செவ்வாய், 7 ஜூலை, 2020

புலவர் திருஇராமனுசம் ஐயா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய ...


Gathering | Albany NY a.k.a. Smalbany

புலவர் இராமானுசம் ஐயா அவர்களை வலைப்பூவில் அறியாதவர்கள் இல்லை எனலாம். வயது காரணமாக இயற்கை எய்தினார் என்பதை நாங்கள் எல்லோரும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொளகிறோம். 

புலவரை  ஓரிருமுறை நேரில் அவரது வீட்டில் நம் நட்புகளுடன் சந்தித்திருக்கிறோம். கில்லர்ஜி அப்போது ஒரு முறை வெளிநாட்டிலிருந்து வந்த போது அவர் அழைப்பின் பேரில் சென்னை, வேலூர் நட்புகள் சிலருடன் சந்தித்தித்திருக்கிறோம். நிறைய விஷயங்கள் பேசியதும் உண்டு. நல்ல மனிதர். 

எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

செய்தி சொன்ன எங்கள் ப்ளாக் ஸ்ரீராமிற்கு மிக்க நன்றி

22 கருத்துகள்:

  1. புலவர் இராமானுசம் ஐயா அவர்களின் மறவுக்கு இரங்கல்கள்.
    நிறைய பேர் அவர் வீட்டில் சந்தித்த பதிவுகள் போட்டதை படித்து இருக்கிறேன்.

    அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    என் சில பதிவுகளுக்கு ஐயா பின்னூட்டங்கள் போட்டு இருக்கிறார் முன்பு.

    பதிலளிநீக்கு
  2. வலைப் பூவின் மூத்தப் பதிவர்
    இவரது மறைவு வலைப் பூ உலகிற்குப் பேரிழப்பு
    ஆழ்ந்த இரங்கல்

    பதிலளிநீக்கு
  3. அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசுவார்... அந்த அன்பு மறக்கவே முடியாதது...

    இருமுறை வலைப்பதிவர்கள் சந்திப்புகளை திறம்பட சென்னையில் நடத்தியவர்...

    அவர் வீட்டில் நாம் சந்தித்தது உங்களுக்கும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்...

    ஆழ்ந்த இரங்கல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் டிடி நன்றாகவே நினைவிருக்கிறது. முதன் முறையாக அவரைச் சந்தித்தது பற்றி மட்டும் லைட்டாகச் சொன்னேன். விளக்கமாக எழுத் முடியவில்லை டிடி.

      கீதா

      நீக்கு
  4. உண்மையில் இவரை நான் அறிந்ததில்லை. சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. என்றாலும் அவர் மறைவினால் வருந்தும் அவர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், இரங்கல்கள். அன்னாரின் ஆன்மா நற்கதி அடையட்டும்.

    பதிலளிநீக்கு
  5. இனி ஒரு நாலைந்து நாட்களுக்கு வலைப்பக்கம் வர இயலாது. கொஞ்சம் பிஸி.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஐயாவை வீட்டில் சந்தித்து பேசிய நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது.
    அவர் தம் குடும்பத்தினருக்கு எமது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வலையுலகில் மூத்த பதிவர்...

    ஐயா அவர்களது குடும்பத்தினருக்கு
    ஆழ்ந்த அனுதாபங்கள்...

    ஐயா அவர்களது ஆன்மா இறை நிழலில் சாந்தியடைவதாக....

    பதிலளிநீக்கு
  8. நான் எப்போது சென்னை சென்றாலும் சந்திக்காது திரும்பியதில்லை...அவருடைய இழப்பு எனக்குப் பெரும் பாதிப்பே...அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...

    பதிலளிநீக்கு
  9. புதுக்கோட்டை பதிவர் சந்திப்புக்குபின் என்னிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினார் ஒரு முறை என்னால் கவிதை எழுத இயலவில்லை என்று நான் எழுதியபோது நான் எழுதும்க்விதைகள் நன்றாக இருப்பதாகக்கூறி ஊக்கப்படுத்தியவர் அன்னார் மறைவுக்கு ஆழ்ந்தஇரங்கல்கள்

    பதிலளிநீக்கு
  10. மூத்த பதிவர் திரு இராமானுஜம் ஐயா அவர்களது மறைவு வேதனைப்படுத்துகிறது. அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  11. புலவர் இராமனுசம் ஐயாவை,
    வலைப் பதிவர் மானாட்டில் சந்தித்தது நன்றாக நினைவிருக்கிறது.
    அருமையான தமிழில் பேசினார்.
    அப்போதெல்லாம்,
    பதிவுகளைப் படித்து
    பின்னூட்டமும் இடுவார். பெரிய கௌரவம்.
    அவர் என்றும் இறைவனுடன் அமைதியில் இணையப் பிரார்த்தனைகள். மனம் மிக வருந்துகிறது.

    பதிலளிநீக்கு
  12. மிகவும் வருத்தமான செய்தி. நீண்ட நாட்களாக பதிவுலகம் பக்கம் வராமலே இருந்தார்.

    பதிலளிநீக்கு
  13. ஆழ்ந்த இரங்கல் . அய்யாவின் ஆன்மா இறைவனின் மடியில் இளைப்பாற பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  14. வலைப்பதிவர் மாநாட்டில் சந்தித்ததோடு, அவர் வீட்டிற்கும் ஒரு முறை சென்று சந்தித்து பேசியிருக்கிறேன். நல்லதொரு மனிதர். அவரது இழப்பு வருத்தம் தருகிறது. ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  15. பதிவுலகில் அனேகமான பதிவுகளில் முன்பெல்லாம் இவர் பெயர் நிறைய தடவை பார்த்திருக்கிறேன். மற்றபடி நானும் அவர் பதிவுக்கு சென்று அறிந்ததில்லை. அவரின் மறைவு குறித்து மனம் கஸ்டமாக உள்ளது. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். மேலும் அவரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  16. I met him and clicked a photo with him in the bloggers conference, Pudukkotai. Good bye to a senior blogger. Let his noble soul rest in eternal peace.

    பதிலளிநீக்கு
  17. புலவர் ஐயாவின் ஆத்ம சாந்திக்காக நானும் பிரார்த்திக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  18. புதுக்கோட்டையில் வலைப்பதிவர் சந்திப்பில் அவருடன் பேசியுள்ளேன். அவருடைய எழுத்தும், பேச்சும் என்றும் பலருக்கு ஊக்கத்தைத் தந்துவந்துள்ளன. மூத்த பதிவரான அவருடைய இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  19. என் ஆழ்ந்த இரங்கல்கள்.அவரின் ஆன்மா சாந்தி அடையப்
    பிரார்த்தனைகள்

    பதிலளிநீக்கு