திங்கள், 27 அக்டோபர், 2025

லுஷிங்டன் பாலம் - Lushington Bridge - காவேரி கட்டே - Kaveri Katte

மத்தியரங்கம், சிவனசமுத்திரம் தலக்காடு என்று தொடங்கியிருந்தேன். இப்போது கடைசியில் பார்த்த தலக்காடு பற்றி எழுதி முடித்திடலாம் என்று எழுதத் தொடங்கிய போது, ஒரே ஒரு இடம் மிகவும் அழகான இடம் பற்றி மட்டும் உங்களுக்குக் காட்டிவிட்டு தலக்காடு போய்விடலாம். சரியா?

மத்யரங்கம், சிவனசமுத்திரம் போகும் வழியில் மத்யரங்கம் அருகில் இருக்கும் Sathegala/Sathyagala (ஸத்தேகலா? இந்தக் கிராமம் வைணவ குரு ஸ்ரீ வேதாந்த தேசிகனால் புகழ்பெற்ற கிராமம்) எனும் கிராமத்தின் அருகில் இருக்கும் மிக அருமையான இடம்இப்பகுதி முழுவதுமே காவிரியின் ஆட்சிதான்

இந்த இடத்தில் காவிரியின் குறுக்கே பிரிட்டிஷ் காலத்தில் 1700ல் கட்டப்பட்ட முதல் பாலம் என்றும், இல்லை 1818ல் கட்டப்பட்ட பாலம் என்றும் சொல்லப்படுகிறது.  

லுஷிங்டன் பாலத்தின் வலப்பக்க  முனை, தெரிகிறதா? சாலையிலிருந்து இறங்கியிருந்தால் அந்தச் சிறு கோவிலின் அருகில் சென்று பாலத்தின் மீது நடந்திருக்காலாம். 

இப்படத்தில் பாதை தெரிகிறதா? போகத்தான் முடியலை படமாவது எடுப்போமே என்று க்ளோஸப்!!

1835ல் Lushington Bridge - லுஷிங்டன் பாலம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் பொதுவாக அதன் முந்தைய பெயரான  Wellesley Bridge, வெல்லெஸ்லி/வெஸ்லி பாலம் என்றும் சொல்லப்படுகிறது. நான் இதை லுஷிங்டன் பாலம் என்றே வைத்துக் கொள்கிறேன். ஏனென்றால் கீழே கறுப்புநிற எழுத்தில் உள்ளதை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். 

லுஷிங்டன் பாலம் - முழு வடிவத்தையும் எடுக்கும் முயற்சி. 

நிழற்படத்தில் பாலம் முழுவதும் எடுக்க முடியவில்லை அதனால் ஒரு சிறு காணொளி 

லுஷிங்டன் பாலத்தின் நீளம் 400 மீ. ஆற்றின் வெள்ள வேகத்தைத் தாங்கும் வகையில் அக்காலத்தில், கற்களை ஒரு வடிவமாக வெட்டி, செதுக்கி  வடிவமைத்து, (Stone Girders)  கற்களால் ஆன உத்தரம் அதைத் தாங்கி  நிற்கும் வகையில் இணைத்துக் கட்டியுள்ளதால் Engineering Marvelous என்று சொல்லப்பட்டது. குறிப்பாக காவிரி பாயும் இப்பகுதியில் பாறைகளால் ஆன படுகை ஆற்றுப்படுகை. அப்பாறைப் படுகையின் மீதுதான் இப்பாலம் எழுப்பப்பட்டிருக்கிறது.

பிரிட்டிஷ் கால பாலத்தின் இடப்பக்க முனை தூரத்தில் தற்போதைய பாலத்தின் சாலையை ஒட்டி தெரிகிறதா? அந்த இடத்தில் இறங்கினால் ஒரு ஒற்றையடிப் பாதை இருக்கிறது. காரில் இருந்து க்ளிக்கினேன். ஓட்டத்தில் சரியாக வரவில்லை. இந்த இடத்திலும் சாலையிலிருந்து இறங்கியிருந்தால்  பாலத்தின் மீது நடந்து வலப்பக்க முனைக்கு வந்து பாலத்தின் அடியில் இறங்கி தூண்களின் வடிவத்தை படம் எடுத்திருக்கலாம். ஆனால் அன்றைய திட்டத்தின்படி நேரமில்லை. அந்தத் தூண்களில் அழகான சிற்பங்கள் இருப்பதாக அறிய நேர்ந்தது. வேறொரு முறை நம்மவருக்கு ஐஸ் வைத்துச் சென்று வர வேண்டும். தண்ணீர் அதிகம் இல்லாத காலத்தில். அப்போதுதான் இறங்கிப் பார்க்க முடியும்.

தற்போதைய பாலம், சாலை இதற்கு முந்தைய படத்தில் தெரிகிறது இல்லையா? பாலத்தின் மறுபுறம் காவிரி

2018 ல் காவிரி வெள்ளத்தில், லுஷிங்டன் பாலத்தின், கிட்டத்தட்ட 40 அடி, பகுதி அடித்துச் செல்லப்பட்டதாம், தற்போது ஓரளவு மீட்டெடுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதும் தெரிந்தது என்றாலும்.....

பார்த்த போது எந்தவிதப் பராமரிப்பும் இல்லாமல் பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்ட பாலமாகவே அழிந்து வருவதாகத் தோன்றியது.

இந்த இடத்தில் மேலே உள்ள படங்களில் ஒரு மொட்டை மரம் இருக்கிற்தே அது என்னவோ என்னைக் கவர்ந்தது. அதை ஒரு க்ளிக்

ஆஞ்சனேய ஸ்வாமி கோவில். அதன் மேலே அழகான யானை வடிவம்
-----------

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் - மேலே சொல்லியிருந்த - "ஏனென்றால் கீழே கறுப்புநிற எழுத்தில் உள்ளதை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்" அதுதான் இங்கே

லுஷிங்டன் பாலத்தைப் பார்த்ததும் எனக்கு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள வெல்லெஸ்லி பாலத்தைப் போலவே இருக்கிறதே என்று நான் ரங்கனதிட்டு, ஸ்ரீரங்கப்பட்டினம் போனப்ப ஆட்டோவில் போய்க்கொண்டே ஒரு காணொளி எடுத்ததும் நினைவுக்கு வந்தது. அந்த வெஸ்லி/வெல்லெஸ்லி பாலம் புதுப்பிக்கப்பட்டு பார்க்க நன்றாக இருக்கிறது. அப்பதிவிலும் பகிர்ந்த நினைவு. வரலாற்றில் இதை வெல்லெஸ்லி என்று சொல்வதாலும் பதிவில் முதலில் உள்ள பாலத்தை லுஷிங்டன் என்று சொல்வதாலும் குறிப்பிட்டிருக்கிறேன். இல்லைனா குழப்பம் வந்துரும்னு.

வெஸ்லி பாலம்/வெல்லெஸ்லி பாலம் - ஸ்ரீரங்கப்பட்டினம்

வெஸ்லி பாலம்/வெல்லெஸ்லி பாலம் - ஸ்ரீரங்கப்பட்டினம் - காணொளி
---------------------------

மேலே சொல்லியிருக்கும் லுஷிங்டன் பாலத்திலிருந்து மிக அருகில்  தடுப்பணை (காவிரி கட்டே - Kaveri Katte என்று சொல்கிறார்கள் இங்கு) இருக்கிறது. அணைப்பகுதியில் நிறைய நீர் இருக்கும் சமயம் பரிசல் சவாரியும் இருக்கும். நாங்கள் சென்றிருந்த போது நிறைய நீர் இருந்தது. சுற்றிலும் அழகான இயற்கைக் காட்சிபரிசலில் சென்றிருந்தால் காட்சிகளை இன்னும் நன்றாகப் பார்த்திருக்க முடியும்.

தடுப்பணை

பொதுவாக எனக்குப் படகுபரிசல் சவாரி பயம் கிடையாது. இந்த இடத்தில் சவாரி சென்றால் காட்சிகளை நன்றாகக் காணலாமே என்ற ஆசை ஒரு புறம். ஆனால் இந்த முறை கூடவே தயக்கம். முதலைகள் உண்டு என்று சொல்லப்படும் ஹொக்கேனக்கல் காவிரியிலேயே மூன்று முறை பரிசல் சவாரி சென்ற அனுபவம் இருந்த எனக்கு,  ஒரு சில மாதங்கள் முன்தானே ரங்கனதிட்டுவில் முதலைகள் பார்த்தேன்! சிவனசமுத்திர பகுதியிலும் உண்டு என்பதாலோ என்னவோ மனதிற்குள் தயக்கம். இருந்தாலும் ஓர் ஆசையில் போலாமா என்று கேட்டேன்! நம்மவர் வேண்டாம் என்று சொன்னார். அதனால் நாங்கள் செல்லவில்லைஒரு வேளை அவருக்கும் பயம் இருந்திருக்குமோ?

அழகான இடம். அருகில்தான் சிவனசமுத்திரம் அருவிகளும். ஒரு நாள் சுற்றுலாவிற்கு ஏற்ற இடம்.

அடுத்து தலக்காடு போவோம். அங்கும் காவிரிதான்!!!


--------கீதா

42 கருத்துகள்:

  1. ​படங்களில் மரம் படம் அழகாக உள்ளது. காவேரி ஏன் ஓடாமல் குட்டை போல் தேங்கிக்கிடக்கிறது?

    அது என்ன boting point. boat jetty அல்லது boat pier என்றல்லவா இருக்க வேண்டும்!.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜெ கே அண்ணா.

      காவிரிக்கு என்னவோ ரொம்ப வயதானது போல ரொம்ம்ப மெதுவாக ஓடிக் கொண்டிருந்தாள். சில இடங்களில் ஓட முடியாமல் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள். அவளை யாரு கவனிக்கறாங்க? அவளுடைய ஓட்டத்திற்கு முட்டுக் கொடுத்தால் அவள் இப்படித்தான். கோபத்தை அடக்கிக் கொண்டு ஒரு நாள் பொங்குவாள் எல்லாவற்றையும் இடித்துக் கொண்டு!!!!

      மற்றது பரிசல் இருக்கும் இடம், தடுப்பணை நீர்த்தேக்கம் அண்ணா. வேறு இடத்தில் எங்கேனும் கொஞ்சம் கொஞ்சமாக நீரை பாசனத்திற்குத் திறந்துவிடுவாங்களோ என்னவோ . அது கண்ணில் படவில்லை.

      //அது என்ன boting point.//

      எப்படி எழுதியிருக்காங்க பாருங்க! பல இடங்களில் இப்படி எழுத்துப் பிழைகளைக் காணலாம்.

      //boat jetty அல்லது boat pier என்றல்லவா இருக்க வேண்டும்!.//

      ஹாஹாஹாஹா அண்ணா நான் இதுக்கு என்ன பதில் சொல்ல!!!!!!

      அங்கு என்ன jetty or pier போன்றது எதுவும் கிடையாதே. சும்மா கரையில் பரிசல்தானே. "coracle" boating னு வைச்சிருக்கலாமோ?

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  2. லுஷிங்டன் பாலத்தின் வலப்பக்க முனை, தெரிகிறது காவேரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிகிறது இல்லையா...நன்றி கோமதிக்கா. காவேரி இந்தப் பக்கம் ஓடுகிறது. சற்று தள்ளி தடுப்பணை அங்கு நீர்த்தேக்கம்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  3. எல்லா படங்களும் அருமை காணொளியும் நன்றாக இருக்கிறது . பரிசல் சவாரிக்கு கூட்டி போக ஆள் இருக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா பரிசல் சவாரிக்கு ஆள் இருந்தாங்க. இரண்டு பரிசல்கள் இருந்தன இரண்டு ஆட்கள் இருந்தனர். ஒரு காணொளியில் அவர் பேசிக் கொண்டிருப்பார் ஆனால் ரொம்பத் தெரியமாட்டார்

      படங்கள் காணொளிகளை ரசித்ததற்கு மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  4. பரிசல் கிட்டே ஒருவர் நிற்கிறார் அவர் தானா? காவிரி ஓடுவது அழகு, பின்னனியில மலைசிகரம் அழகு. தடுப்பணை படமும் அழகு. அனுமன் கோவில் மேல் யானை சிலை எதற்கு வைத்து இருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிசல் கிட்டே நிற்பவர் பரிசல் ஓட்டுபவர், அக்கா.

      படங்களை ரசித்ததற்கு மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. ஆமாம் அனுமன் கோவில் மேல் யானை எதற்கு என்று தெரியவில்லை. வித்தியாசமாக இருந்தது.

      பின்னில் மலைகள் அத்தனை அழகாக இருக்கு அக்கா. அந்த இடமே ரொம்ப நல்லா இருந்தது.

      உங்கக் கணினிப் பிரச்சனைக்கு நடுவிலும் கருத்து போட்டதற்கு மிக்க நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  5. இலைகள் அற்ற மரம் அழகு தான் .அதே மாதிரி மரம் கொஞ்சம் இலைகளுடன் அழகாய் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இலைகளுடன் இருப்பதுமே அழகா இருந்தது.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  6. பெயரில்லா கருத்துக்கள் எல்லாம் கீதா நான் தான் போட்டேன்.
    லேப் டாப் கொஞ்சம் மக்கர் செய்கிறது ஐபேடிலிருந்து கருத்துக்கள் கொடுத்தேன்
    அது பெயரில்லாதவளாக காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்தது கோமதிக்கா. பதிலும் கொடுத்துவிட்டேன். அப்படித்தான் அக்கா பெயரில்லா என்று காட்டும்.

      அப்படிக் காட்டினால், உங்களால் டைப் பண்ண முடிந்தால், கருத்தைப் போட்டு அதன் கீழே உங்கள் பெயரைப் போட்டுவிடுங்கள் அக்கா.

      நான் அப்படித்தான் செய்கிறேன்.

      இத்தனை சிரமங்களுக்கிடையிலும் போட்டிருக்கீங்க மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  7. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு இன்னமும் நிற்கும் பாலம் அழகுதான்,  ஆச்சர்யம்தான்.  பாலத்தின் தூண்களை பார்க்க என்று இன்னொரு நாள் வரமுடியுமா என்ன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா அதானே! ஆனால் அப்பகுதியில் இன்னும் சில இடங்கள் இருக்கு ஸ்ரீராம். போகும் போது இதையும் கவர் பண்ணிட்டா போச்சுன்னு!!நினைச்சுக்காவது செய்வோமேன்னுதான்.

      ஆங்கிலேயர்கள் காலத்தவை தானே பல பாலங்கள் இப்பவும் ஆச்சரியம்தான் இன்னும் நிறைய அணைக்கட்டுகள் கூடச் சொல்வதுண்டே.

      கீதா

      நீக்கு
  8. பாலத்தை புகைப்படம் எடுத்து வரும் முதல் படம் முதலே அந்த ஒற்றை மரம் கண்ணைக் கவர்ந்து கொண்டிருந்தது.  உங்களுக்கும் அது பிடித்துப்போய் அதை தனியாகவும் எடுத்து விடீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ல அந்த மரம் கவர்கிறாது இல்லையா.....பார்க்கப் போனால் அந்த ஒற்றை மரத்தைதான் முதலில் எடுத்திருந்தேன், ஸ்ரீராம். பதிவுக்காக பாலத்தின் முழு நீளத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அப்ப இந்த மரமும் வர கடைசில போட்டா நல்லாருக்கும்னு அந்த இடத்தில் சேர்த்தேன்.

      நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  9. பாலத்தின் காணொளி எடுக்க எடுக்க, பார்க்க பார்க்க நீண்டுகொண்டே போகிறது. இப்போது அது சுத்தமாக உபயோகத்தில் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஸ்ரீராம். ஒற்றையடிப் பாதை போல இருக்கு ஆனால் மக்கள் பயன்படுத்துகிறார்களா என்று தெரியலை. பாதையை அங்கு போய்ப்பார்த்தால்தான் தெரியும்.

      கீதா

      நீக்கு
  10. தடுப்பணை படங்கள் அழகு.  பசுமை, நீர்வளம், இயற்கை வளம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். அந்த இடம் முழுவதுமே ஆறு ஓடுகிறது. அணை நீர்த்தேக்கத்தில் நீர் இருந்தது. மலைகள் சுற்றி இருக்கு ஆனால் நாங்கள் சென்ற சீசன் மார்ச் என்று நினைக்கிறேன். சிவனசமுத்திரம் அருவிகளில் தண்ணீர் இல்லை. ஒரு முறை நீர் இருக்கும் போது போய் வர வேண்டும்.

      கீதா

      நீக்கு
  11. பரிசலின் படத்தையும், காணொளியையும் பார்த்ததும் ஒரு ஒற்றைக் குயிலின் ஓசை காதில் கேட்டது.  இளையராஜா....   சட்டென ஒரு பிரமையில் ராதாவும் சிவாஜியும் மனக்கண்ணில் வந்து போனார்கள்!  காணொளி ரொம்பவே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /சட்டென ஒரு பிரமையில் ராதாவும் சிவாஜியும் மனக்கண்ணில் வந்து போனார்கள்! /

      நல்ல கற்பனை சகோதரரே. பரிசல்களையும் அந்த படத்தையும் மறக்க இயலாது. எத்தனையோ படங்களிலும் இந்த மாதிரி பரிசல்கள் பயணம் வந்துள்ளது. எனக்குத்தான் சட்டென உங்களைப் போல படங்களின் அட்டவணைத் தர இயலவில்லை.

      நீக்கு
    2. ஸ்ரீராம் எதிர்பார்த்தேன்!!!!!! ஏன்னா எனக்கும் நினைவுக்கு வந்ததே!

      கூடவே சின்ன சின்ன ஆசை பாடல் ரோஜா, சின்னத்தம்பி படம்? போவோமா ஊர்கோலம்? இன்னும் வேறு ஏதோ பாடலில் கூட வரும்.

      காணொளி ரொம்பவே அழகு.//

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    3. கமலாக்கா, அந்தச் சின்னப் பையனைப் போய் சகோதரரே சகோதரரேன்னு சொல்லிக்கிட்டுருக்கீங்க. ஸ்ரீராம்னு சொல்றதை விட்டு!!!!

      கீதா

      நீக்கு
    4. ஹா ஹா ஹா. சின்னவர் என்றாலும், சகோதரர் தானே. சீதம்ம மா யம்மா, ஸ்ரீ ராமுடு மா தன்றி தியாகராஜ கிருதி நினைவுக்கு வருகிறது. :)))

      நீக்கு
    5. சின்னவர்னா பேர் சொல்லிக் கூப்பிடலாமே!

      எம்மாம் பெரிய இறைவனையே பெயர் சொல்லித்தானே கூப்பிடறோம்!!!!!!!!!!!!!!!!!!!!!! ஒருமையிலும் கூட செல்லமாக!!!!!

      கீதா

      நீக்கு
  12. // ஒரு வேளை அவருக்கும் பயம் இருந்திருக்குமோ? //

    ஹா.. ஹா.. ஹா... அவரையே கேட்க வேண்டியதுதானே! பயமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டாலும் உண்மையான ரீஸன் வந்துரும்? குப்புற விழுந்தாலும் ......மண் ஒட்டாதுங்க!!!!!!

      கீதா

      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. காவிரியும், பாலங்கள் பற்றிய தெளிவான விளக்கங்களுமாக நன்றாக சொல்லியுள்ளீர்கள். இயற்கை சூழ்ந்த இடங்கள். மலைகள், ஓடும் நதி, பசுமை மிகுந்த மரங்கள் என எனக்கும் இவையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் எனத் தோன்றும்.

    அந்த இலைகள் இல்லா மரம் அழகாக இருக்கிறது. நானும் இதைப்போன்று ஒன்றை படமெடுத்து வைத்துள்ளேன்.

    பரிசலில் செல்ல கொஞ்சம் பயம் அனைவருக்குமே வரும். நீர்நிலைப் பகுதியில், படகில் செல்லவே சிறிது பயம் வரும். அதுவும் அந்த சிறிய பரிசலில் இருவர் மூவரைத் தவிர வேறு யாரும் ஏறவும் முடியாதில்லையா?

    உங்களுக்கு "முதலை" பயம். எனக்கு "முதலிலிருந்தே" பரிசலில் ஏற பயம். அப்படியும் ஒரு பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் தீடீரென மந்திராலயம் சென்ற போது, அங்கிருந்து ஸ்ரீ ராகவேந்திரர் தவமிருந்த ஓர் இடத்திற்கு செல்ல துங்கபத்திரா நதியில் கழுத்தளவு தண்ணீரில் நிறைய தூரம் நடந்து பிறகு ஒரு பரிசலில் சென்றோம். எப்படியோ அந்த இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார் ஸ்ரீ ராகவேந்திரர். மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த பயணம் அது. அப்போது என்னிடம் கைப்பேசியில்லை. ஆனால், மனதில் நல்ல தைரியமிருந்தது. குழந்தைகள்தான் ஆளுக்கொன்றாக கைப்பேசிகள் வைத்திருந்தனர். அதில் படங்கள் எடுக்கும் வசதிகளும் இப்போது போல் அப்போதில்லை. அனைவரும் தண்ணீரில் சென்றதால், அவ்வளவாக படங்களும் எடுக்க இயலவில்லை. அந்த பரிசல்களை பார்த்தும் என் இந்த நினைவுகளும் மலர்ந்தது.

    காணொளிகள் நன்றாக உள்ளது. மத்தியரங்கம் செல்லவில்லையா? திரும்பி வரும் போதா? அடுத்து தலக்காடு பதிவை எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இலைகள் இல்லா மரம் அழகாக இருக்கிறது. நானும் இதைப்போன்று ஒன்றை படமெடுத்து வைத்துள்ளேன்.//

      பகிருங்கள் கமலாக்கா .

      //ரிசலில் செல்ல கொஞ்சம் பயம் அனைவருக்குமே வரும். நீர்நிலைப் பகுதியில், படகில் செல்லவே சிறிது பயம் வரும். அதுவும் அந்த சிறிய பரிசலில் இருவர் மூவரைத் தவிர வேறு யாரும் ஏறவும் முடியாதில்லையா?//

      நாங்க மூன்று பேர்தானே இருந்தோம்....நெல்லை நான் வீட்டவர். கூட பரிசலை ஓட்டுபவர் .

      நெல்லைக்கும் எனக்கும் ஆசை இருந்தது கூடவே என்னைப் போலவே நெல்லைக்கும் சிறிய பயம்/தயக்கம் இருந்தது என்று நினைக்கிறேன். பதிவில் சொல்ல விட்டுப் போச்சு!!!!!!

      அவர் மைத்துனருடன் இப்பகுதிக்கு சென்றிருந்த போது அவர் மைத்துனரும் வேண்டாம் என்று சொல்லியதாகச் சொன்னார்.

      //உங்களுக்கு "முதலை" பயம். எனக்கு "முதலிலிருந்தே" பரிசலில் ஏற பயம். //

      ஹாஹாஹாஹா.....வார்த்தை விளையாட்டு ரசித்தேன் கமலாக்கா.

      //துங்கபத்திரா நதியில் கழுத்தளவு தண்ணீரில் நிறைய தூரம் நடந்து பிறகு ஒரு பரிசலில் சென்றோம்.//

      ஓ இப்படி செல்ல வேண்டுமா? அதற்குப் பரிசல் கரையின் அருகிலேயே இருந்திருக்கலாமே இல்லையா? கழுத்தளவு நீர் என்றால், நீந்தத் தெரிந்தவர்கள் நீந்திவிடலாமோ? குள்ளமாக இருப்பவர்கள் எப்படி நடக்க முடியும் கழுத்தளவு நீரில்?!

      ஆற்றின் அடிப்பகுதி எப்படி இருந்தது கமலாக்கா?

      //மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த பயணம் அது. அப்போது என்னிடம் கைப்பேசியில்லை. ஆனால், மனதில் நல்ல தைரியமிருந்தது.//

      நிச்சயமாக மறக்க முடியாத பயணம்தான். இப்போதும் இப்படித்தானா? அப்படினா போய் வர முடியுமா என்று யோசனை. அலல்து வேறு வழிகள் இருக்குமோ? கோவில் என்பதை விட எனக்கு இப்படியான பயணத்துக்காகக் கேட்டேன்.

      உங்களின் அந்த தைரியம் தான் அக்கா முக்கியம். இப்பவும் உங்களுக்குள் இருக்கும் அக்கா.

      அடுத்து தலக்காடு அங்கிருந்து வீடு.

      காணொளிகளை ரசித்ததற்கும் மிக்க நன்றி கமலாக்கா.

      கீதா

      நீக்கு
    2. உண்மையிலேயே அது கொஞ்சம் ரிஸ்க்கான பயணமாக இருந்தது. காலுக்கடியில் மணற்பாங்கான இடந்தான். சிறு சிறு கற்கள் காலை பதம் பார்த்தன. எனக்கு சில இடங்களில், மார்பு வரை, சமயத்தில் கழுத்துவரை என்றிருந்தது. குழந்தைகள் என்னை விட உயரமாததால், அவர்களுக்கு இடுப்பு, மார்பளவை தாண்டவில்லை. ஜாலியாக ஒருவருக்கொருவர் கைபிடித்தபடி பேசிக் கொண்டே நடந்தோம். கொஞ்சம் தூரம் நீரிலேயே நடந்து சென்று பின் ஒரு திட்டில் பரிசலில் (அங்கு நிறைய பரிசில், சிறிய படகு மாதிரியான நீர் ஊர்திகள் இருந்தன.) ஏறி அந்த இடத்திற்கு சென்றோம். அங்கிருந்து நாம் செல்லும் இடம் வரை நீரில் நடந்து பயணிக்க இயலாது. அங்கு ஆழம் அதிகம். அங்கெல்லாம் நீரிலேயே நடந்து போக வாய்ப்பில்லை என பரிசலில் செல்பவர்கள் கூறினார்கள். அங்கு சமயத்தில் நீர் சுழிவுகள் அதிகம். நாங்கள் மீண்டும் தரிசனம் பெற்று திரும்பி வந்த படகே ஓரிடத்தில், ஒரு நீர் சுழலுக்குள் அகப்பட்டு அதன் ஓட்டிகளின் உடல் பலத்தால், ஒரு மாதிரியான திக்கென்ற பயத்துடன், ஒரு வழியாக கரையேறினோம். அது ஸ்ரீ ராகவேந்திரர் அருளாலும், நல்லபடியாக சென்று திரும்பி வந்த திரிலிங்கான பயணம் இப்போது அங்கு என்னென்ன மாற்றங்களோ ...!

      என் கணவர் "நான் வரவில்லை நீங்கள் சென்று வாருங்கள் என்று சொல்லி, நீங்கள் வரும் வரை கோவிலுக்குள் இருக்கிறேன்" என்று சொல்லி விட்டார். எனக்கு குழந்தைகள் வளர்ந்து விட்ட போதிலும், அவர்களை தனியாக விட மனமில்லை. (அப்போது அவர்கள் ஒருவருக்கும் திருமணமாகவில்லை.) குழந்தைகள் "நீ அப்பாவுடன் இங்கேயே இரு" என்ற போதிலும், என் தாய்ப்பாசம் வென்றது.

      அந்த பயணம் சென்று பத்து வருடங்களுக்கும் மேலாகிறது. இப்போது அங்கு செல்ல வேறு வழிகள் உள்ளனவோ தெரியவில்லை நீங்கள் சமயம் வாய்த்தால் சென்று வந்து விபரமாக சொல்லுங்கள்.

      எனக்கும் ஒருதடவை மறுபடியும் மந்திராலயம் போக ஆசை இருக்கிறது. குழந்தைகளுக்கு அவரவர் கடமைகள். செல்ல முடியவில்லை. ஸ்ரீ ராகவேந்திரர் அழைப்பார் என காத்துக் கொண்டிருக்கிறேன். முன்பு ஒரு வருடத்திற்கும் மேலாக அவரை தொழுதபடி நான் வியாழன் தோறும் மௌனவிரதம் இருந்துள்ளேன். அவரின் அருளால்தான் அப்போது தீடிரென அந்த பயணமே அமைந்தது.

      நீக்கு
    3. அக்கா, காலுக்கடியில் மணற்பாங்கானதுதான் இல்லையா? சில இடங்களில் செடி கொடிகள் நம் காலில் சுற்றிக் கொண்டால் கஷ்டமாக இருக்குமே அதான் கேட்டேன். உடைஎல்லாம் நனைந்துதான் போக வேண்டியிருந்திருக்கும் இல்லையா. இதைப் பற்றி இதுவரை மந்திராலயம் சென்றவர்கள் யாரும் சொல்லிக் கேட்டதில்லை அக்கா அதான் எனக்கு ஆர்வம்.

      திரும்பி வரும் போது ஏறிய இடத்தில் இறங்கி மீண்டும் தண்ணீரில் நடக்க வேண்டியிருக்கலையா?

      இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் போன்று இருக்கிறது. நதியில் இப்படியான ஒரு பயணம் என்பதை.

      நீங்கள் சொல்லியிருப்பது போல் இப்ப வேறு வழிகள் வந்திருக்குமாக இருக்கும்.

      உங்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வரும் அக்கா.

      நன்றி கமலாக்கா நான் கேட்டதற்கு விளக்கமாகச் சொன்னதற்கு

      கீதா

      நீக்கு
  14. பதிவை எப்போதோ படித்துவிட்டேன். கருத்து எழுத நேரம் கிடைக்கலை

    பாலத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். படங்கள் எடுத்திருக்கிறேன். லுஷிங்டன் பாலம் என்ற பெயர் இப்போதான் கேள்விப்படுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை. தெரியும் நீங்க போயிருக்கீங்க என்று . நான் இதெல்லாம் அதாவது காவிரி பாயும் செழிப்பான மைசூர் பகுதி, மாண்டியா, மடிக்கேரி, சாம்ராஜ்நகர் இதெல்லாம் என் லிஸ்டில் உள்ளவை. ஒவ்வொன்றாக இப்பதான் பார்க்க முடிகிறது.

      நீங்க ரொம்ப பிசி என்று தெரிகிறது. நெல்லை

      கீதா

      நீக்கு
  15. பரிசல் படங்கள் மிக அழகு

    அந்தப் பரிசலில் போயிருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போயிருக்கலாம்தான். ஆனால் இந்த முதலை பயம் கொஞ்சம் இருந்தது எனக்கு. அதுவும் அதற்கு முந்தின வார இறுதியில்தானே ரங்கனதிட்டில் முதலைகள் பார்த்தேன்.

      இப்பகுதியிலும் உண்டு என்று படித்ததுண்டு. எனவே ஒரு சின்ன பயம். இல்லைனா மற்றபடி பயம் இல்லை. நல்ல ஆழமான நீர்ப்பகுதி.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  16. அந்தப் பகுதியில் காவேரி அழகு. ஆனால் பாறைகள் ஏன் முதலைகளும் இருக்கும் என்று தோன்றியது. ஏதேனும் பிரச்சனை ஆனால் கஷ்டம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை காவிரி இங்கு அழகு. பூமியும் செழிப்பான பூமி. ஆமாம் பாறைகள் முதலைகள் அதிகம். அதனால்தான் ஏதேனும் பிரச்சனை நம்ம நேரம் சரியில்லைனா வந்துச்சுனா கஷ்டம். ஆசை இருந்தாலும் உள் மனம் எச்சரித்தது எனக்கு.

      கீதா

      நீக்கு
  17. கமலா ஹரிஹரன் மேடம் மந்த்ராலயம் பயணம் பற்றிய அனுபவத்தை ரசித்தேன்

    அவர் பதிவாக எழுதியிருக்கலாம்.

    எங்களுக்கு மந்த்ராலயம் செல்லும் வேளை வரவில்லை. விரைவில் கிடைக்கணும் என நினைத்துக்கொள்கிறேன்

    கமலா ஹரிஹரன் மேடம் எடுக்க விட்டுப்போன புகைப்படங்களையும் எடுத்து வருவேன் என நம்புகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை. நானும் ரசித்தேன். எனக்கும் இந்த இடம் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இது மாதிரியான ஆசைகளுக்கு என்ன பஞ்சம்? ஏகப்பட்டது இருக்கு பெரிய லிஸ்ட்.

      போய்ட்டு வாங்க நெல்லை. உங்களுக்கு வாய்ப்பு கண்டிப்பாகக் கிடைக்கும்

      கீதா

      நீக்கு