செவ்வாய், 23 ஜூன், 2020

புன்னகையே பொன்நகை - பள்ளி அனுபவம்

பொன்நகை வேண்டாம் புன்னகை ஒன்றே போதும் என்று நாம் சொல்லிக் கொண்டாலும் அந்தப் புன்னகையை நாம் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். தொலைத்துவிடுகிறோம்.

குறிப்பாக இப்போதைய நேரத்தில் அதைப் பற்றிய கவலைகளைக் கொஞ்சம் அப்பால் வைத்துவிட்டு புன்சிரிப்போம். எல்லாரும் ஸ்மைல் ப்ளீஸ்!

ஒரு அன்பான புன்னகை என்பது கருணையின் உலகளாவிய மொழி ஆகிறது. – வில்லியம்ஸ் ஆர்தர் வார்ட்.

நான் ரசித்த கதையை இதோ உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

நபிகள் நாயகத்தைப் பார்த்து ஒரு வயோதிகர் கேட்கிறார், “ஐயா, தர்மம் செய்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று சொல்கிறீர்களே, பணக்காரர்கள்தானே தர்மம் செய்ய முடியும். என்னைப் போன்ற ஏழைகளால் எப்படி முடியும்?”

“தர்மம் செய்யப் பணம்தான் வேண்டும் என்பது இல்லையே. முடியாத ஒருவருக்கு ஒரு வாளித் தண்ணீர் இறைத்துக் கொடுத்தாலே போதுமானது.”

“அது என்னால் முடியாத காரியம். உடலில் தெம்பு இல்லையே”

“வழியில் கிடக்கும் ஒரு முள்ளை எடுத்து அப்புறப்படுத்தினாலும் அதுவும் தர்மமே”

வயோதிகர் விடுவதாக இல்லை. “ஐயா என்னால் குனியக் கூட முடியாது. குனிந்தால் நிமிர முடியாது. தள்ளாடுகிறேன். அப்படி என்றால் எனக்குச் சொர்க்கமே கிடைக்காதா?”

“உன்னால் பிறரைப் பார்த்துப் புன்முறுவல் செய்யக் கூடவா முடியாது? பிறரைப் பார்த்ததும் புன்முறுவல் பூப்பது கூட ஒரு தர்மம்தான். அதைச் செய்தாலும் மோட்சம் கிடைக்கும்!” என்று நபிகள் நாயகம் பதில் அளித்தார்.

நாம், தினமும் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுவது என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.  ஒரு சிறு புன்னகையுடன் கூடிய ஆறுதல் வார்த்தை கூட  உதவிதான்  என்பதைச் சொல்லும் கதைதான் இது. 

வாழ்வு நிலையானது அல்ல. இருக்கும் வரையில், காசு, பணம் செலவில்லாத புன்னகையை எந்தவித எதிர்பார்ப்புமின்றி அணிந்திடுவோம்.

GIF] My friend and I are very friendly | Cute funny animals, Funny ...

நம் கமலா அக்கா “பசி வந்திட பத்தும் பறக்கும்” http://kamalathuvam.blogspot.com/2020/06/blog-post_18.html பற்றி அந்த பத்து எவை என்று அழகான விளக்கம் கொடுத்திருந்தார். விளக்கத்துடன் கூடவே

“எப்போதுமே ஒரு பக்கத்திற்கு மறுபக்கம்  என்ற ஒன்று இருப்பதைப் போன்று, மேற்சொன்ன  மாதிரி தீய எண்ணங்கள் உருவாகும் வாய்ப்புக்கு எதிரிடையாக பிறப்பிலேயே நல்ல குணங்களோடு பிறந்திருப்பவர்கள் வறுமையையும்  ஏழ்மையையும் பொறுமையாக தாங்கி  கொண்டு போவதுடன்,  பிறரிடம்  அதை வெளிக்காட்டாமலும் இருப்பார்கள். 

இதை வாசித்த போது எனக்கு என் பள்ளி நினைவு வந்தது. எங்கள் தமிழாசிரியை வகுப்புப் பாடங்கள் நடத்திய பிறகு எங்கள் ஆர்வத்தையும், சிந்தனையையும் தூண்டும் விதத்தில் பாடத்திற்கு அப்பாற்பட்ட சில விஷயங்களை ‘ ‘ஆர்வம் இருப்பவர்கள் கவனிக்கலாம்’  என்ற ஒரு முன்னுரையுடன் தொடங்குவார்.  ஏனென்றால் இது பாடதிட்டத்தில் இல்லாத ஒன்று. அப்படியான ஒரு வகுப்பில்,

Dog Drinking Water GIFs - Get the best GIF on GIPHY
ஸ்பாஆஆஆஆ இருங்க கொஞ்சம் தொண்டையை நனைத்துக் கொண்டு வரேன்

‘பசி வந்தால் பத்தும் பறக்கும்’ என்பதற்கு எதிரான பழமொழி ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம் என்றதும், நாங்கள் “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்று டக்கென்று சொன்னதும்

“அது நாம் சொல்லும்  பழமொழி. நீங்கள் பொருள் தெரிந்து சொல்கின்றீர்களா இல்லை, கேட்டதை வைத்துச் சொல்கின்றீர்களா? இதைச் சொல்லும் பாடலொன்று 'பழமொழி நானூறில்' உண்டு. அதைச் சொல்லும் முன், உங்களுக்குப் பாடல் தெரியாவிட்டாலும் பரவாயில்லை.  இந்தப் பழமொழியின் அர்த்தம் தெரியுமா?”

நாமதான் முந்திரிக் கொட்டை ஆயிற்றே. அந்த ஆசிரியை மிகவும் நகைச்சுவையுணர்வு உள்ளவர். எங்களுடன் தோழமையுடன் பழகுபவர் என்பதால் பயமில்லாமல் பேசுவோம். அந்த ஒரு தைரியத்தில் அந்த வயதில் எனக்குத் தோன்றியதை சும்மா அடித்துவிட்டேன். புலி நினைக்கும், நல்லா பசிக்கறப்ப போயும் போயும் புல்லை எல்லாம் சாப்பிடுவதா? காட்டெருமையோ, மானோ வராமலா போயிடும்னு.” எல்லாரும் சிரித்தார்கள். ஆசிரியரும்தான்.

“விளையாடாமல் பதில் சொல்லு” 

“பசியால் வாடினாலும், குறிப்பாகச் சுய கௌரவம் உள்ளவர்கள் யாரிடமும் இரக்க மாட்டார்கள் என்று சொல்லலாமா டீச்சர்? அதற்குத்தான் புலியின் குணம் சொல்லப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.” என்றதும், டீச்சர் ‘அட!’ என்று சொல்லி உட்கார வைத்துவிட்டார். ஒரு வேளை தப்பாகியிருக்கலாம் என்று நினைத்தேன் ஆசிரியர் பழமொழி நானூறு பாடலைச் சொல்லி விளக்கினார்.

                                                 
இது பள்ளியில் (10 ஆம் வகுப்பு) குறிப்பெடுத்த போது எழுதியது. நிறைய மங்கி விட்டது. அதைக் கொஞ்சம் பென்சிலால் மீண்டும் அதன் மேலேயே எழுத முயன்றேன் இங்கு பகிர்வதற்காக. நான் எம்பூட்டு நல்ல மாணாவின்னு இந்த கேப்லதானே சொல்லிக்க முடியும்!! செய்யுள் மட்டுமே கரும்பலகையில் எழுதுவார். விளக்கமெல்லாம் வேக வேகமாகச் சொல்லிச் சென்று விடுவார் எனவே வேக வேகமாக எழுதியதால் சுருக்கெழுத்து போல இருக்கும். ஹா ஹா. மேலும் இது ஒன்றும் தேர்வுக்கானதும் இல்லையே. 

ஒற்கம்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்
கிற்பவே கின்ற நிலையின்மேல் - வற்பத்தால்
தன்மேல் கலியும் பசிபெரிது ஆயினும்
புல்மேயாது ஆகும் புலி.

ஒப்பற்ற உயர் பண்புள்ள சான்றோர் தங்களுக்கு வறுமை ஏற்படும் நேரத்திலும் கூட, தாம் கொண்ட நற்பண்புகளின் நிலையிலேயே சற்றும் மாறாது நிற்பர். அதாவது தன் தரம் தாழ்ந்து செல்ல மாட்டார்கள். பசியினைப் போக்க சிறுமை தரும் ஒழுக்கமற்றச் செயல்களைச் செய்ய மாட்டார்கள். இது பஞ்சகாலத்தில் பசியால் வாடினாலும் புல்லை உண்ணாத புலியின் பண்பினைப் போல, என்று விளக்கினார்.

எவ்வளவு பணம் கொடுத்தாலும், எத்தகையச் சூழலிலும் நல்லபண்புகள் உடையவர்கள்` எந்தக் கீழ்த்தரமானச் செயல்களையும் செய்ய மாட்டார்கள். கிட்டத்தட்ட இந்தப் பொருளில் உள்ள ஒரு கேள்வி பதிலை வெங்கட்ஜி தன் தளத்தில் பகிர்ந்திருந்தார். 

அந்த வயதில் புலி புல்லைத் தின்னவே தின்னாது என்றுதான் நினைத்திருந்தேன். அதன் பின்னர் அறிந்தது இது. புலியார் பசியைப் போக்க புல்லை உண்ணமாட்டாரே தவிர அவருக்கு வயிற்றுக் கோளாறு வந்தால் புல்லைத் தின்று சரி செய்து கொள்வார். மற்றும் புலியாருக்குப் புல் இருந்தால்தான் குஷி. புல்லைத் தின்னும் மான்ககள், எருமைகள் வரும் போது அவை இவருக்கு உணவாகுமே. அது போல வளர்ந்து காய்ந்த புற்களின் இடையில் மறைந்து நின்று வேட்டையாடுவார்.  



வகுப்பு அயர்ச்சியாகிடுச்சா? அதுக்குத்தான் இடையில் எல்லாரும் ஜன்னல் வழியா எட்டிப் பாருங்க இவர்களைப் பார்த்து ரசிச்சுக்கோங்க. மனம் மகிழ்ச்சியாகி எனர்ஜி கிடைச்சுரும். சென்னையில் வளரும் எங்கள் செல்லம் க்ளோயி ஈன்றெடுத்த செல்லங்கள். 

அடுத்த பதிவில் சந்திப்போம். 

-----கீதா

79 கருத்துகள்:

  1. நபிகள் கதை அருமை.
    புலியின் வரலாறு ரசிக்க வைத்தது
    காணொளி இரண்டு நொடிகூட இல்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுதுதான் கணினியில் புகைப்படத்தை பெரிதாக்கி பார்த்தேன் தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் இருப்பதுபோல் தெரிகிறதே...

      நீக்கு
    2. வாங்க கில்லர்ஜி! மிக்க நன்றி கருத்திற்கு

      மற்றொரு காணொளியும் இருக்கு அதுவும் சிறியதுதான் என் மகனின் அக்கா அனுப்பியதுதான். மற்றொரு காணொளியையும் இணைக்கிறேன்...அதில் குரல்கள் இருந்ததால் இணைக்கவில்லை...இணைக்கிறேன் அது இதைவிட கொஞ்சம் பெட்டரா இருக்கும்னு நினைக்கிறேன்..

      கீதா

      நீக்கு
    3. இப்பொழுதுதான் கணினியில் புகைப்படத்தை பெரிதாக்கி பார்த்தேன் தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் இருப்பதுபோல் தெரிகிறதே...//

      ஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி! செமையா சிரித்துவிட்டேன். ஆமா அது ஷார்ட்ஹேன்ட் ல எழுதறாப்ல வேக வேக மா எழுதினது. அப்பல்லாம் தமிழ் ஆசிரியர்கள் செய்யுள் மட்டுமே போர்ட்ல எழுதிப் போடுவாங்க. விளக்கம் கொடுக்கும் போது நாமதான் எழுதிக் கொள்ள வேண்டும்.

      இதுபற்றி பதிவில் சொல்லுகிறேன் கில்லர்ஜி. அருமையான பள்ளி, கல்லூரி.

      கீதா

      நீக்கு
    4. மகனின் அக்கா அனுப்பியது...- இது என்ன புது ரிலேஷன்ஷிப்பா இருக்கு. இதுவரை கேள்விப்பட்டதில்லையே

      நீக்கு
    5. நான் கேட்க நினைத்ததை நெல்லை கேட்டு விட்டார்.

      நீக்கு
    6. நெல்லை, அண்ட் பானுக்கா, மகனின் பெரியப்பா மகள்....

      நாங்கள் அப்படிச் சொல்லியே பழக்கமாகிவிட்டது.

      கீதா

      நீக்கு
  2. தினமும் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுவது என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.///
    நல்ல கொள்கைதான். ஆனா, அவற்றால் நமக்கு எதுவும் தொந்தரவு வராமல் இருந்தால் சரிதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புன்னகை தானே ராஜி!! செஞ்சுட்டுப் போவோம். தொந்தரவு தராத உதவியாக...

      மிக்க நன்றி ராஜி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  3. பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  4. நபிகள் நாயகத்தை வற்புறுத்தி, படுத்தி எடுத்து இருப்பதிலேயே சுலபமாக புண்ணியம் சம்பாதிக்கும் வழியைக் கற்றுக் கொண்டார் அந்தப் பெரியவர்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஆமாம் சரிதான் இல்ல?!

      மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
    2. அந்தச் சுலபமான விஷயத்தையே பண்ண முடிவதில்லை ஶ்ரீராம்.

      நீக்கு
  5. டீச்சர் பின்னர் பாடல் சொல்லி சொல்லவந்த பொருளை முன்னரே நீங்கள் சொல்லி விட்டீர்கள். அதுதான் டீச்சர் அசந்துட்டார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம்....அதென்னவோ அந்த வாட்டி மூளை பல்பு பளிச்சுனு எரிஞ்சுருக்கு!! முதல்ல நான் சரியா சொல்லலைனுதான் நினைச்சேன் அப்புறம் பரவாயில்லையேன்னு நினைச்சேன்..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. ஆனா சுத்தமா அந்தப் பாடல் எல்லாம் அப்ப தெரியாது. தமிழ் வகுப்பு ரொம்ப நல்லா எடுப்பாங்க. அது போல ஆங்கில வகுப்பும். அது அவங்க எதிர் பழமொழி கேட்டதும் பசி என்றால் பத்தும் பறக்கும் னு சொல்றதுக்கு அர்த்தம் கொஞ்சம் தெரியும் என்பதால் அதை மாத்தி இதுக்குப் பொருத்திப் பார்த்தது அம்புட்டுத்தான்...

      கீதா

      நீக்கு
  6. காணொளி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே முடிஞ்சுடுதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப சின்னதா இருக்குல்ல? நினைச்சேன். சென்னைய்லிருந்து மகனின் அக்கா அனுப்பியது இரண்டு. மற்றொன்றில் குரல் வருவதால் போடலை.

      இப்ப இன்னொண்ணு இணைத்திருக்கேன் ஸ்ரீராம். முடிஞ்சா பாருங்க.

      இது அவ அனுப்பி கிட்டத்தட்ட 6 மாதம் ஆகிறது. அந்தக் குட்டிகள் எல்லாம் சிலர் வளர்க்க எடுத்துட்டுப் போய்ட்டாங்க. க்ளோயிக்கு ஆப்பரேஷனும் செஞ்சுட்டாங்க!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. மொபைலில் பார்த்தால் உங்க பத்தாம் கிளாஸ் கையெழுத்து ஒண்ணுமே தெரியல... ஆனாலும் பொக்கிஷமா வைச்சிருக்கீங்க போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் எனக்குமே புரிய கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இப்படி நிறைய பொக்கிஷங்கள் சேர்த்து வைத்திருந்தேன் பல வீடு, ஊர்கள் மாறி மாறி தொலைந்துவிட்டது. இதுவுமே இருக்கா என்று தேடினப்ப கிடைத்தது. பகிர்ந்தேன். சில உருவே தெரியாமல் இருக்கிறது. தமிழ் சங்கப் பரீட்சை நோட்ஸ். பொடியும் நிலையில்...

      சில கடிதங்கள் கூட வைத்திருந்தேன். எல்லாம் போய்விட்டது...

      இதே போன்று எம் ஏ படித்த போது என் வகுப்பு மாணவர்கள் எனக்கு எழுதிய ஆட்டொகிராஃப் வைத்திருக்கிறேன். அதுவும் கிடைத்தது. அது நல்ல தெளிவாகவே இருக்கிறது. கவிதை கூட உண்டு. அதையும் பகிர நினைத்திருக்கிறேன். ஒவ்வொரு பதிவிலும்.

      நீங்கள் அப்பாவின் பொக்கிஷங்களை எவ்வளவு பத்திரமாக வைத்திருக்கிறீர்கள்!!!! பெரிய விஷயம் இல்லையா ஸ்ரீராம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
    2. பதிலுக்கு கருத்து சொல்லுகிற மாதிரி எம். ஏ. படிச்சிருக்கீங்க என்பதையும் நைஸா சொல்லீட்டீங்க ஹீஹீ

      நீக்கு
    3. அப்போ இப்போ உள்ள கையெழுத்து சூப்பர்னு ஶ்ரீராம் சொல்றாரா?

      நீக்கு
    4. ஹா ஹா ஹா ஹா மதுரை நீங்க இப்பத்தான் தெரிஞ்சுக்கறீங்கன்னு நினைக்கிறேன். ஓரிரு பதிவுகள், அல்லது கருத்துகளில் சொன்ன நினைவு.

      கீதா

      நீக்கு
  8. ஆஹா.... பள்ளி அனுப்வம் சிறப்பாக இருக்கிறது. என்னிடம் பள்ளி/கல்லூரி சமய சேமிப்புகள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

    இணைத்த காணொளியும் அசையும் படங்களும் நன்று.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி.

      பள்ளி கல்லூரி சமய சேமிப்புகள் அதிலும் இப்போது ஓரிரண்டு தான் இருக்கின்றன.

      கீதா

      நீக்கு
  9. ஒற்கம்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்
    கிற்பவே கின்ற நிலையின்மேல் - வற்பத்தால்
    தன்மேல் கலியும் பசிபெரிது ஆயினும்
    புல்மேயாது ஆகும் புலி


    நல்ல வகுப்பு, நல்ல ஆசிரியர், ரொம்ம்ம்ம்ம்ப …...நல்ல மாணவி.

    அருமையான செய்யுள், இப்படி ஒரு செய்யுள் இருப்பது பலரறிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமா என்பது சந்தேகம்.வெளி கொணர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோ.

      இச்செய்யுள் எல்லாம் பாடத்திட்டத்தில் கிடையாது. எங்கள் ஆசிரியர்/யை வகுப்பில் பாடம் எடுப்பது சீக்கிரம் முடிந்துவிட்டால் அல்லது நேரம் இருந்தால் கடைசி 10 நிமிடங்கள் இப்படிச் சொல்லித்தருவாங்க.

      இப்போது கூகுளில் தேடினால் எல்லாம் கிடைத்துவிடும்.

      கீதா

      நீக்கு
  10. ஹாய் மேடம். உங்கள் பள்ளி அனுபவம் சூப்பர். அதிலும் உங்க பதில் அருமை. ஆனா கொடுத்திருக்க்ப் பாடல். தமிழில் எனக்கு பிடிக்காதது பாடல் படிக்கிறது, மனப்பாடம் செய்யுறது. அபி அரியர் வெச்சாலும் மனப்பாடப் பாடலைப் படிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அபி! எங்கள் பள்ளி அனுபவம் பற்றி தனியாகப் பதிவு போடுகிறேன்.

      ஓ மனப்பாடம் பிடிக்காதா?! எனக்கும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. நெட்டுரு போடுவது என்பது வரவே வராது. அப்புறம் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டிகளில் நானாகவே ஆர்வத்துடன் கலந்து கொண்ட போது (10 ஆம் வகுப்பிலிருந்து) மனப்பாடம் செய்யத் தொடங்கினேன். அப்படியும் சில சமயம் கஷ்டப்படுவேன் ஹா ஹா ஹா ஹா

      மனப்பாடம் செய்வது போட்டி போன்ற இப்படியான விஷயங்களுக்கு உதவும்தான். இல்லை என்றால் பட்டிமன்றப் பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்கள் உருவாகியிருக்க முடியாதே

      மிக்க நன்றி அபி

      கீதா

      நீக்கு
  11. பள்ளியில் எடுத்த குறிப்பை போட்டு இருக்கீங்க நாங்களும் தான் பள்ளிக்கு போனோம் ஆனால் இப்படி எல்லாம் குறிப்பு எல்லாம் எடுத்து படிக்கலை..... இன்னும் சரியாக சொல்லனும் என்றால் பள்ளிக்கு சென்று உட்கார்ந்துவிட்டுதான் வந்தோம் என்று சொல்லாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை ஹா ஹா ஹா ஹா...

      ஆனா அப்படி உட்காருபவர்கள்னு சொல்லிறீங்க அதனால் ஒன்றும் குறையில்லை அப்பாடியானவர்கள் பின்னர் வாழ்க்கையில் நல்ல முறையில் ஷைன் ஆயிடுவாங்க உங்களையும் சொல்லிக் கொள்ளலாமே.

      ரொம்ப ஸ்டூடியஸா இருக்கறவங்க பலர் பின்னர் காணாமல் போவதும் உண்டுதானே.

      எங்கள் பள்ளி கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளி, மதுரை

      எங்கள் பள்ளியில் குறிப்பு எடுத்துதான் படிக்க வேண்டும். இதெல்லாம் பாடத்தில் அல்லாதவை வேறு. தனியா பதிவு போடுறேன் எங்கள் பள்ளி, கல்லூரி பற்றி..

      மிக்க நன்றி மதுரை

      கீதா

      நீக்கு
  12. ஆஆஆஆ கீதாவும் ஞானி ஆகிட்டா என் ஆச்சிரமத்தில் சேராமலேயே....
    உண்மைதான் கீதா, ஏதோ நம்மால் முடிஞ்ச உதவி செய்யோணும்....
    இப்போ யூ ரியூப் ஷனல் ஓபின் பண்ணிப் பலரும் உழைக்கிறார்கள்... அதில் சிலர் உண்மையிலேயே மிகவும் வறிய நிலையில், ஒரு குட்டிப் பழைய வீட்டில், சரியான கிராமப் புறத்தில் இருந்தெல்லாம் வீடியோ போடுகின்றனர்... அப்படி மிகவும் கஸ்டத்தில் இருப்போரின் வீடியோக்களை, நான் பார்க்காவிட்டாலும், சும்மா போட்டு விட்டுவிடுவேன், அது தன் பாட்டில் ஓடும்... அப்போ அவர்களுக்கு பார்க்கும் மணிநேரம் அதிகமாகும் அதற்கேற்ப பணம் கிடைக்கட்டுமே என நினைப்பேன்... யாரோ எவரோ... என்னல் முடிவதைச் செய்வோமே என நினப்பேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பிஞ்சு!! ஹா ஹா ஹா பின்னே பிஞ்சு ஞானி இங்கே உலாத்தி வரப்ப நாங்களும் ஞானி ஆகிடுவோம் தானே!!!

      ஹைஃபைவ்! நானும் அப்படிப் பார்ப்பதுண்டு. நீங்கள் சொல்லுவது போன்ற வீடியோக்கள். இலங்கை யாழ் பகுதியில் கிராமத்தில் இருந்தெல்லாம் இருக்கும். உடனே அதைப் பார்ப்பேன். எனக்குப் பிடித்ததாச்சே..அவர்களுக்கும் உதவும்...என்று லைக் கொடுத்துடுவேன். யாழ் பகுதி காடுகள் தோட்டங்கள் தெருக்கள் எல்லாம் பார்க்க முடியும்...

      யாரோ எவரோ... என்னல் முடிவதைச் செய்வோமே என நினப்பேன்..//

      அதே அதே!!! ஹைஃபைவ்! மீயும்!

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  13. ஆஆ கீதாவின் கை எழுத்த்புக்களோ... தொடராக வாசிக்க முடியவில்லை போனில் ஆனா எழுத்துக்கள் தெரியுது...

    அழகுக் குட்டிச் செல்லங்கள் அழகு... எங்கள் ஊர் வீட்டிலும் இப்படிக் குட்டிகள் வந்தன முன்பு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா அதிரா அக்கையெழுத்து அப்போது எழுதியது அதுவும் வேக வேகமாக.

      தெளிவா எழுதி ஒன்னு போட்டோ எடுத்துப் போடுகிறேன் இங்கு. இப்போதெல்லாம் எழுதுவதே குறைந்துவிட்டது எல்லாமே தட்டல்தான்!!!!

      குட்டிச்செல்லாங்கள் எப்போதுமே அழகுதான் மனதை ஈர்க்கும்

      ரசித்தமைக்கு மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  14. பஹ்ரைன்ல ஆர்ட் ஆஃப் லிவிங் சுதர்சன் க்ரியா கோர்ஸ் படித்தபோது அதன் ஒரு பகுதியா, இன்று ஐந்து நல்லது பிறருக்குச் செய்து நாளை பகிர்ந்துகொள்ளுங்கள் என்றார் டீச்சர். அப்போதான் அட... நாள் முழுவதும் உதவ வாய்ப்பு கிடைப்பதும் எளிதாக இல்லையே என்று யோசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விஷயம் நெல்லை. உங்கள் ஆசிரியை அப்படிச் சொல்லியிருக்கிறார்கள் இல்லையா.

      எனக்கு மூச்சுப்பயிற்சிகள் பல யோகா வகுப்பில் சொல்லிக் கொடுத்து அதை நான் செய்து வந்தாலும் இந்த சுதர்சனக்கிரியா என்ன என்று தெரிந்துகொள்ள கற்க வேண்டும் என்று அல்ரெடி ஆர்ட் ஆஃப் லிவிங்க் அட்வான்ஸ் கோர்ஸ் செய்திருக்கும் வகுப்புகளும் எடுக்கும் என் தம்பி (அத்தை பையன் ஆனால் நான் தம்பி என்றுதான் சொல்வேன் அவனும் என்னை அக்கா என்றுதான் எல்லோரிடமும் சொல்வான். எங்கள் பிறந்த வீட்டில் அப்படி ஒரு பழக்கம் கஸின் என்றோ அத்தை மாமா பையன் என்றோ டக்கென்று சொல்லுவதில்லை. யாரேனும் ரொம்ப ஸ்பெசிஃபிக்கா கேட்டால் மட்டுமே சொல்லுவது.) யிடம் அவன் வீட்டிற்குச் சென்றிருந்த போது கற்றுக் கொடுக்கக் கேட்டேன் அவன் அப்படிச் கற்றுக் கொடுக்கக் கூடாது வகுப்பில் தான் கற்க வேண்டும் என்று சொன்னான். அதுதான் ரூல் என்று. உறவினராக இருந்தாலும் அவன் வகுப்பில்தான் கற்க வேண்டும் என்று சொன்னான்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. என் மாமா குழந்தைகள் அனைவரும் எங்களை "அக்கா" என்றே அழைப்பார்கள். அதுவே எங்கள் சகோதரர்களை "அத்தான்"என அழைப்பார்கள்! :))))))

      நீக்கு
  15. வறுமை ஏற்படும் நிலையில் - புலவரும் வண்டியோட்டியும் கதை எனக்கு தமிழ் நான் டீடெயிலில் இருந்தது. பிற்காலத்தில்தான் அது உ வே சா அவர்கள் எழுதிய நடந்த சம்மபவம் என்று புரிந்தது. அந்தக் கதை நினைவிருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, நீங்கள் சொல்லும் புலவரும் வண்டி ஓட்டியும் என்பது எங்களுக்கு நாண்டிடெயிலில் படித்த நினைவு இல்லை. ஆனால் சொல்லிக் கேட்டு அப்புறம் எங்கோ வாசித்ததும் நினைவு இருக்கு. அதுவும் ரொம்பக் க்ளியராக உரையாடல் எல்லாம் நினைவில்லை. அதே கதைதானா நீங்கள் சொல்லுவது என்று தெரியவில்லை. புலவர் பொய்யாமொழிப்புலவர் அவர் வண்டியில் ஏறும் முன் தன் பரம்பரை பற்றி சொல்லி தன் மூதாதையர் எல்லாம் புலவர்கள் என்று சொல்லி வருவார். இறங்கியதும் வண்டிக்காரன் கூலி பெறமாட்டார். ஏன் என்று கேட்டால் புலவர் தன் மூதாதையர்கள் பாடி சன்மானம் பெற்ற வெங்காளப்ப நாயக்கரின் பேரன் தான் தான் என்று சொல்லி அவர் சன்மானமாக அளித்த கிராமத்தில் புலவர் வாழ்ந்துவருவதால் தாத்தாவின் பணத்தைக் கூலியாகப் பெறமாட்டேன் என்று சொல்வார் என்ற நினைவு.

      இதே கதைதான் நீங்கள் சின்னது? ஓ அது உவே சா எழுதிய நடந்த சம்பவமா? நான் சொல்லியிருக்கும் இந்தக் கதையா? அது எனக்குத் தெரியவில்லை நெல்லை

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. ஆமாம். இது உ.வே.சா அவர்கள் எழுதின சம்பவம். வெங்களப்ப நாயக்கர், பொய்யாமொழி புலவர் - நினைவில் இருந்தது ஆனால் சந்தேகமா இருந்ததால் எழுதலை.

      நீக்கு
  16. புல் மேயாது ஆகும் புலி - இதை எழுத இதற்கு முந்தைய புலவர்களின் செய்யுள் படித்திருக்கலாம், இல்லை காட்டில் கவனித்திருக்கலாம். காட்டு அப்சர்வேஷன் இல்லாமல் பல செய்யுள்கள் எப்படி எழுதியிருப்பாங்கன்னு யோசிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நெல்லை எனக்கு அப்படித் தோன்றவில்லை. புலி பசித்தால் புல்லைத் தின்னாது இங்கு பசி பற்றி பேசியதால் அப்படிச் சொல்லியிருக்கலாம். அது தன் வயிற்றை சரி செய்து கோள்ளத்தான் தின்னுமே அல்லாமல் பசிக்குத் தின்னாது. அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. ஆமாம் கீதா ரங்கன். இப்போ நீங்க புலியைப் பத்தி ஒரு கட்டுரை எழுதுனீங்கன்னா, அது நீங்க பார்த்த அனிமல் சேனல், வாசித்த புத்தகங்க்ள் என்று இருக்கும். ஆனா இவை எதுவுமே பார்க்காமல் படிக்காமல் புலியின் குணத்தைப் பற்றி நீங்கள் எழுதமுடியுமா? யாராவது காட்டுவாசி இதனைப் பற்றி புலவரிடம் எப்போதாவது பிரஸ்தாபித்திருக்கலாம். அதனை மனதில் கொண்டு செய்யுளில் இதனைக் கொண்டுவந்திருக்கலாம் என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

      நீக்கு
    3. ஆமாம் நெல்லை. பாயின்ட் !! புரிகிறது. நம் அனுபவங்கள் அல்லது சுற்றிலும் நடக்கும் அனுபவங்கள் கேட்ப்பவை இவற்றைத்தானே எழுதுகிறோம்...

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  17. எங்கள் பள்ளி அனுபவங்களும் சிறப்பாகவே இருக்கும். அதிலும் ஆங்கில வகுப்பு!நபிகள் நாயகம் சொன்னது சரியே. விலையில்லாமல் கொடுக்கக் கூடியது புன்னகை ஒன்றே. அது போதுமே. இந்தச் செய்யுளைப் படிச்ச நினைவு இல்லை. பழமொழி நானூறு பாடத்திட்டத்தில் இல்லைனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா அப்போதெல்லாம் பள்ளி அனுபவங்கள் சிறப்பாகவே இருந்தது எனலாம். குறிப்பாக சொல்லித் தருவது. ஆம் அதே அதே எங்களுக்கும் ஆங்கில வகுப்பும் தமிழ் வகுப்பும் மிகச் சிறப்பாக இருக்கும்.

      விலையில்லாமல் கொடுக்கக் கூடியது புன்னகை ஒன்றே. அது போதுமே.//

      அதைச் சொல்லுங்க இதுதானே பலரும் இப்ப கஞ்சத்தனம் காட்டுறாங்க!!!!

      இந்தச் செய்யுள் பாட திட்டத்தில் கிடையாது அக்கா. ஆசிரியராகச் சொன்னது. சில சமயம் இப்படிச் சொல்லிக் கொடுத்ததுண்டு. அப்படிக் கற்றதுதான்

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  18. காணொளியா அது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், திறக்கும்போதே முடிஞ்சுடுச்சு! இரண்டாவதும் அப்படியே! ஆனால் கசமுசவெனக்குட்டிகளைப் பார்க்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா....கீதாக்கா இது சென்னையிலிருந்து வந்தது...முதலில் போடணுமா என்று யோசித்தேன் இருந்தாலும் குட்டிகள் கொஞ்சம் தெரிகிறார்களே என்றுதான் பகிர்ந்தேன். இம்புட்டாவது தெரியறாங்களே!! ஹா ஹா ஹாஹ்...

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  19. என் பூனைகள் பலவிதம் பதிவுக்கான பின்னூட்டத்தில்பூனைகள் பற்றி எழுதி இருப்பதாக சொன்னீர்கள் அது இதுதானா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி எம் பி சார் ஆனால் பூனைகள் பற்றி எழுதலை அது இதற்கு முந்தைய பதிவுகள். மகன் புதிதாக வளர்க்கும் பூனைக்குட்டி பற்றி சொல்லி வீடியோவும் போட்டிருந்தேன். அதைத்தான் சொல்லியிருந்தேன் சார் அங்கு.

      மிக்க நன்றி ஜி எம் பி சார்

      கீதா

      நீக்கு
  20. இன்று நபிகள் இருந்தா பதிவுக்கு கமெண்ட் போடுவதும் தர்மம் லிஸ்டில் சேர்த்திருப்பார். பழமொழியில் கூறப்படும் அத்தகைய சான்ரோர் இன்று இருக்கிறார்களா என்பது கேள்விக்குறி. தனக்கு மிஞ்சியது தானம் என்றும் தனக்கும் இவ்வளவு போதும் என்றும் சிறிது சுய கட்டுப்பாடு உள்ளவர்களே இன்றைய உலகில் சான்ரோர்களாக கருதப்படலாம்.

    பதிலளிநீக்கு
  21. இன்று நபிகள் இருந்தா பதிவுக்கு கமெண்ட் போடுவதும் தர்மம் லிஸ்டில் சேர்த்திருப்பார்.//

    ஹா ஹா ஹா ஹா அரவிந்த்!!!

    அத்தகைய சான்றோர் உள்ளனரா இப்போது என்றால் கண்டிப்பாகக் கேள்விக்குறிதான் ஆனால் வயிற்றை நிரப்ப கீழ்த்தரமானவற்றை நோக்கிப் போகாமல் வாழும் மக்கள் சிலர் உளனர் எனலாம் இல்லையா..

    தனக்கு மிஞ்சியது தானம் என்றும் தனக்கும் இவ்வளவு போதும் என்றும் சிறிது சுய கட்டுப்பாடு உள்ளவர்களே இன்றைய உலகில் சான்ரோர்களாக கருதப்படலாம்.//

    கண்டிப்பாகச் சொல்லலாம். இப்போதைய லாக்டவுனில் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் கூட தாங்கள் சாப்பிடும் 3 வேளைச் சாப்பாடைக் குறைத்துக் கொண்டு அல்லது இரு வேளைகளாக்கிக் கொண்டு ஒரு வேளைச் சாப்பாட்டை சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் ஒரிருவருக்குப் பகிரலாம் எனும் உளங்களும் உள்ளனர். பணம் உள்ளவர்களை விட பல ஏழைகள் இப்படிப் பகிர்ந்து உண்ணுவதைப் பார்க்கிறேன் அரவிந்த்.

    மிக்க நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்...நீங்களும் உங்க கணவரும், அக்கம் பக்கம் உள்ள எளிமையான குழந்தைகளுக்கு உணவு படைப்பதைச் சொன்னது என் மனதை மிகவும் நெகிழ்த்தியது. அன்புள்ளம் இருவருக்குமே இருப்பது சிறப்பு. வாழ்த்துகள்.

      நீக்கு
    2. நெல்லை நான் இங்கு சொன்னது எங்கள் வீட்டருகிலும் சரி, சென்னையில் இருந்தப்பவும் சரி அங்கு நம்மை விட மிகவும் நலிந்திருப்பவர்கள் பகிர்ந்து உண்பதைப் பார்த்திருக்கிறேன் இங்கு பார்க்கிறேன். அதைத்தான் சொன்னேன் நெல்லை. நாங்கள் எதுவும் அவர்கள் செய்வது போல் எதுவும் செய்யவில்லை.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

      கீதா

      நீக்கு
  22. நபிகள் நாயகம் பதில் சிறப்பு...

    ஆசிரியர் சொன்ன பழமொழி நானூறு பாடலின் விளக்கம் அதை விட சிறப்பு...

    அது சரி, ஒரு குறளை எடுத்து விட்டிருந்தால், டீச்சர் ‘அடடா..!' என்று யோசித்திருப்பாரே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி.

      //அது சரி, ஒரு குறளை எடுத்து விட்டிருந்தால், டீச்சர் ‘அடடா..!' என்று யோசித்திருப்பாரே...!//

      ஹா ஹா ஹா ஹா டிடி அப்படி ஒரு அறிவு இருந்திருந்தாதானே!!!!

      கீதா

      நீக்கு
  23. கீ சா மேடம் சொன்ன புன்னகை பதிவு இதுதான் என்று உணர்ந்தேன். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை வாங்க கௌ அண்ணா. !! வருக வருக!!

      கீதாக்கா அங்க சொல்லிருந்தப்பக் கூடப் புரியலை என் பதிவுல என்னது அவங்களைப் புன்னகைக்க வைத்தது என்று அந்தக் கோணத்தில் யோசித்தேன். இப்ப புரிந்தது. தலைப்பே அதுதானே என்று!!! ஹா ஹா எம்பூட்டு ட்யூப்லைட் பாருங்க!

      மிக்க நன்றி கௌ அண்ணா

      கீதா

      நீக்கு
    2. உங்க பதிவின் தலைப்பு மட்டுமின்றிப் பதிவில் உள்ள காணொளிகளும் புன்னகைக்க வைத்தன.

      நீக்கு
    3. புரிந்து கொண்டேன் கீதாக்கா

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  24. நீங்கள் இந்தப் பதிவின் மூலம் நடத்திய பாடம் நன்றாகப் புரிகிறது டீச்சர்! எதிர்காலத்திலும் அடிக்கடி இம்மாதிரிப் பாட வகுப்புகள் இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா செல்லப்பா சார்

      வகுப்பு எடுக்கற அளவுக்கு மீக்கு அறிவு எல்லாம் இல்லையே சார். அதுக்கு ரொம்பவே ப்ரிப்பரேஷன் வேணுமே.

      மிக்க நன்றி சார்.

      கீதா

      நீக்கு
  25. நபிகள் கூறிய அறிவுரை இப்போது மிக அவசியம். லிஃப்டில் சிலரை பார்த்து புன்னகைத்தால் கூட திருப்பி கிடைக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பானுக்கா இங்கும் கூடத் தெருவில் அப்படித்தான். சென்னையிலும் கூட வாக்கிங்க் செல்லும் போது நான் புன்னகைப்பதுண்டு. திருப்பிக் கிடைக்காவிட்டாலும் அப்பழக்கம் எனக்கு அடுத்த நாளும் அதே ஆளைப் பார்த்துப் புன்சிரிப்பது வழக்கம்.!! இத்தனைக்கும் வேறு யாரும் கூடவோ அல்லது பின்னாடியோ இருக்கமாட்டார்கள் அவர் ஒரு வேளை அவர்களைப் பார்த்து புன்னகைக்கிறாளோ என்று நினைப்பதற்கு. இருந்தாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாம் தொடர்வோம் பானுக்கா

      மிக்க நன்றிக்கா

      கீதா

      நீக்கு
  26. இந்த மாதிரி பூனைக் குட்டிகளைப் பார்த்தால் எனக்கு பயம்தான் வரும். அதுகளுக்கு ஏதேனும் ஆனாலோ மனதை ரொம்பவும் பாதிக்கும். சமீபத்தில் அபார்ட்மெண்டுகளின் ஷாஃப்ட் பகுதிகளை புறாக்கள் வராமல் தடுப்பு நெட் போட்டார்கள். எங்கள் வீட்டில் ஒரு ஷாஃப்டில் இருந்த இரண்டு முட்டைகள், அம்மா புறா - இவற்றில் அம்மா புறாவைக் காணலை. முட்டைகள் மட்டும் இருந்து என் மனதை வருத்துகின்றன. என்ன பண்ண என்றே தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை புரிகிறது. எனக்கும் ஒவ்வொரு முறை தெருவில் நாய்க்குட்டிகளைப் பார்க்கும் போது மனம் என்னவோ செய்யும். ஹையோ இதுகள் எப்படிப் பிழைக்கப் போகின்றன என்று. இப்படிக் கிடக்கின்ற்னவே என்று.

      நெல்லை அந்த முட்டைகளை வெளிப்புறமாக அந்த அம்மா புறா வரும் இடத்தில் வைத்துவிடுங்கள். ஆனால் முட்டையில் கை படாமல் அந்தக் கூட்டோடு தூக்கி வைத்துவிடுங்கள். ஏனென்றால் மனித வாசம் வந்தால் அம்மா புறா ஒதுங்க வாய்ப்புண்டு. வெளிப்புறம் வைத்துப் பாருங்கள். அல்லது அருஇல் ஏதேனும் கூடு இருக்கிறதா என்று பாருங்கள் அதில் வைத்துவிடுங்கள்.

      பொதுவாக 17 லிருந்து 19 நாட்கள் ஆகும் அது விரிந்து குஞ்சுகள் வெளி வர. அப்பா புறா அம்மா புறா மாற்றி மாற்றி அடைகாக்கும். எனவே வெளியில் வைத்தால் ஏதேனும் ஒன்று கவனிக்க வாய்ப்புண்டு.

      இப்போது முட்டை போட்டு எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் என்று ஓரளவு கணிக்க முடிந்தால் அதற்கு வார்ம்த் கொடுக்க முடிந்தால் நல்லது. முட்டையை மூன்று முறை திருப்பிப் போட வேண்டும். 100 டிகிரி கிட்ட வெப்பம் தேவைப்படும் அதே சமயம் ஈரப்பதமும்/ஹ்யூமிடிட்டியும் தேவை. ஆனால் குஞ்சு வெளியில் வருமா என்பது தெரியலை. வெளியில் வந்தாலும் முதல் 20 நாட்கள் உனவு கொடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டிவரும்.

      2 வது ஆப்ஷன் கடினம் என்றால் அதை வெளியில் வைப்பது நல்லது. அட்லீஸ்ட் ஏதேனும் புறா பார்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படலாம்.

      கீதா

      நீக்கு
  27. பழமொழி நானூறு படித்திருக்கிறேன், ஆனால் நினைவில் இல்லை. பத்தாம் வகுப்பு நோட்டை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறீர்களா? க்ரேட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா நெட்டில் தேடினால் கிடைக்கும். இப்போதுதான் அந்த வசதி உள்ளதே.

      எங்கள் ஆசிரியை மிகச் சிறந்த் ஆசிரியை. நிறைய சொல்லிக் கொடுத்தார். எனக்கு இப்போது நினைவு வருவதைப் பகிரலாம் என்றிருக்கிறேன். ஏதேனும் பதிவுகள் வாசிக்கும் போதும் கூட ஒரு வேளை அதனுடன் தொடர்புடைய பள்ளிக்காலத்து நினைவு வந்தால் பகிரலாம் ஆனால் நோட்ஸ் இருக்கா என்று பார்க்க வேண்டும்

      அக்கா எல்லாம் இல்லை. ஓரிரண்டுதான் உள்ளன. பொக்கிஷமாக வைத்த பலவும் பல வீடுகள், ஊர்கள் ஒவ்வொரு ஊரிலும் மாறிய வீடுகள் என்று தொலைந்துவிட்டன. இப்ப கூட சென்னையில் ஒரு ரூமில் பல போட்டு வைத்திருக்கிறேன். அதெல்லாம் தூசி அடைந்து மங்கிப் போகும். எனது பொக்கிஷங்கள் பல இப்படித் தொலைந்துவிட்டன. அடுத்து இங்கிருந்து எங்கு மாற்றமோ? ஆனால் இப்போதைய சூழலில் எங்கும் மாற முடியாது என்று நினைக்கிறேன். தெரியவில்லை.

      கீதா

      நீக்கு
  28. நல்ல பதிவு.

    நபிகள் அவர்கள் சொன்னது போல் திருமூலரும் சொல்லி இருக்கிறார்.

    //யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
    யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே (திருமூலர்)//

    ஒரு புன்னகை, ஒரு ஆறுதலான வார்த்தை வழங்கினலே போதும்.

    நாம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டியது எவ்வளவு கவலை இருந்தாலும் முகத்தில் புன்னகை தவழ வேண்டும் என்பதை. ஆனால் நம் எதிரில் வருபவர்கள் நாம் புன்னகை சிந்தினாலும் ஏதோ சிந்தனையோடு நம்மை கடந்து செல்கிறார்கள்.

    பள்ளியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சிரிக்க வைத்து பாராட்டு பெற்று கொடுத்து இருக்கிறது.

    காணொளிகள் அருமை. குட்டி பூனைகள் பார்க்க அழகு. தாய்பூனை குட்டி பூனைகளை வாயில் கவ்வி கொண்டு இடங்களை மாற்றிக் கொண்டே இருக்கும். அது பார்க்க அழகாய் இருக்கும்.

    சின்னக்குட்டிகள் விளையாடுவது பார்க்க அழகாய் இருக்கும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதிக்கா. உங்களை வலையில் காணவில்லையே என்னாச்சு என்று கேட்க நினைத்திருந்தேன் இங்கு உங்கள் கருத்து வந்திருந்தது.

      அக்கா இந்த திருமூலர் பாடலை எடுத்து வைத்திருந்தேன். வள்ளலாரும் சொல்லுவார். எம் ஏ வகுப்பில் எனக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் அடிக்கடி சொல்லுவது ஒன்று உண்டு. அதை எல்லாவற்றையும் இந்தப் பதிவில் குறிப்பிட விரும்பி சேர்த்து அதிகமாகிப் போனதால் மற்றொரு பதிவாக்கிவிடலாம் என்று எழுதி வைத்திருக்கிறேன்.

      மிக்க நன்றி கோமதிக்கா. நீங்களும் இங்கு சொன்னதற்கு.

      //ஆனால் நம் எதிரில் வருபவர்கள் நாம் புன்னகை சிந்தினாலும் ஏதோ சிந்தனையோடு நம்மை கடந்து செல்கிறார்கள்.//

      ஆமாம் கோமதிக்கா..ஒவ்வொருவருக்கும் என்னென்னவோ பிரச்சனைகள்.

      //பள்ளியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சிரிக்க வைத்து //

      ஹையோ அக்கா அப்பல்லாம் ரொம்பவே அப்படித்தான் இருந்தேன்.

      ஆமாம் தாய்ப்பூனை குட்டிப் பூனைகளை இடம் மாற்றிக் கொண்டே இருக்கும். அதே பார்க்க அழகாய் இருக்கும். இரு பூனைப் பதிவுகள் இருக்கின்றன. ஆமாம் சின்னக் குட்டியள் விளையாடுவதும் அத்தனை அழகா இருக்கும்

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  29. பத்தாம் வகுப்புக் கையெழுத்தினை இன்றும் போற்றிப் பாதுகாத்து வருவது சிறப்பு

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. பள்ளி நினைவுகளை பத்திரமாக பாதுகாத்து ஒரு பதிவாக இட்டு விட்டீர்கள். தங்கள் ஆசிரியர் நினைத்ததை சொல்லி அவர்களை அசத்தியிருக்கிறீர்கள். அந்த குறிப்பையும் இத்தனை நாள் பத்திரமாக வைத்திருப்பது நீங்கள் கல்வியின் பால் வைத்திருந்த பற்றினை வெளிப்படுத்துகிறது.அந்த எழுத்துக்கள் மங்கலாக ஆகி விட்டாலும் கொஞ்சம் தெரிகிறது. ஆனால் தொடர்ச்சியாக படிக்க முடியவில்லையே என வருத்தமாக உள்ளது.தங்கள் கையெழுத்து அழகாக உள்ளது.

    நபிகள் நாயகம் கதை அருமையாக உள்ளது. நல்ல சினேகமான ஒரு புன்னகையை பிறருக்கு தருவதற்கு ஈடாக விலையுயர்ந்த பொருள் உலகில் வேறு என்ன உள்ளது? நபிகள் நாயகம் அழகாக சொல்லியுள்ளார்.

    தேர்ந்தெடுத்த படங்களும், செல்லங்களின் காணொளிகளும் நன்றாக உள்ளது. நான் மிகவும் தாமதமாக வந்துள்ளேன். இரண்டு தினங்களாக எனக்கு நேரம் கிடைக்கும் போது மின்தடை, நெட் தொடர்பின்மை என்பதாக தாமதமாகி விட்டது. இதோ இன்று கூட விடாம(ழை)லே மழை பெய்ததால் கரண்ட் வருவதும், போவதுமாக படுத்தி விட்டது.

    உங்கள் பதிவில் என்னையும் குறிப்பிட்டிருப்பதற்கு மிகுந்த நன்றிகள் பதிவு அருமை சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா தாமதம் என்றெல்லாம் இல்லை. எனக்குத் தெரியும் இங்கு பங்களூரில் கரன்ட் கட் ஆவது நெட் தகராறு எல்லாமே இங்கும் எனக்கும் ஏற்படுவதுதான்.

      மழை பெய்தால் இங்கும் கரன்ட் கட் ஆகிவிடும் வருவது போவதுமாகத்தான் இருக்க்ம்.

      அக்கா ரொம்பவே என்னை உயர்த்திப் பேசுகிறீர்ங்க. என்னக்கு அந்த அளவு எல்லாம் இல்லை. எனக்குமே கையெழுத்து சரியாகப் புரியலை மங்கிவிட்டதால் எனவே சும்மா அதன் மேல் கொஞ்சம் எழுதிப் பார்த்தது மட்டும் தெரிகிறது என்று நினைக்கிறேன்.

      உங்கள் பதிவுதான் அதைப் பற்றி எழுதத் தூண்டியது. எனவே உங்களுக்குத்தான் ந்னறி சொல்ல வேண்டும்.

      உங்கள் கருத்துகள் அனைத்திற்கும் மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  31. நிதானமாக வருகிறேன் கீதாம்மா.
    நிறையப் புன்னகைக்கலாம். என்றும் நலம் நிறைந்து இருக்கும்
    வார்த்தைகளைச் சொல்லலாம்.
    யாவர்க்குமாம் பசுவுக்கோர் கைப்புல் பாடல் தான் நினைவுக்கு
    வந்தது. என்றும் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  32. என்றும் நலம் நிறைந்து இருக்கும்
    வார்த்தைகளைச் சொல்லலாம்.//

    ஆமாம் வல்லிம்மா எப்பவுமே சொல்லலாம்.

    யாவர்க்குமாம் பசுவுக்கோர் கைப்புல் பாடல் தான் நினைவுக்கு
    வந்தது.//

    நானும் எடுத்து வைத்திருக்கிறேன் வல்லிம்மா பதிவிற்காக.

    அம்மா நிதானமா எல்லாம் வரலை அதனால் என்ன. எப்ப உங்களுக்கு முடிகிறதோ அப்ப வாங்கம்மா.

    மிக்க நன்றி வல்லிம்மா உங்கள் கருத்திற்கு,

    கீதா

    மிக்க நன்றி வல்லிம்மா

    பதிலளிநீக்கு
  33. அருமையான பதிவு. கதைகளும் விளக்கங்களும் சிறப்பு. நிறைய தெரிந்துகொண்டேன் மேடம்.

    பதிலளிநீக்கு