நன்றி - இத்தலைப்பில் பகிரப்பட்டிருக்கும் புலிகள் பற்றிய படங்களுக்கும் செய்திகளுக்கும் (P)பெஞ்ச் வனவிலங்கு சரணாலயம்/தேசிய பூங்கா, மற்றும் புலிகள் சரணாலய தளங்கள், பிபிசி தளம்
INFORMATION AND PICTURE COURTESY : Pench National Park and tiger reserve sites, BBC website
நேரம் கிடைக்கும் போதெல்லாம் விலங்குகள், இயற்கை, சுற்றுலா, குறும்படங்கள் என்று ஏதேனும் ஒரு விஷயம் பற்றி கட்டுரைகள், தகவல்கள், காணொளிகள் என்று இணையத்தில் அடிக்கடி பார்ப்பதுண்டு. (இதை ஒரு வழக்கமாகவும் வைத்துக் கொண்டிருக்கிறேன்)
அப்படி வனவிலங்குகள் பற்றி பார்த்த போது, (Pபெஞ்ச் தேசிய வனவிலங்கு சரணாயம், ரண்தம்போர் சரணாலயம், தடோபா சரணாலயம், கன்ஹா சரணாலயம், wildtrails, tigersinthewild) சில புகழ் பெற்ற புலிகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வாசிக்க நேர்ந்தது. அக்கதைகளைப் பகிரலாமே, நம்மில் ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாமே என்று நினைத்தேன்.
படங்களும் தகவல்களும் எடுத்து வைத்துக் கொண்டு புலிகள் தினமாகிய ஜூலை 29 அன்று தொடக்கவிழாவோடு தொடங்கலாம் என்றால் வழக்கம் போல பதிவு பாதியில் இருந்திட, துளசியின் மலேசியப் பயணக் கட்டுரை முடிந்ததும் பகிரலாம் என்று வைத்திருந்த பதிவு.
சூப்பர்மாம்/காலர்வாலி இப்படி வித்தியாசமான பெயர்களுடன், வன அதிகாரிகள், வனவிலங்கு புகைப்படக்காரர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் எல்லோரும் பார்த்து வளர்ந்தவள் என்பதால் இவர்களின் செல்லமும் கூட.
காலர்வாலி - பெயர்லயே உங்களுக்குத் தெரிந்திருக்கும். காரணம் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டதுதான். எல்லாப் புலிகளுக்கும் ரேடியோ காலர் பொருத்தப்படுவதில்லை, ஒரு சில புலிகளுக்கே எனும் போதே தெரிந்துவிடுகிறது இவள் வித்தியாசமானவள் என்பது. பல சிறப்பு அம்சங்களைக் கொண்டிருந்திருக்கிறாள்.
பிறந்த இரு வருடங்கள் வரை அம்மாவுடன் இருக்கும் புலிக்குட்டிகள் பின்னர் தனித்து வாழ, தங்களுக்கான எல்லையை வகுத்துக் கொள்ள பிரிந்துவிடும்.
அப்படி இந்த காலர்வாலி, தான் பிறந்த எல்லையை விட்டு வெளியேறிய போது தன் அப்பாவுடன் (T-1) சென்ற முதல் புலியாம். தன் அப்பாவைப் போலவே மிகவும் ஆளுமைத் திறனுடன் இரை கிடைக்கும் பிரதேசம் முழுவதையும் தன் ஆளுமைக்குள் வைத்திருந்திருக்கிறாள். மற்ற புலிகள் இவளுடன் சண்டை போடவும் பயப்படுமாம்!
சாதாரணப் பெண் புலிகளின் தோற்றத்தைவிட மிகப் பெரியவளாக, அவளின் உடல் கட்டமைப்பு பார்ப்பதற்கு ஆண் புலி போல இருந்ததால், முதன் முதலில் பார்க்கும் சரணாலய அதிகாரிகள் அவளை ஆண் புலி என்றே நினைத்ததுண்டாம்.
16/17 ஆண்டு கால வாழ்நாளில் 8 முறை (11 வருடங்களில்) பிரசவித்ததில் 29 புலிக்குட்டிகளை ஈன்று (அவற்றில் தற்போது 25 இருக்கின்றன) புலிகளின் எண்ணிக்கையைக் கூட்டியவள் என்ற பெருமை பெற்றவள் என்பதால் 'சூப்பர் மாம்'. குறிப்பாக 2005 ல் 5 குட்டிகளை ஈன்றிருக்கிறாள். இது ஒரு அசாதாரண நிகழ்வு. உலக அளவில் சாதனை என்றும் சொல்லப்படுகிறது.
அதே சமயம் தன் குட்டிகளை (2 வருடங்களுக்கு முன்பாகவே) விரைவாகவே தன் இரையைத் தேடிக் கொள்ள அனுமதித்திருக்கிறாள்!!!
அவளின் இந்த செய்கையால் அவளுக்கு "மாதரம்" என்ற பட்டமும் கிடைச்சிருக்கு பாருங்க!
INDOMITABLE SPIRIT என்று வன அதிகாரிகளால் நினைவுகூரப்படுபவள்.
இத்தனை சிறப்பம்சங்களோடு கூடவே மற்றொன்று, சுற்றுலாப் பயணிகளுடன் வரும் வண்டிகளைக் கண்டு உறுமாமல், பாயாமல், வண்டிகளின் அருகில் வந்து அமைதியாக நிற்கும் அளவிற்குத் தோழமை உணர்வோடு இருந்திருக்கிறாள்!!!!!!
தனக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அதை ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களிடம் சொல்ல நினைப்பாள் என்றும் அவள் இறப்பதற்கு முன்பு கூட அப்படி ஒரு சைகை மூலம் அதாவது தனக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் திறந்தவெளியில் படுத்துக் கொள்ளும் செய்கை மூலம் உணர்த்தியதாகவும் ஆனால் குடலில் முடியும், சகதியும் அடைத்திருந்ததாலும் வயதான காரணத்தினாலும், பல உறுப்புகள் செயலிழந்திருந்ததால் காப்பாற்ற முடியாமல் கடந்த ஜனவரி 15, 2022 அன்று மாலை மரணத்தைத் தழுவியிருக்கிறாள்.
ராஜ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள்
அமைச்சர், இயற்கை ஆர்வலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், அந்தப் பகுதி பழங்குடி கிராம மக்கள் என அனைவரும் மலர் தூவி தங்கள் அஞ்சலியை செலுத்தியிருக்கிறார்கள்.
அமுல் நிறுவனத்தின் அஞ்சலி - #Amul Topical: Tribute to Tigress, ‘Super Mom’ to 29 cubs...
தகவல்கள் பிரமிக்க வைக்கிறது தொடரட்டும் பதிவு...
பதிலளிநீக்குஆமா கில்லர்ஜி நிறைய பிரமிப்பா இருந்தது வாசிக்கறப்ப....பகிரலாம்னு நினைச்சிருக்கேன் பார்ப்போம்.
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
ஆச்சர்யப்படுத்தும் தகவல்கள். வெரி இன்டெரெஸ்டிங். மேலதிகத் தகவல்களைத் தேட வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது.
பதிலளிநீக்குஆமா நெல்லை, ஆச்சரியப்படுத்தும் தகவல்கள் தான். அந்த ஆர்வத்தில்தான் இன்னும் தெரிந்து கொண்டேன்.
நீக்குமிக்க நன்றி நெல்லை
கீதா
மாதரம் பற்றிய தகவல்கள் பிரமிப்பு...!
பதிலளிநீக்குஆமா டிடி.
நீக்குமிக்க நன்றி டிடி
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. சரணாலய புலிகள் பற்றிய தகவல்களும், அதன் பெயர் விபரங்களும், படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த மாதிரி காட்டுக்குள் எவ்வளவு விபரங்கள் நம்மை சுற்றி உள்ளதென பிரமிப்பாக உள்ளது. மேலும் விபரங்கள் பதிவை தொடர்கிறேன். இந்த மாதிரியான சுவாரஸ்யமான விஷயங்களை சேகரித்து பதிவாக தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா, ஆமா ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அவற்றோடு தினமும் தொடர்புடையவர்களுக்கு நிறையத் தெரியும்தான். இன்னும் சில பகிர நினைத்துள்ளேன்.
நீக்குமிக்க நன்றி கமலாக்கா
கீதா
மாதரம் மிகவும் அருமையான தாய். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎன் கணவருக்கும் இது போல பார்க்க பிடிக்கும்.
தொலைக்காட்சியிலும் இணையத்திலும் பார்ப்பார்கள்.
சரணாலய புலிகள் அதன் படங்கள், விவரங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.
உடல் நிலை சரியில்லாமல் போனதை அது உணர்த்தியது நெகிழ்வு.
அதன் குடலில் இருந்த பொருட்கள் மனதை கஷ்டபடுத்துகிறது.
எல்லோரும் அஞ்சலி செலுத்தியது நெகிழ்வு.
ஆமாம் கோமதிக்கா எனக்கு வாசித்ததும் பிரமிப்பாக இருந்தது.
நீக்குஆமாம் மாமா பார்ப்பது பற்றி ஒரு பதிவிலும் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ம்ம் எனக்கு நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
ஆமாம் தனக்கு உடல் நிலை சரியாக இல்லாததை உணர்த்திய விதம் எனக்குக் கண்ணில் நீர் வந்துவிட்டது கோமதிக்கா அதை வாசித்ததும் அதுவும் படத்தோடு சொல்லியிருந்தாங்க அது தனியா படுத்துக் கிடந்த படம்.
குடலில் இருந்தவை ஏன் அவர்கள் கவனத்திற்கு வரவில்லை என்று தெரியவில்லை. அது வருஷக்கணக்கா இருந்ததா இல்லை அப்போது அடைத்ததா என்று தெரியவில்லை
ஆம் எல்லோரும் அஞ்சலி செலுத்தியிருக்காங்க அதுவும் நெகிழ்வான விஷயம்
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
எழுத்தில் புலியான உங்களுக்கு இயற்கையிலேயே புலிகள் மீது பற்றும் பாசமும் இருக்காதா என்ன? குட்டிகளுடன் புலித்தாய் படம் அற்புதம்!
பதிலளிநீக்குஹையோ செல்லப்பா சார்!!! //எழுத்தில் புலி// சிரித்துவிட்டேன். அப்படியான திறமை எல்லாம் எதுவும் கிடையாது சார், 'நானும் கச்சேரிக்குப் போகிறேன்'அவ்வளவுதான்...ஹாஹாஹாஹா
நீக்குகுட்டிகளுடன் புலித்தாய் படம் அற்புதம்!//
ஆமாம் சார்.
மிக்க நன்றி செல்லப்பா சார்
கீதா
சுவாரஸ்யமான தகவல்கள். திடீரென சூப்பர்மாம், காலர்வாலி என்றெல்லாம் சொன்னவுடன் விழித்தாலும், புரிகிறது.
பதிலளிநீக்குதிடீரென சூப்பர்மாம், காலர்வாலி என்றெல்லாம் சொன்னவுடன் விழித்தாலும்//
நீக்குஹாஹாஹா முதலில், தலைப்பின் இரண்டாவது பகுதியைத்தான் முதலில் போட்டு ஹைஃபன் போட்டு இதைப் போட்டிருந்தேன். ஆனால் அதை விட இப்படித் தொடங்கி தலைப்பைப் போட்டால் நன்றாக இருக்குமே என்று மாற்றினேன் ஸ்ரீராம்.
ஆமாம் சுவாரஸியமான தகவல்கள். இயற்கையே அப்படித்தானே
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
தன் கழுத்தில் ரேடியோ பொருத்தப் பட்டிருப்பதை அறிவாள் போலும். நலம்விரும்பிகள் தனக்கு இருக்கிறார்கள் என்பதையும் அறிந்திருந்தாள் போலும். எனவேதான் சுற்றுலாப் பயணிகளுடனான அமைதியான கலந்துரையாடல், செய்கைகள் மூலம் தகவல் சொல்வது..
பதிலளிநீக்குவனத்துறை வருடாந்திர மெடிக்கல் செக்கப் செய்திருந்திருக்கலாம். முடிகள் சகதிகள் குடலில் அடைந்திருப்பது முன்னரே தெரிந்திருக்கும்.
தன் கழுத்தில் ரேடியோ பொருத்தப் பட்டிருப்பதை அறிவாள் போலும். நலம்விரும்பிகள் தனக்கு இருக்கிறார்கள் என்பதையும் அறிந்திருந்தாள் போலும். எனவேதான் சுற்றுலாப் பயணிகளுடனான அமைதியான கலந்துரையாடல், செய்கைகள் மூலம் தகவல் சொல்வது.. //
நீக்குஆமாம் ஸ்ரீராம். எனக்கும் தோன்றியது. முதலில் கட்டிய காலர் இரண்டு வருடங்களுக்குப் பிறகு சரியாக வேலை செய்யவில்லையாம் அப்புறம் மீண்டும் கட்டியிருக்கிறார்கள். ஆனால் அப்படிக்கட்டுவதும் எளிதல்ல. அவர்களுக்கு மயக்க ஊசியை அம்பு போல் எய்து மயக்கித்தானே காலர் கட்ட முடியும். அது போலத்தான் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதும்.
இறுதி நாட்களில் கூட சுற்றுலாப்பயணிகள் கவனித்திருக்கிறார்கள் அவள் இப்படித் தனியாகப் படுத்து என்னவோ போல் இருப்பதை வன இலாகா அலுவகலத்தில் சொல்ல்யிருக்கிறார்கள். பாருங்கள் சுற்றுலாப்பயணிகளும் கூட ஆர்வமாக இதை எல்லாம் கவனித்துச் சொல்லியிருக்காங்க. மகிழ்ச்சியாக இருந்தது.
வனத்துறை வருடாந்திர மெடிக்கல் செக்கப் செய்திருந்திருக்கலாம். முடிகள் சகதிகள் குடலில் அடைந்திருப்பது முன்னரே தெரிந்திருக்கும்.//
ஆமாம், அதுவும் காலருடன் தானே இருந்திருக்கிறாள். எனக்கும் தோன்றியது. கிடைத்த தகவல்கள் இவ்வளவுதான்.
மிக்க நன்றி ஸ்ரீராம்.
கீதா
புலி என்றவுடன் பிராபகரன் தான் மனதில் தோன்றினார். ஆனால் காட்டில் உள்ள புலியின் கதையும் சுவாரசியமாக இருக்கிறது. அழகிய படங்கள் கதைக்கு (கட்டுரைக்கு) அணி சேர்க்கின்றன. தொடரட்டும் புலிப்புராணம்.
பதிலளிநீக்குஜிம் கார்பேட் எழுதிய புலிக்கதைகளை வாசித்தீர்களா? குறிப்பாக "Man eaters of Kumaon"
Jayakumar
ஹாஹாஹா ஆமாம் அண்ணா எழுதும் போது ஒரு வரி சேர்த்திருந்தேன், புலி என்று சொல்லவே பயமாக இருக்கிறது என்று.
நீக்குஆமாம் சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன. படங்கள் எல்லாம் வன விலங்கு ஆர்வலர்கள் புகைப்படக் கலைஞர்கள் எடுத்த படங்கள் அதனால் நன்றாகவே இருக்கும்.
ஜிம் கார்பேட் எழுதிய புத்தகத்தின் சாராம்சம் வாசித்திருக்கிறேன் முழு புத்தகம் வாசித்ததில்லை ஆனால் அதை டாக்குமென்ட்ரியாகவும், இந்தப் புத்தகத்தை ஒட்டி (அதில் உள்ள கதைகள் இல்லாமல் ஆனால் ஃபிக்ஷனலாக) இப்புத்தகம் அதிகமாக விற்ற செய்தி அறிந்து, படமாகவும் எடுத்தவை யுட்யூபில் இருக்கின்றன. சுவாரசியமாக இருக்கும்,
அவர் 7, 8 புத்தகமாகப்போட்டிருக்கிறார் தனது வன அனுபவங்களை தான் எதிர்க்கொண்டதை. இப்புத்தகத்தில், பெண் புலி தன் குட்டிகளுக்கு வேட்டையாட எப்படிப் பயிற்சி கொடுக்கிறது அதன் பின் அவற்றைத் தனியாக வேட்டையாட வைப்பது என்று சொல்லியிருப்பார்.
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
ஆஹா!... மிக மிக அற்புதமான தகவல்கள்!!.. அவரிவர் என்றில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையுமே திரும்பிப்பார்க்கச் செய்யும் செய்திகள்... இதுபோன்ற மேலும் பல உணர்வுப்பூர்வமான பதிவுகளை தங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கின்றேன் சகோதரி!!!...
பதிலளிநீக்குநன்றியுடன் நாஞ்சில் சிவா!
எடுத்து வைத்திருப்பதை மேலும் தரலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்
நீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா
கீதா
ஆமாம் ஆர்வம் உள்ள எல்லோருக்கும் சுவாரசியமான தகவல்கள். எடுத்து வைத்திருப்பதை மேலும் தரலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்
நீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா
கீதா