பரோல் - மம்முட்டி நடித்த புதிய மலையாளப்படம். துரதிர்ஷ்டவசமாக நிகழும் சம்பவங்களினால் சிறைக்குச்
செல்லும் அலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மம்முட்டி. சிறையில் சக கைதிகளாலும், அதிகாரிகளாலும்
நேசிக்கப்படும் மிக நல்ல உள்ளம் கொண்ட அலெக்ஸை அவரது மகன் வெறுக்கிறான். அலெக்ஸ்
சிறைக்கு வரக் காரணம் என்ன என்ற மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டிய கட்டாயத்தில்
அவர் பரோலில் வெளியே வந்து எப்படி தன் உறவினர், சுற்றத்தினரை எதிர்கொண்டு முடிச்சுகளை
அவிழ்க்கிறார் என்பதுதான் கதை என்று சொல்லப்படுகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்
கொண்ட படம் என்றும் சொல்லப்படுகிறது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை.
சரி
அப்படியானால் எதற்கு இதைப் பற்றி? வேறு ஒன்றுமில்லை. இப்படி மெகா ஸ்டார் மம்முட்டியின்
படத்தைச் சொல்லி, சிறு இடைவெளியில் 6 வருடங்களுக்கு முன், உண்மைச் சம்பவத்தின்
அடிப்படையில், சாமானியனான நான் எங்கள் குழுவின் உதவியுடன் எடுத்த பரோல் எனும் குறும்படத்தைப் பற்றியும் (இங்கு
முன்பு சொல்லியிருந்தாலும்) இப்போது இங்குச் சொல்லி, பார்க்காதவர்கள் பார்க்கலாமே என்ற ஒரு
சிறு விளம்பரத்திற்காக என்றும் சொல்லிக் கொள்ளலாம்!
எனது
குறும்படத்தில் சொல்ல முயற்சி செய்திருப்பது இதுதான். நொடிப் பொழுதில் குற்றம் புரிந்துவிட்டுப்
பின்னர் அதற்காக வருந்தி, உறக்கத்தைத் தொலைத்து தவிக்கிறார்கள் பெரும்பான்மையான கைதிகள்.
செய்த குற்றத்தினால் அவர்களின் மனசாட்சி அவர்களை வதைத்துவிடுகிறது. சிறைத் தண்டனையை
விட அவர்களின் மனசாட்சி அவர்களின் உறக்கத்தைப் பரித்து அவர்களை வதைப்பது மிகப் பெரிய
தண்டனையே. இதைப் பெரும்பான்மையான கொலையாளிகள் தங்கள் சக கைதிகளிடம் சொல்லி அரற்றுவார்கள்
என்பதையும் கேட்டதுண்டு. குற்றம் புரிந்த நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்!
அப்படித்
தாங்கள் செய்த தவற்றை நினைத்து மருகி, திருந்தி வருபவர்களை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்வதில்லைதான்.
மாற்றுத் திறனாளிகளையும், மனநோயாளிகளையும் கண்டு இரக்கப்படும் நாம், ஒரு சில நொடித்துளிகளில்
உணர்ச்சிவசப்பட்டுக் குற்றம் இழைத்துச் சிறைக்குச் சென்று அப்புறம் வருந்தித் திருந்தி
வெளியில் வந்தாலும் அவர்களின் மீதான நம் பார்வை வித்தியாசமாகத்தான் இருக்கிறது. நாம்
அவர்களை ஏற்கத் தயங்கத்தான் செய்கிறோம். இவர்களும் ஒரு வகையில் மன ஊனம் அடைந்தவர்கள்தாம்.
உடலில்
ஏற்படும் நோய் குணமாக நாம் அதற்கான காலம் கொடுத்து அந்நோயைக் குணப்படுத்துவது போல நொடியில்
உணர்ச்சிகள் பிறழ்வதால் மனதில் ஏற்படும் இவ்வகையான
ஊனம் குணமாக அவகாசம் கொடுப்பதில்லை. அவர்கள் திருந்தி, அவர்களுக்கு உரிய தண்டனையை அனுபவித்த
பிறகு அக்காலம் முடிந்து வெளியில் வரும் போது குடும்பத்தாரும், சுற்றத்தாரும் ஏற்றுக்
கொண்டு நல்வழிப்படுத்தி அவர்களும் இச்சமூகத்தில் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்திட உதவிடலாமே.
அவர்களும் இச்சமூகத்தில் வாழ்வதற்கான உரிமை உண்டுதானே! அவர்களது வாழ்க்கையிலும் வெளிச்சத்தை
இச்சமூகம் கொண்டுவரவேண்டும் என்பதே படத்தின் கரு.
20 நிமிடப் படம் தான். ஆனால் இரு பாகமாக இருக்கிறது. தங்களது மேலான கருத்துகளை வரவேற்கிறேன்.இதோ படத்திற்கான காணொளிகள். மிக்க நன்றி.
எல்லோருக்கும் எங்கள் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிவை படித்துவிட்டேன் குறுமபடத்தை மீண்டும் வந்து பார்க்கிறேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி மதுரை தமிழன் எப்போ டைம் கிடைக்குதோ அப்போது பாருங்கள்.
நீக்குஆஹா இன்று நாந்தான் பர்ஸ்ட்
பதிலளிநீக்குநீங்கதான் ஃபர்ஸ்ட் வந்திருக்கீங்க மதுரை ஆனால் நான் தான் கருத்து கொடுக்க லேட்.
நீக்குஇங்கே மதியம் மூன்று மணி இந்தியாவில் அடுத்தநாள் 12 .33 am ஆகிவிட்டது.. அதனால குட்மார்னிங்க் சொல்லனுமா அல்லது குட்நைட் சொல்லனுமா? அப்பா ஒரே குழப்பாமா இருக்க்கே சரி சரி நயகராவில் போய் ஒரு ஸ்விம் பண்ணிட்டு வந்து குடமாரிங்கோ அல்லது குட்நைட்டோ சொல்லுறேன்
பதிலளிநீக்கு12.33 ஆகிவிட்டதென்றால் குட்மார்னிங்க்தானே சொல்லனும். ஆனால் நான் பெரும்பாலும் இந்த நேரத்தில் தான் படுக்கச் செல்வதாகிவிடுகிறது. எனவே நீங்கள் குட்மார்னிங்க், குட்னைட் ரெண்டும் சொல்லலாம். நயகராவில் ஸ்விம் செய்தீர்களோ?!! இப்போதும் நயகரா குளிராகத்தானே இருக்கும் இல்லையா
நீக்குதவறு செய்யாதவர் மனிதர் இல்லையே.. அதனால அவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாவது வழங்கப்பட வேண்டும்..
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஆமாம் அதிரா. தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. தங்களுக்கும் தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குகுறும்படம் பார்த்தேன் .ஒரே ஒரு குறை உரையாடல்கள் சில இடங்களில் வரும்போது பின்னணி இசை ஓவர்டேக் செய்யுது .அருமையான கான்செப்ட் .
பதிலளிநீக்குஏஞ்சல் சகோதரி மிக்க நன்றி. ஆமாம் அந்தக் குறைபாடு இருக்கிறது. இது இரண்டாவது படம். இதிலிருந்தும் சில தவறுகள் கற்றுக் கொண்டேன். இருந்தாலும் பல சமயங்களில் நமக்கு எடிட்டிங்க் சவுண்ட் ரெக்கார்டிங்க் செய்யும் நபர்கள் சரியாக அமைவது கடினமாகவும் நமது நேரமும் அவர் நேரமும் ஒத்துவராமலும் ஆகிவிடுகிறது. என்று பல...அதற்கு பின் எடுத்தவற்றில் ஓரளவு நன்றாக வந்தது...
நீக்குமனசாட்சி தெய்வத்தின் சாட்சி சகோதர பாசம் இதெல்லாம் மன வக்கிரம் பிடிச்சவங்ககிட்ட்ருந்து எதிர்பார்க்கமுடியாது மகளை இழந்த தந்தையின் ஆவேசம் நியாயமானதே .
பதிலளிநீக்குஷோபா சக்தியின் கதை ஒன்றில் சொந்த மகளை வன்புணர்வு செய்து கர்ப்பமாகிய ஒரு குடும்பத்தலைவன் ஜெயிலில் இருந்து வீட்டுக்கு வருவான் எல்லாரும் காறி உமிழ்வார்கள் ஆனால் அவனது பக்கத்துவீட்டுக்கார ஜெர்மன் பெண்மணி அவனை நலம் விசாரிப்பார் அன்போடு .
ஏற்கனவே குற்றஉணர்வில் இருப்பவரை இன்னும் குத்திகிளறுவது தவறு .
குரோதம் கோபம் அன்பு பாசம் காமம் எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் இருக்கணும் இல்லைனா மனுஷன் அரக்கனாகிடுவான் .மிருகம்னு சொல்ல மனம் வரலை
ஆமாம் சகோ ஏஞ்சல். இவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராமல் போனல் மனிதன் மிருகம்தான்...ஆனால் பலருக்கும் அந்த நொடிப் பொழுதில் கட்டுப்பாட்டை இழப்பதால் நேரும் துன்பங்கள்...மிருகம் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று தெரியும்.
நீக்குமிக்க நன்றி விரிவான நல்ல கருத்திற்கு
இனிய விஷு மற்றும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ ஏஞ்சல் வாழ்த்திற்கு...நான் தான் நன்றி சொல்ல கொஞ்சம் தாமதமாகிவிட்டது..
நீக்குசித்திரைத் திருநாள் வாழ்த்துகள். தொடர்ந்து காணொளிகள் பார்த்தால் என் கணினி டயர்ட் ஆகி ஒரு அலறலுடன் ஆஃ ப் ஆகி விடுகிறது. ராம் எடுத்து ஊதி, துடைத்துப் போட்டுப் பார்த்துவிட்டேன். ஹிஸ்டரி டெலிட் செய்துபார்த்து விட்டேன். வைரஸ் ரன் பண்ணிப்பார்த்து விட்டேன்... ஊ.....ஹூம்! பின்னர்தான் குறும்படம் காணவேண்டும்.
பதிலளிநீக்குஇது "பாஸ்" செய்த சதியா? கணிணியைக் குளிப்படாடுவது தவிர மற்ற எல்லாம் முயற்சி செய்துட்டீங்க போலிருக்கே
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம் சித்திரைதிருநாள் வாழ்த்திற்கு. ஓ உங்களுக்கும் கணினிப் பிரச்சனையா...எப்போது முடிகிறதோ பாருங்கள்..
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கு
நல்ல, பயனுள்ள முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளீர்கள். பாலசந்தரின் தப்புத்தாளங்கள் திரைப்படம் நினைவிற்கு வந்தது. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கும், வாழ்த்திற்கும்
நீக்குநொடிப்பொழுதின் மனஉலைச்சல் நெடுங்கால தண்டணையை கொடுத்து விடுகிறது எல்லா குற்றவாளிகளுமே அதை நினைத்து வருந்துவது நிச்சயமாக உண்டு
பதிலளிநீக்குபதிமூன்று கொலைகள் செய்த நானே வருந்தி பிறகு ச்சே கனவில்தானே என்று ஆறுதல் பட்டு இருக்கிறேன்
காணொளி பிறகு காண்பேன்..
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
நொடிப்பொழுதின் மனஉலைச்சல் நெடுங்கால தண்டணையை கொடுத்து விடுகிறது எல்லா குற்றவாளிகளுமே அதை நினைத்து வருந்துவது நிச்சயமாக உண்டு//
நீக்குஆமாம் கில்லர்ஜி. இதைக் குறித்து சிறையில் இருக்கும் குற்றவாளிகளை மனநல மருத்துவர் ஆராய்ந்து அவை கூட அருமையான விளக்கங்களுடன், ஒரு மனிதனின் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் என்று தொடராக அமெரிக்காவில் எடுத்திருக்கிறார்கள்.
//பதிமூன்று கொலைகள் செய்த நானே வருந்தி பிறகு ச்சே கனவில்தானே என்று ஆறுதல் பட்டு இருக்கிறேன்// ஹா ஹா ஹா ஹா
எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது பாருங்கள் கில்லர்ஜி
புத்தாண்டு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கில்லர்ஜி
அருமை... மனசாட்சியை விட சிறந்த நீதிபதி ஏது...?
பதிலளிநீக்குஉண்மையில் மனசாட்சி மிகச் சிறந்த நீதிபதி..
நீக்குமிக்க நன்றி டிடி தங்களின் கருத்திற்கு
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான சிந்தனைகளுடன் கூடிய விசயங்களை பகிர்ந்து இருக்கிறீர்கள்.
தவறை உணர்ந்து வருந்துவதே ஒரு தண்டனைதான். இரண்டாவது மன்னிப்பதென்பது நல்ல மனித குணங்களில் ஒன்றல்லவா.. சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்..
குறும் படம் பார்த்து ரசித்து விட்டு பின் கருத்துரை இடுகிறேன்.
என் தளம் வந்து கருத்துக்கள் கூறி என் எழுத்துக்களை ஊக்கப்படுத்துவதறகு மிக்க நன்றிகள்.
இனிய சித்தரைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன். எப்போது தங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ பாருங்கள் சகோதரி. நாங்களும் தங்கள் தளத்திற்கு இப்போதுதான் வருகிறோம். தொடர்கிறோம் சகோதரி...
நீக்குமிக்க நன்றி தங்களின் வாழ்த்திற்கும்
சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉங்க கான்சப்ட் சரிதான். நாம, சாதாரண மனிதர்கள் அடுத்தவங்க விஷயத்துல கடுமையான நீதிபதி ஆகிவிடுகிறோம்.
குற்றம் செய்தவன், அதற்கான தண்டனை சட்டம் மூலம் அடைந்தபின், அவனும் சாதாரண மனிதனே என்பது நல்ல சிந்தனை. அதற்குப் பாராட்டுகள்.
இருந்தாலும் பிராக்டிகலாக நாம், இவன் கொலை செய்தவன் என்று எண்ணி இக்னோர் பண்ணத்தான் (பயத்தில்) தோன்றும். நான் 12வது படித்தபோது எங்கள் ஹாஸ்டலில் சிறைத்தண்டனை பெற்றவன் 12வது வகுப்பில் சேர்ந்தான். நாங்க யாருமே அவன் (ர்) கிட்ட பழகலை. சில மாதங்களில் ஹாஸ்டலை விட்டுட்டு போய்விட்டான். உங்கள் குறும்பட கான்செப்ட் அருமை.
தனிப்பட்ட முறையில் அவர்கள் மலையாளமோ தமிழோ பேசியிருந்தால் என்னால் இன்னும் ஒன்றிப் பார்த்திருக்க முடியும்.
தனிப்பட்ட முறையில் அவர்கள் மலையாளமோ தமிழோ பேசியிருந்தால் என்னால் இன்னும் ஒன்றிப் பார்த்திருக்க முடியும்.//
நீக்குபுரிந்து கொள்ள முடிகிறது.உங்கள் இக்கருத்தையும் மற்ற கருத்தையும். அப்படித் திருந்தி நல்ல முறையில் வாழ்பவர்களும் உண்டு என்பதால் எனக்குத் தோன்றிய கருத்து.
//குற்றம் செய்தவன், அதற்கான தண்டனை சட்டம் மூலம் அடைந்தபின், அவனும் சாதாரண மனிதனே என்பது நல்ல சிந்தனை. அதற்குப் பாராட்டுகள்.//
மிக்க நன்றி நெல்லை தமிழன்.
பட ஆரம்பத்தில் பேசும் குரல் நன்றாக இருந்தது. கதையின் கான்செப்டைச் சொல்லும் விதமாக இருந்தது. மற்றவர்கள் ஆங்கிலம் பேசும்போது (அப்போதான் பலரை ரீச் பண்ணும் என்றபோதும்) கொஞ்சம் செயற்கையா எனக்குத் தோன்றியது. இதனையே தமிழ் மலையாளம் dub பண்ணினால் கூடுதல்பேர் ரசிக்க இயலும். (தவறா எனுத்துக்காதீங்க துளசிதரன் சார்)
பதிலளிநீக்குமிக்க நன்றி நெல்லைத் தமிழன் தங்களின் அன்பான கருத்திற்கு. இது இரண்டாவது படம். மட்டுமல்லஆங்கிலம் வேறு...அது நான் படத்தின் மூலம் ஆங்கிலத்தில் உரையாடல் என்ற கான்செப்ட் வேண்டி மாணவர்களுக்காக எடுத்தது. இதில் பங்குபெறுபவர் யாரும் முன் அனுபவம் பெற்றவர் இல்லை. பெரும்பாலும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர்தான். அப்போது டப்பிங்க் எல்லாம் ரொம்ப அனுபவமும் இல்லை... உச்சரிப்பும் அப்படியே.. நீங்கள் சொல்லியிருப்பது போல் தமிழ் மலையாளம் டப் பண்ணியிருக்கலாம் தான். தவறாக எல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டேன் நெல்லைதமிழன்.
நீக்குஏனோ அப்படி டப் செய்யவில்லை. நான் எடுக்க நினைத்து எடுத்தவையே எடுப்பதே சிரமமாகத்தான் இருந்தது. எப்படியோ எடுத்துவிட்டேன். தமிழில் டப் செய்ய ரொம்பச் சிரமம். வலை தொடங்கிய பிறகுதானே நண்பர்கள் கிடைத்தார்கள் குடந்தையார், ஆவி, டிடி, செல்லப்பா சார், பாலகணேஷ் என்று பல நண்பர்கள் கிடைத்தார்கள்....
இனி படங்கள் எடுக்கும் சூழல் இல்லை. மிக்க நன்றி நெல்லை தமிழன்...
பரோல் - மம்மூட்டியின் படம் பார்க்கிறேனோ இல்லையோ உங்கள் குறும்படம் பார்க்க வேண்டும். பார்க்கிறேன். கணினியில் பார்ப்பதில் சில பிரச்சனைகள் எனக்கும் உண்டு.
பதிலளிநீக்குஅலைபேசி மூலம் தாம் பார்க்க வேண்டும்.
வெங்கட்ஜி மிக்க நன்றி கருத்திற்கு. மம்முட்டியின் படம் பற்றி விமர்சனங்கள் நெகட்டிவாகவே இருக்கிறது ஏனென்று தெரியவில்லை.
நீக்குகுறும்படம் எப்போது உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் ஜி.
முகநூலிலும் பார்த்தேன். நாளை மத்தியானத்தில் தான் உங்கள் குறும்படத்தையும் முடிந்தால் மமூட்டியின் படத்தையும் பார்க்கணும். கணினி பிரச்னை செய்யாமல் இருக்கணும். பார்ப்போம்.
பதிலளிநீக்குஉங்கள் லைக்கைப் பார்த்தேன் முகநூலில்...நேரம் கிடைக்கும் போது பாருங்கள் சகோதரி கீதா. மம்முட்டியின் படம் நான் இன்னும் பார்க்க முடியலை. நிறையப் பேர் நன்றாக இல்லை என்றும் சொல்லுகிறார்கள். அதாவது எடுத்த விதம். புது இயக்குநர் என்று தெரிகிறது. நான் எப்படியும் பார்ப்பேன். அதையும் முடிந்தால் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். மிக்க நன்றி சகோதரி கீதா
நீக்குஅடடா! குறும்படமெல்லாம் எடுத்திருக்கிறீர்களா துளசி? நிதானமாக பார்த்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.
பதிலளிநீக்குஆமாம் சகோதரி பானுமதி. எப்போது நேரம் கிடைக்கிறதோ பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். மிக்க மிக்க நன்றி.
நீக்குதங்கள் முயற்சிகளைப் பாராட்டுகின்றேன்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
மிக்க நன்றி நண்பர் யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
நீக்குதங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்!
வாழ்த்துகள் நண்பரே
பதிலளிநீக்குஇதோ இணைப்பிற்குச் செல்கிறேன்
மிக்க நன்றி நண்பர் கரந்தையார் தங்களின் கருத்திற்கு
நீக்குஅவர்கள் திருந்தி, அவர்களுக்கு உரிய தண்டனையை அனுபவித்த பிறகு அக்காலம் முடிந்து வெளியில் வரும் போது குடும்பத்தாரும், சுற்றத்தாரும் ஏற்றுக் கொண்டு நல்வழிப்படுத்தி அவர்களும் இச்சமூகத்தில் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்திட உதவிடலாமே. அவர்களும் இச்சமூகத்தில் வாழ்வதற்கான உரிமை உண்டுதானே! அவர்களது வாழ்க்கையிலும் வெளிச்சத்தை இச்சமூகம் கொண்டுவரவேண்டும் என்பதே படத்தின் கரு.//
பதிலளிநீக்குபடத்தின் கரு அருமை.
குறும்படம் நன்றாக இருக்கிறது.
நெல்லைத்தமிழன் சொன்னது போல் மலையாளம், தமிழ் இரண்டில் ஏதோ ஒன்றில் அமைந்து இருந்தால் மேலும் சிறப்பாக இருந்து இருக்கும்.
நடித்தவர்கள் எல்லோரும் மிகை இல்லாமல் அருமையாக ந்டித்தார்கள்.
உங்கள் நடிப்பும் நன்றாக இருந்தது.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோதரி கோமதி. //படத்தின் கரு அருமை.
நீக்குகுறும்படம் நன்றாக இருக்கிறது// மிக்க நன்றி..ஊக்கமிகு கருத்திற்கு.
இது இரண்டாவது படம். அப்போது தமிழ் சப்டைட்டில் கூடக் கொடுத்ததில்லை ப்ளாக் எல்லாம் எழுதாததால். அதன் பின் எடுத்தவையும் ஆங்கிலத்தில் என்றாலும் கூட மலயாளம் தமிழ் சப்டைட்டில் கொடுத்து வருகிறேன். ஆங்கிலத்தில் எடுத்த காரணம் நான் ஆங்கில ஆசிரியர் என்பதால் மாணவ மாணவியருக்கு ஆங்கிலத்தில் உரையாட ஒரு டிஸ்கஷன் போன்று படம் எடுத்ததும் நடத்தி காட்சிப்படுத்துவதுண்டு. அதுவும் கூடக் கொஞ்சம் செயற்கையாகத்தான் இருக்கும்...இருந்தாலும் இப்படியும் ஆங்கிலத் திறமையை வளர்க்கலாம் என்ற ஒரு கான்செப்ட்டிற்காகத்தான்...
நடிப்ப்பு பற்றிச் சொன்னமைக்கும் மிக்க நன்றி சகோதரி
மனசாட்சி அவர்களை வதைத்துவிடுகிறது.//
பதிலளிநீக்குஉண்மை.
சிறைத் தண்டனையை விட அவர்களின் மனசாட்சி கொடுக்கும் தண்டனை அதிகம்.
மிக்க நன்றி சகோதரி கோமதி தங்களின் கருத்திற்கு. ஆமாம் மனசாட்சி கொடுக்கும் தண்டனையைவிட வேறு ஒன்றும் இல்லை...
நீக்குஒரு நல்ல கருத்தை சொல்லும் முயற்சியினை நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
பதிலளிநீக்குபழகியவர்களெல்லோரும் பார்த்த மாத்திரத்திலேயே விலகுவது, மற்றவர்களின் விலகலை நினைத்து மனம் வருந்துவது, கடந்து சென்ற நாட்களில் முகம் மலர்ந்து வரவேற்ற மனைவி இன்று மனம் பிறழ்ந்த நிலையில் இருப்பதைப்பார்த்து குமுறுவது, ' ஒருத்தரைக்கொல்லும்போது நம் எதிர்காலத்தை, நம் வாழ்க்கையை என்று எல்லாவற்றையுமே கொன்று கொள்கிறோம் என்று சக கைதி சொல்லுவது என்று சின்னச் சின்ன் விஷயங்களை அழகாய் செதுக்கியிருக்கிறீர்கள் ஒரு இயக்குனராக!
இது கேரள நாட்டில் நடக்கும் கதை என்பதால் மலையாள வசனங்கள் இடம் பெற்றிருந்தால் நிச்சயம் அந்த மொழி உணர்வோடு இன்னும் ரசித்திருக்க முடியும். பொருந்தாத இடங்களில் ஆங்கிலம் நுழைகையில் படம் சற்று நம்மிடமிருந்து அன்னியப்பட்டுப்போகிறது.
ஒலியமைப்பு அதன் முக்கியமான சில இடங்களில் குறைவதால் உதாரணமாக, கொலைக்கு ஆளாகுமுன் அந்தப்பையன் பேசுவது, இறுதி காட்சியில் பக்கத்து வீட்டு நண்பர் பேசுவது சரியாகப்புரியவில்லை.
மலையாள வசனங்கள் முழுமையாக இடம் பெற்று, ஒலியமைப்பையும் சரி செய்து விட்டால் நிச்சயம் இந்தக்குறும் படம் சிறந்த படமாகி விடும் என்பதில் சந்தேகமில்லை!!
மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும்கூட!!
மிக்க நன்றி சகோதரி மனோ சுவாமிநாதன்.
நீக்குநல்ல விரிவான விமர்சனத்திற்கு மனப்பூர்வமான நன்றிகள் பல. பாராட்டுகளுக்கும், பரிந்துரைகளுக்கும் மிக்க மிக்க நன்றி. ஆமாம் சகோதரி. ஒரு சில பிரச்சனைகள் இருக்கின்றன.
மொழி பிரச்சனை ஆகாமல் இருக்கட்டும் என்று தான் எடுத்தேன். அதுதான் பிரச்சனை என்று உங்களைப் போல் பலரும் சொல்லும்போது தெரிகிறது என்றாலும் இனி படம் எடுக்கும் சூழல் இல்லை. இதையும் இனி அப்படிச் செய்ய முடியாதே. எல்லோருக்கும் புரியும் மொழியாக இருக்கட்டும் என்று எடுத்தது. மாணவர்களுக்கு என்றும்...அப்புறம் நடித்தவர் யாரும் அனுபவம் பெற்றவர் இல்லை எனவே டப்பிங்க் டயலாக் டெலிவரியில் ஏற்ற இறக்கங்கள் கொண்டுவர இயலவில்லை..
மிக்க நன்றி தங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளூக்கும் சகோதரி
ஆரம்பத்தில் ஒளி மட்டுமின்றி ஒலியும் நன்றாக இருக்கிறதே என நினைத்தால்! போகப் போகப் பின்னணி இசை வசனங்களை அமுக்கி விட்டு விட்டது. என்றாலும் கதையைப் புரிந்து கொள்ள முடிந்தது. சாதாரணத் தவறு செய்து விட்டு வருந்துகிறவர்களையே முழு மனதோடு ஏற்காத நம் சமூகம் கொலை செய்தவரையா ஏற்கும்? கஷ்டம் தான். அதிலும் மனைவிக்கு மனம் பிறழ்ந்து போய்க்கணவனையே அடையாளம் தெரியாத நிலையில் இருப்பது! ரொம்பவே கல்ங்க அடித்தது. வசனங்களின் உணர்வு பூர்வமான அழுத்தங்கள் இல்லாமல் சாதாரண மேடைப் பேச்சுப் போல் அமைந்திருக்கிறதோ என எண்ண வைக்கும் ஆங்கில வசனங்கள். அதிலும் கொலையாகும் சமயம் அந்தப் பையர் பேசுவது! என்னனே தெரியலை! வசனங்களைப் பின்னணி இசை அமுக்குவதைச் சரி செய்து வசனங்களையும் மலையாளம் அல்லது தமிழில் மாற்றி விட்டுப் புரியாதவர்களுக்காக மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் சப் டைட்டில்களோடு போடலாம் என்பது என் கருத்து!
பதிலளிநீக்குநல்ல கருத்துகள் சகோதரி கீதா.இதில் நடித்தவர்கள் யாரும் ஆர்டிஸ்ட் இல்லை. எல்லோரும் நண்பர்கள், ஆசிரியர்கல், குடும்பத்தினர். ஒரு சிலரது குரல் மட்டுமே ஒரிஜினல் சிலருக்கு டப்பிங்க். டப்பிங்கும் நாம் நல்ல ஆர்ட்டிஸ்ட் போகணும் என்றால் எனது பட்ஜெட்டை விடக் கூடும். இது எனது இரண்டாவது படம். பல விதங்களில், நடிப்பவர்கள், எடிட்டிங்க், ரெக்கார்டிங்க் என்று பல விதங்களில் அட்ஜஸ்ட்மெட்ன் செய்ய வேண்டியய்தானது. பல நல்ல ஷாட்கள் எடிட்டிங்கில் விடுபட்டு போனது. இது எடுத்து 6 வருடங்கல் ஆகிவிட்டதால் இனி இதில் எதுவும் செய்ய முடியாதே சகோதரி. அப்படித் தமிழில் டப்பிங்க் செய்யலாம் என்றுதான் பரோட்டா கார்த்திக் எடுத்தது ஆனால் அதிலும் பிரச்சனைகள் இருந்தன...
நீக்குஇனி எடுக்கும் சூழல் இருக்குமா தெரியவில்லை. நல்ல விமர்சனத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
வணக்கம்,
பதிலளிநீக்குwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் திரட்டியில் உங்கள் இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.
நன்றி..
தமிழ்US
நடந்து விட்ட சம்பவங்களை விட அது
பதிலளிநீக்குநடந்து முடிந்த பின்னாய் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம்,,,/
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇரண்டு நாட்களாக வெளியில் குழந்தைகளோடு போனதில் நேரமே கிடைக்கவில்லை. நடுவில் எ.பிக்கு மட்டும் எப்படியோ ஒரு கருத்திட்டு விட்டு கிளம்பி விட்டேன். என் தளம் வந்து விடுபட்ட பதிவுகளுக்கும் சேர்த்து அருமையான கருத்துக்களை தந்திருப்பது படித்தேன். உங்கள் இருவரின் அன்பும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மிகவும் நன்றி சகோதரி. இன்றாவது அனைவரின் பதிவுகளுக்கு பதிலளிக்க ஆண்டவன் அனுகிரஹக்க வேண்டும். மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.