சில்லு – 1 - ஒளிபடைத்த இளையபாரதம்!
ஓரிரு மாதங்களுக்கு முன் நம்மவருக்கு, அருகிலிருக்கும் கல்லூரி ஒன்றில் (தமிழ் நாட்டைச் சேர்ந்த கல்லூரி) கட்டுமானத் துறையில் (Civil Engineering) செயற்கை நுண்ணறிவு எப்படிப் பயன்படுகிறது என்பதைப் பற்றி உரையாற்ற அழைத்திருந்தார் அங்கு அந்தத் துறையின் தலைமைப் பொறுப்பில் பணிபுரிந்த எங்கள் நெருங்கிய நட்பு.
ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு துறை சம்பந்தப்பட்ட, எதிர்காலத்தில் பயனளிக்கும் சிந்தனைகளை வெளிக் கொணரும் வகையில் உரையாற்ற கல்லூரிக்கு வெளியிலிருந்து அந்தத் துறையில் ஆழ்ந்த அறிவுடைய பெயரறிந்த கல்வியாளர்களை (கல்லூரிக்குக் கூடுதல் சிறப்பு) அல்லது தங்களுக்குப் பரிச்சயமான கல்வியாளர்களை அழைப்பதுண்டு. அப்படி ஒவ்வொரு துறையும் எவ்வளவு கருத்தரங்குகள், Lectures, நடத்தியிருக்கிறார்கள் என்பதைப் பொருத்து அந்தந்தத் துறைக்குப் பெயரும், அந்தத் தலைமைக்கு ஒரு சிறப்பும் பின்னால் சேர்ந்து கொள்ளும் என்பதோடு அகில இந்திய தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரப் பட்டியலில் நல்ல தரத்தில் இடம் பிடிக்கவும் உதவும். அதனால் ஒவ்வொரு துறையும் இப்படிச் செய்வதுண்டு.
அதை அவர்கள் தங்கள் வருடாந்திர கல்லூரி இதழ்களில் படங்கள் போட்டுப் பிரஸ்தாபிப்பதும் உண்டு. அதில் அந்த நிகழ்வு பற்றிச் சொல்லப்பட்டிருப்பதும் உண்மையில் நடப்பதும் - மிகைப்படுத்தல் அதிகமான கலவையாகத்தான் இருக்கும். இதெல்லாம் சும்மா தாங்கள் இப்படி எல்லாம் மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கிறோம் என்று புள்ளியியல் கணக்கிற்காகப் பெரும்பான்மையான கல்லூரிகள் பறைசாற்றும் ஒரு விளம்பரம் மட்டுமே. மாணவர் சேர்க்கைக்கு வேண்டுமே! செய்தித் தாள்களில் மிகைப்படுத்தப்பட்டுச் சொல்லப்படும் செய்தி போன்ற ஒன்று.
அப்படி, தோழியின் முயற்சியில் பெயரறிந்த கல்வியாளர்களை ஏற்பாடு செய்ய முடியவில்லை காரணங்கள்: ஒரு மணி நேரத்திற்குக் கொடுக்கப்படும் தொகை; அத்தொகைக்குக் கல்லூரியின் அனுமதி; அப்படியே ஏற்பாடு செய்தாலும் தன் மாணவர்கள் அந்த உரையை உள்வாங்கும் திறன் உடையவர்களா என்ற சந்தேகம்.
தோழிக்கு நம்மவரிடம் கேட்பதில் தயக்கம் இருந்தது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் Robotics ல் ஆழ்ந்த அறிவு உடையவர் என்றாலும் பெரிய புள்ளி இல்லை என்பதை விட நட்பு என்பதால் அது ஏதோ ஒருவருக்கொருவர் உதவி என்ற பெயரில் ஆகிவிடுமோ என்ற தயக்கமும். தன் பிரச்சனையை நம்மவரிடம் சொன்னதும் அவரும் தயங்கினார். பின்னர் தோழி தன் நிலைமையைச் சொல்ல, நம்மவர் சம்மதித்தார். என்னிடம் குறிப்புகள் படங்கள் கொடுத்து Power Point தயாரிக்கச் சொன்னார்.
தோழி என்னை அழைத்து என்னையும் வரச் சொன்னார் சந்தித்து மாதங்கள் ஆகிவிட்டது என்று. அவர்களின் பணி சம்பந்தப்பட்டதற்கு நான் செல்வது சரியல்ல என்றதும், “நீங்க எதுக்கு யோசிக்கறீங்கன்னு தெரியும், காலேஜ் செலவுல நீங்க வரலை. Uncle கூட அவர் செலவுலதான் வரார். உங்க செலவுதான். தயங்காம வாங்க” என்றதும் சென்றேன்(றோம்).
உரை தொடங்குவதற்குத் தாமதமானது, ஏதோ பிரச்சனைகள். மாணவர்கள் வரவில்லை. நான் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். கல்விச்சாலைகள் கோயிலுக்குச் சமம் என்பதுண்டு. ஆனால் இரண்டுமே வியாபாரமாகி, அரசியலாகி வருகிறதே.
ஒரு வழியாக மாணவர்களை Projector இருக்கும் ஒரு பொது அறைக்குள் திரட்டினார்கள். மாணவர்களைப் பார்த்த எனக்கு உண்மையாகவே இவர்கள் மாணவர்களா என்ற சந்தேகம் வந்தது.
பெரும்பாலோர் மிகவும் சாதாரணக் குடும்பத்திலிருந்து, கல்வி அறிவு இல்லாத ஒரு சூழலில், சுற்றுப்பட்டுச் சிறிய கிராமங்களில் இருந்து வருபவர்கள் என்பதை ஏற்கனவே தோழி சொல்லியிருந்தார். ஒரு சிலர் உள்ளூர் பெரும்புள்ளிகளின் பிள்ளைகளாம். அதல்ல என் சந்தேகத்தின் காரணம்.
எந்தச் சூழலில் இருந்து வேண்டுமானாலும் வரட்டும், ஆனால் ஒருவரிடம் கூட ஒளி படைத்த கண்ணையோ, உறுதி கொண்ட நெஞ்சையோ (கற்று முன்னேற வேண்டும் என்ற உறுதி) படிப்பறிவுக் களையோ, எதிர்கால இளைய பாரதத்தையோ காணமுடியவில்லை. ஒருவருக்குக் கூடப் பெயரளவில் கூட கல்வியின் களை இல்லையே என்ற ஆதங்கம் எனக்கு. அதுவும் இப்படியான சூழலில் இருந்து வருபவர்களுக்கு நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அந்தத் துடிப்பு இருக்க வேண்டும் இல்லையா?
நான் இதை எல்லாம் யோசித்துக் கொண்டே வெளியில் நின்றிருக்க, வெளியில் எங்கும் இருக்கக் கூடாதாம், அறைக்குள் வரச் சொன்னார்கள். தயக்கத்துடன் சென்று கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டதால் மாணவர்களை நன்றாகக் கவனிக்க முடிந்தது.
சம்பிரதாய உரைகளுக்குப் பிறகு நம்மவர் உரையாற்றத் தொடங்கினார். மாணவர்களின் கடைசிவருட Project - செயல்முறைத் திட்டங்களுக்கான பல விஷயங்கள். அந்தச் செயல்முறைத் திட்டங்கள் அவர்களின் வேலைக்கான நேர்முகத் தேர்விற்கும் தெரிந்தடுக்கப்படுவதற்கும் நிச்சயமாக உதவும். ஆனால், ஒருவர் கூட அதைக் கவனிக்கவில்லை என்பது என் அடுத்த வேதனை.
பலரும் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தனர். அதை அடுத்தவரிடம் காட்டிப் பேசிக் கொண்டிருந்தனர். மூன்று பேர் தொலைக்காட்சியில் மிகவும் புகழ்பெற்ற ஒருவரின் நகைச்சுவையையும் அவர் ஏதோ ஒரு கல்லூரியில் பேசியதையும் ஒரே அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தனர் சிலர் தூங்கினார்கள். என் அருகில் அமர்ந்திருந்த தோழி எழுதிக் காட்டினார். “பாருங்க மொபைல் நோண்டுறதை. அவங்க வைச்சிருக்கற மொபைல் எல்லாம் 50, 60 ஆயிரம்” I was stunned! சாதாரணக் குடும்பப்பின்னணி!
உரை முடிந்தது. கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் என்றார் நம்மவர். எனக்குச் சிரிப்பு வந்தது. அதே சமயம் என் வேதனை கூடியது. தோழியிடம் கேட்டேன், “ஒண்ணே ஒண்ணு பசங்ககிட்ட சொல்லவா கடைசில”
“என்ன சொல்லப் போறீங்க?”
“சின்ன சின்ன வேலை, கூலி வேலை செஞ்சு தங்களோட உழைப்பை லட்சம் லட்சமா உங்க படிப்புக்காகப் பணமா மாத்துற உங்க அம்மா அப்பாவுக்கு உண்மையா, நேர்மையா இருங்க” தோழி சிரித்துவிட்டார். எனக்குப் புரிந்தது.
வரும் போது நம்மவரிடம் சொன்னேன். “உங்க Lecture was good. But conventional முறைல இருந்ததால பசங்க கவனிக்கலையோ? இப்ப உள்ள தலைமுறைக்கு ஏத்தாப்ல சொல்லிருக்கலாமோ?”
“If the students are studious they will know the value of a teacher, lecture, their parents and have a responsibility to listen, learn and progress”, என்றார்.
“அட நீங்க வேற, அவனுங்க முக்கியமானதை விட்டுட்டு மத்த விஷயம் பத்திதான் பேசி சிரிச்சிட்டிருப்பாங்க….க்ளாஸ்லியே போதைப் பொருள் அடிக்கற கேஸ் வேற. நாங்க தினம் படற அவஸ்தை” - தோழியின் புலம்பல். இப்படியான பகுதிகளில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளின் நிலை. கல்வித் தரம் மிக மிக மோசம்.
ஒரு வேளை இயந்திரன் படம், ரஜனி, விஜய் என்று பேசி ஏதேனும் உதாரணம் சொல்லியிருந்தால் கவனிப்பார்களோ? அல்லது சினிமா, தொலைக்காட்சி நட்சத்திர அந்தஸ்து உள்ள நபர்கள் யாரேனும் வந்து பாடங்கள் நடத்தினால்தான் கவனிப்பாங்களோ? வீட்டிற்குத் திரும்பும் போது இந்த இளைய பாரதத்தைப் பற்றி வேதனையுடன் யோசித்துக் கொண்டே இதைப் பற்றி மகனிடம் பேச வேண்டும், அவன் எப்படி அங்கு வகுப்புகள் எடுக்கிறான் அங்கு பசங்க எப்படி என்று கேட்க வேண்டும் என்றும் நினைத்தேன். பேசினேன். அவன் என்ன சொன்னான்? வரும்…..
சில்லு - 2 - பொன்னி நதி பாக்கணுமே...குப்பைக் கரையை
"வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி
புனல் பரந்து பொன்கொழிக்கும்"
(பட்டினப்பாலை - 17)
புனல் பரந்து குப்பைகொழிக்கும் கரை
மிகச் சிறிய காணொளிதான்
நிஜமாகவே வேதனைப்படும் நிகழ்வுதான். குறிப்பாக கோவிட் கட்டாய விடுமுறைகளுக்குப் பின் மாணவர்களின் மனோபாவமே மிகவும் மாறி விட்டதோ என்று தோன்றுகிறது. கல்வி கற்க செல்வதில் விருப்பமில்லை. படிக்காமலேயே, பரீட்சை எழுதாமலேயே பாஸ் செய்ய வேண்டும்.. வெட்டிப்பொழுது போக்க வேண்டும்.
பதிலளிநீக்குஆமாம் கோவிட் குப் பிறகு மாணவர்களின் மனோபாவம் மாறியிருந்தாலும் அதற்கு முன்னரே கூட, கற்கும் ஆர்வம் இல்லை பொதுவாகவே. நீங்கள் சொல்லியிருப்பது போல் இப்போது அவர்களில் பெரும்பான்மையோருக்கு வேலையில் சேரும் போதே அதீத எதிர்பார்ப்பும். நிறைய காரணங்கள் இருக்கின்றன.
நீக்கு//பரீட்சை எழுதாமலேயே பாஸ் செய்ய வேண்டும்.. வெட்டிப்பொழுது போக்க வேண்டும்//
இது ரொம்ப உண்மை
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
சினிமா நிச்சயம் மாணவர்களைக் கெடுக்கிறது. தங்கள் அபிமான நடிகர் என்று யாரையாவது விரித்துக்கொண்டு வன்முறைகளிலும், காதல் என்ற பெயரில் பாலியல் சீண்டல்களிலும் ஈடு படுகிறார்கள்.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம், இதைச் சொல்ல வேண்டும் என்றால் நிறைய இருக்கு....சினிமாவையும் தாண்டி மீடியா மோகம் நிறைய இருக்காப்ல தெரிகிறது ஸ்ரீராம். யுட்யூப் சானல்கள் உட்பட.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
தான் கற்ற அறிவு இந்நாட்டின் வருங்கால தூண்களுக்கு உதவவேண்டும் என்று சிரத்தையுடன் பேசிக்கொண்டிருக்க, மாணவர்களின் அலட்சியம் வேதனை. ஒவ்வொரு லெக்ச்சரின் பிறகும் மாணவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும் என்று சொல்லி இருக்க வேண்டுமோ... பாடத்திட்டத்தில் சேர்த்து இதற்கும் மதிப்பெண்கள் உண்டு என்று சொல்லி இருக்கலாமோ...
பதிலளிநீக்குஒவ்வொரு லெக்ச்சரின் பிறகும் மாணவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும் என்று சொல்லி இருக்க வேண்டுமோ... பாடத்திட்டத்தில் சேர்த்து இதற்கும் மதிப்பெண்கள் உண்டு என்று சொல்லி இருக்கலாமோ...//
நீக்குஹைஃபைவ் ஸ்ரீராம். இதை நான் தோழியிடமும் சொன்னேன்....அவர் தற்போது அங்கு இல்லை. அத இங்க சொல்லலை....கருத்து போட ஒரு ஸ்கோப் வேணுமே யாராவது சொல்வாங்கன்னு!!! நீங்க சொல்லிட்டீங்க...
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
குறைந்த பட்சம் லெக்சர் ஹாலுக்குள் மொபைல் கொண்டுவரக்கூடாது என்று சொல்லி வாசலிலேயே கலெக்ட் செய்து வைத்திருந்திருக்கலாம். தேர்ந்தெடுத்த சில மாணவர்கள் கூடவா கவனிக்கவில்லை? ஒன்றிரண்டு பேர் கூடவா குறிப்பெடுத்துக் கொள்ளவில்லை? ஒருவர் கூடவா கேள்வி கேட்கவில்லை?
பதிலளிநீக்குஒருத்தர் கூடக் குறிப்பெடுக்கவில்லை. கவனிக்கவில்லை...ஒருத்தர் கூடக் கேள்வி கேட்கவில்லை...இடையில் நம்மவர் கேட்ட கேள்விக்குக் கூட யாரும் பதில் சொல்லலை...ஸோ நம்மவரே பேசி , கேள்வி கேட்டு , பதிலும் சொல்லி என்று போனது.
நீக்குஸ்ரீராம். இருந்தது மொத்தம் 25 தான். 3, 4 வது வருடம். இதுவே சும்மா கூட்டின கூட்டம். இது சும்மா கணக்கு காட்ட. இந்த வருஷம் என்ன செஞ்சுருக்காங்கன்னு சொல்ல......எனக்குப் பிடிக்கவில்லை அன்று நடந்தது.
குறைந்த பட்சம் லெக்சர் ஹாலுக்குள் மொபைல் கொண்டுவரக்கூடாது என்று சொல்லி வாசலிலேயே கலெக்ட் செய்து வைத்திருந்திருக்கலாம். //
ஹைஃபைவ் ஸ்ரீராம்...நானும் இதையேதான் தோழியிடம் சொன்னேன். அவங்க இப்ப அங்க இல்லை.
பதிவில் சொல்லவில்லை. கருத்து போடறவங்க யாராவது சொல்ல ஸ்கோப் கொடுக்கணும் இல்லையா அதனால விட்டுவிட்டேன். நீங்க சொல்லிட்டீங்க.
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
டிரெய்லர் அடுத்து ஒரு பயணக்கட்டுரை வர இருபப்தைச் சொல்கிறதோ...
பதிலளிநீக்குஹாஹாஹாஹா...அதேதான். ஆனால் சுற்றுலா என்று செல்லைல்லை. தங்கை வீட்டுக்குப் போனப்ப, நானாகச் சென்று பார்த்தவை, ஒன்றே ஒன்று மட்டும் தங்கையுடன் தங்கை மகளுடன் சென்ற இடம்.
நீக்குகாணொளி பார்க்க முடிந்ததா? காவிரி!!! அகண்ட காவிரி, தண்ணீர் நிறைய இருந்தது
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. இன்ஜினியரிங் படிப்பு என்பது அரசு தயவில் சுலபமாக 4 வருடங்கள் கும்மாளம் அடிப்பது என்றாகி விட்டது. ஒன்றிரண்டு பேர் உண்மையான அக்கறை கொண்டிருந்தாலும் வேலை கிடைப்பதில் உள்ள விரக்தி அவர்களுடைய ஆர்வத்தை குறைக்கிறது. என்னவோ சார் இதை நன்றாக உணர்ந்து விட்டார். அதனால் அவர் மாணவர்களின் புறக்கணிப்பை பொறுத்துக் கொண்டார் என்பது தெரிகிறது.
பதிலளிநீக்குJayakumar
ஆமாம் பொதுவாகவே கும்மாளம் போல் ஆகிவிட்டதுதான் ஜெ கே அண்ணா. வேளை கிடைக்க சிரமம் என்பதை விட அதற்கான முயற்சியான அடிப்படை பொறியியல் கல்வியோடு கூடுதல் கற்றலும் வேண்டும் அது பெரும்பலானோர்க்கு அடிப்படை அறிவுமே இல்லாமல் இருப்பதுதான் காரணம்.
நீக்கு//என்னவோ சார் இதை நன்றாக உணர்ந்து விட்டார். அதனால் அவர் மாணவர்களின் புறக்கணிப்பை பொறுத்துக் கொண்டார் என்பது தெரிகிறது.//
ஆமாம், அண்ணா. உண்மைதான். சொல்லிப்பயனில்லை என்று
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
நல்ல, சிந்திக்கப்பட வேண்டிய பதிவு கீதா!
பதிலளிநீக்குஉங்கள் ஆதங்கம் இன்றைக்கு நிறைய பேருடைய ஆதங்கமாகவும் இருக்கிறது. இந்த அலைபேசி சின்னக்குழந்தைகளிலிருந்து பெரிய அளவில் மாணவர்கள் வரை அவர்களுடைய வளர்ச்சியை, நற்சிந்தனைகளை, நல்லறிவு பரந்து விரிவதை தடுக்கிறது. இளைஞர்களிடம் மரியாதை இருப்பதில்லை. எதையும் கற்றுக்கொள்ளும் மனோபாவமும் ஆர்வமும் இருப்பதில்லை. எது அவர்களை கவர்கிறதோ அதற்கு அடிமையாகிறார்கள். எதுவுமே வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அங்கே தான் ஏதோ பிரச்சினை இருக்கிறது.
இன்னொன்று. நம் காலத்திய படிப்பை விட பல மடங்கு அவர்களுக்கு படிப்புச் சுமை இருக்கிறது. இன்றைய கல்வி முறை ஆசிரியர்களுக்கு சவாலாக இருக்கிறது. மாணவர்களுக்கோ படிப்பு சுமை நாள் பூராவும் தொடர்கிறது. மனதில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத குழப்பங்களும் இருக்கின்றன. எனக்கென்னவோ, மாணவர்களுக்கு கொடுத்து வழி நடத்தவென்றே ஒரு ஆசிரியர் கல்லூரியில் அமர்த்தப்பட வேண்டும் என்று தோன்றுகிறது!!
ஆம் மனோ அக்கா நிறையபேருடைய ஆதங்கம் தான். அலைபேசியும் மீடியாவும் என்றும் சொல்லலாம் மனோ அக்கா. நீங்கள் சொல்லியிருப்பது போல் எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம். மனோபாவம் இல்லை.
நீக்குகண்டிப்பாக வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. நான் சொல்வதுண்டு Parenting ரொம்ப ரொம்ப முக்கியம் என்று. அடுத்து பள்ளி, கல்லூரிகள்.
இப்போது மீடியா மொபைல் இவற்றிலிருந்து குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகப் பெரிய சவால்.
//இன்னொன்று. நம் காலத்திய படிப்பை விட பல மடங்கு அவர்களுக்கு படிப்புச் சுமை இருக்கிறது. இன்றைய கல்வி முறை ஆசிரியர்களுக்கு சவாலாக இருக்கிறது. மாணவர்களுக்கோ படிப்பு சுமை நாள் பூராவும் தொடர்கிறது. //
ஆமாம் மனோ அக்கா ஆனால் அதில் பாருங்க....பாதி பெற்றோரும் காரணம்.
இப்போது பல பள்ளிகளில் அதாவது கொஞ்சம் மாறுபட்ட கல்வி முறையை வழங்கும் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் Psychology, Psychiatry பற்றி சொல்லி, பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு கொடுக்கிறார்கள் வளர்ப்பு முறைபற்றியும்.
நீங்கள் சொல்லியிருப்பது போல் கல்லூரிகளில் வழிநடத்தும் ஆசிரியர் அமர்த்தப்பட வேண்டும் ஆனால் மாணவர்கள் அவரை அணுகுவார்கள் என்று நினைக்கிறீர்களா அக்கா? அவரும் நட்சத்திர அந்தஸ்து உடையவராக இருந்தால் நடக்குமோ என்னவோ. எழுதுகிறேன் அக்கா ஏன் இப்படிச்சொல்கிறேன் என்று.
மிக்க நன்றி மனோ அக்கா.
கீதா
இன்றைய கல்வியறிவு பயனளிக்கிறதா ? என்றால் ஐயப்பாடு தான் வருகிறது.
பதிலளிநீக்குஇலவசமாக படித்தபோது கிடைத்த பொதுஅறிவு இன்று பணத்தை கொட்டியும் பெறமுடியவில்லை என்பதே உண்மை.
கில்லர்ஜி, இன்றைய கல்வி அறிவு என்பது ஏட்டுப் படிப்பு. பணம் ஈட்ட ஆனால் அதுவுமே கற்பிக்கப்படும் விதம் செயல்பாடுகள் சரியில்லை. நீங்கள் சொல்வது போல் பணம் கொட்டியும் கிடைக்கவில்லை என்பதே உண்மை
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
கல்லூரி நிகழ்வுகள் வேதனை. பல இளைஞர்கள் இன்று சீரழிந்தே இருக்கிறார்கள். தலைநகரில் பள்ளிகளிலேயே இப்படியான சூழல் தான்.
பதிலளிநீக்குTrailor ரசித்தேன். காத்திருக்கிறேன் Main Picture-க்கு!
ஆமாம் வெங்கட்ஜி. ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது செயல்பாடுகள். பல இளைஞர்கள் சீரழிந்தே இருக்காங்க....ஒரு வேளை நமக்கு வயசாகிடுச்சோ!!! தலைநகர் பள்ளிகள், மும்பை பள்ளிகள் பற்றியும் தெரிகிறது ஜி.
நீக்குTrailor ரசித்தேன். காத்திருக்கிறேன் Main Picture-க்கு!//
வரும் ஜி. ஆனால் என்ன மெதுவாக, திருவாரூர் தேர் போல ஆடி அசைந்து மெதுவா வரும். எழுத வேண்டுமே...ரசித்ததற்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி வெங்கட்ஜி
கீதா
ரசித்
சின்ன சின்ன வேலை, கூலி வேலை செஞ்சு தங்களோட உழைப்பை லட்சம் லட்சமா உங்க படிப்புக்காகப் பணமா மாத்துற உங்க அம்மா அப்பாவுக்கு உண்மையா, நேர்மையா இருங்க”
பதிலளிநீக்குஇதனை மாணவர்கள் உணர்வது இல்லை என்பதுதான் வேதனை
ஆமாம் கரந்தை சகோ. மாணவர்கள் உணர்வது இல்லை. பணக்காரக் குடும்பமானாலும் சரி, ஏழைக்குடும்பமானாலும் சரி நிலை அதுதான்
நீக்குமிக்க நன்றி கரந்தை சகோ
கீதா
"அலைபேசி இருந்தால் போதும், அனைத்தும் நமக்கு தெரியும்" என்கிற நினைப்பு தான் அனைவரையும் கெடுக்கிறது...
பதிலளிநீக்குஆமாம் டிடி.. உண்மைதான்
நீக்குமிக்க நன்றி டிடி
கீதா
கட்டுமானத் துறையில் செயற்கை நுண்ணறிவு எப்படிப் பயன்படுகிறது என்பதை கருத்தூன்றி கேட்டால் அவர்களுக்கு நாளை அது நன்மை என்பது இந்த குழந்தைகளுக்கு தெரியவில்லையே!
பதிலளிநீக்குவகுப்பில் அலைபேசியை வைத்து கொண்டு அதை கவனித்து கொண்டு இருந்தது வருத்தம் அளிக்கிறது.
//“சின்ன சின்ன வேலை, கூலி வேலை செஞ்சு தங்களோட உழைப்பை லட்சம் லட்சமா உங்க படிப்புக்காகப் பணமா மாத்துற உங்க அம்மா அப்பாவுக்கு உண்மையா, நேர்மையா இருங்க” //
அதை அவர்கள் நினைவில் வைத்து இருந்தால் பாடத்தை கவனித்து இருப்பார்களே!
//புனல் பரந்து குப்பைகொழிக்கும் கரை//
காணொளி பார்த்தேன், கரையில் ஒதுங்கி இருக்கே! நீர் நிலையில் இல்லை குப்பை என்பதே ஆறுதல் அளிக்கும் விஷயம்.
வெள்ளோட்டம் அருமை. தொடருங்கள்.
கட்டுமானத் துறையில் செயற்கை நுண்ணறிவு எப்படிப் பயன்படுகிறது என்பதை கருத்தூன்றி கேட்டால் அவர்களுக்கு நாளை அது நன்மை என்பது இந்த குழந்தைகளுக்கு தெரியவில்லையே!//
நீக்குஆமாம் கோமதிகக அதுதான் மனதுக்கு வேதனையாக இருந்தது. அதுவும் Power point ல் படங்களுடன் இருந்தது.
//வகுப்பில் அலைபேசியை வைத்து கொண்டு அதை கவனித்து கொண்டு இருந்தது வருத்தம் அளிக்கிறது.//
ஆமாம் அக்கா ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல வகுப்பிற்குள் அனுமதி அளித்திருந்திருக்கக் கூடாது
//அதை அவர்கள் நினைவில் வைத்து இருந்தால் பாடத்தை கவனித்து இருப்பார்களே!//
அதே தான்....தினமுமே வகுப்பில் ஒழுங்கா இருப்பாங்கதான்...
காணொளி பார்த்தேன், கரையில் ஒதுங்கி இருக்கே! நீர் நிலையில் இல்லை குப்பை என்பதே ஆறுதல் அளிக்கும் விஷயம்.//
ஆமாம் கோமதிக்கா... கரையில் ஒதுங்கியிருப்பவை சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது...அதுவும் சுகாதாரக் கேடுதான். தண்ணீர் நிறைய ஓடுவதால் கரையில் ஒதுங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். இல்லை என்றால் தண்ணீரோடு கலந்து இருக்கும்.
நெல்லை போட்டிருந்த காவிரிக்கரையோரம் குப்பைகள் கண்ணில் படவில்லை.
ஆமாம் கோமதிக்கா தொடர வேண்டும். மெதுவாகத்தான் வரும்...
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. கல்லூரியில் நடந்த , தங்கள் அனுபவ சம்பவம் நிறைய வேதனை தருகிறது. படிப்பை ஒரு பொருட்டாக மதிக்காத இந்த இளைய தலைமுறையினர் திருந்துவது எப்போது? நாம் படிக்கும் காலத்தில் இந்த கல்லூரி, இந்த கல்லூரியில் படிப்பவர்/ படித்தவர் என்றாலே ஒரு மதிப்பு இருந்தது. இப்போது பொறுப்புணர்ச்சி இல்லாத மாணாக்கர்களினால், ஒரு கல்லூரியின் பெயரும் கெடுகிறது.
உங்களவரின் மனதும் எப்படி வேதனையடைந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. விஞ்ஞான வளர்ச்சியை மாணவர்கள் வாழ்வில் உறுதுணையாக எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி, வெறும் பொழுது போக்கிற்காகவும், ஆடம்பரத்திற்காகவும் செலவிட கூடாதென்பதை யார் சொல்லி அவர்களுக்கு புரிய வைப்பது? இந்நிலையை நினைத்தால் கவலையாகத்தான் உள்ளது. இதில் நம் சுயநலமும் அடங்கி உள்ளது. இனி வளர்ந்து வரும் நம் குடும்ப சந்ததிகள் இவர்களை சந்தித்து இவர்களுடன் பழகி, இவர்களை கடந்து வரவேண்டுமே என மனது அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறது.
பொன்னி நதியோரம் அகற்றாத குப்பைகளுக்கு மக்களின் பொறுப்பற்ற செயல்களும் ஒரு காரணம். வீட்டில் பிளாஸ்டிக் பயன்பாடு கூடாது என்று சொல்லிக் கொண்டே அதைதான் வாங்கி முறையாக பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்துகிறோம் .
தங்களின் சுற்றுலா பயணத்தை பற்றிய பதிவை விரைவில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நாம் படிக்கும் காலத்தில் இந்த கல்லூரி, இந்த கல்லூரியில் படிப்பவர்/ படித்தவர் என்றாலே ஒரு மதிப்பு இருந்தது. இப்போது பொறுப்புணர்ச்சி இல்லாத மாணாக்கர்களினால், ஒரு கல்லூரியின் பெயரும் கெடுகிறது.//
நீக்குசரிதான் கமலாக்கா. ஆனால் சில கல்லூரிகளின் தரமும் அப்படித்தான் இருக்கிறது. இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் நிறைய இருக்கிறது. சில வெளியில் சொல்ல முடியாது. ஆனால் பல கல்லூரிகளின் தரமும் கல்வியின் தரமும் சரியில்லை என்பதும் உண்மை.
நம்மவரின் மனம் வேதனை அடையவில்லை, அக்கா ஏனென்றால் பழக்கமாகிவிட்டது. அனுபவங்கள் அப்படி.
மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளவேண்டும் நீங்கள் சொல்லியிருப்பது போல்.
//இதில் நம் சுயநலமும் அடங்கி உள்ளது. இனி வளர்ந்து வரும் நம் குடும்ப சந்ததிகள் இவர்களை சந்தித்து இவர்களுடன் பழகி, இவர்களை கடந்து வரவேண்டுமே என மனது அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறது.//
அக்கா அப்படி எல்லாம் இல்லை. ஒவ்வொரு கல்லூரியின் தரமும் வெவ்வேறு. குடும்ப சந்ததிகள் நல்ல கல்லூரியில் சேர்வாங்க கமலாக்கா கவலைப்படாதீங்க. நல்ல சுற்றுவட்டமும் கிடைக்கும். அவர்களுக்கு நல்லதே நடக்கும்.
குப்பைகளுக்குக் காரணம்மக்கள்தான். அதை அகற்றாமல் ..
கமலாக்கா அது சுற்றுலா எல்லாம் இல்லை. சும்மா போன இடத்தில் நடைப் பயிற்சி சந்தைக்குச் சென்று வந்த போது அப்படியே நுழைந்தது. பதிவில் சொல்கிறேன் கமலாக்கா
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
இப்போது
பதிலளிநீக்குபசங்களும் பெண்களும் பொறுப்புணர்ச்சி அற்றவர்கள்..
இந்த மாணாக்கர்களினால் ஏதும் நன்மை விளையப் போவதில்லை..
கும்பகோணத்தில் பார்த்தேன் - கிராமத்திற்குச் செல்லும் பேருந்து ஒன்றில் ஆணும் பெண்ணுமாய் அமர்ந்து கொண்டு... யாருமே கண்டு கொள்ளவில்லை..
வாழ்க எதிர்காலம்..
பசங்களும் பெண்களும் பொறுப்புணர்ச்சி அற்றவர்கள்..
நீக்குஇந்த மாணாக்கர்களினால் ஏதும் நன்மை விளையப் போவதில்லை..//
உங்களின் ஆதங்கமும் இது என்று தெரியும் துரை அண்ணா. அவர்க்ள் நல்ல சமுதாயமாக மாற வேண்டும் என்பதுதானே அண்ணா நம் எல்லோரது விருப்பம் இல்லையா...ஆனால் நன்மை ஒரு சிலரினால் விளையுமாக இருக்கலாம்....இத்தனைக் கூட்டத்திலும் ஒரு சில பசங்க நல்லது செய்யணும்னு நினைச்சு நடந்துக்கறாங்கதான்....ஆனா...அது மற்ற கூட்டங்கள் அதிகமாகும் போது நீர்த்துப் போய்விடுகிறது என்பது வேதனைதான் இல்லையா அண்ணா?
கும்பகோணத்தில் பார்த்தேன் - கிராமத்திற்குச் செல்லும் பேருந்து ஒன்றில் ஆணும் பெண்ணுமாய் அமர்ந்து கொண்டு... யாருமே கண்டு கொள்ளவில்லை.//
ஆமாம் நானும் பார்த்துருக்கிறேன். என்ன சொல்ல? யாருமே கண்டு கொள்ளவில்லை கூட்டத்தில் நானும்!!!
//வாழ்க எதிர்காலம்//
மிக்க நன்றி துரை அண்ணா.
கீதா
நான் சென்றமுறை ஒரு நல்ல கார் ஓட்டுநரோடு கும்பகோணம் தாராசுரம்லாம் போனேன். தாராசுர செடி நிழல்களில் இருவர் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தனர். இவர் காரை நிறுத்தி, அவர்களைப் பார்த்துச் சத்தம் போட்டார். அவர் சொன்னார், இந்த மாதிரி பசங்கள் ஸ்கூலுக்கு/காலேஜுக்குப் போகிறார்களா என்று கண்காணிப்பதைவிட அவங்க பெற்றோருக்கு என்ன வேலை, இந்த மாதிரி ஜோடிகளைப் பார்த்தால், சமூகப் பொறுப்புள்ள யாருமே விரட்டிவிட வேண்டாமா என்றார்.
நீக்குஅவர் சொன்னார், இந்த மாதிரி பசங்கள் ஸ்கூலுக்கு/காலேஜுக்குப் போகிறார்களா என்று கண்காணிப்பதைவிட அவங்க பெற்றோருக்கு என்ன வேலை,//
நீக்குமிகச் சரியான பாயின்ட்! நான் டிட்டோ செய்கிறேன்.
// இந்த மாதிரி ஜோடிகளைப் பார்த்தால், சமூகப் பொறுப்புள்ள யாருமே விரட்டிவிட வேண்டாமா என்றார்.//
இதுவும் நியாயமே....ஆனால் அதற்கான தைரியம் நமக்கு வேண்டுமே!
கீதா
வேதனையை வெளிப்படுத்தும் சிறப்பான பதிவு..
பதிலளிநீக்குமிக்க நன்றி துரை அண்ணா. காவிரி ஆறும் உட்பட....எவ்வளவு அழகாக ஓடுகிர்றது பரந்து விரிந்து....ஆனால் குப்பைகள் இப்படியாக அந்தக் கரை ரொம்ப அழுக்காக இருந்தது....பதிவில் சொல்கிறேன்..
நீக்குமிக்க நன்றி துரை அண்ணா
கீதா
கபோதிகளுக்கு யார் கண் திறந்து விடுவது?..
பதிலளிநீக்குஅதானே! யார்? முதலில் பெற்றோர்...வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். அடுத்து கல்விக்கூடங்களில்....
நீக்குமிக்க நன்றி துரை அண்ணா
கீதா
பெற்றோர்களால் ஒன்றுமே செய்ய இயலாது, அதிலும் படிப்புக் குறைவான பெற்றோர்களுக்கு ஒன்றுமே தெரியாது.
நீக்குசரிதான் நெல்லை, நீங்க சொல்றது......சின்ன வயசுலருந்தே அட்லீஸ்ட் ஒழுக்கம் கற்றுக் கொடுப்பது...அது இருந்தால் மற்றவை தானா வரும்...எத்தனையோ படிப்பறிவு இல்லாத குடும்பக் குழந்தைகள் நல்ல ஒழுக்கத்தோடு இருக்காங்கல்லியா அது போல..
நீக்குமிக்க நன்றி நெல்லை
கீதா
ரொம்ப வேதனையான நிகழ்வுதான். செல்போன் மாணவர்களின் கவனச் சிதறலுக்கு மிகப் பெரிய காரணம். அது அவங்களுக்கான ஒரு உலகைத் திறந்துவிடுகிறது. நல்ல நண்பர்கள் கிடைக்கவில்லை என்றால் அவங்க வாழ்வு சீரழியும். இதையெல்லாம் கேட்குமளவுக்கு பெற்றோர்களுக்கு வலிமை இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குநெல்லை வாங்க....நான் நேரடியாகப் பார்த்த போது ரொம்ப கஷ்டமாகிவிட்டது. அதுவும் ரொம்பச் சாதாரண பெற்றோர்கள் ஆனால் மொபைல் விலை யம்மாடியோவ்..
நீக்குஆமாம் நல்ல நட்பு?!!! அந்தக் கல்லூரியில் என்னால் அன்று கண்டவர்களில் யாரையுமே சொல்ல முடியவில்லை அந்தவித impression ஐ யாரும் தரவில்லை.நெல்லை.
பெற்றோருக்கு வலிமை இல்லை அதாவது அதைக் கேட்டுக்கும் அளவு மனவலிமைன்றதை சொல்லறீங்களா நெல்லை
அதென்னவோ உண்மைதான். தோழி சொன்னாங்க....அம்மா அப்பாவைப் பார்த்தீங்கனா நமக்கே ஒரு மாதிரி ஆகிடும்னு
மிக்க நன்றி நெல்லை
கீதா
15 ஆண்டுகளுக்கு முன்பே, நாகர்கோவில் பகுதியில் உள்ள எஞ்சினீயரிங் கல்லூரியில் எஞ்சீனியர் ஆன ஒருவன், சூப்பர் மார்க்கெட்டில், சாமான்களை அடுக்கி வைக்கும் வேலை செய்துகொண்டிருந்தான். நான் அவனை எடுத்துக்கொள்ளலாம் என்று இண்டர்வியூ செய்தேன். ஆட்டிடியூட் மற்றும் ஆங்கிலம் எதுவுமே இல்லை. இன்னொருவர், பெரிய கல்வி பெற்றவர், என் டிபார்ட்மெண்டில் ரிசப்ஷனிஸ்டாக வைத்துக்கொண்டிருந்தேன்.
பதிலளிநீக்குஆட்டிடியூட் மற்றும் ஆங்கிலம் எதுவுமே இல்லை//
நீக்குஇதுதான் மிக பெரிய வேதனையான விஷயம் நெல்லை. முதலில் அட்டிட்யூட்....அதுவே இல்லாதப்ப அப்புறம் எங்க ஆங்கிலம். அது நலலருந்தா ஆங்கிலம் கற்கும் ஆர்வம் இருந்திருக்குமே..
//இன்னொருவர், பெரிய கல்வி பெற்றவர், என் டிபார்ட்மெண்டில் ரிசப்ஷனிஸ்டாக வைத்துக்கொண்டிருந்தேன்.//
ஓ!
எங்க ஊர் பக்கம் உள்ள பொறியியல் கல்லூரிகள் எல்லாம் கிட்டத்தட்ட இங்க சொல்லியிருக்கும் கல்லூரி நிலைதான். காளான் போல இத்தனை கல்லூரிகள் இருந்தா எப்படி?
மிக்க நன்றி நெல்லை.
கீதா
காவிரி(?)க் கரையோரம் பிளாஸ்டிக் குப்பைகள். அட ஆண்டவா....
பதிலளிநீக்குகாவிரியேதான் இது.....எப்படி இருக்கு பாத்தீங்களா? அதுக்குத்தான் போட்டேன், நெல்லை. பார்த்தப்பா ரொம்பக் கஷ்டமா இருந்தது.
நீக்குமிக்க நன்றி நெல்லை
கீதா
உங்கள் ஆதங்கம் நியாயம், உங்கள் கணவரின் கருத்து 100% சரி.
பதிலளிநீக்குஆம்...பானுக்கா,
நீக்குமிக்க நன்றி
கீதா
சில/பல மாதங்கள் கழித்து உங்கள் பதிவு. உங்கள் வேதனை, முக்கியமாய் இளைய தலைமுறையினரிடம் உள்ள அக்கறை, அவர்களின் அலட்சியப் போக்கினால் விளைந்த வேதனை அனைத்தும் நன்றாகப் புரிகிறது. ஆனால் அடிப்படையிலேயே கோளாறு என்பதால் யார் தான் என்ன செய்ய முடியும்? நான் நினைச்சது என்னன்னா கர்நாடகா மாணவர்கள் புத்திசாலியாய் இருப்பாங்க என. ஆனால் எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரி தான் என இப்போது தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குவாங்க கீதாக்கா....பரவால்ல பதிவுகள் எங்க ஓடப் போகின்றன? உங்கள் உடல் நலம் முக்கியம்.
நீக்குஆமாம் கீதாக்கா அடிப்படையிலேயே கோளாறு. அக்கா இது கர்நாடகா மாணவர்கள் இல்லை....கர்நாடகாவை ஒட்டி இருக்கும் தமிழ்நாட்டுப் பகுதியில் இருக்கும் தமிழ்நாட்டுக் கல்லூரிதான். பெயர் எல்லாம் வெளியில் சொல்ல முடியாதே!!! அடைப்புக்குள் கொடுத்திருக்கேன் தமிழ்நாட்டுக் கல்லூரி என்று.
ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் எல்லா மாநிலங்களும் ஒரே போலத்தான். அதுவும் கொஞ்சம் கிராமாந்திரப் பகுதியில் இருப்பவை ஒரு மாதிரி என்றால், நகரக் கல்லூரிகள் வேறு விதமாக....
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
நீங்க இங்கே அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்து பாருங்க. எவ்வளவு துணிகள்! எவ்வளவு ப்ளாஸ்டிக் கழிவுகள் என! தினம் தினம் சுகாதாரப் பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டே இருந்தாலும் மக்கள் திருந்தினபாடில்லை. ஆயிற்று! இதோ ஜூலை 17ஆம் தேதி அன்னிக்குக் கூட்டமும் தாங்காது. குப்பையும்.
பதிலளிநீக்குவேதனையான விஷயம் கீதாக்கா. நாம் நீர்நிலைகள் எல்லாம் இப்படித்தான் ...நீர் பெருக்கெடுத்து ஓடும் போது ஆங்காங்கே நீரில் வரும் குப்பைகளை அது கரையில் ஒதுக்கும் கூடவே நம்ம மக்கள் அப்பகுதியில் போடும் குப்பைகள் என்று....இது மிகப் பெரிய கொடிய பாவச் செயல். ஆற்றில் போடுவது மீண்டும் நமக்குத்தான் வந்து சேரும்!!! இயற்கையை அழிக்கும் போது அது நம்மை பல மடங்காய் அழிக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும்.
நீக்குமிக்க நன்றி கீதாக்கா
கீதா
வீரநாராயணப் பெருமாளைப் பார்த்துட்டு வந்தீங்களா? பதிவுக்குக் காத்திருக்கேன்.
பதிலளிநீக்குநீங்கள் எந்தப் படத்தைப் பார்த்துக் கேட்கிறீர்கள் என்று புரிந்து கொண்டேன். ஆனால் அது இல்லை கீதாக்கா. நான் அக்கோயிலுக்குப் போகவில்லை. இது வேறு இடத்தில். பதிவில் சொல்கிறேன்.
நீக்குமிக்க நன்றி கீதாக்கா
கீதா