திங்கள், 2 பிப்ரவரி, 2015

மகிழ்ச்சி, த்ரில்லர், ஆக்ஷன், சென்டிமென்ட் - காணத் தவறாதீர்கள்

இரண்டரை/மூன்று மணி நேரம் படம் எடுக்கும் நம் இயக்குனர்கள் கூட இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. நம் படங்களில் அத்தனை மணி நேரங்களில் காட்டும், ஆக்ஷன், த்ரில்லர், மகிழ்ச்சி, செண்டிமென்ட் எல்லாம் 3 நிமிடம் 27 செகண்டில் சாத்தியமா?  என்றால் சாத்தியமே!  அதுவும் நடிக்கத் தெரியாதவர்களின் மூலம்!  இயற்கையில் சாத்தியமே! இயற்கையை விஞ்ச மனிதனால் முடியாது என்பது நிரூபிக்கப்படுகின்றது.

இது போன்று ஒரு மகிழ்ச்சி, ஆக்ஷன், திரில்லர், சென்டிமென்ட் நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? அருமையான ஒரு குறும்படம் போன்ற, உணர்வு  பூர்வமான ஆக்ஷனுடன் கூடிய த்ரில்லர்...உங்கள் மனது கண்டிப்பாக நினைக்கும், ஐயோ எப்படியாவது அந்தக் கரடிக் குட்டி தப்பிவிட வேண்டும் என்று. திரைக்கதை எழுதப்படாத, இந்த ஆக்ஷனும், த்ரில்லரும் இயற்கையான ஒன்று.  நடிப்பு இல்லாத ஒன்று.  எந்த ஒரு இயக்குனரும் இயக்க முடியாத ஒன்று. கதை, க்ளமாக்ஸ் என்ன என்று தெரிந்து கொள்ள நீங்களும் ஆவலோடு இருக்கின்றீர்கள்தானே! பாருங்களேன்.  உங்களுக்கே தெரியும் நாங்கள் சொல்லியிருப்பது மிகையல்ல என்று!  உங்கள் மேலான விமர்சனங்கள்..!!!?


ஒரு வேளை காணொளி திறக்கவில்லை என்றால் அதன் லிங்க் இதோhttps://www.youtube.com/watch?v=NpI3g0xHBa8 


மற்றொன்று நாங்கள் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.  மிகவும் பிரபலமான பதிவர் சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்கள் பகிர்ந்துள்ள இந்தப் பதிவைப் பாருங்கள்.  மிக மிக உபயோகமான ஒன்று...

ஏமாறாதீங்க… இது உங்க பணம்!


https://ranjaninarayanan.wordpress.com/ 


காணொளி : இணையம்





37 கருத்துகள்:

  1. வணக்கம்
    அண்ணா

    இனத்துக்கு இனம் உதவும் என்பதை மிக என்பதை காட்டுகிறது... கரையில் நின்று மற்ற கரடி சப்பதம் போடா விட்டால் புலிக்கு உணவுதான்..நீரில் மூழ்கிய கரடி...
    அடுத்து புலியால் தன் இலக்கை அடைய வில்லை என்ற கருத்தும் சொல்லப்படுகிறது....த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. ஹீரோ கடைசி நொடியில் வருவது போல என்ன ஒரு என்ட்ரி! நான் குட்டி என்று அதுவே காப்பாற்றி, விட்டுப் போகும் என்று நினைத்தேன்.

    ரஞ்சனி மேடத்தின் பதிவு உண்மையிலேயே ஷேர் செய்யப்பட வேண்டிய ஒரு பதிவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் ஆமாம் நாங்களும் மிகவும் ரசித்த ஒன்று ! ம்ம் ஜாக்குவார்க்கு குட்டியாவது ஒன்றாவது...னாங்கள் கூட முதலில் அப்படித்தான் நினைத்தோம்...ஆனால் அடிக்கத் தொடங்கும் சமயம் அம்மா என்ட்ரி. என்னடா அது திரும்பிப் போகின்ரதே என்று பார்த்தால் அம்மா கத்துகின்றஹு..குட்டியும் கத்துகின்றது.....

      மேடத்தின் பதிவு அருமை...அதான் பகிர்வு...

      நீக்கு
  3. என்னவொரு துரத்தல்...! அப்பாடா...! முடிவில் நிம்மதி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டிடி! நகம் கடிக்க வைக்கும் அளவு த்ரில்லர்...மிக்க நன்றி டிடி!!

      நீக்கு
  4. விழிப்புணர்வு தரும் பதிவு... நன்றி சொல்ல வேண்டும் இருவருக்கும் :)
    த ம 4

    பதிலளிநீக்கு
  5. எனக்கு வீடியோ திறக்கவில்லை சகோ. .. ஆவல் மேலிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லிங்க் கொடுத்தோமே பார்த்தீர்களா?!!

      நீக்கு
    2. காணொளியைக் கண்டேன். முன்பே இதை யூடியூபில் பார்த்து இருக்கிறேன் என்பது இதை பார்த்த பின் தான் தெரிந்தது. குட்டி விளையாடும் அழகும், புலியின் குறிக்கோளும், மரத்தில் கடைசியில் கரடி நிற்க புலி வரும் போது...ஐயோ...என நமக்கு துடிக்க, இறைவன் காக்க வேண்டும் என நினைத்தால்...எப்படியும் காப்பார் இல்லையா...? மரம் ஒடியா...தத்தளிக்கும் அது...அம்மரத்திலேயே ஜம்னு பயணிக்க....அருமையான..கணொளியை பகிர்ந்தமைக்கு...நன்றி.

      பணிச்சுமையினால் சற்று நிதானமாக வந்தேன்.

      நீக்கு
  6. இந்த காணொளி சில மாதங்களுக்கு முன் எனக்கு - Facebook- ல் வந்தது.
    பத்திரப்படுத்தியுள்ளேன்!..

    அதிலும் கடைசி (3.08 - 3.27) நொடிகள் காவியம்!..

    நீங்கள் சொல்லியிருப்பவை மிகையே அல்ல!..

    பதிலளிநீக்கு
  7. அன்புக்குரிய ரஞ்சனி நாராயணன் அவர்களுடைய பதிவும் சில மாதங்களுக்கு முன்னேயே - Fb - ல் வந்ததுதான்!..

    எந்த ஊரில் எந்தக் கடையில் இது நடந்தது என்பதை அறிய முடியாதபடிக்கு இருக்கின்றது அந்த சம்பவம்!..

    ஆயினும், முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்து விழிப்புணர்வுக்குரியதே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கருத்து நான் மனதில் கொள்ள வேண்டிய ஒன்றெ! மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  8. துளசிதரன். இதே காணொளியை நான் தாய்மையின் வலிமை என்னும் தலைப்பில் பகிர்ந்துள்ளேன் .gmbat1649.blogspot.in/2012.03/blog-post_20.html இருந்தாலென்ன. அன்று கருத்திட்டு மகிழ்ந்தவர்கள் ஏழே பேர். எத்தனை முறை வேண்டுமானாலும் பகிரக் கூடிய ஒரு காணொளி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா அருமையான தலைப்பு! நாங்களும் முதலில் அது போன்ற ஒரு தலைப்பு கொடுக்கலாம் என்று நினைத்து, பின்னர் மாற்றினோம். ஆம்! எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒன்று...மிக்க நன்றி! சார்!

      நீக்கு
  9. அருமையான காணொளி வாழ்த்துகள்
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  10. ஆகா
    என்னவொரு துரத்தல்
    உயிரைக் காப்பாற்றிக் கொள்ள என்னவொரு ஓட்டம்
    நெஞ்சம் பதைபதைத்துப் போய்விட்டது நண்பரே
    முடிவில் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள அய்யா,

    ஓர் உயிர் போராட்டாம்... ஆறறிவு படைத்த மனிதனாகட்டும்... அய்ந்தறிவு படைத்த விலங்காகட்டும்... உயிர் காக்கக் போராடுவது இயற்கைதான் என்றாலும் ... இயற்கையாக நிகழும் நிகழ்வை காட்டியது கண்கொள்ளா காட்சி... அதை மீண்டும் மீண்டும் பார்த்தேன்...

    குட்டிக் கரடி குதுகளித்திருக்கும் வேளையில் ஒரு பெண் சிங்கம் (சரியா?) அந்தக் குட்டிக் கரடியை இரையாக்க எண்ணி துரத்த... அதனிடமிருந்து தப்பிக்க ஓடிப்போய் ஆற்றின் மேல் இருக்கும் மரத்தில் ஏறி மறுபக்கம் செல்ல எண்ணிச் செல்லும்போது ... அந்த மரம் மறு கரையைத் தொடாமல் முடிய... அதற்கு மேலே செல்ல வழியில்லாமல்... அசந்து போய் குட்டிக் கரடி திரும்ப... அதே மரத்தின்மேல் சிங்கம் வருவதைப் பார்த்த குட்டிக்கரடி மரத்தில் இருப்பதால் தன் உடலைத் திருப்ப முடியாமல் தயங்கித் தயங்கிப் பின்வாங்க... மரத்தின் நுனி ஒடிந்து கரடி கீழே விழ... விழுந்து துண்டின் மரத்தில் தொற்றிக் கொள்ள...அந்தக் குட்டிக்கரடி ’காகித ஓடம் கடல் அலை மீது போவது போல...’ பிழைத்துக் கொண்டோம் என்று கரடி அடித்துச் செல்லும் ஆற்றின் வழியே செல்ல... மீண்டும் அந்த சிங்கம் கரடியின் வரவுக்காக காத்திருக்க...குட்டிக் கரடி மிரள... சிங்கம் கர்ஜித்து... தன் கால் நகத்தினால் கரடியின் முகத்தைக் காயப்படுத்திக் கடிக்க முற்பட்டு .... திடீரென பெண்சிங்கம் பின்வாங்க... காரணம் என்னவென்று பார்த்தால் பின்னால் கால்களில் கூரிய நகங்களைக்கொண்ட தாய்க்கரடி கத்த ... அதற்குப் பயந்து பெண்சிங்கம் தன்உயிரைக் காப்பாற்ற ஓட்டம் பிடிக்கிறது...!

    தாய்க்கரடி தன்குட்டியைத் தலையை ஆட்டி ஆட்டி... ஆக்ரோசமாக ‘வா...வா...’ என்பதைப்போல அந்தக் குட்டியை வரவழைத்து இரத்தம் வழியின் அதன் முகத்தை தன் நாக்கால் நக்கி தன் தாய்ப்பாசத்தை காட்டுகின்ற இயற்கை நிகழ்வை அருமையாக படமெடுத்தவருக்கு பாராட்டுகள்...! அருமை...அருமை!!

    விலங்குகளின் மேல் வாஞ்சையுள்ளவர் தாங்கள் என்பதை இந்தக் காணொளியைப் பார்க்க வைத்ததின் மூலம் மீண்டும் நிருபணமாகியுள்ளது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! அருமையான சுபத்துடன் முடியும் காணொளி மிக்க நன்றி நண்பரே! தங்களது விவிவாந பதிலுக்கு

      நீக்கு
  12. குட்டிக் கரடியின் கதறலைக் கேட்டு துடிப்புடன் வந்த
    தாய்க் கரடியின்( வருகை)என்ட்ரியை பார்த்ததும்,
    எவரெஸ்ட்டில் ஏறி நின்று கை தட்டத் தோன்றுகிறது ஆசானே!
    புலிக்கு பலி கொடுக்காமல் பாதுகாத்த தாய்க் கரடிக்கு ,
    அந்த வேளையில் ஏற்பட்ட வலியை யாரறிவார்!

    பாயும் புலியை விரட்டியடித்த தாய் உள்ளத்தை போற்றுவோம்!

    அருமையான காணொளிக் காட்சி கண்ணில் தெரியும் காட்சியாக நிறைந்து நிற்கின்றது அய்யா!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! மிக்க நன்றி ஐயா தங்களின் மேலான கருத்திற்கு!

      நீக்கு
  13. எத்தனை முறை பார்த்தாலும் இறுதியில் வரும் காட்சி க்காக மீண்டும் பார்க்க தூண்டும் அன்பு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோதரி! இயற்கை எப்படி உள்ளது பாருங்கள்! அலுக்காதது! மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  14. ஏற்கெனவே பார்த்திருந்தாலும் சிலிர்க்க வைக்கும் காணொளி சகோதரரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! சகோதரி எத்தனை முறை பார்த்தாலும் சிலிர்க்க வைக்கும் காணொளி சகோதரி! மிக்க நன்றி!

      நீக்கு
  15. பதறியது மனம் அப்பாடா என்று ஒரு பெரிய நிம்மதி பிறந்தது ஈற்றில். அருமையான காணொளி மிக்க நன்றி !
    ரஞ்சனி அவர்களின் பதிவு பார்க்க செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ! அந்தக் குட்டியை விட்டு வில்லன் போவது வரை பதற்றம் ! தாயைக் கண்டதும் ஆனந்தம்...முடிவு சுபம்! மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
    2. ஆம் ! அந்தக் குட்டியை விட்டு வில்லன் போவது வரை பதற்றம் ! தாயைக் கண்டதும் ஆனந்தம்...முடிவு சுபம்! மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  16. ஓட்டம் நீரோட்டொம் எல்லாம் காட்சி மிகவும் இயல்பாக. அருமையான காட்சிப்பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம் நீண்ட நாட்களுக்குப் பின் வருகைக்கும், கருத்திற்கும். அருமையான காணொளி!

      நீக்கு
  17. அருமையான காணொளி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    த.ம. 11

    பதிலளிநீக்கு