செவ்வாய், 19 ஏப்ரல், 2022

சில்லு சில்லாய் – 2 – கூகுள் மேப்ஸ் - அலை அலையாய்

சென்ற சில்லில் எழுதிய நுண்ணுயிரியின் பெயர் பார்த்து ஏதோ ‘ரொட்டி’ யோ என்று எபி ஸ்ரீராம் ஓடோடி வந்து முதலில் ஆஜர் வைத்து கடைசியில் ஏமாந்து....!!!! 

இந்தச் சில்லில் அப்படி ஒரு தகவலும், சிறிய புலம்பலும். 

செயற்கைக் கோள் வழியாகச் செயல்படும் கூகுள் மேப்ஸ், ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தீர்மானிக்க, முக்கோண முறையைப் பயன்படுத்துகிறது. அதாவது 3 செயற்கைக்கோள்கள் இணைந்து ஒரு பொருளின் இருப்பிடத்தை துல்லியமாக தீர்மானிக்கிறது. ஒன்று சுணங்கினாலும் மற்றொன்று அதன் செயலைச் செய்யுமாம்.

கூகுள் மேப்ஸுக்குச் சென்று, பூமியை முழுவதுமாகப் பார்க்கும் வரை முடிந்தவரை (மைனஸ் அடையாளத்தைப் பயன்படுத்தி) பெரிதாக்கி, இடது மூலையில் உள்ள "செயற்கைக்கோள் காட்சிக்கு" மாற்றினால், எல்லா வழிகளிலும் பெரிதாக்கப்பட்டிருந்தால், நாம் ஆராயக்கூடிய கிரகங்கள் மற்றும் நிலவுகளின் பட்டியல் தானாகவே இடது பக்கத்தில் பாப் அப் ஆகுமாம். 

சமீபத்தில் கூகுள் மேப்ஸ், புதிய அம்சமாக, அதன் இன்டெர்ஃபேஸில் ஒரு டஜன் கிரகங்கள் மற்றும் நிலவுகளைச் சேர்த்துள்ளதாம். இதனால் பயனர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அதிக இடத்தை ஆராய முடியுமாம்.

தொழில் வகையில் பயனுள்ள அம்சங்கள் நிறைந்திருக்கும் அதே வேளையில்,  தனிப்பட்ட ஆர்வலர்களுக்கு ஒரு பொழுது போக்கு அம்சம். அப்படியான பயனர் ஒருவர் பூமியை ஆராய்ந்து கொண்டிருந்த போது, சீனப்பெருஞ்சுவர் அருகில் அடர்ந்த செடிகளின் நடுவில் சீன மொழியில் ஏதோ எழுதி இருப்பது அவருக்கு வித்தியாசமாகத் தெரிந்திருக்கிறது.

நம்பமுடியாத அளவிற்கு, விண்வெளியிலிருந்து உற்று நோக்கும் கூகுள் மேப்ஸ் தளத்தில் தெளிவாகத் தெரிகிறது என்றால் அந்த எழுத்துகள் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்! என்ற ஆச்சரியம்.

தான் கண்ட இந்த அரிய நிகழ்வு குறித்து ரெட்டிட் இணையதளத்தில் அந்த நபர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தொடர்புடைய இடத்தை மற்ற பயனர்களும் பார்த்துக் கொள்ளும் வகையில், கூகுள் மேப்ஸ் தேடு பொறிக்குள் தேடுவதற்கான முகவரியையும் (40.4499299, 116.5487750 அவர் குறிப்பிட்டு, கூடவே குறிப்பிட்ட அந்த எழுத்துகள் என்ன சொல்கின்றன என்ற கேள்வியையும் கேட்டிட.....

‘இது ஒரு அரசியல் பிரகடனம், பண்டு, ‘சீன மக்கள் குடியரசு’ நிறுவப்படுவதை அறிவித்த தலைவர் 'மாவோ'விற்குத் தங்கள் விசுவாசத்தை அறிவிக்கும் வகையில் இந்தச் செய்தி உள்ளது என்று சிலர் சொல்ல…

'தலைவர் மாவோவுக்கு விசுவாசம்’ அல்லது 'எனது விசுவாசம் தலைவர் மாவோவுக்கானது’ என அர்த்தம் கொண்டதாக இருக்கலாம் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

இது இப்போது வைரல் என்றாலும், 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே இது இணையதளத்தில் வலம் வந்த விஷயம்தான் என்றும் சொல்லப்படுகிறது.

2014ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்லே ஒபாமா தனது இரண்டு மகளுடன் சென்று சீன பெருஞ்சுவரைப் பார்வையிட்டபோது, சீனப் பெருஞ்சுவரில் உள்ள 14வது டவரில் ஏறி நின்று புகைப்படம் எடுப்பதற்கு ஒரு சில புகைப்பட கலைஞர்களே அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அப்படி எடுத்த புகைப்படத்தில் ஒபாமா குடும்பத்தினருடன் சேர்ந்து, இந்த எழுத்துகள் இருந்த இடமும் இடம் பெற்றிருந்திருக்கிறது. அதில், “தலைவர் மாவோவுக்கு விசுவாசங்கள்என்று பொறிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டதாம்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த எழுத்துக்கள் உயரமான கற்களில் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்றும், தற்போது அதைச் சுற்றியிலும் மரம், செடிகள் படர்ந்துள்ளன என்றும் சொல்லப்படுகிறது. 2008ஆம் ஆண்டில் சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டபோது, அந்நாட்டு அரசு இந்தச் சுவர் எழுத்துக்களை புதுப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இத்தனைக்கும் சீனாவில் கூகுள் சம்பந்தப்பட்ட செயலிகள் எல்லாமே தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவுக்குச் செல்பவர்கள் கூகுள் பயன்படுத்த முடியாது. (ஆனால் நம்ம டெக்னாலஜி கில்லாடிகள். அதற்கும் வழி எல்லாம் வைத்துள்ளனர்.) சீனாவும் அமெரிக்காவும் பங்காளிங்களாச்சே, கூகுள் அமெரிக்க நிறுவனம் என்பதால் சீனா ஒரு செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்பித் தனக்கான மேப்ஸ் செயலியை உருவாக்கி  அதைத்தான் பயன்படுத்துகிறதாம்.  

---நன்றி : இந்தியா டைம்ஸ் (வேறு சில தளங்களிலும் வந்திருந்தது)

பல மொழிகள் தெரிந்த, உலகம் சுற்றிய வாலிபர் கில்லர்ஜி! மேலே சொல்லப்பட்ட பொருள் சரிதானா? வாலிபர் 2 - நெல்லை உங்களுக்கும் சீன மொழி தெரியும்லா?!!!

(நம் வீட்டில் பொருள் ஏதேனும் காணாமல் போச்சுனா தேடிக் கொடுக்குமோ?!! இதை என் மூன்றாவது விழிக்குள் பொருத்தினால் இந்த கையடக்கப் பறவைகள், குண்டூசி நுனியளவு இருக்கும் பூச்சிகளைப் படம் பிடிக்க முடியுமோ! [ஹலோ! கீதே அது கோஸ்ட்லியாக்கும்! – கற்பனை சிறகடித்து விண்ணில் செல்ல காசு பேடா! (வேண்டாம்) அர்த்தவாகிதேயே? (புரிந்ததா?) ]

***************************************

கடல் அலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ரம்மியம். ஆனந்தம், பரமானந்தம். மனம் ஒருநிலைப்படும். கற்பனை சிறகடிக்கும். சிந்தனைகள் விரியும். கதைகள் பிறக்கும். கூடவே ‘Capture every moment’ என்று மூன்றாவது விழி பரபரக்கும்! எபி ஸ்ரீராமிற்குக் கவிதைகள் ஊற்றெடுக்கும்!

ஆனால் சீனா கிளப்பிய அலை என்று சொல்லப்படும் இந்த அலையைப் பார்த்து ரசிக்க முடியுமோ?  இப்போது மறுபடியும் 4வது அலையாம். நாங்கள் தயாராகிறோம் எல்லோரும் மாஸ்க்....இத்யாதி என்ற வழக்கமான பாட்டைப் பாடி கர்நாடகா அரசு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. 

அலை என்றாலே கொரோனா என்று தோன்றத் தொடங்கிவிடுமோ என்ற கவலை. சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ன்ற சொல்தான் ரொம்பப் பிராபல்யமாச்சே இப்போது! (கூகுள் மேப்ஸ் செய்தி கூட வைரலாம்!!) கொரோனா வைரலாகி வருகிறது என்றால் பொருந்திப் போகாதோ! எதுக்கு அலைன்னுட்டு?! ஆனால் இந்த ‘வைரல்’ ‘லைக்குகள்’ அள்ளாதே!

ஜூன், ஜூலையில் 4வது பரவல் தொடங்கும் என்று எச்சரிக்கை வந்துகொண்டிருக்கிறது. 8 நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறதாமே! மற்றொரு செய்தி ஆகஸ்டில் என்று சொல்கிறது. தில்லி, ஹரியானாவில் இப்போதே கூடுகிறது என்றும் செய்திகள் மூலம் தெரிகின்றது. இந்தப் புதுசு எப்படி இருக்குமோ?

திருவனந்தபுரத்தில் இருக்கும் என் தங்கையின் கணவரின் 60து ஜூன் மாதத்தில்.  தற்போது தங்கையின் மகள் சென்னையில் இருப்பதால் - நானும் தங்கை மகளும் கலந்து பேசிக் கொண்டு - சென்னையில்தான் ஏற்பாடு செய்திருக்கிறாள். வீட்டளவில். குறைவான எண்ணிக்கையில் அதிகபட்சம் 20 பேருக்குள்.

நானும் அப்பாவும் செல்ல நினைத்திருக்கிறோம். ஆனால், இப்போது என்ன ஆகுமோ என்று அறியாத நிலையில். பரவல் இருந்தால் அப்பாவை அழைத்துச் செல்வது சிரமம். ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் என்ற வடிவேலு டயலாக் செல்லுபடியாகாது!

கடல் அலையே வா வா எம்மைத் தழுவிக் கொள் என்று கவிபாடலாம் ஆனால் இந்த அலையோ? கரைக்கு வரும் முன்னரே நம்மைத் தழுவ விடாமல் பார்த்துக் கொள்வோம்!  நேற்று இன்று நாளை எப்போதும் எக்காலத்திற்கும் பொருத்தமாய்....பாரதியின் ...

"நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி

நலத்தை நமக்கிழைப் பாள்;

அல்லது நீங்கும்"என் றேயுலகேழும்

அறைந்திடு வாய் முரசே!


------கீதா 

30 கருத்துகள்:

  1. முதல் படம் பார்த்ததும் கிராமப்புறத்தில் வீடுகளுக்கு முன்னாள் வரிசையாகக் காணப்படும் வேல்மாவுக்கு கோலங்கள் நினைவுக்கு வந்தன.  அப்புற படிக்கும்போதுதான் விஷயம் தெரிகிறது!  இதுபோல வேறு சில விவரங்களும் (மேலேயிருந்து பார்த்தல் தெரிகிறமாதிரி) பழங்காலத்திலேயே (மயன் காலம்?) இருந்ததாகப் படித்த நினைவு லேசாக இருக்கிறது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் எனக்கும் கோலமாவு (கோகிலா - கோலமாவு கோகிலா வந்த பிறகு என் பெயர் எங்கள் வீட்டு வட்டத்தில் கோலமாவு கோகிலா!! ஹிஹிஹி வேறு ஒன்றுமில்லை எல்லா நிகழ்வுகளுக்கும் எனக்குத்தான் கோலம் போடும் பொறுப்பு கொடுப்பாங்க! அதுவும் அரிசி மாவில் மட்டுமே போடுவேன் என்பதால்) கோலம் போலத் தோன்றியது. படத்தின் கீழ் சொல்ல விட்டுப் போச்சு. இப்படி விட்டவை இருக்கு....

      மயன் குமரிக்கண்டம்னு சொல்லப்படுவதுண்டு. மயன் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது நானும் அறிந்திருக்கிறேன். ஆனால் வாசித்தது நினைவுக்கு வரவில்லை...விட்டுப் போச்சு!!! சொல்ல ஹிஹிஹி. அதான் இப்போதெல்லாம் பதிவு போட சிரமமாகவே இருக்கிறதுதான். மற்றொன்று பெரிதாகிவிடுமோ என்ற ஒரு தயக்கத்தோடு எழுதுவதால் அதை சரியாகத் தொதுத்துச் சொல்ல நிறைய விட்டுப் போகிறது.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  2. நம்மூரில் கூகுள் மேப் படுத்தும்பாடு தனி! அதை ஒரேயடியாக நம்பிப் போனால் கதை கந்தல்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்.

      இது வழிக்காட்டி என்பதோடு வேறு பல இப்படியான நல்லதும் உண்டாமே ஆராய்ச்சியாளர்களுக்கு!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. இப்போதெல்லாம் கவிதைகள் பொங்குவதில்லை.  அலுப்புதான் பொங்குகிறது கீதா!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹஹாஹா புரிகிறது, ஸ்ரீராம்.

      எனக்குமே! அதை விரட்டியடிக்கத்தான் இப்படி ஏதேனும் கொஞ்சம் போட்டு மெதுவாக அதிலிருந்து மீள...

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. நான்காவது அலைக்கு பஞ்சாங்கம் பார்த்து ஜூன் 22 என்று தேதி குறித்திருந்தார்கள்!  அது எப்படிக் குறித்தார்களோ!  தில்லியில் 500 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்று நேற்றைய செய்தித்தாள் சொன்னது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஆச்சரியம் இப்படித் தேதி குறிப்பது இல்லையா?

      //அது எப்படிக் குறித்தார்களோ!//

      அதானே!

      தில்லி இப்ப ரேஸ்ல...நானும் பார்க்கிறேன். வீட்டில் நிகழ்வுகள் வருகிறதே!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. இரண்டாவது சில்லுக்கு படம் சேர்க்க நினைத்து விட்டுப்போச்சோ...  ஒரு சந்தேகம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி ஆமாம் கரீக்டு! கடல் அலை படம் போட வேண்டும் என்று நினைத்து பெரிய எக்ஸ்டெர்னல் மாக்ஸ்டர் ஹார்ட் டிஸ்கை இணைத்துப் பார்த்தால் கணினியில் யுஎஸ்பி பிரச்சனை போலும் சரியாக ரெக்கக்னைஸ் ஆகலை. முயற்சி செய்து செய்து.....அப்புறம் மறந்து போய் ஷெட்யூல் செஞ்சதுவெளியாகியும் விட்டது!! நிறையபயணப் படங்கள் அதில் தான் இருக்கின்றன! குறிப்பாக விசாகப்பட்டினப் படங்கள் எல்லாம். அதனால்தான் போட முடியாமல் தாமதமாகிறது!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. சீனப் பெருஞ்சுவர் எழுத்துக்கள் விஷயம் முன்பே படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பானுக்கா முன்னரே வந்திருந்தது என்பதும் இதை வாசித்த போது அறிந்தேன்

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  7. தலைப்பு புரியவில்லை. அது என்ன சில்லு சில்லாய். தேங்காய் சில்லா?

    கேரளாவில் இருப்பதாக நினைப்பா ? சேர்மன் மாவோ புகழ் பாடுகிறீர்கள். வித்யாசமான பதிவு. ​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஜெகே அண்ணா சில்லு சில்லாய் என்றால் = டிட் பிட்ஸ் என்றும் சொல்லலாமே. சின்ன செய்தி, சில கருத்துகள், சிந்தனைச் சிதறல்கள் தொகுப்பு என்று சொல்வதைத்தான்....ஆரம்பத்தில் தில்லைஅகத்து அரட்டை என்று நானும் துளசியும் பேசுவது போல அவர் கொடுக்கும் கேரளத்துச் செய்திகள், உலகச் செய்திகள், நான் அறிந்த மற்ற செய்திகள் என்று போட்டதுண்டு. ஹலோ ஹலோ என்றும் கூடப் போட்டதுண்டு.....அதை இப்போது இப்படி

      கேரளாவில் இருப்பதாக நினைப்பா?//

      ஹாஹாஹாஹா....மாவோஇஸம் என்பதால் சொல்கிறீர்கள்!! நான் எங்கு புகழைப் பாடினேன். செய்தியில் சொல்லப்பட்டிருப்பதைச் சொன்னேன்!

      ஆனால் பொருளாதாரத்தில் மாவோஇஸம் படித்திருக்கிறேன். அவர் வித்தியாசமான சிந்தனையாளர். அவர் கொள்கைகள் சீனாவை பஞ்சத்திற்குள்ளாக்கியதும் தெரியும்.

      மிக்க நன்றி ஜெகே அண்ணா

      கீதா

      நீக்கு
  8. எங்கேப்பா கில்லர்ஜி... பொருள் சொல்லுப்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....கில்லர்ஜியைக் காணவில்லையே என்று நானும் தேடுகிறேன்!!

      நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  9. முற்றிலும் புதிய செய்திகள். நாங்கள் இந்த கூகிள் மாப்பை எல்லாம் பார்ப்பதே இல்லை. பையர் இருந்தால் அவர் பயணத்தின் போது கூகிள் மாப்பிலேயே ஆழ்ந்து போயிடுவார். பல அரிய தகவல்களைச் சொல்லி இருக்கீங்க. சீனப் பெருஞ்சுவர் பற்றிய தகவல் புதிது. படமும் மேலே இருந்து பார்த்தது என்பது புரிந்தது. இது போலவே மயன் காலப் படங்களும் காணக் கிடைக்குது. அம்பேரிக்காவில் அரிசோனாவிலோ என்னமோ தெரியலை, ஒரு இடத்தில் ஶ்ரீசக்கரம் இப்படித் தெரிவதாகச் சொல்லுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதாக்கா. கூகுள் மேப்ஸ் வழி காட்டி என்பதைத் தவிர அதில் கிரகங்களை உற்று நோக்கலாமாம்.

      நம் வீட்டில் நான் வண்டி (2,4) ஓட்டிக் கொண்டிருந்த காலத்திலும் கூட நான் வீட்டிலேயே வழி எல்லாம் நோட் செய்து கொண்டு கிளம்புவேன். வெகு தூரம் ஓட்டினாலும் கூட.

      உங்க பையர் போல நம் வீட்டிலும் கூகுள் மேப் மகன் பயன்படுத்துவதுண்டு.

      ஆமாம் அக்கா ஸ்ரீசக்கரம் ஒரெகானில் தெரிவதாகச் சொல்லப்பட்டது அதுவும் ஃப்ளைட்டில் இருந்து பார்த்தப்ப என்று.

      //மயன் காலப் படங்களும் காணக் கிடைக்குது.//

      இன்றுதான் நெட்டில் பார்த்தேன்...ஸ்ரீராம் சொன்னதும் நினைவுக்கு வந்து பார்த்தேன். கொஞ்சம் தான்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  10. அன்பின் கீதாமா,
    என்றும் நலமுடன் இருங்கள்.
    மிகச் சுவையான சில்லுகள். நான் கணினி சிப்ஸ் என்று
    அர்த்தம் கொண்டேன்.
    சீன எழுத்துகள் பற்றி இப்போதுதான் தெரியும். மிக நன்றி மா.

    வைரஸ் பரவுகிறதா ஆஆஆஆஆஆஆ.
    என்னப்பா சென்னை வருவதா வேண்டாமா:(

    ரொம்பக் கஷ்டம் கொடுக்கிறது இந்த அலை.
    குழந்தைகளும் நானும் மிக ஆர்வமாக
    இருந்தோம்:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ சில்லுகள் அந்த அர்த்தமும் உண்டு இல்லையா...

      சீன எழுத்து ஒபாமா அவரின் மனைவி வந்த போதே விஷயம் வந்ததாம். எனக்குத் தெரியவில்லை இப்போதுதான் அறிகிறேன்.

      வைரஸ் பரவுகிறது என்று சொல்கிறார்கள். 4வது என்று. என் மாமா/அத்தை மகன் அமெரிக்காவில் இருக்கிறான். அவன் பையனுக்குப் பூணூல் போடுவது வேறு ஜூனில் வைத்திருக்கிறான் சென்னையில். அவர்களும் வருவதாக இருக்கிறார்கள்.

      அம்மா ஒன்றும் பெரிதாக இருக்காது அம்மா நல்லதை நினைப்போம். எல்லாம்நல்லடபடியாக நடக்கும்.

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  11. நல்ல தகவல்கள் தரும் பதிவுத்தொடர்...

    நமது கூகுளை கேட்டு ஆண்டிப்பட்டிக்கு போனபோது அது இறுதியில் பாக்கிஸ்தான் எல்லையில் கொண்டு போய் நிறுத்தி விட்டது.

    அபுதாபியில் இருந்தபோது சீன மொழி பழகி விட்டுதான் கேன்ஷலில் போவேன் என்று வைராக்கியம் இருந்தது.

    ஆனால் திடீரென்று இப்படி வருவேன் என்று நினைக்கவேயில்லை அந்த முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது கூகுளை கேட்டு ஆண்டிப்பட்டிக்கு போனபோது அது இறுதியில் பாக்கிஸ்தான் எல்லையில் கொண்டு போய் நிறுத்தி விட்டது.//

      ஹாஹாஹாஹாஹா கில்லர்ஜி நீங்க உருது கலந்த ஹிந்தி பேசி ஜனகணமன பாடி சல்யூட் வைச்சுட்டு வந்திருப்பீங்களே!!

      அபுதாபியில் இருந்தபோது சீன மொழி பழகி விட்டுதான் கேன்ஷலில் போவேன் என்று வைராக்கியம் இருந்தது.//

      அட! ச்சே கஷ்டம்தான் கில்லர்ஜி. இப்பவும் நீங்கள் படித்துவிடலாமே ஜி உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தால். இங்கு வந்தும் நான் இன்னும் கன்னடம் கற்காமல் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது சீரியஸாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பேசுவதற்கேனும் என்று.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  12. டிட் பிட்ஸ் சின்ன செய்தி, சில கருத்துகள், சிந்தனைச் சிதறல்கள் தொகுப்பு அருமை.

    கூகுளில் உலகத்தை பார்ப்பது என் கணவருக்கு பிடித்த பொழுது போக்கு. மகன், வீடு எங்கள் வீடு, மகள் வீடு எல்லாம் இருக்கும் இடத்தை காட்டுவார்கள்.

    சீனப் பெருஞ்சுவர் எழுத்து செய்தி அருமை. சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணி, அதில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் முன்பு படித்தேன். மங்கோலியர் படையெடுப்பை தடுக்க பல ஆண்டுகள் கட்டபட்ட சுவர் அதில் இருக்கிறது எண்ணற்ற கண்ணீர் கதைகள்.

    பதிவு நிறைய படித்த செய்திகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
    தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  13. கூகுளில் உலகத்தை பார்ப்பது என் கணவருக்கு பிடித்த பொழுது போக்கு. மகன், வீடு எங்கள் வீடு, மகள் வீடு எல்லாம் இருக்கும் இடத்தை காட்டுவார்கள்.//

    ஆஹா! ஆமாம் அக்கா நானும் கூட சிலது அவ்வப்போது பார்ப்பதுண்டு. ரொம்பப் பிடிக்கும்.

    //சீனப் பெருஞ்சுவர் எழுத்து செய்தி அருமை. சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணி, அதில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் முன்பு படித்தேன். மங்கோலியர் படையெடுப்பை தடுக்க பல ஆண்டுகள் கட்டபட்ட சுவர் அதில் இருக்கிறது எண்ணற்ற கண்ணீர் கதைகள்.//

    ஆமாம் அக்கா அது இப்போது இவ்வளவு புகழ்பெற்று இருபப்தன் பின்னணியில் எவ்வளவு துயரங்கள். நம் நாட்டிலும் கூடச் சில புகழ்பெற்றவற்றின் பின்னில் இப்படியான நிகழ்வுகள் உண்டு இல்லையா..

    மிக்க நன்றி கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரி

    நல்ல விபரமாக அருமையான செய்திகளை சொல்லியுள்ளீர்கள். தாங்கள் கூறுவது போல சீன எழுத்துக்கள் ஒரு கோலம் போலத்தான் உள்ளது. கூகுள் மேப் எங்கள் வீட்டிலும் குழந்தைகள் கணினியில் பார்ப்பார்கள். இப்போது ஒலா வில் செல்லும் போதும் அவரவர் கைப்பேசியில் செல்லும் வழியை ரசித்தவாறு செல்லவும் பயன்படுகிறது.

    முதல் செய்தியையும், இரண்டாவது செய்தியையும் இணைத்துக் கூறியிருப்பது சிறப்பு.

    /அலை என்றாலே கொரோனா என்று தோன்றத் தொடங்கிவிடுமோ என்ற கவலை./

    உண்மை. அந்த அழகான, கவித்துவமாக ரசிக்கும்படியான கடல் அலையும் சமயத்தில் மனதில் வக்கிரத்துடன் உக்கிரம் அதிகமாகி,மனித உயிர்களை சுனாமி என்ற பெயரில் வாரி சுருட்டிக் கொண்டு செல்கிறதை பார்க்கும் போது, இதற்கும் அந்தப் பெயரையே வைத்து விட்டார்கள் போலிருக்கிறது.

    நானும் கொரோனா வந்த புதிதில் இதைப்பற்றி ஒரு பதிவு எழுதி அப்படியே டிராப்டில் வைத்திருக்கிறேன். வெளியிடும் எண்ணம் வரும் நேரத்தில் அலைகள் அமைதியாகி அழகானதாக காட்சியளிக்கும்.. மீண்டும் தீடிரென பேரலைகள் வந்து,வந்து போவதில், அப்பதிவை பற்றிய எண்ணமே மறந்து விட்டது.

    நீங்கள் படித்து தெரிந்து கொண்டதை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளீர்கள். கன்னடம் கற்று கொள்வதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் திறமைகள் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இது போல பல பயனுள்ள செய்திகளை தொடர்ந்து தாருங்கள். படித்து தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் கூறுவது போல சீன எழுத்துக்கள் ஒரு கோலம் போலத்தான் உள்ளது. //

      ஹாஹா ஸ்ரீராம் தான் நினைவு படுத்தினார் நான் சொல்ல விட்டுப் போச்சு!!!

      //உண்மை. அந்த அழகான, கவித்துவமாக ரசிக்கும்படியான கடல் அலையும் சமயத்தில் மனதில் வக்கிரத்துடன் உக்கிரம் அதிகமாகி,மனித உயிர்களை சுனாமி என்ற பெயரில் வாரி சுருட்டிக் கொண்டு செல்கிறதை பார்க்கும் போது, இதற்கும் அந்தப் பெயரையே வைத்து விட்டார்கள் போலிருக்கிறது.//

      அட! இந்த உவமை அழகாகப் பொருத்தமாக இருக்கிறதே!!

      //நானும் கொரோனா வந்த புதிதில் இதைப்பற்றி ஒரு பதிவு எழுதி அப்படியே டிராப்டில் வைத்திருக்கிறேன். வெளியிடும் எண்ணம் வரும் நேரத்தில் அலைகள் அமைதியாகி அழகானதாக காட்சியளிக்கும்.. மீண்டும் தீடிரென பேரலைகள் வந்து,வந்து போவதில், அப்பதிவை பற்றிய எண்ணமே மறந்து விட்டது.//

      இப்பவும் நாட் டூ லேட் போடலாம் கமலாக்கா ட்ராஃப்டில் உள்ளதைப் போடுங்க...

      மிக்க நன்றி கமலாக்கா...

      கீதா

      நீக்கு
  15. கூகுள் மேப்ஸ் செயல்படும் விதம் குறித்து சொல்லியுள்ளீர்கள். நன்றி! ஆனால் இது செயல்படும் விதம் குறித்து மேலும் பல சந்தேகங்கள் உள்ளன. கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூகுள் மேப்ஸ் தளம் சென்று நாம் நார்மலாகப் பார்ப்பதற்கு அப்பாற்பட்டு அறிவியல் ரீதியாகச் சிலது தெரிந்துகொள்ளலாம் என்று பார்க்க நினைத்துச் சென்றேன். ஆனால் நேரமில்லை சகோ. நீங்கள் தெரிந்து கொள்வதைப் பதிவாகப் போடுங்கள் நாஞ்சில் சிவா..

      மிக்க நன்றி நாஞ்சில் சிவா

      கீதா

      நீக்கு
  16. கூகுள் மேப்ஸ் பல சமயங்களில் நம்மை அலைய விடும் என்றாலும் பயணங்களில் அதிகம் நான் பயன்படுத்துவது உண்டு. சீனப் பெருஞ் சுவர் எழுத்துகள் குறித்த தகவல்கள் முன்னரே படித்ததுண்டு. மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

    அலை ...... என்ன சொல்வது? எனக்கும் மே - ஜூன் சில பயணங்கள் உண்டு - நிகழ்வுகளில் கலந்து கொள்ள தமிழகம் வர வேண்டும். தில்லியில் தாக்கம் அதிகரித்து வருகிறது. வீரியமிக்க அலையா என்பது போகப் போகத் தெரியும். Keeping fingers crossed......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பயன்படுத்துவதுண்டு. அதுவும் தனியாகச் செல்லும் போது இடங்கள் தெரிந்து கொள்ள,

      //சீனப் பெருஞ் சுவர் எழுத்துகள் குறித்த தகவல்கள் முன்னரே படித்ததுண்டு. //

      ஆம் முன்னரே வந்தது என்று நானும் தெரிந்து கொண்டேன்.

      ஓ உங்களுக்கும் பயணம் இருக்கிறதா...ஆமாம் அலை எப்படி என்பது போகப் போகத்தான் தெரியும் என்று தோன்றுகிறது. மீண்டும் மாஸ்க் கண்டிப்பாகப் போட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே.

      எனக்கும் நிகழ்வுகள் இருக்கிறது. நானும் அதே Keeping fingers crossed......

      மிக்க நன்றி வெங்கட்ஜி!

      கீதா

      நீக்கு