திங்கள், 30 மார்ச், 2020

கோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4

இந்தப் பதிவின் தொடர்ச்சியைப் போட பல மாதங்கள் ஆகிவிட்டதால், இங்குள்ள படங்களின் குறிப்புகள் புரிந்து கொள்ள என்றால் இதற்கு முந்தைய பகுதியை ஜஸ்ட் ஒரு பார்வை பார்த்தால் அதன் தொடர்ச்சி இது என்று அறியலாம்.  உங்கள் விருப்பம். இதுதான் கோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் கோயிலின் புகைப்படங்களின் கடைசிப் பகுதி. வேறு சில கோபுரங்கள் பின்னர் தருகிறேன். 




இந்த இரண்டும் ஒரே போல் தோன்றினாலும் வேறு வேறு. முதல் பிராகரத்தின் அடுத்து இருப்பது இந்த இரண்டாவது மண்டபம். அங்கு ஒரு சன்னதி உண்டு ஆனால் என்ன சன்னதி என்று தெரியவில்லை. ஓவர் டு கீதாக்கா, வெங்கட்ஜி, பானுக்கா, அனு.

இந்த இடம் மண்டபங்களின் வழி சுற்றி வரும் போது போகிற போக்கில் ஒரு க்ளிக்.

கீழே உள்ள மண்டபம் இருக்கும் பரந்த வெளியில் இருக்கும் இவ்வழியே தான் சென்றோம் அப்போது இந்த சன்னதி இருக்கும் இந்த மண்டபத்தை கடந்து சென்றதும் அதை இந்த ஆங்கிளில் ஒரு க்ளிக். இதன் வேறு ஆங்கிள் படங்கள் முந்தையப் பகுதியில் இருக்கிறது. கோதண்ட ராமர் சன்னதி இங்கிருப்பது என்று அனு முந்தைய பதிவில் சொல்லியிருந்தார். (நான் அங்கு நிற்கவில்லை என்பதால் அது படத்தில் வரவில்லை)


அங்கிருந்த பரந்த வெளியில் இருக்கும் இந்த மண்டபங்களின் கலை அழகு.
இந்த இந்த பரந்த வெளி மண்டபங்களைக் கடந்து வலது புறம் சென்றால் தெரிகிறதா நிறைய தூண்கள் இடைவெளியுடன்? இவை ரங்கவிலாச மண்டபம் என்று நினைக்கிறேன்... ....அவை கீழே இன்னும் க்ளோசப்பில்..


இந்த மூன்று படங்களும் ரங்கவிலாச மண்டபம் என்று நினைக்கிறேன். பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. அங்கு சிலர் நல்ல உறக்கம். சிலர் அமர்ந்திருக்க. கூடியவரை அவர்கள் இல்லாத பகுதியை எடுத்தேன்.

அந்த மண்டபம் கடந்து வெளியில் செல்ல அப்படியே சென்ற போது இந்த மண்டபம். இதில் ஒவ்வொரு தூணும் அழகு. இந்த மண்டபம் தூண்கள் அத்தனை அழகு. மேலே தளத்தில் நிறைய கலர் கலராகச் சித்திரம் இருந்தன. எடுக்க முடியவில்லை. 

அந்த மண்டபத்தில் இது சன்னதி என்று தெரியவில்லை. முன்பக்கமும் செல்லவில்லை. ஆனால் இது கண்ணில் பட்டதும்....அதன் சுவர் மிக அழகு உடனே நின்று  க்ளிக்.  இதைக் கடந்து வெளியில் சென்றால் இதோ கீழே உள்ள இடம். இந்த மூன்று படங்களையும் நான் எடுக்கும் சமயத்திலேயே என்னுடன் வந்தவர்கள் முன்னே சென்றுவிட எப்படிச் செல்ல வேண்டும் என்று நான் திருதிரு...பின்னர் ஒரு ஊகத்தில் வேகமாய் நடக்க பார்த்துவிட்டேன் என்னுடன் வந்தவர்களை....
இதில் நேரே தெரிவது  நாயக்கர் ராஜா ராணி என்றுதான் நினைக்கிறேன். அருகில் சென்று எடுக்க வில்லை. எனவே சரியாகத் தெரியவில்லை. ஏனென்றால் இங்கு நான் நின்று எடுத்த இடத்தில் தான் என் பின்புறம் பிரசாத ஸ்டால். வாங்குகிறார்களா இல்லை டக்கென்று நகர்ந்துவிடுவார்களோ என்று அருகில் சென்று எடுக்காமல் விட்டுவிட்டேன்.  இத்தனைக்கும் கல்யாணச் சத்திரத்தில் மதிய உணவு சாப்பிட்டுக் கிளம்ப வேண்டும் இருந்தாலும் புளியோதரையும், தயிர்சாதமும் கொஞ்சம் வாங்கினார்கள். வாங்கி எல்லோரும் கொஞ்சம் பகிர்ந்து கொண்டு வெளியில் வந்து சத்திரம் நோக்கி நடந்தோம்.  அருகில் சென்று எடுக்க முடியாமல் போனதே என்று இப்போது இங்கு பகிரும் போது ரொம்பவே தோன்றுகிறது. 

அடுத்த பதிவில் சந்திப்போம். இப்பதிவில் உங்களுக்குத் தெரிந்த மேலதிகத் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.  எல்லோரும் தெரிந்து கொள்ளலாமே! 

-----கீதா

36 கருத்துகள்:

  1. படங்களுடன் அருமையான தகவல்

    பதிலளிநீக்கு
  2. படங்கள் எல்லாமே அழகு.   இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டு தொடர்வதும் சுவாரஸ்யம், பாராட்டுக்குரியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். பாருங்க அதிராவுக்கே நினைவிருக்கு!! கணினி புட்டுக்கும் போது ஹையோ இன்னும் ஒரு பகுதி இருக்கிறதே அதை போட முடியலையே என்று மனதுள் இருந்தது. இப்போதைய சூழலில் எனக்கு அதை அப்லோட் செய்வது கடினமாக இருந்தது. கணினி கிடைக்கும் அவகாசம், அப்போது நெட் வர வேண்டும் என்று. பகலில் கணினி கிடைப்பது சிரமம். அப்படியே கிடைத்தாலும் நெட் மிக மிகப்படுத்தல். இதோ இப்போதுதான் வரும். எனக்குக் கண்ணு சொக்குது. நேற்றும் இப்படித்தான் இந்த நேரத்தில் அப்லோட் செய்து ஏதோ மனதில் நினைவு இருந்ததை எழுதி ஷெட்யூல் செஞ்சுட்டு படுத்துட்டேன். காலையில் எழவே லேட்டு..ஹிஹிஹி..இதுல ஏதோ நினைவு இருந்துச்சு ஸ்ரீராம். ஆனால் எல்லாம் இப்படி நினைவில் இருப்பதில்லையே....

      பாராட்டிற்கு நன்றி ஸ்ரீராம் ஆனால் அது எனக்குப் பொருந்துமான்றதுதான் ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  3. அன்பு கீதா,
    எல்லா மண்டபப் படங்களும் பிரமாதமாக வந்திருக்கின்றன. அதில்
    ஒன்று கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடமோ.
    பக்கத்தில் மேட்டழகியசிங்கம் இருக்குமே.

    அவசரமாகச் சென்று வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
    நிறையத்தான் படம் எடுத்திருக்கிறீர்கள்.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா. கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடம் என்றெல்லாம் தெரியவில்லை வல்லிம்மா. மேட்டழகிய சிங்கம்? ஆ அதெல்லாம் எனக்குத் தெரியவில்லையே. நிதானமாக எடுக்கவில்லையே வல்லிம்மா. நான் ஜஸ்ட் கண்ணில் பட்ட அழகானவற்றை எடுத்துக் கொண்டே சென்றேன். அதுக்குத்தான் கீதாக்கா, பானுக்கா எல்லாம் சொல்லிருக்கேன் அவங்களைக் காணலை..

      கீதா

      நீக்கு
  4. அழகான படங்கள். திருவரங்கம் கோவிலில் எத்தனை எத்தனை இடங்கள்.

    மணல்வெளி வழியே வரும்போது இப்படங்களை எடுத்து இருக்கிறீர்கள். கோணங்கள் சிறப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி. ஆமாம் கோயிலில் பார்க்க நிறைய உண்டு.

      ஆம் ஜி. மணல்வெளி வழியே வரும் போது இதெல்லாம் எடுத்துக் கொண்டே வந்தேன். கோணங்கள் சிறப்பு என்று சொன்னமைக்கு மிக்க நன்றி அதுவும் ரசித்து ரசித்து அற்புதமான படங்கள் கொடுத்து அசத்தும் உங்களிடமிருந்து வருவது மகிழ்ச்சி.

      கீதா

      நீக்கு
  5. எங்கள் ஞாபகசக்தியின் மீது கீதா ரங்கனுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை.

    போன ஜென்மத்தில் வெளியிட்ட இடுகையை இந்த ஜென்மத்தில் தொடர்ந்திருக்கிறீர்களே..

    இருந்தாலும் அரங்கநாதர் ஆலயப படங்கள். எப்போது பார்த்தாலும் அலுக்காத கோவில்.. தன்னுள்ளே ஆயிரமாயிரம் ஆண்டுச் சரித்திரத்தைப் புதைத்து வைத்திருக்கும் கோவில்.

    படங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா நெல்லை சிரித்துவிட்டேன். முதல் ரெண்டு வரிகளை வாசித்து.

      ஆமாம் அலுக்காதவைதான்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  6. என்னைக் கேட்காத்தால் மண்டபங்களின் பெயர் சொல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை நீங்க அங்கு அதிகம் பார்க்க முடியலை என்று சொன்ன நினைவு. அதனாலதான் சொல்லலை. ஆனா மனசுல நினைத்துக் கொண்டேன். அது சரி ஏன் கேட்டாதான் சொல்லுவீங்களோ? நீங்களாவே சொல்லலாமே தெரிஞ்சா...கர்ர்ர்ர்

      கீதா

      நீக்கு
  7. ஒவ்வொரு படமும் எடுத்த விதம் அழகு

    இன்று உலக மருத்துவர்கள் தினம் அவர்களை வணங்கி தொழுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      உலக மருத்துவர்களுக்கு மரியாதைக்குரிய வணக்கங்களும், பாராட்டுகளும். தெரிவித்தமைக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. மிக்க நன்றி கில்லர்ஜி

      ஆமாம் மருத்துவர்களை வணங்கி தொழுவோம். இப்போதைய சூழலில் அவர்கள் ஆற்றும் பணி அளற்பற்கரியது. பாராட்டி வணங்குவோம். தன்னலமற்று உழைக்கும் எல்லோரையும் வணங்குவோம்.

      கீதா

      நீக்கு
  8. அப்படி யார் உங்களை தனியே விட்டு வேகமாக சென்றது...? சுற்றவே அரை நாட்கள் ஆகுமே...!

    படங்கள் அனைத்தும் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா டிடி நாங்கள் ஒரு பெரிய குழு நெருங்கிய உறவினர் மகன் கல்யாணத்திற்குச் சென்றவர்கள் சென்னைக்குப் புறப்படும் முன் கோயில் கோபுரங்கள் எல்லாம் ஒரு சேர பார்க்கலாம் என்று சொல்லி எங்கள் குழு சென்று பார்த்துவிட்டு அப்படியே சுற்றி வெளியில் வரும் போது ஒரு 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்குள் தான் அப்ப்டி வேகமாகச் சென்று கொண்டே எடுத்தவை. ஊருக்குக் கிளம்பும் அவசரம் எனவே எல்லோரும் முன்னே சென்றிட நான் படங்கள் எடுத்துக் கொண்டே வந்ததால்...

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  9. உங்கள் போன பதிவின் தொடர்ச்சி வரவில்லையே என நானும் நினைப்பேன் கீதா..

    அழகிய படங்கள்.. அந்த மண்டபம், ஆயிரம் கால் மண்டபம் போல என்னா ஒரு அழகு.. சும்மா இருந்தாலே சொர்க்கம் போல இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க அதிரா. பாருங்க உங்களுக்கு நினைவிருக்கு பாருங்க...சூப்பர்!! பேசாமல் எய்டெடிக் அதிரா/வல்லாரை அதிரானு/மெமரிவல்லி அதிரா/ மாத்திக்கோங்க!!!!!! அது சரி நீங்க உங்க செக் கிற்கு நன்றி சொல்லோனுமாக்கும். அவங்கதானே உங்களுக்கு வல்லாரை ஸ்மூதி சொல்லிக் கொடுத்து குடிக்கச் சொன்னது!!!

      ஆயிரம் கால் மண்டபம் உண்டு ஆனால் எடுக்க முடியலையே என்ற வருத்தம். நிறைய மண்டபங்கள் உள்ளன அதிரா. அத்தனையும் அழகு...

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  10. ராஜா ராணியைக் கிட்டப் போய்ப் பார்க்காட்டிலும்:), புளியோதரையும் தயிர் சாதத்தையும் மிஸ் பண்ண மாட்டீங்கள் போல இருக்கே ஹா ஹா ஹா.. இப்போ அனைத்துக் கோயில்களும் மூடித்தானே இருக்கும்.. எல்லோருக்கும் வீட்டுச் சாப்பாடுதான்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அதிரா பின்னே ப்ரசாதம் முக்கியமல்லோ...ஆமாம் கோயில்கள் மூடவில்லை அதிரா. பூஜைகள் நடக்கும் உள்ளே. மக்கள் தான் செல்வதற்கு இப்போது அனுமதி இல்லை. சோசியல் டிஸ்டன்சிங்க் என்பதால். எல்லா கோயில்களிலும் பூஜை நிவேதனம் உண்டு. அதெப்படி கோயிலை மூட முடியும். அது கோயிலின் அருகே ஏதேனும் மரணம் நிகழ்ந்தால் மட்டும் கோயில் மூடப்படும்.

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    ஸ்ரீ ரங்கம் கோவிலின் படங்கள் ஒவ்வொன்றும் என்ன அழகாக உள்ளது.? வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டேன். நீங்களும் வெவ்வேறு கோணத்தில் அழகாக எடுத்து உள்ளீர்கள். உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    படங்களும், அதன் இடங்களும் பற்றிய விபரங்களை அறிந்து கொண்டேன். "அழகான தூண்களின் சாம்ராஜ்யம் " என படங்களுக்கு தலைப்பே வைக்கலாம். அவ்வளவு அழகழகான படங்கள். மிகவும் ரசித்தேன் சகோதரி. அடுத்த பகிர்வுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க் நன்றி கமலாக்கா. பாராட்டிற்கு. இன்னும் நிறைய விவரங்கள் உண்டு. எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

      // "அழகான தூண்களின் சாம்ராஜ்யம் " என படங்களுக்கு தலைப்பே வைக்கலாம்.//

      ஆஹா என்ன சூப்பர் தலைப்பு கமலாக்கா. பாத்தீங்களா நீங்க ரசித்து அழகா தலைப்பு கொடுக்கறீங்க எனக்கு அப்படிக் கொடுக்கத் தெரியவில்லையே...இப்படித்தான் மூளை பல சமயங்களில் மழுங்கிப் போயிடுது.

      மிக்க நன்றி கமலாக்கா ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  12. இப்படியெல்லாம் கூட படம் எடுக்க முடியும் என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.
    படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொக்கன் சகோ மிக்க நன்றி. கருத்திற்கும் ரசித்தமைக்கும்.

      கீதா

      நீக்கு
  13. பலமுறை இங்கு சென்றுள்ளேன். உங்களுடன் கோயில் உலா சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா கருத்திற்கு.

      கீதா

      நீக்கு
  14. படங்கள் அருமை. வலைப்பூ எப்போதும் போல கலகலவெனத்தான் இருக்கிறது, மகிழ்ச்ச்டி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முரளி சகோ! இதேவே கலகலப்பா!!! ஹா ஹா ஹா மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  15. I would have known this ...I missed an opportunity to meet you
    great post

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கஸ்தூரி. ஸாரி நான் ப்ளாகர் போர்ட் போகாததால உங்க கமென்ட் இன்னிக்குத்தான் பப்ளிஷ் செய்யறேன்.

      நன்றி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  16. ஒவ்வொரு தூண்களிலும் நமது பண்பாட்டின் கலைநயம் மிளிர்கிறது .... நன்றி !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜட்ஜ்மென்ட் சிவா உங்களின் கருத்திற்கு

      கீதா

      நீக்கு