ஞாயிறு, 23 நவம்பர், 2014

மனித நேயம் மிக்கவர்கள் மதம் கடந்தும், நூற்றாண்டுகள் கடந்தும் போற்றப்படுவார்கள்!


       புகைப் படித்தல், மது அருந்துதல், போதை மருந்து உபயோகித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகின்றவர்கள் நாளடைவில் அதிலிருந்து மீள முடியாமல், தங்கள் ஆரோக்கியத்தை சீர்குலைத்துத் தங்களையே அழித்துக் கொள்ளுவார்கள்.  அதே சமயம் வேறு சிலர் பலன் எதிர்பாராது பொதுநல சேவை போன்ற நல்ல பழக்கங்களுக்கு அடிமையாமையாகி தங்கள் வாக்கையையே மனித குல நன்மைக்கு தியாகம் செய்து இறைவனுக்குச் சமமாகப் போற்றபடுகின்ற ஒரு நிலைக்குச் சென்று விடுவார்கள்.  இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான் என்றாலும், எவருமே மேலே சொல்லப்பட்டத் தீயப்பழக்கங்களுக்கு அடிமையாகாமல் ஒழுக்கமாக வாழ்ந்தாலும் மேற்சொன்ன நல்ல பழக்கங்களுக்கும் அடிமையாக விரும்புவதோ முயல்வதோ இல்லை.  அப்படி அடிமையாக விரும்புகின்ற சிலரோ அமெச்சூர் ஆர்ட்டிஸ்டுகளைப் போல் இடையிடையே நன்மை செய்து போகத்தான் விரும்புகின்றார்கள்.  அவர்களில் சிலர் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை தங்களது கோவில்கள், தங்கள் மதம் சார்ந்த பொதுநல நிறுவன்ங்களுக்குக் கொடுக்கின்ரார்கள், வேறு சிலரோ மதசார்பற்ற அனாதை இல்லங்கள், முதியோர் விடுதிகள் போன்றவற்றிற்கு கொடுத்து அப்படி பொது நலத் தொண்டு செய்பவர்களுக்கு உதவியாய் இருப்பதோடு திருப்தி அடைகின்றார்கள்.


      ஐஸ்வரியா பச்சன் தனது 20 ஆம் ஆண்டு அகில உலக அழகிப்பட்டத்தை 100 குழந்தைகளுக்கு (1 முதல் 14 வயது வரை உள்ள) பிளவுபட்ட மேல் உதட்டைச் சரிசெய்யும் அறுவைசிகிச்சைக்கானச் செலவை ஏற்றுக் கொண்டது போல் அதுவும் நல்லதுவே.  இங்குதான், மதர் தெரசா போன்றவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதை நினைத்து வியந்து போகிறோம். கிறித்துமத பொதுநல சேவை நிலையங்களில் சேவை புரிந்து வந்த அவர், “நிர்மல் ஹ்ருதை ஹோம் ஃபார் டையிங்க் டெஸ்டிட்யூட்ஸ்” Nirmal Hriday Home for dying destitutes போன்றவைகளைத் தொடங்கிய போது மத மதில்களை முழுமையாக இல்லை எனினும் அங்கிங்காக உடைக்க வேண்டி இருந்தது.  ஆம்! உண்மையான பொது நலம், மனித நேயம், மத மதில்களுக்குள் ஒதுங்காது. ஒதுங்கவும் கூடாது.  ஒதுக்கப்படவும் கூடாது. அது அவர்களது மறைவுக்குப் பின்னும் ஒளிவீசிக் கொண்டே இருக்கும்.  சாதி, மதம், இனம் மொழி பாராமல் இறை அருள் போல் எல்லோருக்கும் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். 


      இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் கடந்த சனியன்று (15.11.2014) எங்கள் பள்ளியில் நடந்தது. திருச்சூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் “ஹாப்பி கெஸ்” எனும் பொது நல சேவை மையம் பாலக்காடு ஜில்லா பஞ்சாயத்து மற்றும் மாத்தூர் கிராமப் பஞ்சாயத்தின் அனுமதி பெற்று எங்கள் பள்ளியில் ஒரு எச் ஐ வி /எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள். ஒரு குறும்படமும், அதைத் தொடர்ந்து எச் ஐ வி பாதிப்பு மற்றும் எய்ட்ஸ் நோய் எப்படித் தொற்றுகிறது என்றும், அதை எப்படித் தடுக்கலாம் என்றும், எச் ஐ வி பாதிப்பு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளைப் பற்றி விரிவான ஒரு வகுப்பும் எடுக்கப்பட்டது.

      1500 க்கும் மேற்பட்ட எச் ஐ வி பாதிப்பாளர்களும், எய்ட்ஸ் நோயாளிகளும் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கின்றார்கள் என்பது அதிர்ச்தி அளித்தது.  அவர்களுக்கெல்லாம் கெஸ் (KESS) தேவையான உதவிகள் செய்துவருகின்றது என்பதை அறிந்ததும் மனதிற்கு இதமாக இருந்தது.  அது 16, மற்றும் 17 வயதுள்ள மாணவ மாணவியர்களுக்கு மிகவும் தேவையான, உபயோகமான வகுப்பு.  ஹாப்பி கெஸ் (HAPPI KESS) ஒரு பொதுநல தொண்டாற்றும் நிறுவனம் என்றதாலும் அதைப் பற்றி நான் கேள்விப்படாததாலும், அதன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டேன்.  அது KURIAKOSE ELIAS – குரியக்கோஸ் ஏலியஸ் எனும் பாதிரியார் பேரில் நடத்தப்படும் ஒரு பொது நலச் சேவை இயக்கம் என்றும், இம்மாதம் 23 ஆம் தேதி அவர் வாட்டிகனில் போப் ஆண்டவரால் புனிதராக அறிவிக்கப்பட இருக்கின்றார் என்றும் சொன்னார். 


      நான் குரியாகோஸ் ஏலியாஸ் பாதிரியாரைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்ற போது அவர் “சாவர அச்சன்” என்று அறியப்படும் இவர், 150 வருடங்களுக்கு முன் கேரளாவில் பொதுக் கல்விக் கூடம் நிறுவி, இலவசமாகக் கல்வி கற்பிக்க வழி வகை செய்தவர் என்பதை அறிந்தேன்.  தமிழகத்தில் பிறந்து 24 வயது வரை தமிழகத்தில் வளர்ந்த எனக்குக் கேரள சமூக வரலாறு என்பது அதன் பின் நான் கண்டும் கேட்டும் வாசித்தும் புரிந்து கொண்ட ஒன்றுதான். கேரள மாநிலம் 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறியதற்கு உதவிகரமாய் அமைந்ததாய்ச் சொல்லப்படும் பல காரணங்களில் முதன்மையானது கிறித்தவ மத பாதிரிமார்கள் ஆரம்பித்த பள்ளிகள் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.


      16, 17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில், கேரளத்தில் பிராமணர்களும் சம்ஸ்கிருதமும் கொடிகட்டி வாழ்ந்த காலம். பிராமணர்களுக்குத் துதிபாடும் சிறுபான்மையினர் தவிர மற்றவர்களெல்லாம் கோயில்களுக்குள்ளோ, சொந்தமாக விவசாயம் செய்யவோ, கல்வி பயிலவோ, அனுமதிக்கப்படவில்லை. பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கக் கூட அனுமதிக்கப்படாததால் அதை எதிர்க்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக கிறித்தவ மற்றும் இஸ்லாம் மதங்களுக்குக் குடியேறிய காலம். **

மார்த்தாண்டவர்மா 18 ஆம் நூற்றாண்டில் பின்பகுதியில் திருவிதாங்கூர், கொச்சி, மலபார் பகுதிகளில் “படையோட்டம்” நடத்தி விலைமதிப்பற்ற ரத்தினங்கள், அணிகலன்களை எல்லாம் நாட்டரசர்கள் மற்றும் கோயில்களில் இருந்து அபகரித்து திருவனந்தபுரம் ஸ்ரீபத்மானாபரின் பாதங்களில் சமர்ப்பித்தக் காலம். (சிலவருடங்களுக்கு முன் பதுக்கி வைத்த அந்த வைர வைடூரியங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அதை என்ன செய்வது என்று தெரியாமல் புதையல் காக்கும் பூதமாக இப்போது கேரள அரசு மாறி இருக்கிறது! ) அதனிடையே, மார்த்தாண்ட வர்மா தான் கைப்பற்றிய, காலம் காலமாய் முன்னோர்கள் பாதுகாத்துவந்த ஓலைகளை எல்லாம் தீக்கிரையாக்கி அவருக்குத் தோன்றிய விதத்தில் கேரள சரித்திரம் ஒன்றை எழுதிய காலம். தீக்கிரையாக்கும் முன் மருத்துவம், கலை, இலக்கியப் படைப்புகளில் தேவையானவைகள் சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டதால், அம்மொழி தெரியாத சாதாரண மனிதர்கள் அவர்களது முன்னோர்களிடமிருந்து கேட்டறிந்தவைகளை மட்டும் அடுத்தத் தலைமுறைக்கு பகிர்ந்து கொடுத்த காலம்.  எவரேனும் இதையெல்லாம் மீறி படிக்கவோ, எழுதவோ கற்கவோ முயன்றால், அவர்கள் ஸ்ம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டவையை கேட்டும், எழுதியும், பேசியும் அதன் புனிதத் தன்மையை மாசுபடுத்து விட்டார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்கள் காதில் ஈயத்தை உருக்கி ஊற்றுவது, நாவறுப்பது போன்ற காட்டுமிராண்டித்தனங்களைச் செய்து கொண்டிருந்த காலம்.
 
                அப்படிப்பட்டக் காலத்தில் 1805 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி குரியாகோஸ்-மரியம் தம்பதிகளுக்கு மகனாய் பிறந்த குரியாகோஸ் ஏலியாஸ் மதக் கல்வி பயின்று தன் 24 ஆம் வயதில் சாவரா சர்ச்சின் பாதிரியானார்.  1831 ல் கோட்டயம் மாந்தானம் என்னும் இடத்தில் பிற்காலத்தில் கார்மலேட்  ஆஃப் மேரி இம்மாகுலேட் (சிஎம்ஐ) ஆக மாறிய ஒரு கிறித்தவ ஆஸ்ரமத்தை நிறுவினார்.

      1848 ல் மாந்தானத்தில் மலையாளம் மற்றும் சம்ஸ்க்ருதம் கற்பிக்கும் பள்ளியை நிறுவி அங்கு கிறித்தவக் குழந்தைகளுக்கு மட்டுமன்றி இந்து மதத்தைச் சேர்ந்த பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களது குழந்தைகளுக்கும் கல்வி அறிவு ஊட்டிக் கல்வியை பொதுவுடைமை ஆக்கினார்.  கல்வி கற்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நோக்குடன் எல்லா வீடுகளில் இருந்தும் அவர்கள் சமைப்பதற்கு முன் அதிலிருந்து ஒரு பிடி அரிசியைத் தனியே எடுத்து வைக்கச் செய்து அப்படி சேமிக்கப்பட்டதை வாரம் ஒரு முறை ஆஸ்ரமத்தில் ஏற்பிக்கச் செய்து அதைச் சமைத்து மாணவர்களின் பசியைப் போக்கினார் . அப்படி மதிய உணவுத் திட்டத்தை 19 ஆம் நூற்றாண்டிலேயே முதன் முறையாகத் தொடங்கி வைத்த மகான் அவர். அவ்வருடமே கோட்டயத்தில் செயின்ட் ஜோசஃப் ப்ரெஸ்ஸைத் தொடங்கினார். மலையாளம் மட்டுமன்றித் தமிழ், சம்ஸ்க்ருதம், லத்தீன், போர்ச்சுகீஸ் மொழியறிவு பெற்றிருந்த அவர், ஏராளமான டயரிக் குறிப்புகள், கவிதைகள், நாடகங்கள் வாழ்க்கை வரலாறுகள், பிரார்த்தனை கீதங்கள் போன்றவற்றை அச்சடித்து எல்லோருக்கும் அவற்றை எல்லாம் படிக்க வழி வகை செய்தார்.



1871 ஆம் ஆண்டு ஜனவரி 3 அம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள கூனம்மாவில் இறையடி சேர்ந்த அவரது சேவை கேரளாவில் உள்ள கிறித்தவர்களுக்கு மட்டுமல்ல எல்லா மதத்தினருக்கும் கிடைக்கப் பெற்றிருக்கிறது.  அந்த உண்மை ஏனோ, எப்படியோ, எல்லோருக்கும் தெரியாமலும், அதிகம் பேசப்படாமலும் போயிருக்கிறது. அதனால் தான் சாவரை அச்சன் புனிதராக அறிவிக்கப்படும் நாள் கேரளத்திலுள்ள கிறித்தவர்களுக்கு மட்டும் மகிழ்ச்சியூட்டும் தினமாக ஆக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 23.11.2014 அன்று வாட்டிகன் சர்ச்சில் - St. Peter's Basilica - புனிதராக அறிவிக்கப்படும் அந்நாள் மனித நேயம் உள்ள எல்லோருக்கும் ஒரு பொன் நாளே!  மனித நேயம் மிக்க அவரைப் போற்றுவதுடன் அவர் தொடங்கி வைத்த நற்பணி வரும் நூற்றாண்டுகளிலும் மனித குலத்திற்கு நன்மை புரிந்து வளர வாழ்த்துவோம்! 

படங்கள் : இணையம்
**http://thillaiakathuchronicles.blogspot.com/2014/01/Hinduism-Saivism-Vaishnavism-Religion-Society.html

40 கருத்துகள்:

  1. நல்லதொரு கட்டுரை...
    அறியாத செய்தி...
    அழகாக தொகுத்துத் தந்தீர்கள்... நன்றி சார்....

    பதிலளிநீக்கு
  2. மனிதநேயம் உள்ளவர்களை மனிதன் உள்ளவரை பாராட்டப்படுவார்கள் என்பதற்கு சாவரை அச்சன் எடுத்துக்காட்டாய் விளங்குகிறார்,அவர்புகழ் ஓங்கட்டும் ,அதுபோல் பலர் உருவாகட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு! வியாபார ரீதியில் இல்லாமல் சேவை வளர்ந்த்தால் நல்லதுதானே!

      நீக்கு
  3. மனித நேயம் வளரட்டும் !! நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறு நல்ல விஷயங்களை செய்தால் பூமியே சொர்க்கமாகும் .குரியாகோஸ் ஏலியாஸ் அவர்களை பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சிறந்த கருத்தைத் தெரிவித்த சகோதரி! உங்களுக்கு மிக்க நன்றி! பூமியை சொர்க்கமாக்குவோம்!

      நீக்கு
  4. "மனித நேயம் மிக்கவர்கள் மதம் கடந்தும், நூற்றாண்டுகள் கடந்தும் போற்றப்படுவார்கள்!" என்பதற்குச் சான்று பகிரும் சிறந்த பதிவு.
    "கடவுள் ஒருவர் இருக்கின்றார்.
    நாம் காட்டும்
    அன்பில் தான் அவர் தெரிகின்றார்." என்று உணர்ந்தோரால் மட்டுமே இது சாத்தியம்.
    ஹாப்பி கெஸ் (HAPPI KESS) அமைப்பின் பணியைப் பாராட்டுவோம்.
    சிறந்த பயன்தரும் கருத்து நிறைந்த பதிவு.
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. மதம் கடந்த மனிதம்.

    வணங்குதற்கு உரியவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! நண்பரே! மதம் கடந்த மனிதம் வாழட்டும் இந்த பூமியில் நிலை பெற்றதாய்!

      நீக்கு
  6. சிறப்பு... ஹாப்பி கெஸ் அமைப்பிற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி நண்பரே! தங்கள் கருத்திற்கு! இது போன்ற தன்னலமற்ற சேவை பெருகட்டும்!

      நீக்கு
  7. ஆசானே,
    குறிப்பிட்ட கலாச்சாரத்துடனும் பண்பாட்டு விழுமியங்களுடனும், வாழும் மக்களிடையே ஊடுருவும் மதங்கள் முதன்முதலில் எடுக்கும் ஆயுதம் கல்விதான். பின் சேவை என்ற பெயரில் மருத்துவம். இவை கடவுளின் கரங்கள் (?)
    பௌத்தம் இதைத்தான் செய்தது. சமணம் இதைத்தான் செய்தது. ஆரிய மாயை அரச குடிகளை விழுங்க இதைத்தான் செய்தது.
    ஏன்?
    இது மாயக்கண்ணாடி ஒன்றை அவர்கள் முகத்துக்கு நேராகப் பிடிப்பதைப் போன்றது.
    “இங்கு பார் நீ எவ்வளவு அசிங்கமாய்க் காட்டுமிராண்டியாய் இருக்கிறாய்! நீ மாற வேண்டாமா?“
    மாற்றத்துக்கான அறிவு சமூக மாற்றத்திலிருந்து சமய மாற்றமாக மாறும் வரை அக்கண்ணாடி அவர்களை அழகாகக் காட்டுவதில்லை.
    ஒரு வகையில் இந்தியா போன்ற நாடுகளில் ஆதிக்க சாதிகள் அடிமைகளாய்ப் பெரும்பான்மை மக்களை நசுக்கிக் கொண்டிருந்த அக்காலச்சூழலில் இக்கல்வி முறை ஆண்டைகளுக்கு வெறுப்பாயும் அடிமைகளுக்கு உவப்பாயும் இருந்திருக்கும்.
    கல்வி கற்பித்தவர்களின் நோக்கம் வேறு விதமாய் இருந்தாலும் பெரும்பான்மை மக்களுக்கு அறிவின் வாசல்களைத் திறந்திருக்கின்றனர் என்பதற்காக இவர்களைச் சிறிது பாராட்டலாம்.
    ஆனால் அவர்களின் உழைப்பை இன்று அறுவடை செய்பவர்களாகவே இன்று இது போன்ற சேவை அமைப்புகள் இருக்கின்றன.
    தொடங்கப்பட்ட காலத்தில் இருந்த இவற்றின் நோக்கங்கள் கால வெள்ளத்தில் அடித்துப் போகப்பட்டு, பணம் ஈட்டும் வணிக நிறுவனங்களாகவே பெரும்பான்மை கல்வி நிறுவனங்கள் மாறிப் போய் இருக்கின்றன.
    நீங்கள் கூறியது போன்ற விதிவிலக்குகள் சில இருக்கலாம். நேரடியாகவோ மறைமுகமாகவோ மத ஊசியைப் போடாதவரை அவர்களை அவர்களது “எதிர்பார்ப்பற்ற சேவைக்காக“ வாழ்த்துவோம்.
    நன்றி
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஆசானே முதலில் கல்வி அப்புறம் மருத்துவம். அவை நிச்சயமாக நமது சமுதாயத்தில் நிறைய நன்மை செய்துள்ளது எனலாம்.

      இது மாயக்கண்ணாடி ஒன்றை அவர்கள் முகத்துக்கு நேராகப் பிடிப்பதைப் போன்றது.
      “இங்கு பார் நீ எவ்வளவு அசிங்கமாய்க் காட்டுமிராண்டியாய் இருக்கிறாய்! நீ மாற வேண்டாமா?“
      மாற்றத்துக்கான அறிவு சமூக மாற்றத்திலிருந்து சமய மாற்றமாக மாறும் வரை அக்கண்ணாடி அவர்களை அழகாகக் காட்டுவதில்லை.// எப்படிப்பட்ட ஒரு வலுவான கருத்து!

      ஆம் ஆரிய ஆதிக்க சாதிகள் ஓங்கியிருந்த சமயம் நிச்சயமாக இந்தக் கல்வி கைகொடுத்துத்தானிருக்கிறது. இப்போது வியாபாரம் ஆகியுள்ளது என்றாலும் இவர்களால் நன்மைகள் பல என்பதை மறுக்க முடியாதே!

      நேரடியாகவோ மறைமுகமாகவோ மத ஊசியைப் போடாதவரை அவர்களை அவர்களது “எதிர்பார்ப்பற்ற சேவைக்காக“ வாழ்த்துவோம்.// மிக மிகச் சரியே!

      எத்தனை வலுவான அழகிய கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள் பின் ஊட்டம் என்று...

      மிக்க நன்றி ஆசானே!

      நீக்கு
    2. ஆசானே!
      இங்கு நானிருக்கும் சூழலும் இவரொடு நெருங்கிப்பழகும் வாய்ப்பும் என்னை இவ்வாறு கூறச் செய்து விட்டன.
      பெருமக்கள் பலரது கருத்தைக் கண்ணுற்ற போது நாம் மற்றவர் மனம் புண்படச் சொல்லி விட்டோமோ என்றும், நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்களோ என்றும் எண்ணி மாய்ந்திருந்தேன்.
      இனிமேல் பின்னூட்டங்களில் சற்றுக் கவனமாய் இருப்பேன்.

      காத்தமைக்கு நன்றி!

      நீக்கு
    3. ஆசானே! தாங்கள் சொல்லியிருப்பதில் ஒன்றும் தவறு இல்லையே! இதில் யாருடைய மனதும் நோகும் அளவு தாங்கள் சொலல்வில்லையே! இது உங்கள் கருத்து ஆசானே! இதில் மற்றவர் புண்பட ஒன்றும் இல்லை. மட்டுமல்ல யாருடைய மனதையும் யாரும் புண்படுத்த முடியாது, நம் மனதை நாம் வலுவாக வைத்துக் கொண்டால் ஆசானே உங்களுக்கா சொல்லித் தர வேண்டும்?

      நம் கருத்தைச் சொல்லுவதில் தயக்கம் வேண்டாம். பார்க்கப் போனால் உங்களது பின்னூட்டத்தை மிகவும் சமனிலையில் சொல்லப்பட்டதாகத்தான் பார்த்தோம். நல்ல கருத்து. தனிப்பட்ட மனிதரையோ சமூகத்தையோ அது சொல்லவில்லையே. அப்படிச் சொன்னால்தானே அது வழக்காகும். எனவே தயவு செய்து தாங்கள் சொல்ல வந்தக் கருத்தை அப்படியே தருவதைத்தான் நாங்கள் விரும்புகின்றோம். எங்கள் தளத்திலாவது. நாங்கள் மாற்றுக் கருத்துக்களையும் வரவேற்போம் அப்பொதுதான் சிந்தனைகள் வளரும்.

      எனவே தயக்கம் வேண்டாம் ஆசானே! இது எங்கள் கோரிக்கை.

      நீக்கு
  8. சேவையைப் பாராட்டுபவர்கள் அதற்கு மத மாற்ற சாயம் பூசுவது ஆச்சரியமில்லை. பாராட்டு என்று இருக்கும் போது அதற்கு எதிர்ப்பும் இருக்கதான் செய்கிறது. நாம் விளைவுகளில் நிறைவு காண்போம். எப்படியாவது கல்விக் கண் திறந்தால் காரண காரியங்களை அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சார்! எத்தனை அழகான கருத்து! எந்த நல்ல விஷயத்திற்கும் எதிர்ப்பு வருவது இயல்புதானே,. அதுதான் நடைமுறையில் நடக்கின்றாது. விளைவுகள் நல்லதாக இருந்தால் வரவேற்போமே!

      மிக நல்ல் கருத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி சார்!

      நீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    சாவரா சர்ச்சின் பாதிரியானார். 1831 ல் கோட்டயம் மாந்தானம் என்னும் இடத்தில் பிற்காலத்தில் கார்மலேட் ஆஃப் மேரி இம்மாகுலேட் (சிஎம்ஐ) ஆக மாறிய ஒரு கிறித்தவ ஆஸ்ரமத்தை நிறுவினார். சாவரை அச்சன் புனிதராக அறிவிக்கப்படும் நாள் கேரளத்திலுள்ள கிறித்தவர்களுக்கு மட்டும் மகிழ்ச்சியூட்டும் தினமாக அன்றி அவனியில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டும் வகையில் 23.11.2014 இன்று வாட்டிகன் சர்ச்சில் - St. Peter's Basilica - புனிதராக அறிவிக்கப்படும் அந்நாள் மனித நேயம் உள்ள எல்லோருக்கும் ஒரு பொன் நாளே! ....இன்றைய தினத்தில் இந்தச் செய்தியைக் கொடுத்திருப்பது சாலப் பொருத்தமாகும். அவர் மதிய உணவுத் திட்டத்தை 19 ஆம் நூற்றாண்டிலேயே முதன் முறையாகத் தொடங்கி வைத்த மகானைத் தொழுது வணங்குவோம்.

    “நிர்மல் ஹ்ருதை ஹோம் ஃபார் டையிங்க் டெஸ்டிட்யூட்ஸ்” Nirmal Hriday Home for dying destitutes கொல்கொத்தாவில் அன்னை தெரசராள் இருந்த இல்லத்திற்கும்...அங்கேயே அவரின் கல்லரையும்... அவர் அமர்ந்திருப்பது போன்ற சிலை இருக்கின்றதைப் பார்த்து இப்பயும் ஒரு தாய் தன்னலமற்று இருந்ததை எண்ணி எண்ணி...வியந்துபோய் வந்தோம்.

    திருச்சூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் “ஹாப்பி கெஸ்” எனும் பொது நல சேவை மையம் பாலக்காடு ஜில்லா பஞ்சாயத்து மற்றும் மாத்தூர் கிராமப் பஞ்சாயத்தின் அனுமதி பெற்று எங்கள் பள்ளியில் ஒரு எச் ஐ வி /எய்ட்ஸ் விழிப்புணர்வு பணியாற்றி வருவதை அறிந்தோம். தொண்டு செய்யும் தூய உள்ளங்களுக்கு நன்றி பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு. இது போன்றோர் பலர் வர வேண்டும் நம் ச்முதாயத்திற்கு தொண்டு செய்ய!

      நீக்கு
  10. அறியாத செய்தி அழகாய் தொகுத்து எங்களுக்கு அறியப்படுத்தினீர்கள்.

    23.11.2014 அன்று வாட்டிகன் சர்ச்சில் - St. Peter's Basilica - புனிதராக அறிவிக்கப்படும் அந்நாள் மனித நேயம் உள்ள எல்லோருக்கும் ஒரு பொன் நாளே!

    ஆம் ஐயா

    மனித நேயம் மிக்க அவரைப் போற்றுவதுடன் அவர் தொடங்கி வைத்த நற்பணி வரும் நூற்றாண்டுகளிலும் மனித குலத்திற்கு நன்மை புரிந்து வளர வாழ்த்துவோம்! //

    மேலும் பலபல நூற்றாண்டுகள் தொடரட்டும்...அவர்கள் சேவை.

    நன்றி

    பதிலளிநீக்கு
  11. மனித சேவை என்ற போர்வையில் மத வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களை முழு மனதோடு5 ஆதரிக்க முடியவில்லை (
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் சரிதான்! ஆனால் இவர் மதவளர்ச்சிக்குப் பாடுபட்டதாக வரவில்லையே! அப்படி என்றால் தங்கள் கருத்தும் சரியே! மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  12. அறியாத பல அறிந்தோம்
    விரிவான சரியான பகிர்வு
    மிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது
    படங்கள் கூடுதல் சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. மிகச்சிறப்பான ஒரு மனிதரைப் பற்றியும் நல்லதொரு அமைப்பையும் அறிந்து கொண்டேன்! இவர்களின் சேவைகள் சிறக்கட்டும்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் சுரேஷ்! தங்கள் கருத்திற்கு! அவர்கலது சேவை சிறக்கட்டும்!

      நீக்கு
  14. ஆறறிவு பெற்ற மனித மனம் நாடு, ஜாதி, மதத்திற்க்கு அப்பாற்பட்டது இதை புரிந்தவன் புனிதனாகிறான், புரியாதவன் மிருகமாகிறான் நாம் புனிதனாக வேண்டாம் சராசரி மனிதனாக வாழ முயற்சிப்போம்

    அறியாத பல நல்ல விசயங்களை தெரிய வைத்தமைக்கு நன்றி.
    த.ம. 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! ஜி! மிக மிக உயர்ந்த கருத்து! மிக்க நன்றி எங்கள் தேவகோட்டையாரே!

      நீக்கு
  15. தெரியாத பல செய்திகளை தொகுத்து அழகான ஒரு கட்டுரையாக தந்துள்ளீர்கள். படங்களை அதற்கு ஏற்றவாரு தெரிவு செய்து போட்டிருக்கிறீர்கள்.
    ஒரு நல்ல மனிதரைப் பற்றி தங்களின் இந்த பதிவு மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  16. அறியாத செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  17. இன்றுதான் படித்தேன்.
    அறிவிப்பு வந்துவிட்டதா?
    வராவிட்டாலும் என்ன அவர் சத்தியமாக புனிதர்தானே ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிதான் தெரியும்! நன்பரே!
      மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு! ஆம் நிச்சயமாக! புனிதரே!

      நீக்கு
  18. செய்தியில் பார்த்த பின்னர் இனையத்தில் இவரைப்பற்றி அறிய வேன்டும் என நினைத்திருந்தேன், தங்களின் அழகான பதிவால் அதனை நிறைவேற்றியமைக்கு மிக்க நன்றிகள் அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் ராஜ் அவர்களே தங்கல் கருத்திற்கு!

      நீக்கு
  19. அன்புடையீர் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கிறது
    வாழ்த்துக்கள்

    இங்கே கிளிக்குக

    பதிலளிநீக்கு