“கதையில்லாத்தவண்ட
கதா” (கதையில்லாதவனின்
கதை) எனும் சுய சரிதத்திற்கு அதில் கதை இருந்ததால் மட்டும், பணமோ அரசியல்
செல்வாக்கோ, அதிக சாமர்த்தியமோ (பழைய டூரிங் டாக்கீஸ்களில் முண்டியடித்து சின்ன
ஓட்டையில் கையை நுழைத்து டிக்கெட் எடுப்பது போல்) இல்லாத கவிஞரும் எழுத்தாளருமான,
எர்ணாகுளம் பரவூர் காரரும், மும்பையில் இந்தியன் ஏர்லைன்ஸில் இருந்து ஓய்வு பெற்ற M.N. பாலூருக்கு
(பாலூர் மாதவன் நம்பூதிரி) தேசிய சாகித்திய அக்காடமி விருது கிடைத்திருக்கிறது. 22
மொழிகளில் உள்ள இலக்கியப் படைப்புகளுக்கு, நேற்று (18.12.2013) சாகித்திய அக்காடமி
விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, தனக்கும் விருது கிடைத்ததை அறிந்த அவர், “விருது
கிடைத்ததில் சந்தோஷம்தான். இது போன்ற
விருதுகள் பணமும், செல்வாக்கும் உள்ளவர்களுக்குத்தான் சாதாரணமாகக் கிடைப்பது
வழக்கம். இங்கு, இது ஒன்றும் இல்லாத
எனக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.” என்றார்.
இதை வாசிக்கும் நமக்கு விளங்கியதோ ஒருவேளை அத்தி பூத்தாற் போல் சில
நேரங்களில், சில நடுவர்கள் வரும் போது, உரியவர்களுக்கு இது போன்ற விருதுகள்
கிடைக்கலாம்.. இல்லையேல் பணமும், அரசியல் செல்வாக்கும் உள்ள பலர் முயலும்
போது, ஒருவருக்குக் கொடுத்தால், மற்றவர்கள் விரோதத்திற்கு பாத்திரம் ஆக வேண்டி
இருக்கும் என்பதால், முண்டியடித்தவர்களின் படைப்புகளை எல்லாம் மூலையில் தள்ளி மூலையிலிருந்த,
1983 ல் அவர் எழுதிய “கலிகாலம்” எனும் புத்தகத்திற்கு கேரள சாசித்திய அக்காடமி
அவார்ட் கிடைக்கப்பெற்ற, “கதையில்லாத்தவண்ட” கதா தேர்ந்தெடுக்கப்பட்டதா தெரியவில்லை. எப்படியோ “கதையில்லாத்தவண்ட
கதை”க்கு பின்னால் எனென்ன கதைகள் பின்னப்பட்டாலும்,
“கதையில்லாத்தவண்ட கதை”யில்
சாகித்திய அக்கடமி விருது பெறும் அளவுக்கு உள்ள கதை இருந்திருக்கத்தான் வேண்டும்.
தங்கள் கூற்றுப்படி
பதிலளிநீக்குஇதுபோன்று அத்திப் பூத்தாற்போல
விருதுகள் எப்போதேனும்தான்
தகுதியானவர்களை அடைந்து பெருமை கொள்கிறது
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அதுவும் தென்னகத்தை வடக்கத்திக் காரர்கள் கண்டு கொள்வதே அத்திப்பூ போலத்தானே!! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும், வருகைக்கும்!!
நீக்குஅவர் சொல்வதில் உள்ள ஆதங்கம் புரிகிறது... இது போல் எத்தனையோ பேர்கள் உள்ளார்களே என்று...! ம்...
பதிலளிநீக்குM.N. பாலூர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ஆமாம்! DD அவர்களே!! இந்த ஆதங்கம் இன்னும் நிறைய தென்னகத்து எழுத்தாளர்களுகு உண்டுதான்!! உங்கள் கருத்திற்கும், வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி!!
நீக்குபாலக்காட்டில் பணி செய்கிறீர்கள். மலையாளம் கற்கும் வாய்ப்பு அமைந்ததா? அம்மொழி தெரிந்தால், கதையில்லாதவனின் கதையைப் படித்து அதன் சுருக்கத்தையோ சிறு விமர்சனத்தையோ நீங்கள் பதிவிடலாமே? கட்டாயமில்லை.
பதிலளிநீக்குஎனது தாய்மொழி மலையாளம்தான் என்றாலும், நான் பிறந்தது தேனி அருகே உள்ள கிராமத்தில், வளர்ந்தது, என் படிப்பு, முதுகலைப் படிப்பு வரை எல்லாம் தமிழ்நாட்டில்தான். அதன் பின்னர்தான் கேரளாவில் (18 வருடங்களாக), மலப்புரம் நிலம்பூர் அருகே குடும்பம். பணி பாலக்காட்டில், மலையாளம் வாசிக்கவும், எழுதவும் படிக்கவும் தெரியும் என்றாலும் ஒரு நாவல்/இலக்கியம் வாசித்து விமர்சனமோ கதைச் சுருக்கமோ எழுதும் அளவு மலையாளத்தில் புலமை இல்லை! இருந்தாலும் தாங்கள் விரும்புவதால், முயற்சி செய்கிறேன். இது சாகித்ய அகாடமி விருது பெற்றிருப்பதால், ஒருவேளை தமிழிலும் மொழி பெயர்க்கப்படலாம். தங்கள் ஆர்வத்தை பூர்த்தி செய்ய முடிகிறதா என்று முயற்சி செய்கிறேன்!!
நீக்குநன்றி!
நன்றி!
பதிலளிநீக்குஇந்த சந்தர்ப்பதிற்காக காத்திருக்கும் பலருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு சந்தர்பம்
பதிலளிநீக்குகிட்டினால் எப்படி இருக்கும் ?..!¨நானு என்னையும் சேர்த்துத் தான் சிந்தித்தேன் அருமைச்
சகோதரா :))))))))
தகுதியானவர்களை அடைவது ஆச்சரியமான ஒன்று தான்.
பதிலளிநீக்கு