வெள்ளி, 9 செப்டம்பர், 2016

செயின்ட் த க்ரேட் குறும்பட அனுபவங்கள்

இம்முறை குறும்படத்தின் வேலைகளின் தொடக்கமே சற்று பரபரப்புடன் தான் தொடங்கியது. படப்பிடிப்பிற்கான தேதி பெரும்பாலும் ஏப்ரல்மாதம் இறுதி வாரத்தில் இருக்கும். இம்முறை, தவிர்க்க முடியாத, என் நெருங்கிய உறவினர் கல்யாணம் இருந்ததால் படப் பிடிப்புத் தேதி மே மாதம் 6, 7, 8 என்று துளசி முடிவு செய்தார். ஆங்கிலத்தில் எடுப்பதால், பெரும்பாலும் தேதி முடிவு செய்தவுடன், 2 மாதங்கள் அல்லது 1 ½ மாதத்திற்கு முன் கதை, வசனம் எழுதி முடித்து, பிரதி எடுத்து முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருக்கும் கொடுத்துவிடுவது வழக்கம்.

கொடுங்கல்லூர் பகவதி கோயில்
கொடுங்கல்லூர் கோயில் வளாகத்தில் ஒரு காட்சி படம் பிடிக்கப்பட்டது அதைச் சரி பார்க்கும் புகைப்படக் கலைஞர் மற்றும் துளசி

விவேகானந்தரின் கேரள வருகை பற்றி, குறிப்பாக அவர் கேரளத்தைப் பற்றிச் சொன்ன, “கேரளா ஒரு பிராந்தாலயம்” என்ற கருத்துதான் இக்குறும்படத்தின் மையக்கருத்து. என்றாலும் சம்பவங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றித்தான் எடுத்திருக்கிறார். (இது வரை எடுத்த வரலாறு சார்ந்தவை எல்லாம் அப்படித்தான் எடுத்துள்ளார்) அப்படித்தான் இப்படத்திலும் ஸ்வாமி சதாநந்தா.

வரலாற்று நிகழ்வுகளை இருவருமாகச் சேகரித்து, அதைப் பற்றிக் கலந்தாலோசித்துக் கதையை 10 தினங்கள் முன் தான் எழுதி முடித்தார். கதையை எழுதி முடிக்க முடியாமல் அவருக்கு வீட்டு வேலைகளின் பணி அழுத்தியது ஒருபுறம் என்றால் தேர்வுப் பணிகள் மறுபுறம். அதன் பின் கதையை எழுதி முடித்துவிட்டு என்னுடன் கலந்துரையாடினாலும், முன்பு போல் என்னால் பல திருத்தங்கள் நேரமின்மை காரணமாகச் சொல்ல இயலவில்லை. எல்லோருக்கும் மின் அஞ்சல் மூலம் நான் அனுப்பிவிட விடுமுறையில் சுற்றுலா செல்ல அவர் குடும்பத்தினர் திட்டமிட்டாலும் இறுதிவரை அது நடக்குமா என்ற உறுதியின்மையும் இருந்து வந்தது. இறுதியில் துளசி தன் குடும்பத்துடன் ஏப்ரல் 29 ஆம் தேதி தில்லிப் பயணம் மேற்கொண்டார்.

பயணம் முடிந்து ஷொர்னூர் வந்து சேர்ந்தனர். நான் சென்னையிலிருந்து ஷொர்னூர் சென்றேன். அன்றே படப்பிடிப்பு என்பதால், நான் ஏற்கனவே ரயில் நிலையத்தில் துளசியின் குடும்பத்திற்கான பயணிகள் அறை பதிவு செய்திருந்ததால், அங்குக் குளித்துவிட்டு, அன்றைய காட்சி கொடுங்கல்லூர் பகவதி அம்பலத்தில் என்பதால், படப்பிடிப்பிற்குக் கொடுங்கல்லூர் நோக்கி அக் காட்சியில் இடம் பெறுவோர் மட்டும் பயணம் செய்தோம். 2 1/2 மணி நேரப் பயணம்.

எனக்கு இப்படத்தில், ஸ்வாமியைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதுவதற்கானத் தகவல்களைத் திரட்டும் எழுத்தாளராக, பாலமீனாட்சி எனும் கதாபாத்திரம். முதலில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த என்னை துளசி சம்மதிக்க வைத்துவிட்டார். வேறு வழியில்லை. பள்ளி, கல்லூரியில் எவ்வளவோ நாடகங்கள், போட்டிகளில் கலந்து கொண்டிருந்தாலும் ஒளிப்படக் கருவி முன் நிற்பது, அதுவும் 30 வருடங்களுக்குப் பிறகு, இதுவே முதல் முறை. எப்படியோ சமாளித்துவிட்டேன். (அப்படினா, உங்கள் கல்யாணத்தில் வீடியோ முன் நிற்கவில்லையா? என்று ஸ்ரீராம் கேட்பது கேட்கிறது. என் கல்யாணத்தில் வீடியோ கிடையாது. எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டேன்! சரி போகட்டும், நீங்கள் கல்யாணங்களில் எடுக்கப்படும் வீடியோவின் முன்? என்று அடுத்த கொக்கி போடுகிறார்கள் இரண்டுத் தமிழன்கள்-மதுரை மட்டும் நெல்லை…!!!)
குறும்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த நண்பர் ஆவியின் ஒப்பனையைப் பார்வையிடும் துளசி - கூடவே ஒப்பனைக் கலைஞர்கள் தாஸ் சேட்டன், சந்திரன் சேட்டன் (கண்ணாடி அணிந்திருப்பவர்)
மருத்துவராக, பல வருடங்களுக்கு முன் துளசி முதலில் வேலை பார்த்த க்ளாசிக் கல்லூரியின் முதல்வர் சோனி சார், ,  மற்றும் உதவி ஒப்பனைக் கலைஞர் திரு சந்திரன் சேட்டன்


சுகப்பா கதாபாத்திரத்தில் நடித்த நண்பர் குடந்தை ஆர் வி சரவணன் மற்றும் ஒப்பனைக் கலைஞர் தாஸேட்டன். (முகம் மறைந்து விட்டது.

பங்களூரில் நம் நண்பரும் மூத்த பதிவருமான ஜிஎம்பி சாரின் வீட்டிலும் படப்படிப்பு நடந்தது. ஜிஎம்பி சாருக்கு மருத்துவரின் கொள்ளுப்பேரன் கதாபாத்திரம். அன்று அவர்கள் வீட்டில் நல்ல மதிய உணவு. அன்பான விருந்தோம்பல். சாருக்கும், அம்மாவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

துளசியின் பெரியப்பா மகன்-துளசியின் சகோதரருக்கு, சுகப்பாவின் கொள்ளுப் பேரன் கதாபாத்திரம். அவர்கள் வீட்டில் தான் நாங்கள் தங்கியிருந்தோம். படப்பிடிப்பும் அங்குதான். சரி நான் எழுதுவதை விட குறுந்திரைக்குப் பின்னான காட்சிகள் சுவாரஸ்யம்தானே! என் கேமராவில் க்ளிக்கியவை….
திருநள்ளாயி அக்ரஹாரம், பாலக்காடு இங்கு சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன

அக்ரஹாரத்தில் வீடுகள்


 அழகான வேலைப்பாடுடன் கூடிய தூண்கள்


ஒளிப்பதிவாளர் பிஜு - துளசியின் சகோதரியின் மகன்
கீழே உள்ள படங்களில்.....படத்திற்கான வசனங்களைப் படிக்கும் மாணவர்கள்!!! பரீட்சைக்குப் படிப்பது போல!!!
 ஆசிரியர் பாடம் நடத்துகிறார்!!! 
 ஆவியும் அவரது அத்தை பையனும் பரீட்சைக்குக் கூட இப்படிப் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை!!!!
 இந்தப் புகைப்படத்தில் வலது புறத்தில் கண்ணாடி அணிந்திருப்பவர் திரு கோபாலகிருஷ்ணன் துளசியின் நண்பர், ஆசிரியர். அவரும் படத்தில் நடித்துள்ளார். ஒப்பனையில் திரு பாலகிருஷ்ணன் அவரும் ஆசிரியராக வேலை செய்தவர். 
ஆசிரியரும் மனனம் செய்கிறார்!!!!
ஒப்பனை
 ஒப்பனைக் கலைஞர் சந்திரன் சேட்டன் - இவர் உதவியாளர்
ஒப்பனைக் கலைஞர் தாஸ் சேட்டன் - இவர்தான் துளசியின் படங்களுக்கு ஆஸ்தான ஒப்பனைக் கலைஞர் தமிழ் ஓரளவு பேசுவார்.

கொடுங்கல்லூர் காட்சிகள் சில அஞ்சு மூர்த்திக் கோயில், ஆனிக்கோடு, மாத்தூர் அருகில் படம் பிடிக்கப்பட்டது, அங்கிருந்த ஆற்றங்கரையில் எடுத்த சில இயற்கைக் காட்சிகள்










ஜிஎம்பி சார் வீட்டு அபூர்வமான பூ-இதைப் பற்றி அவரது தளத்திலும் எழுதியிருந்தார். 

.....கீதா
(பங்களூரில் எடுத்த காட்சிகளை நான் எனது நிழற்படக் கருவியில் படம் பிடிக்கவில்லை. எனவே இங்கு தர இயலவில்லை.)

29 கருத்துகள்:

  1. அருமையான படங்கள். மே மாதம் துளசிதரன் ஜி தில்லி வந்திருந்தபோது நான் இங்கே வந்துவிட்டேன் என்பதால் சந்திக்க இயலவில்லை. விரைவில் சந்திக்க வேண்டும். பார்க்கலாம் எப்போது சந்தர்ப்பம் அமைகிறது என.

    சிறப்பான அனுபவங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்ஜி உங்கள் கேமராவை விடவா??!!! எனது கேமராவில் சில மட்டும்தான் நன்றாக வருகின்றன. ஜூம் பண்ணி எடுப்பது தெளிவாக வருவதில்லை...

      ஆம் துளசி உங்களைச் சந்திக்க இயலாமல் போனது.

      மிக்க நன்றி ஜி வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  2. அழகிய படங்களுடன் சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  3. எனக்கு எப்போதுமே இந்த பேக் ஸ்டேஜ்
    விஷயங்களைத் தெரிந்து கொள்வதில்
    அதிக ஆர்வம் உண்டு
    வேரைத் தெரிந்து கொள்ளல் போல
    அஸ்திவாரத்தை அறிந்து கொள்ளல் போல

    படங்களுடன் பகிர்ந்த விதம் மிக மிக அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார்! கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  4. படப்பிடிப்பின் பிண்னணி விளக்கங்கள் நல்லா இருந்தது. பாலக்காட்டில் இந்த அக்ரகாரத் தெருவைப் பார்த்த (2014) நினைவை உங்கள் பதிவு மீட்டது. இதற்கு முன்னால் செட்டிநாடு ஏரியாவில்தான் (பொன்னமராவதி பக்கம்) அக்ரஹாரம் பார்த்துள்ளேன். பாலக்காடு அக்ரஹாரம் பெரியது. பச்சரிசி மாங்காய் படம்... புதிய மாங்காய் ஊறுகாய் நினைவில் வந்துவிட்டது. படப்பிடிப்பில் சொதப்பல்கள் ஏதேனும் நடந்ததா? எல்லாம் திட்டமிட்டபடி நடந்திருப்பது கடினமாயிற்றே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லைத் தமிழன். சொதப்பல் என்றால், சுவாமியின் உடை. நான் இங்கு சென்னையிலிருந்து கொண்டுச் செல்லலாம் என்று கேட்டும் இருந்தேன். நண்பர் ஆவியும் கேட்டுக் கொண்டிருந்தார் என்னிடம். ஆனால் ஒப்பனைக் கலைஞர் தாஸேட்டன் அதனை பார்த்துக் கொள்வார் என்று துளசி சொன்னார். அதனால் நான் அதைத் தவிர பிற உடைகள் அதாவது வேட்டிகள், கோட் எல்லாம் இங்கிருந்து எடுத்துச் சென்றிருந்தேன். தாஸேட்டன் ஸ்வாமிக்கு இரு காவி துணிகள் மட்டுமே கொண்டுவந்திருந்தார். என் மனதிற்கும் நண்பர் ஆவிக்கும் அதுதான் மேஜர் சொதப்பல். மற்றபடி வழக்கமாக ஒரு படப்பிடிப்பில் நடக்கும் சொதப்பல்கள் நடக்கத்தான் செய்தன. குறிப்பாக வசனம் பேசுவது. பலருக்கும் பல டேக்குகள். ப்ராம்ப்டிங்க் நானும் கோபாலகிருஷ்ணன் சாரும் செய்தோம். பலரும் வசனத்தை வாசித்தும் பார்க்காததால்... அதனால் தாமதம். ஒரு சில கேமரா கோணங்கள். இதில் நடித்திருப்பவர்கள் எல்லோருமே நண்பர்கள், குடும்பத்தினர். வெளியாட்கள் எப்போதுமே இருப்பதில்லை.

      ச்சே உங்களை வம்பிற்கு இழுத்திருக்கிறேன்...அது குறித்து ஏதேனும் சுவாரஸ்யமாகச் சொல்லுவீர்கள் என்று பார்த்தால் எனக்கு செம பல்பு!!!!ஹும் கீதா அப்படியாவது பிரகாசமாக இருக்கிறாளா...??!!

      கீதா

      நீக்கு
  5. அருமையான படங்களுடன் பதிவு அருமைநண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ வருகைக்கும் கருத்திற்கும்

      கீதா

      நீக்கு
  6. சகோ துளசி & கீதா,

    பதிவு எங்களுக்கு(படிக்க) சுவாரசியமாய் உள்ளது. குறும்படத்தை எடுத்து முடிக்க நீங்கள் பட்ட இன்பமான துன்பம் உங்களுக்குத்தான் தெரியும். திண்ணை வைத்த அழகான வீடுகளைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது !

    படங்கள் எல்லாம் அருமை. அவ்வ்வ்வ் .... இப்படி மாங்காய் படத்தைப் போட்டு கடுப்பேத்துறீங்களே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சித்ரா ! ஆமாம் திண்ணை வைத்த வீடுகள் இன்னும் பாலக்காட்டில் கேரளத்து அக்ரஹாரங்கள்/ தமிழ்நாட்டிலும் இன்னும் கிராமங்களில் இருக்கின்றனதான்....மாங்காய் ஹஹஹஹஹ நன்றி சித்ரா ...

      நீக்கு

  7. ஆவிக்கு லிப்ஸ்டிக் போடப் பட்டதா என்று அறிய ஆவல்! இயற்கைக்கு காட்சிகள் க்ளிக் எல்லாம் அருமை. அக்ரஹாரத்து வீடுகள் அழகு. ஆவி உடையினைப் பற்றி மனதில் பட்டது. பின்னூட்டம் படித்ததும் உண்மை என்று தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹ் ஸ்ரீராம் ஆவிக்கு லிப்ஸ்டிக் போடப்பட்டது. லிப்ஸ்டிக் என்பதை விட உதட்டுச் சாயம் எனலாம்..மெய்யாகவே சாயம் தான்...

      அக்ரஹாரத்து வீடு ரொம்ப அழகாக இருந்தன.பெரிய அக்ரஹாரம் வேறு. எல்லா வீடுகளிலும் திண்ணைகள் இருந்தன. நாங்கள் எல்லோருமே அதில் அமர்ந்து படுத்து என்று அருமையான அனுபவம். அதுவும் பல வருடங்களுக்குப் பிறகு..ஹும் உங்களையும் வம்பிர்கிழுத்து எனக்குச் செம பல்பு!!
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  8. கொடுங்கல்லூர் பகவதியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளேன். உங்களது அனுபவங்களைப் பார்க்கும்போது மலைப்பாக உள்ளது. அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்திச்செல்வது என்பது மிகவும் சிரமம். உங்கள் குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். புகைப்படங்கள் மிக ரசனையாக எடுக்கப்பட்டிருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  9. கொடுங்கல்லூர் பகவதியம்மன் திருக்கோயிலில் தரிசனம் செய்துள்ளேன் ..
    பழைமை மாறாத வீடுகளையும் அழகிய இயற்கைக் காட்சிகளையும் பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  10. குறும்படம் அனுபவங்கள் மிக அருமை.
    படங்கள் மிக தெளிவு, அழகு.
    பாலசுப்பிரமணியன் சார் வீட்டில் படம்பிடிப்பு, சாரும் நடிக்கிறார்கள் என்று அறிந்து மகிழ்ச்சி.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அக்கா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  11. எல்லாம் நன்றாகவே இருந்தது புகைப்படம் எடுக்கக் கீதா தடை செய்து விட்டதால் என் வீட்டில் உங்களை எல்லாம் புகைபடத்தில் பதிய முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் நான் மீண்டும் மீண்டும் தங்களிடம் சொல்லுவது இதுதான். புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை சார். நான் அதில் வேண்டாம் என்றுதான் சொன்னேன். என்னை அவர்களுடன் எடுக்க வேண்டாம் என்றுதான் சொன்னேன் சார். நான் ஒரு பெண் என் வயது 52. ஆனாலும், என் பக்கத்தில் பிரச்சனைகள் இல்லை என்றாலும் பிறருக்கு அதனால் பிரச்சனைகள் வரக்கூடாது என்ற நடைமுறைப் பிரச்சனைகளுக்காகச் சொன்னது சார். நம் சமூதாயம் இன்னும் அந்த அளவிற்கு முன்னேறவில்லை.

      கீதா

      நீக்கு
  12. என் தளத்தில் என் பேரன் குழுவினர் எடுத்த குறும்படம் பார்க்க வில்லையா

    பதிலளிநீக்கு
  13. திரு ஜி எம் பாலசுப்ரமணியம்ம அவர்களின் நடிப்புத்திறன் உண்மையிலேயே போற்றுதலுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செல்லப்பா சார் பல நாட்களுக்குப் பின் வருகை..

      நீக்கு
  14. அருமையான படங்கள்...
    அழகாய்...
    குறும்படம் மிகச் சிறப்பாய் வந்திருந்தது....

    பதிலளிநீக்கு
  15. பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

    இன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் காங்நேச்டின் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
    அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
    நன்றி வாழ்க வளர்க
    மேலும் விவரங்களுக்கு

    Our Office Address
    Data In
    No.28,Ullavan Complex,
    Kulakarai Street,
    Namakkal.
    M.PraveenKumar MCA,
    Managing Director.
    Mobile : +91 9942673938
    Email : mpraveenkumarjobsforall@gmail.com
    Our Websites:
    amazontamil
    amazontamil

    பதிலளிநீக்கு