வெள்ளி, 27 அக்டோபர், 2023

சில்லு சில்லாய் - 15 - இந்தியாவின் சிலிக்கன் நகரம் உணவு நகரமாய் மாறி வருகிறதா - 2

 

35 வருடங்களுக்கு முன் பங்களூர் அனுபவங்கள் என்றால், கிராமத்தை விட்டு வந்த எனக்குச் சென்னை நகரத்திற்கு அப்புறம் ஒரு நகரத்திற்குப் பயணம் என்றால் அது பெங்களூர், மைசூருக்கு ஒரு வாரம் பயணத்தில் சென்றதுதான். சிலவற்றை இப்போதையதுடன் (கறுப்பு நிற எழுத்துகள்) சேர்த்துச் சொல்லியிருக்கிறேன். அப்போது நாங்கள் தங்கியிருந்தது பெங்களூர் ஐஐஎஸ்ஸி வளாகத்துள் இருந்த உறவினர் வீட்டில்.

பெங்களூரில் பார்த்தது லால்பாக் மட்டுமே. அப்போது ஐயங்கார் பேக்கரிகள் மிகவும் பிரபலமாக இருந்தன. முதன் முதலாக நான் சுவைத்தது பெங்களூர் ஐயங்கார் பேக்கரியின் காரபன்/மசாலா பன். பங்களூரிலிருந்து வருபவர்கள் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் “காரபன்” என்று சொல்லும் அளவுக்கு எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

காரா பன் - வீட்டில் செய்தது

பன்னில் ஆங்காங்கே கொத்தமல்லி, புதினா மிகச் சிறிதாகக் கட் செய்து தூவப்பட்டிற்கும் பச்சை மிளகாய், வெங்காயம், சில மசாலா பொருட்கள் மிகச் சிறிதளவில் என்று மாவில் கலந்து செய்திருக்கும் பன். இப்போதும் அதே சுவை இருக்கிறது தற்போதைய வீட்டின் அருகில் இருக்கும் ஐயங்கார் பேக்கரியில். 

(ஒரு காலத்தில் காரபன்/மசாலா பன் என்றால் இதுதான் என்ற நிலை போய் இப்போது கார பன்/மசாலா பன் என்று கேட்டால், மசாலா பன் என்றும் (கீழே உள்ள படம்) ஆலு மசாலா பன் என்றும் அடைத்து செய்யப்பட்டதைக் காட்டுகிறார்கள். நார்மல் ப்ளெய்ன் காரா பன்  என்று சொல்லிக் கேட்க வேண்டியிருக்கிறது.

இப்ப படம் இணையத்திலிருந்து- இப்போது கார பன் என்றால் அல்லது மசாலா பன் என்றால் இதைத் தருகிறார்கள் பல கடைகளில்

இப்போதைய மசாலா பன்னில் பச்சைமிளகாய், கொத்தமல்லி, கருகப்பிலை எள்ளுச் செடியின் இலைகள் – இதுதான் இந்த பன்னின் தனிச் சுவை - என்று சில பொருட்களை சும்மா ஒரு ஓட்டு ஓட்டி அதை தீபவளிப்பட்டாசு சக்கரம் போன்ற உருவில் பன்னின் ஷேப்பின் இடையில் வைத்து பேக் செய்கிறார்கள். (படம்)

வீட்டில் செய்தது - ஆலு மசாலா பன்

ஆலு மசாலா பன் என்றால் உருளைக்கிழங்கு மசாலா அடைத்துச் செய்யப்படும் பன்.)

என்னதான் இப்படி பன்கள் கிடைத்தாலும் ப்ளெய்ன் கார பன் தனி ரகம். ஆனால் நான் சாப்பிடுவது வெகு அபூர்வமாகிவிட்டது.

அப்பயணத்தில், இப்போது நெல்லை ஞாயிறு தோறும் எபியில் எழுதி வரும் கோயில்களுக்கும், ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கும் சென்றிருக்கிறேன். அப்போது சாப்பிட்ட மைசூர் மஸாலா தோசை, கர்நாடகா புளியோதரை, மைசூர்/கர்நாடகா ரசம், ராகி மொத்தே விடுவனா உடனே எப்படிச் செய்கிறார்கள் என்று கற்றுக் கொண்டாச்சு.

அப்போது மேம்பாலங்கள் இல்லை. கார்ப்பரேட் கம்பெனிகளின் பெருக்கம் இல்லை. உணவகங்களும் வெகு குறைவுதான். தேடிச் சென்றுதான் சாப்பிட வேண்டியதாக இருந்தது. நடைபாதை உணவகங்கள் கூட அத்தனை பார்த்ததாக நினைவில்லை. 

இரண்டாவது முறை பெங்களூர் வந்தது என் தம்பி வீட்டிற்கு. இங்கு அவன் பணியில் இருந்த சமயம், யஸ்வந்த்பூரில் இருந்தான். முதல் பயணத்திற்குப் பிறகு பத்து வருடங்கள் கழித்து. மூன்று நாட்கள் தங்கியிருந்த போது தம்பி மனைவியுடன் யெஸ்வந்த்பூர் மெயின் ரோட், மல்லேஸ்வரம் நடைபாதை கடைகள் என்று சும்மா சுற்றி வந்தோம். (இப்போதும் அதே சாலைகள் அதே நடைபாதை கடைகள் என்று ஜே ஜே தான்!) இங்கு பானி பூரி, பேல் பூரி நன்றாக இருக்கும் என்று வாங்கிக் கொடுத்தாள், தம்பி மனைவி. அதே போன்று இங்கு மிளகாய் பஜ்ஜி செய்யும் முறை என்று பஜ்ஜி மிளகாயினுள் ஆம்சூர் பொடி, காரட் எல்லாம் கொஞ்சம் அடைத்து வீட்டில் செய்து கொடுத்தது சுவையாக இருந்திட நானும் அப்படிச் செய்யத் தொடங்கினேன்.

அப்போதிலிருந்தே, இதோ இப்போதும் கூட இங்கு சாட் பிரசித்தி, குறிப்பாக பானி பூரி, பேல் பூரி என்று தெரிகிறது. இப்போது எங்கு பார்த்தாலும் பெரிய கடைகளுக்கு முன்னால் அல்லது ஒவ்வொரு முக்கிலும், ஏன் 200 அடிக்கு ஒரு பானி பூரி, பானிபூரி/மசாலா பேல் பூரி தள்ளுவண்டிகளைப் பார்க்கலாம். மும்பை, தில்லியைப் போன்று பங்களூரிலும் Street Food எனும்  நடைபாதை உணவுக் கடைகள் பெருகியிருக்கின்றன.

அடுத்ததாக 2001ல் பங்களூர் வந்து இங்கு வசித்த போது சுவைத்தவை - நந்தினியில் விற்கப்பட்ட பால் ஸ்வீட், மற்றும் உயரமான சோடா பாட்டிலில் விற்கப்பட்ட ஃப்ளேவர்ட் மில்க். இப்போது இந்த பாட்டில்கள் இல்லை. அப்போது நந்தினியின் இந்த இரண்டும் அத்தனை சுவையாக இருக்கும். அப்போது நந்தினியின் விற்பனைகள் இப்போது போன்று பொருட்கள் இல்லை.

நந்தினியின் இந்த இனிப்பு பாலில் முந்திரிப்பருப்பு கொஞ்சம் அரைத்துச் சேர்த்து கொஞ்சம் பருப்புகளை அப்படியே துண்டுகளாகப் போட்டு, சர்க்கரை சேர்த்துக் குறுக்கி ஸ்வீட்டாகச் செய்வது. ப்ரௌன் நிறத்தில் பால் முந்திரி சுவையுடன் இருக்கும். என் மகனும் நானும் அப்போது  கையில் மேப்பை வைத்துக் கொண்டு ஊர் சுற்றிய நேரங்களில் வாங்கிச் சாப்பிட மகனுக்கு இந்த ஸ்வீட் ரொம்பப் பிடித்துப் போனது. 

மகனுக்குப் பால் கலந்த இனிப்புகள் மிகவும் பிடிக்கும் என்பதால் நான் பெரும்பாலான இனிப்புகள், கேக்குகளில் பால் பவுடர் சேர்ப்பது வழக்கமாகிவிட்டது. “பாட்டியும் (என் அம்மா), நீயும் செய்யற ஸ்வீட்மா” என்று வெளியில் சென்ற போதெல்லாம் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்த நந்தினி Bபாரில் வாங்கிச் சுவைப்பது வழக்கம். இப்போது கோக்கோ பொடி சேர்க்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஒரு சிறிய கவரில் நல்ல கடும் ப்ரௌன் நிறத்தில் பைட்ஸ் என்று விற்கப்படுகிறது.

நாங்கள் அப்போது இருந்த பிடிஎம் லே அவுட்லிருந்து 45 நிமிடம் நடைப்பயிற்சியாகச் சென்றால் KMF – கர்நாடகா பால் ஃபெடரேஷன் வளாகம். அங்கு வாசலில் செக்யூரிட்டி கேட் அருகில் நந்தினியின் விற்பனை Counter இருந்தது. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. அங்குதான் ஃப்ளேவர்ட் மில்க், பாட்டிலில் முதன் முதல் ருசித்த அனுபவம். அது கண்டென்ஸ்ட் மில்க் சுவையுடன் காரமலைஸ் செய்த சர்க்கரையில் செய்தது போல் அட்டகாசமான சுவையில் இருக்கும். இப்போது கிடைக்கும் அதே நந்தினியின் ஃப்ளேவர்ட் மில்க் வெவ்வேறு சுவைகளில் வந்தாலும் ஏனோ அந்த கண்டென்ஸ்ட் மில்க் சுவை இல்லை! Gone are those golden products!

மெஜஸ்டிக் பேருந்து நிலயத்தினுள் அப்போது ஒரு ஜூஸ் கடையில் குடித்த ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பாலில் போட்டு அடித்த மில்க் ஷேக் என்ன சொல்ல! சொர்கம் இந்த ஷேக்கிலே. நானும் மகனும் சுவைத்துவிட்டு வீட்டிற்கு வந்து அவன் தன் அப்பாவிடம் சொன்னதும் அடுத்து வெளியில் சென்ற போதெல்லாம் மெஜஸ்டிக் பேருந்து நிலையம் வந்துதானே போக வேண்டும், அப்போதெல்லாம் ஸ்ட்ராபெர்ரி ஷேக் குடிப்பது தவறாத வழக்கமாயிற்று. பெரிய க்ளாஸில் தருவார்கள். அப்போதைய விலை ரூ 10! அப்போதே பை டூ என்பது மிகவும் பிராபல்யம் இங்கு. பைடூ என்று சொல்லிவிட்டால் இரண்டாகப் பிரித்து தனி தனி க்ளாஸில் கொடுப்பார்கள்.

அந்த சமயங்களில் மெஜஸ்டிக் அருகே இருந்த ஒரு உணவகம், பெயர் சரியாக நினைவில்லை, மதியம் உணவு சாப்பிட்ட போது கோவைக்காய் பொரியல் அட்டகாசமாகச் செய்திருந்தார்கள். (கோவைக்காய் பிடிக்காதவங்க (எனக்கு யாரென்று தெரியும்!) கண்ணை மூடிக் கொண்டு வாசிக்கவும்!)

நாகர்கோவிலிலும், திருவனந்தபுரத்திலும் அப்போதெல்லாம் பார்த்திராத கோவைக்காயை நான் பார்த்ததே சென்னை வந்த பிறகுதான். வீட்டில் அதை வதக்குவார்கள். வேறு எதுவும் செய்து பார்த்ததில்லை. அந்தக் கோவைக்காயை பங்களூரில் நீள நீளமாக நறுக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் எல்லாம் தாளித்து, எங்களுக்குப் பிடித்த வெங்காயமும் சேர்த்து மஞ்சள் பொடி போட்டு கோவைக்காயும் சேர்த்து வெந்து, நிலக்கடலை, தேங்காய் போட்டு செய்திருந்த பொரியல் ஆஹா! அதன் பின் வீட்டிலும் அப்படிச் செய்வது வழக்கமாகிவிட்டது.

பங்களூர் உறவினர் வீட்டில் வேறொரு முறையிலும் அதாவது மங்களூர் செய்முறையில் கர்நாடக ரசப்பொடி சேர்த்து இந்த ஊர்ப்படி கொஞ்சம் வெல்லமும் சேர்த்துச் செய்திருந்தாங்க. அதுவும் நன்றாக இருந்ததால் அதுவும் வீட்டில் செய்யப்படும்! (எதுதான் உங்களுக்குப் பிடிக்காது!!!!)

அப்போது சுவைத்த மற்றொன்று மங்களூர் பன். இது பூரி போன்று ஆனால் மைதாவில் செய்து கொஞ்சம் தடியாகப் பொரித்தெடுப்பது. இதுவும் ஒரு அசட்டுத் தித்திப்புச் சுவை சர்க்கரை சேர்த்துச் செய்வதால்.

அப்போது ஒரு நாள் மதிய உணவிற்கு எம் டி ஆர் - லால்பாகின் அருகில் இருக்கும் ஒரிஜினல் மெயின் உணவகத்திற்குச் சென்று இங்கு பிராபல்யமான பிஸிபேளாபாத் ஆர்டர் செய்து சாப்பிட்டோம்.  அதில் சின்ன வெங்காயம் போட்டிருந்தார்கள். ஆனால் வெங்கடேஷ் பட் சொல்வதோ பிஸிபேளா பாத்தில் சின்ன வெங்காயம் போடுவது க்ரைம் என்றும், Authentic பிபேபா வில் இவை எதுவும் கிடையாது என்று. அப்படினா எதுங்க Authentic பிபேபா எம் டி ஆர் செய்வதா? வெ ப செய்வதா!! எதுவா இருந்தா என்ன? நாக்குக்கு நல்லா இருக்கா அம்புட்டுத்தான், கீதா! கேள்வி எல்லாம் கேட்கப்படாது!

இப்படி,  பங்களூர்/கார்நாடக புகழ் ரவா இட்லி, காரபாத் (உப்புமாதான்) கேசரிபாத், மசால் தோசை, பென்னே தோசை, பென்னே மசால் தோசை, பிஸிபேளாபாத் என்று அப்போதும் சுவைத்திருந்தாலும் அப்போது விட தற்போது 5 வருடங்களுக்கு முன் 2018ல் இங்கு வந்து வசிக்கத் தொடங்கியதும் பெருகியிருந்த பெருகிக் கொண்டே இருக்கும் உணவகங்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது! எப்படி எல்லோருக்கும் வியாபாரம் நடக்கிறது என்று!

இன்னும் இருக்கு. இங்கு பிராபல்யமான ஒரு வடை பத்தி சொல்லாம போனா பெங்களூர் என்னைத் திட்டித் துரத்திவிடும்! 

பெங்களூர் சுவை, உணவு மகாத்மியம் தொடரும்...

****************

சில்லு - 2 - சிறுதானிய தோ/டோக்ளா - செய்முறை எதுவும் இல்லை. சும்மா  ஒரு ஷோதான்!!!!!!!! 

வீட்டில் செய்த சிறுதானிய தோ/டோக்ளா. சிறிய காணொளிதான் முடிஞ்சா பாருங்க.
https://youtube.com/shorts/_w8VYR6fXGE


----கீதா

51 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆமாம் சில உணவுகளின் சுவை தனிதான்.

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  2. பன் வகைகளுக்கு அடிப்படை மைதா மாவு..

    இது எவ்விதத்திலும் உடலுக்கு நல்லதல்ல..

    90% இதிலிருந்து நான் விலகி விட்டேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா துரை அண்ணா...நானும் பயன்படுத்துவதில்லை. இது முன்பு செய்த போது எடுத்தவை. அதிலும் கோதுமை மாவில் கொஞ்சம் மைதா கலந்து செய்தவை.

      நான் பெங்களூரில் என்ன என்ன உணவுகள் என்றுதான் சொல்கிறேன், துரை அண்ணா.

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
    2. நேற்று வேறு வழியில்லாமல் பரோட்டாவும் சப்பாத்தி குருமா மங்களாம்பிகால சாப்பிட்டேன். பிடிக்கலை. கௌரி கிருஷ்ணா நல்லா இருந்திருக்கலாம்.

      நீக்கு
  3. செய்முறை விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.

    படங்களும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா கில்லர்ஜி கலாய்க்கறீங்களா!!! வீடியோக்கு?!!! ஹிஹிஹிஹி...

      மிக்க நன்றி கில்லர்ஜி!

      கீதா

      நீக்கு
  4. இங்கு "பிரபலமாக" என்ற வார்த்தையே வரவேண்டும் என்று நினைக்கிறேன்.  ப்ராபல்யம் என்கிற வார்த்தை இங்கு பொருந்தாது என்று மனதுக்கு படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! ப்ராபல்யம் என்பதன் பொருளை நான் பிரபலம் என்று நினைத்திருக்கிறேன். மாற்றிவிடுகிறேன் ஸ்ரீராம்.

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
    2. பொருள் ஒன்றுதான். ஆனால் பொருந்தாது என்று மனதில் படுகிறது.

      நீக்கு
  5. ஏனோ எனக்கு பன்னும் அவ்வளவு இஷ்டமில்லை.  அதில் செய்யப்படும் பொருட்களும் இஷ்டமில்லை.  பர்கர், சாண்டவிச் என்றிருந்தாலும் ஊ...ஹூம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் நீங்கள் முன்னர் சொல்லியிருக்கீங்க ஸ்ரீராம். பிடிக்கும் என்றாலும் கூட நாம் சாப்பிடாமல் இருப்பது உடல்நலத்துக்கு நல்லதே.

      இங்கு நம் வீட்டிலும் என்றேனும் சாப்பிடுவதுண்டு. ஏன்னு வைங்க பிடிக்காம இருந்தா அப்புறம் எங்கேனும் போறப்ப பசி மயக்கத்துக்கு அவசரத்துக்கு இவைதான் கிடைத்தால் சாப்பிட்டுக்க வேண்டுமே..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. ஆமாம்..  இப்போது சில வருடங்களாகத்தான் உணவகங்கள் பெருகி விட்டன.  ஒரே வரிசையில் இரண்டுக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள்...  புட் கோர்ட் என்று சொல்லி எக்கச்சக்க உணவகங்கள் ஒரே இடத்தில்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதை ஏன் கேக்கறீங்க அடுத்தடுத்து இருக்கு. எல்லா இடங்களிலும் ஃபுட் கோர்ட்னு வேற....மாலில் கூட. ஆனால் சுவை என்னவோ பெரிதாகச் சொல்லும்படி இல்லைதான்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. பேல்பூரி. பானிபூரிகளும் எனக்குப் பிடிப்பதில்லை.  வற்புறுத்தலுக்கு இணங்கி ஓரிருமுறை சாப்பிட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியும் உங்களுக்குப் பிடிக்காது என்று...

      என் அனுபவத்தை வேறொரு பதிவில் சொல்கிறேன்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. ஹிஹிஹி...  கோவைக்காயும் எனக்கும் பிடிக்காது.  மில்க் ஸ்வீட்ஸ்சும்...  விடுங்க..  ஒரே பிடிக்காதா சொல்லிக்கிட்டிருக்கேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குக் கோவைக்காய் பிடிக்காது என்பது ஊரறிந்த விஷயம்...ஓரிரு முறை கருத்தில் நீங்க சொல்லியிருக்கீங்க துரை அண்ணா பதிவில், அப்புறம் எபியில் அப்படிப் பொறுக்கிக் கொண்டதுதான்!!!

      மில்க் ஸ்வீட்டுமா!!! ஆ சரி அதானே விடுங்க!!! அடுத்த பதிவில் நீங்கள் சுவைத்திருக்காத???!! ஆனால் ஒரு வேளை சுவைத்தால் பிடிக்கலாம் என்ற ஒன்று வரலாம்...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. எனக்கும் கோவைக்காய் பிடிக்காது. சமீபத்தில், உறவினராகப் போகும் வீட்டில் அங்கே பறித்த கோவைக்காய் பொரியல் (பொடிதூவிக் கரேமது) சாப்பிட்டேன். ருசி ஆஹா ஓஹோ

      நீக்கு
    3. கோவைக்காய் உங்களுக்கும் பிடிக்காதுன்னு தெரியும் நெல்லை...உங்களையும் ஸ்ரீராமையும் இழுக்கத்தான் அப்படி ப்ராக்கெட்டில் சொன்னது!!

      சும்மா நல்லா சமைச்சு சாப்பிட்டுப் பாக்காம பிடிக்காதுன்னு சொல்லிட வேண்டியது. பொடி தூவி செய்யும் பொரியலும் சூப்பரா இருக்கும். நம் வீட்டில் சும்மா ஃப்ரை, இப்படியானவை, கோவைக்காய் சாதம் என்று செய்வதுண்டு.

      கீதா

      நீக்கு
  9. என்னதான் பெங்களூர் பெங்களூர் என்றாலும் எங்கள் மதுரைச் சுவைக்கு ஈடாகாதாக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா அப்படி போடுங்க! பின்ன நம்ம ஊர் நம்ம ஊர்தான் எப்பவுமே! இல்லையா..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. ஶ்ரீராம் நினச்சுக்கறார்.. இங்க உள்ளவங்கள்லாம் மதுரைக்குப் போயிருக்க மாட்டாங்க என்று. அவர் சொல்லும் மதுரை 85-90கள்லயே காணாமல் போயாச்சு. மதுரையில் கிடைக்கைம் மைதா வில் செய்த பன்மேல் ஜீராபாகு விட்டுத் தரும் பன், மாடர்ன் ரெஸ்டாரன்ட் (கோபு ஐயர் கடை பற்றி யாரேனும் இங்க எழுதினா அவங்களுக்கு 105 வயதுக்கு மேல் ஆகிவிட்டதுன்னு அர்த்தம்), மீனாட்சி பவன், காலேஜ் ஹவுஸ், பானீப் போவுது ஆரியபவன், பஸ் ஸ்டான்ட் அணோக் ஹோட்டல், இரயிலடி கற்பகம்னு பல இடங்கள் இருந்தன. இப்போ எங்கயும் வாயில வைக்கமுடியாத சாப்பாடு. இதுல மதுரையாம், தனிச் சுவையாம்.... நான் படிக்க மாட்டேன்னு நினைச்சு எழுதியிருப்பாரோ?

      நீக்கு
    3. ஹாஹாஹா நெல்லை, நாம் சமீபத்துல மதுரை போகவில்லை. ஆனா முன்ன மதுரைல மல்லிகைப்பூ இட்லி சும்மா பாட்டிகள் விப்பாங்களே அங்க ரொம்ப நல்லாருக்கும். அது போல திருநெல்வேலில ஆச்சிகள் வீட்டு வாசலில் அடுப்பு வைத்து ஆப்பம், வெந்தய தோசை கடலைமா சாம்பார் செய்வது எல்லாம் சூப்பரா இருக்கும். இப்ப தெரியாது. 12 வருஷம் முன்ன நான் சொல்வது. என் தங்கை வீட்டுக்குப் போனப்ப சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன்.

      கீதா

      நீக்கு
  10. என்னுடைய மற்ற கமெண்ட்ஸ் எங்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், மற்ற கமென்ட்ஸ் எங்கேனு கேட்டது வந்திருக்கு ஆனால் மற்றவற்றைக் காணலையே...ஸ்பாமிலும் போய் பார்த்தேன்....
      இன்னும் தேடுகிறேன்

      கீதா

      நீக்கு
    2. கிடைத்துவிட்டன ஸ்ரீராம். பப்ளிஷ் பண்ணிவிட்டேம்....கீஈஈஈஈஈஈஈஈஈஈஈழே இருந்தன.

      அதான் துளசியும் கேட்டிருந்தார் ஸ்ரீராமுக்கு கோவைக்காய் பிடிக்காதோன்னு...எனக்குத் தெரியுமே உங்களுக்குப் பிடிக்காது என்று அதானே வம்புக்கு ஹிஹிஹிஹி

      என்னடா அப்ப அந்த கமென்ட் எங்கனு தேடு தேடினேன்...எல்லாமே வந்துவிட்டன

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பெங்களுரில் முந்தைய, தற்போதைய உணவகங்கள் பற்றி நல்ல விபரமாக சொல்லியுள்ளீர்கள். இப்போது இங்கு நிறைய உணவகங்கள் பெருகித்தான் விட்டன.( இது எல்லா ஊர்களிலும் இப்படித்தானா எனவும் எனக்குத் தெரியவில்லை.) ஆனால், இப்போது இங்கு கண்கூடாக பார்க்கும் போது எல்லாவிடங்களிலும் எப்போதும் ஒரே கூட்டமாகத்ததான் உள்ளது.

    புதுமையான உணவின் தரங்கள், அந்த வித்தியாசங்கள் மக்களை கவர்ந்திழுக்கிறதா? இல்லை, மக்கள் சோம்பேறியாகி விட்டாரகளா? என நானும் நினைத்துக் கொள்வேன். புதிது புதிதாக திறக்கும் உணவகங்களில் கூட, அமர இடமில்லையென்றாலும், மக்கள் நின்று கொண்டாவது சாப்பிட்டு (தர்ஷினி முறையில்) கொண்டேயிருக்கின்றனர். முந்தைக்கு பெங்களுர் இப்போது நிறைய மாற்றங்கள்தான.நன்றாக நன்றாக எழுதி உள்ளீர்கள்.

    அடுத்து மதூர் வடை பற்றிய செய்தியா? அந்த செய்தியையும் தங்களின் அருமையான எழுத்து தொகுப்பில் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இதுவும் நாங்கள் இங்கு வந்த புதிதில் வாங்கி சாப்பிட்டுள்ளோம். இப்போதும் எங்காவது வெளியில் செல்லும் போது இந்த மதூர் வடையும் சாப்பிடும் ஐட்டத்தில் ஒன்றாக வந்து விடும்.

    தங்கள் சிறுதானிய தோக்ளா காணொளி நன்றாக உள்ளது. இதையெல்லாம் நான் செய்வதே இல்லை. தங்கள் பக்குவப்படி செய்து பார்க்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    உங்களின் இதற்கு முந்தைய பதிவையும் படித்து விட்டு வருகிறேன். என்னவோ நேரம் சரியாக இருக்கிறது. முன்பு போல் உடனே வர இயலவில்லை. மன்னிக்கவும். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுமையான உணவின் தரங்கள், அந்த வித்தியாசங்கள் மக்களை கவர்ந்திழுக்கிறதா? இல்லை, மக்கள் சோம்பேறியாகி விட்டாரகளா? //

      இரண்டுமே காரணமாக இருக்கலாம் கமலாக்கா. புதியவற்றைச் சுவைத்துப் பார்க்கும் ஆர்வம் கூடக் காரணமாக இருக்கலாம். எனக்கு இந்த ஆர்வம் உண்டுதான் என்றாலும் வெளியில் சாப்பிடுவது மிக மிகக் குறைவு.

      புதிது புதிதாக திறக்கும் உணவகங்களில் கூட, அமர இடமில்லையென்றாலும், மக்கள் நின்று கொண்டாவது சாப்பிட்டு (தர்ஷினி முறையில்) கொண்டேயிருக்கின்றனர். முந்தைக்கு பெங்களுர் இப்போது நிறைய மாற்றங்கள்தான.//

      ஆமாம் அக்கா நின்று கொண்டே கூடவும், அல்லது நடைபாதியில் ஏதேனும் மரத்தின் அடியில் இருகும் கல் பெஞ்ச் கொஞ்சம் தள்ளி கூட நின்று சாப்பிடுவதைப் பார்க்கலாம். நிறைய மாற்றங்கள்.

      தங்கள் சிறுதானிய தோக்ளா காணொளி நன்றாக உள்ளது. இதையெல்லாம் நான் செய்வதே இல்லை. தங்கள் பக்குவப்படி செய்து பார்க்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      மிக்க நன்றி கமலாக்கா. செய்முறை சொல்கிறேன்...இந்த முறை விவரமாக படங்கள் எடுக்கவில்லை. இது கடைசியில் சும்மா ஷார்ட்ஸ் என்று எடுத்தேன். அடுத்த முறை செய்யும் போது எடுத்து செய்முறையும் பகிர்கிறேன்.

      அக்கா நேரம் கிடைக்கும் போது வாசியுங்க. ஒன்றும் பிரச்சனை இல்லை. எனக்கும் இடையில் அப்படித்தான் வேலைப்பளு நேரம் சிரமமாகத்தான் இருக்கிறது

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. என்ன பண்ணறது கமலா ஹரிஹரன் மேடம்... நல்லாப் பண்ணத் தெரிஞ்சவங்க, முகநூல், பதிவு எழுதுவது படிப்பது கருத்துப் போடுவதுன்னு இருந்துடறாங்க. அதனால எல்லோரும் வெளில போய் கடைகள்ல சாப்பிட வேண்டியிருக்கு. அதனால் கூட்டம் பெருகுது

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஹாஹாஹா நெல்லை இது யாருக்கு?!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  12. @ கீதா..

    /// ஆச்சரியமாக இருக்கிறது! எப்படி எல்லோருக்கும் வியாபாரம் நடக்கிறது என்று!.. ///

    வருங்கால மருத்துவ
    மனைகளுக்கு
    வேட்டை தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக சொல்லலாம், நம்மூரில் உணவகங்களுக்கான சட்டங்கள் தரமான தயாரிப்புகளுக்கான சட்டங்கள் இன்னும் வலுவாக இல்லை துரை அண்ணா. இஷ்டம் போல உரிமம் வழங்கியிருக்கிறார்கள் உணவகங்களுக்கும், அங்கு பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகளுக்கும். பெங்களூரில் சமீபத்து நிகழ்வை அடுத்து சொல்கிறேன்,

      மிக்க நன்றி துரை அண்ணா மீண்டும் வந்து கருத்து பதிந்தமைக்கு

      கீதா

      நீக்கு
  13. 35 வருடங்களுக்கு முன் பெங்களுரில் உள்ள உணவு கடைகள், குறிப்பாக ஐயங்கார் பேக்கரிகள் பற்றி சொன்னது சரியே. மாயவரத்தில் ஐயங்கார் பேக்கரிகள் உண்டு. கேக், பன் எல்லாம் அங்குதான் நன்றாக இருக்கும். இப்போதும் இருக்கிறது, மாயவரத்தில் இரண்டு மூன்று இடங்களில் இருக்கிறது.

    காரபன் வீட்டில் நீங்கள் செய்த படம் அருமை.

    முன்பை விட இப்போது உணவகங்கள் நிறைய இருக்கிறது எல்லா ஊர்களிலும்.
    அத்தனை இருந்தாலும் காத்து இருந்து உணவு சாப்பிடும் நிலைதான் இருக்கிறது.
    முன்பை விட இப்போது ஓட்டலில் சாப்பிடும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
    புது புது உணவுகள் அறிமுகபடுத்தப்படுகிறது. சுவைத்து பார்க்க மக்கள் வருகிறார்கள். பழைய பாரம்பரிய உணவகங்களும் நிறைய வந்து கொண்டு இருக்கிறது.

    //சிறுதானிய தோ/டோக்ளா - செய்முறை எதுவும் இல்லை. சும்மா ஒரு ஷோதான்!!!!!!!! //

    காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா ஐயங்கார் பேக்கரிகளில் இப்போதும் நன்றாக இருக்கின்றன , நாம் தான் சாப்பிடுவது எப்போதாவது என்பதாகிவிட்டது ஆனால் குறிப்பிட்ட சில பேக்கரிகள் சிலர் அந்தப் பெயரை வைத்துக்கொண்டு அதன் தரம் இல்லாமல் செய்வதும் தெரிகிறது.

      மாயவரத்திலும் இருந்தது உங்கள் கருத்திலிருந்து தெரிகிறது கோமதிக்கா.

      ஆமாம் கோமதிக்கா குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்றுவிட வேண்டும் இல்லை என்றால் கூட்டம் தான் இடம் கிடைப்பது அரிது. எல்லா உணவகங்களுமே அதுவும் விடுமுறை தினங்களில் ரொம்ப அதிகமாக உள்ளது. இப்போது சுற்றுலாப் பயணம் செய்பவர்களும் அதிகமாகி இருக்கிறார்கள் அது மிக நல்ல விஷயம்தான் பயணம் என்பது. அதுவும் காரணமாகி இருக்கலாம் உணவகங்கள் பெருகியிருப்பதற்கு.

      காணொளி அருமை.//

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  14. மகனுடன் ஊர் சுற்றிபார்த்து இனிப்புகளை சாப்பிட்ட மலரும் நினைவுகள் அருமை.
    மதுர் வடை அடுத்த பதிவில் என்று நினைக்கிறேன்.

    //இங்கு வந்து வசிக்கத் தொடங்கியதும் பெருகியிருந்த பெருகிக் கொண்டே இருக்கும் உணவகங்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது! எப்படி எல்லோருக்கும் வியாபாரம் நடக்கிறது என்று!//

    வித விதமான உணவுகளை சாப்பிட்டு பார்க்க விரும்பும் உணவு பிரியர்கள் இருக்கும் வரை உணவு கடைகள் பெருகி கொண்டு தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா அது இனிய நினைவுகள். ஆ அக்கா கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்களே அந்த வடையே தான்!!! அடுத்த பதிவில் செய்முறை நான் செய்தது வராது. சும்மா சொல்லிச் செல்கிறேன்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. நம்ம ஊர், நல்லாப் பண்ணிய சுகாதாரமான மசால் வடை (ஆமவடை)க்கு கால் தூசி பெறாது மத்தூர் வடை.

      நீக்கு
    3. நெல்லை, அது நீங்க வெளில வாங்கி டேஸ்ட் பாத்திருப்பீங்க. நம்ம மசால் வடை வேறு, இது வேறு. இதுல நிறைய வெங்காயம் போட்டு செய்யறப்ப நல்லா இருக்கு.

      கீதா

      நீக்கு
  15. நல்லவேளை பெங்களூரில் புகழ் பெற்ற pubs பற்றி எழுதவில்லை. அந்தக்காலத்தில் பெங்களூர், பாண்டிச்சேரி என்பவை நமது கண்ணதாசனின் சொர்க்கபூமி.

    தாமத வருகை. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹா ஜெ கே அண்ணா எனக்கு அனுபவம் இல்லயே!!!!

      அந்தக்காலம் என்பதில்லை இப்பவும் பெங்களூர், பாண்டிச்சேரி பலருக்கும் சொர்க்க பூமிதான்!!!!!! இங்கு ஒவ்வொரு முக்கிய தெருவிலும் நிச்சையமாக 3 கடைகளேனும் இருக்கும் லெஹரிக்கு!

      ஓஹ்! அண்ணா ஏன் தாமத வருகை மன்னிக்கவும்ன்ற formal சொற்கள். அதெல்லாம் தேவையே இல்லை. எப்போது உங்களுக்கு வாசிக்க முடிகிறதோ பார்த்துக் கொள்ளலாம்.

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  16. சுவாரஸ்யமான பதிவு, கீதா! தொடருங்கள்! இப்போதெல்லாம் தரமான, சுவையான , குறையில்லாத சாப்பாடு எங்குமே கிடைப்பதில்லை. வெளியே சென்று சாப்பிட பயமாக இருக்கிறது. ஆனாலும் நெடுந்தூரம் பயணம் செய்பவர்களுக்கு வெளியே எங்காவது சாப்பிடுவது கட்டாயமாகி விடுகிறது. இந்த மாதிரி சமயங்களில் இந்த மாதிரி பதிவுகள் கை கொடுக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ அக்கா. மிக்க நன்றி. இன்னும் இரு பகுதிகள் வரலாம் அவ்வளவுதான்.

      ஆமாம் குறையில்லாத சாப்பாடு இப்போது கிடைப்பது அரிதுதான். பயமாகவும் இருக்கிறதுஎன்பதும் டிட்டோ. ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல், வெளியில் பிரயாணம் சுற்றுலா என்று சென்றால் சாப்பிடுவது கட்டாயமாகிவிடுகிறது.

      //இந்த மாதிரி சமயங்களில் இந்த மாதிரி பதிவுகள் கை கொடுக்கும்!//

      மிக்க நன்றி மனோ அக்கா. இருந்தாலும் கடல் சுரேஷ் ஒவ்வொரு ஊருக்குப் போகும் போது அங்கு என்ன ஸ்பெஷல் என்று பதிவுகள் எழுதியதுண்டு. இப்ப அவ்வளவாகக் காண்பதில்லை. அவரும் இங்குதான் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு இன்னும் நன்றாகத் தெரிந்திருக்கும். அசைவ உணவுகள் உட்பட. நெல்லைக்கு சைவ உணவுகள் எங்கு நன்றாக இருக்கும் தெரியும் என்னைவிட. நான் வெளியில் சாப்பிடுவது மிகக் குறைவு. என் ஆர்வங்கள் என் மகனின் ஆர்வங்கள் ஒரே போன்று. ஆனால் வீட்டிலுள்ளோர் ஆர்வங்கள் எதிர்பக்கம்!!!! எனவே நான் என் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன், மனோ அக்கா

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  17. இது இன்னிக்குத் தான் கண்ணில் பட்டது. உண்மையில் சென்னையை விட "பெண்"களூரில் உணவு வகைகள் நன்றாகவும் இருக்கும். விலை மலிவாகவும் இருக்கும். மங்களூர் பன், கார பன் எல்லாம் சாப்பிட்டு நானும் வீட்டில் "அவன்" இருக்கும்போது பண்ணி இருக்கேன். உள்ளே ஸ்டஃப் பண்ணிய பன்னைக் குழந்தைகள் ஹாட் டாக் என்பார்கள். நசிராபாதில் நாங்க இருக்கும்போது இந்த பன்னைச் செய்து எடுத்துக் கொண்டு இரவுக் காட்சி திரைப்படத்துக்குப் போவோம். :)))) ஹிந்திப் படங்கள் தான் என்றாலும் அதனால் எங்களுக்குப் பிரச்னை ஏதும் இல்லையே! கையில் இதை வைத்துச் சுவைத்துக் கொண்டு படத்தை ரசிப்போம். அது ஒரு பொற்காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை கீதாக்கா நீங்களும் என் கட்சியா...ஆமாம் சென்னையை விட இங்கு நன்றாக இருக்கு பாக்கெட்டுக்கும் தோதா இருக்கு. பேக்கரி உணவுகள் மிக நன்றாக இருக்கு...ஆனா நாம் சாப்பிடுவது வெகுவாகக் குறைந்துவிட்டது.

      நீங்க சொல்லிருக்கீங்க நீங்க முன்ன செஞ்சது பத்தியும், குழந்தைகள் ஹாட் டாக் என்று சொல்வது பத்ட்தியும்...

      //நசிராபாதில் நாங்க இருக்கும்போது இந்த பன்னைச் செய்து எடுத்துக் கொண்டு இரவுக் காட்சி திரைப்படத்துக்குப் போவோம். :)))) ஹிந்திப் படங்கள் தான் என்றாலும் அதனால் எங்களுக்குப் பிரச்னை ஏதும் இல்லையே! கையில் இதை வைத்துச் சுவைத்துக் கொண்டு படத்தை ரசிப்போம். அது ஒரு பொற்காலம்.//

      ஆஹா சூப்பர் கீதாக்கா. நாங்களும் இதை எலலம் சுவைத்து ரசித்த காலம் உண்டு. வீட்டில் செய்து எடுத்துக் கொண்டு சென்று என்று.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  18. என்னதான் சென்னை, மற்ற ஊர்களில் ஐயங்கார் பேக்கரி என இருந்தாலும் "பெண்"களூர் பேக்கரிகள் இடத்தில் அவை இல்லை. ப்ரெட்டில் கூட விதம் விதமாய்ப் பண்ணிச் சுடச் சுடக் கொடுப்பாங்க. நாங்க சர்.சி.வி.ராமன் நகரில் டிஆர்டிஓ வளாகத்தில் இருந்தப்போ தினம் மாலை வேளையில் ப்ரெடில் செய்த ஏதூம் கார வகையைச் சாப்பிட்டு விட்டு ஒரு மசாலா தேநீர் குடிப்போம். இப்போல்லாம் "பெண்"களூர்ப் பக்கமே வருவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. அடுத்து மதூர் வடையா? அதுவும் ஒரு தரம் முயற்சி பண்ணினேன். இஃகி,இஃகி,இஃகி, அரபு நாட்டின் ஃபலாஃபல் கூடப் பண்ணிப் பார்த்தாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே தான் கீதாக்கா இங்குஇருக்கும் ஐயங்கார் பேக்கரிகள் போல எங்கும் இல்லை. ஆமாம் இங்கு ப்ரெட்டில் விதம் விதமாகச் செய்யறாங்க. சிறு தானிய ப்ரெட் கூட பேக்கரிகளில் கிடைக்கின்றன.

      சர் சி வி ராமன் நகர் இப்பல்லாம் மிகவும் பரபரப்பான பகுதி! நிறைய வளர்ந்துவிட்டன.

      ஹை நானும் ஃபலாஃபெல் செய்துருக்கிறேன் கீதாக்கா, 5 தடவை கிட்டத்த்டட்ட நம்ம கொண்டைக்கடலை வைச்சு...அரைத்து ...வடை போன்று..செய்வதுண்டு எனவே மீண்டும் செய்தால்...எபி திங்கவுக்கு படங்கள் எடுத்து அனுப்ப வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். Pitta வும் வீட்டில் செய்ததுண்டு. இப்ப அவன் வேலை செய்தாலும் முன்ன போல் அது செய்யவில்லை என்றே தோன்றுகிறது.
      மத்துர் வடையும் அடுத்த முறை செய்யும் போது படங்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  19. கர்நாடகாவில் பச்சைமொச்சைப் பருவத்திலே பண்ணும் மொச்சை சாதம், ரொம்பவே பிரபலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அது பத்தியும் வரும். இப்ப இங்கு கடலை சீஸ்ன் திருவிழா நடக்கும் பசவனகுடியில். அடுத்த பகுதியில் கடலை, மொச்சை வரும். செய்முறை எதுவும் வராது சும்மா என்னென்ன இங்கு என்பது பற்றி மட்டும்

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு