புதன், 9 டிசம்பர், 2015

எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்

எப்படி இருந்த நான்

நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம் என்றவுடன் இங்கிலாந்து  ராணியின் அரண்மனை என்று நினைத்துவிடுவீர்கள்?! இதுதான் மக்களாகிய உங்கள் மனது. என்னை மறந்திருப்பீர்கள்.  மறந்திருப்பீர்கள் என்பதை விட உங்களில் எத்தனைபேர் என்னைப் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. பரவாயில்லை. போகட்டும். இப்போதாவது, நான் முழுவதுமாய் மரணமடைந்து, மறக்கப்பட்டு, உருமாறும்  முன், பதிய விழையும் எனது கதையைப் படித்துவிடுங்கள். உங்களுடன் மனம் விட்டுப் பேசுகின்றேன்.

      ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது, 1806 ல், சென்னையின் எண்ணூரிலிருந்து, வங்காளவிரிகுடா கடலிலிருந்து உப்பு நீர்க்கால்வாயாக, ஆங்கிலேயர்களால், சோதனைக் குழாய் குழந்தை போல நான் பிறந்து, சில தூரம் வளர்க்கப்பட்டேன். அப்போது எனக்கு வேறு பெயர்.  அப்பெயரிலேயே நான் புலிக்காட் ஏரி வரை வளர்ந்தேன். அதன் பின் சென்னை மாகாணத்து அரசின் வளர்ப்பினால் நான் என் மேற்பகுதியில் (வடக்கு) கிருஷ்ணா நதியின் ஓரமாக, ஆந்திராவின் விஜயவாடாவரையும், என் கீழ்ப்பகுதியில் (தெற்கு) மரக்காணம் வரையும், வங்காளவிரிகுடாவுடன் இணைக்கப்பட்டு, நன்றாக நீண்டு 315 கிமீ வளர்ந்தேன்.
 
அடையார் ஆறு - நம்ப முடிகின்றதா? - நன்றி: த ஹிந்து
அடையார் ஆறு - பார்த்து மகிழ்ந்து கொள்ளுங்கள். இதனுடன் ஒரு காலத்தில்   பக்கிங்ஹாம் இணைந்திருந்தது.

1877, 78 களில் மிகப் பெரிய அளவில் தென்னிந்தியா வறட்சியிலும், பஞ்சத்திற்கும் உட்பட்டதைக் கண்டேன். சென்னையில் இருந்த மக்கள் பலரும் மடிந்தனர். அவர்களுக்கு உதவ வேண்டி அப்போது சென்னை மாகாணத்தின் கவர்னரின் (பக்கிங்காம்) ஆணையால் எனக்குக் கைகள் 8 கிமீ தூரம் முளைத்தன. இயற்கையாய் பிறந்த எனது மூதாதைய மூத்த சகோதரிகளாகிய அடையார், கூவத்துடன்  மகிழ்வுடன் கை கோர்த்தேன். அப்படித்தான் 1878ல் பக்கிங்ஹாம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டேன். 8 கிமீ பின்னர் மேலும் பல கிமீட்டராக சென்னைக்குள் மட்டுமே, அடையாருடனும், கூவத்துடனும் கை கோர்த்து நீண்டு வளர்ந்தேன்.

ஒரு வேளை பக்கிங்ஹாம் என்ற ஆங்கிலேயப் பெயருடன் நான் இருப்பதால் ஆங்கிலேயரை விரட்டியதைப் போல் என்னையும் மறந்து விட்டீர்களோ? ஆங்கிலேயப் பெயர்தான் என்றாலும் நானும் உங்களுடன் இந்த மண்ணில் பிறந்தவள்தானே! நான் எவ்வளவு இளமையாகப் புத்துணர்வோடு பிரவாகிக்கித்தேன் என்பதை என் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். செழுமையாக வளர்ந்தேன். பலருக்கும் உதவியாக இருந்தேன்.

நான் அவர்களின் சரக்குகளை ஏற்றி வரும் பெரிய படகுகளின் போக்குவரத்திற்கும், பிற   போக்குவரத்திற்கும் உதவினேன் என்றால் நீங்கள் நம்புவீர்களா?  நம்பித்தான் ஆகவேண்டும். நான் வரலாற்றில் இடம் பெற்ற மிகப் பழமை வாய்ந்தவள் என்பதால் சாட்சிகள் உண்டு. வரலாற்றில் இடம் பெற்றவளாக இருந்தாலும் உங்கள் பலரின் மனதிலிருந்து மறைந்து விட்டதால் உங்களுக்கு நம்பிக்கை வராமல் போகலாம்.

ஏனென்றால், நீங்கள் படிக்கும் காலத்தில் பூகோள வரைபடத்தில் பார்த்த எனது மூதாதையர்கள் பலரின் ஆயுளைக் கொஞ்சம் கொஞ்சமாக முடித்துவிட்டு அவர்களின் மேல்தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அதுபோன்று, நானும் மடியும் நாள் வெகுதூரத்தில் இல்லையோ என்று தோன்றத் தொடங்கியதால்தான் இந்த வருத்தம். இப்போது ஏற்பட்ட வெள்ளத்தினால் அல்லல்படும் உங்களைக் காணும் போது, என்னைப் பாதுகாத்து, பேணி வளர்த்திருந்தீர்கள் என்றால், நான் உங்களை எல்லாம் காப்பாற்றி இருந்திருக்கலாமே என்று மனம் வருந்தித் துடிக்கின்றேன்.

பக்கிங்கஹாம் - விஜயவாடா. நன்றி: விக்கி
Buckingham Canal, Andhra Pradesh
ஆந்திராவில் உள்ள பகுதி

உங்களிடம் சொன்னால் ஒருவேளை நான் பழைய புத்துணர்வு பெற்று இளமையைப் பெறுவேனோ என்ற ஏக்கத்தில், எனது மேற்பகுதி, சென்னைக்கு வெளியே இருக்கும் பகுதி நன்றாக இருக்கும் போது, இப்படிச் சென்னையிலும், எனது கீழ்ப்பகுதியிலும், நன்மைகள் பல செய்த நான் எப்படி உருக்குலைந்தேன், என் உயிரைக் காப்பாற்றுகின்றேன் என்று சொல்லி என் உயிரை ஊசலாடவிட்டிருப்பதையும் சொல்ல நினைக்கின்றேன். ஆனால் பாருங்கள், இப்போதைய மழையினால் நான் சிறிது உயிர் பெற்றாலும், என்னால் ஓட முடியாத அளவிற்குக் குப்பையினாலும், அழுக்கினாலும், உங்களின் கழிவுநீரினாலும் அடைந்துள்ளதால் மூச்சுத் திணறுகின்றது இப்போது. எனவே, என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருகின்றேன். அதுவரை சற்றுப் பொருத்திருங்கள். என் கதையைக் கேட்கப் பொருத்திருப்பீர்கள்தானே...தொடர்கின்றேன்

இப்படியானேன் ....பக்கிங்ஹாம் கால்வாய்

--கீதா

படங்கள் : இணையத்திலிருந்து

பின் குறிப்பு : நீர்வழிச் சாலை- நீர் மேலாண்மை குறித்துச் சகோதரர் செந்தில் அவர்களது சுட்டி http://senthilmsp.blogspot.com/2015/12/1.html


66 கருத்துகள்:

  1. அழகான படங்கள் உண்மையை முரசறைகிறது. இனியாவது விழித்துக் கொண்டால் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  2. இந்தப் பேரிடர் மனிதனை, குறிப்பாக சென்னை மக்கள், அரசியல்வியாதிகள், அதிகாரிகள் திருந்தட்டும். அரசியல்வியாதிகள் எந்தக் காலத்திலும் தானாய்த் திருந்த மாட்டார்கள். திருந்திய மற்றவர்களைப் பார்த்துதான் அவர்கள் மாற வேண்டும். மாற்றங்களை ஒவ்வொருவரும் தம்மிடமிருந்து தொடங்குவோம்.

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் உண்மைதான் ஆனால் நாம் இன்னும் சட்டங்களை வலுவாக்க வேண்டும் லா எஃபோர்ஸ்மென்ட் இல்லாததால் படுகுழியில் நாம். மேலை நாடுகளில் அதுதான் அவர்களை நிமிர்ந்து நிற்கச் செய்கின்றது...நமக்கு ஊழல் செய்யணும் இல்லையா...ஹும் நாம் உணர்ந்து எழுந்தால்தான் உண்டு ...

      நீக்கு
  3. ஐயோ! ஐயோ! என்று நெஞ்சம் விம்முவதைத் தவிர வேறு என்ன செய்ய என்று தெரியவில்லை.. இனிமேலாவது பழைய நிலைக்குக் கொண்டுவர சிறிதேனும் முயற்ச்சிப்பார்களா?
    பக்கிங்ஹாம் கால்வாய் பற்றி அறியாத தகவல்களும் படங்களும் பகிர்ந்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி க்ரேஸ் உங்கள் கருத்திற்கும் வருகைக்கும்...ஆம் வேதனை க்ரேஸ்..

      நீக்கு
  4. நதியின் கதை - மனதைக் கலங்கச் செய்கின்றது..
    மீண்டும் பொலிவுறும் காலம் எப்போது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரை செல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  5. கண்ணீர்க்கதை! பக்கிங்காம் கால்வாய் ஆரம்பத்தில் வேறு பெயரில் இருந்தது இன்று தான் தெரியும். மனிதர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் இனிமேலாவது மனம் மாறினால் கால்வாய் பிழைக்கும்! ஆனால் நம்பிக்கை வரவில்லை! ஏனெனில் இப்போது அரசியல்வாதிகள் நடந்து கொள்ளும் முறை நம்பிக்கையைச் சிதைக்கிறது. ஆந்திராப் பக்கம் நன்றாக இருக்கும் படங்களையும், சென்னைப் பக்கத்தின் படத்தையும் பார்க்கையில் மனம் வேதனையிலும் வெட்கத்திலும் ஆழ்ந்து போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கீதா சகோ. அதன் பெயர் Cochrane's கால்வாய். அதற்கு Basil Cochrane என்பவர்தான் நிதிஉதவி அளித்தார் என்பதால். ஆம். நம்பிக்கை வர மறுக்கின்றது . ஆம் ஆனால் இப்பொழுதேனும் திருந்த வேண்டும். ஆந்திராப்பாக்கம் கூட சென்னைக்கு அருகில் வர வர அதாவது நெல்லூர் பகுதியில் இதன் அகலம் ஆழம் எல்லாம் குறைந்து விட்டது. பின்னே நீரோட்டம் இருந்தால்தானே...

      நீக்கு
  6. @கீதா, நீங்கள் சென்னையில் இருப்பது தெரியும். எங்கேனு தெரியாது. நலமாக இருந்திருப்பீர்கள் என நம்புகிறேன். உங்களைத் தொடர்பு கொள்ளும் வழி தெரியாமல் மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். ஶ்ரீராமை மட்டும் தொடர்பு கொள்ள முடிந்தது. அதுவும் அவர் தான் அழைக்க வேண்டி இருந்தது. நான் அழைத்தால் அழைப்புப் போகவில்லை! :( இப்போது சரியாகி இருக்கும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம் கீதா சகோ. நான் இருப்பது தரமணி அருகில் டைடல் பார்க்கின் பின்னால். எங்கள் பகுதியில் வெள்ளமோ நீர்த் தேக்கமோ இல்லை. பிரதாச சாலையுடனும் துண்டிக்கப்படவில்லை. ஆனால் பிரதான சாலைகளாகிய திருவான்மியூர் மத்தியகைலாஷ் எல்லாம் வெள்ளம். அதன் அருகில் தானே பக்கிங்ஹேம் கால்வாய். அதனால்தான் இந்தப் புலம்பல அதனிடமிருந்து!

      எங்களுக்கும் மின்சாரம் இருக்கவில்லை. 4 நாட்களுக்கு. தொலை தொடர்பு இல்லை. இப்போதுதான் தொடர்பு சரியாகி வருகின்றது. நானும் ஸ்ரீராமை அழைத்துப் போகவில்லை பின்னர் அவர் அழைத்தார். ஆம் இப்போது சென்னையே ஏதோ ஒன்றுமே நடக்காதது போல ஓடுகின்றது.

      நீக்கு
  7. நம்மை நாமே தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதையே இவை போன்ற நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. பாதுகாக்கவேண்டியனவற்றைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டு அதனால் ஏற்படும் சங்கடங்களைச் சமாளிக்கவும் முடியாமல் எதிர்கொள்ளவும் முடியாமல் இருப்பது வேதனையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா. ஆம் உண்மைதான் ஐயா...இனியேனும் பாதுகாக்க வேண்டும்..

      நீக்கு
  8. அன்புள்ள சகோதரி,

    அடையாற்றில் படகு செல்லும் அழகிய கருப்பு வெள்ளை படங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டன.
    நன்றி.
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மணவை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
    2. மிக்க நன்றி மணவை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  9. பதில்கள்
    1. நலம்தான் கரந்தையார் சகோ. மிக்க நன்றி நலம் விசாரித்தமைக்கு. தாமதமாகிவிட்டது பதில் அளிக்க மன்னிக்கவும்.

      நீக்கு
  10. இருப்பதன் அருமை இழப்பில்தான் தெரியும்.

    ஆனால் அது தெரியும் போது நாம் கொடுத்திருக்கும் கொடுக்க வேண்டிய விலை????


    சிறந்த தன்வரலாற்றுக் கட்டுரை.

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ. ஆம் நாம் இப்போது நிறையவே விலை கொடுத்துவிட்டோம். இனியேனும் திருந்த வேண்டும்.

      நீக்கு
  11. இப்படி பலவற்றை மனிதனின் பணவெறியால் நாம் தொலைத்துவிட்டோம். இனியாவது இவற்றையெல்லாம் மீட்க வேண்டும்.
    அருமையான பதிவு.
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். நாம் தொலைத்தது நிறையவே...

      நீக்கு
  12. கதையைக் கேட்கப் பொருத்திருக்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  13. எத்தனை எத்தனை இழந்திருக்கிறோம்.....

    ஆந்திரப் பகுதியில் இருக்கும் படமும் சென்னையில் அது உருமாறியிருக்கும் நிலையும் பார்க்கும் போது கலக்கம் வருகிறது. மாற்றங்கள் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்ற்மிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  14. பதில்கள்
    1. மிக்க் நன்றி சகோதரி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  15. கொடுமை எத்தனை அழகான கால்வாயை எப்படி நாசமாக்கியுள்லம் ....நம் மேல் உள்ள கோபத்தில் தான்..இப்படி வெள்ளமாய் ஓடுகிறது போலம்மா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். நிச்சயமாக இயற்கையின் கோபம்தான்..

      நீக்கு
  16. தெரியாத தகவல்கள்
    வேதனை தருகிறது..
    மனிதம் விழிக்க வேண்டும்.
    வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோவைக்கவி சகோதரி தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  17. வேதனையான விடயம் அதற்க்கு முன் வெட்கப்பட வேண்டியது மக்களாகிய நாமே நாம் என்றுமே அரசியல்வாதிகளையே குறை சொல்கிறோம் நாம் சரியாக இருக்கின்றோமா ? என்பதை யாருமே உணர்வதில்லை சாதாரண நம்மைப்போல் இருந்தவர்களை அரசியல்வாதிகள் ஆக்கியதே நாம்தானே நாம் மாறவேண்டும் பிறகே அவர்கள் நம் வழிக்கு வருவார்கள் அதிகார சாட்டையை அவன் கையில் எடுத்து கொடுத்து விட்டு என்னை அடிக்கின்றான் என்பது அறியாமை.

    நல்லதொரு கையில் விடயத்தை எடுத்து இருக்கின்றீர்கள் புகைப்படங்கள் காணக் கிடைக்காதவை வாழ்த்துகள்
    தொடர்கிறேன்...
    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கு. மிக்க நன்றி..உண்மைதான் இனியாவது மக்கள் திருந்தி நல்ல ஆளுமை உடைய நல்லாட்சி செய்யும் நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சரி அப்படி ஒருவர் இருக்கின்றாரா

      நீக்கு
  18. இனி இருக்கும் நீர்ப் பாதைகளைப் புனருத்தாரணம் செய்ய முடியுமா. கேள்வி எழுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கு. செய்யமுடியும் ஆனால் செய்வதில்லை சார்...

      நீக்கு
  19. ஒரு நதி தன் கதை கூறியது அத்தனை அருமை....
    ஆற்று நீர் பொருள் கண்டோம்....
    நன்று நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செல்வா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  20. அருமை தன வலராறு மூலம் பக்கிங்க்ஹாம் கால்வாய் பற்றிய அறிய தகவல்களை ததுல்லீர்கள். புகைப்படங்கள் அருமை.இந்த மழை பல பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் மக்கள் மறந்து போன பலவற்றை நினைவு படுத்தியது. பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முரளிதரன் சகோ தங்களின் கருத்திற்கு. ஆமாம் நிறையவே பாடங்கள் கற்றுத் தந்துள்ளது...

      நீக்கு
  21. வணக்கம் ஐயா !

    காலத்துக்கு ஏற்ற பதிவும் கால்வைகளை வீடாக்கியோருக்கு இது ஓர் பாடமும் !
    அறிய பல புகைப்படங்களைக் கொண்டு சுயசரிதம் எழுதி இருக்கீங்க தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சீராளன் தங்களுக்கு தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

      நீக்கு
  22. எப்பேர்ப்பட்ட அழகியை இப்படி சின்னாபின்னா படுத்தி விட்டார்களே ,வேதனையாய் இருக்கிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  23. தண்ணீரால் வாழ்ந்து தண்ணீரைச்சின்னப்படுத்தி தண்ணீரால் அழியப் பார்த்த தமிழகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிசிம்ஹன் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஆம் உண்மையான வரிகள்...!!

      நீக்கு
  24. 'பக்கிங்க்ஹாம் - தன் வரலாறு கூறுதல்" முதல் பகுதி படித்தேன்.
    வியப்பாக உள்ளது. தொடர் வரலாறையும் அறிய மிக ஆவல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ தங்களின் கருத்திற்கு,வருகைக்கும்..

      நீக்கு
  25. வயறு மட்டும் எரியவில்லை.மண்டையும் காய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் உங்கள் ஆதங்கம் புரிகின்றது. முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  26. கலைஞர் கூட ஆட்சிக்கு வந்த குசியில் ஒரு படகு பயணம் செய்தாரே! யாருக்காவது நினைவிருக்கிறதா? அது எந்த நீரில் எங்கே படகு விட்டார் என்று யாராவது போன் போட்டு கேட்டு சொல்லுங்க்ளேன்.வீராணக் குழாய்களையெல்லாம் பாலசந்தர் படம் எடுக்குறதுக்குத்தான் உபயோகமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவிருக்கின்றது ஆனால் எந்த நீரில் என்றுதான் தெரியவில்லை. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு..

      நீக்கு
  27. அருமையான நதிகள் சாக்கடைகளாக இன்று. ஹ்ம்ம் ஆனால் பெருமழையில் அங்கே நல்ல தண்ணீர் ஓடி சாக்கடை எல்லாம் எல்லார் வீட்டிலும் புகுந்துவிட்டதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தேனு தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

      நீக்கு
  28. அழகான ஊர் அலங்கோலமான கதை கண்டு அதிர்ச்சி தான் ஏற்படுகின்றது, இதற்கெல்லாம் யாரை நோவது?

    தமிழ் மணத்திலோ வேறெந்த திரட்டிகளிலோ நான் இன்னும் இணைக்கப்ப்டாட்ததால் என் பதிவுகள் அனேகரை சென்றடைவதில் தாமதம்.. எனிவே

    விகடன் கவர் ஸ்ரோரியின் விமர்சனமாக நான் இட்ட
    http://alpsnisha.blogspot.ch/2015/12/blog-post_10.html
    சென்னைப்பேரிடருக்கு யார் காரணம்? என்ன செய்யப்போகின்றோம்?

    http://alpsnisha.blogspot.ch/2015/12/blog-post_6.html
    தேவைகள் இனிமேல் தான் அதிகமாகின்றது.

    http://alpsnisha.blogspot.ch/2015/12/blog-post.html
    தொற்று நோய் அபாயம்! தற்பாதுகாப்பும் முன் எச்சரிக்கையும்

    போன்ற பதிவுகளையும் படியுங்கள்! உங்கள் கருத்துக்களை இடுங்கள்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நிஷா தங்களின் விரிவான கருத்திற்கும் வருகைக்கும். தங்களின் எல்லா பதிவுகளையும் வாசித்துப் பின்னூட்டமும் இட்டுவிட்டோமே.

      நீக்கு
  29. பக்கிங்காம் கால்வாய் போன்று
    எல்லாக் கால்வாய்களும் ஆகிவிடாது
    அனைத்துமே
    மேம்படுத்தப்பட வேண்டுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஆம் மேம்படுத்த வேண்டும் இல்லையேல் இடர்கள் அதிகமாகும்..

      நீக்கு
  30. ஒரு கால்வாய் சாக்கடையான கதை.. மனத்தை நெகிழ்வித்து நம்முடைய அறியாமையையும் அலட்சியத்தையும் எண்ணி வெட்கிக் குனியச்செய்கிறது. இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான பதிவு. மேலும் அறிந்துகொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  31. இன்று தான் இந்த நதியின் கதையை படித்தேன். இதன் அடுத்த பாகத்தையும் சீக்கிரம் படித்து விடுகிறேன். இந்த கால்வாயைப் பற்றி இவ்வளவு தகவல்களா, அதுவும் கருப்பு வெள்ளை படங்களுடன், அருமை.
    ஆனால் படித்தவுடன் மனது வேதனைப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம்
    தகவல் பிரமிக்கவைக்கிறது... படங்களுடன் அற்புத விளக்கம் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு