பாதாளேஷ்வரர் கோவிலில் இருந்து மரலேஷ்வரா கோவிலுக்கு மீண்டும் மணலில் நடக்கத் தொடங்கினோம். 0.4 கிமீ தூரம்.
வெயில்
தெரியாமல் இருக்க இப்பாதை முழுவதும் கூரை போட்டிருக்கிறார்கள். கீழே உள்ள படங்களில் கூரை தெரிகிறதா?
பாதையை கூரையுடன் எடுத்த படத்தைக் காணவில்லை!
போகும் வழியில் வலப்புறம் கீழே மிகுந்த ஆழத்தில் 40-50 அடி இருக்குமா? அங்கு கீர்த்தி நாராயண பெருமாள் கோவில் இருப்பது தெரியும். மேலிருந்து சில க்ளிக்ஸ்.
கீர்த்தி நாராயணர் கோவில்
கீர்த்தி நாராயணர் கோவிலுக்கு அடுத்தாப்ல போவோம். இங்கே மேலிருந்து க்ளிக்ஸ் எடுத்துக் கொண்டு போகும் போது வழியில் இடப்புறமும், வலப்புறமும் மரங்களும் மணலும்தான். பாலைவனச்
சோலை போன்று இருக்கிறது.
இடப்புறம் இப்படி ஒரு அறிவிப்புப் பலகை. இப்பண்டைய கோவில்களுக்கோ, நினைவுச்சின்னங்களுக்கோ, இப்பாதுகாக்கப்பட்ட பிரதேசத்திற்கோ சேதம் விளைவிப்பவர்கள் கடும் தண்டனைக்கு உட்படுவர். சிறைத்தண்டனை அல்லது 2000 ரூ அபராதம் அல்லது இரண்டும் என்ற அறிவிப்பு.
எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டே நடந்து இதோ மரலேஷ்வரா கோவிலை நெருங்கிவிட்டோம்.
கோவில் 25-30 அடி ஆழத்தில் இருக்கிறது. எனவே
முந்தைய பாதாளேஸ்வரர் போல இங்கும் படிகள் இறங்கித்தான் செல்ல வேண்டும். படம் எங்க போச்சு
என்று தெரியவில்லை!
மரலு
என்றால் கன்னடத்தில் மணல். மணலில் புதைந்து கிடந்த மணற் கற்களினால் ஆன லிங்கம் என்ற
பொருளில் மரலேஷ்வரா என்றும் சைகதேஸ்வரா - சைகட ஷிலா - Sand stone மணலினாலானவர் என்றும் சொல்லப்படுவதாலும் இப்பெயர்.
மிகச் சிறிய கோவில். இக்கோவிலும் கிழக்கு
நோக்கி உள்ளது. கங்க மன்னர்கள், மற்றும் ஹொய்சாளர்களின் பங்கு இருக்கிறதாக வரலாறு சொல்கிறது.
இங்குள்ள சிவலிங்கம் பிரம்மாவால் பிரதிஷ்டை
செய்யப்பட்டு வழிபடப்பட்டதாகக் கருதப்படுகிறது. கொஞ்சம் பெரியதாக இருக்கிறார். முன்பக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில்
மகேஸ்வரர், சூரியன், விநாயகர், சுப்பிரமணியர், வீரபத்ரர், அம்பிகை மற்றும்
நவக்கிரங்கள் இருக்கிறார்கள்.
கோவிலுக்குள் படங்கள் எடுக்க அனுமதி இல்லை. கருவறைக்கு வெளியே சில எடுத்தேன். எடுக்கலாமா கூடாதா என்று தெரியவில்லை.
இப்படம் சரியா வரலை...பயந்துகொண்டே எடுத்ததால்...
கோவில் பிராகாரத்தைச் சுற்றி...
கீழே உள்ளவை, கோயிலுக்குப் படி இறங்கி ஏறும் இடத்தில் சிவலிங்கமும் நந்தி எம்பெருமானும்...
சில திருஉருவங்கள் மண்ணில் புதைந்து...சில சிதைந்து...
கீர்த்தி நாராயணர், வைத்தியநாதேஸ்வரர் கோவில்களுக்கு, பாதாளேஸ்வரர் கோவிலில் இருந்து வரும் போது வலப்பக்கம் திரும்ப வேண்டும். இடப்பக்கம் (மூலை) இருக்கிறது இக்கோவில். இக்கோவிலில் இருந்து படி ஏறினால் நேராகச் செல்ல வேண்டும். மீண்டும் மணல் பாதையில்....
இந்த இடத்தில் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள்
விற்கும் சிறிய கடை இருக்கிறது. நாங்கள் தண்ணீர் பாட்டில் மட்டும் வாங்கிக் கொண்டு
நடக்கத் தொடங்கினோம்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் தங்கள் கைவண்ணத்தில் துல்லியம். மணலில் கால்கள் புதைய நடந்து சென்ற தூரம் 4 கி.மீட்டர்.? அம்மாடியோ..! மேற்கூரை இருந்தாலும் மணலின், சூடு லேசாக தெரிந்திருக்குமே ..!
கோவில் அமைப்பு நன்றாக உள்ளது. கோவிலின் வரலாறும் அறிந்து கொண்டேன். கீழே இருந்த கீர்த்தி நாராயணர் கோவில் படங்களும் மிக அழகாக இருந்தன.
மரலேஷ்வரா கோவிலில் கருவறைச்சுற்றுக்கு வெளியே எடுத்த படங்களும் அருமையாக உள்ளது. நம் கணமதியை தரிசித்துக் கொண்டேன்.
ஒவ்வொரு கோவிலும், இடைப்பட்ட தூரங்களும், அதன் அமைவிடமும் பார்க்க வியப்பாக உள்ளது. இப்படியான இடங்களுக்கும் மக்கள் அதிகமாக வருகிறார்களா என்பது தெரியவில்லை. விபரமாகச் சொல்லி எங்களை அழைத்துச் செல்லும் உங்கள் புண்ணியத்தில் நானும் உடன் வந்து இறைவனை தரிசித்துக் கொள்கிறேன்./ கொண்டேன் இனி அடுத்து தரிசிக்கச் செல்லும் ஆலயத்தின் வரலாற்றை படிக்கப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
4 கிலோமீட்டர் இல்லைக்கா. .4. அரைக்கிலோமீட்டருக்கும் குறைவுதான். புள்ளி கண்ணுக்குத் தெரியலையோ? அந்தப் அந்தப் படத்தில் தெளிவாக இருக்கு கமலாக்கா...இப்ப நான் எழுதியதில் 0 சேர்த்துவிட்டேன். புள்ளி விடுபட்டிருந்திருக்கு முற்றுப்புள்ளியை புள்ளி என்று எடுத்துக் கொண்டுவிட்டதால். இப்ப கரெக்ட் பண்ணிட்டேன்.
நீக்குமக்கள் அதிகமாக வருகிறார்கள், கமலாக்கா. புகழ்பெற்ற சுற்றுலாத்தலம்.
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
படங்கள் சிறப்பாக உள்ளது.
பதிலளிநீக்குவிளக்கவுரை வழக்கம் போல நன்று.
நன்றி கில்லர்ஜி......
நீக்குகீதா
மரலு என்றால் மரம் என்று நினைத்திருக்க, கன்னடத்தில் மணல் என்பது ட்விஸ்ட்! அர்த்தங்கள், நாமொன்று நினைக்க அதுவொன்று இருக்கிறது!
பதிலளிநீக்குஎனக்குப் பழைய வீட்டிற்கு அடுத்திருந்த வீட்டுக் குழந்தைகள் சொல்லிக் கொடுத்ததுதான். நானும் முதலில் மரலு என்றால் மரம் என்று நினைத்தேன்? ஏன்னா பக்கத்துல ஒரு தெலுங்கு குடும்பம் இருந்தாங்க அவங்க லு அதிகம் போட்டதால்!!! அப்படி நினைத்தேன்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
கீர்த்தி நாராயணர் கோவில் மண்டபம், கோவில் எல்லாமே அழகு. இங்கிருந்து பார்ப்பதால் சிறியதாகத் தெரிகிறது என்றாலும் நெருங்கிப் பார்த்தாலும் பெரிய கோவிலாக இருக்காது என்றே தோன்றுகிறது. மூர்த்தி சிறிய, ஆனால் கீர்த்தி பெரிய கோவில்கள்.
பதிலளிநீக்குரொம்பப் பெரிய கோவில் இல்லை ஸ்ரீராம். உள்ளே மூர்த்தி பெரியவர்! ஓ மூர்த்தி என்றால் சிவன்? இக்கோவிலில் நாராயணர். பெரிய உருவம். இராமாநுஜர் எல்லாரும் உண்டு. ஆனால் படம் எடுக்க விடவில்லை. கீர்த்தி பெற்ற கோவில்கள். வைத்தியாநாதேஸ்வரரும் அழகு கோவில்...
நீக்குகீதா
அந்த மரத்தை ஸ்கேன் செய்தது போல இருக்கிறது. உள்ளிருக்கும் பகுதிகள் தெரிய, ஏதோ காயம் பட்டுக் கொண்டது போலவும் இருக்கிறது.
பதிலளிநீக்குஅந்த மரத்துக்கு உள்ளே ஏதோ பிரித்துப் பார்த்தது போல இருக்கிறது...ஒவ்வொரு படத்துக்கும் எழுத நினைத்து, டிலே ஆகிறதே என்று பதிவு போட்டேன். பிரபஞ்சத்திடம் நேரம் கடன் கேட்கலாமா என்று!!!! ரசித்து எழுத முடியலை...
நீக்குகீதா
இது மாதிரி வரலாற்றுச் சின்னங்களையும், சுற்றியுள்ள இயற்கையையும் பாழ்படுத்துபவர்களுக்கு வெறும் இரண்டாயிரம் ரூபாய்தான் அபரதமா? கொடுமை. மைனர் குஞ்சு நினைவுக்கு வருகிறார்.
பதிலளிநீக்குஹாஹாஹாஹா.....எனக்கும் தோன்றியது 3 மாசம்தான் சிறைத்தண்டனையாம் இல்லைனா 2000 இல்லைனா ரெண்டும்...இதெல்லாம் ஜூஜூபி.
நீக்குசும்மா ஸ்ரீராம் இதெல்லாம் இப்படி அறிவிப்பு வைப்பாங்க. அப்புறம் பெரியவங்க யாராவது கை வைச்சா?
கீதா
கோவில் படங்களும் சிற்பங்களும் அழகு.
பதிலளிநீக்குபழமையைச் சொல்கின்றன.
சரியாய் பாதுகாப்பதில்லை போல தெரிகிறது.
பராமரிப்பு போதாது. ஆனா சொல்றாங்க மழைக்காலங்களில் மணல் சூழும் மீண்டும் அதை எல்லாம் அகற்ற வேண்டும் என்று தெரியலை இப்பவும் அப்படியான்னு.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
கீர்த்தி நாராயண பெருமாள் கோவிலை மேலிருந்து எடுத்த படங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குநினைவு சின்னங்களை சிதைப்பவர்களுக்கு தண்டனை என்பது நல்லதே பழமை காக்கப் படும்.
பைரவர் படம், மற்றும் படங்களும் நன்றாக இருக்கிறது.
மணலில் கால் புதைய நடப்பது கஷ்டமாக இருந்து இருக்கும் இல்லையா?
நன்றி கோமதிக்கா.
நீக்குமேலிருந்து பார்க்கவும் அழகு. கீழிருந்து போய் அருகில் பார்க்கவும் அழகு.
மணலில் கால் புதைந்து நடப்பது கொஞ்சம் மெதுவாக நடந்தேன் அவ்வளவுதான் கா இப்ப வரை ஓகே. போகப் போக என்னாகும்னு தெரியலை. நல்ல பயிற்சின்னும் சொல்லலாம்!!
அதன் பின்னும் கால்வலி எதுவும் இல்லை.
நன்றி கோமதிக்கா
கீதா
//மரலு என்றால் கன்னடத்தில் மணல். //
பதிலளிநீக்குகன்னடம் கொஞ்சம் படித்து கொண்டேன்.
//மணலில் புதைந்து கிடந்த மணற் கற்களினால் ஆன லிங்கம் என்ற பொருளில் மரலேஷ்வரா என்றும் சைகதேஸ்வரா - சைகட ஷிலா - Sand stone மணலினாலானவர் என்றும் சொல்லப்படுவதாலும் இப்பெயர்.//
மணலினாலானவர் மரலேஷ்வராவை மனதில் நினைத்து வணங்கி கொண்டேன்.
அடுத்த பதிவை தொடர்கிறேன்.
முதலில் ஆங்கிலத்தில் எழுத்துகளைப் பார்த்ததும் மாரலேஷ்வரா என்று நினைத்தேன் அதன் பின் தான் தெரிந்தது மரலேஷ்வரர் என்று.
நீக்குஉள்ளே லிங்கம் அப்படித்தானா என்பது தெரியவில்லை. அலங்காரம் இருந்ததால் ரொம்பத் தெரியவில்லை. கொஞ்சம் பெரிய திருஉருவம்.
நன்றி கோமதிக்கா
கீதா
படங்களும் தகவல்களும் சிறப்பு.
பதிலளிநீக்குமரலு - மணல் - புதிதாகத் தெரிந்து கொண்டேன். தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி.
மிக்க நன்றி வெங்கட்ஜி. நேரப் பளுவிற்கு இடையிலும் வந்து கருத்து சொன்னதற்கு
நீக்குகீதா