செவ்வாய், 12 மே, 2026

மணாலி - கஸோல் பயணம் பகுதி - 1

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும். 

=======================================================================

கடந்த ஆண்டு 2025 ஏப்ரல் 22 ஆம் தேதி இந்தியாவை உலுக்கிய பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26 பேர் மற்றும் காயமடைந்த 20 பேர்களை நினைக்கையில் இப்போதும் நம் மனம் படும் வலியை விவரிக்க முடியாது.  இறை உணர்வில்லாத மதம் பிடித்த மனிதர்கள் மனிதகுலத்துக்கு எப்போதும் ஆபத்துதான்.  ஆனால் அந்நிகழ்வு எங்களுக்கு அத்துடன் வேறு விதமான ஒரு சிரமத்தையும் ஏற்படுத்தியது. 30-4-25 முதல் 10-05-2025 வரை கஷ்மீர் பயணத்திற்கு நாங்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்து காத்திருந்த வேளையில்தான், 22-04-2025 இத்துயரம் நிகழ்ந்தது.  ஓரிரு நாட்களில் கஷ்மீர் பயணம் கானல் நீர்தான் என்பதை உணர்ந்து, தில்லி-ஜம்முதாவி பயணச் சீட்டை ரத்து செய்து, வேறு ஒரு பயண ஏற்பாட்டாளர் வழியாக அந்த கஷ்மீர் பயணத்தை மணாலிக்கு மாற்றினோம். அடுத்த ஆண்டு இறையருள் இருந்தால் போவோம் என்று மனதை தேற்றிக் கொண்டோம். (voice 1)  

நிலம்பூரிலிருந்து ஷோரணூர்

 கொங்கன் வழியாக நிஜாமுதீன் போகும் ரயில்

30-04-25 புதன் அன்று மாலை 3 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு நிலம்பூரிலிருந்து ஷோரணூர் ரயில் நிலையத்தை அடைந்தோம்.  இரவு 9 மணிக்கு அங்கிருந்து நிஜாமுதீன் வரை போகும் ரயிலில் எம்2 கம்பார்ட்மென்டில் ஏறினோம். கொங்கன் வழியாகப் போகும் ரயில் அது. 02-05-25 வெள்ளிக் கிழமை மதியம் 12.30க்கு தில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தை அடைந்தோம். 

எங்களை Dhakka Inn ஹோட்டலுக்குக் கூட்டிச் செல்ல 14 இருக்கைகள்  உள்ள வண்டி காத்திருந்தது. நாங்கள் 10 பேரும் 3 அறைகளில் சற்று இளைப்பாறிய பின் குளித்து தயாராகி,  சரோஜினி நகர் மார்க்கெட் சென்று ஷாப்பிங் நடத்தினோம். அதன் பின் இந்தியா கேட்டில் சிறிது நேரம் செலவிட்ட பின், இரவு உணவுக்குப் பின் தில்லி RPIS பேருந்து முனையத்தை அடைந்தோம். 

நான், மனைவி, அருண், விநாயக், அபிராமி, மனைவியின் தங்கை பிந்து, அவர் மகன் விவேக், எங்களுடன் மனைவியின் கல்லூரித் தோழிகளான லீலா, சிசிலி மற்றும் ரமணி. Vacation Express Volvo பேருந்தில் 5 முதல் 14 வரையான இருக்கைகளில் அமர்ந்தோம். போர்த்திக் கொள்ள ஒரு Blanket மற்றும் ஒரு தண்ணீர் bottle கிடைத்தன. சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டோம். (voice 4)

கண்விழித்த போது, சிறிய போக்குவரத்துத் தடை ஏற்பட்ட காரணத்தால் ஒரு ஹோட்டல் அருகே வண்டி நின்றிருந்தது.  பலரும் இறாங்கி காஃபி குடிக்கப் போக நாங்களும் இறங்கினோம். இமயமலைத் தொடரைக் காணவே பிரமிப்பாக இருந்தது. இரண்டு மலைகளுக்கிடையே தவழும் நதி. அதை ஒட்டிச் செல்லும் சாலை.  நூற்றுக் கணக்கிலிருந்து பல வாகனங்கள். (voice 5)

படங்கள் - மணாலிக்குப் போகும் வழி 

சிறிது நேரத்திற்குப் பிறகு, அங்கிருந்து மீண்டும் பயணித்தோம். 10 மணிக்கு மணாலி பேருந்து நிலையத்தை அடைந்தோம். 
 
The Himalayan Paradise மணாலியில் தங்கிய ஹோட்டல்
தங்கிய ஹோட்டலில் இருந்து காட்சி - மலைத்தொடரைக் காணலாம் - சிறிய காணொளி
எங்களுடன் பயணித்த வழிகாட்டியான தும்பி - இடது புறம் இரண்டாவதாக நீல கலர் சட்டை அணிந்திருப்பவர்

எங்களுடன் பயணித்த வழிகாட்டியான தும்பி தில்லியில் படிக்கும் ஒரு கல்லூரி மாணவர். 14 இருக்கைகள் உள்ள வண்டியில் ஏறி The Himalayan Paradise ஹோட்டலை அடைந்தோம்.  இப்பயண ஏற்பாட்டில் கட்டணத்தோடு காலை  மற்றும் இரவு உணவு சேர்ந்தது என்பதால், சிறிது இளைப்பாறிய பின் காலை உணவை சாப்பிட்டோம். 
ஹிடும்பா கோவில்


அதன் பின் மணாலி ஹிடும்பா கோவிலுக்குப் போனோம்.  வித்தியாசமான கோயிலும் கண்கொள்ளாக் காட்சிகளும். இமாச்சலப்பிரதேச பாரம்பரிய உடை அணிந்து புகைப்படங்களும் காணொளிகளும் எடுத்துக் கொண்டோம். 
மணாலி பூங்கா
சின்ன மழைச்சாரல் எங்களை வரவேற்றது
அதன் பின் அருகிலிருந்த ஒரு பூங்காவிற்குச் சென்றோம். சின்ன மழைச்சாரல் எங்களை வரவேற்பது போல் உணர்ந்தோம். 
மணாலி மக்கள் தீமூட்டி குளிர் காய்வதையும், ஸ்வெட்டர் பின்னுவதையும் அருகில் நின்று கண்டு களித்தோம். (voice 8)
நம் முன்னாள் பிரதமர் திரு வாய்பாய் அவர்களின் சிலை

அதற்குப் பிறகு, மணாலியில் அழகான மால் ரோடில் நடந்தோம். வித்தியாசமான மணாலி உணவுகளைச் சுவைத்தோம். (voice 9) 

பின், தங்கியிருந்த இடத்தை அடைந்து இரவு உணவுக்குப் பின் மறுநாள் காணவிருக்கும் Atal Tunnel அதன் வழி பயணித்து ஸ்பிட்டி பள்ளத்தாக்கு மற்றும் பனி மூடிய மலைகளைப் பற்றிய கனவுடன் தூங்கினோம். (voice 10)

04-05-25 - ஞாயிற்றுக் கிழமை காலை வண்டி வந்ததும், ஏறி Over Coat, Shoe, Socks மற்றும் Gloves வாடகைக்கு எடுத்தோம். ஒரு நபருக்கு ரூ 400 ஆனது.  

இப்படங்கள் எல்லாம் மணாலியிலிருந்து Atal  சுரங்கப் பாதைக்குள் நுழையும் முன்னான காட்சிகள்

இதோ சுரங்கப் பாதைக்குள் நுழைந்துவிட்டோம். சிறிய காணொளி

லாஹவுல்-ஸ்பிட்டி  பள்ளத்தாக்கை மணாலியுடன் இணைக்கும் மிகப் பிரபலமான, 3,978மீ / கடல்மட்டத்திலிருந்து 13,051 அடி உயரத்தில் இருக்கும் ரோத்தாங் கணவாய்  வழியானது பனிக்காலத்தில் பனியால் மூடப்படும் என்பதால் அதன் கீழே Atal Tunnel  தோராயமாக 3000-3100 மீட்டர் / 9,840 – 10,171 அடி உயரத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ளது.  இந்தச் சுரங்கப் பாதை வழியாகச் சென்றால் ரோத்தாங் கணவாய் பார்க்க இயலாது.

9.02 கிமீ நீளமுள்ள இரு வழி சாலையுடனான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை பயணத்தைப் பற்றி என்ன சொல்ல? அதை அனுபவித்து மகிழத்தான் வேண்டும். மணாலியிலிருந்து லாஹவுல்-ஸ்பிட்டி வரையுள்ள தூரத்தில் 46 கிமீ குறைக்க உதவும் 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள உலகின் நீண்ட சுரங்கப்பாதை அக்டோபர் 2020 தான் நிறுவப்பட்டது. 

இந்தச் சுரங்கப்பாதை வழியாகத்தான் ஸ்பிட்டி (Pity Valley) பள்ளத்தாக்கு சென்றோம். திரும்பும் போது Atal சுரங்கப்பாதைக்குள் நுழையும் முன் அங்கே இறங்க முடிவு செய்தோம். (voice 12).

ஸ்பிட்டி பள்ளத்தாக்கு வண்டிகள் நிறுத்தும் இடம்
இப்படங்கள் எல்லாம் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு - பனியில் நாங்கள்...

ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, இந்தியாவிற்கும் திபெத்திற்கும் நடுவே உள்ளதால் Midland என்று சொல்லப்படுகிறது.  போகும் வழியெல்லாம்  பிரமிப்பூட்டும் காட்சிகள். திரப்படங்களில் மட்டுமே கண்ட காட்சிகள் எங்கள் கண் முன். நம்பவே முடியவில்லை.  வண்டியிலிருந்து இறங்கி ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் 3 மணி நேரம் செலவிட்டோம். வயதை மறந்து குழந்தைகளாய் மாறினோம். பனிக்கட்டியை அள்ளியும் எறிந்தும் அதில் புரண்டும். மே மாதம் என்பதால் பனி உருகத் தொடங்கியிருந்தது. 

ஸ்பிட்டி பள்ளத்தாக்கிலிருந்து Atal சுரங்கம் வரும் முன்
Atal Tunnel அருகில்...
மனமில்லாமல் மனதுடன் வண்டி ஏறி Atal Tunnel நுழைவு வாயிலில் இறங்கி அந்த அரிய காட்சிகளைக் கண்டபின் மொபைலில் புகைப்படங்கள் எடுத்து சேமித்துக் கொண்டோம். மீண்டும் இதன் வழி மணாலி நோக்கிப் பயணம்(voice 14)
Atal Tunnel வழி வெளியே வந்து மணாலிக்குச் செல்கிறோம்

ஸ்பிட்டி பள்ளத்தாக்கிலிருந்து  மணாலிக்குத் திரும்பும் வழியில் ஸோலாங் பள்ளத்தாக்கு 
மணாலிக்கு வரும் வழியில் ஸோலாங் பள்ளத்தாக்கு எனும் அருமையான ஓரிடம். Para Gliding செய்யுமிடம்.  செய்ய ஆர்வமிருந்தாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் செய்யவில்லை.
Truck உணவகத்தில்

அங்கிருந்த ஒரு Truck உணவகத்தில் ப்ரெட் ஆம்லெட் சாப்பிட்டு மணாலிக்குப் பயணமானோம். (voice 15)

கண்ணில் படும் காட்சிகளெல்லாம் பிரமிப்பூடுபவை. இந்தியாவின் தென் கோடியிலுள்ள நாங்கள் இமயமலைக்குச் செல்வது என்றாலே ஒரு  கனவுலகில் செல்வது போல்தான். 6 மணிக்கு ஹோட்டலை அடைந்து உணவு உண்டு மறுநாள் செல்லும் இடமான கஸோல் கனவுகளுடன் தூங்கினோம். (voice 16)

நிறைய காணொளிகள் எடுத்தேன். பதிவில் இல்லாத படங்கள் மற்றும் காணொளிள் எல்லாம் தொகுத்து  என் குரலுடன் இரு பகுதிகளாகச் செய்ததில் முதல் பகுதியை இங்கு கொடுத்திருக்கிறேன். அதில் காட்சிகளைப் பார்க்கலாம். முடிந்தால் பாருங்கள். இரண்டாம் பகுதி கஸோல் பற்றி அடுத்து வரும்.

 

https://www.youtube.com/watch?v=YcTxJKcBQ8k

அடுத்த 2 ஆம் பகுதியில் சந்திப்போம்...


 ------துளசிதரன்

25 கருத்துகள்:

  1. பஹல்காம் தாக்குதல் மனதை உலுக்கிய ஒரு நிகழ்வு.  அதை நியாயப்படுத்திய புண்ணியவான்களும் தமிழ்நாட்டில் இருந்தார்கள் என்பதும் வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்ஜி, பஹல்காம் தாக்குதல் குறித்து கேரளத்தில் இப்போதும், அப்படி ஒரு நிகழ்வு நடந்ததைப் பற்றியே பேசாதவர்களும் இருக்கிறார்கள். அது அரசின் சூழ்ச்சி என்று சொல்லவும் செய்கிறார்கள். எப்படி இப்படி எல்லாம் அவர்களால் சிந்திக்க முடிகிறது? பேசமுடிகிறது? என்பது ஆச்சரியம்தான்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி, உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  2. ரயிலின் படத்தைப் பார்க்கும்போதே பயண உணர்வும், பயண ஆசையும் தொற்றிக் கொள்கிறது.  பரவாயில்லை நீங்கள் திட்டமிட்டு அவ்வப்போது ஒரு பயணம் செய்து விடுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணம் இயற்றல், தொடங்கிவைப்பதெல்லாம் மனைவியும் பிள்ளைகளும்தான். நான், பெரியமுள் நகர்வதைத் தொடரும் சின்ன முள்ளாகத்தான் தொடர்வேன் என்பதுதான். ஆனால் போகும் இடங்களில் எல்லாம் படங்களும் காணொளிகளும் எடுத்துக் கொண்டுவிடுவேன் அதைப் பகிர்வது என்பது என்னுடைய ஒரு ப்ளஸ் பாயின்ட்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  3. ஷோரனுர் டு தில்லி நிஜாமுதீன் நீண்ட பயணத்தை சட்டென முடித்து விட்டீர்கள்!  நான் அதையே இன்னும் கொஞ்சம் அனுபவங்கள் சேர்த்து நீட்டி பதிவு தேத்தி இருப்பேன்..  ஹிஹிஹிஹி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டே சொல்லிக் கொண்டே போவீர்கள். அது உங்களின் கைவந்த திறமை! வாசிக்கும் எங்களுக்கும் சுகம். ஆனால் நான் எழுதினால் போரடித்துவிடும். காட்சிகளாகச் சொல்லிக் கொண்டே போனால் அது அவ்வளவு நன்றாக இராது என்பதால்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  4. முதல் விஷயம் சரோஜினி நகர் மார்க்கெட்டில் என்ன ஷாப்பிங் செய்தீர்கள், என்னென்ன கடைகக்ள் இருந்தன என்று எழுதவில்லை. 

    அடுத்த விஷயம் பஸ் ஏறி தூங்கியது..  எவ்வளவு சீனரிஸ் இருக்கும்..?  அதைப் பார்க்காமல் தூங்குவதா?  கிர்ர்ர்ர்ர்ர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரோஜினி நகர் மார்க்கெட்டில், Decathlon லிருந்து சில இன்னர் க்ளவுஸ் போன்றவைகளை எல்லாம் வாங்கினோம். சிலர் வாங்கவில்லை. மற்றவர்கள் ஹூஸ், சாக்ஸ் எல்லாம் வேறு கடைகளில் வாங்கினார்கள். முக்கியமான ஷாப்பிங் திரும்பி வரும் போது என்று எல்லோரும் தீர்மானித்தோம்.

      இல்லை ஸ்ரீராம்ஜி, தில்லியிலிருந்து மணாலி பயணம் பேருந்தில் இரவில் பயணம். எனவே தூக்கம். வெளியில் ஒன்றும் தெரியாதே. தில்லியிலிருந்து போகும் போதும் தில்லிக்கு வரும் போதும் இரவில் தான் பயணம் அது ஒரு இழப்புதான் காட்சிகள் பார்க்க முடியாமல் போனது.

      துளசிதரன்

      நீக்கு
    2. அக்கடை இன்டெர்னாஷனல் கடை. விலையும் குறைவு - zudio போன்று

      துளசிதரன்

      நீக்கு
  5. மணாலி செல்லும் பாதை படம் கவர்கிறது.  அழகான மலைப் பாதை.  தங்குமிடத்திலிருந்து சிறிய காணொளியை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணாலி செல்லும் பாதை மிகவும் பிரமிப்பூட்டும் ஒன்று. கிடைத்தற்கு அரிய காட்சிகள். உண்மையிலேயே நம்மைப் போன்ற தென்னாட்டவர்களுக்கு எப்போதாவது கிடைக்கும் இயற்கை விருந்து அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். தங்குமிடத்திலிருந்த சின்ன காணொளியை ரசித்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதான்

      நீக்கு
  6. வழிகாட்டியை இவர்தான் அது என்று சொல்லவே வேண்டாம்.  இந்த குழுவில் வழிகாட்டி யார் என்று கண்டுபிடியுங்கள் என்று நீங்கள் கேட்டிருந்தால் நாங்களே கண்டுபிடிக்கும் அளவு அவர்தான் அது என்று தெரிகிறார்! படிக்கும்போது இது மாதிரி வேலை செய்து சம்பாதிப்பது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தும்பி என்பது அவருடைய உண்மையான பெயர் அல்ல. அது எங்களிடம் சொன்னது. இதையேதான் மற்றவர்களிடமும் சொல்வாரா என்று தெரியவில்லை.

      ஆமாம் படத்தில் அது யாரென்று எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்தான்.

      //இந்த குழுவில் வழிகாட்டி யார் என்று கண்டுபிடியுங்கள் என்று நீங்கள் கேட்டிருந்தால் நாங்களே கண்டுபிடிக்கும் அளவு அவர்தான் அது என்று தெரிகிறார்! //

      சிரித்துவிட்டேன்.

      மலப்புரத்தைச் சேர்ந்தவர், குறிப்பாக மலப்புரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மிகவும் திறமைசாலிகள். அவர்களுக்கு dignity of labour sense உண்டு. dedicated உம் கூட. அது அவர்களுக்கு ஏராளமான முன்னேற்றத்தைத் தந்திருக்கிறது. நாங்கள் டூர் ஏற்பாட்டாளர் மூலம் சென்றதால் நம் மொழி பேசுபவர் கைடாக வருவதுண்டு.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  7. ஸ்வெட்டெர் பின்னுவதை ரகசியமாக படமெடுத்து அவர் சந்தேகப்பட்டு திரும்பவும் சட்டென நிறுத்தியது ஹா ஹா ஹா ஹா 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜி சொல்லாமல் இருக்க முடியாது. நீங்களும் கீதாவும் பயங்கரமான ஆட்கள்! புரிந்துவிட்டது இல்லையா? ஆமாம் நானும் பயந்துவிட்டேன். அந்த பயம் ந்த இடத்தில் காணொளியில் தெரிகிறதுதான். அவர் ஒருவேளை நம்மிடம் சீறினால் என்ன செய்வது என்ற பயம்தான்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  8. வாஜ்பேயி வாய்பாய் ஆகி இருக்கிறார்! படங்களையும் விவரங்களையும் ரசித்தேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் உண்மையிலேயே வாஜ்பேயி என்று சொல்லிப் பழகிவிட்டேன். வாஜ்பாய் என்று சொல்ல நினைத்தாலும் கூட சொல்லிப் போகும் போது வாஜ்பேயி என்றே வந்துவிடுகிறது.

      நுண்ணியமாகக் கவனித்து எல்லா கருத்துகளையும் உண்மையாகச் சொன்னதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

      துளசிதரன்

      நீக்கு
  9. முதல் படத்தைப் பார்த்ததும் நேற்று பார்த்த யூடியூப் காணொளி நினைவுக்கு வந்தது. அதில் ஒருவர் மிசோரம் மக்கள் எப்படி இரயில் கம்பார்ட்மென்டை சுத்தமா வச்சிருக்காங்க, குப்பைகளை கவரில் போட்டிருக்காங்க, தென் இந்தியர்கள் எப்படி கச்சா முச்சான்னு கண்டதையெல்லாம் போட்டு குப்பை கூளமா வச்சிருக்காங்கன்னு சொன்னார்.

    பதிலளிநீக்கு
  10. நம்ம ஊரில் பார்க்க முடியான பனி படர்ந்த மலைகள், பள்ளத்தாக்குகள் எப்போதும் நம்மை ஈர்க்கும்.

    அருமையா படங்களுடன் பெஇர ஆரம்பிச்சிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  11. இந்தப் பயணம் பற்றி எழுத துளசி சார்தான் ரொம்ப மாதங்கள் எடுத்திருப்பார். அனுப்பிய வாரத்திலேயே கீதா ரங்கன் வெளியிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் பயணம், பொதுவா ஒரு குழுவாகச் செல்வதால் காஸ்ட் எஃபெக்டிவ். இன்னொன்று பாதுகாப்பு.

    இந்த மாதிரி குழுவாகச் செல்லும்போது ஓரளவு ஒத்த மனதுடன், நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி சுறுசுறுப்பா இருக்கணும். ஓரிருவர் தாமதித்தாலோ இல்லை குறை கண்டுபிடிக்க ஆரம்பித்தாலோ பயணம் இனிமையாக இருக்காது.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் பயணம், பொதுவா ஒரு குழுவாகச் செல்வதால் காஸ்ட் எஃபெக்டிவ். இன்னொன்று பாதுகாப்பு.

    இந்த மாதிரி குழுவாகச் செல்லும்போது ஓரளவு ஒத்த மனதுடன், நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி சுறுசுறுப்பா இருக்கணும். ஓரிருவர் தாமதித்தாலோ இல்லை குறை கண்டுபிடிக்க ஆரம்பித்தாலோ பயணம் இனிமையாக இருக்காது.

    பதிலளிநீக்கு
  14. என்னென்ன உடைகள் கொண்டுவரணும் எனச் சொல்லியிருந்தாங்களா?

    பொதுவா உங்க பதிவில் (துளசி சார்) நிறைய படங்களோடு இன்றும் விவரமாக எழுதுவதில்லை.

    அதற்கான நேரம் கிடைப்பது கடினமாக இருக்கிறதோ?

    பதிலளிநீக்கு
  15. குலு மனாலி, இமயமலைப் பகுதிகளுக்குச் செல்ல (மனைவியோடு) ரொம்ப ஆசை.

    எப்போ நிறைவேறுமோ... வடகிழக்குப் பயணம் சென்றதை எழுதுவேன். அப்போ நிறைய படங்கள் குறைந்த விவரம் என எழுதுவேன். பனி மலைகளைப் பார்த்ததும் அதை எழுதும் ஆசை வந்துவிட்டது.

    நமக்கு பனி சூழ்ந்த மலை, சாலையில் உறைபனி போன்றவை அதிசயமல்லவா.

    பதிலளிநீக்கு
  16. நான் கேரளப் பகுதியில் பயணம் போன போதெல்லாம், இவங்க எவ்வளவு லக்கி.. மலை சூழ்ந்த மரங்களுடன் கூடிய இயற்கையோடு இயைந்த பகதியில் வசிக்கறாங்களே என நினைப்பேன்.

    அடிக்கடி பார்க்கும் பாம்பைக் கண்டுதான் பயம்.

    பதிலளிநீக்கு