலவற்றில் மேனேஜிங் டைரக்டர் என்று இருக்க, தங்களின் ஒரே பெண்ணை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு பணம் மட்டும் அனுப்புதல் என்று குடும்பப் பொறுப்புகளில் ஈடுபடாமல், தொழிலில் லாபம் பார்க்க பார்ட்டிகள் பல ஆண்களுடன் குடியும் குடித்தனமுமாக இருத்தல் என்று வாழ்கிறாள். அவன் அவளிடம் மென்மையாகச் சொல்லியும், திருத்தவும் முயற்சி செய்தாலும் தோற்கிறான். இறுதியில், அவள், தான் இப்படித்தான் இருப்பேன் கூட இருந்தால் இரு இல்லைனா வெளியேறு என்கிறாள்.

அப்படி விரக்தி அடைந்து தன் பொறுப்புகளை நம்பிக்கையானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கோயில் குளம் என்று சுற்றிச் சுற்றி கடைசியில் கடற்கரையில் வந்து அமர்ந்திருக்கும் போதுதான் மேலே சொன்னவை நடக்கின்றன. 

நல்ல பணக்கார வாழ்க்கையிலிருக்கும் அவன் ஏன்? எதற்காக? இப்படியான இடத்திற்கு வருகிறான்? கொஞ்சம் நாம் யூகிக்க முடிகிற கதைதான்.

இந்த இடத்தில் எனக்கு நிறைய கேள்விகள் வந்தனதான். ஏன் வேறு முடிவுகள் அவனுக்குப் புலப்படவில்லையா? இல்லை தொழிலில் மனைவியும் பங்குதாரர் என்பதால் முடிவு எடுக்க சிக்கலா பிரச்சனையா....? ஆனால் இதற்கான விடை கதையின் முடிவில். அதுவும் நம் யூகத்திற்கு விட்டிருப்பது பிடித்திருந்தது. 

ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்.

எப்படியோ ஒரு வழியாக முடித்துவிட்டேன். கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல!


-------கீதா

50 கருத்துகள்:

  1. உரைநிரல்?   வசனமா?  இலங்கைக்கு போகாமலேயே அந்த ஊர் நடையில் கதை...  வியப்பு.  மொழியாவது பரவாயில்லை.  இடங்கள் பற்றி எப்படி அறிந்தார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உரைநிரல் - எனக்கும் இந்தச் சொல் புதிதாக இருந்தது, ஸ்ரீராம். நிரல் என்றால் தெரியும். கணினி மொழி.
      (Programming language) அல்லது நிரலாக்க மொழி என்பது ஒரு குறியீட்டு மொழியாகும். இது பலவகை வெளியீடுகளை உருவாக்கப் பயன்படும் கட்டளைகளின் கணத்தைத் தரும். நிரலாக்க மொழிகள் பொதுவாக, கணினிக்கு எந்திரக் கட்டளைகளைத் தரும். இவை குறிப்பிட்ட அல்கோரிதங்களைச் செயற்படுத்தும் நிரல்களை உருவாக்கப் பயன்படும்.

      எனவே வசனத்தை அப்படி எழுதியிருக்கிறாரோ என்று தோன்றியது.

      ஸ்ரீராம், நானும் இடங்களுக்குப் போகாமலேயே சில கதைகளில் குறிப்பிட்டதுண்டு. எல்லாம் கூகுளில் அந்த இடத்தைப் போட்டுப் பார்த்து தெரிந்துகொண்டுவிடலாமே அப்படித்தான். உங்ககிட்ட முன்பு சொல்லியிருக்கிறேன். எங்கள் தளத்தில் அப்படி தெரு பெயர், ஊர் பெயர், பல்கலைக்கழகம் என்று அமெரிக்காவின் ஒரு பகுதியில் நடப்பதாக ஒரு தொடர் எழுதியிருந்தேன்.

      இப்போது பிற மொழிகளும் கூடக் கிதைத்துவிடுகின்றன. வசனம் வைக்க.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  2. திருமலை நாயக்கர் மகால் என்றதும் எனக்கு வேறு சில நினைவுகள் வந்தன.  இந்தக் கதையில் எந்தெந்த ஸீன்களில் பாடல் காட்சி வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டீர்களா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா.....ஓ!!!! பாடலாசிரியர் நீங்கதான்!

      நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  3. ஹா.  ஹா..  ஹா...  கதையின் முடிவை தலைப்பாகத் தந்து சஸ்பென்ஸ் விடுபடுவதற்கு பெரும்பாலும் நானும் விரும்புவதில்லை.  கதைச் சுருக்கம் படித்து வந்தபோதே முடிவை யூகிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், முதல் சில பாராக்களைப் படிக்கும் போதே கதை எப்படிப் போகும், எப்படி முடியும் என்பதை யூகித்துவிட முடிகிறது, ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. கந்தனுக்கு இருக்கும் மனஉணர்வுகள் ஒரு மருத்துவருக்கும் இருக்குமோ என்கிற எண்ணம் எனக்குள் வரும்.  அவரும் உடல்களைக் கூறு போட்டு படித்தவர், பார்க்கிறவர்.  முடிவு என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், பெரும்பாலோர்க்கு அதுவும் அறுவைசிகிச்சை மருத்துவர்கள்களுக்கு, போஸ்ட்மார்ட்டம் செய்பவர்களுக்கு, அங்கு உடன் நிற்பவர்களுக்கும் இருக்குமோ என்று தோன்றியதுண்டு.

      அவர்களுக்கு டிப்ரஷன் வரும் வாய்ப்பும் உண்டு என்று சொல்லப்படுகிறது.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. பிரியம்  கதைச்சுருக்கம் பாதியிலேயே நின்று விட்டது போல உனர்வு!  கதையை யூகிக்க முடியாத சுருக்கம்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், நான் அதை அடித்தேன், கடைசியில் எடுத்துவிட்டேன். கதை முழுவதையும் சொல்லிவிட்டேனோ என்று. ஏனென்றால் கதை அப்படியானது. அப்பகுதியைச் சொல்லிவிட்டால் யூகிப்பது வெகு எளிது. இப்ப நீங்க சொன்னதைப் பார்த்ததும், அதைக் கொஞ்சம் கொடுத்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. பார்க்கிறேன் கொஞ்சமேனும் சேர்ப்பதற்கு.

      கீதா

      நீக்கு
    2. ஸ்ரீராம் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன். முடிஞ்சா பாருங்க

      கீதா

      நீக்கு
    3. பார்த்து விட்டேன்.  புதிதாக சேர்த்திருப்பது என்பது சிறிய எழுத்துகளிலிருந்தே தெரிகிறது!!

      கதை இப்போது இன்னும் கொஞ்சம் மனதில் விரிகிறது.

      நீக்கு
    4. நன்றி ஸ்ரீராம். எழுத்தும் மாற்றிவிட்டேன். அது நேரடியாக ப்ளாகரில் அடித்ததால் அப்புறம் இங்கு வந்து பார்த்தப்ப சின்னதாக இருந்ததும் மீண்டும் சென்று அதை வேர்டில் போட்டு ஃபான்ட் மாற்றி சேர்த்துவிட்டேன்.

      கீதா

      நீக்கு
  6. ஒரு சிறப்பான பணி பொறுமையாக செய்து முடித்திருக்கிறீர்கள்.  பெரிய காரியம்.  பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். வேறு யார் வராங்களோ இல்லையோ, நீங்க, கோமதிக்கா, வெங்கட்ஜி, வந்து ஊக்கம் கொடுத்துவிடுகிறீர்கள்.

      கமலாக்கா பிஸி போல. இல்லைனா வந்துடுவாங்க.

      இந்தப் பதிவை விடுங்க......போன பதிவு வைத்தியநாதேஸ்வரர் கோவில் பதிவுக்கும் கூட.....நெல்லையும் பிஸியோ என்னவோ. அல்லது நம்ம பதிவு எல்லாம் ஸோ ஸோ...இதெல்லாம் பதிவா....இதுக்கு எல்லாம் எதுக்கு கமென்ட் என்று நினைத்திருக்கலாம்....ஹாஹாஹா...

      கீதா

      நீக்கு
    2. அதனாலென்ன...  வருபவர்கள் வரட்டும்.  நம் கடமைய நாம் செய்வோம்...

      நீக்கு
    3. ஆமாம்....

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    4. கீதா ரங்கன் க்கா... பதிவை ஒருவர் நினைவுபடுத்தும் நிலையில் நான் சமீப வாரங்களாக இருப்பது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது.

      எனக்கு எதிலாவது இறங்கிவிட்டால் தீவிரமாக அந்த வேலையில் இறங்கிடுவேன். அதுபோல தொடர்ந்து செய்யும் வழக்கத்தை விட்டுவிட்டால் மீண்டும் ஆரம்பிக்க ரொம்பவே கஷ்டப்படுவேன். அதனால்தான் இன்று ஞாயிறு நடை ஜிம் வேண்டாம் னு விடமாட்டேன். அதனால் காலை ஐந்து மணியிலிருந்து ஒரு மணி வரை (11-12 வகுப்பு, அதன் பின்பு உணவு) பிஸி.

      பிறகு நான் யோகா documentation, என் பதிவுகளுக்குப் படிப்பது என நேரம் கிடைக்கலை. Sorry

      நீக்கு
    5. பதிவு ஸோ ஸோ அப்படீல்லாம் சும்மாகூட எழுதாதீங்க. அப்படி யார் பதிவையும் ஒருநாளும் நினைக்கமாட்டேன்.

      நீக்கு
    6. நெல்லை, இது எனக்கும் பல சமயங்களில் ஏற்படுகிறது. கோமதிக்கா பாவம் அவங்க போட்ட பதிவை எனக்கு நினைவுபடுத்துவாங்க.

      தினமும் வரும் பதிவுகள் மனதில் பதிந்துவிடுகின்றன. எபி மற்றும் வெங்கட்ஜி மீண்டும் போடத் தொடங்கியிருப்பதால். மட்டுமல்ல அவர் எனக்கு வாட்சப்பில் கொடுத்துவிடுவார் லிங்.

      இங்கு வரவங்களே 4 , 5 பேர் அதான் உங்களைக் காணலைன்னு வம்புக்கு இழுத்தேன்!

      //எனக்கு எதிலாவது இறங்கிவிட்டால் தீவிரமாக அந்த வேலையில் இறங்கிடுவேன். அதுபோல தொடர்ந்து செய்யும் வழக்கத்தை விட்டுவிட்டால் மீண்டும் ஆரம்பிக்க ரொம்பவே கஷ்டப்படுவேன். //

      இது மீக்கும் உண்டு நெல்லை. இப்ப எனக்கு நேரம் சிரமமாக இருபப்தற்குக் காரணமும் இதேதான். வீடியோ வேலைகள்...துளசிக்கு நோட்ஸ் அவர் அனுப்புவதை அடித்து கரெக்ஷன் பார்த்து ஆங்கில ப்ளாகில் போடுவது அதற்கான அவர் அனுப்பும் குரல் பதிவு வீடியோ போடுவது என்று ...

      ஹையையோ ஸாரி எல்லாம் வேண்டாம் நெல்லை. நமக்குப் பரிச்சயமானவங்க நெருக்கமானவங்க வரலைனா வருமே அந்த ஃபீலிங் தான்.

      ஓ யோகா டாக்குமென்டேஷன் பண்றீங்களா சூப்பர். நான் மாலையில் வருவது சிரமமாகிவிடும். காலையில் இடையிடையே ப்ளாக் வந்து போய்விடுகிறேன் அதன் பின் மற்ற வேலைகள் என்று.

      நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
    7. பதிவு ஸோ ஸோ அப்படீல்லாம் சும்மாகூட எழுதாதீங்க. அப்படி யார் பதிவையும் ஒருநாளும் நினைக்கமாட்டேன்.//

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  7. ஜனனம் கதை.. வரலாற்றில் வடக்குத் திருவீதிப் பிள்ளை என்பவரின் வாழ்வில் நடந்த நிகழ்வை நினைவுபடுத்தியது. அதை எழுதத் தயக்கமா இருந்தது இப்படியும் நடந்திருக்குமா என. அதை எழுதும் தைரியத்தைத் தருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாற்றில் வடக்குத் திருவீதிப் பிள்ளை என்பவரின் வாழ்வில் நடந்த நிகழ்வை நினைவுபடுத்தியது.//

      ஓ அப்படியா....கிடைத்தால் பார்க்க வேண்டும்.

      //அதை எழுதத் தயக்கமா இருந்தது இப்படியும் நடந்திருக்குமா என. //

      ஆனால் நெல்லை இப்படியான பணிகளில் இருப்பவர்களுக்கு மன உணர்வுகள் பாதிக்கப்படலாம்.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. நெல்லை நீங்க நம்பிள்ளை பற்றி எழுதி வருவீங்களே அப்ப அதில் இவரும் வந்துவிடுவார் இல்லையா? அவர் வாழ்வில் நடந்தது தெரியலை இவர் அவரின் மிக முக்கியமான சீடராயிற்றே. சனிக்கிழமை சொல்ல நினைத்து விட்டுப் போன ஒன்று. அடுத்த பதிவில் அவரும் வருவாரே அப்ப சொல்லலாம் என்றும் நினைத்தேன்.

      அவர் நம்பிள்ளை சீடர் ஸ்ரீகிருஷ்ணபாதர் அவர் பெயர் என்பதும் திருவாய்மொழிக்கு வியாக்னம் கொடுத்தவர் என்பது மட்டுமே தெரியும். அவர் வாழ்க்கை நிகழ்வு தெரியாது.

      கீதா

      நீக்கு
  8. புத்தக விமர்சனம் ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க. இவ்வளவு சிரத்தையா எழுதி இணையத்தில் நான் பார்க்கலை. பாராட்டுக்கள்

    நீங்கதான் படிச்சாச்சே. நான் படிக்கிறேன் என உங்கள்ட புத்தகத்தை வாங்க நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரியலி?!!!

      நன்றி நெல்லை.

      ஓ தருகிறேன் நெல்லை.

      அனுப்பி வேணாலும் தரேன்.

      கீதா

      நீக்கு
    2. ஆனா உங்களுக்கு நேரம் இருக்கான்னு பார்த்துக்கோங்க ஹிஹிஹிஹி

      நான் இப்ப, கண்டிப்பாக ஒரு அரை மணி நேரமாவது புத்தகம் வாசிக்கணும் அல்லது இணையத்தில் வாசிப்பு. நல்ல காணொளிகள் பார்ப்பது கேட்பது கொஞ்ச நேரமே இப்படி வைத்துக் கொள்கிறேன். பெரும்பாலும் வீட்டு வேலைகள் செய்யும் போது காணொளிகளை ஓட விடுவது பெரும்பாலும் பாடல்கள்...

      கீதா

      நீக்கு
  9. ஒண்ணு சொல்லணும். எல்லா விமர்சனப் பகுதியும் கதையை முழுமையாகப் படிக்கத் தூண்டுகிறது. இதுதான் உங்கள் விமர்சனத்தின் வெற்றி. மனம் நிறைந்த பாராட்டுக்கள்

    செல்லப்பா சார் என்ன சொன்னார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒண்ணு சொல்லணும். எல்லா விமர்சனப் பகுதியும் கதையை முழுமையாகப் படிக்கத் தூண்டுகிறது. இதுதான் உங்கள் விமர்சனத்தின் வெற்றி. மனம் நிறைந்த பாராட்டுக்கள்//

      ரியலி? உண்மையாவா? லாக் ஹோ ஜாயேகா!!!???

      நன்றி நெல்லை.

      //செல்லப்பா சார் என்ன சொன்னார்?//

      அவர் பார்த்தாரா என்று தெரியலை நெல்லை. இப்ப அந்தக் குழு ஹேக் ஆனதால் எடுத்தாச்சு. அங்கு கொடுக்க முடியவில்லை. முன்பு கொடுத்த போதும் கூட ஒரு முறை வந்தார் அதன் பின் காணவில்லை.

      அங்கிருப்பவர்கள் எல்லோருமே மிகப் பெரிய எழுத்தாளர்கள். நன்றாகவும் எழுதுகிறார்கள். பக்குவப்பட்ட எழுத்தும் கூட. நான் இப்பதான் முதல் படியில் இன்னும். எனவே எதிர்பார்க்க முடியாது, நெல்லை.

      கீதா

      நீக்கு
  10. விரிவான நூல் விமர்சனம். ஒவ்வொரு கதையையும் இத்தனை விஸ்தாரமாக விமர்சனம் செய்திருப்பது சிறப்பு.

    உங்களது மற்ற பதிவும் நேற்றே படித்தேன். நேற்றும் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம். காலை நேரத்திலேயே சில பதிவுகள் படித்தாலும் கருத்திட முடியவில்லை.

    தற்போது பதிவுகள் படிப்பதற்கான ஆட்கள் குறைவே. எல்லோரும் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி.

      தெரியும் ஜி நீங்க ரொம்ப பிஸி என்று.

      ரீல்ஸ் பற்றி நான் ஒரு சின்ன பதிவுக்கு கருத்துகள் வைத்திருக்கிறேன் உளவியல் ரீதியாக. வரும்.

      நன்றி வெங்கட்ஜி. உங்கள் வேலைப்பளுவுக்கு இடையிலும் வந்து கருத்து சொன்னமைக்கு.

      கீதா

      நீக்கு
  11. கதை விமர்சனங்கள் நன்றாக இருக்கிறது கீதா.
    படிக்கும் ஆவலை தூண்டும்விதமாக இருக்கிறது.
    ஆனால் புத்தகத்தை கையில்தூக்கி வைத்து படித்து வெகு நாட்கள் ஆகி விட்டது.
    படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா. ஆமாம் உங்கள் கஷ்டம் புரிகிறது. நானுமே கணினியில்தான் பெரும்பாலும் வாசிப்பது. இப்படிப் புத்தகங்கள் வந்தால் உண்டு வாசிக்க. நீங்கள் சொல்வது போல் பழக்கம் விடாமல் தொடர வேண்டும்.

      கீதா

      நீக்கு
  12. முதல் இரண்டு கதைகளை எழுதியவர்கள் நெல்லையை சேர்ந்தவர்கள், மகிழ்ச்சி.

    //நல்லதோர் வீணை செய்தே//

    //அனஸின் கருத்தும், "பெண் சுதந்திரம் பற்றிப் பறைசாற்றி நிற்கும் தங்களின் கவிதை அற்புதம். வாழ்த்துகள் மேடம். தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை எதிர்பார்க்கிறோக்ம்"//

    ஊருக்கு உபதேசமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா நம்ம ஊரு.

      அதே தான் கரீக்டு! கோமதிக்கா. கதையின் தலைப்பே சொல்லிவிடுகிறது.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  13. ஓவியம், கர்நாடக இசை, நடனம் காதல் என்று பலபடங்களின் கலவைகள் மனதில் ஓடின!//

    எனக்கும் கதையை படித்த போது எண்ணம் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிவும் கூட அப்படித்தான். கொஞ்சம் படிக்கும் போதே அப்படித் தோன்றத் தொடங்குகிறது.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  14. "இந்த உடம்பும் எரிந்து சாம்பலாகத்தானே ஆகும்" என்றுதான் மனசில் அவருக்குத் தோன்றுகிறது. யாரைப் பார்த்தாலும், "கடைசில எங்கிட்டதானே வரணும்" //

    கந்தனின் ஆசை தன் உடல் வீணாக சாம்பல் ஆவதை விரும்பவில்லை பலருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறார் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லைக்கா அவரது ஆசை வித்தியாசமான ஆசை. கதையின் தலைப்பைப் பொருத்திப் பாருங்க விடை கிடைக்கலாம்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. கந்தன் இறப்பையே பார்த்து கொண்டு இருப்பதால் ஜனனத்தை பார்க்க விரும்புகிறாரோ. சுபா செவிலியாராக இருப்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

      நீக்கு
    3. கரெக்ட்டா பிச்சிட்டீங்க கோமதிக்கா. அதேதான்

      நன்றி கோமதிக்கா...

      கீதா

      நீக்கு
  15. பிரியம் கதை பிரியத்தை நாடும் மனம் தேடி வந்த பிரியத்தை ஏற்று கொண்டு இருக்குமோ?

    அனைத்து கதைகளும் நன்றாக இருக்கிறது ஆசிரியர்களுக்கும், உங்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லைக்கா. முடிவில் வரும் கருத்துதான் ஹைலைட். முடிவு பாதி நம்மால் ஊகிக்க முடியும் முடிவின் இன்னொரு பாதி நம் ஊகத்திற்கு விட்டுவிடுகிறார் ஆசிரியர். ஆனால் நல்ல முடிவு.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. //அவனும் அவளுடன் நடக்கிறான். அந்த நிமிடத்தில் அவனுக்கு யாரையோ பழிவாங்கிவிட்ட வெற்றிக்களிப்பு.//

      மனைவியை பழி வாங்கி விட்ட வெற்றிக்களிப்பா?
      அந்த ஏழை பெண்ணுக்கு உதவி செய்து திரும்புகிறாரா?

      நீக்கு
    3. முதலில் பழிவாங்கிவிட்ட வெற்றிக் களிப்பில்தான் செல்கிறார். கடைசியில் அவருக்கு ஏதோ ஒன்று மனதில் படுகிறது அப்பெண்ணின் நடவடிக்கைகள், அன்பு எல்லாம்.. அவர் என்ன கற்றுக் கொள்கிறார் என்பது நம் யூகம்

      மிக்க நன்றி கோமதிக்கா மீண்டும் வந்தமைக்கு

      கீதா

      நீக்கு
  16. விமர்சனங்கள் நன்றாக செய்திருக்கிரீர்கள். படிக்கத் தூண்டும்படியாக எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. பானுபதி வெங்கடேஸ்வரன்26 ஜனவரி, 2026 அன்று 8:34 AM

    விமர்சனங்கள் நன்றாக இருக்கின்றன. படிக்கத் தூண்டும்படி எழுதியிருக்கிறீர்கள். இதற்கு முந்தய கருத்தும் என்னுடையதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்துவிட்டேன் பானுக்கா.

      நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  18. வணக்கம் சகோதரி

    நீங்கள் பகிர்ந்த போட்டியில் வெற்றி வாகை சூடி வந்த கதைகளின் விமர்சனங்கள் அனைத்துமே மிக அருமையாக உள்ளது. அதன் முடிவுகளும் ஒரளவு ஊகிக்க முடிகிறது. ஆனால் நாம் கதையின் முடிவை வேறு மாதிரி யோசிக்கும் போது, கதையை எழுதிய கதாசிரியரின் முடிவு வேறு மாதிரி இருக்கும்.

    நீங்கள் ஒவ்வொரு கதையையும் சொன்ன விதத்தை ரசித்தேன். மிக அழகாக பொறுமையாக கதாசிரியர்களின் சிறப்புக்களைப் பற்றிக் கூறி, பின்னர் கதைகளையும் அழகாக விமர்சித்து உள்ளீர்கள். சிறப்பாக இப்பணியை எடுத்துக் கொண்டு நிறைவாக ஏழு பகுதிகளாக பதிவுகளை தொகுத்த உங்கள் திறமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும்.

    நான் உங்களின் சில பதிவுகளுக்கு தொடர்ந்து வர இயலாமல் போய் விட்டதற்கு உங்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சென்ற வாரம் எபிக்கு மட்டும் வந்து விட்டு அதிலும் சிலவற்றை மட்டும் படித்து கருத்துரைகள் தந்து விட்டு சென்று விட்டேன். சனி, ஞாயிறு பதிவுகளுக்கு வரவே இயலவில்லை. சிறிது உடல்நல பிரச்சனை, அத்தோடு விடுமுறைக்கு உறவுகள் வீட்டுக்கு வருவது என நாட்களின் நேரம் நகர்ந்து விட்டது. நானும் இரவாவது பதிவுகளுக்கு வந்து விடுவேன். அதுவும் இயலாமல் போய் விட்டது மன்னிக்கவும் சகோதரி.

    உங்களின் விடுபட்ட பதிவுகளை படித்து விட்டு நாளை வருகிறேன் சகோதரி. தொடர்ந்து பல பதிவுகளுக்கு வர முடியாமல் போனதற்கு மன்னிக்கவும் சகோதரி. நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலாக்கா...முதல்ல உங்க உடல் நலம் வேலைகள் முக்கியம். பதிவு இங்க தான் இருக்கப் போகிறது. இதற்கு மன்னிப்பு எல்லாம் கேட்கவே வேண்டாம் அக்கா.

      //நீங்கள் ஒவ்வொரு கதையையும் சொன்ன விதத்தை ரசித்தேன். மிக அழகாக பொறுமையாக கதாசிரியர்களின் சிறப்புக்களைப் பற்றிக் கூறி, பின்னர் கதைகளையும் அழகாக விமர்சித்து உள்ளீர்கள். சிறப்பாக இப்பணியை எடுத்துக் கொண்டு நிறைவாக ஏழு பகுதிகளாக பதிவுகளை தொகுத்த உங்கள் திறமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும்.//

      மிக்க நன்றி கமலாக்கா

      முடித்ததும் ஹப்பாடா ஒரு வழியாக முடித்துவிட்டேன் என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்!!!

      மெதுவா வாங்கக்கா ஒன்றும் பிரச்சனை இல்லை. புரிந்து கொள்ள முடியும்.

      மன்னிப்பு, ஸாரி எல்லாம் தேவையே இல்லைக்கா!!!!!

      கீதா

      நீக்கு