திங்கள், 17 நவம்பர், 2025

நினைவுப் பூக்கள் - ஜி எம் பி ஸார் - எஸ்தர் அம்மா

 

இறைவனடி சேர்ந்த இருவரது ஆத்மாக்களின் மோக்ஷத்திற்கும், நித்ய சாந்திக்கும் பிரார்த்திப்பதுடன் தீரா துக்கத்திலாழ்ந்த இருவரது  குடும்பத்தினருக்கும் இப்பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் நல்கவும் பிரார்த்தனை செய்வோம். வேண்டிக் கொள்வோம்.

இருவருடனான எங்கள் தொடர்பு பசுமை மாறாத நினைவுகள் நிறைந்தது. முன்பு பகிர்ந்த அந்த இனிய நாட்களை மீண்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது மனதின் வருத்தம் கொஞ்சம் குறையும்தான்.

ஜி எம் பி ஸார்

மதுரையில் நடந்த பதிவர் விழாவில் பங்கெடுக்கவிருந்த அனைவரையும் காண ஆவலுடன் காத்திருந்தும், இறைவன் ஏனோ இறுதி நேரத்தில் செல்லவியலாத சூழலை ஏற்படுத்தி ஏமாற்றத்தைத் தந்தார். விழாவின் போது சந்திக்க முடியாமல் போன சிலரது பெயர்களைக் குறிப்பிட்ட ஜிஎம்பி சார் எங்கள் பெயரையும் குறிப்பிட்ட போது, மனது ஒரே நேரத்தில் துள்ளிக் குதிக்கவும், துவண்டு போகவும் செய்தது.

அதற்கு முன்பே பங்களூரில் உள்ள ஒரு பள்ளியில் எங்களது ஒரு குறும்படம் இட்டு மாணவ, மாணவியருடன் ஆங்கிலத்தில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தார்.  அதுவும் நடக்கவில்லை.

அப்படி, இரண்டு முறை அவரைச் சந்திக்க முடியாத சூழலை முறியடித்து, அவரைக் கடந்த கோடை விடுமுறையின் போது பங்களூர் சென்று சந்திக்க வேண்டும் எனத் தீர்மானித்திருந்தேன். அதுவும் நடக்காமல் போகவே, வருந்தி இருந்த போது ஒருநாள் காதில் தேனாய் பாய்ந்த செய்தி கீதா மூலம் வந்தது.  ஜிஎம்பி சார் பாலக்காடு வருகிறார்! ஜூலை 15, 16 தேதிகளில்!! கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் ஒரு வாய்ப்பு!

முன்பு ஒரு பின்னூட்டத்தில், நினைவலைகள் தப்பியவர்களுக்கு பணிவிடை செய்யும் ஒரு நண்பரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஜிஎம்பி சார் பாலக்காடு வருகையின் போது அவரைச் சந்திக்கப் போவதாகவும் அப்போது அவருடன் நானும் செல்ல வேண்டும் என்று சொன்ன போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அவர் திரு மதுசூதனன் அவர்கள் அவர் நடத்தும் ட்ரஸ்ட் Karunya Geriatric Care Centre is a unit of “ Palakkad Alzheimers’ Charitable Trust  http://www.karunyagcc.org/


-----துளசிதரன்

ஜி எம் பி ஸாருக்கு என் குறும்படத்தில் நடிக்க ஆசை இருந்ததையும் சொல்லியிருந்தார். அதன் பின் விவேகானந்தரைப் பற்றிய Saint The Great எனும் என் குறும்படத்தில் ஜி எம் பி சாரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன். அவரும் மிக்க மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்.  

அப்போது அவரது வீட்டிற்கு நானும் கீதாவும் சென்றோம். அங்கு ஷூட்டிங் முடித்து அவர்களோடு உணவருந்திய நல்ல இனிய நினைவுகள் இன்றும் எங்கள் மனதில் பசுமையாய்.

இனி இந்த நினைவுகள்தான் நமக்கு.

கீதா - அவர் எனக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருப்பார். முடிந்தால் வீட்டிற்கு வாருங்கள் என்று. நான் இரு முறை ஸாரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். அம்மாவுடன் அவ்வப்போது ஃபோனில் தொடர்பிலும் இருந்தேன். ஸாருடனும் அவருக்குக் கேட்க முடியாத போது அம்மா பேசுவார் அவரிடம் சொல்வார். நினைவுகள்...

அவருடன் உங்களுக்கும் நிறைய அனுபவங்கள் இருந்திருக்கும்.

அவரது மறைவிற்கு நம் ஆழ்ந்த வருத்தமும், அஞ்சலிகளும் பிரார்த்தனைகளும். அவர் குடும்பத்தாருக்கும், குறிப்பாக அவர் மிகவும் நேசித்த அவரது மனைவி - நமக்கு அம்மா - இதிலிருந்து மீண்டு வர பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

-------துளசிதரன் மற்றும் கீதா


வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த தாய்

எஸ்தர் அம்மா


நண்பர் விசுவிற்கே சற்று பெருமை கலந்த பொறாமைதான்!  தன் தாயை நினைத்து. ஏனென்றால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் என்ன பேசினாலும், யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல், விசுவைக் கொஞ்சம் பின்னே தள்ளி அவரது அன்னையைப் பற்றி எல்லோரும் பேசி முன்னிருத்தி விடுவதால்! அப்படிப்பட்ட தாய்.... கணவரை இழந்த பின் விடுதியில் சேர்க்கப்பட்டக் குழந்தைகளில் ஒருவரான விசுவிற்கு, பொரி(ருள்) விளங்கா உருண்டைகளைக் கொடுத்து, வாழ்க்கையின் பொருளை விளக்கி, வாக்கையை அர்த்தமாக்கி, உன்னதமான வாழ்க்கைப் பாடத்தைப் புகட்டிய அந்த தாய்.....

தான் பெற்ற பிள்ளைகளிடம் மட்டுமின்றி இந்த உலகத்தில் இருக்கும் அனைவரிடமும், எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி  அன்னமிடும் ஒரு அன்னைக்கு ஏற்படும் உணர்வு. ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்து தன் பிள்ளைகள் அனைவரும் தானே செம்மையாய் வளர வைத்த தாய்! அவர் வேறு யாருமல்ல, நம் நண்பர் திரு விசுவாசம் (விசுAwesome) அவர்களின் தாய், திருமதி எஸ்தர் கார்னிலியஸ்!

மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்காக உழைத்தவர் சேவை செய்தவர்.

விசுவின் அம்மாவோடு மூன்று நாட்கள் தங்கி அவரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்துக் கொடுத்த அனுபவமும் (கீதா) அதன் பின் அவரைப் பற்றிய புத்தகவெளியீட்டு விழாவை விசு அவர்கள் ஏற்பாடு செய்த போது துளசியும் நானும் கலந்துகொண்டோம்.

சுட்டிகள் கீழே.

https://thillaiakathuchronicles.blogspot.com/2015/11/EstherCornelius-Amma-ExtraordinaryWoman.html

https://thillaiakathuchronicles.blogspot.com/2015/06/Esther-Cornelius-Missionary-India.html

எங்கள்ப்ளாகிலும் பாசிட்டிவ் செய்தியில் இடம் பெற்றவர்.  சமீபத்தில் ஆறாவது பூதம் எனும் தளத்திலும் அடையாளப்படுத்தப்படாமல் போற்றப்பட்டவர்.  

https://engalblog.blogspot.com/2015/11/blog-post_7.html

எஸ்தர் அம்மா அமெரிக்காவில் இருந்து வந்தார். விசு எனக்குத் தகவல் கொடுத்திருந்தார் அவர் அம்மா இறைவனடி சேர்ந்துவிட்டார் என்று.

நம் ஆழ்ந்த அஞ்சலிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

------துளசிதரன், கீதா


21 கருத்துகள்:

  1. எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!!

    பதிலளிநீக்கு
  2. ஆழ்ந்த இரங்கல்கள்.  இருவரும் ஒரே நாளில் மறைந்தது சோகம். ஜி எம் பி ஸார் குடும்பத்தாருக்கும் விசு குடும்பத்தாருக்கும் அனுதாபங்கள்.  இந்த வலியைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஜிஎம்பி சாரைக் காணும் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒருவேளை கீதா ரங்கனுக்குச் சொல்லியிருந்தால் இருவரும் சென்றிருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஏனோ எனக்கு அது தோன்றவேயில்லை.

    எஸ்தர் அவர்கள் யாரென்று எனக்கு முதலில் விளங்கவே இல்லை. பிறகு ஓரிரு வரிகள் படித்ததும் எனக்குப் புரிந்துவிட்டது. விசு அவர்கள், தன் தளத்தில் அம்மா அமெரிக்கா வந்ததையும், ஒரு ஹோமில் இருப்பதையும், தான் போய்ப் பார்த்ததையும் ஒரு பதிவில் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது.

    இருவரின் ஆத்மாவும் சாந்தியடைவதாகுக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை நீங்க ஓரிருமுறை கேட்டீங்க. ஆனால் அதன் பின் நாம அதைப் பற்றி பேசலை.

      ஆமாம் எஸ்தர் அம்மா அவங்களே தான்.

      கீதா

      நீக்கு
  4. ஜிஎம்பி சார் வீட்டில் நீங்கள் எடுத்த படம் (குறும்படம் என்று நினைவு) போன்றவை என் நினைவுக்கு வருகின்றன. எல்லோராலும் விரும்பப்படுவதே சிறப்பு அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை துளசியும் நானும் குழுவினரும் போயிருந்தோம்.

      எல்லோராலும் விரும்பப்படுவதே சிறப்பு அல்லவா?//

      கருத்துகள் மாறுபடலாம் ஆனால் விருப்பம் என்பது வேறு இல்லையா..

      கீதா

      நீக்கு
    2. ஒத்த கருத்துடையவர்கள் உலகத்திலேயே இல்லை. நல்லெண்ணம்தான் முக்கியம் என நினைக்கிறேன்.

      நீக்கு
    3. ஆமாம், நெல்லை, ஒத்த கருத்துடையவர்கள் யாரும் இருக்க முடியாதுதான். நல்ல எண்ணம் தான் முக்கியம் நீங்க சொல்லியிருப்பது போல.

      அதுவே சிறப்புதான்

      கீதா

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    ஜிஎம்பி சாரின் மறைவு அதிர்ச்சியை தந்தது. அவரின் ஆத்மா இறைவன் நிழலில் இளைப்பாற பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.அவரை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு அனுதாபங்கள். அவர் பிரிவை தாங்கும் சக்தியை இறைவன் அவர் குடும்பத்தினருக்கு தர வேண்டும்.

    மற்றொருவரைப்பற்றி கேள்விப்பட்டதில்லை. அவரின் ஆத்மாவும் இறைவன் நிழலில் இளைப்பாறவும் , வேண்டிக் கொள்கிறேன் அவர் குடும்பத்தினருககும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். நன்றி.

    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கமலாக்கா இருவர் குடும்பத்திற்கும் நம் அஞ்சலிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவிப்போம்

      கீதா

      நீக்கு
  6. ஆழ்ந்த இரங்கல்கள் சாரின் மனைவியிடம் பேசினேன் என்னை நினைவு வைத்து எங்கள் வீட்டுக்கு வந்ததை மறக்க முடியாது என்றும் சொன்னார்கள் . நானும்சாரின் நினைவுகளை பகிர்ந்நு கொண்டேன் . நல்ல மனிதர் கொள்ளு பேத்தி பிறந்து இருக்கிறது என்று மகிழ்ந்தார் என்றார்கள். பேரன் பேத்திகள் எல்லோராலும் விரும்ப பட்ட தாத்தா.

    எஸ்தர் அம்மாவுக்கும் என் அஞ்சலிகள் நல்ல மனம் படைத்தவர்களை தெரிந்து கொண்டேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பேரன் பேத்திகள் எல்லோராலும் விரும்பப்பட்ட தாத்தா.

      நம் வருத்தங்களையும் அன்சலிகளையும் தெரிவித்துக் கொள்வோம்

      கீதா

      நீக்கு
  7. நல்ல நினைவுகளை பகிர்ந்நு கொண்டீர்கள் துளசிதரன் சகோ
    நீங்கள் அவர்கள் வீட்டுக்கு போய் இருந்த பதிவு படித்து இருக்கிறேன்.
    கோமதிஅரசு
    இதற்கு முன் போட்டதும் கோமதி அரசுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய கருத்தும் கோமதி அக்கா நீங்கள் தான் என்பது கருத்து வெளியிட்ட பிறகு புரிந்தது. அதனால்தான் அங்கு பெயர் வராமல் போய்விட்டது.

      அம்மா நன்றாக எல்லாம் நினைவு வைத்துக் கொண்டிருப்பார்.

      நம் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்வோம்

      கீதா

      நீக்கு
  8. இரண்டு நல்ல உள்ளங்கள் நம்மை விட்டு பிரிந்தன...... மறக்க முடியாத மனிதர்கள்....... எனது பல பதிவுகளில் GMB அவர்களுடைய பின்னூட்டம் இருக்கும். அவருடைய திறமையும் அவரது பண்பும் அலாதியானது....

    அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு மன அமைதி கிடைக்க எனது பிரார்த்தனைகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி.

      நம் பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொள்வோம்

      கீதா

      நீக்கு
  9. எஸ்தர் அம்மா பதிவை மீண்டும் படித்து வந்தேன் அதில் என் மறுமொழியும் இருக்கிறது.
    அருமையான பதிவு புத்தகம் வந்து இருக்கும் இப்போது. 2015ல் போட்ட பதிவு, அதனால் இப்போது புத்தகம் வந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா நீங்கள் அப்பவும் கருத்து போட்டிருந்தீங்க.

      புத்தகம் அப்போதே வந்துவிட்டது, கோமதிக்கா

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  10. இருவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு