ஆ அதுக்குள்ள இந்த வருட சுந்தந்திர தின மலர் கண்காட்சியா? இன்னும் இந்த வருஷத்துக் காட்சி தொடங்கலை...லால்பாகில் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரைன்னு செய்தி வந்தது அதெப்படி கீதாக்கும் மட்டும் Preview வா?!!! போன வருஷத்தையே போட்டு முடிக்கலை!! ஹிஹிஹி...இந்த வருடமும் செல்வதாக இருக்கிறேன். அதையும் க்ளிக்குவேனே அதைப் போடுவதற்குள் போன வருடம் எடுத்ததை போட்டு முடிச்சிடணுமே!!! (அதுவும் நெல்லை வந்து என்னைக் கலாய்ப்பாரே!!!!) இதோ அதன் முடிவுப் பகுதி. சட்டுபுட்டுன்னு நாளைக்குள்ள இன்று போட்டுட்டா கொஞ்சமாச்சும் தப்பிச்சேன்!!!! இதோ அந்தப் படங்கள்!
மேலே உள்ள படங்கள் ஒரே வகைதான் ஆர்கிட் மலர்கள். சென்ற பதிவிலும் பகிர்ந்திருக்கிறேன். எனக்கு இந்த நிறமும் மலரும் ரொம்பப் பிடித்திருந்தது எனவே நிறைய எடுத்தேன்!!
************
ரோஜா தோட்டத்தின் நடுவே இந்த மரம் வித்தியாசமாக இருந்ததால் ஒரு க்ளிக்! மரத்தை ஃபோக்கஸ்
MUSSAENDA ERYTHROPHYLLA
PURPLE OXALIS TRIANGULARIS - இதுவும் சாப்பிட உகந்தது என்று சொல்லப்படுகிறது
DAHLIA - டாலியா
பல வகைப் பூக்களின் கலவை
SALVIA
************
கீழே உள்ள படங்கள் - இப்படி பலவகை பூத்தொட்டிகளாலும், இலைகளாலும் அழகிய வடிவங்கள் செய்திருந்தார்கள் - இந்தப் படங்களில் மழை பெய்வது தெரியும். முதலில் சிறியதாகத் தொடங்கி அப்புறம் வலுத்தது. குடை பிடித்துக் கொண்டே க்ளிக்கினேன்! நான் நனைஞ்சாலும் பரவால்ல என் மூன்றாவது விழி ஏற்கனவே டுபாக்கூர் அதைப் பாதுக்க வேண்டாமா!!
சறுக்குமரம் போல அல்லது ஒரு தொட்டியை சரிக்கறப்ப ஓர் அழகான நீளமான துணி விரிவது போல, அருவி வீழ்வது போல!! உங்கள் கற்பனையையும் சொல்லுங்களேன்
சிறு வயதில் நாம் விளையாடும் ஒரு விளயாட்டு இரு வரிசையில் நின்றுகொண்டு இப்படிக் கைகளை உயர்த்தி வளைவாகப் பிடித்திட ஒருவர் பிடித்திருப்பவர்களின் மேல் படாமல் உள்ளே நுழைந்து வெளியே வர வேண்டும் அந்த விளையாட்டு நினைவுக்கு வந்தது
அழகிய மயில் வடிவங்கள் - இதிலும் கீழே உள்ள படங்களிலும் மழை பெய்வது தெரியும்.
இந்த வருடத்தின் THEME, முக்கியமாகக் கவரும் வகையில் இருக்கப் போவது 18 அடி உயரம், 18 அடி அகலம், 36 அடி நீளத்தில் 7.2 லட்சம் வெவ்வேறு வகை மலர்களால் உருவாகிக் கொண்டிருக்கும் விதான் சௌதா என்று சொல்லப்படுகிறது. அப்புறம் லால்பாக் கண்ணாடி மாளிகையின் வலது புறத்தில் "சிவபுர சௌதா" 3.48 லட்சம் (யம்மாடியோவ்!!!) சாமந்தி மலர்களால், ஒரு மலர் மாடலாக வடிவமைக்கப்படுகிறதாம். முழு நிகழ்விலும் 29 லட்சம் மலர்கள் இடம் பெருகின்றன என்பதும் செய்தி.
ஆ ஆ! மொத்த செலவைக் கேட்கக் கூடாது. ஆனால் வரும் கூட்டம், அங்கு கடை போடுபவர்கள் மூலம் அதிகம் தொகை கிடைத்துவிடும் என்ற கணக்கு! அதற்குத்தானே அம்புட்டு மலர்களால் வடிவங்கள் அமைக்கிறாங்க. இல்லைனா சும்மா தொட்டிகள் விற்பனைனா வருவாங்களா என்ன? தீனிக் கடைகள், வாங்கும் மக்கள் குப்பைகள் போட்டு அழுக்கு பண்ணாம இருந்தா சரி!
இக்பானா - IKEBANA, காய்கறி மற்றும் பழங்கள் செதுக்கி வடிவமைத்தல் (இது ஒரு கலை என்றாலும் எனக்கு இதில் உடன்பாடு கிடையாது!), புஷ்ப பாரதி, பொன்சாய், மற்றும் டச்சு இக்பனா - IKEBANA வடிவங்கள் என்று போட்டிகளும் நடக்கவிருக்கிறது. நடத்துவது தோட்டக்கலைத் துறை.
லால்பாகில் காலியாக உள்ள 6 ஏக்கர் நிலத்தில் 132 வகையான, அரிய வகை அழிந்து வரும் நிலையில் உள்ள மரக்கன்றுகளை நட்டு மேற்குத் தொடர்சி மலையில் உள்ள மர வகைகளைப் பாதுகாக்க தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உருப்படியான மிக நல்ல விஷயம்.
இதை எல்லாம் நேரில் பார்த்து புகைப்படங்கள், காணொளிகள் எடுத்து நான் பெற்ற இன்பத்தை உங்களுக்கும் தர நினைத்துள்ளேன். கண்டிப்பாக அடுத்த மலர் கண்காட்சிக்குள் போட்டுவிடுவேன் என்ற நம்பிக்கை. மறந்துவிட்டேனே!!! வண்ணத்துப் பூச்சி பூங்கா, SAFARI, ஈரோடு, எங்க ஊர் அழகு, பஞ்சலிங்கேஸ்வரர் கோயில், இன்னும் சில பதிவுகள் எல்லாம் என்னை ஓரு மாதிரிப் பார்க்கின்றனவே! எண்டே ஈசா! என்னை ரக்ஷிக்கு!
-----கீதா
லால்பாக் மலர்க்கண்காட்சி படங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குமலர் அருவி மிக அருமை. மயில் தோகை மிக நன்றாக இருக்கிறது.
//இப்படிக் கைகளை உயர்த்தி வளைவாகப் பிடித்திட ஒருவர் பிடித்திருப்பவர்களின் மேல் படாமல் உள்ளே நுழைந்து வெளியே வர வேண்டும் அந்த விளையாட்டு நினைவுக்கு வந்தது//
"ஒரு குடம் தண்ணீ ஊற்றி ஒரு பூ பூத்ததாம் "என்ற விளையாட்டு கடைசியில் வரும் பெண்ணை பிடித்து கொள்வார்கள் விடமாட்டேன் என்று பாட்டு வரும்.
நாங்களும் விளையாடி இருக்கிறோம்.
போன வருஷபடத்தை போட்டு விட்டது நல்லது. இந்த வருஷபடங்கள் போட வேண்டுமே!
எல்லாம் போடலாம் , நேரம் கிடைக்கும் போது வலையேற்றுங்கள்.
எனக்கும் நிறைய இருக்கிறது. பதிவு செய்ய, ஒவ்வொன்றாக பதிவு செய்ய வேண்டும்.
குடை பிடித்து கொண்டு மக்கள் பார்ப்பது ஒரு படத்தில் தெரிகிறது. லேசாக தெரிகிறது மழை துளிகள்.
லால்பாக் மலர்க்கண்காட்சி படங்கள் எல்லாம் மிக அருமை.
நீக்குமலர் அருவி மிக அருமை. மயில் தோகை மிக நன்றாக இருக்கிறது.//
மிக்க நன்றி கோமதிக்கா
ஆமாம் அதே விளையாட்டுத்தான் ...ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்தது...எண்ணிக்கை இருப்பவர்களைப் பொருத்து இல்லைனா ஒரே ஆள் மீண்டும் செய்யணும், இப்படி...
ஆமாம் முடிச்சிட்டேன் இனி இப்ப எடுக்கற படங்கள்....
ஆமாம் அக்கா நல்ல மழை அதன் பின் எடுக்க முடியவிலை...கேமராவைப் பாதுக்காக்க வேண்டுமே...அப்ப்டியே நடக்கத் தொடங்கிவிட்டோம் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி..
ஆமாம்...படத்தில் துளிகள் கோடுககளாகத் தெரியும் ..
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
மயில் தோகை நீடு போகும் படத்திலும் ,மலர் கூடை தொங்கும் படத்திலும் மழை வலுத்து விட்டதால் மழை பெய்வது நன்றாக தெரிகிறது.
பதிலளிநீக்குஆமாம் அதே தான்... அந்தப் படங்களில் தெரிகிறது. அதற்குப் பிறகு எடுக்க முடியலை...ஒரு கையில் குடை இன்னொரு கையில் கேமரா என்று எடுப்பதும் சிரமமாகிவிட்டது
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா
கீதா
சரிதான். போன வருடத்து படங்களா? எவ்வளவு சீக்கிரம் போட்டுட்டீங்க...!
பதிலளிநீக்குசிரித்துவிட்டேன் ஸ்ரீராம்...சரி அப்ப இனி நெல்லையோடு ஸ்ரீராமையும் கூட்டுச் சேர்த்துவிடுகிறேன்...கலாய்ச்சுக்கோங்க!! ரெண்டு பேரும்...ஜாலியா இருக்கும்..
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
ஸ்ரீராம், எபில தான் ஒரு ஞாயிற்றுக் கிழமைப் பதிவுக்கு கொஞ்சம் சூடாக அனுப்பினேனே...!!!!
நீக்குகீதா
வித்தியாசமான மரம். ஹாரர் மூவிகளில் வரும் மரம் போல இருக்கிறது.
பதிலளிநீக்குஅந்த மரம் ரொம்ப வித்தியாசமா இருக்குல்லியா...ஆமாம் ஏதோ பல கைகளை விரித்தாப்ல ஏதோ பெயர் தெரியாத ஜந்து வருமே ஆங்கிலப் படங்களில் அப்படி...அதைப் பார்த்ததும் எடுக்கத் தோன்றியது...இந்த வருஷம் இப்ப போறப்ப அது எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும். படம் எடுக்கணும்..
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
சறுக்கு மரம் - குழாயிலிருந்து வழியும் தண்ணீர் போல செடிகள் கவர்கின்றன.
பதிலளிநீக்குஆமாம் அதே வடிவம் தான் எனக்கும் தோன்றியது. மெத்தை சறுக்கு மரம்!!!!
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
மயிலும் அட்டகாசம்.
பதிலளிநீக்குஆமாம்...எபிக்கு அனுப்பியதிலும் இதில் ஒரு கோணம் இடம் பெற்றது என்று நினைவு...
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
நெல்லையும் ஞாயிறு ஸ்பெஷலுக்காக படங்கள் எடுக்க வருவார்னு நினைக்கிறேன்!
பதிலளிநீக்குஆ!! ஸ்ரீராம், ஆமாம்ல! அதுக்கு முன்ன நான் அட்லீஸ்ட் முதல் பதிவாவது போட்டுடணும். ஆனால் எனக்கு வார விடுமுறையில்தான் போக முடியும். கையும் காலும் பரபரக்கிறதே!!! நெல்லை போடும் முன் போடணும் என்று நினைக்கையிலே!!!!!!!!!!!!!!!!ஹாஹாஹாஹாஹா..
நீக்குமற்ற பதில்கள் அப்பால தரேன். இப்ப ஓடுகிறேன். வேலைப் பளு. வீட்டு வேலைகளுடன் மற்ற வேலைகளும்...
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
மலர்க்கண்காட்சி வாரநாட்களில் போகலாம் என நினைத்திருக்கிறேன். இல்லைனா கூட்டத்தில் எதையும் உருப்படியா பார்க்க முடியாது. கீதா ரங்கனுடன் போட்டிபோடவேண்டிய அவசியம் இல்லை. என் வேகத்தில் படங்களை வெளியிட்டாலே போதும். (அவர் எப்படியும் புதிய பதிவு எழுத ஆறு மாதங்கள் எடுத்துக்கொள்வார் ஹா ஹா)
நீக்குஆமா நெல்லை வார நாட்களில் போனா நல்லாருக்கும் ஆனா நம்ம வீட்டுல வார இறுதிதான். வார இறுதில கூட்டமா இருக்கும்
நீக்கு//கீதா ரங்கனுடன் போட்டிபோடவேண்டிய அவசியம் இல்லை. என் வேகத்தில் படங்களை வெளியிட்டாலே போதும். (அவர் எப்படியும் புதிய பதிவு எழுத ஆறு மாதங்கள் எடுத்துக்கொள்வார் ஹா ஹா)//
ஹையோ சிரிச்சு முடிலைப்பா......ஹூம் பார்த்துட்டே இருங்க...காத்திருக்கறதை எல்லாம் பின்னாடி தள்ளிட்டு இதை போடறேனா இல்லையான்னு!!!! ஹிஹிஹிஹி
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. மலர் கண்காட்சி படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன.
டாலியா மலர் படமும். தொட்டி நிறைய பூத்திருக்கும் மலர்களும் அழகாக இருக்கிறது. மலருக்கிடையே அந்த மரத்தின் படமும் அழகு. நிறைய கொம்புகள் உள்ள மான்கள் அருகருகே நிற்பது போல் உள்ளது. சறுக்கு மர மலர்கள் பட அணிவகுப்பும் அழகாக இருக்கிறது.
/லால்பாகில் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரைன்னு செய்தி வந்தது /
அட..! அதற்குள் அடுத்த மலர் கண்காட்சி வந்து விட்டதா? நீங்களாவது பரவாயில்லை. அதற்குள் சென்ற தடவை போனதை முடித்து விட்டீர்கள். நானாக இருந்தால்...?
இந்த மலர் கண்காட்சி இரு வாரங்கள்தானா? கூட்டம் அதிகமாக இருக்குமாமே..! ஒவ்வொரு தடவையும் நானும் இதற்கு செல்ல வேண்டுமென நினைப்பேன். வீட்டில்தான் அங்கு கூட்டம் அதிகமாக இருக்குமென தடை போட்டு விடுவார்கள். பார்க்கலாம்..! நீங்கள் இந்த வருடம் சென்று விட்டு வாருங்கள். வாழ்த்துகள். நீங்கள் சென்று விட்டு வந்து தரும் பதிவுகளின் மூலமாகவே மலர்களை பார்த்துக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
/முழு நிகழ்விலும் 29 லட்சம் மலர்கள் இடம் பெருகின்றன என்பதும் செய்தி. /
/லால்பாகில் காலியாக உள்ள 6 ஏக்கர் நிலத்தில் 132 வகையான, அரிய வகை அழிந்து வரும் நிலையில் உள்ள மரக்கன்றுகளை நட்டு மேற்குத் தொடர்சி மலையில் உள்ள மர வகைகளைப் பாதுகாக்க தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உருப்படியான மிக நல்ல விஷயம்./
நல்ல விஷயம். தகவல் செய்திகளுக்கு நன்றி.
எனக்கும் இப்படி பார்த்த, சென்ற இடங்களைப் பற்றி நிறைய எழுத ஆசை நினைக்கிறது. ஆனால், முழுதாக எழுதி முடிக்கத்தான் சோம்பல் கலந்த நேரம் அனுமதி தர மறுக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் கமலாக்கா இதோ இந்த வருடக் கண்காட்சி வந்தாச்சு. கமலாக்கா என்னோடு போட்டி போட யாராலும் முடியாது!!!! ஹாஹாஹாஹாஹா அதாவது பதிவுகளைத் தூங்க வைப்பதில்!!! இல்லைனா நம்ம ரெண்டு பேரும் சேப் போட் னு சொல்லிக்குவோம்!
நீக்குஆஅமாம் அக்கா இரு வாரங்கள்தான். வார இறுதியில் கூட்டம் அதிகமா இருக்கும். வார நாட்களில் இருக்காது கமலாக்கா. நீங்களும் வரப் பாருங்களேன்.
அக்கா நீங்கள் சென்ற இடங்களையும் எழுதுங்க. ஆனால் நீங்கள் கைப்பேசியில் எழுதறீங்க இல்லையா...அது எவ்வளவு பெரிய விஷயம். நான் கணினியில் எழுதவே இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறேன்...பதிவு எழுத அதைவிட....போட்டு வைச்சிருக்கேன் கிடப்பில்....அப்படிப் பார்க்கறப்ப உங்களை ரொம்பவே பாராட்டுவேன் கமலாக்கா. என்னால் கைப்பேசியில் கருத்துகூடப் போட முடிவதில்லை அப்புறம் இல்லையா பதிவு!!!
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
அழகான மலர்கள் படங்கள் எடுத்த விதங்களும் சிறப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு
நீக்குகீதா
படங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஅனைத்தையும் பார்த்த நினைவு வந்தது (ரொம்ப மங்கலாக. நெடுநாட்கள் கர்ர்ர் மாதங்கள் ஆகிவிட்டதல்லவா என்று கலாய்க்க மாட்டேன்)
பொதுவா உங்கள் (மற்றும் துளசி டீச்சர்) பதிவுகளைப் பார்த்து குடுகுடுவென அந்த இடங்களுக்குப் போய்ப் பார்க்கலாம் என்று ஓட முடியாது. நடந்து நாலு மாதங்களாவது ஆகியிருக்கும்.
படங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன.//
நீக்குமிக்க நன்றி நெல்லை..
//அனைத்தையும் பார்த்த நினைவு வந்தது (ரொம்ப மங்கலாக. நெடுநாட்கள் கர்ர்ர் மாதங்கள் ஆகிவிட்டதல்லவா என்று கலாய்க்க மாட்டேன்)//
ஹாஹாஹாஹா ஹையோ சிரிச்சு சிரிச்ஹ்கு.....மாதங்கள் இல்லை ஒரு வருஷம் நெல்லை ஒரு வருஷம்!!!!! நினைவில் மங்கலாக.....வயசாச்சாக்கும்!!!!
பொதுவா உங்கள் (மற்றும் துளசி டீச்சர்) பதிவுகளைப் பார்த்து குடுகுடுவென அந்த இடங்களுக்குப் போய்ப் பார்க்கலாம் என்று ஓட முடியாது. நடந்து நாலு மாதங்களாவது ஆகியிருக்கும்.//
ஹாஹாஹாஹா....என்னைச் சொல்லுங்க சரிதான்...ஆனா துளசிக்கா பொதுவா உடனே உடனே போட்டுடுவாங்களே...சமீபத்துலதான் கொஞ்சம் லேட்டாகிப் போச்சு சரிக்கட்டிட்டாங்களே...இப்ப புதுசு வருதே!!
மிக்க நன்றி நெல்லை
கீதா
கோபால் சாருக்கு ஆஸ்பத்திரி பிரச்சனைகளை (நியூசிலாந்தில்) பதிவாக எழுதியிருந்தார். அதுதான் நான் முதலில் படித்த அவரது பதிவு. என்னாச்சோ என்னாச்சோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பிறகுதான் தெரிந்தது இந்தப் பதிவு ஆறு மாதத்துக்கு முந்தைய சமாச்சாரம் என்று. விதிவிலக்குகள் தவிர, அவரது பதிவுகள் அவர் நினைவுக்காக டைரிக்குறிப்புகள் போல எழுதப்படுபவை.
நீக்குபுரிந்தது நெல்லை....ஆமாம்...அங்கும் அப்புறம் இந்தியா வந்த போதும் தானே, சொல்லிருந்தாங்க..நானும் வாசித்தேன்.
நீக்குகீதா
நான் போகும்போது தேன், சிப்ஸ், கான்டிமென்ட்ஸ், என்று தேவையில்லாவைகளை வாங்குவேன். மனைவி கர்ர்ர் என்பார்.
பதிலளிநீக்குஹாஹாஹாஹா...எங்க வீட்டுல ரெண்டு பேருமே நோ கர்ர்ர்ர்ர்ர்....ஒன்று வாங்க மாட்டோம் இல்லைனா ரெண்டு பேருமே வாங்கலாமான்னு யோசிப்போம்...
நீக்குமிக்க நன்றி நெல்லை
கீதா
நேரில் ஒருமுறை செல்ல வேண்டும்...
பதிலளிநீக்குவாங்க டிடி. இப்ப பங்களூர் அடிக்கடி வரலாமே நீங்க!!!! ரொம்ப அழகா இருக்கும் டிடி.
நீக்குமிக்க நன்றி டிடி
கீதா
மலர் கண்காட்சி படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக உள்ளன. ஒவ்வொன்றும் நெஞ்சை கொள்ளை கொள்ளும் விதத்தில் தத்ரூபமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது... பயண அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி சிவா. இந்த வருடப் படங்களும் வரும். இது இங்க பங்களூர்தான்...இங்குதானே நான் வாசம்.
நீக்குமிக்க நன்றி சிவா
கீதா
என்ன நாளை தானே ஆரம்பம், அதுக்குள்ள படங்களா ஆஹா அக்கா சூப்பர் fast ன்னு பார்த்தா போன வருட படங்கள் ...செம்ம போங்க
பதிலளிநீக்குஇந்த வருடம் போகணும்ன்னு பிளான் இருக்கு பார்ப்போம்
(இந்த வருடம் யார் சீக்கிரம் பதிவு இடுகிறார்கள் என்றும் பார்ப்போம் ) ...
அனுபிரேம்
ஹாஹாஹாஹா அனு !!! அதுதான் கீதா....போன வருஷப் படங்கள்தான்...
நீக்குபோய்ட்டு வாங்க அனு. நீங்க அதுக்கு முன்ன நெல்லை போட்டுருவீங்க. நான் மெதுவா ஆடி அசைஞ்சுதான் வருவேன்னு நினைக்கிறேன். நான் இல்லப்பா இந்தப் போட்டிக்குன்னு சொன்னாலும் ஒரு ஸ்பீடு வருது...ஹாஹாஹாஹா...அப்ப போகும் தேதிய மாதணுமே!!!
மிக்க நன்றி அனு
கீதா
வண்ணத்துப் பூச்சி பூங்கா, SAFARI, ஈரோடு, எங்க ஊர் அழகு, பஞ்சலிங்கேஸ்வரர் கோயில்,... ஆஹா சீக்கிரம் போடுங்க அக்கா பார்க்க ஆவல்
பதிலளிநீக்குஅனுபிரேம்
அனு வெளில சொல்லிடாதீங்க இந்த லிஸ்ட்ல ஒண்ணு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பழசு. அது எதுன்னு சொல்ல மாட்டேனே...ஹாஹாஹாஹா...கண்டிப்பா வரும். ஆனா பருங்க அனு படங்கள் எல்லாம் தொகுக்கறதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு.. எத போட...எதை விட அதுல நம்ம வாட்டார் மார்க் போட்டுன்னு
நீக்குமிக்க நன்றி அனு
கீதா
நானும் இந்த வருடம் ரிபப்ளிக் தினம் சமயத்தில் நடைபெற்ற மலர் கண்காட்சிக்கு சென்ற பொழுது எடுத்த படங்களை பகிரவேயில்லை. அப்போது என் அக்கா இரண்டு திருமணங்கள் அட்டெண்ட் பண்ண வேண்டும் என்பதற்காக பெங்களூர் வந்து எங்கள் வீட்டில் நான்கு நாட்கள் தங்கினார். அப்போது அவரோடு மலரி கண்காட்சிக்குச் சென்றேன்.
பதிலளிநீக்குஅங்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த கடைகளில் திராட்சை இருந்தது. சாப்பிடச் சொல்லி, மாதிரிக்கு கொடுத்த பழம் அவ்வளவு இனிப்பு, சரியென்று வாங்கி, வீட்டில் வந்து சாப்பிட்டால்... ஒரே புளிப்பு!!
ஓ! ரிபப்ளிக் சமயமும் கண்காட்சி இருந்ததா? தெரியாமல் போய்விட்டதே. பரவால்ல பானுக்கா என் அளவு ரொம்ப லேட் ஆகலை போட்டுருங்க. இனியும் போடலாமே.
நீக்குதிராட்சை நமக்கும் கொடுப்பது நல்ல பழங்கள் வாங்க வைக்க!!
மிக்க நன்றி பானுக்கா
கீதா