அன்று,
மாயா தன் பகுதியிலிருந்து முக்கியச்சாலைக்குச் செல்லும் சிற்றுந்து நிறுத்தத்தில் நின்று
கொண்டிருந்தாள்.
அவள் செல்ல வேண்டிய இடம் தி நகரில் இருக்கும் துரைசாமி சுரங்கப்பாதை
அருகே இருக்கும் பகுதி. முக்கியச் சாலையிலிருக்கும் பேருந்து நிறுத்தத்திலிருந்துதான்
திநகர் செல்லும் பேருந்தைப் பிடிக்க வேண்டும். கடுமையான வெயில். சிற்றுந்து வரவே இல்லை.
வழக்கமாக மாறி மாறி வரும் இரு சிற்றுந்துகளில் அன்று ஒரு சிற்றுந்துதான் வந்து செல்கிறது
என்று அங்கிருந்த கடைக்காரர் தெரிவித்தார். என்ன செய்யலாம் என்று யோசித்த வேளையில்
அவளது அத்தை பெண்ணிடமிருந்து அழைப்பு.
“மாயா,
எங்கே இருக்கிறாய்? உன் வீட்டருகில் என் தோழிக்காக ஒரு வீடு பார்க்க அவளோடு வந்தேன்.
அப்படியே உன்னையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று தோன்றியது. இப்போது வரட்டுமா?”
“நான் சிற்றுந்திற்காகத்தான் எங்கள் தெரு முனையில் காத்துக் கொண்டிருக்கிறேன். இதோ வருகிறேன்.”
"எங்கு போக?"
"தி நகர், துரைசாமி சுரங்கப்பாதை வரை செல்ல வேண்டும். சிற்றுந்து வரவில்லை."
"எங்கு போக?"
"தி நகர், துரைசாமி சுரங்கப்பாதை வரை செல்ல வேண்டும். சிற்றுந்து வரவில்லை."
“நாங்களும் தி நகர் தான் போகிறோம். நீ அங்கேயே இரு. நான் “ஊபர்” பதிவு செய்கிறேன்.
.உன்னையும் அப்படியே அழைத்துக் கொண்டு செல்கிறோம்” என்று மாயாவின் அத்தை பெண் சொல்லிட மாயாவும் அங்கேயே காத்திருந்தாள்.
ஊபர்
வந்தது. “நாங்கள் பனகல் பூங்கா அருகே இறங்கி விடுவோம். நீ துரைசாமி சுரங்கப்பாதை பக்கத்தில்
இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிக் கொள். நான் அப்படித்தான் பதிவு செய்திருக்கிறேன்.
நான் பணம் கொடுத்துவிடுகிறேன்” என்று அத்தையின் பெண் சொன்னாள். அத்தை பெண்ணும், தோழியும்
பின் இருக்கையில் இருக்க, மாயா முன் இருக்கையில் அமர்ந்தாள். முன் இருக்கையில் அமர்வதுதான்
மாயாவிற்கும் பிடித்தமான ஒன்று. இருக்கையுடன் இணைந்திருக்கும் பாதுகாப்புப் பட்டையைத் தன்னுடன் சேர்த்துக் கட்ட நினைத்த போது ஓட்டுநரைக் கவனித்தாள். அவர் அணிந்திருக்கவில்லை. நல்ல தைரியம்தான் என்று நினைத்துக் கொண்டே அவரையும் அணியச் சொன்னாள். ஆனால், அவர் அதை அணியவில்லை.
வழக்கமான
விசாரிப்புகள், பார்த்த வீடு பற்றிய பேச்சுகள் என்று சுவாரசியமாகச் சென்றது உரையாடல். சிறிது தூரம் சென்றதுமே ஏனோ
தெரியவில்லை, மாயாவின் உள்ளுணர்வு விபத்து ஏற்பட உள்ளது என்று சொல்லியது. ஏற்கனவே, மாயாவிற்கு இந்த உள்ளுணர்வின் அனுபவம் பல உள்ளதுதான் என்றாலும் என்னடா இது இப்படித் திடீரென்று
விபரீதமான உள்ளுணர்வு என்று யோசித்தாள். இறங்கவும் முடியாது. எதிர்மறையான உள்ளுணர்வு
என்றால் வெளியில் சொல்லக் கூடாது, பிரார்த்தனைதான் செய்ய வேண்டும் என்று ஊரிலுள்ள எல்லாக் காவல் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டாள். ஓட்டுநரைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள்.
இளைஞர். வயது 22 லிருந்து 25க்குள் இருக்கலாம்.
மாயாவிற்கு
நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதில் பல வருட அனுபவம் உண்டு என்பதால், அந்த இளைஞருக்கு அனுபவம்
இல்லை என்பதும், சென்னை ஊரும் பழக்கமில்லை என்பதால் வழியும் தெரிந்திருக்கவில்லை என்பதும் தெரிந்தது. சாலையின் மீதான கவனத்துடன், ஒவ்வொரு போக்குவரத்து சமிக்ஞையில் வண்டி நின்ற போதும் ஓட்டுநருடன்
பேச்சுக் கொடுத்தாள். தன் ஊர் திருவண்ணாமலை என்றும் சென்னைக்கு வந்து 6 மாதங்களே ஆகிறது
என்றும், இந்த 6 மாதங்களாகத்தான் வண்டி ஓட்டுவதாகவும் சொன்னார். மேலும் அவள் கேள்விகள் கேட்டதில்
வண்டி அந்த இளைஞருடையது அல்ல என்றும் அவர் சம்பளத்திற்காக ஓட்டுவதும் தெரியவந்தது.
ஆனால், அவரது சம்பளம் பற்றியோ, ஊபரில் பதிவது பற்றிய கேள்விகளுக்கோ பதில்கள் இல்லை.
மாயாவின்
உள் உணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது விபத்து ஏற்படப் போகிறது என்று. ஓட்டும் இளைஞருக்கு
வழி சொல்லிக் கொண்டே வந்தாள். கோட்டூர்புரத்து அடையாறு பாலத்தில் ஏறும் போது உள்ளுணர்வு
மீண்டும் சொல்லியது விபத்து ஏற்பட உள்ளது என்று. அங்கு ஏதும் நடக்கவில்லை. அவளுக்கும் பயம் ஏற்படவில்லை. தைரியம்
தான். அத்தை பெண்ணுடன் பேசிக் கொண்டே நேர்மறையாகவும் சிந்திக்கத் தொடங்கினாள். ஆனால்
உள்ளுணர்வு அவளை விடுவதாக இல்லை. தான் சொல்லுவதையே கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொண்டே
வந்தது.
'இந்த உள்ளுணர்வு எல்லாருக்கும் இப்படி வருமோ? இப்படித்தான் படுத்துமோ? அல்லது யாரும் அதைச் சட்டை செய்வதில்லையோ? இதைத்தான் மனசாட்சி என்று சொல்லுகிறோமோ? எனக்கு இப்படித் தோன்றுவது போல் இந்த ஓட்டுநருக்கும் தோன்றுமா? அல்லது பின்னாலிருக்கும் அத்தை பெண்ணிற்கும், அவளது தோழிக்கும் இப்படி உள்ளுணர்வு எச்சரிக்குமா? இங்கிருப்பவர்கள் எல்லாருக்கும் ஏகமனதாகத் தோன்றினால்தானே நிகழ வேண்டும்? அப்படி இல்லாமல் ஒருவருக்கு மட்டும் தோன்றினால் நிகழுமா? அப்படித் தோன்றினால் யாருக்குத் தோன்றுகிறதோ அவருக்கு மட்டும் தானே நிகழ வேண்டும். கூட இருப்பவருக்கும் நிகழ்ந்தால் அதன் பெயர் என்ன? அப்படி நிகழப்போவதை இப்படி அறியும் போது கூட இருப்பவருக்கேனும் ஏதும் ஆகாமல் இருக்க முயற்சி செய்யலாம் தானே? ஆனால் இதைச் சொன்னால் இவர்கள் நம்புவார்களா? ஓட்டுநருக்குக் கோபம் வராதோ? என் மீது நம்பிக்கை இல்லையா என்று?' என்றெல்லாம் மாயாவின் மனதில் சிந்தனைகள் தோன்றிட தான் எப்போதோ பார்த்த, இந்த உள்ளுணர்வு பற்றிய மலையாளப் படமான, மம்மூட்டி நடித்த, "ஐயர் த க்ரேட்", ஆங்கிலப்படம் "ஃபைனல் டெஸ்டினேஷன்" எல்லாம் நினைவில் நிழலாடித் தொலைத்தது.
இப்படிச் சாலையின் வழியை விட்டுச் சிந்தனைகளின் வழியில் மாயா சென்றதால், இவள் வழி சொல்லும் முன்னரே அடையாறு பாலம் தாண்டியதும், கோட்டூர்புரத்தையும், செனட்டஃப் சாலையையும் இணைக்கும் மேம்பாலம் ஏறாமல், அதற்கு முன்னரே இருக்கும் நந்தனம் குடியிருப்பிற்குள் இடது புறமாக வண்டியைத் திருப்பிவிட்டார் ஓட்டுநர். அண்ணாசாலையைப் பிடித்து அங்குச் சற்று தூரம் சென்று யு வளைவில் திரும்பி மீண்டும் நந்தனம் வருவதற்காகச் சென்று கொண்டிருந்த போது, மீண்டும் மாயாவின் உள்ளுணர்வு தேய்ந்து போன ரெக்கார்ட் போல எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தது. அதற்கு ஏற்றாற் போல ஒரு வண்டி இடதுபக்கம் இடித்துவிடுவது போல வரவும், மாயா ஓட்டுநரை எச்சரித்து வலது புறம் ஒதுங்கச் சொல்லலாம் என்றால் அங்கும் வண்டி. எப்படியோ தப்பித்தது. தப்பினார்கள்.

ஒருவழியாகச் சிந்தனை வழிகளையும் கடந்து, சாலை வழிகளையும் கடந்து பனகல்
பூங்காவை அடைந்ததும், மாயாவின் அத்தை பெண்ணும் அவளது தோழியும் இறங்கிக் கொண்டார்கள். மறக்காமல் ஓட்டுநருக்குப் பணத்தையும் கொடுத்தார்கள். மாயாவிற்குக் கொஞ்சம் ஆசுவாசம் ஏற்பட்டது. இதுவரை ஏதும் விபரீதமாக ஏற்படவில்லை. அவர்களும்
இறங்கியாயிற்று. அடுத்த 3 நிமிடத்திற்குள் தான் இறங்க வேண்டிய இடத்திற்குச் சென்றுவிடலாம்,
என்று. ஆனால், இந்த உள்மனது தன் வாலைச் சுருட்டிக் கொண்டு சும்மா இருகாமல் மீண்டும் ஒலித்தது, எச்சரித்தது.
இறங்க வேண்டிய இடத்திற்கு வந்தாயிற்று. 'ஹப்பா இறைவா நன்றி 'என்று சொல்லிக் கொண்டே மாயா, தன் இருக்கையின் பாதுகாப்புப் பட்டையைக் கழற்ற கை வைத்தாள். போக்குவரத்து அதிகமாக இருந்ததால் அங்கு ஒதுக்குவது கடினம் என்றும், சுரங்கப் பாதையில் இறங்கி, ஏறியதும் ஓரமாக நிறுத்துவதாகவும் ஓட்டுநர் சொன்னார். மீண்டும் உள்ளுணர்வு ஒலித்தது. எச்சரித்தது. இறங்கிவிடலாம் என்று நினைத்தால், போக்குவரத்து நெரிசலாக இருந்ததால், கதவைத் திறப்பதும் கடினம். வண்டியை ஓரங்கட்ட ஓட்டுநர் சற்றுக் கஷ்டப்பட்டதைப் பார்த்ததும் சரி என்று சொல்லிவிட்டாள்.

சரி
என்றவள், ஹப்பா இது வரை உள்ளுணர்வு சொன்னது நடக்கவில்லை. ஒவ்வொரு நொடியும் தப்பித்து வருகிறேன், இறைவா நன்றி! என்று நினைத்துக்
கொண்டிருக்கும் போதே, ஓட்டுநர் மெதுவாக மிக மெதுவாகச் சென்று பாதையில் இறங்குவதற்கு
நிற்க, மாயா பார்த்துக் கொண்டே இருக்க, எதிரில்வேகமாக ஏறி வந்த ஒரு பெரிய கார் வரிசையில்
வராமல், பக்கத்து வண்டியை முந்திக் கொண்டு, அந்த ஏற்றம் சாலயில் இணையும் முகப்பில்
ஏரியதைக் கவனித்தாள்.
ஏறி
வந்த வண்டியைப் பார்த்ததும் “இது சரியில்லை” என்று தோன்றிட அதனைப் பார்த்துக் கொண்டே,
“தம்பி கொஞ்சம் லெஃப்ட்ல ஒடிச்சுக்குங்க” என்று சொல்லிக் கொண்டே, கழற்றிக் கையில்
பிடித்திருந்த பாதுகாப்புப் பட்டையை மீண்டும் மாட்ட முனை……’.டமால்’……பட்டை கையிலிருந்து
விலகிட, காரின் முன் பகுதியில் மாயாவின் தலை கவிழ்ந்து முட்டிட, நெற்றி, மூக்கு அடிபட,
இடித்த வேகத்தில் பின்னால் தள்ளப்பட்டாள். ஓட்டுநரும் அதே போன்று பின்னால் வந்ததில்
பின் தலையில் இடித்துக் கொண்டார். மாயாவுக்கும் பின் தலையில் அடிபட்டது..
மாயாவின்
நெற்றியில் ரத்தம் கசிந்திட மூக்கு எலும்பில் அடிபட்டது வலிக்கத் தொடங்கியது. புருவங்களில்
அடி. அப்போதுதான் கவனித்தாள். நல்ல காலம் முன்பக்கம் தலை கவிழ்ந்து மோதிய போது, அணிந்திருந்த
மூக்குக் கண்ணாடி உடையவில்லை. உடைந்திருந்தால் கண்ணில் குத்தியிருக்கும். குத்தியிருந்தால்???
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று! அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்தவாறே
சிறிது நேரம் அப்படியே இருக்கையில் அமர்ந்திருந்தாள். மாயாவிற்கு அந்தச் சமயத்திலும்
பயம் இல்லை. நெஞ்சு படபடப்பு கூட இல்லை!
வண்டி
பின்புறம் நகர முடியாததால், கதவைத் திறந்து இறங்கினாள். காரின் முன் பகுதியின் வலதுபுறம் ஓட்டுநர் இருந்த பாகம் நன்றாக நசுங்கியிருந்தது. சக்கரம் நசுங்கி, .அமுங்கிப் போயிருந்தது. ஓட்டுநர் இளைஞர் மயக்கம் வருவதாகச்
சொன்னார். அவரை இறக்கி ஓரமாக அமரச் செய்ய, அதற்குள் அங்கு குழுமியிருந்த கூட்டத்தில்
யாரோ தண்ணீர் தர அதை அந்த ஓட்டுநருக்குக் கொடுத்ததும் அவருக்குக் கொஞ்சம் ஆசுவாசம்
ஏற்பட்டது. அவருக்கு அடி என்பதைவிட பயம்தான் அதிகமாக முன்னில் இருந்தது தெரிந்தது.
"என்ன
உதவி வேண்டும்" என்று அந்த இளைஞரிடம் கேட்டாள் மாயா.
"ஒன்னும் வேண்டாம் அக்கா. எங்க முதலாளி வரும் வரை நான் எங்கேயும் போக முடியாது. என் மீது தவறில்லை என்பதை மட்டும் காவலரிடமும், என் முதலாளியிடமும் சொல்லிவிட்டால் போதும்" என்று அந்த இளைஞர் சொன்னதுதான் தாமதம், அந்தச் சூழலிலும், 'அக்கா' என்ற வார்த்தைக்குப் புளகாங்கிதம் அடைந்து, அருகிலிருந்த ஆட்டோவின் பக்கவாட்டுக் கண்ணாடியில் தன்னை உற்று நோக்கி, தலையில் டை கூட இல்லையே என்று ஒருவித மகிழ்வில், கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு அங்கு வந்த போக்குவரத்துக் காவலரிடம், எதிரில் வந்த வண்டியை ஓட்டியவர்தான் விபத்திற்குக் காரணம், இந்த வண்டியை ஓட்டிய ஓட்டுநர் காரணமில்லை என்று சொன்னாள்.
ஆனால், விபத்தை ஏற்படுத்திய அந்த ஆளும் அவருடன் வந்த பிறரும் கையில், கழுத்தில், கைவிரலில் எல்லாம் தங்கம் மினுமினுக்கக் காவலரிடம் பேரம் பேசிக் கொண்டிருப்பதை மாயா கவனித்துவிட்டதால், வேலைக்காகாது என்பதை உணர்ந்தவள், வண்டியின் உரிமையாளர் வரும் வரை காத்திருந்து அவரிடமும் சொல்லிவிட்டு, தன்னை இனி சாட்சி சொல்ல வரவேண்டும் என்றெல்லாம் அழைக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்திவிட்டுத் தன் நெற்றியில் வழிந்த குருதியைத் துடைத்துக் கொண்டே, தன் இடத்தின் அருகிலிருக்கும் மருத்துவமனையை நோக்கி நடந்தாள். உள்ளுணர்வு அதன் வேலையை முடித்துக் கொண்டதால் வாலைச் சுருட்டிக் கொண்டு! அடங்கியிருந்தது அப்போதைக்கு!
------கீதா
இந்த உள்ளுணர்வு தொடர்பான பதிவுகளை ஏஞ்சல் மற்றும் செல்லப்பா சார் தளங்களில் பார்க்கலாம். சுட்டி இதோ..

http://kaagidhapookal.blogspot.co.uk/2017/01/blog-post_31.html
http://kaagidhapookal.blogspot.co.uk/2017/01/2_31.html
http://kaagidhapookal.blogspot.co.uk/2017/01/2_31.html
(அடையாளச் சிக்கல் எனும் உளவியல் குறித்த ஒரு பதிவை "அடையாளம்" என்ற என் கதைக்குப் பிறகு எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். மனதில் உள்ள கருத்துகளைக் கோர்வையாக எழுத சற்று அவகாசம் தேவைப்படுவதால் தாமதமாகிறது.)
கதை நல்லாத்தான் இருக்கு. ஆமா.. ஊபர்ல, கடைசில டிரிப் கட் பண்ணாமல் எப்படி பணம் கொடுக்கமுடியும்? 'உள்ளுணர்வு' எல்லோருக்கும் வராது.
பதிலளிநீக்குநன்றி நெல்லைத் தமிழன். ஊபர்ல புக் பண்ணும் போது ரேட் வந்துவிடுகிறது இல்லையா? இப்படி நாங்கள் சேர்ந்து போகும் போது கொடுக்கப் போகிறவர் முன்னரே இறங்க நேரிட்டால், அவர் ரேட் இவ்வளவு காட்டிற்று என்று கொடுத்துவிட்டு, பின்னர் இறுதியில் இறங்குபவர் இறங்கும் போது கட் செய்வார்கள். இதெல்லாம் அடிக்கடி ஊபர் உபயோகிக்கும் நபர்கள் இங்கு தெரிந்த பழக்கமான ட்ரைவரிடம் நடத்துவது தான். அப்படியான ஒரு கதாபாத்திரமாகத்தான் மாயாவின் அத்தை பெண். எனது உறவினர் ஒருவர் ஃபினான்சியல் கன்சல்டன்ட் வெளியில் அலைபவர்....க்ளையன்ட் சந்திப்பு எல்லாவற்றிற்கும் எப்போதுமே ஊபர் தான். நான் ஒரு முறை அவருடன் சென்ற போது இப்படிச் செய்தார் அதைத்தான் இக்கதையில் பயன்படுத்தினேன்.
நீக்குபாவம் இந்த இளைஞர் கட் செய்யும் முன்பே ஆக்சிடென்ட்....
உள்ளுணர்வு எல்லோருக்கும் வராதுதான் ஆனால் உளவியல் படி பார்த்தால் வரும் என்றும் சொல்லுகிறார்கள். மேபி ஐடில் மைன்ட் இஸ் த டெவில்ஸ் பாரடைஸ்!!????!!
மாயா அவர்களின் நினைவோட்டங்கள் ஆச்சர்யப்பட வைக்கிறது.
பதிலளிநீக்குஇப்படி பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆம் கில்லர்ஜி! மிக்க நன்றி கருத்திற்கு..
நீக்குமாயாவின் உள்ளுணர்வு போலத்தான் எனக்கும் அடிக்கடி தோன்றும் ...இந்த உள்ளுணர்வு என்னை பலநேரம் காப்பாற்றியிருக்கு
பதிலளிநீக்குஎனக்கேற்படும் உள்ளுணர்வுகள் அப்படியே நடந்தும் இருக்கு ..எனக்குள் உள்ளுணர்வு அமைதியா உறங்கும் எப்போ எழும்பி அதன் வேலையை காட்டுமென சொல்லவே முடியாது .ஆனா அது எப்பவும் எனக்கு நல்லதை மட்டுமே செய்து இருக்கு என்பதில் சந்தோஷம் .என் பதிவின் சுட்டியையும் இணைத்ததற்கு நன்றி கீதா ..
ஆம் ஏஞ்சல்! எனக்கும் பெரும்பாலும் நேர்மறையாகத்தான் முடியும். காப்பாற்றும். சில சமயங்களில் வெரி வெரி ரேராக எச்சரிக்கை மணி அடித்து அப்படியே நடந்து விடும். ஆம் அமைதியா உறங்கும் எப்போ எழும் வேலை காட்டும்னு சொல்லவே முடியாது...
நீக்குமிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு...
உள்ளுணர்வு நேரங்களில்பலித்துத்தான் விடுகிறது
பதிலளிநீக்குஆம் கரந்தை சகோ....பலித்துவிடுகிறது நாம் எச்சரிக்கையாக இல்லை என்றால். மிக்க நன்றி சகோ
நீக்குஉள்ளுணர்வு பல சமயங்களிலும் உண்மையையே சொல்லும்! மாயாவின் விஷயத்திலும் பலித்திருக்கிறது.
பதிலளிநீக்குஆமாம் கீதாக்கா...காப்பாற்றவும் செய்யும்...மிக்க நன்றி கீதாக்கா
நீக்குஉள்ளுணர்வுகுறித்தக் கதை அருமை
பதிலளிநீக்குஇதை உண்மையா பொய்யா என
விஞ்ஞான ரீதியில் ஆய்வது என்பதுஎனக்கு
உட்ன்பாடில்லை
இதை உணர்ந்தவர்களுக்குத்தான்
இது புரியும். புரிந்து கொள்ளவும் முடியும்
சொல்லிச் சென்றவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ஆம் ரமணி சகோ. உணர்ந்தவர்களுக்குத்தான் இது புரியும்...மிக்க நன்றி சகோ
நீக்குவிஞ்ஞான ரீதி என்று சொல்லும் போது உளவியலில் இது அதிகம் பேசப்படுகிறது.
நீக்குமாயாவின் உள்ளுணர்வு மாயா வினோதமா இருக்கு :)
பதிலளிநீக்குமிக்க நன்றி பகவான் ஜி கருத்திற்கு...
நீக்குபல நேரங்களில் உள்ளுணர்வு சரியாகவே வேலை செய்கிறது என்று தெரிந்தாலும், சில நேரங்களில் அதை நாம் மதிக்க மறந்துவிடுகிறோம். பலன், மூக்கில் ரத்தம், etc, etc. அது நீங்கள் தானே கீதாம்மா?
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா நியூஜெர்சி.(விரைவில் சென்னை).
ஆம் சார் நாம் மதிப்பு கொடுக்காமல் போய்விடுகிறோம். அது மாயா சார்!
நீக்குஉள்ளுணர்வு எனக்கு கொஞ்சம் கம்மி. அதனால் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் ஒரு விஷயம் உண்மை. சென்னையில் வாடகை வண்டி, குறிப்பாக ஊபர் வண்டி ஓட்டுபவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் - வழியை அறிந்தவர்கள் - அல்ல என்பது தெரியும்!
பதிலளிநீக்குஸ்ரீராம் பல கால்டாக்சி ஓட்டுநர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். பெரும்பான்மையோர்...அதில் ஓலா, ஊபரின் விகிதம் சற்றுக் கூடுதல்...
நீக்குஉள்ள்ளுணர்வு கம்மியா ...தப்பிச்சீங்க...
மிக்க நன்றி ஸ்ரீராம்
உள்ளுணர்வு, ஈஎஸ்பி எல்லாமே நமக்கு கொஞ்சம் ஜாஸ்தி என்பதால், இந்த கதையோடு ஒன்றி படிக்க முடிந்தது.
பதிலளிநீக்குவாங்க ஆவி!!! ஓ! உங்களுக்கும் இந்த உள்ளுணர்வு ஜாஸ்தியா....எனக்கும்...
நீக்குஒன்றிப் படிக்க முடிந்ததா... மிக்க நன்றி ஆவி!
ஆஆ!esp பவரா !!! நம்ம நட்பு வட்டமே இந்த உள்ளுணர்வால் affect ஆனவங்க ;) போலிருக்கே
நீக்குஅப்பாடா இப்போதான் ஒரு வழியா அங்கடிபட்டு இங்கடிபட்டு வந்து சேர்ந்தேன்ன்.. முடியல்ல.. நேரம் கிடைக்குதில்லை கிடைக்கும்போது ரயேட் ஆகிடுறேன்:).
பதிலளிநீக்குஅது சரி என் “எங்கள்புளொக்” கேட்டு வாங்கிப்போடும் கதையின் தலைப்பும் உள்ளுணர்வுதானே.. அதை எப்படி விட்டீங்க?:).
அப்படியா? எங்கள் ப்ளாகில் ஆஹா!! பாருங்கள் அதிரா னான் என் மைன்ட் வாய்சை மதிக்க வில்லை... உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நேற்று ஸ்ரீராமிடம் வாட்சப்பில் அவங்க தளத்தில் உள்ளுணர்வு பற்றி பதிவின் லிங்க் கேட்க நினைத்து.. பல வேலைப் பளுவில் அதை மறந்து ஏற்கனவே எடுத்து வைத்திருந்ததை அதுவும் ஏஞ்சலிடம் கேட்டு வாங்கி இங்கு கொடுத்தென்..பாத்தீங்களா இதான் மைன்ட் வாய்சை மதிக்காம போனா...
நீக்குஓ சார் அதிரா...இனி வரும் போது யூஸ் பண்ணிடுவேன்...பாருங்க எனக்கு எப்போதுமே பதிவின் தலைப்புகள் மறந்து போகும் ஒன்லி சாராம்சம் தான்...அதுவும் இது விடுபட்டுவிட்டது...ஸாரி ஸாரி...சரி என்ன வேண்டும் என்று சொல்லுங்கோ...ஹிஹிஹி
ஒரு சாறிதான் வேணும்.. கல்லுப் பதிச்சது:) என்ன கல்லு என்பதனை பின்பு சொல்றேன்:).
நீக்குரக்ஷி ட்ரைவேர்ஸ் பெல்ட் போடாமல் ஓடலாம் என சட்டம் இருப்பதாக அறிந்தேன்.. அது அவர்களின் பாதுகாப்புக்காகவாஅம். பின் சீட்டில் இருப்போம்.. பெல்ட்டால் இழுத்து களுத்தை நெரித்திட்டாலும் என்றோ என்னவோ,,...:).
பதிலளிநீக்குஓ! அப்படி ஒரு ரூல் இருக்கா? ஆனால் இங்கு சீட் பெல்ட் போடாமல் ஓட்டினால் போலீஸ் கண்களில் அதுவும் மாதக் கடைசியில் பட்டால் பிடிபட வாய்ப்புண்டு. அதாவது ரூல்ஸ் ஃபாலோ செய்யவில்லை என்றல்ல பிடிபடுவது.....புரிந்ததுதானே...
நீக்குஓம் அது கொமென் றூல் தானே எல்லா இடத்திலும்.. ஆனா ரக்ஷி ட்றைவேர்ஸ் மட்டும் போடாமலும் ஓட்டும் உரிமை உண்டாம்.. சில வருடங்களுக்கு முன்பு, இங்கு ஒரு தடவை அப்படி பெல்ட் போடாமல் ஓடுவதைப் பார்த்து, ஏன் பெல்ட் போடாமல் இப்படி ஓடுகிறார் போலீஸ் பிடிக்குமே, மறந்திட்டார்போல சொல்லுங்கோ என கணவரிடம் சொன்னேன்... அப்போதான் இப்படி ஒரு றூல்ஸ் இருக்கு எனச் சொன்னார்.
நீக்கு///சாலையின் மீதான கவனத்துடன், ஒவ்வொரு போக்குவரத்து சமிக்ஞையில் வண்டி நின்ற போதும் ஓட்டுநருடன் பேச்சுக் கொடுத்தாள்.//
பதிலளிநீக்குரெம்ம்ம்ம்ப விடுப்ஸ் மாமியா இருப்பாவோ?:) ஹா ஹா ஹா:)
ஹஹஹஹ் ஆம் அது எனது குணம். நான் ஒரு வேளை ஆட்டோவிலோ, இல்லை இது போன்ற கால் டாக்சியிலோ சென்றால் ஓட்டுநருடன் சும்மா பேச்சுக் கொடுப்பது வழக்கம். அவரும் நம்மைப் போன்றவர் தானே. நட்புணர்வுடன் மனித நேயத்துடன்...பாவம் பலரும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியவரும்....இதில் என்னவென்றால் அதிரா பலரும் எம்பிஏ படித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள் கூட வேலை கிடைக்காத காரணத்தால் இப்படி வண்டி ஓட்டுகிறார்கள். இப்படிப் பல அனுபவங்களை அறிய முடியும்...
நீக்குஉண்மை, ஒரு தடவை கனடாவின் ரக்ஸி பிடித்தோம், அவர் ஒரு பிளாக். அவர் சொன்னார் தான் தம் நாட்டில் எஞ்சினியர் ஆம்.. அகதியாக வெளிக்கிட்டு வந்தாராம், அப்படியே ரக்சி ஓடி, நல்ல வருமானம் என்பதால்.. அதையே தொழிலாக்கிக் கொண்டாராம்.
நீக்கு///அவரது சம்பளம் பற்றியோ, பதில்கள் இல்லை.///
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது எல்லாம் கேட்கக்கூடாத கேள்வி:)எனச் சொல்லி வையுங்கோ மாயாவிடம்:).
ஹஹஹ் மாயா அப்படி எல்லாம் யாரிடமும் சம்பளம் பற்றிக் கேட்க மாட்டாள். இப்படி முதலாளிகளின் கீழ் வேலை பார்க்கும் பல இளைஞர்களுக்குச் சம்பளம் ஒழுங்காகக் கொடுக்கப்படுவதில்லை. மாயாவிற்கு ஊபரில் நல்ல வருமானம் உண்டோ என்று தெரிந்து கொள்ள ஏனென்றால் கையில் ஒரு தொழில் இருக்கே...ஹிஹீ அதான்...ஒரு நாள் மாயா ஒரு வேளை ஊபரோ, ஓலாவோ ஓட்டினால்..இதுவரை பெண்கள் இல்லை என்றே தெரிகிறது...
நீக்கு///சரி என்றவள், ஹப்பா இது வரை உள்ளுணர்வு சொன்னது நடக்கவில்லை. //
பதிலளிநீக்குஹா ஹா ஹா எப்படியாவது உள்ளுணர்வு சொன்னது சரி என நிரூபிக்கோணும் என்றே துடிச்சிருக்கிறா.. ஆக்சிடெண்ட் ஆக்காமல் விடமாட்டா போல இருக்கே... தொடர்ந்து படிப்போம்:).
ஹஹஹ்ஹ ஆம் கீழே உள்ள பதில் தான் இதற்கும்....
நீக்குசரி உங்க வைர நெக்லஸ் மீது சத்தியம் எல்லாம் செய்யப்பட்டுள்ளதே அதிரா...ஓடி வாங்க..ஹிஹிஹி
உண்மைதான் பல சமயங்களில் உள்ளுணர்வு இப்படிப் பயமுறுத்தும், ஆனா நாங்க அதுக்கு இடம் அளிக்கக்கூடாது.. ஏனெனில் நம் மனம் எதை நினைக்கிறதோ அது நடந்தேவிடும் என்கின்றன ஆராச்சிகள்.. எனவே இப்படியான தப்பான உள்ளுணர்வு வரும்பொது, அதை மறந்து மனதை வேறு சிந்தனைக்கு மாற்றி விடுவதே நல்லது.
பதிலளிநீக்குவேறு சிந்தனைக்குத்தான் போகிறோம்...மாயாவும் அதைத்தான் செய்தாள் ஆனால் அதையும் மீறி நடக்க வேண்டியது நடந்துதானே தீரும்...நமக்கு நடப்பவை நடந்தே தீரும்...உள்ளுணர்வு என்பது ஒரு எச்சரிக்கை உணர்வு அவ்வளவுதான்...அதை நாம் மதித்தால் நல்லது...மிக்க நன்றி அதிரா...
நீக்குஎன் உள்ளுணர்வு பலித்தால் கீதா ஏஞ்சல் அதிரா அனைவரும் என்னை சந்திக்கும் போது அவர்களைன் தங்க மற்றும் வைர நெக்லஸை என்னிடம் கொடுத்துவிடுவார்கள் காரணம் என் உள்ளுணர்வு அப்படிதான் சொல்லுகிறது
பதிலளிநீக்குஹா ஹா தருவேன் ட்ரூத் புன்னகை தவிர்த்து வேறு நகை என்னிடமில்லை என்று அதிராவின் வைர நெக்லச் மீது சத்யம் செய்ரென்
நீக்குமதுரை சகோ....நான் சொல்ல வந்ததை அடித்து நெட் போனதால் வெளியிட முடியாமல் போனதை எங்கள் தோழி ஏஞ்சல் சொல்லிவிட்டார். என்ன நான் அதிராவின் வைர னெக்லஸ் மீது சத்தியம் செய்ய வில்லை ஹஹஹ்..
நீக்குஅச்சச்சோஓஓஓ ட்றுத்துக்கு என்ன ஆச்சூஊஊஊஊஊஊஉ நேக்கு லெக்ஸ்சும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல:).. எதுக்கு இருந்தாற்போல நகைமேல் ஆசை வந்திட்டுது?:) ஒருவேளை அப்படி இருக்குமோ அஞ்சு?:) நோ அப்படி ஏதும் இருக்காது இருக்கவும் கூடாதூஊஊஊஊ:).. கொஞ்ச நாளில் பட்டுச் சேலையும் கேட்டால் கொன்ஃபோம்ம்ம்:).
நீக்கு//அதிராவின் வைர நெக்லச் மீது சத்யம் செய்ரென்// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இந்தப் பயத்தில அதை நான் லொக்கரில் இருந்து வெளில எடுத்தே பல வருசமாகுதே முருகா.. எலிகிலி ஏதும் அரிச்சிட்டுதோ என்னமோ:).
உள்ளுணர்வு மிகுந்த தோழமையுடையது..
பதிலளிநீக்குசில தினங்களுக்கு முன் கூட -
என்னுடன் வேலை செய்யும் - மேற்பார்வையாளன் ஒருவனுக்கு பிரச்னை ஏற்பட்டிருக்கின்றது என்று உள்ளுணர்வு கிசுகிசுத்தது..
இந்த ( அது ரகசியம்) விஷயம் அதற்குக் காரணமாக இருக்கலாம் என நான் யூகித்தேன்.. ஆனால், வேறு விதமான பிரச்னையில் முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு மேலாளர்களின் கடுப்புக்கு ஆளானான்..
உள்ளுணர்வினை சுதந்திரமாக விட்டால் - நமக்குத் தான் தலைவலி!..
உள்ளுணர்வு
பதிலளிநீக்குகட் பீலிங் என்று சொல்வார்கள்
பலர் இப்படி அனுபவங்களை பகிர்ந்திருகிரார்கள்
திகில் அனுபவம்தான்
உள்ளுணர்வு - பல நேரங்களில் உண்மையாக நடக்கிறது....
பதிலளிநீக்குஉள்ளுணர்வு அனுபவங்கள் எப்போதும் ஸ்வாரஸ்யமானவைதாம்
பதிலளிநீக்குஉண்மைக் கதையோ! காரணம், கதைத்தன்மையை விடக் கட்டுரைத் தன்மையே தூக்கலாக இருக்கிறது!
பதிலளிநீக்குவிபத்து ஒன்றின் ஊடாக
பதிலளிநீக்குஉள்ளுணர்வை உணர்த்திய விதம்
சிறந்த கையாளல்
அருமையான பதிவு
உள்ளுணர்வு திகில்
பதிலளிநீக்குare you on summer vocation?
பதிலளிநீக்குtaking a break?
I am sorry Kasthuri I missed your comment and only today saw it and published it. Why Kasthuri? I am not working I think you know it. This post is by me - Geetha.
நீக்குYeah Thulasi is at his place. On summer vacation.