இன்றைய பதிவிற்குள் செல்லும் முன், சென்ற பதிவில் விட்ட சில படங்கள்
மறுநாள் 27-04-2024 - 12 மணிக்கு எர்ட்டிகாவில் சிம்லா ரயில்நிலையத்திற்கு வந்து மீண்டும் டாய் ரயிலில் பயணம்.
மறுநாள் காலை 28-04-2024 - 6 மணிக்கு பழைய தில்லி ரயில் நிலையத்தை அடைந்தோம். அங்கும் ஓய்வெடுக்கும் அறையை முன்பதிவு செய்திருந்தேன். கூட வந்த உடல்நலமில்லாதவருக்கு எங்களுடன் ரயிலில் ஊர் நோக்கி 3 நாட்கள் பயணிப்பது சிரமம் என்பதால் அவரது மகள் விமானத்தில் பயணச் சீட்டு எடுத்திருந்தார். தில்லியில் இருக்கும் மருமகன் அவரை மாலை விமான நிலையத்திற்குக் கூட்டிப் போக முடிவானது.
நாங்கள் மெட்ரோ ஏறி குதிப்மினார் சென்றோம். படங்கள், காணொளிகள் எடுத்துக் கொண்டோம்.
குதிப்மினார் கண்டபின், கேரளா ஹவுஸில் மீன் வறுவலுடன் கேரள உணவு உண்டோம். அதன் பின் சாந்தினி சௌக்கில் ஷாப்பிங் செய்தோம்.
பிறகு அறையை அடைந்து கொஞ்சம் ஓய்வெடுத்தோம். 6 மணிக்குக் கிளம்பி புது தில்லி ரயில் நிலையத்தை அடைந்தோம். 3 வது நடைபாதையிலிருந்த கேரளா எக்ஸ்பிரஸில் B1 ல் ஏறி எங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தோம். இரண்டு இரவுகளும் ஒரு பகலும் என 48 மணி நேரப் பயணம் செய்ய வேண்டும்.
அதற்கு அடுத்த நாள் 30-04-2024, மாலை 3.30க்குத் திருச்சூரை அடைந்து அங்கிருந்து ஷோரணூர் வழியாக நிலம்பூர் செல்லும் ரயிலில் பயணித்து நிலம்பூரில் இறங்கி வீட்டை அடைந்தோம்.
12 நாட்கள் வட இந்திய பயணம். நினைக்கும் போது இப்போதும் இனிக்கிறது. இருந்தாலும் இந்தி மொழி தெரியாதது ஒரு குறைதான். அருணும், எங்களுடன் வந்த ஒருவரும் எல்லா இடங்களிலும் இந்தியில் பேசி எங்களைக் காப்பாற்றினார்கள்.
1960-65 க்கு இடையில் தமிழகத்தில் பிறந்த பலருக்கும் இந்தப் பிரச்சினை, இந்தி தெரியாத பிரச்சனை உண்டுதான். ஒரு சிலர் தனியாகக் கற்றுக் கொண்டிருந்திருக்கக் கூடும். கூடுதலாக ஒரு மொழியைத் தெரிந்து கொள்வது நல்லதுதான். அதில் இந்தியைக் கற்றுக் கொண்டால் இந்தியாவில் எங்கும் தனியாகப் பயணிக்கலாம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
சிம்லா பயணம் அருமையாக நிறைவுற்றது.
பதிலளிநீக்குகுதுப்மினார் அழகு. படங்கள் அனைத்தும் அழகு
மிக்க நன்றி நெல்லை.
நீக்குஎப்படியோ சிம்லா பயணம் அப்படி நல்ல ஒரு நினைவாக நிறைவுற்றது. குதுப்மினார் மிகவும் அருமையான இடம். என்றாலும் அதைக் காணும் போது மனதில் ஒரு வேதனை, வெறுமை இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்ய? கடந்தகாலங்கள் ஒரு சில நமக்கு வேதனையையும் வருத்தத்தையும்தானே தரும்.
துளசிதரன்
இரண்டு முழு நாட்கள் (48 மணி நேரம்) இரயில் பிரயாணம். நாக்பூர் பழங்கள். இரயில் பயணம் கஷ்டமாக இல்லையா? உணவு இரயிலில் தந்ததா இல்லை ஆர்டர் செய்திருந்தீர்களா இல்லை இரயில் நிலையங்களிலா?
பதிலளிநீக்குஆம் வேறு வழியில்லை. அங்கு கிடைத்ததில் ஓரளவு பிரச்சனை இல்லாதது போல் தோன்றியதை வாங்கிச் சாப்பிட்டோம்.
நீக்குஆனால் போகும் போது, பெரும்பாலும் வீட்டிலிருந்து உணவு கொண்டு போனதால் பிரச்சனை வரவில்லை
வரும் போதும் பிரச்சனை பெரிதாக இல்லை. பிரெட் எல்லாம் வாங்கினோம். பழங்கள் எல்லாம் வைத்து அட்ஜஸ்ட் செய்தோம்.
சாப்பாடு ரயிலில் கிடைப்பதுதான். இந்தப் பூரிக்கிழங்கு வகைகள். இட்லி அவ்வளவாக நன்றாக இல்லை. நமக்கு அந்த ருசி ஏதோ மாதிரி இருந்தது. ஏதோ ஒரு அரிசியை ஊற வைத்துச் செய்கிறார்கள் போல் தெரிகிறது. மற்றபடி வேறு வழியில்லை. வெளியில் வாங்கவில்லை.
ஆனால் மனாலி சென்ற போது நாங்கள் வெளியில் ஆர்டர் செய்து வாங்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அது பற்றி அப்பயணம் பற்றிய எழுத்தில் சொல்கிறேன்.
மிக்க நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
காணொளி பார்த்தாலே போதும் என்று நினைக்கிறேன். எல்லாம் அதில் சேர்ந்து வந்து விடுகிறது. ஆனாலும் துளஸிஜி மிகவும் மெதுவான குரலில் பசி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஆமாம் காணொளியில் வந்துவிடும்தான். சில பதிவில் போடுவதில்லை. காணொளி வழி பார்ப்பவர்களும் இருப்பார்கள் என்பதால் அதையும் பதிவு செய்யலாமே என்றுதான்.
நீக்குஓ என் குரல் மெதுவாக இருக்கிறதா? ஒரு வேளை நான் ரெக்கார்ட் செய்யும் போது வால்யூம் குறைந்துவிட்டதோ என்னவோ? அல்லது எடிட்டிங்க் செய்யும் போது. டெக்னாலஜிக்கல் சைட் எல்லாம் கீதாவின் பக்ககங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.
மிக்க நன்றி ஸ்ரீராம்.
துளசிதரன்
ஸ்ரீராம், அவருக்கு உடம்பு முடியாதப்ப தொண்டை இருமல் என்றிருந்தப்ப வாய்ஸ் பேசி அனுப்பினார் என்பதால் இருக்கும். எனக்கும் அவர் குரலில் வித்தியாசம் தெரிந்தது. குறைவாக இருந்தது. இங்கு நான் எடிட் செய்யறப்ப வால்யூம் ஃபுல்லில் வைத்துதான் செய்தேன். நான் அவரிடமும் சொன்னேன்.
நீக்குகீதா
காணொளி பார்த்தாலே போதும் என்று நினைக்கிறேன். எல்லாம் அதில் சேர்ந்து வந்து விடுகிறது. ஆனாலும் துளஸிஜி மிகவும் மெதுவான குரலில் பசி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகாணொளி பார்த்தாலே போதும் என்று நினைக்கிறேன். எல்லாம் அதில் சேர்ந்து வந்து விடுகிறது. ஆனாலும் துளஸிஜி மிகவும் மெதுவான குரலில் பேசி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதனக்குத்தான் குரல் சரியாகக் கேட்கவில்லையோ எனச் சந்தேகப்பட்டுப் பலமுறை பார்த்து கேட்டு ஒவ்வொரு முறையும் பின்னூட்டம் கொடுத்திருப்பாரோ
நீக்குஹாஹாஹா நெல்லை, உங்களுக்கே ப்ளாகர் பத்தி தெரியும்தானே!!! பல சமயங்களில் போகாது, கருத்து போகலையோன்னு நினைச்சு ரெண்டு மூணு தடவை கொடுப்போம் கடைசில அது நாம அமுக்கினதெல்லாம் சேர்த்து இங்க கொடுத்திடும்.
நீக்குகீதா
கடவுளே.. மூணு வாட்டி வந்துருக்கா... இப்பத்தான் பார்க்கறேன்!
நீக்குபடங்கள் யாவும் அருமை. பயணம் இனிதாக நிறைவுற்றது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஸ்ரீராம்ஜி, பயணம் அதிகம் பிரச்சனைகள் இல்லாமல் இனிமையாகவே முடிவுற்றது. நல்ல பயணம். அந்த நினைவுகள் இப்போதும் நினைத்தால் இனிமைதான்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி, கருத்திற்கு
துளசிதரன்
பயண விவரங்கள், படங்கள், காணொளி எல்லாம் நன்றாக இருக்கிறது
பதிலளிநீக்குபழங்கள் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
நண்பர்களுடன் போகும் போது பேசி களித்து போகும் போது 48 மணி நேரம் விரைவில் கழிந்து இருக்கும்.
48 மணி நேரம் என்பது இரண்டு இரவு என்பதால். பகலில் பெரும்பாலும் காணக் கூடியக் காட்சிகள் மிகவும் குறைவு. ஆனால் பகலும் போனதே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். போகும் போது வீட்டிலிருந்து கொண்டு சென்ற உணவுப் பதார்த்தங்களும், நொறுக்குத் தீனிகளும் கொண்டு சென்றதால் அது பிரச்சனையாகத் தெரியவில்லை.
நீக்குபடங்கள் காணொளி கண்டு கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு
துளசிதரன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தாங்கள் மேற்கொண்ட சிம்லா பயணம் நல்லவிதமாக நடந்து முடிந்ததற்குப் மகிழ்ச்சி. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. தங்களுடன் வந்த நட்புக்கு உடல் நலமாகி, அவர் விமானம் மூலம் ஊருக்கு சென்றதும் நல்ல ஏற்பாடுதான். தில்லியில் குதுப்பினார் படங்களும் நன்றாக உள்ளது. நீங்கள் அனைவரும், ரயிலில் இரண்டு நாட்கள் பயணித்து உங்கள் ஊருக்கு திரும்பியதும் மகிழ்வான விஷயம். இந்த மாதிரி அனைவரும் சேர்ந்து செல்லும் போது பயணித்த களைப்புத் தெரியாது. அதன் நினைவுகளும் ஒரு பொக்கிஷ மாக நம் மனதுடன் என்றும் இருக்கும்.
காணொளியும் கண்டேன். அழகான படங்களுடன் தங்கள் அனுபவங்கள் குறித்து பயணத்தில் நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
படங்கள் கண்டு ரசித்துச் சொன்னதற்கு மிக்க நன்றி.
நீக்குகூட வந்தவருக்கு ரயில் பிரயாணம் என்பது ஒரு வேளை சிரமமாக இருக்கும். ஊருக்குத் திரும்பியதுமே இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்ததாகச் சொல்லியிருந்தார். அப்படி அவரது உடல் நிலை இரண்டு நாள் ரயில் பயணம் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை போலும்.
ஆம், இப்படியான பயணங்கள் இனிய நினைவுகளைத் தருவதுதான். பின்னர் நினைத்து மகிழ்வதற்கும்.
ஆமாம்மிக்க நன்றி சகோதரி கமலாஹரிரன்
துளசிதரன்
இதற்கு முந்தைய பதிவுகளின் சுட்டி வேண்டும்.
பதிலளிநீக்குஜாக்கூ ஹனுமான் கோவிலுக்குச் செல்ல எஸ்கலேட்டரா? வாவ்! நாங்கள் சென்றபோது படிகளில் ஏறித்தான் செல்ல வேண்டும். குரங்குகள் வேறு துரத்தும்.
ஆம், இப்போது இதெல்லாம் வைத்திருக்கிறார்கள். மால் ரோடு செல்லவும் லிஃப்ட் உண்டு. வலப்பக்கம் மேலே பார்த்தீர்கள் என்றால் சிம்லா நாட்கள் 1, 2 என்று இருக்கும் பாருங்கள்.
நீக்குதயவு செய்து நீங்கள் யாரென்று கருத்தின் கீழ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டால் நல்லது.
பதிவோடு முந்தைய பகுதிகளின் சுட்டிகள் கொடுக்க விடுபட்டிருக்கிறது.
கருத்திற்கு மிக்க நன்றி.
துளசிதரன்