கன்னத்துல கைவைச்சுக்கிட்டு அதோ திண்ணைல உக்காந்துருக்காரு பாருங்க...அங்கயும் இங்கயும் பாத்துக்கிட்டு யாராவது தெருவுல போறவங்க மாட்டுவாங்களானு .....புலம்பி தீக்கறதுக்கு...இருக்காரு பாருங்க.....புலம்பல் மன்னன் மன்னாரு....அவர் வார்த்தையிலேயே கேளுங்க.....
இத்தனை வருஷத்துல மாத்தம்ங்கறது மட்டுமே மாறாதது அப்படின்னு புரிஞ்சுகிட்டேங்க! அதுவும் என் ஆஸ்தான குருவான மனைவிகிட்டருந்து! ஆமாங்க!
எனக்கு கல்யாணமான புதுசு. நான் வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்த உடனே ரெடியா, எப்படித்தான் தெரியுமோ நான் கரெக்டா அந்த டைம்லதான் வருவேன்னு வந்து கை, கால் கழுவிட்டு வரும்போதே, கைல கரெக்டான சூட்டோட, நுரைமிதக்க காஃபியோட, டம்ளர, பக்கத்துல வந்து, கைல கொடுத்து, பக்கத்துல உக்காந்து,
"என்னங்க காஃபி நல்லாருக்காங்க....பொடி புதுசுங்க...நல்லா போட்டுருக்கேனாங்க...இன்னிக்கு மதியம் லஞ்ச் நல்லாருந்துச்சாங்க, ஆஃபீஸ்ல உங்க ஃப்ரென்ட் சாப்டாங்களா? என்ன சொன்னாங்க? நான் நேத்து ஒரு புக்குல படிச்ச ரிசிப்பிங்க...."
அப்படின்னு கேட்டு, என்ன அணைச்சு, கை பிடிச்சு, இன்னிக்கு ஆஃபீஸ் எப்படிங்க போச்சுனு விசாரிச்சு......லியோ காஃபி விளம்பரத்துல கூட நம்ம ஹான்ட்சம் அரவிந்த் சாமியும் ஒரு பொண்ணும் வருவாங்களே அது மாதிரி........நம்ம சூரியா, ஜோதிகா, கார்த்தி, காஜல் அகர்வால்னு ஜோடியா எல்லாம் வருவாங்களே...காஃபி விளம்பரம்... அதுல வர்ரா மாதிரினு வைச்சுக்கங்களேன்....ஒரே கெமிஸ்ட்ரிதாங்க....ஐயோ! நான் கெமிஸ்ட்ரி பாடம் பத்தி சொல்லலைங்க.......இப்பதான் எல்லாத்துக்கும் "கெமிஸ்ட்ரி நல்லாருந்துச்சு.... கெமிஸ்ட்ரி நல்லா வொர்க்கவுட் ஆச்சுனு"....சானல் சானலா ஜோடிங்ககிட்ட பேசறாங்களே அந்த கெமிஸ்ட்ரிங்க...ஹி..ஹி..ஹி...ஹி.....காஃபி மட்டுமா...நான் குளிக்கப் போனா, டவல், என் உள்ளாடைகள் வரை எல்லாம் ரெடியா.....இருக்கும்.....நான் அன்னிக்கு என்ன ட்ரெஸ் போடணும்னு கூட அவதான் டிசைட் பண்ணுவா...அத எடுத்து இஸ்திரி பண்ணி ரெடியா வைச்சுடுவா.......இப்படி எல்லாமே....ம்ம்ம்ம் (பெருமூச்சு)
என்னைப் பாத்தா பாவமா இருக்குல?
எனக்கு ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும்னு என்னன்னவோ செய்வா....விஷப் பரீஷை எல்லாம் கூட உண்டு...நான்தான் எங்க வீட்டுல "கினி பிக்". ஒரு நாள் மைசூர்பாகு கூட செஞ்சு தந்தா ங்க.
"நல்லாருக்குதாங்க....பக்கத்து வீட்டு மாலா இல்ல...அவங்க கூட சொன்னாங்க ரொம்ப நல்லாருக்குனு...ரிஸிபி கூட கேட்டாங்க"....
நானும் "ஸோ....ஸ்வீட்டு" நம்ம பொண்டாட்டி! எப்படி எனக்கு ஸ்வீட்டு ரொம்ப பிடிக்கும்னு, அதுவும் மைசுர்பாகு ரொம்பப் பிடிக்கும்னு எல்லாம் செஞ்சு தர்ரானு நினைச்சு ஆசையா வாயில வைச்சு கடிச்சேன்...பாருங்க....அவ்வளவுதான்.....ஐயோ! ... மாலா ஹஸ்பண்ட் பாவம்னு நினைச்சேன்....நானே அதக் கடிக்க கஷ்டப்பட்டு......எதுக்கும் ஒரு பல்செட் ஆட்டர் பண்ணிடலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்ப....ஏற்கனவே பல் செட்டு மாட்டிக்கிட்டுருந்த மாலா ஹஸ்பண்ட் பாவம் தானேங்க?! என்ன நான் சொல்றது?!...
இப்படி ஒரு 2, வருஷம் போயிருக்கும்....வீட்டுல புதுசா ஒரு மெம்பர்...அதாங்க எங்களுக்கு ஒரு பெண் குழந்தை.......நான் ஆஃபீஸ்லருந்து வந்த உடனே, வழக்கம்போல கை, கால் கழுவிட்டு வந்து ஸோஃபால உக்காருவேன்...பாப்பாவ மடியில வைச்சுக்குவேன்.....காபி மெதூஊஊஊவா வரும்......"இந்தாங்க காஃபி" அப்படின்னு கொடுப்பா...சூடா இருக்கேனு சொன்னா..... ம்ம்ம் அப்பல்லாம் பரவால்ல ஆத்திக் கொடுப்பா.......அப்படியே...
"நம்ம பொண்ணுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல ப்ளே ஸ்கூல் அட்மிஷன் பாக்கணும்ங்க"......அப்படினு சொல்லிக்கிட்டே..இடுப்புல புடவைய சொருகிட்டு போயிடுவாங்க.....
அடுத்து ஒரு 3 வருஷம் போயிருக்கும்.....பையன் பொறந்தான்......நானும் ஆஃபீஸ் போயிட்டு வந்துட்டுருந்தேன்.....வழக்கம் போலதான்.....ரிஃப்ரெஷ் பண்ணிக்கிட்டு பிள்ளைங்களோட உக்காருவேன்......காஃபினு கேக்கணும்.....வரும்....வரும்...கொஞ்சம் சூடா இருந்தா...."ஆத்திக்கோங்க" அப்படின்னு சொல்லிட்டு போயிருவா...அப்படியே
பாருங்க நான் எவ்வளவு
வேலை செய்யறேன்...
"ஏங்க...பிள்ளைங்களுக்கு நல்ல ஸ்கூல் பாக்கணும்....பொண்ணுக்கு நல்ல மெடிக்கல் காலேஜ் முடிவு பண்ணனும்.....பையனுக்கு எஞ்சினியரிங்க் காலேஜ் முடிவு பண்ணனும்...அப்படி சொல்லிக்கிட்டே ஏதோ வேலை செய்ய போயிடுவா.....(ஏம்மா இப்பதானே பொண்ணு ஸ்கூல்ல..அடி எடுத்து வைச்சுருக்கா...பையன் இனிதான் ஸ்கூல்னா என்னனு எட்டிப் பாக்கப் போறான்! இப்படி நான் நினைச்சாலும் சொல்ல முடியுமா? ஸோ...கப்சிப்.....) சிலசமயம் காஃபி ஆறிப் போயி இருக்கும்....நானும் மூச்சுக் காட்டாம குடிச்சுருவேங்க...பாவம் அவ.... அப்படின்னு....சாப்பாடு பத்தி எல்லாம் கேள்வியே கிடையாதுங்க.....உப்பு இருக்காது....இல்ல கூடி இருக்கும்....நானும்..... பாவம் அவ....அவளும் பார்ட் டைம் வேலைக்கு வேற போறாளா....அதனால..... பிள்ளைங்க வேற குறும்பு.....சாமாளிக்கணும்ல அப்படின்னு விட்டுருவேன்... ட்ரெஸ் எல்லாம் நானேதான் எடுத்து வைச்சுக்குவேன்.......இஸ்திரி எல்லாம் நான் தான்.......என்னால முடிஞ்சவரை உதவி பண்ணுவேன்....ஐயோ...சத்தியமாங்க.....சமையல் எல்லாம் செய்வேங்க....
அப்புறம் என்ன?.....பிள்ளைங்க நல்லா வளர்ந்து ஸ்கூல் போக ஆரம்பிச்சாங்க......நான் ஆஃபீஸ்லருந்து வந்த உடனே...."காஃபி ஃப்ளாஸ்குல கிச்சன்ல இருக்கு. எடுத்துக்குங்க. டிஃபன் ஹாட் கேஸ்ல வைச்சுருக்கேன்....நீங்க என்ன பண்றீங்க....டிஃபன் சாப்டுட்டு...அப்படியே ராத்திரிக்கு சப்பாத்தி மாவு கலந்து வைச்சுருங்க....குருமா செய்ய காய் எல்லாம் கட் பண்ணி வைச்சுருங்கனு சொல்லிட்டு கடைக்குப் போயிருவா.....பசங்க விளையாட போயிருக்கும்....நானும் எல்லா வேலையும் முடிச்சுட்டு...யாரும் இல்லாம தனியா உக்காந்து டி.வி யையும், மோட்டு வளையையும் மாத்தி, மாத்தி பாத்துகிட்டு இருப்பேன்......ஒரே சிலந்தி வலை பின்னிருக்கும்..... ஞாயித்துக் கிழமை தூசி தட்டணும் அப்படினு நினைச்சுக்குவேன்......
ஒரு 2 வருஷம் முன்னாடி கூட, நான் வீட்டுக்குள்ள நுழையும் போதே அவ டி.வி முன்னாடி இருப்பா....."காஃபி"ன்னா........
கொடுத்து வைச்சவ
"ஏங்க நான் டி.வில ரொம்ப முக்கியமா ஒரு சமையல் குறிப்பு (?! நான் செஞ்சு கொடுக்கறதுக்குதாங்க) இன்ட்ரெஸ்டிங்கா பாத்துக்கிட்டு இருக்கேன்.....நீங்களே காஃபி கலந்துக்கங்க.....அப்படியே எனக்கும் காஃபி கொடுங்க......அப்புறம் ராத்திரி...எனக்கு என் ஃப்ரெண்ட் வீட்டுல சாப்பாடு...ஸோ நீங்க என்ன பண்றீங்க, உங்களுக்கும் பிள்ளைங்களுக்கும் தோசை சுட்டுக்கங்க..." நான்..?????
இப்பல்லாம் நான் வீட்டுக்கு வரும் போது எதிர்பாக்கறதே இல்லைங்க......உள்ளே நுழையும் போதே...பிள்ளைங்க..இருந்தாங்கனா...(ஒண்ணு +2, இன்னொண்ணு 10.)...சொல்லுவாங்க.......
"அப்பா நாங்க ட்யூஷன் போறோம்..........அம்மா, அவங்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருக்காங்க/ஷாப்பிங்க் போயிருக்காங்க/ லேடிஸ் க்ளப் மீட்டிங்க் போயிருக்காங்க.....அப்படினு சொல்லிட்டு.போயிருவாங்க......நானும் சத்தமில்லாம சமையலறைக்குப் போயி "உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையானு பாடிக்கிட்டே சர்க்கரை பாட்டில எடுத்து, நானே காஃபி கலந்து குடிக்கறேன். சிலசமயம் அதுவும் இல்லைங்க.....அப்படியே ராத்திரிக்கு டிஃபன் சென்ஞ்சு, அடுத்த நாளுக்கு வேண்டிய காய் எல்லாம் கட் பண்ணி வைச்சு.....எல்லா வேலையும் முடிச்சுட்டு, டி.வி முன்னாடி வந்து நியூஸ்/ஸ்போர்ட்ஸ், இல்ல நல்ல இங்கிலிஷ் சினிமா பாத்து ரொம்ப நாளாச்சேனு உட்காரும்போது என் "ஸோ....ஸ்வீட்" உள்ள நுழைவா...வந்து உடனே ...என்னங்க நீங்க......நான் "தென்றல்" சீரியல் இன்னிக்கு கண்டிப்பா பாத்தே ஆகணும்....இன்னிக்கு என்ன ஆகும்னு தெரியல.....எந்திரிங்க....கொடுங்க ரிமோட்ட, அப்படினு வாங்கிக்குவா.....
இப்ப கூட பாருங்க...இருக்கற 2 சாவில ஒண்ணு அவ கையில....2 வது சாவி பிள்ளைங்ககிட்ட....நான் இதோ திண்ணைல சாவி இல்லாம.....இத்தனைக்கும் ஆளுக்கு ஒரு மொபைல் வாங்கிக் கொடுத்துருக்கேங்க.......ம்ம்ம் என்னத்த சொல்ல...பக்கத்து வீட்டுல ஒரு புதுசா கல்யாணம் ஆன ஜோடி போல...அங்க பாருங்க ஒரே கெமிஸ்ட்ரிதான்....நான் இங்க ஒருத்தன் உக்காந்து பாக்கறனேனு கூட கவலைப்படாம........இருங்க அந்தப் பையன் என்ன பாக்குறான்....
"என்ன அங்கிள் இங்க உக்காந்துகிட்டு இருக்கீங்க....காத்து வாங்கறீங்களா....".....
எனக்கு வாய் துறு துறுனு வருதுங்க..."ம்ம் உனக்கும் இன்னும் கொஞ்ச வருஷத்துல இதே கதிதான் மவனே...." அப்படின்னு சொல்ல....நினைச்சாலு....."ம்ம்ம் ஆமாம்....நல்ல காத்து வருது இல்ல"...அப்படினு சமாளிப்பு...
. ம்ம்ம் என்னத்த சொல்ல....வைஃப் வைஃபை ஆகிட்டா...ங்க.....ஒருவேளை உங்க வீட்டுல சாவி கொடுத்துருக்காங்களா?
படங்கள்: இணையம்
"உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா ?
பதிலளிநீக்குபரவாயில்லை இங்கேயாவது திண்ணைதான் சிலபேரு தெருவுலயில நிக்கிறான்...
ஹாஹாஹா.....அப்ப மன்னாரு கதை பரவாயில்லைன்றீங்க கில்லர் ஜி!!!!
நீக்குமிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!!
படங்கள்
பதிலளிநீக்குஎண்ணங்கள்
வீட்டு நிலைமைகள்
எல்லாம் சரி
இல்லத்தை ஆள்பவள்
இல்லாள்
இப்படித்தான் ஆள்வாளோவென
எண்ணிப் பார்க்கிறேன்!
இப்படித்தான் ஆள்வாளோ என அனுபவம் உள்ளவர்கள் தான் சொலல் வேண்டும்...இது மன்னாரின் அனுபவம்.....
நீக்குதங்களின் கருத்திற்கு மிக்க நன்றி!
என்ன சார், திடீர்னு சப்ஜெக்ட்ட மாத்திட்டு நகைச்சுவை பக்கம் போய்ட்டீங்க? (நல்லாத்தான் இருக்கு...!)
பதிலளிநீக்குரீபிட்டு
நீக்குசெல்லப்பாசார், மதுரைத் தமிழன்.....சப்ஜெக்ட் எல்லாம் மாத்தலை....கொஞ்சம் கொஞ்சம் எழுதறதுண்டு....வடிவேலு ஸடைல்ல நினைச்சுட்டுருந்தோம்..."பில்டிங்க் ஸ்ட்றாங்கு...பேஸ்மென்ட் வீக்குனு" ஆனா, ரொம்ப அழகா எழுதற திருப்பூர் ஜோதிஜி சார் என்னடானா "உங்களுக்குஅடிப்படை கட்டுமானம் தெளிவாக இருக்கின்றது. முயன்றால் தெளிவாக வரும் என்றே நினைக்கின்றேன்". அப்படினு வேற சொல்லிட்டாரா....அதான் எழுதிப் பாப்பமேனு எழுதியது சார்....மத்த சப்ஜெக்டும் தொடரப்படும் சார்......
நீக்குநல்லாருக்குனு சொன்னதுக்கு நன்றி இருவருக்கும்!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
குடும்பம் என்றால் இப்படியும் வரும் என்ற வாழ்க்கை கருத்தை அழகான படங்கள் மூலம்விளக்கியுள்ளீர்கள் பகிரவுக்கு நன்றி
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
குடும்பம்னா அப்படியும், இப்படியும் இருக்கத்தான் செய்யும் நண்பரே! ஓ! தாங்கள் இன்னும் குடும்ப வாழ்க்கைக்கு வரலயோ!!? உங்கள் காதல் திருமண வாழ்க்கை இனிக்கும் தம்பி!..வாழ்த்துக்கள்! அந்த செய்திக்காக நாங்கள் எல்லோரும் காத்திருக்கின்றோம்!
நீக்குமிக்க நன்றி!
இதை நாங்க நம்பனுமா.......?
பதிலளிநீக்குஹாஹாஹா....சகோதரி மன்னாரு கதைய நம்புங்க!
நீக்குமிக்க நன்றி சகோதரி!
ஆகா ரசித்து ரசித்து எழுதியிருக்கிறீர்கள் நண்பரே
பதிலளிநீக்குவீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்களே அது இதுதான்
நன்றி நண்பரே
தம 3
நன்றி தங்கள் பாராட்டிற்கு!!! ஐய்யயோ! நண்பரே என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்...ஹாஹஹ்....
நீக்குமிக்க நன்றி...!!
படிப்படியான மாற்றங்கள்.... பரவாயில்ல வுடுங்க... அடி விழல்லை இல்ல இன்னும்? அதுவரை சரி! :)))))
பதிலளிநீக்குஹாஆஹாஹ...மன்னாரு விடுவாரான்னு தெரிலயே...ஆனா நல்ல காலம் இன்னும் அங்க அடி விழல......ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்லவங்க...
நீக்குஉங்களை திண்ணையில் உட்கார வைச்சாலும் கையில லேப்டாப் கொடுத்து உட்கார வைச்சு இருக்காங்களே என்று சந்தோஷப்படுங்க
பதிலளிநீக்குஓ அப்படி வர்ரீங்களா...தமிழா....பூரிக்கட்டை அடி விழலயேன்னு.....மன்னாரு கூட அத நினைச்சுதான் தேமேன்னு இருக்காருங்க....மதுரைத் தமிழனுக்குத் தான் பரவாயில்லனு நினைச்சு.....
நீக்கு#(ஒண்ணு +2, இன்னொண்ணு 10.).#எனக்கும் அப்படியே தான் ,ஆனால் #.வைஃப் வைஃபை#ஆகும் வைபவம் இன்னும் அரங்கேறவில்லை ,நான்தான் ஜோக்காளி பைத்தியமாகி விட்டேன் .சொற் சித்திரம் அருமை ரசித்துப் பார்த்தேன் ,படித்தேன் !
பதிலளிநீக்குத ம 5
ஒண்ணு +2, இன்னொண்ணு 10.).// ஓ மன்னாரு!!! மாதிரி.....அப்ப மன்னாரு பாவம் அப்படின்றீங்க.....ஜோக்காளி பைத்தியமானதால்தான் எங்களுக்கு நிறைய ஜோக்குகள் தினமும் கிடைக்கின்றதே..சிரித்து மகிழ...மன்னாருக்கும் சொல்லறோம்...இந்த மாதிரி திண்ணைல உக்கார நேர்ந்தால் உங்க ஜோக்குகள படிச்சு சிரிக்க.....
நீக்குமிக்க நன்றி ஜி!
நகைச்சுவை நண்டை நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி கும்மாச்சி தங்கள் பாராட்டிற்கு!
நீக்குகலக்கல் நகைச்சுவை! பாராட்டுக்கள்! திண்ணையில இருந்தே சுடச்சுட நீங்க போட்ட இந்த போஸ்ட் இனிமை! நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ்! நண்பரே! பாராட்டிற்கு! ஹப்பா நீங்களாவது மன்னாருதான் பதிவு போட்டதுனு நம்புறீங்களே.....அது போதும்......
நீக்குஉங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கு ஏற்பட இன்னும் நாள் இருக்கு. நாம்ம மதுரைத்தமிழன் சொன்ன மாதிரி, நீங்கள் வீட்டுக்கு வெளியில் லேப்டாப் வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க. எனக்கு எப்படி ஆகுமோ???
பதிலளிநீக்குஅந்தந்த புலம்பலுக்கு ஏற்ற சித்திரங்கள் அருமை.
ஹாஹாஹாஅ...சொக்கன் சார் இது மன்னாரு கதைதான்...ஸோ பயப்படாதீங்க.....
நீக்குமிக்க நன்றி!!
சொக்கன் சார் அப்ப மன்னாரு பூரிக்கட்டையிலிருந்து தப்பிச்சாருனு சொல்ல வர்ரீங்க அப்படித்தானே.....!!!
நீக்குஎல்லோரையும் நினைக்க பாவமாக த் தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது. நிலமை
பதிலளிநீக்குஅப்படிதானே இருக்கிறது. என்ன செய்வது இதை பற்றி தான் நான் இப்பொழுதெல்லாம் சிந்திக்கிறேன். இருவரும் ஓடி திரிவதால் யாரும் உண்மையான சந்தோஷம் கிடைக்கும் என்று இல்லை ஒரு இயந்திரத் தனம் தான் தெரிகிறது. இதுவே ஒரு பெண் இருந்து வீட்டை ஆளும் போது நிம்மதி சந்தோஷம் கிடைக்கும் பிள்ளைகளுக்கும் தாயின் அரவணைப்பும் நேரடிப் பார்வையில் வழி நடத்தவும் ஏதுவாக இருக்கும். ஆனால் அவரின் அருமை தெரியாமல் அடிமையாக எண்ணி பெண்களை கிள்ளுகீரையாக எண்ணியதன் விளைவு இது. அவற்றை பார்க்க சகிக்காமல் பாரதியும் புதுமை பெண் என்று பாடிட .....எப்படி எல்லாம் மாறிவிட்டது வாழ்வு. வீட்டில் தானே இருக்கிறாய் என்பார்கள். ஆனால் அதிக வேலை அவர்களுக்கு தான். அதை யாரும் வேலை என்று நினைப்பதே இல்லையே இப்போ கொடுமை என்னன்னா வேலையையும் வீட்டையும் சேர்த்து பார்க்கவேண்டிய சூழல். கொஞ்சம் அதிகம் தான். சில சமயங்களில் எனக்கு பெண்கள் வீட்டில் இருந்து குடும்பத்தை பார்ப்பது அவசியம் என்று தோன்றும் இப்போ கதை நன்று சுவாரஸ்யமாகவே இருக்கிறது படங்களும் அருமை. கதையின் படி ஆரம்ப நாட்கள் ஆனந்தமாக உள்ளது. பின் ஏன் இல்லை சிந்தியுங்கள். வேலைப்பளு தானே,அதை குறைத்தால் சரிவரும் அல்லவா? இல்லையா சரி விடுங்கள் விதிப்படி நடக்கட்டும், அடடா அதிகம் எழுதி விட்டேனோ. நன்றி வாழ்த்துக்கள் .....!
நல்ல காமெடி குடும்பம்.......
பதிலளிநீக்குஎல்லா வீட்டுலயும் இப்படித்தான் இருக்கு....அய்யா ...ஹா...ஹா......